தீரனின் தென்றல் – 56
Thank you for reading this post, provide your thoughts and give encouragement.
கேஜி வகுப்புகளுக்கு மதியமே பள்ளி முடிந்து விடும் என்பதால் சக்தி மற்றும் அபூர்வாவை அழைக்க தீரன் வந்துவிடுவான். அல்லது அவனுக்கு முக்கியமான வேலைகள் இருந்தால் தென்றலிடமோ மதனிடமோ முன்கூட்டியே தகவல் தெரிவித்து குழந்தைகளை அழைத்துச் சென்று வீட்டில் விடச் சொல்லிடுவான்.
சிலநேரங்களில் வேலையாக இருப்பவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று ரூபிணி ஆட்டோவில் வந்து இருவரையும் அழைத்துக் கொண்டு தீரனின் வீட்டிற்கு சென்று விடுவாள்.
இன்று “வெளியே சின்ன மீட்டிங் இருக்கு அதை முடிச்சிட்டு வரும் போது அப்படியே குழந்தைங்களை பிக் பண்ணிக்கிறேன்” என்று ஆதீரன் ரூபியிடம் தகவல் சொல்லி விட அவள் குழந்தைகளை அழைக்க செல்லவில்லை.
‘வீட்டில் இருந்து யாரும் வராமல் தெரியாதவர்கள் அழைத்தால் கண்டிப்பாக யாருடனும் செல்லவே கூடாது.’ என்று சக்தி மற்றும் அபூர்வாவிற்கு தென்றல் பலமுறை அறிவுறுத்தி இருந்தாள். இவர்களை அழைக்க வருவதற்கு சற்று காலதாமதம் ஆனாலும் அபூர்வாவை பத்திரமாக உன்னோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்று சக்திக்கு அனைவருமே சொல்லி இருக்க அவளும் அதன்படி அபூர்வாவை எப்போதும் பத்திரமாக பார்த்துக் கொள்வாள்.
இன்றும் மீட்டிங்ல் இருந்து வர சற்று நேரம் ஆகிவிட சக்தியும் அபூர்வாவும் ப்ளே க்ரவுண்ட்ல் காத்திருக்க அங்கு வந்தாள் ஷ்ரதா. தென்றலின் மினியேச்சர் போல இருக்கும் அபூர்வாவை பார்க்க பார்க்க எரிச்சல் மண்டினாலும் அதை அடக்கி கொண்டு சிரித்த முகத்துடன் இந்த குழந்தைகளை நெருங்கினாள் ஷ்ரதா.
“ஹாய் செல்லக்குட்டி… எப்படி இருக்கீங்க?” வஞ்சக சிரிப்புடன் அபூர்வாவை கேட்க
“யார் நீங்க?” என்று அபூர்வாவை தன் பக்கம் இழுத்துக் கொண்டாள் சக்திஸ்ரீ.
“ஹேய்… நீ என்ன இவளுக்கு கார்ட்டா? சேஃப்டி பண்றியா?” நக்கலாக கேட்க
“இவ என் பாப்பா நான் தான் பாத்துக்கனும்..” என்று சக்தி சொல்ல
“சத்தி இந்த ஆன்டியை எனக்கு தெரியும்.. அன்னிக்கு நானு அப்பா அம்மா ஒரு பாட்டிக்கு (பார்ட்டி) போனோல இவளை பார்த்தோம்…” என்று அபூர்வா சொல்ல
“ஓ… நீங்க ஆதீ மாமா ஃப்ரண்ட் ஆ.. ஆமா ஆன்டி உங்க பாப்பாவும் இங்க படிக்கா யாரு உங்க பாப்பா?” என்று சக்தி கேட்க
“ஏய்…” என்று கண்ணை சுருக்கி முறைத்தாள் ஷ்ரதா. ‘சரி இதுங்க கிட்ட கோபப்பட்டு என்ன ஆகப்போகுது… அப்பறம் இந்த குட்டிச் சாத்தான் நம்மளை நம்பாது’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு
“நான் உங்களை தான் பார்க்க வந்தேன் ஸ்வீட்டி…” என்று அபூர்வா கன்னத்தை கிள்ளி கையை தட்டி விட்ட அபூர்வா
“என் பேரு அபூர்வா.. அப்படி கூப்பிது வேற பேரு சொன்னா எனக்கு பிதிக்காது…” என்று அபூர்வா கூற
‘அதானே அந்த திமிர் பிடிச்ச தென்றல் குணம் அப்படியே இருக்கு இவளுக்கு…’ மனதுக்குள் நொடித்துக கொண்டு
“ஓகே அபூர்வா செல்லம்… உங்களை பிக் பண்ண யாரும் வரலையா? வேணும்னா நான் உங்க வீட்ல விடட்டுமா?” என்றிட
“எங்க வீட்ல யாராவது வருவாங்க… வேற யார்கூடவும் நாங்க போகமாட்டோம்..” சக்தி பதில் சொல்ல
“சரி நான் உங்களுக்கு கொஞ்சம் ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வந்திருக்கேன் இந்தாங்க” என்று பேக்கில் இருந்து சாக்லேட் மற்றும் சாக்கோபார் ஐஸ்கிரீம் என்று எடுத்து நீட்ட
“இல்லை எங்களுக்கு வேண்டாம் அப்புக்குட்டி நீ இதெல்லாம் சாப்பிட கூடாது உனக்கு காச்சல் வரும்…” என்று சக்தி சொல்லிக் கொண்டு இருக்க அதை எல்லாம் கை நீட்டி வாங்கினாள் அபூர்வா.
“ஏய் அப்புக்குட்டி வேணாம் அவங்ககிட்ட திரும்பி கொடு இல்லாட்டி அத்தைக்கிட்ட சொல்லுவேன்” என்று அக்கறையாக மிரட்ட
“சத்தி இது எனக்கு இல்ல இந்த ஐஸூ உருகி ஜூஸ் மாதி போச்சு அதுனால இது வேணாம்” என்று அருகில் இருந்த குப்பை கூடையில் விட்டெறிந்து விட்டு “இந்த சாக்கி தெட்டுக்கு ரொம்ப பிக்கும் அதுனால நான் வைச்சுக்கிறேன்..” என்று சாக்லேட்டை மட்டும் வைத்துக் கொண்ட அபூர்வாவை பார்க்க பார்க்க கோபம் வந்தாலும் அதை வெளிக்காட்டா முடியாத படிக்கு சற்று தொலைவில் இங்கு நடப்பதை கோபத்தோடு பார்த்துக் கொண்டு இருந்தனர் ஆதீரனும் தென்றலும்.
“அப்பா…” என்று ஓடிச்சென்று ஆதீரனை கட்டிக் கொண்டாள் அபூர்வா. ஆதீரன் அவளை தூக்கி முத்தமிட
“ஏய் புவிக்குட்டி யார் என்ன கொடுத்தாலும் வாங்க கூடாதுனு சொல்லிருக்கேன்ல…” தென்றல் கண்டிக்க
“ஐயோ தெட்டு இந்த ஆன்டி பாத்தா அப்பிடியே மிச்சி ஆன்டி மாதி இருக்கா..” என்று அபூர்வா சொல்ல தென்றுலும் ஆதீரனும் அர்த்தம் புரிந்து சிரிக்க
“எது? மிக்சியா? ஏய் என்ன சொல்ற?” ஷ்ரதா கோபப்பட
“ஆமா மிச்சி ஆன்டி சின்சான் அம்மா அவங்க த்தாட்டி டூ (தர்ட்டி டூ) வயசு ஆனா குட்டிப் பொண்ணு மாதி எப்போ பாரு மேக்கப் போடுவாங்க னு சின்சான் சொல்லுவான்” என்று விளக்கமாக அபூர்வா கூற தீரன் தென்றல் வாய்விட்டு சிரித்தனர்.
“ஏய்… என்ன கொழுப்பா உனக்கு என்னைப் பார்த்தா முப்பத்திரண்டு வயசு மாதிரி தெரியுதா? என்ன ஆதீ உன் பொண்ணு என்னை இப்படி இன்சல்ட் பண்றா…” என்று ஷ்ரதா பாய
அவளின் கன்னத்தில் ஒரு அறை விட்டு அடக்கினாள் தென்றல்.
“ஏய்…” என்று அவளை அடிக்க ஷ்ரதா கை ஓங்க அவளின் கையை பிடித்து தடுத்த தென்றல்
“எங்களை பழிவாங்க என் பொண்ணு உடம்புக்கு ஒத்துகாத பொருளை கொடுத்து ஒரு குழந்தையை கஷ்டப்படுத்த சீப்பா பிளான் பண்ணிருக்க என்ன கேரக்டர் டி நீ…” என்று வெறுப்பாக கேட்க
“என்ன ஆதீ உன் கூட இருக்க ஃப்ரண்ட்ஷிப்பால உன் பொண்ணை பார்க்க வந்தா உன் வொய்ஃப்பும் குழந்தையும் என்னை இவ்வளவு இன்சல்ட் பண்றாங்க நீ பார்த்துட்டு நிக்கிற?” என்று ஆதீரனிடம் நியாயம் கேட்க
“நாம ஃப்ரண்ட்ஸ் ஆ? எப்போ இருந்து?” ஆதீரனும் கேலியாக கேட்டு கலாய்க்க
“ஏய் இங்க பாரு… என் புருஷனுக்கு உன் அப்பா மேல இருக்கிற மரியாதைக்காக தான் நான் இவ்வளவு பொறுமையா இருக்கேன்… இந்த பொறுமை எப்பவும் இருக்காது பார்த்துக்கோ…” என்று தென்றல் எச்சரிக்க
“ஆமா ஷ்ரதா உன் நல்லதுக்கு தான் சொல்றேன்… என் பொண்ணுக்கு ட்ரபுள் தர நினைச்சு இனிமே இப்படி எதுவும் பண்ணாதே ஏன்னா என் பொண்ணு தர ட்ரபுளை தாங்க உனக்கு பக்குவம் பத்தாது… என் பொண்ணு என் தென்றலோட வளர்ப்பு… அவளை பாதுகாக்க யாரும் தேவையில்லை யாரை எப்படி சமாளிக்கனும் னு என் தென்னு அவளுக்கு நல்லாவே சொல்லி கொடுத்து வளர்த்திருக்கா…” என்று கெத்தாக கூறிய ஆதீரன் மனைவி மகளோடு சக்தியையும் அழைத்துக் கொண்டு கிளம்ப
தன் திட்டம் எல்லாம் மண்ணாகி போனதை நினைத்து தரையில் காலை உதைத்துக் கொண்டு தனக்கு கால் வலியை வாங்கிக் கொண்டாள் ஷ்ரதா.
“குடும்பமா சேர்ந்து என்னை அவமானப் படுத்திட்டு போறீங்க இல்ல.. பாரு ஆதீ… இந்த ஷ்ரதா யாருனு தெரியாம என்னை நீயும் அந்த திமிர்காரி தென்றலும் பகைச்சுக்கிட்டீங்க… என் பகைய தீர்க்க நான் எந்த லெவலுக்கு வேணும்னாலும் போவேன் ஆதீ…
உன்னையும் உன் தென்றலையும் நான் கண்டிப்பா பழி வாங்குவேன்.. அப்போ தெரியும் இந்த ஷ்ரதா யாருனு…” என்று சபதம் போட்டு கொண்டவள் இன்னும் தீவிரமாக இவர்களை பிரிக்கும் யோசனையில் இறங்கினாள்.
இனி ஆதீரனை தான் அடைய வேண்டும் என்று நினைக்கவே கூடாது… குறி ஆதீரனுக்கு இருந்தால் கூட அவர்களை பழிவாங்கும் இலக்கை அடைந்தே தீர வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு வீட்டிற்கு சென்ற ஷ்ரதாவிற்கு ஒரு ஆப்பை தயாராக வைத்திருந்தார் அவளின் தந்தை தர்மலிங்கம்.
- தொடரும்…
- நன்றியுடன் DP ✍️
Super appukutty. Intresting
Interesting