காதலின் காலடிச் சுவடுகள் 10
திருநெல்வேலி மாவட்டத்தில் நல்லூர்(கற்பனை ஊர் நிஜமா இருக்கான்னு தெரியாது ஒகே) என்னும் சிறு கிராமம் இவர்களுடையது..
இவர்களுடைய வரலாறு பார்த்து விட்டு வருவோம் வாங்க.. .
ரங்கராஜன், வேலம்மாள் தம்பதியினர்.. நல்லூர் கிராமத்தில் பெரும் புள்ளிகள் ஒருவர்… அவருக்கு இரு மகன்கள், இரு மகள்கள் …
மூத்தவர் ரங்கநாதன் அவர் மனைவி கலைவாணி… அவருக்கு ஒரு மகன், ஒரு மகள் … மூத்தவன் நம் கதை நாயகன் ரிஷி வேந்தன், மகள் ரம்யா….
ரங்கராஜனின் இரண்டாவது மகள் ராஜலட்சுமி அவர் கணவன் ரகுநாதன்.. அவருக்கு இரு மகன்கள் ஒருவன் அருண், அவன் தம்பி சரண்…
ரங்கராஜன் மூன்றாவது மகன் காசி ராஜன், அவர் மனைவி சீதா மகள் கவிதா,
ரங்கராஜன் நான்காவது மகள் சாரதா அவர் கணவர் அரி சந்திரன்( பேர் மட்டும் தான்) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் பெரியவன் மகேந்திரன் மகள் மதுர யாழினி… ( அத்தனையும் சொந்த கார புள்ளைங்க தான்)…. புகழ் அருணோட சித்தப்பா பையன் .. அருண் அப்பா ரகுநாதன் தம்பி பையன்… எல்லாரும் ஒரே ஊர், ஒரே ஸ்கூல்….. வீடு மட்டும் தனி தனியாக …..
சரி கதைக்கு போவோம் வாங்க… மீதி கதைல தெரிஞ்சிக்கலாம்….
திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இறங்கியதும் கார் டிரைவரை தேடிப் பார்த்தான் வேந்தன்…
” வேந்தா நாம வந்துட்டோம்ன்னு கால் பண்ணி சொல்லு” என்று புகழ் கூற….
“சரி “என்று சொல்லிவிட்டு டிரைவருக்கு கால் செய்ய அதற்குள் தம்பி என்ற அழைப்பு கேட்டு திரும்பினான் வேந்தன்…
” தம்பி வந்து ரொம்ப நேரமா காத்துட்டு இருக்கிங்களா… கொஞ்சம் தாமதமாக ஆகிடுச்சு” என்று கார் டிரைவர் சாமியப்பன் கூற…
“அதலாம் இல்லண்ண இப்ப தான் இறங்கினோம்… உங்களுக்கு தகவல் சொல்ல தான் போன் எடுத்தேன் நீங்களே வந்துட்டிங்க….
” வாங்க எல்லாரும் நல்லா இருக்கிங்களா”??? ரொம்ப நாளைக்கு அப்புறம் ஊர் பக்கம் வந்து இருக்கீங்க??? ஏன் எல்லாரும் பட்டணத்துலயே தங்கிட்டிங்க “….. நீங்க ஆரும் இல்லாம வீடே நல்லா இல்ல என்று தன் வருத்தத்தை தெரிவித்தார் சாமியப்பன்… பல வருடமாக அவர்களுக்கு கார் டிரைவராக இருப்பவர்..
நம்பிக்கையானவர்…..
” வேந்தா நான் எங்க வீட்டுக்கு போறேன் ” என்று அருண் சொல்ல…..
” சரி அப்ப நீங்க எப்படி ” ??? வேந்தன் கேட்க…..
கவி, புகழ் அவரவர்கள் வீட்டிற்கு செல்ல போவதாக கூற ….. மது மட்டுமே
வேந்தனோடு செல்வதாக முடிவானது…
முதலில் அருணை அவன் வீட்டில் விட்டு விட்டு, அடுத்து புகழ், அடுத்து கவியும் இறங்கிக் கொண்டனர்….. கவி இறங்கும் நேரத்தில் ” பார்த்துக்கோ மது ஜாக்கிரதையாக இரு ” என்று மறக்காமல் கூற விட்டு சென்றாள்….
காரில் இவர்கள் இருவரும் மட்டுமே.. பேரமைதியாக இருந்தது…. சாமியப்பன் மட்டும் ஏதோ சொல்லிக்கொண்டே வந்தார்….கார் வீட்டிற்கு வந்ததும் முதலில் இறங்கியது வேந்தனே… அரண்மனை போன்று இருந்தது வீடு பழைய காலத்து வீடு… இரு பக்கமும் திண்ணை, அதற்கு அடுத்து ஒரு நீளமான அறை… முன்று பக்க நீள பாதை, நடுவில் மித்தம், மாடி அறைகள் என வீடு அரண்மனை போன்று இருந்தது….
காரில் இருந்து இறங்கிய வேந்தன் முதலில் பார்த்தது வேலைகாரர்களை அதட்டி உருட்டி வேலை வாங்கிய தன் பாட்டியை தான்…. இவனை பார்த்தவுடன் வேலம்மாள் பாட்டி ஓடிவந்து அணைத்து கொண்டு அழுதார்….
” என்ன பாட்டி எதுக்கு இப்ப அழுதுட்டு இருக்க??? நான் வந்தது அவ்வளவு கஷ்டமா இருக்கா உனக்கு” …. என்று வம்பிழுத்தான்….
” இல்லையா தங்கபுள்ள உன்னை பார்த்த சந்தோசத்துல தான் சாமி”!!! என்று அவன் கேலி புரியாமல் பதில் அளித்தார்… ” நல்லா இருக்கியா சாமி ” என்று கேட்டுவிட்டு அவன் முதுகிற்கு பின்னால் எட்டி பார்த்தார்…..
” நான் இங்கே இருக்கேன்… நீ யார தேடுற ??? என்று கேட்க….
” இல்லையா மத்த புள்ளைங்க எங்க”???
” யாரும் வரல பாட்டி எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்கு போட்டார்கள்”!!!!..
” அப்ப அந்த மகாராணியும் வேலையை”???
” யார கேக்கற பாட்டி என்னையா”??? என்று அவரின் பின்னால் இருந்து அணைத்து கொண்டாள் மது……
தொடரும்……
சூப்பர்ப்… அன்ட் வெரி நைஸ் கோயிங்.