Skip to content
Home » ஐயங்காரு வீட்டு அழகே-35

ஐயங்காரு வீட்டு அழகே-35

அத்தியாயம்-35

Thank you for reading this post, provide your thoughts and give encouragement.

இருவருக்குள் இருந்த போராட்டம், உடனடியாக பதிலை கூற முடியாமல் தவிக்க, ராவணன் “இல்லை” என்றான். காருண்யாவோ, “தெரியலைக்கா” என்றாள்.

ராவணன் அவளை பார்த்து டேட் முடிந்ததே என்று கேட்டான்.
”இந்த மாசம் நேக்கு இன்னமும் வரலை. அன்னிக்கு தலைக்கு ஊத்தியது அதுக்காக இல்லை. சாமிக்கு விஷேஷ நாளாக்கும். கோவிலுக்கு போனா நீங்கோ பூவாங்கி தருவேள். எனக்கு பழைய ஞாபகம் வந்து வாட்டும். அதுக்கு தான் கோவிலுக்கு போகலை.” என்று கூறினாள்.

“இ… இப.. இப்..ப்ப கன்சீவா இருக்கியா?” என்றான் தடுமாற்றத்துடன். இந்த நிலையில் மனதிற்குள் எப்படி தவித்திருப்பாளோ என்ற வேதனை‌ நெஞ்சை அழுத்தியது.

“இல்லை… நேக்கு தெரியலை. நான் கன்சீவா இருக்கேனானு செக் பண்ணலையே” என்று பேசிக் கொண்டார்கள்.

“நா..நா..நான் மெடிக்கல் ஷாப் போயிட்டு கிட் வாங்கிட்டு வந்துடறேன்.” என்று புறப்பட்டான். “எதுக்கும் கடைக்கு போய் வாங்கி வந்து செக் பண்ணிட்டா நல்லது தான்” என்று பாதியில் விட்ட மீன் வறுவலை பார்வையிட சென்றார் சாரதா.

காருண்யாவோ பைக் கீயை எடுக்கும் ராவணனை தவிப்பாய் பார்வையிட, அவனுமே சிக்கலான உணர்வில் திளைத்தான்.
காலை வரை பேசாமல் தவிர்த்துவிட்டு, அவள் மீன் மார்க்கெட் வரை தனக்காக சென்று வந்ததை வைத்து, ஓரளவு தங்களுக்குள் நிகழ்ந்த உடல்பரிமாற்றம் காமத்தை தாண்டி காதலை தொட்டுவிட்டதென உணர்ந்தாலும் அதை அவளிடம் பகிரும் முன், கருவுற்று இருக்கின்றதாக பேசுவதாக காருண்யா நினைத்தாள்.

அதே நினைப்போடு அவளை தவிப்பாய் பார்த்து வண்டியை முறுக்கி கிளம்பினான்.

வழிநெடுகில், ஒரு வேளை கன்சீவா இருந்தா, என்னுடைய சமாதானம் மன்னிப்பு எல்லாம் குழந்தையை காரணம் காட்டி என்று நினைச்சிடுவாளா? மறுபடியும் புரிதல் மிஸ்ஸாகுமா? இல்லை…‌ கன்சீவா இல்லைன்னா கூட அவளை நான் தாங்குவேன்.” என்று யோசித்தவன் எதிரேயிருந்த காரில் இருசக்கர வாகனத்தை வைத்து மோத சென்றான்.
கடவுள் அனுக்கிரகம் இருந்ததோ என்னவோ, ராவணன் காரை பார்த்து சட்டென வண்டியை திசை மாற்ற, ஆனாலும் கார் இடித்து பைக் ஸ்கிட் ஆனது. பேருந்தின் சக்கரத்தில் அவன் உயிரை எமன் அழைத்து சென்றார். கடவுளுக்கு ராவணன் ஆயுட்காலம் பூமியில் நீளவேண்டுமென்று தோன்றியிருக்குமோ என்னவோ பேருந்து ஓட்டுனர் சடன்பிரேக் போட்ஞு நிறுத்தினார்.

ராவணன் சறுக்கி கொண்டு கீழே சரிந்தது மட்டுமே. அவ்விடமே கூட்டம் கூடியது. ஆளாளுக்கு கார்காரனை திட்டியெடுக்க, பேருந்து ஓட்டுனர் அவசரமாய் இளங்கி பார்த்தார். “இல்லை.. நான் தான் கவனமில்லாம பெர்சனல் பிராப்ளத்தை நினைச்சிட்டு வந்தேன். கார் ஓட்டியவர் மேல தப்பில்லை‌. சாரி சாரி” என்று கால் முட்டி சிராய்புடன் கூட்டத்தை பார்த்து உரைத்தான்.
கிளம்பும் போது ஷார்ட்ஸ் அணிந்திருக்க, வலது பக்கம் கால் சிராய்த்து இரத்தம் வழிந்தது.

ஆளாளுக்கு அவன் நலனை கேட்க, “நான் ஓகே தான்” என்றவன் சரிந்த பைக்கை மீண்டும் எடுத்து மெடிக்கல் ஷாப்பிற்கு செல்லும் ஆர்வத்தில் கூட்டத்தை விலகி யார் பேச்சையும் காதில் வாங்காமல் புறப்பட்டுயிருந்தான். மறுஜென்மம் போல தான் அவன் உணர வேண்டும். ஆனால் அவனுக்கு அதில் சிந்தனை கூட செல்லவில்லை.

மறுபடியும் பைக்கை முறுக்கி மெதுவாக மெடிக்கல் ஷாப் வந்தான்.

“பிரகனன்ஸி கிட் ஒன்னு” என்று கேட்க, மெடிக்கல் கடையாளோ கீழே விழந்த மாதிரி தெரியறிங்க. சார் ரத்தம்” என்று ஷார்ட்ஸ் பக்கம் சுட்டிக்காட்டினான்.
இதுவரை சிராய்ந்த இடம் கவனிக்காதவன், “ஆயின்மெண்ட் பேண்ட்எயிட் கொடுங்க” என்றான்.‌

“சார் ஆஸ்பிடல் போனா பெட்டர்” என்று கூற, “அது அடுத்து பார்த்துக்கறேன். முதல்ல பிரகனன்ஸி கிட் வேண்டும்‌” என்று கேட்டான்.‌

ஒரளவு இதே ஏரியா என்றதாலும் ராவணன் காருண்யா இங்கு தான் நேப்கீன் மருந்து மாத்திரை இத்யாதி வாங்குவதால் ராவணனை தப்பாக நினைக்காமல், கேட்டதை உடனே எடுத்துக் கொடுத்தார்கள்.

“சார் எதுக்கும் ஆயின்மெண்ட் பேண்டெயிட் கொடுக்கறேன். அதோட பெயின் கில்லர் தர்றேன். எப்படியும் இப்ப வலிக்காது நேரமாக நேரமாக வலிக்கும். ரொம்ப வலின்னா டாக்டரிடம் சென்று இஞ்செக்ட் பண்ணிக்கோங்க” என்றான் மருந்துக் கடையில் இருந்தவன்.

“ஓகே” என்றவன் ஜிபே செய்து காருண்யாவை தேடி ஓடி வந்தான.

அவனை போலவே அவசரத்தில் காத்திருந்தவள் அவன் வந்ததும் பிரகனன்ஸி கிட் பெற்றாள்.

இருவரின் கண்களும் நிறைய எதிர்பார்ப்பை ஏங்கியிருந்தது. குழந்தைக்காக அல்ல. ஆனால் ஒருவரின் அணைப்பை பேச்சை பழைய நிலையை வேண்டிய ஏக்கம். குழந்தை வரவு பற்றி ஆசை எதிர்பார்ப்பு கூட அடுத்தபடியில் இருந்தது.

அறைக்கு செல்ல அடியெடுத்தவளை, பின் தொடர்ந்தவன், அவள் குளியலறை புகும் முன் நிறுத்தினான்.‌

“உன்னிடம் ஒரு விஷயத்தை சொல்லணும்.” என்று தவிக்க, அவளோ என்ன என்பதாய் விழித்தாள். குழந்தையை பற்றி ஏதேனும் கனவு கண்டு வைத்திருப்பாரா? அல்லது குழந்தை இப்பொழுது வேண்டாமென்று முடிவெடுத்திருப்பாரா என்று பயந்தாள். அவளிடமே நேசம் பிறக்காத திருமணம் என்பதாய் குழம்பியிருக்கின்றான்.
அதற்குள் குழந்தை வேண்டாம் என்று தான் சொல்லப்போகின்றானோ?’ என்று அணுமானித்து கண்ணீர் துளியை மறைத்தாள்.

“இந்த நேரத்தில இதை பத்தி பேசலாமானு தெரியலை. ஆனா பிரகனன்ட் கிட் யூஸ் பண்ணிட்டு அதுல வர்ற ரிசல்டை வச்சி, நான் அடுத்து உன்னிடம் பழகுவதை குழந்தைக்காகனு நீ நினைக்க கூடாது.
குழந்தை இருக்கோ, இல்லையோ, எனக்கு நீ தான் முக்கியம். நீ மட்டும் தான் முக்கியம். கல்யாணம் வேண்டுமின்னா எந்தவித சம்மதமும் இல்லாம நமக்குள் இக்கட்டுல நடந்திருக்கலாம். ஆனா தாம்பத்தியம் நேசத்தோட தான் பகிர்ந்தோம். அது காமத்துல இணையலை. எப்ப எனக்காக யோசித்து நீ போகாத பிளேஸ்ல கால் வச்சியோ, அப்ப உன் காதலை உணர்றேன்.
எந்த இடத்துக்கு போனாலும் சந்தோஷமா இருக்கற நான். இப்ப எல்லாம் எங்க போனாலும் சந்தோஷத்தை இழந்து நிற்கறேன். என் சந்தோஷம் எங்கனு ரியலைஸ் பண்ணும் போது தான் தெரியுது. என் சந்தோஷமே நீ தான்னு.
ஒருவேளை இதை நீ யூஸ் பண்ணிட்டு நான் ஏதாவது பேசினா, உனக்கு அது வேற அர்த்தம் தரலாம். குழந்தை இல்லைன்னாலும் எனக்கு நீ-நான் சந்தோஷமா வாழணும். இந்த சண்டையெல்லாம் வரட்டும் போகட்டும். பேசாம கொள்ளாம இருக்க வேண்டாம்.
ஐ மிஸ் யூ காரு. ஐ ரியலி ரியலி மிஸ் யூ.” என்றான் காதல் வலியுடன்.

காருண்யா தேம்பி அழவும், “நான் உன்னை கட்டி பிடிக்க போறேன். எனக்கு உன் ஸ்பரிசம் வேண்டும். எப்பவும் வேண்டும்.” என்று அணைத்தான்.‌

“நமக்குள் காதல் மொட்டு விட்டு மலர்ந்துடுச்சுன்னு நோக்கு இப்ப தான் ரியலைஸ் பண்ண தெரிந்ததா ராவணா? நான் எப்ப உங்களாண்ட என்னை அர்ப்பணிச்சேனோ, அப்பவே உங்களை மனசார காதலிக்கறேன் தெரியுமோனோ.” என்று கட்டிக்கொண்டாள்.

“என் மேல தப்பு இருந்தா திட்டுங்கோ. ஆனா பேசாம இருக்காதேள். என் பிராணம் போகுது. நேக்கு பூமில வாழ பிடிக்கலை.” என்றாள். நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டவன், “எனக்கு மட்டும் நீ இல்லாம இந்த பூமில வாழ பிடிக்குமா? எல்லாரிடமும் நல்லா பேசினா கூட என்னோட இயல்பை தொலைச்சிட்டு நிற்பதா தெரியுது.” என்றான்.

“இதை.. இதை பார்த்துட்டு வர்றேன்.” என்று புன்னகை முகமாக சொல்ல, “ம்ம்ம போ… ஏய் ரொம்ப எதிர்பார்க்காத. குழந்தை இருந்தா சந்தோஷப்படலாம். இல்லைன்னாலும் பிரச்சனையில்லை. நமக்கு ஏஜ் இருக்கு. கல்யாணமாகி ஏழு மாசம் தான் முடிஞ்சிருக்கு.” என்றான்.‌

“ம்ம்” என்று கதவை தாழிட்டாள். எல்லாம் பேசிவிட்டப் பின்னே காலில் சுருக்கென்ற வலி.
ரத்தம் வழிந்திருந்தது. ராவணன் முகத்தையே பார்த்து காருண்யா பேசியதால் அவள் இன்னமும் கவனிக்கவில்லை.

பஞ்சை கொண்டு ரத்தத்தை துடைத்து முடித்தான்.‌வீட்டிலிருந்த டின்சர் வைத்து துடைத்து பல்லை கடித்தான்.
ஆயின்மெட்டை போடும் நேரம், பிரகனென்ட் கிட்டையே பார்த்தவாறு “ராவணா ஒரு கோடு பளிச்சினு வந்துடுச்சு. இன்னொன்னு… லேசா… லேசா தெரியற மாதிரி தானே இருக்கு. நன்னா பார்த்து சொல்லுங்கோ. எனக்கு படபடப்பா இருக்கு.” என்றாள்.

ஆயின்மெட்டை தூரவைத்து அவளிடமிருந்து வாங்கி பார்த்தான். லேசான பிங்க் கோடு தெரியதான் செய்தது.
அதாவது கோடே இல்லாமல் காட்டாது. இளஞ்சிவப்பை காட்டி நின்றது.

“டேட் தள்ளி போய் ஒரு ஐம்பது நாள் இருக்குமா?” என்றான்.‌

“ம்கும்‌ ஐம்பத்திரெண்டு நாள்” என்றவள் ராவணனை பார்க்கா, அவனோ, கொஞ்சம் கொஞ்சமாய் சிரித்து, “ஐ திங்க் நாம அப்பா அம்மாவாக போறோம்.” என்றவன் அவள் பின்னங்கழுத்தை பிடித்து தன் பக்கம் இழுத்து கன்னத்தில் முத்தமிட்டான்.

ராவணனின் கன்னத்தில் அவளும் பதிலுக்கு முத்தங்களை வாறியிறைக்க, “தாடி குத்துது ராவணா” என்றாள். அவன் தாடி ட்ரிம் செய்து எப்பொழுதும் இருப்பது வழக்கமென்பதால் குத்தவும், அப்படின்னா இங்க கொடு.” என்று உதட்டை சுட்டிக்காட்ட, “போங்கோ… மீசையும் குத்தும்.” என்று நாணினாள்.

பெதுவாக நாணியவளுக்கு தன்னவன் காலில் ரத்தம் வழிவதை கண்டு, “அச்சோ என்னதிது. என்னாச்சு?” என்று பதறினாள்.‌

“பதறாத… ஒன்னும் ஆகலை. கார் எதிர்ல வந்தது… யோசனையோட வண்டி ஓட்டவும் மோத பார்த்தேன். கார் வருவதை பார்த்து வண்டியை திருப்பினேன். பைக் ஸ்கிட் ஆகிடுச்சு. பஸ் டயர் கிட்ட போய் கீழே விழுந்துட்டேன். காட் கிரேஸ் உயிர் பிழைச்சிட்டேன்.” என்றான்.

காருண்யா “இவ்ளோ ரத்தம். அச்சோ… இதென்ன ஏற்கனவே பஞ்சுல துடைத்து வச்சியினுக்கேள்‌ அப்போ எவ்ளோ ரத்தம் போச்சோ” என்று அவசரமாய் அவள் பஞ்சை கெண்டு துடைக்க, “ஏய் நீ குனியாத. உட்காரு. நான் பார்த்துக்கறேன்” என்று அவளை குனிய விடாமல் மெத்தையில் அமர வைத்தான்.

“ஆயின்மெண்ட் போட்டு கட்டு கட்டிட்டா ரத்தம் நிற்கும்.” என்று தடவினான்.

“ரோகிணி மாமி வாகன தோஷமிருக்குனு சொன்னா. சொன்னதை கேட்காம பைக் வாங்கிட்டேள். இப்ப என்ன யோசனையில் வண்டியை ஓட்டினேள்‌” என்றவளுக்கு கணவனின் எண்ணம் படாதபாடுபட்டு தன்னோடு பேசியதில் தெளிந்து, “இப்படி தான் நினைப்பை எங்கயோ வச்சிட்டு வண்டியை ஓட்டுவேளா. ஏதாவது ஆயிருந்தா என்னாகறது.” என்று துடித்தாள்.

ராவணனோ “ஏய்… கட்டுப்போட்டாச்சுல்ல. சரியாகிடும்‌. வாகன தோஷமெல்லாம் முடிஞ்சி பல நாளாகுது. சும்மா எங்கம்மா மாதிரி ஏதாவது உலராத. மைண்ட் டிஸ்டர்பா இருக்கும் போது வண்டியில் கவனமில்லை. அதான் ரீசன். அதர்வைஸ் நான் பெர்பெக்டா ஓட்டுவேன். அதோட ஏழரை காலம் முடிந்தது. அதனால தப்பிச்சிட்டேன்ல.” என்றான்.

குக்கர் சத்தம் அடிக்க, “அச்சோ… சாரதா அக்கா இருக்காங்க. மறந்தே போயிட்டேன்” என்று காருண்யா செல்ல, அவனுமே பின் தொடர்ந்தான்.

“சாரதாக்கா… நான் கன்சீவா இருக்கேன்” என்றாள்.

“அப்படி போடு. என் தங்கம்.’ என்று நெட்டிமுறித்தவர், பாசிபருப்பு பாயசம் வெள்ளம் போட்டு வச்சிட்டேன்‌. நீ எப்படியும் நல்ல செய்தியோட வருவேன்னு எனக்கு தெரியும்” என்றார்.‌ அவர் பார்வை ராவணை கண்டு வாழ்த்துக்கள் தம்பி” என்றுரைத்து காலை கவனிக்க, “இதென்ன தம்பி” என்று பதற, “அதொன்னுமில்லைக்கா. அவசரமா போனேன்ல… அதைவிடுங்க.. அக்கா.. நீங்க காருண்யாவிடம் வேலை கேட்டிருந்திங்க தானே? உங்களுக்கு ஹாஸ்டல்ல சம்பளம் எவ்ளோ கொடுத்தாங்கன்னு சொல்லுங்க. அதை விட ஆயிரம் அதிகமா வாங்கிக்கோங்க. காருண்யாவை இந்த மாதிரி நேரத்துல பார்த்துக்கோங்க. அவ கொஞ்சம் வேலையெல்லாம் அவாய்ட் பண்ணினா பெட்டர்னு நான் பீல் பண்ணறேன்.” என்றான்.

“தம்பி நிஜமா தான் சொல்லறிங்க. இங்க பெரிய வேலை எதுவும் இருக்காத மாதிரி தெரியுதே.” என்றார்.

“காலையில் சமையல், பாத்திரம் விளக்குறது, வீட்டை நீட்டா வச்சிட்டு துணி துவைக்க, போட்டு எடுத்து மடிச்சி வைக்கிறது. வீட்டை பெருக்கறது கூட்டறது, மாடில போக வர, முக்கியமா காருண்யாவை நல்லா பார்த்துக்க, ஒரு சப்போர்டா இருந்தாலே போதும் அக்கா‌” என்றான்.‌

“அதெல்லாம் நல்லா பார்த்துப்பேன் தம்பி” என்று காருண்யாவை ராவணாவை கண்டு நன்றியுரைத்தார்.

“அக்கா… சாப்பாடு மூனு பேருக்கு ஆக்கிடுங்க. சாப்பிடலாம்.” என்று இன்றிலிருந்தே ஆரம்பிக்க சாரதா அதற்கான பணியை கவனிக்க ஓடினார்.

ராவணனும் காருண்யாவும் தங்கள் பெற்றவர்களிடம் தகவல் தெரிவிக்க நினைத்தனர். ஆனால் மாலையில் ஆஸ்பிடலில் ஒருமுறை செக்கப் செய்தப்பின் மருத்துவ உறுதியுடன்  கூறலாம் என்று நிதானித்தனர்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

11 thoughts on “ஐயங்காரு வீட்டு அழகே-35”

  1. Kalidevi

    Super congrats karu and ravana. Paru ipove adutha aal vanthu samadhanam aga poringa patha last la athukulla ushara sernthutinga . Crt time ku saratha akka vanthanga illana ippadiye tha poirukum yosikama. Aduthu papom

  2. M. Sarathi Rio

    ஐயங்காரு வீட்டு அழகே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 35)

    நான் சொன்னேனா…? அதான் நடந்தது. சண்டையை போட்டு மண்டையை உடைக்காம இருக்கணும்ன்னா, இது மாதிரி சந்தோஷமான விஷயத்தை சொல்லி மண்டையை காப்பாத்தி எஸ்கேப் ஆகிடணும்.

    ஏன்னா, எப்படியும் மண்டை இருக்கிற வரைக்கும் மண்டை வலி தப்பாது, மூக்கு இருக்கிற வரைக்கும் ஜலதோஷத்துல இருந்து தப்ப முடியாது. அதே மாதிரி புருசன் பொண்டாட்டின்னா சின்ன சின்ன உரசல்களும், ஊடல்களும், கூடல்களும் தப்பாது.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  3. Dharshinipriya

    Wow super sis semma epi 👍👌😍 congrats raavana and kaaru eppdiyo love a unarndhu onnu serndhachu 😘 edhula baby vara pora happiness super ❤️❤️❤️💕💞

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *