தீரனின் தென்றல் – 62
Thank you for reading this post, provide your thoughts and give encouragement.
“நான் அப்பா கூட தான் இருப்பேன்… நான் வீட்டுக்கு வதமாட்டேன் போ” என்று குட்டி மூக்கை சுருக்கி கை கட்டி நின்று முறைத்துப் பார்த்த அபூர்வாவை அப்படியே அள்ளிக் கொள்ள தோன்றியது அனைவருக்கும்…
அவளின் ஆசைக்கு செவி சாய்த்து பழகிப் போன ஆதீரனுக்கும் கூட அவளை சமாளிக்க தெரியாமல் முழிக்க அதற்கும் சேர்த்து தீரனுக்கு முறைப்பை பரிசாக தந்தாள் தென்றல்.
“இங்க பாரு டி ஒழுங்கா அத்தை மாமா அம்மம்மா கூட போய் நைட்டு தூங்கி எழுந்து காலையில வா…” இழுத்துப் பிடித்த பொறுமையோடு தென்றல் கூற
“நீ மட்டும் அப்பா கூட இருக்க நானும் இருப்பேன் அப்பா சொல்லுப்பா என்னைதானே உனக்கு பிதிக்கும்” என்று தந்தையையும் தனக்கு துணைக்கு இழுக்க
“ஓ… அப்போ நீ நைட்டுக்கு இங்க உன் அப்பா கூடத்தான் இருப்ப?” என்று தென்றல் இழுவையாக கேட்க
“ஆமா.. “
“சரி அப்போ நைட்டு இங்க தங்குற எல்லாருக்கும் ரெண்டு ரெண்டு ஊசி இதோ இந்த சிஸ்டர் தான் வந்து போடுவாங்க…” என்று ட்ரிப்ஸ் மாற்ற வந்த செவிலியை கை காட்டி தென்றல் கேட்க அவரும் நிலையை புரிந்து கொண்டு
“ஆமா ஆமா… கொஞ்சம் பிடிச்சுக்கோங்க இதோ இன்ஷக்ஷன்னு எடுத்துட்டு வரேன்” என்று சொல்ல
“ஆ… அப்படியா ஊசியா?” என்று அதிர்ந்து வாயை பிளக்க
“ஆமா ஆமா… எனக்கென்ன அம்மா அண்ணா வாங்க நாம வீட்டுக்கு போகலாம் இவளுக்கு ஒன்னுக்கு மூனா ஊசி போடுங்க சிஸ்டர்” என்று சொல்ல மெய் என்று நினைத்து
“ஆ… வேணாம் ஊச்சி வேணாம் மாமா வேணா சொல்லு…” என்று குமார் காலை கட்டிக் கொண்டாள் அபூர்வா.
“அப்டி வா வழிக்கு…” தென்றல் மகளை அடக்கியதாக நினைத்து பெருமை கொள்ள
“அது சரி… உன் மக பிடிவாத்தத்துல உன்னை மாதிரி தானே இருப்பா” என்று கலாய்த்து விட்டு “சரி அண்ணே நாங்க போய்ட்டு காலையில வரோம் அதுக்குள்ள உன்னை கடிச்சு முழுங்கிற போறா கவனமா இரு…” என்று தோழியை பற்றி தமையனிடம் அறிவுறுத்தி விட்டு ரூபி வெளியே செல்ல அவளை தொடர்ந்து சிறு சிரிப்போடு மற்றவர்கள் வெளியேற ரூபியை முறைத்துக் கொண்டு இருந்த தென்றலை அருகில் அழைத்தான் ஆதீரன்.
“பாரு உன் தங்கச்சி என்னை என்ன சொல்லிட்டு போறா..” என்று அவனிடம் குறை சொல்ல
“உண்மைய தான சொல்லிட்டு போறா” என்று உளறியவன் அவளின் முறைப்பை பார்த்து அமைதியாகி
“அது… ஒன்னும் இல்ல தென்னுக்குட்டி ஆப்ரேஷன் பண்ணதுக்கு கொடுத்த மயக்க மருந்து இன்னும் தெளியலை” என்று சமாளிப்பாக சொல்ல
“நீ குணமாகி வீட்டுக்கு வா… அப்பறம் இருக்கு உனக்கு” என்று மிரட்டல் போட்டாள் தென்றல்.
இத்தனை நேரம் எல்லோரும் இருக்கும் போது இருந்த கலகலப்பு மாற சற்று நேரம் அமைதியில் கலைந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு எதுவும் பேசாமல் ஒரு மோனநிலை நிலவ தீரன் எதுவோ கேட்க வந்து மீண்டும் அமைதியுறுவது போல தென்றலுக்கு தோன்றியது.
இதுவரை இருந்த அமைதியை கலைத்த தென்றல் “என்னாச்சு தீரா… ஏன் இப்படி பார்க்குற சரி நீ தூங்கு உனக்கு படுத்துக்க ஹெல்ப் பண்ணவா?” என்று அருகில் வந்து அவன் முகம் பார்ப்பதை தவிர்த்த படி தென்றல் கேட்க
“தென்னு அப்பறமா தூங்கலாம்… உங்கிட்ட கொஞ்சம் பேசனும் தென்னு பேசலாமா?” என்று கோரிக்கையாக கேட்க
“சொல்லு தீரா” என்று அவள் கேட்டு நிற்க
“பக்கத்துல வந்து உட்காரு தென்னு” என்று அவளை அமர வைத்தான் ஆதீரன்.
“என்ன தீரா… பீடிகை எல்லாம் பலமா இருக்கு… “
“தென்னு… அது வந்து சாரி தென்னு நீ உண்மையாவே என்னை மன்னிச்சிட்டல்ல…” என்று அவன் தயங்க
“ச்ச் இப்போ ஏன் தீரா சாரி எல்லாம் கேட்டுட்டு இருக்க? எனக்கு எந்த கோபமும் இல்லை நீ தூங்கு தீரா…” என்று தென்றல் கூற
“இல்ல தென்னு உங்கிட்ட நிறைய பேசனும் எனக்கு தூக்கம் வராது” என்று தீரன் மறுக்க
“ச்சோ இனி நான் உன்னை விட்டு எங்க போகப் போறேன்.. இனிமேல் உன்னை எந்த சூழல்லயும் தப்பா நினைக்க மாட்டேன் தீரா… அந்தளவுக்கு உன்னை புரிஞ்சுக்கிட்டேன்… எதையும் யோசிக்காம தூங்கு தீரா டாக்டர் உன்னை நல்லா ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க..
என்ன பேசவேண்டி இருந்தாலும் சரி நாம பொறுமையா பேசிக்கலாம் சரியா..” என்று பேசியபடியே அமர்ந்திருந்தவனை நன்கு படுக்க உதவியபடியே தென்றல் கூற சிறு புன்னகையோடு அவனும்
“சரி நீயும் தூங்கு…” என்றவன் அருகில் அமர்ந்து லேசாக ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டு இருந்த கையை பிடித்து கொள்ள மெதுவாக கண்ணை மூடினான் தென்றலை கண்ணில் நிரப்பிக் கொண்டு
தென்றலுக்கும் தீரனிடம் பேச கேட்க என்று நிறைய இருக்கிறது தான்… ஆனால் இப்போது உடனே பேச தயக்கமும் அத்தோடு தீரனுக்கு இப்போது ஓய்வு தேவை என்றும் அமைதியாக இருந்தாள் தென்றல்.
தீரன் உறங்கும் வரை அவனையே கண் இமைக்காது பார்த்துக் கொண்டு இருந்தாள் தென்றல். தென்றலின் மன்னிப்பு மனதில் ஒரு நிம்மதி பரவச் செய்ய மருந்தின் வீரியமும் சேர்த்து உறக்கத்திற்கு கொண்டு சென்றிருந்தது ஆதீரனை
காலை தென்றல் கண் விழித்து தன் கரத்தை இறுக பற்றிக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த ஆதீரனை காதலாக பார்த்தவள் அவன் எழுந்திடாமல் கையை பிரித்து எடுத்து ஆதீரன் நெற்றியில் இருந்த கட்டோடு முத்தமிட்டு விட்டு அறை உள்ளேயே இருந்த பாத்ரூம்ல் தன்னை சுத்தம் செய்து கொள்ள செல்ல சட்டென்று கதவை திறந்து கொண்டு உள்ளே ஓடி வந்தாள் அபூர்வா.
“அப்பா…” என்று கத்திக் கொண்டே ஓடி வர திடீரென கேட்ட சத்தத்தில் பதறி கண் விழித்தான் ஆதீரன். பின்னாலேயே ஓடி வந்த குமார்
“ஏய் அப்புக்குட்டி கொஞ்சம் அமைதியா இரு டா.. மச்சான் ஒன்னும் இல்ல உன் பொண்ணு தான் ராத்திரி எல்லாம் எங்களை தூங்கவே விடலை காலையில விடியிறதுக்கு முன்னவே உன்னை பார்க்க கிளம்பிட்டா…” என்று குமார் சொல்ல மகளின் பாசத்தை சிரிப்போடு
“என்ன பூர்வி மா அப்பாவை தேடுனீங்களா?” என்றிட
“ம்ம் ஆமா ப்பா…” என்று மேலும் கீழும் தலையாட்டியபடி தந்தை அருகில் ஏறி அமரப் போக
“ஏய் அப்புக்குட்டி பார்த்து… இங்க சேர்ல உட்காரு அப்பாவை தட்டிடாதே” என்று குமார் சொல்ல
“விடு மச்சான் ஒன்னும் இல்ல பாப்பா நீ நல்லா உட்காரு..” என்று சொல்ல தென்றல் வந்தாள்.
“வாண்ணே… காலையிலேயே உன்னை இழுத்துட்டு வந்துட்டாளா? ஏன்டி எதுக்கு இப்படி சத்தமா கத்திட்டு வர.. இது ஹாஸ்பிடல் புவிக்குட்டி அமைதியா இருக்கனும்” என்று மகளிடம் சொல்ல
“மச்சான்… உன் தங்கச்சிக்கு என் பொண்ணு என்னை மட்டுமே கேட்டுட்டு வந்தாள்ல அதான் பொறாமை…” என்று கலாய்க்க அவனை முறைத்தாள் தென்றல்.
“டேய் சும்மா இரு பாத்துக்கோ என்ன என் முன்னவே என் தங்கச்சியை கலாய்க்கிறியா? அவ்வளவு தான் பார்த்துக்கோ” என்று ஆட்காட்டி விரலை நீட்டி கூறியவன்
“தென்றல் மா… சீக்கிரம் கிளம்பி வந்ததால சாப்பாடு ரெடி பண்ணி கொண்டு வர முடியல… இதுல டீ இருக்கு குடிங்க டிஃபன் ரெடி பண்ணி யாராவது கொண்டு வருவாங்க” என்று குமார் தர
“அண்ணா வீட்ல இருந்து டீ கொண்டு வரனுமா இங்கயே வாங்கிக்கலாமே” அண்ணா தென்றல் கேட்க
“ஐயோ தெட்டு டீ இங்க வாங்கினது தான்” அபூர்வா சொல்ல
“ஆமா ம்மா.. காலையில நாலு மணிக்கே அப்பாவை பார்க்கனும் னு அனத்த ஆரம்பிச்சிட்டா… டீ போட கூட நேரம் தரலை ஒருவழியா இங்க வந்து வாங்கிட்டு வரேன்.” என்று அபூர்வா படுத்திய பாட்டை சோகமாக குமார் சொல்ல அதனை பார்த்து சிரிப்பு தான் வந்தது ஆதீரன் மற்றும் தென்றலுக்கு…
“டேய் மாமா வா இருந்துட்டு இதைக் கூட பண்ணாட்டி எப்படி? நல்லா என்ஜாய் பண்ணு டா மச்சான்” என்று ஆதீரன் சிரிப்பினூடே சொல்ல
“ஏன் சிரிக்க மாட்ட… ஒரு வளர்ந்த குழந்தை உன் தங்கச்சிய கட்டி வச்சு இன்னைக்கு வரைக்கும் அவளுக்கு நான் சேவை பண்ணிட்டு இருக்கேன்… இப்போ உன் பொண்ணு படுத்துற பாட்டுக்கு நான் என்ஜாய் பண்ணனுமா?” என்று கேலியாக நண்பர்கள் அரட்டையை தொடங்க தென்றல் மூவருக்கும் கப்பில் டீ ஊற்றி ஆதீரன் எழுந்து அமர உதவி செய்ய
“தெட்டு… உனக்கு எத்தனை ஊசி போட்டாங்க? வலிச்சுதா?” என்று இரவு தனக்கு கூறியதை தாயிடம் கேட்க முழித்து வைத்தாள் தென்றல்.
“அது… போட்டாங்களே… ஆனா நான் சமத்தா இருந்தால ஒரு ஊசி மட்டும் போட்டாங்க…” என்று சமாளிப்பாக சொல்ல
“ஆ… அப்போ உனக்கு வலிச்சுதா தெட்டு” அக்கறையாக கேட்க
“இல்ல புவிக்குட்டி நான் பெரிய பொண்ணுல அதனால பெருசா வலிக்கல..” என்று சொல்லியபடியே “ஆமா அண்ணா பாப்பாக்கு பால் வாங்கலையா?” என்று குமாரிடம் கேள்வி தொடுக்க
“அவளுக்கு அப்போவே கேண்டீன் ல வாங்கி கொடுத்துட்டேன் தென்றல் மேடம் பால் குடிக்கிற கேப் ல தான் நமக்கு டீ வாங்கிட்டு வந்தேன்.” என்று குமார் சொல்ல சரி என்றாள்.
பின்னர் ரகசிய குரலில் ஆதீரனிடம் நெருங்கி “என்ன மச்சான் சமாதானம் எல்லாம் ஆகியாச்சா?” என்று குமார் கேட்க
“என் மேல கோபமே இல்லை னு சொல்றா டா.. நேத்து நான் மீட்டிங் கிளம்பும் போது இருந்தே இவ சரியா இல்ல எனக்கும் நைட்டு மருந்துனால தூக்கம் வந்துடுச்சு அதனால எதுவும் பேசிக்கல” என்று ஆதீரனும் குரல் தாழ்ந்து சொல்ல
“அவ உன் கூட சமாதானம் ஆக வேற ப்ளான் போட்டு வைச்சிருந்திருக்கா… நீ தான் இப்படி அடிபட்டு ஹாஸ்பிடல் ல படுத்திட்ட” என்று குமார் சொல்ல
“என்னடா ப்ளான்?” என்று அதிர்ந்து போய் கேட்டான் ஆதீரன்.
- தொடரும்…
- நன்றியுடன் DP ✍️
Super intresting
👌👌👌👌👌👌
Nice interesting