Skip to content
Home » காதலின் காலடிச் சுவடுகள் -4

காதலின் காலடிச் சுவடுகள் -4

காதலின் காலடிச் சுவடுகள் 4

   நீங்காமல் தானே!!!! 
  நிழல் போல நானே!!! 
  வருவேன் உன் பின்னோடு
  எந்நாளும் தான்!!! 
  பூப்போன்ற மனதை 
  பொல்லாத மனதாய்!!!    
  தவறாக எடை போட்டு
  சென்றாலும் தான்!! 
  பாலை போல கள்ளும் கூட
  வெண்மையானது... 
   பருகிடாது விளங்கிடாது
   உண்மையானது!!!!

அந்த மிக பெரிய மாலில் ரிஷி வேந்தன் அருண் இருவரும் அமர்ந்திருந்தனர்..

“அருண் அந்த ஆள் எப்ப வருவாரு” என்று வேந்தன் அருணிடம் கேட்டான்..

“இப்ப வந்துடுவாரு டா” என்று கூறினான் …. அருண்

“டேய் அருணு, வேந்தா ” என்று ஆர்ப்பாட்டமாக ஒரு குரல் கேட்க யார் என்று இருவரும் திரும்பி பார்க்க அங்கு இவர்களின் நண்பனான புகழ் நின்றிருந்தான்….

“மச்சான் புகழ்டா ” என்று கூறிய அருண் “மச்சி” என்று ஓடிச் சென்று அணைத்துக் கொண்டான்…..

“வாடா புகழ் எப்படி டா இருக்க”??? என்று வேந்தன் கேட்க…….

” நல்லா இருக்கேன் டா ….நீங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க???? வீட்டில் எல்லோரும் எப்படி இருக்காங்க”?????? என்று புகழ் கேட்டான். ….

“நல்லா இருக்கோம்.. எல்லோரும் நல்லா இருக்காங்க….நீ எப்ப ஊர் பக்கம் போக போற????சரி நீங்க இந்த பக்கம்?????
யார் கூட வந்த????? பிரெண்ட்ஸ் கூட வந்து இருக்கியா???இல்ல தனியாவா???

“அட கேள்விக்கு பொறந்தவனே….ஒவ்வொரு கேள்வியா கேளு டா”….என்று வேந்தனிடம் கூறினான் புகழ்……

“டேய் அருணு இவன் இன்னும் திருந்தவே இல்லையாடா”????

“இல்ல அதுக்கும் ஒருபடி மேல் போட்டான்”… என்று புகழின் காதில் கிசுகிசுத் தான் அருண்……

“என்னடா சொன்ன அவன் கிட்ட”????

ஹிஹீஹீ…”சும்மா உன்னோட பெருமை பத்தி சொல்லிட்டு இருந்தேன்…

“நீ ஒரு வெட் ஆனியனும் சொல்ல வேண்டாம்..நீ வாய் கொஞ்சம் மூடு” என்று கையால் வாய் மூடி செய்கை செய்தான் வேந்தன்….

” என்னடா சொன்ன “?? நான் ஈர வெங்காயமா?? என்னடா அருணு உனக்கு வந்த சோதனை…..

” அருண் ” என்று வேந்தன் அழுத்தமாக அழைக்க…..

“சரிரிரி” என்று அமைதியாக இருந்தான் அருண்….

அதன் பின் புகழை வேந்தன் பார்க்க…

“இல்லடா வேந்தா கவியும், மதுவும் வரேன்னு சொல்லி இருந்தாங்க அதான்”…..

“மதுவா. ” என்று கூறிவிட்டு வேந்தனைப் பார்த்தான் அருண்…

அருண் தன்னை பார்ப்பது தெரிந்ததும் தெரியாதது போல் விரு விரு வென்று எழுந்து சென்று விட்டான் வேந்தன்…

“இவன் இன்னுமாடா மாறல” ??என்று புகழ் கேட்க ……

“சரி ஆகிடுவான் விடுடா”. ….

இருவரும் பேசிக் கொண்டு இருக்க சற்று நேரத்தில் அருகே வந்து அமர்ந்தான் வேந்தன்….கோபமா இருக்கானோ என்று முகம் பார்க்க அவர்களுக்கு எதுவும் புரியவில்லை….

“எதாவது ஆர்டர் செய்வோமா”??? என்று அருண் கேட்க….

“அவங்களும் வரட்டும் ” என்று வேந்தன் கூறியதும் இருவருக்கும் மயக்கம் வராத குறைதான்….

அருணும், புகழும் ஒருவரை ஒருவர் அர்த்தமாகப் பார்த்துக் கொண்டனர்…..

கொஞ்ச நேரத்தில் கவி,மது,நேகா மூவரும் வர தூரத்தில் இருந்தே புகழை கண்ட கவி “அங்கு இருக்காங்க மது புகழண்ணா வா போகலாம் ” கை பிடித்து வேகமாக இழுத்து வந்தாள்…..அருகே வந்ததும் தான் மற்ற இருவரையும் பார்த்து விட்டு தயங்கி நிற்க…

” வா மது,வா கவி ” என்று அருண் அழைத்தான்….எ

“எல்லாம் எங்களுக்கு வர தெரியும்” என்று தன் தோளில் தாடையை இடித்து கொண்டே பதில் கூறினாள் கவி…..

“என்ன மச்சான் ரொம்பபபபபபப சூடா இருக்க போல ஐஸ்கிரீம் வாங்கிட்டு வரவா”????

“இங்க பாருங்க புகழண்ணா உங்கள பாக்க தான் நாங்க வந்தோம் …இவங்க இருக்காங்க தெரிஞ்சா வந்தே இருக்க மாட்டோம்”……

” உன்ன யாரு வர சொன்னா?? நானா கூப்டேன் உன்ன… உன் நொன்னன் தான் நாங்க இருக்கிற இடத்துல பல்ல காட்டிட்டு வந்து உட்கார்ந்தான்…..

” ஏய் என்ன திமிரா …அதிகமா பேசுனா வாய் எல்லாம் ஒடசிடுவேன் பாத்துக்கோ”….

“நீ என்னோட வாய ஒடைக்கற வரைக்கும் நான் ஈஈஈஈஈ ன்னு காட்டிட்டு இருப்பானா”???? அதுக்குள்ள நான் உன்னோட கையை ஒடச்சு இருக்க மாட்டேன்….என்ன பாவம் பாத்தா வாய் ரொம்ப நீளூது”…….

“உன்ன யாருடா எனக்கு பாவம் பார்க்க சொன்ன என் பம்பரகட்ட மண்டையா”….

“யாரு நான் பம்பர கட்ட மண்டையணா” “நீதான் டி தீஞ்சு போன வாணலு” …..ஒடஞ்சு போன தார் ரோடு….

” வேணாம் டா என்ன கடுப்பாக்காத” சொல்லிட்டேன்….

“என்ன குடுத்தாங்க வேண்டாம்னு சொல்ல”……

” டேய் மரியாதையா பேசு இல்ல எங்க அம்மா கிட்ட சொல்லிடுவேன்”….

“உங்க அம்மா பெரிய எலிசபெத்து மகாராணி ” அதுவே எலி செத்து போன மூஞ்ச மாதிரி இருக்கு”…….உங்க அப்பனுக்கு கோயிலே கட்டணும் அவங்க கூட இத்தன வருஷம் குப்ப கொட்டுறதுக்கு…..சும்மா அப்படி போவியா வந்துட்டா ஜங்கு,ஜங்குன்னு ஆடிகிட்டு……

“ச்சி பே உன்கிட்ட எல்லாம் மனுஷன் பேசுவானா”…..

” நீ எல்லாம் மனுஷ ஜென்மம் இல்லனு தான் தெரியமே”……

“சரி டா போதும் சண்டை போடாதிங்க ” என்று வேந்தன் சொன்னதும் தான் மற்ற நான்கு பேரும் நினைவிற்கு வந்தனர்…..

ஹீஹீஹீஹீ ” என்று இளித்து வைத்தாள் கவி…..

” பார்த்து பல்லு சுளுக்கிக்க போகுது”என்று அருண் சொல்ல….

“டேய் தீவிட்டி தடியா வாய மூடு” என்று கவி சொல்ல போதும்”மறுபடியும் ஆரமிக்காதிங்”….. உட்காருங்க என்று இருவரையும் அடக்கி விட்டு வேந்தன் சொன்னான்….

வேந்தன் அருகில் நேகா அமர வர, வேந்தன் மதுவை பார்க்க,வேகமாக வந்து வேந்தனிடம் உட்கார்ந்தாள் மது……

கவிக்கும்,அருணிற்கும் என்ன சண்டை???? இவர்கள் மூவருக்கும் மது,கவியை எப்படி தெரியும்??? இவர்களால் வேந்தன் வந்த காரியம் தடை படுமா???

தொடரும்…….

5 thoughts on “காதலின் காலடிச் சுவடுகள் -4”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *