அத்தியாயம்-12
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
சுரேந்திரன் தவறை உணர்ந்த அடுத்த நொடி, கைலாஷை அழைத்து, ஆதித்யாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
அவனோ மேலும் கீழும் பார்த்து தன் வேலையில் குறியாக இருந்தான்.
“நா…நான் செய்தது தப்பு. பெரிய தப்பு. நண்பனா என்னை மதிச்சு, வினுசக்ரவர்த்திக்கு கீழே எனக்கு நல்ல சம்பளம் தந்து வேலை கொடுத்தான்.
நான் தான் புத்திக் கெட்டு நம்பிக்கை துரோகம் செய்து, சொத்தை அபகரிச்சேன். தப்பெல்லாம் என்னுடையது மட்டும் தான். நான் உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கறேன். என் மகளை தள்ளி வைக்காத, அவ… அவ நீயில்லாம சரியா சாப்பிடாம, வாழ்க்கையையே வெறுத்தவளா இருக்கா.
என்னிடம் பேசவே மாட்டேங்குறா. என்னை தண்டிச்சிடு. அவளை மன்னிப்பு ஏத்துக்கோ… உனக்கு வேண்டுமின்னா உங்க சொத்து முழுக்க உன் பெயர்லயே எழுதி தர்றேன்” என்று இரத்த கண்ணீர் வராத குறையாக அழுது கரைந்தார்.
வீட்டுக்குள் நின்று கூட பேசவில்லை. வாசலில் நின்று தான் கதறினார்.
ஆதித்யாவோ நிதானமாக சாப்பிட்டு கை அலம்பி துண்டில் துடைத்து, “நீ இப்ப வந்து மன்னிப்பு கேட்கற? எங்கப்பா அம்மா உயிரோட வந்துடுவாங்களா? இல்லை… என் இளமை பருவத்துல நான் தனிமையா இருந்து எங்கப்பா அம்மாவை நினைச்சி நினைச்சி அழுதது எல்லாம் சரியாகிடுமா?
இப்ப வந்து பாவமன்னிப்பு கேட்குற? நான் என்ன சர்ச் பாதரா? உன்னை மன்னிச்சு விடறதுக்கு.
ஆதித்யா சக்கரவர்த்தி… என் முடிவை எப்பவோ சொல்லிட்டேன். எனக்கு மன்னிக்கவோ மறக்கவோ முடியாத விஷயம். இனி பேசி எந்த புரோஜனமும் இல்லை. தேவையில்லாம இங்க வந்து நடிக்காத.
நீ முன்ன என்ன செய்தாலும் இப்ப நான் மறந்து உன் பொண்ணோட வாழணுமா? ஏன் உன் பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை பார்க்க தெம்பில்லையா?” என்று நக்கலாய் பேசினான் ஆதித்யா.
சுரேந்திரன் கூனிக்குறுகி நின்றார். ஆதித்யாவோ “இதுல சொத்து தர்றியா சொத்து. உன்னை நடுத்தெருவுல நிற்க வைக்க இரண்டு நிமிஷம் ஆகுமா? நல்லவனா மாப்பிள்ளையாக நடிச்சி சொத்தை ஆட்டைய போட எவ்ளோ நேரம் ஆகும். உன்னை மாதிரி ஜென்மம் நான் இல்லை. இனி இங்க வராத. என் முடிவுல எந்த மாற்றமும் வராது” என்று கூறினான்.
கைலாஷோ “பார்வதியிடம் பேசி பார்க்கலாம் நீ வாடா” என்று துவண்டு போயிருந்த நண்பனை அழைத்து சென்றான்.
ஆதித்யா வீட்டை பூட்டி அலுவலகம் செல்வதில் தீவிரமாய் இருந்தான்.
ஆதித்யா துளி கூட வருந்தாமல் நடமாடினான். எத்தனை நாள் அழுத்தம் பெற்றதோ இதயம். சுரேந்திரன் மனம் துவளவும் பெருமகிழ்ச்சி கொண்டான்.
என்ன கூடவே தன் சரிபாதியானவளை நோகடிப்பதை நினைக்க தவறினான்.
திலோத்தமாவிடம் சுரேந்திரன் வந்து காலை தொட்டு “மாப்பிள்ளையிடம் மன்னிப்பு எல்லாம் கேட்டேன். ஆனா அவர் மன்னிக்கலை. நான் முற்பகல் செய்த தப்பு. இப்ப உன்னை வாட்டுது.” என்று கண்ணீர் உகுத்தினார்.
“ஏன்ப்பா… கண்ணை பிடுங்கி காட்சியை பாருனு சொன்னா பார்க்க முடியுமா?
ஈயத்தை காய்ச்சி காதுல ஊத்தி பாட்டு கேட்க முடியுமா?
வாழ்க்கையை மொத்தமா அழிஞ்ச பிறகு சரிபடுத்தறேன்னு கிளம்பறிங்க. உடைஞ்ச கண்ணாடிப்பா… உடைஞ்ச கண்ணாடி.
இனி காலத்துக்கும் ஒட்டாது. அவரை நிம்மதியா இருக்க விடுங்க. தினம் தினம் தொல்லை பண்ணாதிங்க” என்று கையெடுத்து கும்பிட்டாள்.
சுரேந்திரன் திகைத்து போய், “உனக்குன்னு ஒரு வாழ்க்கை இல்லாம போய்டுமே மா” என்று கூறியதற்கு உடனடியாக, “எனக்கு எனக்குன்னு தான் இந்த வீடு சொத்துனு அவர் அப்பா அம்மாவை கொன்று சேர்த்து வச்சியிருக்கிங்க, இன்னமும் எனக்கு என்ன பண்ண போறிங்க.” என்று ஆங்காரமாக கத்தினாள்.
“பெத்தவங்க பிள்ளைகளுக்கு புண்ணியம் சேர்த்து வைப்பாங்க. ஆனா நீங்க எனக்கு பாவத்தை சேர்த்து வச்சிட்டிங்க. இரண்டு உயிர் போனதுக்கு கடவுள் என்னை தான் தண்டிப்பார். என் அழிவு உங்க கண் முன்ன வரும்.” என்று கூறி கண்ணீரை துடைத்து அறைக்குள் ஒடுங்கினாள்.
சுரேந்திரனுக்கு இனி என்ன செய்வதென்று தெரியாது நின்றார்.
இளரத்தமாக இருந்த காலத்தில் தனக்கு தேவை பணம், வீடு, வாசல் ,சொத்து என்று ஆசைப்பட்டார். மகள் மட்டும் இருக்க மற்றொரு பிள்ளை பிறக்கும் என்று கனவு கண்டார். ஆனால் சுரேந்திரன் போதாத காலம் மற்றொரு குழந்தைக்கு வாய்ப்பில்லாமல் போக, திலோத்தமா மட்டுமே வாரிசாக மாறினாள்.
எல்லாமே தன் மகள் வசதியாக வாழ என்று மனைவி குழந்தையோடு உறவாடினார்.
தன்னால் ஒரு குடும்பம் சிதைந்து உயிர் துறந்து, ஒருவன் வாடுவான் என்ற குற்றவுணர்வு அன்றில்லை.
வினுசக்ரவர்த்தி மகன் எங்கோ ஒரு சொந்தங்களின் வீட்டில் இடிபடுவான் என்றல்லவா நினைத்தார்.
இப்படி தன் மகளை இடிபட்டு வாழ வைத்திடுவானென்று கனவிலும் நினைக்கவில்லை.
அவருக்கு அதிர்ச்சியில் வந்த இதய நோய், தற்போது கவலையால் மேலும் மனதை அழுத்தியது.
திலோத்தமா தான் முற்றிலும் மாறியிருந்தாள். அவளது அறையில் ஏதோ நடைபிணமாக, பால்கனியில் இருந்து குதித்து உயிர் துறக்க நினைத்தாள்.
ஆனால் முடியவில்லை….
நொடியில் இறந்துவிட்டால் தந்தைக்கான தண்டனை காலம் வேறுவிதமாக மாறும். தான் தனி மரமாக நிற்க, இத்தனை சொத்தும் சேர்த்தாலும் பயனற்று, மகள் வாழ்வு துவண்டிருப்பதே அவருக்கான தண்டனை என்பதே ஆதித்யா முடிவை இவளும் நிறைவேற்றினாள்.
ஆதித்யா அதன் பின் திலோத்தமா என்பவளை பற்றி அறிந்திட மறுத்தான். பார்வதி சொல்லுக்கு கூட கட்டுபடவில்லை.
பார்வதி மட்டும் அடிக்கடி மகனை பார்த்து வர கைலாஷ் அதற்கு தடை விதித்தார்.
“நீங்க உதறி சென்ற பிறகு என்னை அம்மாவா உணர வைச்சி உறவென்ற பாலம் தந்து அடைக்கலம் கொடுத்தவன் ஆதித்யா. அவனை பார்க்க போவேன்.” என்று கணவரிடம் சண்டை போட்டே மகனை பார்க்க வருவார்.
ஆதித்யாவோடு தங்கிடும் முடிவில் பார்வதி இருக்க, அவனோ “அம்மா… இனி அப்பா கூட இருங்க. அதான் அழகு” என்று அவர்கள் வருகையை தடை சொல்லாமல் தங்க மட்டும் மறுத்தான்.
பார்வதிக்கு கட்டிய கணவனா பெறாத பிள்ளையா என்று போராட்டத்தை விட மருமகள் என்றவளுக்காக மிகவும் கவலைக்கொண்டார்.
தன்னை போல அவளும் துணையை விட்டு வாழ வேண்டிய காலத்தில் தனியாக வாழ வேண்டுமா? என்ற சிந்தனையில் உழன்றார்.
இப்படியே மூன்று மாதம் கடந்தது. திலோத்தமா ஆதித்யா இருவரும் பிரிந்தே இருந்தனர்.
ஆதித்யா ஆசிரமத்தில் ‘பிரேம்’ என்ற பையனுக்கு படிப்பிற்கான செலவை ஏற்றியிருக்க, அவன் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து மேற்கொண்டு எந்த காலேஜ், எந்த குரூப் படிப்பதென்று குழப்பத்தில் இருக்க, சாந்தகுமார் ஆதித்யாவை வரவழைத்து, என்ன படித்தால் என்ன வேலைக்கு செல்லலாம் என்ற ஆலோசனையை வழங்க, அந்த மாணவனுக்கு உதவ கூறினார்.
அதன் பொருட்டு ஆதித்யா ‘அன்பாலயம்’ வந்து சேர்ந்தான். ‘பிரேமிற்கு இனிப்பை வழங்கி, மதிப்பெண்ணையும் பார்த்து அதற்கேற்றவாறு படிப்பும் அதற்கான வேலையும் சொல்லி, எந்த படிப்பில் ஆர்வமுண்டு என்று கேட்டு அதன் சாதக பாதகத்தை விளக்கினான் ஆதித்யா.
அந்த நேரம் திலோத்தமா சாயலில் ஒரு கர்ப்பவதி செல்லவும் ஆதித்யா திடுக்கிட்டான்.
‘சை… ஏன் இப்படி என் கண்ணுக்கு தெரியணும். என்னாச்சு எனக்கு? இப்படியா நினைப்பு போகணும்’ என்று தலையை உலுக்கி கொண்டான்.
பிரேமிடம் மீண்டும் பேசிக்கொண்டு இருக்க, அதே பெண் மீண்டும் அவன் பார்வையில் படவும், இம்முறை ஆடிப் போனான்.
ஏனெனில் அவன் கண்கள் கண்ட காட்சியில் இருப்பது திலோத்தமாவே தான்.
அப்படியென்றால்…. அப்படியென்றால்…
ஆதித்யா ஸ்தம்பித்து ஆடிப்போக, ”அண்ணா நீங்க சொன்னதுலயும், எனக்கு ஆர்வம் இருப்பதும் பார்த்தா பிஎஸ்சி கம்பியூட்டர் சயின்ஸ் எடுக்கறேன் அண்ணா.” என்று பிரேம் கூற, காதில் வாங்காமல் திலோத்தமாவை தான் இமைக்க மறந்து பார்த்தான்.
“அண்ணா..” என்று பிரேம் தீண்டவும், “என்ன சொன்ன?” என்றதும் “கம்பியூட்டர் சயின்ஸ் எடுக்கறேன் அண்ணா” என்றான்.
“ஓகே.. பிரேம். உனக்கு பிடிச்ச காலேஜ்ல சீட் போடு. மேற்கொண்டு பண விஷயம் நான் பார்த்துக்கறேன். நீ போ” என்று வழியனுப்பினான்.
“தேங்க்ஸ் அண்ணா.” என்று பிரேம் சென்றுவிட்டான். இனி மற்றவை பார்த்துக் கொள்ளவதால் ஆதித்யா அனுப்பிவிட்டு, திலோத்தமா முன் செல்ல நினைத்தான்.
அவன் கால்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தது.
‘ஏன் போகணும்? எதுக்கு போகணும்? அவ சுரேந்திரன் மகள்’ என்று மூளை எடுத்து சொல்ல, மனமோ ‘அங்க நிற்பது உன் மனைவி ஆதித்யா. அவ வயிற்றில் சுமப்பது உன் குழந்தையை’ என்று மனசாட்சியும் முன்னிருத்தியது.
ஆதித்யா செயலற்று நிற்க, திலோத்தமா மயங்கி சரிதை கண்டான்.
ஆதித்யா வேகமாக சென்று தாங்க நினைத்தான். ஆனால் இடைப்பட்ட தூரம் அதற்குள் நெருங்க விடவில்லை.
புல்தரையில் மயங்கி சரிந்து மயங்கியப் பின்னே ஆதித்யா அவளை நெருங்கியிருந்தான்.
அதற்குள் யாரோ தண்ணீரை புகட்டினார்கள். திலோத்தமா கன்னத்தில் தட்டவும் அவள் எழுதவில்லை. மாறாக இமை கூட திறவாது மயங்கியே இருந்தாள்.
“பிள்ளைத்தாச்சி பொண்ணா இருக்காளே? நிழல்லயாவது மயங்கி இருக்கலாம். டாக்டர் வரச்சொல்லணும். யாராவது உதவுங்களேன்” என்று ஒரு முதியவள் கூறவும், ஆதித்யா மீது சாந்தகுமார் கைகள் பதிந்தது.
“வேடிக்கை பார்க்கறியே ஆதித்யா… நிழலுக்கு தூக்கிட்டு வா” என்று கூற, வேறு வழியின்றி ஆதித்யா மனைவியை தொட்டு தூக்கினான்.
ஆதித்யா திலோத்தமாவை தூக்கியதுமே எடை குறைவாக இருப்பதை யூகித்தான்.
அவனோடு இல்லறம் இனிக்க இருந்த காலத்தில் இந்த எடையில்லை சற்று எடை கூடுதலாக இருப்பாள். தற்போது குழந்தை உருவாக்கியிருந்தால் இன்னமும் எடை கூடியிருக்க வேண்டும் ஆனால் இதென்ன மெலிந்து கிடக்கின்றாள் என்று ஆராய்ந்தான்.
தன்னை ஒருவன் தூக்கியது கூடவா தெரியாமல் மயங்கியிருப்பாளென்று அவள் பூமுகத்தையே ஆராய்ந்தான். நெடுநாள் உறக்கமின்றி தவித்தவளுக்கு மயக்கத்தில் உறக்கமும் வந்திருக்காங்க வேண்டும் என்பது போல விதிக்கவில்லை.
சாந்தகுமார் அலுவலகம் பக்கத்தில் ஒரறையில் வந்து அவளை கிடத்திவிட்டு மருத்துவரை அழைத்தார்.
மருத்துவரும் உடனடியாக வருவதாக தெரிவிக்க சாந்தகுமாரிடம் “என்ன அங்கிள் இவ? கர்ப்பமாக இருப்பதை என்னிடம் சொல்லவேயில்லை.” என்று அவளை குற்றம் சாட்டினான்.
“ஆதித்யா… உன் நெஞ்சில் கை வச்சி சொல்லு. அவ உன்னிடம் நிதானமா பேச வந்தப்ப அவளை பேசவிடாம செய்தது யாரு. அவங்க அப்பா செய்த தவறுக்கு நீ இந்த பொண்ணை தண்டிக்கறது சரியா? தண்டனை தந்துட்டு இப்ப உன்னிடம் சொல்லலைனு வேற ஆதங்கப்படுற.
பார்வதி என்னிடம் எல்லாம் சொன்னாங்க. அப்பா அம்மாவோட இறப்புக்கு காரணம் என்று தெரிந்தும் அவர் பொண்ணை நீ கல்யாணம் பண்ணிருக்க. நீ நினைச்சிருந்தா திலோத்தமாவை நிராகரிச்சு கூட பழிவாங்கியிருக்கலாம். தாலி கட்டிட்டு பழிவாங்குவதா பேசியிருக்க.
நீ இதுவரை வன்மத்தை மனசுல வச்சிட்டு யாரிடமும் பழகியதில்லை. அப்படியிருக்க இந்த விஷயம்? சரி… அப்பா அம்மாவுக்காக இப்படி நடப்பது சரி தான். இப்ப என்ன செய்ய போற? அந்த பொண்ணு கர்ப்பம் ஆனதை சொல்லலைன்னு குதிக்கற.
இப்ப உனக்கே தெரியுது. அவ விஷயத்துல நீ என்ன முடிவு எடுக்க போற?” என்றார் சாந்தகுமார்.
தன் தாய் தந்தை இல்லாமல் தனித்து இருக்க, அடைக்கலம் தந்தவர் சாந்தகுமார். அவரிடம் இந்த நிமிடம் மௌனம் சாதித்து நின்றான் ஆதித்யா.
-தொடரும்.
Itha ethirpathen aana eppadi nadakama iruku ninacha shock koduthuta thilo ipo intha nilamaila pathum nee ava sollave illa nu solra aadhi nee sonna time ku ava varala tha irunthalum una pathu pesa vanthale apovathu ketu irukalame pesa varatha ipo ena mudivu eduka pora
Aadhi ku ipo twins ah iruntha Nala irukum Avan amma appa ve avanuku babys ah vantha mathiri irukum
Spr going waiting for nxt epi
Adi surendiran oda ponnu ah na Thilo ava pregnant ah irukirathu ah eppudi unkitta solluva ne aval.ah pazhivaanga than ah kalyanam pannatha ah sonna athu than avanga appa panna thappu kana thandanai nu sonna atha meeri unkitta pesa vandha appo vum unnaku vera mapillai ah unga appa kalyanam panni vaiparu ellam.pesitu ippo vandhu ava solla la nu ne pesurathu endha vagai la serkurathu
Interesting
அருமையான பதிவு
Unga story always interesting 🌹
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 adhithya pandradhu romba thappu pa paavam thilo endha thappum pannama dhandanai anubavikira🙄🥺
nice!!