தீரா காதலே – 18
மாலை மயங்கும் மந்தகாசவேளை நெருங்கும் நேரம் வெஞ்சுடரி தன் காதலன் நிலவனை காண போகும் மகிழ்ச்சியில் செந்நிற சிவப்பாய் வெட்கத்துடன் தன்னை மெல்ல மெல்ல மறைத்து கொண்டிருந்தாள்.
முழுவதுமாய் மறைந்து சப்தமில்லா இரவு இருளின் ஆளுமைக்குள் மெல்ல மெல்ல மூழ்கி நட்சத்திர ஆட்டக்காரர்களோடு இரவை வரவேற்க தயாரானது.
நிலவனோ சுடரியின் இன்மையால் பாதியாக இளைத்து தவித்து கொண்டிருந்த தருணம் தீராவோ ஆதினியின் வருகைக்காக காத்திருந்தான். விசாரணை முடிந்து காவலர்கள் கிளம்பியதும் ஆதினி மெர்ஸிக்கு உணவு எடுத்து வைத்து ஆறுதல் சொல்லி தன் வீட்டிற்கு வந்தாள்.
“ஆதினி எனக்காக இவ்வளவு தூரம் நீ ரிஸ்க் எடுத்து என்னை மீட்க போலிஸ்கிட்டலாம் போவனு நான் நினைக்கலடி. நீ என் தேவதை. என் வாழ்வுக்கு வந்த பூந்தென்றல். நீதான் எனக்கு எல்லாமே” என்றவாறு அவளது கன்னங்களை பற்றிட வர கைகளை தட்டி விட்டவள்
“இத்தனை நாளா இந்த தேவதை கண்ணுக்கு தெரிலயோ? எதே பூந்தென்றலா? ம்ஹூம் வாடிப்போன பூவா பசியும் பட்டினியுமா கிடந்தப்போ இந்த பூந்தென்றல் ஞாபகத்துக்கு வரலயோ? “
“ஆது.. என்னாச்சு? நீதானே என்ன தேடி ஓடி வந்த… சத்தியம்லாம் வாங்குன இப்ப இப்படி பேசுர?”
“ஹான்.. என்ன சொல்ல வரீங்க? நான் தேடி வந்தது தப்பா.. இல்லை சத்தியம் வாங்குனது தப்பா? நீங்களாஆஆஆ தேடி வருவீங்க.. காதலிப்பீங்க.. கல்யாணமும் பண்வீங்க.. குழந்தையை கொடுத்துவிட்டு நீங்கபாட்டுக்கு இருப்பீங்க. நான் எதுவுமே கேட்க கூடாது ரைட்?”
“நான் அப்படி சொல்ல வர..”
“வேறெப்படி சொல்ல வரீங்க”
ஆங்காரமாக கத்தினாள். இத்தனை நாட்கள் உள்ளிருந்த அழுத்தமெல்லாம் மொத்தமாக வெடித்து சிதறியது.
அருகில் வந்தவன் அவள் தோள் மேல் கை வைக்க போக
” டோண்ட் டச்… டோண்ட்.. இத்தனை நாளா இல்லாத கரிசனை இப்ப மட்டும் வந்துடுச்சோ? ம்ம்ம் கன்சீவ் ஆன நாளுல இருந்து ஒரு தடவை என் பக்கத்தில் வந்திருப்பீங்களா? ….ஒரு தடவை என்னை பாக்க மாட்டீங்களானு எத்தனை நாட்கள் ஏங்கியிருப்பேன் தெரியுமா? ஒரு வார்த்தை என்கிட்ட பேச மாட்டீங்களா ஆறுதலா அணைக்க மாட்டீங்களா வெளியே கூப்பிட்டு போகமாட்டீங்களானு ஏங்கியிருக்கேன்… நான் இருக்கேனா இல்லையானு கூட பாக்காம வருவதும் போவதுமா தானே இருந்தீங்க…சாப்பிட்டியானு கேட்ருபீங்களா?..இப்ப மட்டும் என்ன?”
“என்னடி பேசுற? நான் இருந்த மைண்ட்செட்ல எதுவுமே தோணலை…. வாழ்வா சாவானு ஒவ்வொரு நாளும் நான் தவிச்சது எனக்கு தான் தெரியும்”
“ஆனால் என்னோட தவிப்பு உங்களுக்கு தெரிலயே”
“சரி மன்னிச்சிடுடி “
“முடியாது. நாம பிரிஞ்சிடலாம்”
“வாட்? என்ன பேசுறனு புரிஞ்சிதான் பேசுறியா?” அதிர்ந்தவன் செய்வதறியாது நிற்க
“எஸ். எந்த ஒரு உறவுக்கும் தேவை நம்பிக்கையும் உண்மையும் தான். அதுவே நம்ம லைப்ல இல்லைங்கிறபட்சத்தில் சேந்து இருந்தா என்ன பிரிஞ்சி இருந்தா என்ன?”
“ஹேய் ஏன்டி இப்படி பேசுற?”
“வேறெப்படிங்க பேச? சரி உங்களைப்போல் நான் நடந்து இருந்தா என்னை அக்செப்ட் பண்வீங்களா?”
“நீ என் ஒய்ப்டி. உன்னை விட்டு கொடுப்பேனா?”
“அந்த நினைப்பெல்லாம் இருக்கா? அதனால் தான் குழந்தையோடு சேர்த்து பட்டினி போட்டீங்களோ?”
“ஆதினி பிளிஸ் ஸ்டாப். நான் செய்தது தப்பு தான் அதுக்காக அதையே சொல்லிட்டு இருக்காத?”
“ஏன் வலிக்குதோ? அனுபவித்த எங்களுக்கு எப்படியிருக்கும்? என்னை விடுங்க நம்ம குழந்தையை நினைச்சி பாத்தீங்களா? ஒரு குழந்தையை நம்மளாள பாத்துக்க முடியும்னா மட்டும் தான் பெத்துக்கனும்”
“இல்லைதான்… பண்ணலைதான்… தப்புதான்… சாரிஈஈஈ” என்று கத்தினான்
“ஓ சாரி கேட்டா எல்லாம் சரியாகிடுமோ. என்னை வேலைக்கு ஏன் போக கூடாது சொன்னீங்க? உங்கள் குட்டு எல்லாம் வெளியே தெரிந்து விடும் தானே? வேலைக்கு போய் இருந்தால் இந்தளவுக்கு நானுமே கஷ்டப்பட்டிருக்க மாட்டேன் முன்னாடியே எல்லாம் தெரிஞ்சியிருக்கும். அப்பவே போலிஸ் கிட்ட போயிருக்கலாம்”
“அப்படி எல்லாம் இல்லை. நீ வீட்டில் இருந்து ரெஸ்ட் எடுக்கனும்னு தா…”
“பொய். என் கண்ணை பார்த்து பேசுங்க”
“சரி இப்ப நான் என்ன தான் செய்யனும்?”
“வழியை விடுங்க நான் கிளம்புறேன்னு சொல்றேன்”
‘என்னை புரிந்து கொள்ளேன்’ என்று விழிகளில் வலியை தாங்கி அவன் பார்க்க பிடிவாதத்துடன் தன் உடைமைகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள்.
“செல்லம் பிளிஸ்டி நான் சொ..”
“செல்லம்னு கூப்பிடாதீங்க”
“சரிடி நான் சொல்றத..”
“நான் எதுவும் கேட்க மாட்டேன். எனக்கு கொஞ்சம் ஸ்பேஸ் கொடுங்க கொஞ்ச நாள் தனியா இருக்கனும்”
“சரி நானே கொண்டு வந்து விடுரேன். நோ மட்டும் சொல்லாத”
தனக்கு கொஞ்சம் தனிமையும் நிதானமும் தாய்மடியும் தேவை என்று ஆதினி நினைத்தாள். தனியே போக வேண்டாம் என்று தீராவே ஈருருளியில் அமர சொல்ல தள்ளி அமர்ந்து கொண்டாள்.
“அப்படியே பின்னாடி சரிஞ்சி விழுந்துடாதடி நான் ஒன்னும் கடிச்சு முழுங்கிடமாட்டேன் இது ரோடு” என்றான் தீரா.
அவனுக்கு பழிப்பு காட்டியவள் சரியாக அமர்ந்து கொண்டாள். வீடு வந்ததும் உள்ளே வா என்று அவளும் அழைக்கவில்லை அவனும் வரவில்லை.
வீட்டில் ஆதினியின் தந்தை சமையலறையிலிருந்து கஞ்சி மருந்து சகிதம் எடுத்து கொண்டு அறைக்கு செல்வதை பார்த்த ஆதினி
“என்னாச்சு டாடி?” என்று வினவினாள். திரும்பி பார்த்தவர் வாயிலில் நின்ற மகளை கண்டதும் விழிகள் மகிழ்ச்சியில் பனித்தது.
“வாடா தங்கம்… எப்படி இருக்க? இந்த டாடிய பாக்க இப்பதான் உனக்கு தோணிச்சா…?” கரகரப்பாக பேசினார்.
“டாடி அப்படிலாம் இல்லை”
“சரிசரி உள்ள வாடா அம்மாவ போய் பாரு. மாப்பிள்ளை வரலயா?”
“வேலை இருக்குனு கிளம்பிட்டாரு டாடி”
அறையில் சுஜாதா படுத்திருந்தார். உடல் இளைத்து முகம் கருத்து பொலிவிழந்து காணப்பட்டார்.
“அம்மா என்னாச்சும்மா?” என்று பதறியபடி உள்நுழைந்தாள்.
ஆதினியை கண்டதும் எழுந்தமர முயற்சி செய்தார்.
“உன்னை பார்க்காமலே போய்டுவேனோனு நினைச்சேன்”
“என்ன வார்த்தைம்மா பேசுரீங்க? டாடி ஏன் ஏன்கிட்ட சொல்லல அம்மாக்கு என்னாச்சு?”
“நீதான் எங்களை மறந்துட்டேயேமா. மேரஜ் ஆனபிறகு ஒரு தடவை கூட எங்களுக்கு போன் பண்ணி பேசவோ நேர்ல வந்து பாக்கவோ உனக்கு தோணவே இல்லையே”
“டாடி அது..வந்து…”
“பராவல்லமா நீ சந்தோஷமா இருந்தா அது போதும் எங்களுக்கு. உன் அம்மா தான் ரொம்ப துடிச்சிட்டா. அட்லாஸ்ட் இப்பவாது உனக்கு பெத்தவங்கள பாக்கனும்னு தோணுச்சே”
“என்னை மன்னிச்சிடுங்க டாடி” என்று வருந்தினாள்.
மணமான புதிதில் ஓரிரு முறை அழைத்து பேசினாள்தான் அதன் பின் தீராவின் விலகல் அவளை வேறெங்கும் சிந்திக்க விடாமல் செய்துவிட்டதே.
“டாடி அப்புறம் எனக்கு ஒரு ஹெல்ப். எங்க வீட்டுக்கு கீழே மெர்ஸினு ஒரு பொண்ணு தங்கமான பொண்ணு. அவளுக்கு யாரும் கிடையாது அவ ஹஸ்பெண்ட் இப்பதான் ரீசண்டா சூசைட் பண்ணிட்டாரு. நான் இருந்தவரைக்கும் அவளை பாத்துகிட்டேன். இப்ப அவளுக்கு குக் பண்ணி கொடுக்க அவளை கவனிக்க நல்ல பொண்ணா இருந்தா தங்கி பாக்ர மாதிரி ஏற்பாடு பண்ண முடியுமா டாடி நான் போறவரைக்கும்”
“அதுக்கு ஏன்டா ஹெல்ப்னுலாம் கேக்ர? விசாரித்து அனுப்புறேன். நீ… இங்கேயே இருக்கலாமே தங்கம்.. மாப்பிள்ளையும் கூட இருக்கட்டும்”
கலகலவென சிரித்தவள் அவரின் கன்னங்களை கிள்ளி “டாடி இனிமே அடிக்கடி இங்கு வரேன் சரியா”
“சரிடா”
பின் சுஜாதாவை அழைத்து கொண்டு மருத்துவமனை சென்றார்கள். பரிசோதித்த மருத்துவர்
“மெடிசின் கண்டினியூ பண்ணுங்க சீக்கிரமே ரெகவர் ஆகிடுவீங்க” என்று சொன்னார்.
‘அதெல்லாம் தேவையில்லை என் பொண்ணு வந்துட்டா இனி எல்லாம் சரியாகிவிடும்’ என்று மனதிற்குள் நினைத்தார் சுஜாதா.
அப்படியே ஆதினிக்கும் பரிசோதனை செய்து முடித்த மருத்துவர்
“ஒழுங்கா சாப்பிடறது இல்லையாமா? ஹெச்பி லெவல் லோவா இருக்கு. பிரஷரும் லோவா இருக்கு. டெலிவரி டேட் வேறு நெருங்குதே” என்று சொன்னார்.
“சாப்பிடவே பிடிக்கிறது இல்லை டாக்டர்” என்று சொல்லி சமாளித்தாள்.
“அவளுக்கு சத்தான ஆகாரம் என்னனு தெரியுமா சும்மா எதையாவது சமைச்சு சாப்பிட்டுருப்பா இனி நாங்க பாத்துகிறோம்” என்று சுஜாதா வாஞ்சையுடன் ஆதினியின் தலையை தடவினார்.
அவளுக்குமான மருந்துகளை வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தவர்கள் அவளுக்கு பிடித்தமானதை பட்டியலிட்டு கொண்டிருந்தனர்.
பதினைந்து நாட்கள் கடந்தும் இன்னும் ஆதினி தீராவின் அலைபேசி அழைப்புகளையோ குறுஞ்செய்திகளையோ ஏற்கவும் இல்லை பார்க்கவும் இல்லை. அவள் இத்தனை நாட்கள் பிரிந்த தருணங்களையெல்லாம் தன் தாய் தந்தையுடன் பேசிப்பேசியே பொழுதை போக்கினாள்.
மறுநாள் காலையே வீட்டிற்கு வெளியே நின்றிருந்தான் தீரா. ஆதினியின் தந்தை செய்தித்தாள் எடுக்க வெளியே வர அவனை கண்டதும் வரவேற்க
“நா…ன் ஆதினியை பார்க்கனும் மா..மா.. போன் பண்ணா எடுக்கவே இல்லை”
“உள்ளே தான் இருக்கா போய் பாருங்க. உங்களுக்கு காபி எடுத்துட்டு வரேன்”
“சரிங்க மாமா” என்று சொல்லி ஆதினியின் அறைக்கு நுழைந்தவன் கண்ட காட்சி வலியுடன் ஆதினி தவிக்கும் காட்சி. உடனே மகிழுந்தில் அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்கள். அவளின் உடல் நிலைக்கு அறுவைசிகிச்சை தான் செய்ய முடியும் என்று சொல்லிட கையெழுத்திட்டான் தீரா.
அறுவைசிகிச்சை நடந்து கொண்டிருக்க தீரா பதற்றமும் பயமும் கலந்து தவிப்புடன் நின்றிருந்தான்.
அறுவைசிகிச்சை முடிந்து அழகான ஆண்குழந்தை தீராவின் கைகளில் கொடுக்கப்பட்டது செவிலியரால். ஆனால் அவனோ குழந்தையை சுஜாதாவிடம் கொடுத்தவன் ஆதினி நலமுடன் வெளியே வரும் தருணத்திற்காக காத்திருந்தான்.
தன்னால் தான் அவளுக்கு அறுவைசிகிச்சை செய்யும் நிலை வந்ததோ என்று மனம் அவனை நிந்தித்தது. அவளும் நலமுடன் வரவே அவனுக்கு நிம்மதி உணர்வு. சிறிது நேரம் கழித்து அவளை சென்று பார்க்க அனுமதி தரப்பட மருந்தின் வீரியத்தால் அரைமயக்கத்திலிருந்தவள் அவனை கண்டதும் புன்னகைக்க முயற்சி செய்தாள். அவளின் கைகளை பிடித்து அழுத்தம் கொடுக்க அதன் உஷ்ணத்தை உள்வாங்கி கண்ணயர்ந்தாள். சுஜாதாவும் ராஜனும் குழந்தையை கொஞ்சிகொண்டு இருந்தார்கள்.
ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்துவிட்டு வீடு திரும்பினார்கள். ஆதினிக்கு தேவையான அனைத்தும் தீராவே அருகில் இருந்து கவனித்து கொண்டான்.
“குழந்தை அழகா இருக்கான்” தீரா
“ம்ம்ம்”
“எது பேசினாலும் ம்ம்ம் மட்டும் சொல்ற பேசவே கூடாதுனு முடிவே பண்ணிட்டியா?”
“…..”
அலுவலகத்தில் அழைப்பு வரவே அவனும் கிளம்பியாக வேண்டும்.
“எப்ப வீட்டுக்கு வர ஆதினி?”
“நான் ஏன் வரனும்? அதான் சொன்னேனே பிரிஞ்சிடலாம்னு?”
“பைத்தியம் மாதிரி பேசாதடி. இன்னும் என்ன அதான் எல்லாம் கடந்து வந்துட்டோமே. நீ இல்லாமல் எனக்கு லைப் இல்லை”
“ஓ அப்படியா?”
“ஆது ப்ளிஸ்டி நான் பண்ணது தப்புதான். என் கூட இருந்து என்னை திருத்தலாம்லடி”
“எனக்கு வேறு வேலையே இல்லையா? உங்களை திருத்ததான் நான் கல்யாணம் பண்ணேணா?”
“ஏண்டி இப்படி பேசுர. நம்ம குழந்தை தப்பு செஞ்சா எனக்கு என்னனு இருப்பியா? இல்லை வேண்டாம்னு ஒதுக்கி வச்சிடுவியா? சொல்லி கொடுத்து திருத்தமாட்ட? நானும் உனக்கு குழந்தை மாதிரி தான்… என்ன கொஞ்சம் பெரிய குழந்தை… பெரிசா தப்பு பண்ணிட்டேன்… பெருசாவே தண்டனை கொடு ஏத்துகிறேன் ஆனால் தள்ளி போகாதடி”
“……..”
“என்னடி”
“எனக்கு கொஞ்சம் டைம் வேணும். அதோட இப்ப உடனே வர முடியாது. இன்னும் ஒரு மாசம் கழித்து தான் வர முடியும்”
“நீ வரேன்னு சொன்னதே போதும் எனக்கு”
அதற்கு மேல் குழந்தை தானும் இருக்கிறேன் என்று சிணுங்க கிளம்பினான் தீரா.
இரண்டு மாதங்களாக வேலை முடிந்து நேரே ஆதினியின் வீட்டிற்கு வந்து குழந்தையை கொஞ்சிவிட்டு அவளின் கோவத்தை போக்க முயற்சியும் செய்து விட்டு தான் வருவான் தீரா.
நேரடியாக மாமனாரிடமே கேட்க நல்ல நாள் பார்த்து கொண்டு விடுவதாக ராஜனும் சுஜாதாவும் சொன்னார்கள்.
ஒரு திருமண விழாவிற்கு ரிஜன் சுஜாதா இருவரும் செல்ல தனியே இருப்பதற்கு மெர்ஸியை பார்த்து விட்டு தீராவையும் பார்க்கலாம் என்று ஆதினி குழந்தையுடன் கிளம்பினாள்.
“ஹேய் குட்டி பையா நீங்க இனியனா? வாங்க வாங்க” என்று மெர்ஸி ஆதினியையும் குட்டியையும் வரவேற்றாள்.
“வரவேற்பு எல்லாம் அவனுக்கு மட்டும் தானா”
“நம்ம வீட்டுக்கு புதுசா வரவங்களை தான் வரவேற்கனும். செல்வியக்கா காபி தரீங்களா?”
***
சிறிது நேரம் பேசியவள் விடைபெற்று மேலே ஏறி வந்து வாயிலில் நிற்க தீரா வரவேற்பறை சோபாவில் அமர்ந்து தண்ணீர் குடித்து கொண்டு தொலைக்காட்சியில் பாடலை ஒலிக்க விட்டு கேட்டு கொண்டிருந்தான். சரியாக இவள் வரவும் அந்த பாடல் ஒலித்தது.
🎶ஹேய்.. சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல
ஹே.. பத்து நாளா சரக்கடிச்சும் போதையே இல்ல..
உலகம் புரிஞ்சு டவுசர் கிழிஞ்சு..
இனி பிச்சிக்கிற என் கிட்டதான் ஒன்னும் இல்ல..🎶
வாயிலில் நிழலாடவும் திரும்பி பார்த்தவன் குடித்த தண்ணீர் புரையேற கொப்பளித்துவிட்டு ரிமோட்டை எடுத்து அணைத்தான். ஆதினி கீழே இறங்க எத்தனிக்க ஓடிப்போய் குழந்தையை வாங்கி கொண்டு வீட்டிற்கு வருமாறு அழைத்தான். இருவரும் சோபாவில் அமர
“சொல்லியிருந்தா நானே வந்திருப்பேனேடி”
“நான் உங்களை பார்க்க வரவில்லையே. மெர்ஸியை பார்க்க வந்தேன்”
முகம் சுருங்க “குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்”என்று எழ
“வேண்டாம் இப்பதான் காபி குடிச்சேன்”
சிறிது நேரம் இருவருமே அமைதியாக இருக்க அதனை தீராவே கலைத்தான்.
“ஆது பிளிஸ் இன்னும் என்ன தான் உனக்கு பிரச்சினை எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக சொல்லிவிடு”
“சொல்லி மட்டும் என்ன ஆக போகிறது? எல்லா ஆசைகளும் கனவாகவே போயிருச்சே.”
“நான் செய்தது தவறு தான் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுடி உன் விருப்பபடி இனி உன்னை நல்லா பார்த்துக்கிறேன்டி. உன் விருப்பம் இல்லாமல் உன் பக்கத்தில் கூட வரமாட்டேன் போதுமா?”
“சரி நான் கிளம்புறேன். சீக்கிரம் வரேன்”
இரவு நேரத்தில் குழந்தை இனியன் அழுது கொண்டிருந்தான். இரண்டரை மாதங்கள் கடக்கவே ஆதினியை பெற்றோர் மனதில்லாமல் தீராவின் வீட்டில் இரண்டு நாட்கள் முன்பு தான் விட்டு சென்றிருந்தனர்.
புது இடத்தை பழகும் வரை குழந்தை உறங்க அழதானே செய்யும். இரவெல்லாம் இருவரும் மாறி மாறி குழந்தையை தோளில் சாய்த்து உறங்க வைத்தனர்.
காலையில் விழிக்கும் போதே தலை வலித்தது. பாடல்களை ஒலிக்க விட்டபடி வேலையை தொடர்ந்தாள்.
🎶கனவிலே தெரிந்தாய்
விழித்ததும் ஒளிந்தாய்
கனவினில் தினம் தினம்
மழைத்துளியாய்ப் பொழிந்தாய்
தள்ளிப் போகாதே
கண்களில் ஏக்கம்
காதலின் மயக்கம்
ஆனால் பார்த்த நிமிடம்
ஒரு விதமானத் தயக்கம்
நொடி நொடியாய்
நேரம் குறைய
என் காதல்
ஆயுள் கறைய
ஏனோ ஏனோ
மார்பில் வேகம் கூட
விதியின் சதி விளையாடுதே
எனை விட்டுப் பிரியாதன்பே
எனை விட்டுப் பிரியாதன்பே🎶
ஒலித்த பாடலை அதனோடு பாடிக்கொண்டே அருகில் வந்தான் தீரா. முறைத்தவள் ரிமோட்டை எடுத்து வேறு இசைச்சேனலை மாற்றினாள்.
🎶அச்சோ அச்சோ
என்னை உன்னிடம் தந்தேனே
வழியினில் தொலைத்தாயே
அன்பே அன்பே
என்னிடம் நானே இல்லாமல்
என் சொல்வேனோ சொல்..🎶
என்ற பாடல் இசைக்க தீரா தனது அலைபேசியில் பாடலை ஒலிக்க விட்டான். மாறி மாறி விளையாடியவர்களின் கவனத்தை என்னுடன் விளையாடுங்கள் என்று இனியனின் அழுகுரல் அழைத்தது.
இப்படியே ஊடல்களும் தொடர்ந்தன.
சில நாட்களுக்கு பின்
காலை உணவை தயார் செய்தபடி தொலைக்காட்சியில் பாடல்களை ஒலிக்க விட்டு பார்த்து கொண்டிருந்தாள் ஆதினி. சாம்பாரின் வாசனை வீடெங்கும் பரவியது. மறுபக்கம் இட்லி வெந்துகொண்டிருந்தது.
தொலைக்காட்சியில் பூமக்ஸ் பனியன் விளம்பரம் ஓடிக்கொண்டிருக்க அறையிலிருந்து வந்த தீரா திடீரென சோபாவை தாண்டி குதிக்க முயற்சி செய்து சோபாவிலேயே விழுந்தான்.
சமையலறை வாயிலில் நின்று அதனை பார்த்து கொண்டிருந்தவள்
“காலையிலேயே கோமாளி ஆட்டம் தொடங்கிருச்சா?” என்று கேட்டாள்.
“ஹேய் என்னடி புருஷன கோமாளினு சொல்ற?”
“பண்ற வேலை அப்படியிருந்தா என்ன சொல்ல?”
“டீவில என்ன அட்வெடைஸ்மெண்ட் போட்டான் பாத்தியா? பூமக்ஸ் பனியன போட்டு எங்கல்லாம் எகிறி குதிச்சு லவ்வருக்கு ரோஸ் வந்து கொடுக்கிறான். நானும் பூமக்ஸ் பனியன் தான் போட்டுருக்கேன் என் பொண்டாட்டி கிட்ட நானும் ஹீரோயிஸம் காட்டி எகிறி குதிச்சு கிஸ் பண்ணலாம்னு பார்த்தால் முடிலயே. இந்த அட்வெடைஸ்மெண்ட் எல்லாம் பேக்”
என்று அவன்பாட்டுக்கு பேசிக்கொண்டிருக்க இடுப்பில் கையை வைத்து கொண்டு முறைத்து கொண்டு நின்றாள் ஆதினி.
“ஹீரோயிசம் பண்றதுக்கு இதென்ன சினிவேல்டா ரியல் லைஃப்”
“ஓகே ஓகே சும்மா உன்னை சிரிக்க வைக்கலாம்னு தான். சரி பசிக்குது இட்லி வெந்துருச்சா இல்லையா?”
“இல்லை இன்னும் ஒரு பத்து நிமிடம் ஆகும்”
“ரொம்ப பசிக்குதே” என்று சொல்லி அவளருகில் வந்து கன்னத்தில் இதழ் பதித்தான். எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும் முத்தம் தித்திக்கதானே செய்யும். ஆதினி சிறு அதிர்வும் வெட்கப்புன்னகையுடன் சமையலறைக்கு சென்று சாம்பாரை இறக்கி வைத்தாள்.
“இப்பவாது கோவம் போயிருச்சாடி ஸ்வீட் கேண்டி” என்று தீரா வினவ இல்லை என்பதாக சிரித்து கொண்டே தலையசைத்தாள்.
“உன்னை தக்க வைத்து கொள்ள அதிகம் செலவு செய்ய வேண்டாம் நொடிகளுக்கு முத்தம் அள்ளி தந்தால் போதும் “
“ம்ம்ம் அப்படியா?
உன் முத்தங்களை பதுக்கி கொள்ளவே
என் கன்னக்குழிகள் காத்துகிடக்கின்றன”
“கிஸ் இஸ் மை சீக்ரேட் ஆஃப் எனர்ஜி”
இருவரும் நெருங்கி வர குழந்தை இனியன் அழும் சத்தம் கேட்டது. தீரா அறைக்குள் சென்று குழந்தையை தூக்கி கொண்டு வெளியே வந்தான்.
“ஒரு கிஸ் கொடுத்தா சமாதானம் ஆவனு சொல்லியிருந்தா நான் முதல்லயே கொடுத்துருப்பேனேடி இத்தனை நாள் வேஸ்டா கோபால்” என்று ராகம் இழுக்க ஆதினி கரண்டியை கையில் பிடித்து
“என்ன சொன்னீங்க?”என்று கேட்டாள்.
“ஐயோ ஏற்கனவே நிறைய அடி வாங்கின பாடி இதுக்கு மேல தாங்காது” என்று இனியனுடன் அறைக்குள் நுழைந்தான்.
அந்நேரத்தில் அழைப்பு மணி ஒலித்தது. வந்தது குரு.
“ஏங்க யார் வந்துருக்கானு பாருங்க பணத்தை வாங்கிட்டு ஓடிப்போன டிஜிட்டல் ராபர் குரு வந்திருக்காருங்க”
என்று தீராவை அழைத்தாள். வெளியே வந்தவன் குழந்தையை அவளிடம் கொடுத்துவிட்டு
“வா மச்சான்.. அம்மா நல்லாயிருகாங்களா.. நீ எப்படி இருக்க?”
“அடுத்தவன் பணத்துல ஓஹோனுதான் இருக்காரு. வந்த விஷயம் என்னனு கேளுங்க”
“ஆது…
நீ எதுவும் நினைச்சிக்காத மச்சான் வாடா உக்காரு “
“இல்லடா இந்த பணத்தை கொடுக்கலாம்னு தான் வந்தேன்”என்று தயங்கியபடி இரண்டு லட்சங்கள் அடங்கிய பையை தீராவிடம் கொடுக்க
“அதுக்குள்ள ஏன்டா கொடுக்கிற. தங்கச்சி டெலிவரி செலவெல்லாம் இருக்குமே”
“நீங்க வேணா கூடவே இருந்து பாத்துட்டு வரீங்களா?”ஆதினி
“நான் கிளம்புறேன் மச்சான்”
“ஹப்பாடா போயிட்டு வரேனு சொல்லல”ஆதினி
அவமானத்தில் குரு முகம் கருத்து வெளியேறினான். அன்பினியிடம் குருவை பற்றியும் சொல்லியிருக்க நேரில் சென்று சீக்கிரமே பணத்தை திருப்பி கொடுக்கும்படி எச்சரிக்கை விடுத்து வந்தார்கள்.
இழந்தது போக சில லட்சங்கள் வெளியே வாங்கியிருந்த கடனை அடைக்க மலர் கொடுத்திருந்த பணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி கொடுத்து கொண்டிருந்தார்கள்.
“ஆது வீட்டுக்கு வந்தவங்க முன்னாடி இப்படி தான் பிகேவ் பண்வியா?”
“வா மச்சான்னு அப்படியே உருகுறீங்க அவனால் தான் இன்னைக்கு இவ்வளவு கஷ்டம் மறந்துடீங்களா?”
“அடியேய் ரொம்ப கஷ்டப்பட்டு மலையிறக்கியிருக்கேன் மறுக்கா ஏறிடதா. தெரியாம பண்ணிட்டேன் விடேன்”
“சரி எப்போதும் பிரியமா இருங்க அது போதும் எனக்கு”
தீரா குளியலறை உள்நுழைய ஆதினி வெளியேயிருக்கும் அதன் லைட் ஸ்விட்ச்சை ஆஃப் செய்தவள் தொலைக்காட்சியில் பாடல் ஒலிக்க விட்டாள். வெளியே வந்தவன் ஆன் செய்து உள்நுழைய மீண்டும் ஆஃப் செய்தாள்.
குளித்து வந்த சிறிது நேரத்தில் ஆதினி குளியலறை செல்ல இம்முறை தீரா லைட் ஆஃப் செய்தான். கோவத்துடன் வெளியே வந்தவள் அவனை காணாது திரும்ப உள்நுழைய திரும்ப அங்கு விஷம புன்னகையுடன் நின்றிருந்தான்.
“தண்ணீரை சிக்கனம் பண்ற நேரம் வந்துருச்சு”
என்று குரலில் குழைவுடன் சொல்ல வெட்கத்துடன் பின் நகர்ந்தாள் ஆதினி அவளை இழுத்து குளியலறை கதவை மூடினான்.
🎶இந்தத் தீராத ஆறாத பேராசைக்கு
இன்று நான் என்னப் பேர் வைப்பது
நெருப்பு இல்லாமல் புகை இல்லாமல்
ஒரு தீ என்னை சூழ்கின்றது
தத்திதான் தாவுது தாவுது தாவுது
தத்திதான் தாவுது தாவுது மனசு
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது ஏங்குது
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது வயசு🎶
தொலைக்காட்சியில் பாடல் மெலிதாக ஒலித்தது.
இனியனுக்கு ஒரு வயதாக மூவரும் புகைப்பட ஸ்டூடியோவில் குடும்ப புகைப்படம் எடுத்து கொண்டனர்.
பேரன்பில் உணர்வதிலும்
பேரன்போடு உணர்த்தப்படுவதிலும்
தான் வாழ்கிறது
தீரா காதல்..
ஆம்..
காதலும் ஒரு பேரன்பு பேராற்றல்… புரோட்டானும் நியூட்ரானும்
இணை பிரியா தீரா காதலர்கள்…
இது மாயை அல்ல…
பில்லியன் ஆண்டுகளாக
தொடரும் தீரா காதல்…
பிரபஞ்ச பேராற்றல் முன்
சிறுதுளி நாம்..
நீயும் நானும்
அணு அணுவாய் காதலிகின்றோம்..
உடலின் ஒவ்வொரு செல்லிலும்
தீரா காதல் அணுக்கள் உலா வருகின்றன …
காதல் வாழ்வை அணு அணுவாய் கொண்டாடுகின்றன …
தீரா காதலாய் உருமாறுகின்றன…
இடையே எலக்ட்ரான் எனும் பிரிவு வெடித்தாலும்
தீராத பேரன்பு மீட்டெடுக்கும்…
காதல் இருக்கும் வரை
இதயம் துடிப்பது போல,
தீரா காதல் அணுக்களும் இரைச்சலிடுகின்றன
தங்கள் காதல் இருப்பை ..
அணுவை பிளந்தால் காதல் இருக்கும்..
ஆம்!
காதலும் ஒரு தீரா பேரன்பு பேராற்றல் தானே…!
தீரா காதலே
தீராதினி
என்றும்
தீராகாதலுடன்…❤️முற்றும்.
சூப்பர்
சூப்பர்.. சூப்பர்.. சூப்பர்..!
Good ending👍 Kavithai ellam super