Skip to content
Home » தீரா காதலே – 7

தீரா காதலே – 7

நள்ளிரவு 12 மணி.

வானம் மழை பெய்யும் சாத்தியத்திலிருக்க வீசிய காற்றில் குளிரின் உக்கிரத்தை உணர முடிந்தது. மண்வாசனை வேறு நாசியை துளைத்தது. கைக்கடிகாரம் மணி 12 என்று காட்ட தாங்கள் வந்த ஈருருளியை அந்நகரின் எல்லையில் ஓரமாக நிப்பாட்டிய இருவர் தலையையும் ஹூடி முழுங்கியிருந்தது. இருவரின் முதுகுகளும் பேக்குகளை தழுவியிருந்தன.

ஒருமுறை அனைத்தும் சரியாக இருக்கிறதா எவரேனும் இருக்கிறார்களா என்று கண்களை சுழற்றியபடி இறங்கி சிறிது தூரம் நடந்திருப்பார்கள். அவர்கள் இலக்கை அடையும் முன் முதல் மழைத்துளி வேகமாக வந்து அவர்களை முத்தமிட்டது. தொடர்ந்து பல முத்தங்களை வாங்கியவர்கள் நடையில் வேகத்தை கூட்டி ஓடினார்கள்.

தங்கள் நேசத்தை மதிக்காமல் மிதித்து ஓடும் அவர்களை கண்டு மழையின் கோபம் அதிகமாக காற்றையும் தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு இடி மின்னலின் ஒலி , ஒளியோடு அவர்களை கவர்ந்திடும் வேகத்தில் பொழிய ஆரம்பித்தது மழை.

அவர்களிருவரும் வேக எட்டுகளில் இலக்கை அடைந்ததும் பதுங்கி அமர்ந்து கொண்டார்கள் சிறிது நேரம் நுரையீரலுக்கும் கால்களுக்கும் ஓய்வு கொடுக்கும் பொருட்டு. மழையோ ஓய்வு எடுக்கும் எண்ணம் சிறிதும் இன்றி தன் காதல் தோல்வியை கண்ணீர் கொண்டு ஒட்டுமொத்த புவியையும் குளிர்விக்கும் முயற்சியில் இருந்தது.

க்ரில் கேட் மீது மெல்ல ஏறி குதித்து அந்த வீட்டின் உட்புற சாளரத்தின் பக்கமாக செல்ல அப்பொழுது தான் ‘வீல்’ என்ற சத்தம் அந்த வீட்டினை நிறைத்தது. வந்தவர்கள் வினாடிக்கும் குறைவான நேரத்தில் தங்களை மறைத்துக் கொண்டு தாங்கள் வந்த வேலையை கனகச்சிதமாக முடித்துக்கொண்டு வெளியேறி சென்று விட்டார்கள். இவையெல்லாம் சில மணிதுளிகளில் நடந்தேறியன.

அந்த குரலுக்கு சொந்தகாரி மெர்ஸியே தான். தண்ணீர் குடித்து விட்டு வரும் போது சாளரத்தின் வழியே தெரிந்த நிழலில் சர்வாங்கமும் நடுங்கிப்போனாள். அலைபேசி பேர்வழியோ என்று பயந்திருந்தாள். அவளின் சத்தம் கேட்டு பதறியபடி மேல் வீட்டிலிருந்து பிரபாவும் அவளவனும் கீழே இறங்கி வந்தார்கள். கதவு திறந்து தான் இருந்தது கேட்டை பூட்டியவள் கதவை தாழிடவில்லை.

உறக்கம் இன்னும் கண்களுக்குள் விரதமிருக்க “என்னாச்சு மெர்ஸி? ஏன் கத்துன? தீபக்க நினைச்சி கவலபடுறியா?”

நடுக்கத்துடன் அவளை கட்டி கொண்டவள் “பிரபா அங்க.. அங்க.. யா..ரோ.. இரு..காங்க.. காலைல… போன்ல.. போன்.. பண்…ணி… போட்டோ.. எடு..ம்ம்..ஹூம்ஹூம்” என்று வெடித்து அழுதாள்.

“என்னடி சொல்ற?பயந்துட்டியா? இதுக்கு தான் எங்கூட வந்து படுனு சொன்னேன் கேட்டியா?” கண்களை கசக்கியபடி திட்டினாள்.

“யா..ரோ இர்ருகாங்க..” என்று திணறியபடி சொன்னாள்.

மிஸ்டர் பிரபா வீட்டை சுற்றி பார்வையிட எதுவும் வித்தியாசமாக தெரியவில்லை யாரும் இருப்பதாகவும் தெரியவில்லை. மழையின் சத்தத்தில் வெளியே செல்லும் வண்டிகளின் சத்தம் கூட கேட்கவில்லை. சுற்றி ஆராய்ந்து விட்டு யாரும் இல்லையென மறுப்பாய் தலையசைக்க,

“நீங்க போய் படுங்கங்க நான் மெர்ஸியோடு படுத்துகிறேன் ரொம்ப பயந்து போய் இருக்கா” என்கவும் சரியென்று மீண்டும் தலையசைப்புடன் அங்கிருந்து அவன் செல்ல “சொல்லுடி என்ன ஆச்சு ஏதும் கனவு கண்டியா ?” என்று கேட்டிருந்தாள் பிரபா.

இல்லை என்று தலையசைத்து விசும்பியவள் அவளின் மடியில் படுத்துக்கொண்டாள். அவளின் தலையை வருடி உறங்க செய்தவள் தானும் அருகில் படுத்துக்கொண்டாள்.

காலையில் எழும் போதே தன் இருப்பை உணர்த்திட ஜூனியர் தீபக் மசக்கையினை வெளிப்படுத்த மனச்சோர்வில் இருந்தவள் ஒருமுறை குமட்டியதற்கே சுருண்டு படுத்துவிட்டாள். அவளுக்கு பிரபா தான் உதவியாக ஒவ்வொன்றாக செய்து கொடுத்தாள்.

யாருமில்லா தனக்கு தன்னலமில்லா அன்பினை கொடுக்கும் பிரபாவைக் கண்டு கண்கள் கலங்க தன் மனதில் அழுத்திக்கொண்டு இருக்கும் பாரத்தை சொல்லலாம் என்று நினைத்தாள்.

“பிரபா உன்கிட்ட ஒன்னு சொல்லனும்” என்றவாறு மேஜையை பார்க்க அங்கு இருந்தவற்றை காணவில்லை. பதறியவள் மேஜை டிராயர் திறந்து பார்த்தாள் அங்கும் இல்லை. அறை முழுவதும் தேடிப் பார்த்தவள் கிடைக்கவில்லை என்றதும் அழுதாள்.

“என்னடி காணும் சொல்லு நானும் தேடிப்பாக்கிறேன்”

“என் லாக்கெட் செயின் மொபைல் எல்லாம் காணோம் நேத்தே யாரோ வந்து எடுத்திருகாங்க நான் சொன்னேன் யாரும் நம்பல இப்ப என்ன பண்வேன்?என் தீபக் ஞாபகமா அது மட்டும் தான் என்கிட்ட இருந்தது” என்று புலம்பி அழுதாள்.

நிஜங்கள் தரும் சந்தோஷத்தை விட நினைவுகள் தரும் சந்தோசம் அதிகம் அதனால் தானோ என்னவோ நிஜங்கள் அதிகம் நிலைப்பதில்லை நினைவுகள் அழிவதில்லை. அது காலங்கள் கடந்தும் காலாவதி ஆகாத பொக்கிஷம். கடந்த காலத்தின் நினைவுகள் நிகழ்காலத்தின் வசந்த நினைவுகள்.


பிரபாவும் மெர்ஸியும் ஒருமனதாக முடிவு செய்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றார்கள்.

காவல் ஆய்வாளர் அறை

பிரியதர்ஷனும் நிகிலும் வழக்கின் அடுத்த நிலையை பற்றி கருத்து பரிமாறிக்கொண்டே காவல் ஆணையாளரை சந்திக்க ஆயத்தமாக அனைத்து வழக்கு கோப்புகளையும் எடுத்து வைத்துக்கொண்டு வெளியேற அப்பொழுது தான் இருவரும் உள்நுழைந்தார்கள் புகார் கொடுக்க வேண்டும் என்று. இவர்கள் வெளியே வந்ததை கவனித்த மெர்ஸி

“சார் சார் ஒன் செகன்ட்… ஹெல்ப் பண்ணுங்க சார்.. நைட்.. எஸ்டர்டே.. திருடன் திருடிட்டான் அது மட்டும் தான் எனக்குனு இருக்கும் பொக்கிஷம் பிளிஸ் கண்டு பிடிச்சு கொடுங்க சார்”

“வெயிட் வெயிட் ரிலாக்ஸ். பஸ்ட் என்ன திருடு போச்சு என்னைக்கு அப்படிங்கிற முழு டீடெய்ல்ஸயும் எழுத்து மூலமா எழுதி கம்ப்ளைண்ட் பைல் பண்ணுங்க அப்புறம் தான் நாங்க ஆக்ஷன் எடுக்க முடியும் போங்க” என்று தர்ஷன் சொன்னான்.

அதற்குள் காவலர் வந்து “இப்படி வாங்கமா சார் அவசர வேலையா வெளியே போறாங்க. உக்காருங்க” என்று அழைத்து போனார்.

வெள்ளைத்தாள் கொடுக்கப்பட அதை வாங்கி தன் முகவரி தன்னை பற்றி எழுதியவள் புகாருக்கான காரணமாக திருடன் தன் வீட்டிலிருந்து ஒரு தாலி நகையையும் லாக்கெட் நகையையும் அலைபேசி மற்றும் நாட்குறிப்பு நோட்டு புத்தகம் திருடி விட்டதாகவும் அதை சீக்கிரமே மீட்டு தருமாறும் எழுதி இருந்தாள். எழுதி கொடுத்து விட்டு வீடுதிரும்பினார்கள்.


காவல் ஆணையாளர் அலுவலகம்

சரியான நேரத்திற்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தவர் தவிர அனைவரும் வந்திருக்க , தங்கள் இருக்கையில் அமர்ந்தபடி கொண்டு வந்த கோப்புகளை சரிபார்த்து கொண்டிருந்தனர். தலைநகரின் காவல் கண்காணிப்பாளர் உதவியாளர் காவல் ஆய்வாளர் துணைகாவல் ஆய்வாளர் இன்னும் சிலர் வந்திருந்தனர்.

காவல் ஆணையாளர் வரதராஜன் அறைக்கதவை திறந்து உள்நுழைய அனைவரும் எழுந்து சல்யூட் அளித்தார்கள். அவர் முகம் கடுகடுவென்று இருந்தது. அவர்களை அமரச் சொன்னவர்

“குட் மார்னிங் எவிரிபடி… இன்னைக்கு எதுக்காக இந்த மீட்டிங்னு தெரியுமா?”

” “

“ஓகே நானே சொல்றேன். NCRB ரிப்போர்ட் வெளியிட்டுருகாங்க செக் பண்ணீங்களா யாராச்சும்?”

NCRB என்பது தேசிய குற்ற ஆவணக் காப்பகமாகும். இது இந்திய தண்டனை சட்டம் மற்றும் சிறப்பு & உள்ளூர் சட்டங்களால் வரையறுக்கப்பட்ட குற்ற தரவுகளை (குற்றம் & குற்றவாளிகள் பற்றிய தகவல் களஞ்சியம்) சேகரித்து பகுப்பாய்வு செய்யும் பொறுப்பான ஒரு இந்திய அரசு நிறுவனமாகும். இதன் தலைமையகம் புதுதில்லியிலுள்ளது.

“எஸ் சார்” கோரசாக அனைவரும் சொல்ல

“என்ன எஸ் சார்? இண்டியாலேயே சூசைட் கேஸஸ்ல தமிழ் நாடுதான் செகண்ட் பிளேஸ்ல இருக்கு. ரோட் ஆக்ஸிடென்ட் கேஸஸ்ல பஸ்ட் பிளேஸ். ப்ரிவியஸ் யேர்ல இருந்தத விட 50% க்ரைம்ஸ் இன்கிரீஸ் ஆகிருக்கு. ஏன் எப்படி இது என்ன காரணம்?”

” “

“ப்ரிவியஸ் யேர்ல இருந்த குற்றங்கள விட இந்த யேர் ஏன் குற்றங்கள் அதிகமா இருக்கு காவல் துறை என்ன சம்பளம் வாங்கி தூங்குதானு BBC நியூஸ்ல நம்ம துறையை பத்தி அவதூறா எழுதி இருகாங்க. இதுக்கு உங்களாள பதில் சொல்ல முடியுமா?” என்று பொரிந்து தள்ளினார்.

“சார் ஜனத்தொகை கூட கூட குற்றங்களும் கூட தானே செய்யும்” என்று நிகில் கூற

“யார் சார் நீங்க? வாங்க சார் வாங்க அப்ப நீங்கலாம் எதுக்கு இருக்கீங்க? எல்லாத்தையும் நின்னு வேடிக்கை பார்க்கவா?” என்று காரமாக பேச பிரியதர்ஷன் நிகிலின் காலில் தன் ஷூவினால் மிதித்தான்.

“ஆஆ அய்யோ ம்மா”

“வில் யூ பிளிஸ் அண்டர்ஸ்டாண்ட் தி சிட்டுவேஸன் ? பி சீரியஸ்” என்று கமிஷனர் கத்தினார்.

“எஸ் சார்”

“இன்னொரு கம்ப்ளைண்ட் கூட முன்வச்சிருகாங்க. காவல்துறை உங்கள் நண்பண்னு சொல்றாங்க ஆனால் கம்ப்ளைண்ட் கொடுத்தா அதை கண்டுகொள்வது இல்லை ஏன் முதல் தகவல் அறிக்கை கூட பதியபடுவது இல்லைனு சொல்றாங்க. உண்மையா?”

“நோ சார் இது வேணும்னே நம்ம டிபார்ட்மெண்ட்ட மட்டம் தட்ட சொல்லபடுர குற்றச்சாட்டு” பிரியதர்ஷன்.

“ஓகே ஆல்ரைட் அத விடுங்க நான் மேல சொன்ன ரிப்போர்ட்ஸ்க்கு நீங்க என்ன பண்ண போறீங்க? இதுக்கு உங்களோட ஆன்ஸர் என்ன? என்ன பண்ணலாம்னு உங்க தாட்ஸ் சொல்லுங்க”

ஒருவரும் வாய் திறக்காமல் நிமிர்ந்த நெஞ்சுடன் சிற்பமாய் அமர்ந்திருக்க கமிஷ்னர் கோவம் எல்லை கடந்தது.

” சோ யாரும் எதுவும் பேசுரதா இல்லை மாசம் மாசம் சம்பளம் மட்டும் வாங்கிக்கலாம்னு இருக்கீங்களா?” என்றுரைத்து மேஜையில் தன் கைகளால் ஓங்கி அடித்தவர் தன் சினம் அடங்க அறையின் நீள அகலத்தை நடந்தே அளந்தார். சிறிது நேரம் கழித்து

“என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது. நம்ம டிபார்ட்மெண்ட் பத்தி யாரும் அவதூறு சொல்ல கூடாது. நம்ம டிபார்ட்மெண்ட்ல நேர்மையான ஆபிஸர்ஸா நீங்க இருந்தீங்கனா இந்த க்ரைம்ஸ் எல்லாம் ஏன் நடக்குது எதுக்கு நடக்குது இத எப்படி அவாய்ட் பண்ணலாம்னு எனக்கு ரிசெர்ச் பண்ணி ரிப்போர்ட் சப்மிட் பண்ணுங்க காட் இட்”

“எஸ் சார்”

“உங்களுக்கு ஹெல்ப்க்கு யார் வேணுமோ டிபார்ட்மெண்ட்வைஸ் நான் அரேன்ஞ் பண்ணி தரேன்”

“ஓகே சார்”

அத்துடன் அன்றைய மீட்டிங் முடிந்து கலைந்தனர் அனைவரும். வெளியே வரும் போது கமிஷனர் நிகிலின் காதை திருகி ” படுவா உனக்கு வாய் அதிகம். வீட்டுக்கு வா உன் பெரியம்மா கிட்ட சொல்லி வைக்கிறேன்” என்றார்.

காதை பிடித்துக்கொண்டே “சரிங்க பெரியப்பா… டியூட்டி டைம்ல இப்படி சக ஊழியரை ராகிங் பண்றீங்களே உங்களுக்கே இது நியாயமா?”

“டேய்..” என்று கூப்பிட தர்ஷனை இழுத்து கொண்டு வெளியே ஓடி வந்து விட்டான். நிகிலின் பெரியப்பா தான் கமிஷ்னர் வரதராஜன். ஆனால் பணியில் கண்டிப்பான ஆபிஸர்.

ஒரு வாரம் கழிந்த நிலையில் மீண்டும் மீட்டிங் நடத்தப்பட்டு ஐந்து குழுக்கள் கொண்ட குழுவினர் இன்வெஸ்டிகேஷன் செய்ய பரிந்துரைக்கப்பட்டனர். ஒரு குழுவில் மூன்றில் இருந்து ஐந்து ஆறு பேர் வேலையை பொறுத்து பணியமர்த்தப்பட்டனர்.

முதல் குழு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை சேகரித்தலும் அதன் காரணியும் அதை தடுக்கும் வழிமுறைகளும் புலனாய்வு செய்ய கொடுக்கப்பட்டது. இதில் பெண் கொடுமை, பெண்களை கடத்துதல், தாக்குதல் ,குழந்தை கடத்தல், சிசு கொலை , குழந்தை வன்கொடுமை , பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகியவை அடங்கும். இந்த குழுவில் ஆறு பேர் இருந்தார்கள்.

இரண்டாவது குழு தற்கொலைகள் ஏன் நிகழ்கின்றன அதன் காரணம் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் பற்றிய புலனாய்வு மேற்கொள்ள கொடுக்கப்பட்டது. இதில் குடும்ப பிரச்சினை, திருமண தொடர்பான பிரச்சினை, தினகூலி, தீராநோய் , விவசாயிகள் – கடன் மற்றும் பொருளாதார நிலை, தொழில் சார்ந்த பிரச்னைகள், பொருளாதார நெருக்கடி, மனநலப் பிரச்னை, தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு மற்றும் வேலைப்பளு ஆகியவை அடங்கும். இந்த குழுவில் பிரியதர்ஷனும் நிகிலும் மற்றும் இன்னும் ஒரு குற்றப்பிரிவு அதிகாரியும் இருந்தனர். வேறு அலுவல் காரணமாக அவர் அன்று வந்திருக்கவில்லை.

மூன்றாவது கொலைகள் ஏன் நிகழ்த்தபடுகின்றன அதன் காரணங்கள் களையும் விதங்கள் பற்றிய புலனாய்வு கொடுக்கப்பட்டது. இதில் பழிச்செயல்கள், ஆணவக்கொலைகள், சொத்து தகராறு போன்றவை அடங்கும். இந்த குழுவில் நால்வர் அமர்த்தப்பட்டனர்.

நாலாவது விபத்துகள் மற்றும் அதன் காரணிகள் தடுக்கும் வழிமுறைகள் பற்றிய புலனாய்வு பரிந்துரைக்கப்பட்டது. இதில் இரயில் விபத்துகள், ரயில்வே கிராஸிங் விபத்துகள், சாலை விபத்துகள் ஆகியவை அடங்கும். இந்த குழுவில் ஐந்து பேர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

ஐந்தாவது கணினி குற்றங்கள். எப்ப மனிதன் மனிதர்களை நம்பாமல் இயந்திரம் மீது நம்பிக்கை வைத்தானோ அன்றே தோல்வியடைந்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும். இந்த வகை குற்றங்கள் ஏற்பட காரணகர்த்தா மற்றும் தடுக்கும் வழிமுறைகள் பற்றிய புலனாய்வு ஆய்வு செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இதில் மோசடி வழக்குகள் , மிரட்டி பணம் பறித்தல் ஹேக்கிங் ஆகியவை அடங்கும். இந்த குழுவில் இருவர் மட்டுமே.

இந்த ஐந்து குழுக்கள் மேற்கொள்ளும் முயற்சியில் முடிவு என்ன என்பதை பின்னர் தெரிந்து கொள்ளலாம்.

“அந்த ஆபிஸர் ஏன் வரல அவ்வளவு பெரிய ஆபிஸராடா?” நிகில்

“நானும் உங்கூடதானே இருக்கேன் எனக்கு மட்டும் எப்படி தெரியும்? அதான் சண்டே மீட்டிங் அரேன்ஞ் பண்ணிருகாங்களே அப்ப கேட்டு தெரிஞ்சிக்கோ” தர்ஷன்.

அது யார் புது ஆபிஸர்? அடுத்த அத்தியாயத்தில் மீட் பண்ணலாம்.

தீரா தேடலுடன்…

3 thoughts on “தீரா காதலே – 7”

  1. Kalidevi

    Going interesting story. Night apadivanthu ella eduthutu ponathu intha tharshanum nikulum thana atha vachi enada pana poringa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *