அத்தியாயம்-13
- 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
திலோத்தமா கண் விழித்த போது, ஆதித்யா பக்கத்திலிருந்தான். இடைப்பட்ட நேரத்தில் பார்வதியிடம் திலோத்தமாவை பற்றி பேசினான். அவரோ மகனுக்கு திலோ கர்ப்பவதி என்றது அறிந்ததும், அவனது முடிவிலும் ஆனந்தமடைந்தார். பெற்றவளை விட அன்பாய் வளர்த்த பாசம் என்றும் ஒரு படி உயர்ந்ததே. கைலாஷ் எல்லாம் தூரத்து உறவில் எட்டி பேசி கொள்பவன். பார்வதியிடம் அன்பாய் உண்மையான மகனாக அல்லவா நடப்பவன்.
திலோத்தமா எழுந்ததும் ஆதித்யா அவளை பார்த்து, அவளது உப்பசமான வயிற்றை பார்த்து அருகே வந்தான்.
கணவர் அருகாமை என்றதும் தள்ளாடி எழுந்தாள்.
ஆதித்யா எதுவும் பேசாமல் அவளை தாங்கி நிறுத்தி, கையை வாசல் பக்கம் நீட்டி ‘முன்னே செல்’ என்று கூற புரிந்து நடந்தாள்.
மனதிற்குள் ‘இவருக்கு நான் கன்சீவா இருப்பதே தெரியாது. அத்தை இவரிடம் சொல்லலை என்று சொல்லிருந்தாங்க. இப்ப இவர் இங்க எப்படி? அதோட நான் கர்ப்பமா இருப்பதை பார்த்துட்டார். அவரிடம் சொல்லலைன்னு கத்துவாரா? இல்லை என் குழந்தையை மட்டும் வேண்டும்னு கேட்பாரா? என்றதும் அவள் வயிற்றை தொட்டு மறுக்கும் விதமாக தலையசைத்தாள்.
அதே நேரம் ஆதித்யா திரும்பி, “பைக் எடுத்துட்டு வந்துடறேன். இங்கயே இரு” என்று கூறினான்.
இவயெதுக்கு தலையை ஆட்டி பயந்துட்டு இருக்கா?’ என்றவன் சிந்தித்தபடி நடந்தான். சாந்தகுமார் பக்கவாட்டில் வந்து, “என்னம்மா… ஆதித்யா பைக் எடுக்க போயிருக்கானா?” என்றதும், “ஆ..ஆமா அங்கிள். அப்படி தான் சொல்லிட்டு போனார்.” என்று கையை பிசைந்தாள்.
“ரொம்ப பலவீனமா இருக்கியாம்மா? மயக்கம் வந்து விழுந்துட்ட?” என்று கேட்டவரிடம் ‘ஆம் ஆதித்யாவை பிரிந்தப்பின் சரியாக உணவு தொண்டையில் இறங்கவில்லை’ என்று கூற நுனி நாக்கு வரை வந்தது. ஆனால் குரல் வரவில்லை.
அமைதியாக தன் நிலையை எண்ணி தலைகவிழ்ந்தாள். அவருக்கும் ஆதித்யாவை பிரிந்து இருப்பது தெரியுமே.
“ஆஹ்.. ஆதித்யா வந்துட்டான்.” என்று கூற, ஆதித்யா ஹெல்மெட் அணிந்து திலோ பக்கத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தினான்.
“ஜாக்கிரதையா அழைச்சிட்டு போ ஆதித்யா வாழ்க்கையில் எந்த தருணமும் திரும்ப கிடைக்காது” என்று ஆதித்யாவிடமும், “நல்லா பிடிச்சிக்கோம்மா… பைக்ல போய் பழக்கம் இல்லாம இருக்கலாம். உன் வாழ்க்கைக்கும் பிடிமானம் முக்கியம்.” என்று திலோத்தமாவிடமும் உரைத்தார்.
அவர் பேசியது பூடகமாக இருவருக்கும் அறிவுருத்தினார். ஆதித்யாவோ, “போயிட்டு வர்றேன் அங்கிள்.” என்று விடைப்பெற்றான்.
திலோத்தமாவோ ஆதித்யாவின் இருசக்கர வாகனத்தை நன்றாக பிடித்து கொண்டாள். அவனோடு வாழ்ந்த சில நாளில் அக்கம் பக்கத்தில் இந்த இருசக்கர வாகனத்தில் தானே அழைத்து செல்வான். அதனால் மீண்டும் அதே பிடிப்பில் மெய்மறந்தாள்.
இனி கிடைக்கவே பெறாத பாக்கியமென்று நினைத்தாளே.
இதோ இன்று அமையவும் கண்ணீர் துளிர்த்தது.
இந்த உதவி சாந்தகுமார் அங்கிளால் தனக்கு ஆதித்யா உதவலாம். எப்படியும் தன் தந்தையையே மன்னிக்காதவன், மன்னிக்காத அளவிற்கு தவறு செய்தவரே தந்தை, அப்படியிருக்க கணவர் தன்னை ஏற்பாரா? என்று கவலையுள்றாள்.
பாலைவனத்தில் சிறு மழையாக, பசியில் வாடுபவனுக்கு சிறு தேன் துளியாக, கணவரின் இந்த நெருக்கமான பரிசத்தை இந்த நொடி அனுபவித்தாள்.
இருசக்கர வாகனம் நேராக ஆதித்யா வீட்டை வந்தடைந்தது.
ஆதித்யாவின் பரந்த முதுகையும் தலையையும் பார்வையிட்டு, சிந்தனைகள் எங்கோ சென்றியிருக்க வீடு வந்ததை அவள் அறியவில்லை. “இறங்கு” என்றதும் ஆதித்யா குரலில் நடுங்கி இறங்கினாள்.
வீட்டை கண்டதும் திலோவிற்கு அவள் ஆதித்யாவோடு வாழ்ந்தவை நினைவில் தாக்க, ஆதித்யாவை ஏறிட்டாள். கடைசியாக வாசலில் நிறுத்தி அப்படியே அனுப்பினாரே.
இம்முறை அழைப்பாரா? என்று குழம்ப, ஆதித்யாவோ வீட்டுக் கதவை திறந்து, “உள்ளவா” என்று கூறினான்.
குரல் என்னவோ குழைவாய் வந்தது.
திலோத்தமாவிற்கு அப்பவும் ஏதோ கனவு என்று எண்ணியே வீட்டுக்குள் அடியெடுத்து வந்தாள்.
அவள் வீட்டுக்குள் வரவும், வாசல் கதவை மூடிவிட்டு, “உட்காரு வர்றேன்” என்று அறைக்குள் சென்றான்.
இரண்டு நொடியில் கையில் திலோத்தமாவின் இரவாடையை கொண்டு வந்து கொடுத்து, “ரூம்ல போய் ரெப்ரஷ் பண்ணிட்டு வா. உன்னிடம் பேசணும்” என்றான்.
கண்கள் கலங்க மலங்க முழித்து நைட்டியை மாற்றிவிட்டு வந்தாள். தளர்வான ஆடை, தங்கள் வீடு, இயல்பான வாழ்வோடு பொருந்தியதாக தோன்றினாலும் ‘எனக்கு இந்த குழந்தை வேண்டும் அதுவரை கூடயிரு அப்பறம் உங்கப்பாவிடம் போ’ என்பாரோ என்றெண்ணி வந்தாள்.
ஆதித்யா கையில் சூடான பாலும் பிரட் துண்டும் எடுத்து வந்தான்.
“முதல்ல இதை சாப்பிடு” என்று கூறவும் திலோத்தமா சமத்து பெண்ணாக வாங்கி சாப்பிட்டாள். அவள் கணவன் கொடுக்க மறுக்கவோ ஆராயவோ அவள் முற்படவில்லை.
பால் டம்ளர் காலியாகவும், ஆதித்யா வாங்கி ஓரமாய் வைத்தான்.
சற்று நேரம் மௌனம் கடக்கவும் ஆதித்யா பார்வை திலோத்தமா வயிற்றில் நிலைக்குத்திட, திலோத்தமா சங்கடமாய் வயிற்றில் கையை வைத்து அவளோடு இணைத்து கொள்வது போல செயல் புரிய தொண்டை செருமினான்.
இவனை பார்த்ததிலிருந்து என் குழந்தையை என்னிடமிருந்து பிரிக்காதே என்பது போல அவள் செய்கையால் “நம்ம குழந்தையை உன்னிடமிருந்து பிரிக்க மாட்டேன். முதல்ல தப்பா யோசிக்கறதை நிறுத்து.” என்றான்.
திலோத்தமா நிம்மதியாகவும் “கர்ப்பமானதை என்னிடம் சொல்ல தோனலையே? ஏன்..? அந்தளவு காயப்படுத்திட்டேனா?” என்று கேட்டான் ஆதித்யா.
திலோத்தமா என்னவென்று உரைப்பாள், எல்லாம் முடிந்துவிட்டதென்று அல்லவா நினைத்து ஒதுங்கினாள். அதை தானே அவனும் சொன்னான்.
ஆனாலும் குழந்தையை கூட கூறவில்லை என்பது தவறு தான். ஆதித்யா அவளையே பார்க்கவும், தலைகவிழ்ந்து, “வினு மாமா, அனு அத்தை இறந்ததுக்கு எங்கப்பா காரணமா இருக்கும் போது, நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு வாழ வந்தாலும் நீங்க மன்னிப்பிங்களா? நீங்க என்னை பழிவாங்க தானே கல்யாணம் செய்திருப்பிங்க?
கொலைக்காரன், துரோகியோட மகளை மன்னிக்க முடியாதப்ப நான் உங்க கண் முன்ன வந்து இரிட்டேட் பண்ண விரும்பலை. நீங்களும் தானே உங்களை நானே கொல்வதா பேசினிங்க.
நான் தனியா இருந்து, எங்கப்பா என்னை பார்த்து பார்த்து ரத்த கண்ணீர் விட்டு அழட்டும். அது தான் அவருக்கு தண்டனை.” என்று கண்ணீர் வழியவிட்டு மூக்குறிந்தாள்.
“நீ கன்சீவா இருப்பதை என்னிடம் ஏன் சொல்லலைன்னு கேட்டேன்” என்று அவளையே நோக்கி வினாத் தொடுத்தான்.
அவனுக்கு தேவையானது இந்த பதில் தானே?!
திலோத்தமா தன்னை திடப்படுத்தி கொண்டு, “நீங்க என்னை விரும்பலை. அப்படியிருக்க குழந்தையை சொல்லலாமா? வேண்டாமா? எனக்கு எதுவும் தெரியலை.
குழந்தையை பத்தி யோசித்தா… நம்ம குழந்தையை நீங்க கலைக்க சொல்விங்களானு பயந்தேன். அப்படியில்லைன்னா குழந்தை என்னுடையதுன்னு கேட்டு என்னிடமிருந்து குழந்தையை பிரிச்சிடுவிங்களோனு பயந்தேன்.
இந்த பயம் என்னை வேறேதும் யோசிக்க விடலை. உங்களை பிரிந்ததே என்னால ஏற்க முடியலை. இதுல குழந்தையையுமானு நினைச்சேன்.
ப்ளீஸ்… என் குழந்தையை என்னிடமிருந்து பிரிக்காதிங்க.” என்று புலம்பினாள்.
ஆதித்யா கையை கட்டி, “என்னை பார்த்தா அரக்கனாட்டும் தெரியுதா?
நீ யாரோட பொண்ணுன்னு தெரிந்தும் உன்னோட வாழ்ந்திருக்கேன். அதுக்கு முக்கிய காரணம் உன் அன்பும் மனசும் தான்.
நீ என்னை பார்க்கற ஒவ்வொரு நொடியும் உன் கண்ணில் காதல் வழியறதை நான் ஆத்மார்த்தமா உணர்ந்திருக்கிறேன்.
இந்த வீட்ல வந்து நான் என்ன சொன்னாலும் தலையாட்டி கேட்டுக்கறப்ப, நீ பணக்காரியா பிம்பம் காட்டியிருந்தா நான் உன்னை ஏளனமா கடந்திருப்பேன். ஆனா ஒவ்வொரு முறையும் ‘சரிங்க.. கத்துக்கறேங்க… புரியுதுங்க’ இப்படி பேசி நீ ஒரு சராசரியான மிடில் கிளாஸ் பொண்ணா, எனக்காக மாற முயன்ற. எனக்கு அது பிடிக்கும். ஒரு பொண்டாட்டியா நீ என் மனசை ஜெயித்திருக்க.
உங்கப்பாவோட பேச்சுக்கு தான் நீ போன்னு விரட்டினேன்.
நீயும் நடுவுல என் பேச்சை கேட்காம சுரேந்திரன் மகளா, அப்பாவுக்காக ஹாஸ்பிடல்ல இருக்கேன், வரமுடியாதுன்னு பேசின. அந்த காரணத்துக்கு தான் தள்ளி நிறுத்தியது.
இப்ப நீ சுரேந்திரன் மகள் இல்லையே… என் குழந்தையை சுமக்கறவ, என் பொண்டாட்டி ஆச்சே. உன்னை எப்படி விலகி நிறுத்துவேன்.
எனக்கு என் குழந்தை வேண்டும். நான் என் குழந்தையை கலைக்க மாட்டேன். அட் தி சேம் குழந்தை மட்டும் கேட்கற புத்தி எனக்கில்லை. எனக்கு நீயும் வேண்டும். என் மனைவியா. இப்ப கர்ப்பமா இருக்க என்று உன்னை ஏற்றுக்கலை. உன்னை பிரிஞ்சதிலருந்தே எனக்கும் கஷ்டமா தான் இருந்தது. இப்பவாது நமக்காக யோசிக்கறேன்.
பார்வதி அம்மா சொன்னாங்க… உங்கப்பாவிடம் நீ சாதாரணமா பேசியே ரொம்ப நாளாகுதுன்னு. எனக்காக யோசிக்கறவ அதுவும் கன்சீவா நீயிருக்கறப்ப, உங்கப்பாவை இதுக்கு மேல தண்டிக்க நான் யாரு? சுரேந்திரன் மட்டுமில்லை கைலாஷிடம் கூட ஒரு பேச்சுக்கு தான் மதிக்கறது. அவர்களை விடு.
உங்கப்பாவிடம் காலம் முழுக்க நான் பேசமாட்டேன். அவருக்கு அந்த குற்றவுணர்வே அவரை கொல்லும். அதான் அவருக்கான தண்டனை. நீ பேசுவியோ பழகுவியோ அது உன் இஷ்டம்.
இதுல நான் வேற தனியா வன்மத்தை வளர்த்து உங்க அப்பாவை வேற மாதிரி பழிதீர்க்கணுமா என்ன?
எங்கப்பா வினுசக்ரவர்த்தி என்னிடம் கடைசியா சாகறப்ப சொன்னது. ‘ஆதித்யா… அப்பா அம்மா உயிரோட இல்லைன்னாலும் நீ யார் முன்னயும் கையேந்தி நிற்க கூடாது. கடவுள் இந்த உலகத்துல உன்னை பிறக்கவச்சவருக்கு, உன்னை எப்படி வாழ வைக்கணும்னு தெரியும்.
நான் செய்த தர்மத்துக்கு பலன் இருந்தா, நீ நல்லபடியா வாழ்வ ஆதித்யா’ என்றார்.
அதோட என் சாவுக்கு என் தடுமாற்றத்தோட காரை இயக்கியது காரணமா இருந்தாலும், நண்பன் சுரேந்திரனோட துரோகமும் ஒரு காரணம். ஆனாலும் பழிவாங்க நீ துரும்பளவு கூட தப்பு செய்ய கூடாது. ஏன்னா அதிகமா செல்வம் சேர்த்து வைக்க தெரிந்த எனக்கு ஒரு நல்ல நண்பனை சேர்த்து வைக்க தெரியலை.
இந்த பணம் வசதி எதுவும் இல்லாத நண்பனோட மனசுல என் மேல வன்மத்தை வளர்க்க விட்டது என் அதீத பணக்காரக்தனம். இந்த பணமெல்லாம் திரும்ப நீ உழைச்சு பெறணும், அந்த பணத்துலயும் பகட்டானவனா வாழாத. செல்வத்தை சேர்த்து வைக்காதே, தேவைக்கு மீறி செல்வம் கிடைக்கும் போது, உன்னை மாதிரி இல்லாதவங்களுக்கு உதவு. அந்த செயலில் எப்பவும் நானும் உங்கம்மாவும் இருப்போம்னு சொன்னார்.
இப்ப வரை அப்பாவோட வார்த்தையை கடைப்பிடிக்கறேன். என்ன… கொஞ்சம் உன்னை காயப்படுத்தியிருக்கலாம்.
என்ன இருந்தாலும் நான் மனுஷன். மஹான் இல்லையே. உங்கப்பா தப்பு பண்ணிட்டு என்னை அனாதை நாயே, அன்னக்காவடின்னு சொல்லும் போது எனக்கான பழியை உன்னை வச்சி தீர்த்துக்கிட்டேன்.
இனி உங்கப்பாவை பத்தியோ முடிந்துப்போன விஷயத்தை வைத்தோ நமக்கு நடுவுல எதுவும் வரவேண்டாம். நமக்கு நடுவுல இந்த பலூன் வயிறு மட்டும் இருக்கட்டும்” என்றவன் வயிற்றை தடவி திலோத்தமாவை பார்வையிட, ஆனந்த கண்ணீரோடு ஆதித்யாவை கட்டிக்கொண்டு அழுதாள்.
ஆதித்யாவின் பரந்த மார்பில் அவளது கண்ணீர் வழிய, அவனது நெஞ்சில் ஈரம் கசிய, திலோத்தமா சாய்ந்து கொண்டாள்.
எத்தனை நாட்கள் இந்த இடைப்பட்ட நாளில் இந்த அணைப்பையும், பரந்த மார்பில் அடைக்கலத்திற்காகவும் தவம் கிடந்தாள்.
இன்று எல்லாவற்றிக்கும் விடிவுகாலம் கிடைத்த மோட்சத்தில் கண்ணிலே… மதுச்சாரலாய்… கண்ணீர் தேனாய் பொழிய கணவன் அன்பில் திளைத்திருந்தாள் திலோத்தமா.
இத்தனை நாள் தனக்கு ஒரு வாரிசு வரப்போவதை அறியாத ஆதித்யா தன் உள்ளத்தில் நிறைந்த உயிரானவளின், வயிற்றில் சுமக்கின்ற உயிர் வரவுக்காகவும், மனையாளின் பிறை நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டு தன் அன்பை வெளிப்படுத்தினான்.
-சுபம்.
-பிரவீணா தங்கராஜ்.
கண்மணி இதழில் வெளியான நாவல். என்னை எல்லாயிடத்திலும் தொடர்ந்து வந்து வாசிக்கறவங்களாக்காக இங்கே கதை பதிவிட்டேன். அடுத்து செப்டம்பர் 16 ராணி புக் ரிலீஸ். விலை பத்து ரூபாய் முடிந்தா வாங்கி ஆதரவு தாங்க. ஏற்கனவே காதல் பிசாசே கதை இன்னமும் தளத்தில் போடலை. என் காதல் இயமானியும் போடலை. சோ…நின் பார்வை தவமல்லவா கதை கொஞ்சம் காலம் ஆகும். புக்கா பத்து ரூபாயுக்கு வாங்கி படிச்சி உங்க கருத்தை சொன்னா நான் மகிழ்வேன்.
ஆதித்யா சக்கரவர்த்தி-திலோத்தம் கதை பிடிச்சதுன்னா உங்க கருத்தை முன் வையுங்கள். தளத்தில் உள்ள விமர்சன பகுதி
பிரவீணா தங்கராஜ்-கதைக்கான விமர்சனம் – Praveena Thangaraj Novels Forum
நின்பார்வை தவமல்லவா கதையில் டாக்டர் செழியன்-வர்ஷினி வர்றாங்க.keep supporting friend’s
Arumai!!
Good ending🥰🥰 Super super
Asusal eppo vum pola short and sweet ah oru feeling good story
Arumai sis….👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕💕💕💕💕
Semma spr sis..spr story
Wonderful story. Time will give answer for everything. Excellent narration sis.
Super sis nice ending 👌👍😘 atlast renduperum onnu serndhachu super 😘❤️ thilo ku eppo dhan vaazkhaiye niraivadanjirukku🙏
Superb ending aadhi ippadiye thilo va vitruvano ninachen but avanuku oru kolanthai vara pothumu pathutu eppadiyo ava kitta pesi samadhanam aeitan ena konjam kovam vanthuduchi ava sollium varalayenu . Aadhi kum kastam Iruku la porinji irunthathu. Rendu perkum love tha irunthuche thavira aadhi thilo mela vanmatha kamikala pali vanganum mrg panlaye . Ava appa pana thappu ku thilo ena panuva avala ethukittathe pothum rendu perum happy ah irukanum.
Congratulations sisy vazhakamnpola unga style la alaga koduthutinga story padika padika interesting ah enimaiyavum irukum unga stories . Unga eluthura style thani . 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻. But oru request konja naal short story ah short sweet ah poduringa konjam perusa koduka try panunga . Thivigai aval varaiyanal avan , namma hero irukare acho name maranthuten sorry sisy . Antha mari story sikram ethir pakuren unga vasakiya .
Thank you
Nice
Very nice ending sister suranthar Pali vankama vitachu athi antha kutra unarva suranthar sanja thappukku thantanai Thillothamma love fure love Ava ennathappu panna athi parvathi very nice parsan super sister