காதலின் காலடிச் சுவடுகள் 11″ வாடி என்னோட ராசாத்தி” என்று பேத்தியை பார்த்த சந்தோஷத்தில் கன்னம் இரண்டையும் தொட்டு திருஷ்டி எடுத்தார்…. பின்பு கோபத்தில்” நீ எதுக்குடி இங்க வந்த அங்கேயே போக வேண்டியது தானே… எங்கள பார்த்த உனக்கு எப்படி தெரியுது… கிறுக்கங்க மாதிரியா”???? என்று கத்த ஆரம்பித்தார்…. “அம்மாச்சி” என்று அழைத்த மதுவை இமைக்காமல் பார்த்தார் வேலம்மாள்.. அவள் மனது தாயை தேடும் நேரங்களில் மட்டுமே அழைக்கும் அரிதான அழைப்பு அல்லவா அதனால் எதுவும் கூறாமல் அணைத்து கொண்டார்…. “அப்பா எங்க பாட்டி” ????என்று வேந்தன் கேட்க.. ” ஒரு சோலியா வெளியே போய் இருக்கான்… அவன் வந்துடுவான் நீங்க வாங்க கண்ணுங்களா ” … என்று உள்ளே அழைத்து சென்றார்…. “என்ன கெழவி பேத்தியை பார்த்ததும் பேரனை மறந்துட்ட போல” என்று வேந்தன் கேட்க… ” பார்த்ததும் சட்டுன்னு ஒண்ணுமே புரியல சாமி” இந்த கெழவிக்கு உங்கள விட்டா யார் இருக்கா” நீங்க அஞ்சு பேரும் எனக்கு ஒன்னு தான் சாமி ” என்று சொல்ல…. “அய்யோ பாட்டி நான் சும்மா தான் சொன்ன??? நீ ஏன் எமோஷனல் ஆகுற”????.. என்று பேசிக்கொண்டே ஹாலுக்கு வர அங்கு ஆளுயர தாத்தாவின் படத்தை பார்த்த வேந்தன் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான்….. போட்டோவின் அருகில் போய் நின்ற வேந்தனுக்கு நிழலாய் சில நினைவுகள்… தலையை உலுக்கி அதை விரட்ட முயன்று வெற்றியும் கண்டான்….. “உங்கள நம்பி இப்ப ஒரு வேலை ஸ்டாட் பண்ணி இருக்கேன்.. யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லாம முடிச்சு குடுங்க”…. என்று கைகூப்பி கேட்டான்… ” என்ன சாமி ரொம்ப நேரமா அங்கனவே நிக்கிற???? உங்க தாத்தன் நமக்கு நல்லது தான் சாமி செய்வாரு … போய் குளிச்சிட்டு சாப்பிட வாங்க கண்ணுங்களா “…. ” பாட்டி அம்மா எங்க ரொம்ப நேரம் ஆச்சு” வந்து பாக்கவே முடியல”…..வேந்தன் கேட்க.. ” அவ உங்க அத்தைக்கு சாப்பாடு எடுத்துட்டு போன சாமி.. நீங்க போய் குளிச்சிட்டு உடுப்பு மாத்திதிட்டு வாங்க வந்துடுவா”… என்று சொல்லி கொண்டு சமையல் அறை நோக்கி சென்றார்… ” போ யாழினி போய் ரெடி ஆகிட்டு வா அத்தையை போய் பார்க்கலாம்”…. “இல்ல வந்து இவ்வளவு நேரம் ஆகிட்டு நான் போய் பார்த்துட்டு வரனே “!!!என்று கண்களில் தவிப்பை காட்டி மது கேட்க…. ” சரி வா ஆனா அவங்க ரொம்ப எமோஷனல் ஆக கூடாது… பார்த்ததும் அழுது வைக்காத”!!!என்று மிரட்டியே கூட்டிச் சென்றான்….. ஹாலில் வலது பக்க அறைக்குள் மதுவை அழைத்துச் செல்ல…. அங்கு சுவரை வெறித்த படி அமர்ந்து இருந்த பெண்மணியை பார்த்து ” அம்மா என்று அழைத்து அழுது கொண்டே அறைக்குள் நுழைந்த மதுவை பார்த்தார்… மதுவின் தாய் சாரதா… மதுவின் தாய்க்கு பல வருடங்களாக பக்கவாதம் கை, கால் வராமல் சரியாக பேச முடியாத நிலை…. மதுவிற்கு 15 வயது இருக்கும் போதே இப்படி ஆகிவிட்ட வரை மதுவின் அப்பா இங்கு விட்டு விட்டு வேறு ஒரு திருமணம் செய்து கொண்டார்… மதுரையை, மதுவின் அண்ணன் மகேந்திரனையும் அவருடனே வைத்துக் கொண்டார் சொத்தின் மேல் உள்ள ஆசையில்…. மகேந்திரன் தந்தை சொல் தட்டாத மகன்… மது மட்டும் தெரியாமல் வந்து தாயை பார்த்து விட்டு செல்வாள்… ஒரு முறை வந்து அவருக்கு தெரிந்த போது மகளை பெல்ட்டை கழட்டி விளாசி தள்ளி விட்டார்… அதிலிருந்து மதுவை இவர்கள் யாரும் அழைப்பதில்லை… ஆனால் பாசம் மட்டும் மலையளவு இருந்தது….. வேந்தனுக்கு தான் மதுவை திருமணம் செய்து வைக்க சாரதா நன்றாக இருக்கும் போது பேசி வைத்து இருந்தனர்… இந்த நிலையில் பேச்சு வார்த்தை மட்டுமே…. மதுவின் தந்தையிடம் சென்று யாரும் பேசவில்லை… அவரை அப்படியே ஒதுக்கி வைத்தனர்… மகேந்திரன் இவர்களுடன் ஒட்டாமல் வளர்ந்து வந்தான்…. தொடரும்……
Tags:Mark -2024
Ena achi madhu amma ku ethanala ippadi achi ena nadaka pothu ipo
சூப்பர்ப்… அன்ட் வெரி நைஸ் கோயிங்.
Nice epi