Skip to content
Home » தீயாகிய தீபம் 16

தீயாகிய தீபம் 16

தீயாகிய தீபம் 16

விக்கி ஆறு மாத கால வெளிநாட்டு வேலை முடிந்து சென்னை திரும்பினான். அவனுக்குத் தேவையெனில்  அலுவலகத்தில் இரண்டு நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் எனக்  கூறியிருந்தனர்.

விக்கி அமெரிக்காவிலிருந்து கிளம்ப பத்து நாளுக்கு  முன்னதாக  வாட்சப்காலில் தான் அங்கு வரும் நாளில் முடிந்தால் விடுமுறை எடு ..  அந்த நாள் முழுவதும் நாம் சேர்ந்து இருக்கலாம் என்று நந்தினியிடம் தன் ஆசையைத்  தெரிவித்தான்.

அவளும் சம்மதித்தாள். விக்கி அங்கிருந்து கிளம்பும்வரை பேசுவதும் மெசேஜ்  செய்தபடியும் இருந்தாள். பின்னர் விக்கியுடன் பேசும் சிம்  கார்ட்டை நீக்கிவிட்டாள்.

கொடைக்கானல் வரும் முன்பே புதிய செல்போன் நம்பர் வாங்கியிருந்தாள். அது அவள் தோழிகள் மற்றும் குடும்பத்தார்க்குக்  கொடுத்திருந்தாள். தற்சமயம் அதைத்தான் பெரும்பாலும் பயன்படுத்தினாள். அந்த புது எண்ணை விக்கியிடம் பகிரவில்லை.

விக்கி சென்னை திரும்பியதும் சில மணிநேர ஓய்வுக்குப்  பின்னர் நந்தினியைப்  பார்க்க அவள் வீட்டுக்குச் சென்றான்.

விக்கி தன்னவளுக்காகப்  பார்த்துப் பார்த்து ஆசையாக  வாங்கியப் பரிசுப் பொருட்களை எடுத்துக் கொண்டான். அதனுடன் குவியல் குவியலாய் காதல். ஆறு மாதம் அவளை நேரில் தரிசிக்கும் பாக்கியம் கிட்டவில்லை. ஆதலால் தன் காதலை அவள் திருப்பாதங்களில் காணிக்கையாக்கி நேர்த்திக்கடனை முடிக்கும் ஆவலோடுச் சென்றான்.   

நந்தினி வீட்டுக்குச் செல்ல அங்கு வேறு எவரோ இருந்தனர். தாங்கள் குடி வந்து பல மாதங்கள் ஆகின்றன என்றனர்.

வீட்டின் உரிமையாளரை விசாரித்தான். அவர் நந்தினி பற்றித் தெரியாது என்னும்  ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டார்.

ஏமாற்றம் அடைந்தான். பின்னர் தன் காதலி தன்னிடம் விளையாடுகிறாள் என நினைத்து புன்னகைத்துக் கொண்டபடி நந்தினிக்கு போன் செய்தான். நந்தினி போன் மொத்தமாக உறங்கிவிட்டது.

அவன் உள்மனம் நெருடலாய் உழல .. கலாவிற்கு போன் செய்தான். அவள் போனை மீண்டும் மீண்டும் கட் செய்தாள். பின்னர் போனை ஆப் செய்துவிட்டாள்.

உடனே அலுவலகம் சென்று விசாரிக்கலாம் என நினைத்தான். ஆனால் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அனைவர் முன்னும் அதை விவாதிப்பது பொருத்தமாக இருக்காது.

ஜென்னிக்கு  வார நாட்களில் சில நாள் மட்டும் மதியம் செல்லும்படி இருக்கும். ஒருவேளை அவள் வீட்டில் இருந்தால் பேசலாம் என நினைத்தவன் வீட்டிற்குச் சென்றான். வேண்டுமென்றே போன் செய்யாமல் வீட்டிற்குச் சென்றான்.

வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினான். மனதில் இனம் புரியாத கவலை சூழ்ந்தது.  ஜென்னி அம்மா கதவைத்  திறந்தார்.

என்னவென்று கேட்க ..  என ஒரு நொடி குழம்பியபடி ஜென்னி மேடம் இருக்காங்களா?”

நீங்க யாரு?”

நான் ஹெல்த் இன்சூரன்ஸ் ஏஜெண்ட். மேடம் கிட்ட இன்சூரன்ஸ் பத்தி பேசணும். அவங்க வரச் சொன்னாங்கஎன்றான்.

இப்பதான் கிளம்பிப்  போனாள். ஜென்னி வர ராத்திரி எட்டு மணி ஆகும்என அம்மா கூற

சரி தேங்க்ஸ்எனத்  திரும்ப எத்தனித்தான்.

அப்போது ஜான்அருகில் இருக்கும்  ஹோட்டலில் காத்திருஎன ஆங்கிலத்தில் தாளில் எழுதி தன் அன்னைக்குப்  பின்னே நின்றான். அவன் அன்னை காணக் கூடாது என்பதற்காகவே அவ்வாறு பின்னால் நின்றான்.

விக்கி நொடியில் கிரகித்தவன்நான் மேடமை போன்ல கான்டேக்ட் செய்துக்கிறேன். தேங்க்ஸ்எனத்  தலையாட்டினான். அது ஜானுக்கான தலையசைப்பு.

வீட்டை விட்டு வெளிவந்து ஹோட்டல் வாசலில் காத்திருந்தான். அவனை வெகு நேரம் காத்திருக்க வைக்காமல் சில மணித்  துளிகளில் ஜான் வந்தான்.

நீங்க நந்தினி லவ்வர் தானே?” என எடுத்த எடுப்பிலேயே கேட்டான்.

ஆமாஎனப்  பதில் வர

உள்ள போயி பேசலாம் வாங்கஎன அழைத்துச் சென்றான் ஜான். ஹோட்டலில் ஒரு ஓரமாக இருவரும் அமர்ந்தனர். மதிய நேரம் என்பதால் கூட்டம் இல்லை.

குரலை மிகவும் தாழ்த்தி என் பேர் ஜான். ஜென்னி தம்பி. உங்க போட்டோவ அக்கா போன்ல பாத்திருக்கேன். நந்தினி அக்கா கூட நீங்க இருந்தீங்க. அக்கா போன்ல பேசினதுல கேட்டிருக்கேன். ”

நந்தினி வீட்ல வேற யாரோ இருக்காங்க?  கலா என் போனை கட் பண்றாங்க. எதனால….?” விக்கித் தொடங்க

இடை மறித்து நிறையப்  பிரச்சனை நடந்திடுச்சி வீட்ல அம்மா அப்பாக்கு தெரியாது. அதனாலதான் இங்க பேச வந்தேன்என இன்னும் டெசிபிளை தாழ்த்தி அன்று நடந்த சம்பவத்தைக்   கூறினான்.

பூமியே பிளந்து தன்னை விழுங்குவது போல உணர்ந்தான். தன்னை சுற்றிச்  சூனியமாய் தோன்றியது. ஜான் சொன்னதை ஏற்கவும் நம்பவும் அவனுக்கு சில நொடிகள் தேவைப்பட்டன.

ஜான் அவன் நிலை புரிந்து குடிக்கத்  தண்ணீர் கொடுத்தான். ஒரே மடக்கில்  அத்தனை தண்ணீரையும் விழுங்கினான். நீருடன் தனது இயலாமை சோகம் வேதனை என அனைத்தையும் விழுங்கினான்.

கண்ணீரை அடக்க முடியவில்லை. தன் முழுக்கைச்  சட்டையில் கண்ணீரைத்  துடைத்துக் கொண்டான். அவனுள் பேரலையாய் அதிர்வுகள்  எழுந்தன. முழுவதுமாய் தன் கட்டுப்பாட்டை இழந்தான்.

நந்தினி அவர்களிடம் என்ன பாடுபட்டிருப்பாள் என நினைக்க அவன் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. எப்படி இத்தனை பெரிய துயரத்தைத்  தாங்கிக் கொண்டு ஒன்றுமே நடவாது போல என்னிடம் பேசினாள்?

அந்த அதிர்ச்சி அவன் மூளையைப்  பலமாகத்  தாக்கியது. அதன் விளைவாக அப்படியே மயங்கி சேரிலிருந்து சரிந்து கீழே விழுந்தான்.

முகத்தில் தண்ணீர் தெளித்துச்  சுற்றி இருந்தவர்கள் உதவியுடன் அவனை அமர்த்தினான் ஜான். ஐந்து நிமிடத்தில் விக்கி சகஜ நிலைக்குத்  திரும்பினான் எனினும் உடலிருந்த சக்தி அனைத்தும் உறிஞ்சப்பட்டதை போல சோர்வாகிவிட்டான்.

ஜானிற்கு தான் ஏன் சொன்னோம் என்றாகிவிட்டது. நந்தினிக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கூறினான். ஆனால் இப்படி ஆகும் என கொஞ்சமும் நினைக்கவில்லை.

 “ப்ளீஸ் .. நான் சொன்னதை அக்காகிட்ட சொல்லிடாதீங்கஎன ஆயிரம் முறை ஜான் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.

நந்தினி கொடைக்கானலில் பணிபுரியும் டிராவல்ஸ் முகவரியை அக்கா போனிலிருந்து சுட்டதைக் காட்டினான். அதோடு நந்தினியின் புது போன் நம்பரையும் கொடுத்தான். சற்று நேரத்தில் விக்கி தளர்வாகக்  கிளம்பினான். ஜானும் வீட்டுக்கு வந்துவிட்டான்.

இரவு உன்னைத்தேடி யாரோ வந்திருந்தாங்கஎன அம்மா ஜென்னியிடம் கூற .. அது விக்கியாக இருக்குமோ என அஞ்சினாள் ஜென்னி.

ஜான் பாய்ந்து வந்து யாரோ இன்சூரன்ஸ் ஏஜெண்டாம்  .. உனக்கு போன் பண்றேன் சொன்னார். பேர் கூட ஏதோ சொன்னாரேஎனச்  சிந்திப்பதைப் போலப்  பாவனை செய்தவன்ஆங் .. பேர் பிரபுஎன மூச்சுமுட்ட முடித்தான்.

ஜென்னி அம்மாபேர் சொன்னாரா?” குழப்பமாகக்  கேட்க

அம்மா உங்களுக்கு வயசாசிச்சி அதான் மறதிஉனக்கு போன் பண்றேன் சொன்னாரு ஜென்னிதன்னால் முடிந்த அளவு மடைமாற்றினான்.

அம்மா சீக்கிரமா சாப்பாடு போடுங்க .. .பி.எல் மேட்ச்ப் பாக்கணும்” எனத்  தேவை இல்லாமல் பேசினான்.

படிப்பு தவிர எல்லாம் பாருஅம்மா திட்டத்  துவங்கினார்.

ஜென்னி வந்தது விக்கி அல்ல என்பதால் நிம்மதி பெருமூச்சுடன் தானும் ஐ.பிஎல் மேட்சில் ஐக்கியமானாள்.

மறுநாள் விக்கி அலுவலகம் சென்றான். அவனுக்கு  ராஜ உபசாரம் நடந்தது. அவனுக்காகப் பதவி உயர்வு  காத்திருந்தது.

கலாவும் ஜென்னியும் அவனை தவிர்த்தனர். ஒரு வாரம் கடந்தது. விக்கி நந்தினியைப் பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை.  

தோழிகள் இருவருக்கும் விக்கி நந்தினியைப்  பற்றி விசாரிக்காமல் போனது கோபமானது.

வேண்டுமென்றே ஒரு நாள் கேன்டீனில் அவனுடன் பேசினர். நந்தினி என்று ஒருவர் இவ்வுலகில் இருப்பதைப்  போலவே அவன் காட்டிக் கொள்ளவில்லை.

அரசியலிருந்து  அமெரிக்காவரை பேசினான். அதில் நந்தினி எங்கும் இல்லை.

ஜென்னி போனில் நந்தினியிடம் இதைப் பற்றிக்  கூறினாள். வாழ்க்கையே அஸ்தமித்து போனது போல நந்தினி வெறுமையாய் உணர்ந்தாள்.

தன்னிடம் குறைந்தபட்சம் ஒருமுறையாவது போனில் பேச முயல்வான்  என எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமாய் போனது. தான் களங்கமானவள் எனத் தெரிந்திருக்கும் அதனால்தான் அவன் வரவில்லை என நொடுந்திப் போனாள்.

அவள் உள்மனமோநீதானே அவன் நன்றாக இருக்க வேண்டும் என்று தியாகியைப் போல சில செயல்களைச்  செய்தாய். இப்போது எதற்குக்  கலங்குகிறாய்?”  என்க் கேட்க

உண்மையில் அவளிடம் பதில் இல்லை. அன்றே நடந்த விபரீதத்தை விக்கியிடம் சொல்லி இருக்க வேண்டும் என்றும் தோன்றியது. இனி எதையும் எதிர்பார்க்கக் கூடாது என்ற முடிவில் தன் வேலையில் மட்டும் கவனம் செலுத்தினாள். அது அத்தனை எளிதாக இல்லை.

மனதில் நினைக்கக் கூடாது என எண்ணும் விடயம் தான் மீண்டும் மீண்டும் அதையே சுற்றி வரும். விக்கியின் நினைவுகள் அவளுக்கு மேலும் மேலும் வேதனை அளித்தது.

ஆனால் ஜென்னி மற்றும் கலாவிற்கு இதனை எளிதில் ஏற்றுக் கொள்ள  முடியவில்லை.

காலையில் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்த விக்கியை கடத்தாத குறையாக பார்க்கிங் ஏரியாவிற்கு அழைத்தனர். இதை முன்னமே விக்கி எதிர்ப்பார்த்தான் ஆதலால் மறுப்பின்றி சென்றான்.

நந்தினிய மறந்துட்டயா?” ஜென்னி ஆவேசமாகத் தொடங்கினாள். “உன்கிட்ட இதை எதிர்பார்க்கலஎன கலா எசைப்பாட்டுப் பாடினாள்.

இது நந்தினிய கேட்க வேண்டிய கேள்விகாட்டமாகப்  பதில் வந்தது

சரி அவளே தப்பு செய்திட்டா தன் இரு கைகளையும் பட்டென்ற ஓசையுடன் கும்பிட்டபடிஆனா நீ ஏன் கேட்கல?”

மன்னிப்பு கேட்டா போச்சு. நந்தினி எங்க? ஏன் இத்தனை நாளா ஆபீஸ் வரல ?” எனக் கேட்டான்.

தோழிகள் திருதிருவென முழித்தனர். எச்சில் விழுங்கி .. நடந்ததை சொல்லலாமா? எனச்  சிந்திக்க

விக்கி நந்தினியுடன் எப்போதும் பேசும் நம்பருக்கு டையல் செய்தான். மறுபக்கம் அமைதி.

அது பழைய எண். புது எண்ணைச்  சொன்னால் முன்பே ஏன் சொல்லவில்லை எனக் கேட்பான். இருவரும் என்ன சொல்வது எனத் தெரியாமல் முழிக்க

என்ன என்று ஒன்றுமே தெரியாதது போலப் புருவத்தை உயர்த்தினான்.

அது போன் ரிப்பேர்எனத்  தட்டுத்தடுமாறி கலா உளற

தியாகம் அர்த்தமுள்ளதா இருக்கணும். இது தியாகம் இல்ல விக்கி மேல நம்பிக்கை இல்லஅதானே?” மனவலியுடன்  அவன் கேட்கவும்

இருவருக்கும் வியர்வை வழிந்தது. விக்கிக்கு அனைத்தும் தெரிந்துவிட்டது எனப்  புரிய சில நிமிடங்கள் ஆனது.

தியாகம் செஞ்சா மெரினால சிலை வைக்கிற அளவு என்கிட்ட பணமில்ல .. உன் பிரெண்ட்கிட்ட விக்கி அத்தனை மட்டமான சிந்தனையுள்ள ஆள் இல்லைனு சொல்லுங்க .. இன்னும் அவ என்னை நம்பவே இல்லனு இப்பதான் புரியுது” எனச்  சீற்றத்துடன் மனதிலிருப்பதை மொத்தமாக சொல்லி புயலெனச்  சென்றுவிட்டான்.

இவன் இந்த கோணத்தில்  சிந்திப்பான்  என யாரும் எதிர்பார்க்கவில்லை.

நந்தினியிடம் சொல்ல அவளும் அதிர்ந்தாள்.

பதினைந்து நாட்களுக்குப் பின்னர் தோழிகள் இருவர் கையிலும் விக்கியின் திருமண அழைப்பிதழ்.

ஒளிரும்

12 thoughts on “தீயாகிய தீபம் 16”

  1. Kalidevi

    nandhini solli irukalam vikki kitta ippadi sollama engeyo poitu anga irunthu pesitu ipo pesalana avan manasu evlo kastapadum ipo paru avan ena nambala atha apadi pannitanu solran appa amma kaga mrg panikittan ithula kasta padurathu rendu perume

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *