அத்தியாயம் – 10
உயிரை உருக்கி..
உனக்காய் பரிசளித்தேன்..
காகிதமாய் கிழித்தெறிந்தாயே..
தாங்குமா..
-டைரியில்..
அன்று வீட்டுக்கு சென்றவளிடம் தாய் தங்களது குடும்ப கஷ்டத்தை சொல்லி வருத்தப்பட்டு தாங்கள் நல்லபடியாக இருக்கும் போதே அவளுக்கு சீக்கிரமே கல்யாணம் செஞ்சு கொடுத்துடனும்னு
பேச அவளோ “கொஞ்சம் டைம் கொடுங்கம்மா.. நானே சொல்றேன்” என்று கூறிவிட்டு சென்று கதவை அடைத்துக்கொண்டாள்..
“இந்த பொண்ணு என்னங்க இப்படி பேசுறா? காலா காலத்துல இவளுக்கு கல்யாணம் செஞ்சாதானேங்க பையனோட படிப்புக்கு செலவு பண்ண முடியும்?” என்று மதுமிதா அவரது கணவரிடம் கூற..
“அவளும் சின்னப்பொண்ணு தானேமா..இரு பார்க்கலாம் அநேகமாக அவ யாரையோ காதலிக்கிறா? அதான் நம்மகிட்ட டைம் கேட்டு இருக்கா?” என்று கூற அதிர்ந்த மதுமிதா..
“என்ன சொல்றீங்க இனியா? யாரது இருங்க அவளை விசாரிப்போம்” என்று அவளை கூற வாயெடுத்தவரை தடுத்தவர்..
“என்ன மது நீ? ஏன் இப்படி அவசரகுடுக்கையா இருக்க..அவளுக்கும் நல்லது கெட்டது தெரியும், நாம நம்ம வாழ்க்கையை தேர்ந்தெடுத்த மாதிரி அவ வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிற உரிமை அவளுக்கு இருக்கு..அதும் இல்லாம நம்ம பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமையுதுனா அது நமக்கு சந்தோஷம்தானே..நீ அமைதியா இரு மது இந்த விஷயம்ல அவளே சொல்லுவா..இல்லனா அவங்களே தேடி வருவாங்க” என்று கூற..
“என்ன இப்படி சொல்றீங்க? அவ நம்ம பொண்ணு ஆழம் தெரியாம ஏதாவது சிக்கல்ல மாட்டிகிட்டா அதான் சொன்னேன்..நீங்க சொல்ற மாதிரியே நான் அமைதியா இருக்கேன் போங்க” என்று அவர் கோவமாகவே கூற அவரை சமாதானம் படுத்தும் முயற்சியில் இறங்கினார் இனியன்..இவர்கள் பேச்சை கதவின் அருகில் நின்று கேட்டவள் அவளது திட்டத்தை செயல்படுத்த முடிவே செய்துவிட்டாள்..அவனிடம் நாளை முடிவை சொல்ல வேண்டும் என்று..
மறுநாள் அவனை காண அழகான பாவாடை தாவணி அணிந்து கொண்டு கல்லூரி கிளம்பியவள் தன்னவன் கண்ணுக்கு தான் அழகாக தெரியவேண்டும் என பார்த்து பார்த்து அலங்காரம் செய்துகொண்டு சென்றாள்.. இவளது செயல்களையெல்லாம் கவனித்த மது எதுவும் கேட்காமலே இருந்தார்.. நேரே கல்லூரி சென்றவள்..அங்கிருந்து இஷான் நம்பருக்காக ஆபீஸ்க்கு ஃபோன் செய்தாள்..
அவருக்கு லைன் கனெக்ட் செய்ய முடியாது.. அவர் உடல்நிலை சரியில்லை என லீவ் எடுத்து உள்ளார்..நீங்க கயல்விழிதானே அப்போ உங்களை வீட்டுக்கு வர சொன்னார் இதுதான் அடரஸ்..இஷ்டம் இருந்தால் வரச்சொன்னார்..
என்று பெரிய குண்டை போட..
‘என்ன உடம்பு சரியில்லையா? இப்போ எப்படி இருக்கானோ?’ என்று எண்ணியவள்..’நாம லேட் பண்ணா போட்ட ப்ளான் எல்லாம் சொதப்பிடும், நாமளே நேர்ல போய் அவன் லவ்வ ஏத்துக்கறதா சொல்லிட்டு வந்துடனும்’ என எண்ணம் ஓட
தன் நண்பன் கெளதம்மை அங்கேயே கழட்டிவிட்டு அவள் மட்டும் கிளம்பினாள் ரிஷப்சன் பெண் கொடுத்த அட்ரஸ்ஸை தேடி..வீடுவரை வந்து விட்டவள் சற்று தயங்கினாள் உள்ளே இருப்பவர் யாராவது தன்னை தவறாக நினைத்தால் என்று.. அடுத்த நொடி என்ன நினைச்சா என்ன? என்று காலிங் பெல்லை அழுத்தினாள் கதவு திறந்த பாடு இல்லை..’என்னங்கடா இது இவ்ளோ பெரிய கதவு வெச்சமனுஷன் கதவை திறந்துவிடவும் ஆள் வெச்சு இருக்கலாமல்’ என்று அவனை மனதிற்குள் திட்டிக்கொண்டே சார் என்றபடி கதவில் தட்ட கை வைக்க அது தானாகவே திறந்து கொண்டது..
‘என்ன இது பேய் கதவு மாறி ஓபன் ஆகுது..கயலு நாம பாட்டுக்கு வந்துட்டோமே இவன் நம்மள கேவலமா நினைச்சுடுவானோ? கயலு மானம் அவமானம்லாம் பார்த்தா நம்மால பழிவாங்கமுடியாது.. இவனை லவ் பன்றோம்னு உடனே சொன்னா மட்டும் தான் நம்ம ப்ளான் பக்காவா வேலை செய்யும் இல்ல நம்ம லட்சியத்தை அடையுறது ரொம்ப கஷ்டம்..சோ உடனே லவ்வ சொல்றோம் பழி வாங்குறோம்’ என்று மனதிற்குள் பேசியபடி கதவை தள்ள அந்த வீட்டின் அமைப்பு அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது..சிறியதான டபுள் பெட் ரூம் வீடு குட்டி சமயலறை என அனைத்தும் அழகாக நேர்த்தியாக இருந்தது.
அந்த அழகில் மயங்கி நின்றவள் தூக்கிவாரி போட திரும்பினாள்
“யாரது?” என்ற இஷானின் குரலில்..அவள் திரும்ப அவன் அவளை ஆச்சர்யமாக பார்க்க. அவளோ அவனது வாடிய தோற்றத்தை கண்டு ஒருகணம் திகைத்தாள்..
‘என்ன இவன் ஒரு சாதாரண ஜுரம்க்கே இப்படி இருக்கான் இவனை பழிவாங்கதான் நான் காதலிக்கிறமாதிரி நடிக்கப்போறேன்னு தெரிஞ்சா இவன் தாங்குவானா?’ என்று எண்ணியபடி அவனை ஆவென பார்த்துவைக்க அதில் கட்டிளம்காளை அவனுக்கே வெட்கம் வர, இதழுக்குள் சிரித்துக்கொண்டே
“மிஸ்.கயல்விழி வாங்க..வாட் ஏ ப்ளஸன்ட் சர்ப்ரைஸ்.. சாரி ஐயம் நாட் வெல் அதான் உங்கள வீட்டுக்கு வரவைக்க வேண்டியதா போச்சு” என்று அவளை அந்நியவள் போல் பேசி அவனது ட்ரேட்மார்க் அழைப்பான விழியை கூறாமல் விட அவளுக்கு இதயத்தில் ஓர் மூலையில் சுருக்கென்றது..’நமக்கும் வலிதான் நாமளும் வலி தாங்கிதான் ஆகனும்’ என்று எண்ணியவள்,
“உங்ககிட்ட கொ..கொஞ்சம் பேச வேண்டி இருந்தது..அ..அதான் ஆபீசுக்கு ஃபோன் பன்னேன் அவங்க உங்கள வீட்டுக்கு வந்து பா..பார்க்க சொன்னாங்க அதான் சார் வந்தேன்” என்று அவளும் சார் கூப்பிட அதை உணர்ந்தவன், “சிட் மா..நான் உங்களுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வர்றேன்” என்று திரும்ப அவளுக்கு ஏதேதோ கற்பனை அவனை ஆன்டி ஹீரோவாக காட்ட உடனடியாக மறுத்தாள் “இ..இல்லை சார் எதுவும் வேணாம்..நா நான் சாப்பிட்டுதான் வந்தேன்” என்று கூற அவளது படபடப்பை பார்த்தவன்
“சரி என்னானு சொல்லிட்டு கிளம்புங்க கயல்விழி.. நான் தனியா இருக்கேன் நீங்களும் தனியா வந்து இருக்கீங்க..நான் உங்களை ஏதாவது செஞ்சுடுவேன்ல..நீங்க அங்கேயே நின்னு சொல்லிட்டு கிளம்பலாம்” என்று வருத்தமாய் கூற
அவன் கூறியதில் தர்மசங்கடமாய் உணர்ந்தவள் “சார்.. அது” என்று கூற.. அவளை கையமர்த்தியவன்..
“நீங்க வேலையை விடப்போறீங்களா கயல்விழி..அதை சொல்லத்தான் வந்தீங்களா?ஐ நோ யூ ஆர் நாட் ஃபீல் ஈஸி ட்டூ வொர்க் வித் மீ..சோ அதானே?” என்று கேட்க..இல்லையென்பதை போல அவள் தலையை ஆட்ட..
“சரி சொல்லுங்க?” என்று கேட்க
“அது..அது வந்து இன்னைக்கு ப..பதில் சொல்ல சொல்லி சொன்னீங்கலா அதான் அதைபத்தி கொஞ்சம் பே..பேசனும்” என்றாள்
“அது டே பிஃபோர் அடிச்சது பத்தலனு அகெய்ன் அடிக்கபோறீங்களா? நீங்க எப்படியும் என் லவ்வ ஏத்துக்க போறது இல்ல அடிக்கவாவது செய்யாம இருங்க மேடம்” என்று கூற கோவமாய் கத்த ஆரம்பித்து விட்டாள்.
“டேய் நீ என்ன லூசா? என்னை ஏதாவது பேசவிட்டாதானே நான் என்ன சொல்ல வந்து இருக்கேன்னு தெரியும்..பேசவே விடாம இருந்தா என்னத்த சொல்ல? இங்க பாருங்க..அது என்னானு தெரியல இந்த மூஞ்சிய பார்த்தா ரொம்ப புடிக்குது உங்க குணம் ரொம்ப ரொம்ப பிடிக்குது ஆனாலும் ஏதோ ஒரு பயம் வருது..எங்க அம்மாவுக்கு மியூசிக்னாலே பிடிக்காது ஆனா அதுவே வேலையா செய்யுற உங்கள கல்யாணம் செஞ்சுக்க ஒத்துப்பாங்கலானு தெரியல. அதுவே எனக்கு பெரிய பயம் பார்த்தவுடனே உங்கள பிடிச்சது ஏன் எதுக்குனு தெரியல? ஆனா எங்க அம்மாக்காக பயந்து தான் எங்க உங்கமேல இருக்க லவ்வ வெளியே காட்டிடுவேனோனு தான் கோவமா நடந்து உங்கள அடிச்சுட்டேன்..ஆனா அன்னைக்கு ஃபுல்லா நான் தூங்கல நான் என்ன செய்யட்டும் இதுக்கு நீங்களே முடிவு எடுத்துக்கோங்க.. எனக்கு எங்க அம்மா அப்பா முடிவு ரொம்ப முக்கியம்.. அவங்களுக்காக உங்கள தூக்கி எறியனும்னா மனச கல்லாக்கிட்டு தூக்கி எறிஞ்சுடுவேன்..ஆனா எந்த ரீசன்காகவும் அவங்களவிட்டு வரமாட்டேன்.. என் உணர்வு உங்களுக்கு புரிஞ்சா இதுக்கு ஏத்தமாதிரி நல்ல முடிவா எடுங்க இல்லைனா எ..என்ன விட்டு வேற ந..நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க” என்று முதலில் ஆவேசமாய் பேசியவள் கடைசி வார்த்தையில் கலங்கி பேசினாள்..அவளையே பார்த்துக்கொண்டு இருந்தவன் அவள் கண்களை திரும்பி துடைப்பதை பார்த்தவனுக்கு அவளது உள்ளம் தெளிவாக புரிந்தது.. ஆனால் அவள் கூறிய வேறு ஒருவரை திருமணம் செய்து கொள் எனும் வார்த்தை அவனுக்கு கோவத்தை வரவைக்க..
அவள் “கிளம்புறேன்” என்றுவிட்டு கதவருகே செல்ல
“விழி” என்று அவன் அழைக்க தன்னவனின் தனக்கான அழைப்பை கேட்டவள் கண்கள் கலங்க அவனை திரும்பி பார்க்க..அவளை நோக்கி கையை விரித்து நீட்டினான்.. கண்களில் கண்ணீரும் இதழ்களில் சிரிப்புமாய் ஓடிவந்து அவனை கட்டிக்கொண்டாள் அவனும் அவளை அணைத்துக்கொண்டு அவளை தன்னிடம் இருந்து பிரித்து அவளது கன்னங்களை கையில் ஏந்தியவன்
“என்னை நம்புறியா?” என்று கேட்க அவனின் பார்வையில் கட்டுன்டவள் “ரொம்பவே..என்னை விட்டுட்ட மாட்டீங்கல” என்று அவள் திருப்பி கேட்க..
“என் உயிரே நீதான்டி உன்ன நீயே விட சொன்னாலும் விடமாட்டேன்” என்றபடி அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்..
அவனது அணைப்பில் தன்னைமறந்து அவனுடன் இழைந்துகொண்டவள் அவனிடமிருந்து விலகி பக்கத்தில் நின்று அவனை பார்த்து
“அது எப்படி பார்த்த உடனே லவ் வரும்?”
“ஏன் வரக்கூடாதா?” என்று எதிர்கேள்வி கேட்க..
‘இப்படி கேட்டா என்ன சொல்றது’ என்று எண்ணியவள்
“இ.. இல்ல அது.. எப்படினு தான்?” என்று திக்க.. அவள் உயரத்துக்கு குனிந்தவன் அவள் காதருகே தன் மூச்சுக்காற்று தீண்டும் இடைவெளியில் நின்று
“மனசுல காதல் வந்துட்டா.. எல்லாம் சாத்தியம்தான் விழி” என்று தன்னவளை அழைக்க..
அவன் குனிந்தபோதே தன்னிலை இழந்தவள்.. அவனது மணம்.. மூச்சுக்காற்றில் மொத்தமாய் சிலையாகி போனாள்.. அதை அவனுக்கு சாதகமாக பயன்படுத்தியவன்.. பக்கத்தில் நின்றிருந்தவளை.. கையை பிடித்து இழுக்க.. அவனது கைவளைவில் முதுகு காட்டி நின்றவள் அதிர்ந்து பின்னால் திரும்பி பார்க்க.. அவள் பின் கழுத்தில் ஊஃப் என ஊதினான்..அதில் உடலெல்லாம் அதிர
“எ..என்..என்ன பன்ற.. இ..இஷா” என்று திக்கி திணறி கேட்க..
“சொல்லட்டுமா விழி” என்றவன் கைகள் அவளது தாவணியின் உள் சென்று அவளது வயிற்றில் பதிந்து அவளை தன்னோடு அணைக்க அவளுக்கோ ஏதோ தன்னை சுற்றி நடப்பவையெல்லாம் மாயை போல் தோன்றியது.. முதலில் அவனது அணைப்பு தாயிடம் தஞ்சமடையும் குழந்தையின் அணைப்பாய் இருந்தது இந்த அணைப்பு தன் உயிரை கொத்தாய் பறித்து தன்வசம் இழக்கவைக்கும் அணைப்பு. இதயத்துடிப்பு அதிகமாக வேகமாக மூச்சு வாங்கினாள்..அவள் கைகள் அவனது கையை பற்றி இருந்தாலும் அவன் செய்வதை தடுக்கும் அளவு பலமாக இல்லை..அவளது தவிப்பை உணர்ந்தவன் தன் உணர்வை கட்டுப்படுத்த முடியாமல்.. அவளது காதோரம்…
“விழி.. i can’t wait.. i need u badly.. கல்யாணம் செஞ்சுக்கலாமா?” என்றபடி அவளது வெற்று முதுகில் முத்தமிட..
கல்யாணம் என்ற வார்த்தையில் சுய உணர்வு பெற்றவள்.. தீயில் விழுந்தவள் போல சட்டென அவனிடமிருந்து விலகினாள்..
அவனோ புரியாமல் பார்க்க.. தான் என்ன செய்கிறோம் என்பதை உணரவே அவளுக்கு கொஞ்ச நேரம் ஆனது.. தன்னை சமாதானம் செய்து கொண்டவள்.. அவனை பார்த்து..
“இ..இதுலாம் கல்யாணத்துக்கு அப்புறமா தான் ப்ளீஸ்.. நீ..நீங்க அப்பா அம்மாகிட்ட வந்து பேசுங்க..நான் கி..கிளம்பறேன்” என்றுவிட்டு கடகடவென திரும்பி நடக்க ஆரம்பிச்சுட்டாள்..
அவனோ..’இப்ப என்ன தப்பா கேட்டுட்டேன்னு இப்படி போறா? ஒருவேளை கல்யாணத்துக்கு பயப்படுறாளா? அதான் சொன்னாளே? நான்தான் பார்த்துக்கறேன்னு சொன்னேனே? இங்க இருக்குற கல்ச்சர் படி நான் கல்யாணம் செஞ்சுக்கதானே கேட்டேன்?’ என்று குழம்பியபடி பார்த்து நின்றான் அவளை..
‘நானா..நானா இப்படி..? நான் நினைச்சது என்ன? இப்போ நடக்கிறது என்ன? அவனை பழிவாங்க நினைச்ச நானா அவனோட தொடுகையில கரையுறேன்.. அ..அப்படினா..நான் அவனை நிஜமாவே விரும்ப ஆரம்பிச்சுட்டேனா? இனி அவனை மறந்து எனக்கு வாழ்க்கை இருக்கா?’ என்று எண்ணியவள் கண்கள் கண்ணீர் சிந்தியது..எப்படி கிளம்பினாள் என்றே தெரியாமல் அவள் இல்லம் வந்து சேர்ந்தவளுக்கு பெரிய இடியை இறக்கினர் அவள் பெற்றோர் வேற ஒரு மாப்பிள்ளையை பார்த்துவிட்டதாக..
சூப்பர்… அன்ட் வெரி நைஸ் கோயிங்.
மிக்க நன்றி சகோ❤️🥰
Superb aduthu
Already pottutene sago❤️🥰..Mikka nandri sago❤️
Interesting
மிக்க நன்றி சகோ❤️🥰
Nice epi