Skip to content
Home » தட்டாதே திறக்கிறேன்-1

தட்டாதே திறக்கிறேன்-1

அத்தியாயம்-1

முழு நிலவின் முக்கால் பகுதி மேகக்கூட்டத்தில் மறைந்து கிடந்தது.

ஆணாதிக்கம் என்பது ஆகாயத்திலும் உண்டு போலிருக்கிறது…

திரட்டிய மேக்கூட்டங்களுக்கு நடுவே திணறி தவித்துக் கொண்டிருந்தாள் மதி.

மறையவும் முடியாமல் மீளாவும் முடியாமல் தன் சுயத்தை உலகுக்கு உணர்த்த போராடிய நிலவு மகளை மீட்கத்தான் அங்கே ஆளிலில்லை….

பெரும் போராட்டத்திற்கு பிறகு தன்னை மீட்டெடுத்து வந்தவளை வரவேற்றன நட்சத்திர கூட்டங்கள்….

ஒரு பௌர்ணமி நாள்ல நிலா பாக்க நின்னது குத்தமா என்று வருண் நினைக்குமளவுக்கு இருந்தது அங்கே வான வேடிக்கை…..

ஆனாலும் மறைந்து மறைந்தாவது தன் அழகை பூலோக வாசிகளுக்கு காட்டிச் செல்லும் நிலவின் குணம் போல ஆடவன்  காதலிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அமைந்து விட்டால் அவ்வாணுக்கு எல்லையில்லா இன்பமே…

ஆனா எந்த பொண்ணு வேணும்னே முன்னாடி முன்னாடி வந்து நின்னுட்டு போவா….

சைட் அடிக்கிறது தெரிஞ்சாலே மின்னல் மாதிரி காணாம போய்டுவாங்க….

இதுல எங்க நிலவு மாதிரி வந்து வந்து போக…..
என்று நினைத்தபடி தலையை துவட்டிய தன் ஈர டவலை கொடியில் காயப்போட்டப்படி வருண் மீண்டும் நிலவை வெறிக்க,
  “அடடே இன்னக்கி பௌர்ணமியா?…..”
என்று கேட்டபடி அவன் கேட்ட தேநீருடன் பின்னே வந்து நின்றார் அவனின் அன்னை ரேணுகா.

அன்னையை கண்டதும்,
“ம்ம் ஆமா ம்மா அப்படித்தான் நினைக்கிறேன்”
என்று அவரின் கையில் இருந்து தேநீரை பெற்றபடி டீப்பாயின் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தான் வருண்.

ஒன்று பேசினால் பத்து வார்த்தைகள் பேசிடும் தனையன் இன்று நான்கு வார்த்தைகளோடு நிறுத்தி கொள்ள வருணை ஆராய்ந்தார் ரேணுகா.

அடர்ந்த கேசம் தலையை துவட்டியதால் கலைந்து போய் காற்றில் அலைபாய, சிறிதிலும் சிறிய கண்கள் எதிரே இருந்த சிறுவாழைச் செடியின் மீதும் அதனருகே இருக்கும் வெள்ளை ரோஜாவின் மீதும் நிலைத்திருந்தது.

கண்களுக்கு சிறிதும் சம்பந்தமில்லாமல் கூர்நாசி விடைத்திருக்க, அதன் கீழே இருக்கும் தடித்த உதடுகள் தேநீரை மெதுவாக உறிஞ்சிக் கொண்டிருந்தது.

பனியனை கிளித்து கொண்டு வெளியேற தயாரான புஜங்களை அடர்ந்த தோள்கள் தாங்கியிருக்க, குழப்பத்தின் ரேகைகள் நெற்றியில் முடிச்சுகளாக விழுந்திருந்தன.

முகத்தில் குழப்பம் அப்பட்டமாக தெரிவதை வைத்தே அவனின் மனம் எதிலோ குழம்பி போய் இருக்கிறது என்று கணித்து விட்ட ரேணு,
“என்ன டா ப்ராப்ளம் ஏன் ஒரு மாதிரி யோசனையா இருக்க?

வேலையில ஏதும்?…..”
என்று அவர் கேட்க வர,

“ம்ம்…
வேலன்னு சொல்ல முடியாது. ஆனா அட் சேம் டைம் வேல ப்ளஸ் லைஃப் மேட்டர் ம்மா….”
என்றான் தன் பார்வையை வெள்ளை ரோஜாவிடம் இருந்து மாற்றிடாமல்….

“ஙே….
வேல ப்ளஸ் லைஃபா?….
என்ன டா சொல்ற?…..”
என்று முகத்தை ஒரு மாதிரியாக வைத்து கொண்டு அவர் வினவ,
  “உனக்கு ஷில்ஃபா தெரியும் ல ம்மா?…..”
என்று கேட்டான் வருண்.

அவன் அவ்வாறு கேட்கவும்,
   “ஹான் தெரியும் தானே. உன் ஏ.ஆர்ன்னு ஏதோ சொல்வியே…..

நார்த் இந்தியா பொண்ணு….
என்று ரேணு பதிலளித்தார்.

“எல்லாம் கரெக்ட். ஆனா ஏ.ஆர் இல்ல…

ஹெச்.ஆர் ஹியூமன் ரிசோர்ஸ்…..”
என்று பாடம் எடுத்தான் ஆடவன்.

“என்ன இலவுடா நான் என்ன பரிட்சைலையா எழுத போறேன்…..

முதல்ல கதைய சொல்லு….

எனக்கு உள்ள வேல இருக்கு. இட்லிய சிம்ல வச்சுட்டு வந்துருக்கேன்….”
என்று கடுகடுத்தார் ரேணுகா….

“சரி சரி கோச்சிக்காத சொல்றேன்….

இன்னக்கி அவங்க என்ன கூப்டு புதுசா ஒரு கான்ட்ரெக்ட் பத்தி பேசுனாங்க…..

ஒரு நியூஸ் பேப்பரோட பில்டிங்…

பேர் கூட திருமதின்னு சொன்னாங்க…..”
என்றதும்,
  “எது திருமதி யா?….

நல்ல பேர் போன பிரைவேட் நியூஸ் பேப்பர் ஆச்சே டா…..”
என்று அவர் கூறவும்,
   “ம்ம் ஆமா டிவென்டி ஃபை இயர்ஸா ரன் ஆகுதாம்…

நெக்ஸ்ட் மன்த்ல இருந்து டுவென்டி சிக்ஸாம்…

சோ சில்வர் ஜுப்லிக்காக ஃபங்கஷன் பண்றாங்களாம்.

அதனால பழைய பில்டிங் மாதிரி இல்லாம கொஞ்சம் இன்டீரியர் டிசைனோட புது பில்டிங்கா மாத்தி தர சொல்லியிருக்காங்க…

நான் ஹெட்டாம்; எனக்கு கீழ மூனு பேராம்.

அதுவும் ஒன் மன்த்ல…..”
என்று அவன் கூறிட,
  “நல்லது தானே. நீயும் ரொம்ப நாளா ஹெட்டா இருக்க ஆசப்பட்ட தானே.

அப்புறம் என்ன ப்ராப்ளம்….”
என்று அவனின் அன்னை கேட்டிட,
  “வெறும் இது மட்டும் தான்னா பரவாயில்ல.

ஆனா அந்த ஷில்ஃபா இன்னக்கி என்ன சொன்னா தெரியுமா?…

அவ என்ன லவ் பண்றாளாம்…..”
என்று அவன் கூறவும் அவனன்னையின் கண்கள் சுருங்கியது.

“ரொம்ப நாளா என் மேல அவளுக்கு ஒரு இன்ட்ரெஷ்ட் இருந்ததாம்.

ரீசண்டா தான் அது லவ்வா மாறுச்சாம்.

சோ எனக்கு கீழ போட இருக்குற மூனு பேர்ல அனிதான்னு ஒரு பொண்ணுக்கு கொடுக்க இருந்த இந்த ப்ராஜெக்ட்ட மேனேஜ்மென்ட்ல பேசி எனக்கு ரெக்கமண்ட பண்ணி லவ் ப்ரோபசல்  கிஃப்ட்டா இந்த கொடேஷன தர நினச்சாளாம்…..”
என்று அவன் கூறி முடிப்பதற்குள்ளே,
“அப்ப நீ அவ லவ் ப்ரோபசல அக்ஸப்ட் பண்ணலன்னா இந்த ப்ராஜெட் உனக்கு இல்லன்னு சொல்றாளா அவ…..”
என்று ரேணுகா கேட்டிட, கிட்டதட்ட என்று தேநீர் கோப்பையை கீழே வைத்தான் வருண்.

“இது என்ன டா இப்படி ஒரு பிரச்சன….

மூனு வருசமா ஏதாவது ஒரு ப்ராஜெக்ட் கிடைக்காதன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கும் போது இப்படி ஒரு கண்டிஷன்…..”
என்று இவர்கள் பேசிக் கொண்டு இருக்கையில் ஆன்டி ஆன்டி என்று இரும்பு கேட்டின் தாழ்ப்பாளை தட்டினாள் ஒரு மங்கை…

“யாரும்மா நம்மலையா?…..”
என்று வீட்டின் பக்கவாட்டில் உள்ள தோட்டத்தில் அமர்ந்தவாறு தூரத்தில் இருட்டில் அப்பெண் தட்டுவதை பார்த்த வருண் வினவ, முதலில் யோசித்த ரேணுகா,
  “அட ஆமான்டா என்ன தான்.

பக்கத்து பில்டிங்ல இருக்குமே கீழ் வீட்டு பொண்ணு தேவிப்பிரியா அவ சாவி கொடுத்திட்டு போனா.

மறந்தே போய்ட்டேன்.

நான் வர லேட் ஆகும். என் ஃப்ரண்ட் கிட்ட கீ கொடுத்திடுங்கன்னு சொன்னா.

அவ ஃப்ரண்ட்டா தான் இருக்கும் போல…

சரி நீ போய் கேட்ட திற….

நான் போய் லைட்ட போட்டுட்டு சாவி எடுத்திட்டு வர்றேன்.

பாவம் அந்த பொண்ணு இருட்டுல நிக்குது….”
என்று ரேணுகா உள்ளே நுழைய வருண் வெளியேறினான்.

வெளியே வந்தவன் யாரோ ஒரு பெண் என்று நினைத்து தான் சாதாரணமாக அவளை நெருங்கினான்.

ஆனால் நெருங்க நெருங்க அவளின் முகத்தை அவனுக்கு யாரையோ நினைவுறுத்த, இருட்டில் சரிவர தெரியாமல் போன அந்த முகம் அவன் அவளை சமீபிக்கும் நேரம்
ரேணு கேட்டின் விளிம்பில் பொருத்தப்பட்டிருக்கும் விளக்கின் ஸ்விட்சை தட்டிடவும் பெண்ணவளின் முகம் முழு நிலவாக ஜொலித்தது.

வருணுக்கு இப்போது அவள் யாரென்று தெரியவும்,ஹேய் மதி…. பானுமதி அம்மா மதிம்மா என்று உற்சாகமாக தன் அன்னையை அழைத்தான் வருண்.

6 thoughts on “தட்டாதே திறக்கிறேன்-1”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *