Skip to content

கரை தந்த கடலே-10

12 / 100 SEO Score

அத்தியாயம்-10

 

பிரசன்னா ஆர்வமாகவும், பிரதீப் சங்கடமாகவும் முதல் முறை ஒருயிடத்துக்கு வந்திருக்கின்றார்கள் என்றால் அது இவ்விடமே. பிரதீப் பிறந்து வளர்ந்த வீடு. கல்லூரி வரை இங்கு தான் ஓடியாடி திரிந்தது.

கடைசியாக வீட்டை விட்டு வெளியேறும் வரையும் இதே வீட்டில் தான் உலாத்தியது.

 

“எப்படிம்மா இருக்க?” என்றான் பிரதீப்.

 

“ஏன்டா.. அப்பா இறப்புக்கு கூட உனக்கு வர தோனலையா?” என்று கேட்டதும், “அப்பா இறந்தப்ப பிரசன்னாவை திவாகரோட விட்டுட்டு வந்தேன்மா. அண்ணா தான் வீட்ல சேர்க்கலை. நீ அப்பா கால்கிட்ட அழுதுட்டு இருந்த. மாமா  (அக்கா புருஷன்) அக்கா கூட யாரும் விடலைன்னு சுடுகாட்டுக்கு  வந்தேன்மா. அங்கயும் அப்பா முகத்தை அண்ணா பார்க்க விடலை. அப்படி என்னம்மா தப்பு செய்தேன். காதலிச்ச பொண்ணு இறந்ததால தனிமரமா இருந்தேன். கையில ஒரு குழந்தை கிடைச்சதும் அதை நானா வளர்த்துக்கறேன்னு 19 வயசுல முடிவெடுத்தேன். அந்த வயசுல தனியா என் வாழ்க்கைக்கு  முடிவெடுத்தேன்னு எனக்கு இதுக்கு பெரிய தண்டனையா? என் இஷ்டத்துக்கு வாழக்கூட இந்த வீட்ல எனக்கு உரிமையில்லாம போயிடுச்சுன்னு தானே தனியா போனேன். ஏதோ சொந்தபந்தமே வேண்டாம்னு உதறிட்டு, பிரசன்னா மட்டும் தான் முக்கியம்னு சொன்னதா வீட்ல எடுத்துக்கிட்டிங்க.” என்று நியாயம் கேட்டான்.

 

தாய் காஞ்சனா குலுங்கி அழுதாரே தவிர பிரதீப் கேட்ட வினாவிற்கு பதில் சொல்ல முடியாது நின்றார்.

 

காஞ்சனாவிடம் பெரிய மகன் கூறியது‌ “அப்பா செத்ததுக்கு கூட வரலை. அவனுக்கு அவன் வளர்க்கற அனாதை பைய மட்டும் முக்கியம்னு போயிட்டான். இன்னமும் இந்த வீட்ல பிரதீப் பேச்சு தேவையில்லை.” என்றல்லவா  உரைத்தது.

 

இதற்கு மகளும் ஆதரவு அளித்திருக்க, சின்ன மகனிடம் கூட வருத்தப்பட்டாரே.

 

“என்னை விடும்மா… நீ நல்லாயிருக்கியா? இப்பவாது அண்ணி உன்னோட பேச விட்டாங்களே” என்று நிம்மதியானான் பிரதீப்.

 

காஞ்சனாவுக்கு தானே அந்த உண்மையும் தெரியும்.

மகளின் மூத்த மகளை, தாய் மாமாவான தன் கடைசி மகனுக்கு கட்டி வைத்தாயிற்று. அக்கா மகளை மணந்து கூடுதலாக நெருங்கிய உறவாகிவிட்டனர்.

 

பெரியவனும் மகளும் கூட சதிதிட்டம் தீட்டி, கணவர் சொத்தை மூன்று பிரிவாக மட்டும் பிரித்து இவர்கள் மூவருமே பங்கிட்டு கொள்ள நினைத்து பத்திரமெல்லாம் தயார்படுத்திவிட்டார்கள். பிரதீப் என்றாவது ஒருநாள் வந்து சொத்தில் பங்கு கேட்டால் பிரச்சனை வெடிக்குமென அவனை கண்டால் சொத்தில் எனக்கு பங்கு வேண்டாமென எழுதி வாங்க நினைத்தனர்.

 

பிரதீப்பை கல்யாண மாலை ஆப்பில் பார்த்து அந்த நம்பரில் தொடர்பு கொண்டு கேலி செய்து, பேசி மனதை காயப்படுத்தியது. அதன்பின்னரே பிரதீப் வந்து சொத்தில் பிரச்சனை செய்தால் என்ன செய்வதென்ற கேட்கவும், அவன் திரும்ப வந்தால் உறவாக ஏற்க வேண்டுமென்றால் சொத்தில் பங்கு வேண்டாமென பிரதீப்பிடம் கூறி, கையெழுத்து வாங்கிவிட்டு, அவனிடம் பழகாமல் தவிர்க்கலாமென்று மூவரும் கூட்டணி அமைத்துள்ளனர்.

 

தனியாளா கைக்குழந்தையா இருந்தவனை வளர்த்தால் பிரதீப்பை கண்டு பூரித்திருந்தவர். மகன் என்னென்ன கஷ்டம் அனுபவித்தானோ? இன்னமும் கல்யாணம் செய்யாமல் இருப்பதில் சற்று அதிருப்தி.

 

காஞ்சனாவோ “ஏதொ கல்யாணம் செய்ய பொண்ணு தேடியதா உங்கண்ணா அக்கா சொன்னாங்க.” என்று நலம் விசாரித்து முடித்து கடைசி பேச்சாக கேட்டார்.

 

“அதை நான் சொல்லறேன் ஆச்சி. என் பெர்த்டே அப்ப. அப்பா எனக்கு கல்யாணம் செய்யலாம்னு தான் பேசினார். அப்ப தான் என் பிரெண்ட்ஸ் எல்லாம் அப்பா இன்னமும் சின்ன பையனா இருக்கார். அண்ணா மாதிரி தெரியறார்னு சொன்னாங்க.

அப்ப தான் மைண்ட்ல ப்ளிங் ஆச்சு. ஏன் அப்பாவுக்கு கல்யாணம் செய்தா என்னனு. நான் தான் அப்பாவுக்கு கல்யாண மாலை ஆப்ல அப்பாவுக்கு தெரியாம பயடொட்டா போட்டேன்.  ஆனா பாருங்க… இத போட்டதால பெரிப்பா அத்தை பத்தி தெரிந்தது.” என்று பேசினான்.

 

வீட்டின் தாழ்வாரத்தில் நின்றிருந்த பிரதீப்பின் அண்ணனோ, “யாருக்குடா பெரிப்பா. அனாதை நாயே. இவரு பிறந்த நாளே எந்த நாளுனு தெரியாது. இதுல அந்த நாள்ல இவருக்கு கல்யாணம் பேசியிருக்கான்.

அதுல நீ இவனை மாப்பிள்ளையா நிற்க பொண்ணு பார்க்கறியோ?” என்று கேலியாக நகைத்திட, பிரதீப்பிற்கு வலித்தது.

 

பிரதீப் தன் மகனை இங்கே விட்டுக்கொடுக்க கூடாதென வாய்திறக்க, அதற்குமுன் பிரசன்னாவோ “கனகவேலன் சார்… என்னோட அப்பா பிரதீப். அதனால உங்களை பெரிப்பானு கூப்பிட்டேன். உங்களுக்கு அப்படி கூப்பிட பிடிக்கலைன்னா… இட்ஸ் ஓகே… நான் வேண்டுமின்னா கனகவேல்னே கூப்பிட்டுக்கறேன்.

அப்பறம்.. என் பிறந்த நாள் தெரியலைனு யார் சொன்னா. என் அப்பா கையில நான் சேர்ந்த நாள் தான் என் பிறந்த நாள். நீங்களாம் சொந்த தம்பியே அனாதையா துரத்திய ஆளுங்க. எங்கப்பா யாரோவா இருந்த என்னை சொந்த பிள்ளையா பார்த்தார்.

அந்த நல்ல மனசுக்கு நான் அவருக்கு கல்யாணம் செய்ய முயற்சி செய்யறேன் அதுல தப்பில்லை.

 

எங்கப்பா இப்பவும் ஃபிட், ஸ்மார்ட், ஹாண்ட்சம், அதோட முக்கிய குறிப்பு ஸ்டில் பேட்சுலர். பேட்சுலருக்கு கல்யாணம் செய்ய நான் ஏன் கவலைப்படணும். நீங்க இதுல கேலி பேச ஒன்னுமில்லை.” என்றான்.

 

“பார்த்தியா அண்ணா… பிரதீப்பை மாதிரியே பேசறான். முன்னயே சந்தேகப்பட்டேன் பிரதீப் வயசுக்கோளாறுல தப்பு பண்ணிட்டான்னு. எனக்கென்னவோ இது பிரதீப் குழந்தையை தான் அவனே வளர்க்கறான்னு இப்பவும் சந்தேகம் வருது. நீ தான் இல்லைனு சொன்ன.. இது பிரதீப்போட பையன் தான்” என்றார் பிரதீப்பின் அக்கா கோகிலா.

 

“வாவ் அத்தை… யூ ஆர் பிரில்லியண்ட். நான் பிரதீப்போட பையன் பிரசன்னா தான். அதுல டவுட்டே வேண்டாம். ஆனா எங்கப்பா… வயசு கோளாறுல தப்பு பண்ணறவர் இல்லை. அந்த வயசுலயும் சுனாமில கிடைச்ச என்னை அன்பா வளர்த்தார்.” என்றான்.

 

பிரதீப்பின் தம்பி சரத் மட்டும் சும்மா நிற்பானேன். “சரிப்பா… இத்தனை நாள் இங்க வராதவங்க. இப்ப எதுக்கு வந்திங்க? அப்பாவோட சொத்தை அபகரிக்கவா?” என்றதும் பிரதீப் தலையாட்டி மறுக்க, பிரசன்னாவோ “தாத்தா இறந்தப்ப எங்கப்பாவை பார்க்கவே விடாத ஆட்கள் தானே நீங்க. எங்கப்பாவா உங்களை உதறிட்டு போனார். நீங்க தான் எங்கப்பாவை உதறினிங்க. சரின்னு எங்கப்பா உங்களோட நெகட்டிவிட்டி இல்லாத இடமா என்னை அழைச்சிட்டு போயிட்டார். என்ன சொன்னிங்க…  சொத்தை அபகரிக்க வந்தார்னா. எங்கப்பா தனியாள வெளியே போய் சுயமா உழைச்சி தனி வீடு வாங்கியவர். சுயமா சம்பாதிச்சு என்னை படிக்க வச்சி ஆளாக்கியவர். அப்படியிருக்க.. சொத்தை ஆட்டை போட யார் வந்தா? மேபீ… சொத்து வெளியே போகக்கூடாதுனு நீங்க வேண்டுமின்னா அக்கா மகளை கட்டியிருக்கலாம்.” என்று தோளைக்குலுக்கினான் பிரசன்னா.

 

“ஏ.” என்று கத்த, “பிரசன்னா… போதும்… இங்க வரவேண்டாம்னு சொன்னேன். நீ தான் கேட்கலை.” என்றார் பிரதீப்.

 

பிரசன்னாவும், “நீங்க எப்பவும் கரெக்ட் அப்பா. என்ன… எனக்கு பெரிப்பா அத்தை சித்தப்பா, ஆச்சினு அவங்களை சார்ந்த உறவுனு கிடைக்க ஆசைப்பட்டேன்.

இட்ஸ் ஓகே… இந்த உறவு எதுவும் வேண்டாம். நாம போகலாம் அப்பா.” என்று எழுந்தான்.

 

கனகவேலனின் மனைவி கணவரை உலுக்க, “பிரதீப் வந்தது வந்துட்ட. அப்பா சொத்தில் உன் பங்கு வேண்டாம்னு எழுதி தந்துட்டு போ” என மனசாட்சியின்றி கூறினார்கள்.

 

பிரதீப் புன்னகை மாறாமல் “கொடு அண்ணா.. சைன் போடறேன்” என்றார்.

 

பிரசன்னாவோ ஆச்சரியமாக பிரதீப்பை கண்டு “கல்யாணம் செய்ய மாட்டேன்னு நீங்க பிடிவாதம் பிடிச்சப்ப, எல்லா உறவையும் உதறிட்டாரேனு உங்க மேல கோபம் வந்ததுப்பா. உறவுகள் இருக்கறதால் உதாசினம் செய்துட்டாரேனு. ஆனா உங்களை மாதிரி ஒரு உறவை உதாசினம் செய்தது இந்த குடும்பம் தான். எவ்ளோ பேசி கேலி செய்தும் சொத்தும் வேண்டாம்டா நீயே வச்சிக்கோனு பெருந்தன்மையா இருக்கிங்க பாருங்க. யூ ஆர் கிரேட் டேடி” என்று கட்டிப்பிடித்தான்.

 

ஆளாளுக்கு தலைகுனிய, கனகவேலனின் மனைவி பத்திரம் கொண்டு வர, பிரதீப் கையெழுத்து போட்டுவிட்டார்.

 

பிரதீப் பிரசன்னா இருவரும் மற்றவரை பாராது நடக்க, “நில்லுடா.” என்றார் காஞ்சனா.

 

பிரதீப் நின்று அன்னையை பார்வையிட, “நான் உன்னோட வர்றேன். என்னையும் பிரசன்னா மாதிரி ஏத்துக்கோ. இங்க இருந்தா நான் அனாதையா உணருறேன். அங்க வந்தா என் பிள்ளை பிரதீப்பும், என்‌ பேரன் பிரசன்னாவும் இருக்காங்கனு சந்தோஷப்படுவேன்” என்றார்.

 

பிரதீப் பிரசன்னா இருவரும் புன்னகையோடு, “என்கிட்ட கேட்கலாமா அம்மா.” என்று கண்கலங்க நின்றான்.

 

காஞ்சனாவோ பெரிய மகன், மகள், கடைசி மகன் என்று யார் பேச்சையும் காதில் வாங்காமல் பிரதீப் கையை பிடித்து கூடவே வந்தார்.

 

பிரதீப் வீட்டுக்கு வந்ததும், அம்மாவை உபசரித்தார். பிரசன்னாவுமே ஆச்சியிடம் உரிமையாக பழகினான்.

 

இரவு உணவுண்ணும் நேரம், பிரதீப் தோசை சுட்டு மகனுக்கு வைத்து, “சரிடா… சுஹாசினி வீட்ல மறுபடியும் பொண்ணு கேட்க போகலாமா?” என்று மகிழ்ச்சியோடு கேட்டார்.

 

சாம்பாரை வழித்து நக்கிய பிரசன்னாவோ, “டேடி… சொந்தங்களை பத்தின உங்க கருத்துல, யூ ஆர் ரைட். பட்… நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லறதுல ஐ அம் ரைட். சோ… நீங்க கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சா மட்டும் தான் என் கல்யாணத்துக்கு துரும்பு கூட நகர்த்துவேன். அதுவரை ஹாசினி கூட லவ் பண்ணுவேன். மேபீ.. அவளை வேற யாராவது மேரேஜ் பண்ண வந்தா அவளை கல்யாணம் பண்ணிட்டு வாழுனு வாழ்த்திடுவேன். அவளே உங்களுக்கு ஒரு அம்மாவை கொண்டு வந்த பிறகு தான் வீட்ல காதலை சொல்ல நினைக்கறா. அவளும் மாமியார் வேண்டும் ஆசைப்படறதில் தப்பில்லையே.

 

தவிர உங்களுக்கு ஒரு விடிவு இல்லாம எனக்கு ஒரு விடியலை உருவாக்கிக்க மாட்டேன்.  உங்களுக்கும் எனக்குமான பனிப்போர் அதே தீவிரத்தோட இருக்குப்பா.” என்றான்.

 

“டேய்… நான் பாவமில்லையா? இந்த வயசுக்கு மேல என்னடா கல்யாணம். ஒவ்வொருத்தரிடமும் நீ என் பையன் இல்லைனு சொல்லி பொண்ணு பார்ப்பியா? பிரசன்னா… என்னை இப்படியே விட்டுடுடா. நீ இருக்க. எங்க அம்மா வேற வந்துட்டாங்க. எனக்கு இந்த லைப் போதும்டா. சாட்டிஸ்பேக்ஷனா இருக்கு” என்றார் பிரதீப்.

 

“எனக்கு நிம்மதியிருக்காதுப்பா. சந்தோஷம் இருக்காதுப்பா. உங்க அண்ணா அக்கா தம்பி எப்படி சொத்து பத்திரத்தில் உங்களுக்கு சம்மதமில்லைனு கையெழுத்து வாங்கி அனுப்பினாங்களோ, நான் உங்க பாசத்தை சுரண்டிட்டு செல்ஃபிஷ்ஷா இருப்பதா தான் எனக்கு பீலாகும். அதனால்… என் முடிவுல மாற்றமில்லை. ஆச்சி நான் பேசறது தப்பா?” என்றான் பிரசன்னா.

 

“என் தங்கமே.. நீ சொல்லறதுல ஒரு தப்பும் இல்லைடா. அம்மாவா நான் இருக்கற இடத்துல, நீ இருந்து வழிநடத்துற” என்று பிரசன்னாவை மெச்சியபடி பேசினார்.

 

பிரதீப் தான் ‘ஏற்கனவே இந்த பிரசன்னா ஆடுவான். இதுல அம்மா வேற. இவன் பிரெண்ட்ஸ் கேங்க்… அதோட சுஹாசினியை லவ் மட்டும் பண்ணுவான்னு நினைச்சா, அந்த பொண்ணும் இவனிடம் எனக்கு பொண்ணு பார்க்க சொல்லிருக்கு.

 

மொத்தமா

ரவுண்ட் கட்டறாங்களே. என்ன தான் செய்வது.’ என்று மலைத்தார் பிரதீப்.

 

-தொடரும்.

 

 

 

 

6 thoughts on “கரை தந்த கடலே-10”

  1. Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 yappa sondhangal naaley eppdi dhana panam nu vandhuta annan enna thambi enna nu dhan nenaipanga pola 😕 endha uravugala pradeep vititu vandhadhu sari dhan👌👍 atleast avanga ammavavudhu vandhangaley super 😘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!