காதலின் காலடிச் சுவடுகள் 18
செல்ல நினைத்த வேந்தனை மது இறுக்கமான அணைக்க…
“லட்டு நான் போகணும்.. ப்ளீஸ் நீ இப்படி செய்தால் என்னால போக முடியாது”… என்று கூற… அவன் இதழில் அழுத்தமான முத்தம் ஒன்றை பதித்து விலகினாள்….
வேந்தன் வந்த ஜன்னல் வழியாக திரும்பி செல்ல ” அடப்பாவி இப்படி தான்
வந்தியா ” என்று நினைத்து கொண்டாள்…. அன்று இரவு வரை ரூமை விட்டு வெளியே வராமல் இருந்து விட்டால் மது… உணவு கூட அறைக்கு செல்ல வெளியே நடப்பது தெரியவில்லை…. இரவு கவி இவளின் துணைக்கு வரும் வரை…. தன் தந்தை வந்ததோ வெளியே நடந்த நிகழ்வுகளோ தெரியவில்லை…
” என்னடி மது என்ன விஷேஷம் வீட்டுல…. ஒரே அலங்கார இருக்கு”…..
” தெரியல டீ நான் ரூம் விட்டு போகவே இல்ல “…..
” சரி விடு என்ன வேணா இருந்துட்டு போகட்டும்… நமக்கு என்ன வா தூங்கலாம்”….
இருவரும் உறங்க சென்றனர்…
” கவி வேந்தன் மாமா வந்துட்டு போனாரு”
“என்னடீ சொல்ற இங்கயா வந்தார்… எல்லாருக்கும் தெரியுமா??? யாரும் எதுவும் சொல்லலையா”????…
” யாருக்கும் தெரியாமல் ஜன்னல் வழியாக வந்தாரு”….என்று கூற
“நீ நடத்து , நடத்து”….
கவியின் கிண்டலை பொருட்படுத்தாமல் அவன் ஊருக்கு செல்வதை மட்டும் கூறி விட்டு அமைதியாக விட்டாள்…
மறு நாளும் உணவு அறைக்கே வர இருவரும் சாப்பிட்டு முடித்து கதை அளந்து
கொண்டு இருந்தனர்….. எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் இருந்ததில் இருவரும் அறையிலேயே நிம்மதியாக இருக்க அந்த நிம்மதிக்கு ஆயுள் குறைவு என்று அவர்கள் அறியவில்லை…
மூன்றாம் நாள் காலை அறை கதவு தட்டும் ஓசையில் கவி கண்விழித்து ” மது யாரோ கதவை தட்றாங்க யாருன்னு பாரு”….
“அடியேய் மணி நாலு கூட ஆகி இருக்காது.. இந்த நேரத்தில் யாரு கதவை தட்ட போறா??? அது எல்லாம் இருக்காது என்று புரண்டு படுத்து தூங்கினால்….
கதவை இடிப்பது போல் வேகமாக தட்டும் சத்தம் கேட்டு வேகமாக இருவரும் எழுந்து அமர்ந்தனர்… அறையில் இருந்த கடிகாரம் மணி மூன்று முப்பது என காட்ட …..
” இந்நேரம் யார இருக்கும்” என்று சொல்லிக் கொண்டே அறையின் கதவை திறந்தாள் மது…… வெளியே தந்தையோடு சித்தியும் நிற்க ஏதோ தலைவலி என்று புரிந்து கொண்டு கவியை பார்க்க,… கவியும் கட்டிலை விட்டு இறங்கி மதுவின் அருகில் வந்து நின்று கொண்டாள்…..
” என்னப்பா இந்த நேரத்தில்”…. என்று சித்தியை பார்த்து கொண்டே கேட்க…..
” இந்தா இது எல்லாம் போட்டு கொண்டு சீக்கிரம் வா… இன்னிக்கு உனக்கு கோயில கல்யாணம் ” என்று மதுவின் தலையில் இடியை இறக்கினார்….
” யார கேட்டு ஏற்பாடு செஞ்சீங்க”….. மது கத்த
“யார கேட்கணும் நான் உன்னோட அப்பா”….
” அப்பாவா இது எப்போதிலிருந்து “….. கேட்டு முடிக்கும் முன்னரே அவர் கை மதுவின் கண்ணத்தில் இடியாய் இறங்கியது…… வலியில் கண்ணை கட்டி கொண்டு வர.. இத போட்டு கொண்டு ரெடி ஆகிட்டு வா… நாங்க வெளியே இருக்கோம்…
” நான் ரெடியாக மாட்டேன் என்ன செய்வீங்க” என்று பேச…
மறுபடியும் அறைந்து “எதிர்த்து பேசாமல் சொன்னது மட்டும் செய்… இல்ல தோலை உரித்து விடுவேன் ராஸ்கல்”…..
” அப்பா ப்ளீஸ் எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்.. நான் வேந்தன் மாமாவை தான் கல்யாணம் செய்து கொள்வேன் ” என்று திடமாக கூறி மறுபடியும் ஒரு முறை அடியை வாங்கி கொள்ள.. அதற்குள்
” இங்க பாருங்க மாமா சும்மா சும்மா அவள அடிக்காதீங்க… இப்ப என்ன கிளம்பி தான வரணும் வருவா போங்க”…. என்று கவி கத்த
“சீக்கிரம் வாங்க ” என்று கூறி விட்டு சென்றார்….
தொடரும்…..
Yarukum ennala reply panna mudiyala padikara ellarumkum oru big thanks comment potavangalukum thanks… Big big thanks
அச்சோ..! இப்ப யார் வந்து தடுத்து நிறுத்துவாங்கன்னு தெரியலையே…?
Vendhan varuvan
Nice epi