Skip to content
Home » தீயாகிய தீபம் 11

தீயாகிய தீபம் 11

தீயாகிய தீபம் 11

விக்கி மிகவும் அமைதியானவன். அமைதியுடன் அழுத்தம் அதிகம். தன் சுக துக்கத்தை வெளிக்காட்ட மாட்டான். தன் உணர்வை வெளிக்காட்டுவதன் மூலம் எந்த பலனும் இல்லை என்பது அவன் எண்ணம். மேலும் தன் குணாதிசயத்தை மற்றவர் அறிவதை அவன் விரும்பவில்லை.

சிறு வயதில் பள்ளியில் பயிலும் தருணங்களில்  வீட்டுக்கு வந்ததும் அபர்ணா அன்று நடந்தவற்றை அப்படியே தன் அன்னையிடம் கூறுவாள். ஆனால் விக்கி எதுவும் பேச மாட்டான். குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அவன் குழந்தைத்தனமும் குறும்புத்தனமும் மறைந்து போனது.

விக்கியை இன்னிக்கு என்னடா ஆச்சு ஸ்கூல்ல?” என அம்மா கேட்டாள்

எப்பவும் போலதான் மாஎன்று விடுவான்.

அவன் பெற்றோர் மகன் வளர்ந்துவிட்டான் என நினைத்தனர். ஏனோ அவனுக்கு தன் உணர்வுகளை தன்னுள் அடக்கி அமிழ்வது பழக்கமாகிப் போனது.

விசு சினிமா வேண்டாம் பொறியியல் படி என்றதும். சரி என்றுவிட்டான். அவன் எதிர்க்கவில்லை. அதே இடத்தில் மற்ற பிள்ளைகள் இருந்தால் குறைந்தபட்சம் சண்டையாவது போட்டு இருப்பார்கள். ஆனால் விக்கிப் பெற்றோரின் ஆசையைத் தட்ட விரும்பவில்லை. அதற்கு விசு சொன்ன காரணங்களும் ஒருவகையில் ஏற்கும்படி இருந்தது.

திருமணத்திற்கும் அவ்வாறே ஆனது. ருத்ராவை வேண்டாம் என்றால் வேறு பெண்ணை முன் நிறுத்துவார்கள். அப்போது அவனிருந்த மனநிலையில் ஏதோ ஒரு பெண் தனக்கு மனையாள் ஆக வேண்டும். அது யாராக இருந்தால் என்ன? அப்படிதான் இருந்தான். தன் மனதின் எண்ணங்களைப் பூட்டி வைத்தான்.

விக்கிமுடியாது .. நோஎன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதே இல்லை. அது அவன் இயல்பாகிப் போனது.

அந்த அழுத்தம் அனைத்தும் இன்று எரிமலையாய் வெடித்துச் சிதறியுள்ளது. அதுகூட அவன் உடல் தான் செய்ததே தவிர அவன் உள்ளம் இன்னமும் அப்படியே உள்ளது.

அவனின் வெறித்த பார்வை  ஆர்வமின்மை உடல்மொழி போன்றவற்றைக் கொண்டே மருத்துவர்கள் அவனிடம் பிரச்சனை இருக்கலாம் எனச் சந்தேகித்தனர். அதனால்தான் மனநல மருத்துவருக்கு பரிந்துரையும் செய்தனர்.

மருத்துவர் சொன்னதைக் கேட்ட விசு விம்மி விம்மி அழுதார்என்னாலதான் இப்படி ஆகிடுச்சி .. அவன் இஷ்டப்படி சினிமா டைரக்டர் ஆக விட்டிருக்கலாம்என மனமுடைந்து அழுதவரை ருத்ராவிற்குக் காணச் சகிக்கவில்லை.

கோதாவரி கணவனைத் தேற்றுவதா? மகனை நினைத்து வருந்துவதா? என்று கூட சிந்திக்க இயலாமல் ஸ்தம்பித்துப் போயினர். இவற்றை அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. தன் மகன் மனதளவில் இத்தனை பலகீனமானவனா? என நொடிந்து போனார்.

உண்மையான காரணம் அதுவல்ல என்பது ருத்ராவிற்கு நன்றாகவே புரிந்தது. ஆனால் விக்கியிடம் இதைப் பற்றிக் கேட்காமல் வெளியே கூறவும் முடியவில்லை.

மனநல மருத்துவர் விக்கியிடம் பேசினார். ஒரே நாளில் எதையும் மாற்ற முடியாது. மூன்று நான்கு முறை கவுன்சிலிங் தேவைப்படும் எனக் கூறினார்.

பின்பு தனியே விசுவிடமும் கோதாவரியிடமும் விக்கியைப் பற்றிக் கேட்டு கொண்டார்.

“சில சமயங்களில் குழந்தைகளுடைய அமைதி ஆபத்தானது. அவங்க பேச மறுத்தாலும் நீங்க விடாம அவங்களோட பேசணும். பேசுவதற்கும் வயதிற்கும் சம்ந்தமில்லைஎன்றார்.

பின்பு ருத்ராவிடம் தனியாக அழைத்துப் பேசினார். திருமணமான பத்து நாட்களில் அவன் செயல்பாடுகள் மற்றும் செக்ஸ் லைப் பற்றிக் கேட்டார்.

அவள் அத்தனை கதையைக் கூற முடியுமா? என எல்லாம் சரியாக உள்ளதாகக் கூறினாள்.

நீங்கள் இருவரும் வாழ்க்கையைத் தொடங்கவே இல்லை என விக்கிக் கூறியதாக மருத்துவர் கேட்டதும்.. நாக்கை கடித்தவள் இனி மறைக்க முடியாதென அனைத்தையும் கூறினாள்.

நீங்கள்  அவரோடு நெருங்கிப் பழகுங்கள் அது அவர் பழைய கசப்பான நினைவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து இயல்பாக இருக்க உதவியாக இருக்கும் என அறிவுரை கூறினார். மறுநாள் வந்து பார்ப்பதாகக் கூறிச் சென்றார்.

குடும்ப உறுப்பினர் அனைவரிடமும் சேர்ந்து பேசினால் .. தயக்கம் காரணமாக எதையேனும் மறைக்கக் கூடும் ஆதலால் தனித்தனியாக அழைத்துப் பேசினார். இது மனம் சார்ந்த விஷயம்.

ருத்ரா இனியும் தாமதிப்பது சரியல்ல இன்றே இப்பொழுதே விக்கியிடம் பேச வேண்டும் என முடிவெடுத்தாள்.

முதலில் தன் மாமனார் மாமியாரை கேன்டீன் அழைத்துச் சென்று காலை உணவு வாங்கிக் கொடுத்து தானும் உண்டாள். பெயருக்கே மூவரும் உண்டனர்.

மாமா அத்தை நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்குப் போங்க. மாமா ராத்திரி எட்டு மணிக்கு நீங்க வந்தா போதும்.. நான் கேன்டீன்ல சாப்பிட்டுக்வேன் .. விக்கிக்கு எப்பவும் போல ஹாஸ்பெட்ல சாப்பாடு குடுத்திடுவாங்க. அதனால இன்னிக்கு முழுநாள் நீங்க வீட்லயே இருங்க. நல்லா ரெஸ்டு எடுங்க .. நாம நல்லா இருந்தாதான் விக்கிய கவனிச்சிக்க முடியும். விக்கிக்குப் பெரிய பிரச்சனைனு எதுவும் இல்ல .. ரெண்டு மூணு கவுன்சிலிங் போதுமாம்எனத் தேற்றினாள்.

மனதாலும் உடலாலும் தளர்ந்து போனவர்களாக இருவரும் கிளம்பினர். அவர்கள் சென்றதை உறுதிப்படுத்திய பின்னர் விக்கி அறைக்குச் சென்றாள். அவன் கட்டிலில்ச் சாய்ந்தவாக்கில் அமர்ந்து செல்போனில்  அரசியல் நிகழ்வுகளைப் படித்துக் கொண்டிருந்தான். அவன் காலை உணவு உண்டு விட்டான் என்பதை காலியான தட்டுகள் உறுதி செய்தது.   அவன் கால் கட்டு இன்னமும் பெரியதாக இருந்தது.

அவன் அருகில் நாற்காலியை நகர்த்திப் போட்டு அமர்ந்தாள். அவளைப் பார்த்து புன்முறுவலித்து மீண்டும் செல்போனில் கவனம் செலுத்தினான்.

உங்க அம்மா அப்பா வீட்டுக்கு கிளம்பிட்டாங்க .. ராத்திரி வர சொல்லிட்டேன் பாவம் அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும்எனப் பேச்சைத் தொடங்கினாள்.

ம்ம்எனப் பதிலாக ஓசை வந்தது.

கொய்யால .. செய்யறதெல்லா செஞ்சிட்டு மூஞ்சிய அப்பாவி மாதிரி வெச்சிக்க உன்னால மட்டும் தான்டா முடியும்என மனதில் பொரிந்தாள்.

நீ யாரையாவது லவ் செய்றியா விக்கி?” ருத்ரா கேட்டுவிட மனமோ டைப்படித்தது.

யெஸ்என்றான் செல்போனிலிருந்து கண்ணை எடுக்காமல்

யாரு?” இதயம் தண்டவாளத்தில் தடதடவென ஓடியது

நீதான்என்றான்

நான் செம காண்டுல இருக்கேன் உண்மைய சொல்லிடுஎன்றாள் காட்டமாக .. வாங்கப் போங்க என்னும் ங்க மரியாதை காற்றில் பறந்தது.

நிஜமாடி ஐ லவ் யூ .. ப்ரூவ் பண்ண நீதான் சான்ஸ் தரலஎன அவளைப் பார்த்து மந்தகாச புன்னகையுடன் கண்ணடித்தான்.

தன்னையே குற்றவாளி ஆகுகிறானே படுபாவிஎன நினைத்தவள்எனக்கு முன்ன யாரை காதலிச்ச?” ஸ்டிரிக்ட் ஆபீசராக கேள்வி விழுந்தது.

ஆழந்து சிந்திப்பவனை போலப் பாவனை செய்தவன் “ உனக்கு முன்ன நந்தினி .. அவளுக்கு முன்ன ராகவி தென் நயன் தாரா அனுஷ்கா ..” எனப் பட்டியல் நீல

சாருக்கு ஆட்டோகிராப் படம் போலப் பெரிய லிஸ்ட் இருக்கோஎன அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அடிப்பது போல நடிக்க

அவன் இம்மியும் அசரவில்லை அவள் அடிக்க மாட்டாள் என்னும் நம்பிக்கையில்  ஈஈயென இளித்தான்.

உண்மைய சொல்லு இல்லன நிஜமா அடிச்சிடுவேன்

ஓகே ஓகே கூல் நந்தினி அவளைத் தான் காதலிச்சேன்என்றவன் முகம் சட்டென இறுகிப் போனது. அவன் பார்வை நிலையில்லாமல் சுழன்றது. அங்கெல்லாம் மானசிகமாக தன் நந்தினியைக் காண்கிறான் என ருத்ராவிற்கு புரிந்தது.

தான் வருத்தமடையக் கூடாதென்பதற்காகவே அவன் இப்படியெல்லாம் சிரித்துப் பேசுகிறான் என அவளுக்குப் புரியாமல் இல்லை.

எனக்கு உன் லவ் ஸ்டோரிய சொல்லுஎன்றாள்

எப்பவும் போலக் காதல் தோல்விதான்என பெருமூச்சுடன் தோல்வி புன்னகையை உதிர்த்தான். தன்னிடத்தில் வேறொருவள் என்ற நினைப்பு அவளுக்கு அது தன் தோல்வியாகப் பட்டது.

நந்தினிய முதன் முதல்ல  எப்ப எங்க பார்த்த?” மண்ணை தோண்டி எடுத்தால் தானே உள்ளே வைரமும் தங்கமும் கிடைக்கும் அவளுக்கான பாடம் அல்லவா?

என் ஆபிஸ் நாலாவது மாடி.. அவளது மூணாவது. லிப்ட்லதான் முதல் சந்திப்பு. அவளுக்காகவே லிப்ட்ல காத்திருப்பேன். அவளுக்கு ஸ்ட்ராங்க காபி தான் பிடிக்கும். ஆபீஸ் காபி மிஷின்ல காபி குடிக்காம கொஞ்சம் தள்ளி இருக்கும் நாயர்கடைக்குத் தான் போயி காபி குடிப்பா.”

அவளுக்காகவே நானும் போவேன்.

பழைய நினைவுகளில் முழக்கினான்.

அன்று காலையில் சுட்டெரிக்கும் வெய்யில் மாலையானதும்  பலத்த காற்றுடன் மழை. பஸ் ஸ்டாண்ட்ல நின்றிருந்தாள்.

விக்கி தன் பைக்கை அவள் அருகே நிறுத்தினான்உன்ன ட்ராப் பண்ணவா நந்தினி? பஸ் வர மாதிரி தெரியலசாரல் மழையில் லேசாக நினைந்தவள் தேவதையாகக் காட்சியளித்தாள்.

நான் வேலைக்கு வரது என் குடும்பத்துக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். என் சம்பளம் தான் எல்லாமேஎன்றவள் முகம் கடுமை நிலை கொண்டது.

இனி தன்னை தொடராதேஎன்பதை நாகரீகமாகக் கூறிவிட்டாள் என்பதைப் புரிந்து கொண்டான் விக்கி.

அடுத்த ஒரு மாதம் அதிகமாக அவள் முன் நிற்கவில்லை. ஆனால் அவளுக்குத் தெரியாமல் அவளை அவனின் பார்வைத் தொடர்ந்தது.

நாட்கள் செல்லச் செல்ல அவளும் அவனைக் காணாமல் ஏக்கத்துடன் நாலா பக்கமும் தேடினாள். இதை மாடியிலிருந்து கண்டவனுக்கு அத்தனை அத்தனை ஆனந்தம். அதற்காக அடுத்த நொடியே அவள் முன் ஆஜர் ஆகவில்லை. வேண்டுமென்றே நாட்களைக் கடத்தினான்.  

அவள் மாடியில் தன் அலுவலகத்திற்கு வந்து தோழியிடம் பேசுவதைப் போல அவனைத் தேடினாள். விக்கி அவளுக்கு அகப்படாமல் தப்பித்தான். கண்ணாமூச்சி விளையாட்டுத் தொடர்ந்தது.

இருவருக்கும் பொதுவான நண்பன் திருமணத்தில் அழகே உருவாய் அவள் காட்சியளித்தாள்.

விக்கி அவளை காணாதவன் போல அமர்ந்திருக்கவிக்கி உனக்கு நடிக்க வரலஎனச் சொன்னவள் அருகில் அமர்ந்தாள்.

விக்கிப் பேசாமலிருக்கசார் கோபமா இருக்கீங்களா? சரி நான் போறேன்என எழுந்தவளை கைப் பிடித்து அமர்த்தினான்.

கண்கள் முழுவதும் காதலைத் தேக்கி வில் யூ மேரி மீ?” என விக்கிக் கேட்ட நொடி

ஆனந்த கண்ணீருடன்ஐ லவ் யூஎன்றாள் அவனின் நந்தினி.

ஒளிரும் …  

12 thoughts on “தீயாகிய தீபம் 11”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *