தமிழ் மகளே …
உனக்கு
மரபு கவிதையெனும்
சேலைக் கட்டவே
துடிக்கின்றேன்
முடியவில்லை
‘சல்வார்’ , ‘சோளி’ போல
புதுக்கவிதை , வசனக்கவிதையே
அணிவிக்கின்றேன் .
ஹைக்கூ-யெனும்
அணிகலன்களையும்
மாட்டிவிடுகின்றேன்
இதுவும் உனக்கு
அழகு சேர்க்கத் தான்
செய்கின்றது .
எதுகை, மோனை, இயைபுவென
சில நேரத்தில் அணிகலன்களாக
மெருகேற்ற
அணிவித்தாலும்
மாச்சீர், விளச்சீர்,
காய்ச்சீர், கனிச்சீரென
அணிகலன் புகட்டவே
ஆசையெனக்கு
என்றாவது ஒருநாள்
உனக்கு மரபு கவிதை அணிவித்து
வெண்பா அணிகலன் பூட்டி
அழகுப் பார்ப்பேன்
என் தமிழ் மகளே…
என்னுள் ஞானவொளி ஏற்று .
— பிரவீணா தங்கராஜ் .
- Thank you for reading this post, provide your thoughts and give encouragement. 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
2018 ஆம் ஆண்டு, முத்தமிழ்க்களம் மற்றும் கம்பன் கவிக்கூடம் ஆண்டுவிழா மலரில் தேன்மழை என்னும் கவிதை தொகுப்பு புத்தகத்தில் இக்கவிதை இடம் பெற்றுள்ளது.

👏👏👏