துஷ்யந்தா-21
சசிதரன் கோமதி வந்து சென்ற நாளிலிருந்து விதுரன் ஒரு மார்க்கமாகவே பிரகதியை ஆராய்ந்தான்.
பிரகதி அவனை விழி நிமிர்ந்தும் பார்க்கவில்லை. கத்தியால் குத்திவிட்டு பார்க்க மனமும் வரவில்லை.
அன்னை இருக்கும் அறையிலேயே மற்றொரு மெத்தையை போட்டு கீழேயே தங்கினாள். ஆனால் தொடர்ந்து அதே போல இடத்தை மாற்றிடவும் விதுரனுக்கு சினம் மெல்ல மெல்ல சிவப்பு கோட்டை தொட்டது.
அன்று குளிக்க சென்றவள் திரும்பி வந்து பத்மாவதியை பார்க்க மெத்தை தனது உடைமை காணாமல் போயிருந்தது.
பட்டுவிடம் எங்க போச்சு? என்று கேட்க, “அவர் தான் மா எடுத்துட சொல்லிட்டார்” என்று பதில் கொடுத்தாள்.
மேலே மாடியறையில் விதுரன் கணிணியில் ஏதோ டிசைனை பார்த்து கொண்டிருந்தான்.
அவன் முன் வந்தவள் “எதுக்கு பெட் எல்லாம் எடுத்துட்ட. சோபா கூட இல்லை. நான் எப்படி அம்மா ரூம்ல தங்க?” என்றாள்.
“அம்மா ரூம்ல தங்க நீ என்ன பார்ன் பேபியா? உன்னோட ரூம் இது. இங்க நீ வந்து ஒரு வாரம் ஆச்சு. முதல்ல ஏதோ என்னால உங்கம்மாவுக்கு குரல் போச்சே.. கத்தில குத்தற அளவுக்கு நீயும் கோபமா இருக்கியேன் பாவம் பார்த்தேன். பட் இனி பட்டு அந்த நர்ஸ் இரண்டு பேரும் பார்த்துக்கிட்டோம். நீ இங்க வந்து பழைய மாதிரி ஸ்டே பண்ணு. இங்க வந்தாலும் சோபா யூஸ் பண்ண கூடாது. பெட் தான். என் பெட்டை உன்னோட ஷேர் பண்ணிப்பேன்.” என்றான் நிமிராமலேயே…. பிரகதிக்கு சினமேற நின்றாள்.
“எனக்கு உன் பெட்டும் வேண்டாம் ரூமும் வேண்டாம்.” என்றாள்.
“ஓய்…. பெட்னா பெட் மட்டும் இல்லை. பெட்ல நம்ம ஷேரிங். என்ன மறந்துடுச்சா.. இல்லை கத்தியால குத்திட்டோம் இவன் பயந்துட்டான். அதனால நம்மளை கட்டாயப்படுத்தலைனு நினைச்சியா. ஏதோ கத்தியால நீ குத்தினாலும் உன்னை சும்மா விட்டது. எனக்கு காரியம் ஆகடி செல்லம். தூங்கும் போது ஏதாவது பண்ணிடுவியோனு கொஞ்ச நாளா அவாய்ட் பண்ணினேன். சுதன் கொடுத்த டேப்லட் போட்டா தூக்கம் வந்திடுதேனு. இன்னியோட டேப்லட் ஓவர். அதனால நீ கல்லை தூக்கி போட்டாலும் சரி, கத்தியால குத்தினாலும் சரி இனி நானே பார்த்துப்பேன். இன்னில இருந்து மறுபடியும் இந்த ரூம் புரிஞ்சுதா.. அதை மீறினா காலு குரலுனு கஷ்டத்துல இருக்கற உங்கம்மாவை கஷ்டம் கொடுக்காம நீ சொன்னியே… சொர்க்கம்… அங்க டிக்கெட் கொடுத்து நிரந்தரமா அனுப்பிடுவேன்” என்றவனது கடைசி வாக்கியம் மட்டும் அழுத்தமாய் கர்ஜினையாக ஒலித்தது.
பிரகதிக்கு அவன் பேச்சு சினத்தை தர அவன் சுவாரசியமாக நிமிராது முழ்கியிருந்த கணிணியை எடுத்து உடைத்தாள்.
அவள் தன்னை அடிக்க வருவாளென எண்ணியிருக்க லேப்டாப் உடைத்ததை கண்டு கடுப்பானான். “ஏன் டி உனக்கு என்ன பைத்தியமா? பொருட்களை உடைக்கிற. டிவி, கார் இப்ப லேப்டாப்.
கண்ணாடி எடுத்து என் மண்டைறில போட பார்த்த. கார்ல இருந்து தள்ளி விடற, என்ன கத்தியால குத்தற, ஒன்னு உசிரை வாங்கற, இல்லை என்னோட காஸ்ட்லி ஐயிட்டம் எல்லாம் சேதாரம் செய்யற…
பார்த்துட்டே இரு… உனக்கு சீக்கரம் சேதாரம் வரும்” என்றவன் போனை எடுத்து விக்னேஷிடம் லேப்டாப் மாடலை கூறி வாங்கிட ஆர்டர் கொடுத்தான். பேசி முடித்து போனை தூக்கியெறிந்தவன், “பொருட்களுக்கு ரீபிளேஸ்மெட் பண்ணிடலாம். பண்ணிடுவேன்.” என்றவன் பேச்சு உனக்குயில்லை என சொல்லாமல் சொல்லியது.
பிரகதிக்கு கூடுதல் கடுப்பாக, அவன் வீசியெறிந்த போனை கையிலெடுத்து தூக்கி தரையில் விட்டெறிந்தாள்.
விதுரன் கை ஓங்கி பெற முயற்சிக்க தரையில் உயிர் துறந்திருந்தது.
“எல்லாத்தையும் ரீபிளேஸ் பண்ணறவன் தானே நீ. இந்த போனுக்கு பதிலா இன்னொன்னு வாங்கிக்கோ.
எல்லா பொருளையும் புதுசு வாங்கிடுவியா… என் மேல கையை வச்ச… நானே தற்கொலை பண்ணிப்பேன். அப்பறம் உன் ஈகோவை டச் பண்ணின பெண்ணா தேடி பிடிச்சி வேற கட்டாய திருமணம் பண்ணிக்கோ.” என்றவள் விடுவிடுவென இறங்கினாள்.
“டெவில்.” என்று கத்தினான்.
அன்று இரவு பத்மாவதியே செய்கையில் “நீ மேல போ. நான் என்னை பார்த்துப்பேன்.” என்று கூறிவிட ஆதித்யா தாத்தாவும் இருக்க சரியென்ற தலையாட்டலில் மாடிக்கு அடியெடுத்து நடந்தாள்.
விதுரன் அவளின் வருகையில் ராட்சஷனாக வயிற்றை பிடித்து சிரித்து முடித்தான்.
“விதுரன் நினைச்சாலே தானா நடக்கும் டேக் யுவர் சீட்” என்றவனை கண்டு எரிச்சலாகியது.
சோபாவை தேடினால் ஆனால் அது காணவில்லை… பிரகதி அறையை அலசுவதை பார்த்து, “எல்லா அன்வான்டட் திங்க்ஸும் மாடி ரூம்ல ஷிப்ட் பண்ணிட்டேன்.” என்றான்.
மெத்தையிலேயே ஒரமாய் உறங்கியவளை கண்டு அவனுமே படுத்து கொண்டான்.
இப்படியாக மூன்று மாதம் கடந்த நிலையில் சசிதரன் குழந்தைக்கு பெயர் வைக்க அழைப்பிதழ் கொடுத்து சென்றார் கோமதி.
அதற்காக விதுரன் பட்டு சேலையை எடுத்து வந்து நீட்டி, “எப்ப பாரு சல்வார் ஜீன் போட்டு சுத்தற.. சசி பையனுக்கு பெயர் வைக்கிறாங்க இந்த சேலை கட்டு.” என்று நீட்டினான்.
“என்னடா அராஜகம் பண்ணறியா. என்னை கூட்டிட்டு போய் பொட்டிபாம்பா அடக்கிட்டேனு சீன் போடனுமா. நான் வரமாட்டேன்.
உன்னிடம் யாராவது கேட்டா…. அவங்க அம்மாவுக்கு துணையா இருக்கேனு ஜம்பமா சொல்லிக்கோ.” என்று சேலையை தட்டி விட்டாள்.
“உன் பிரெண்ட் பிராப்பரா இன்வெயிட் பண்ணலையா?” என்று சிரித்தான்.
கோர்ட் பட்டனை மாட்டிக் கொண்டே, “நமக்கு பிராப்பர் இன்வெயிட் வந்திருக்கு. அதுவும் விதுரன் தலைமையில் பெயர் சூட்டுவிழா. என்ன பார்க்கற.. என்னை தான் பெயர் செலக்ட் செய்து அனவுன்ல் பண்ண சொல்லிருக்காங்க. அதனால தட்டி விட்ட சேலை எடுத்து கட்டிட்டு வந்து என்னோட கிளம்பற.” என்றான்.
அதன் பிறகே தீபிகா தன்னிடம் இதை பற்றி பேசவில்லையே என்ற கலக்கம் வந்தது. ஆனாலும் அவள் விரும்பி சசியை மணக்கவில்லை. குழந்தையும் மனமகிழ்ந்து பெற்றுக் கொள்ளவில்லையே. அதனால அதனை தவறாக எண்ணவில்லை.
“நான் வரலை.” என்றவளை நெற்றி சுருக்கி ருத்ரதாண்டவ முகமாக மாறியவன் தர்மாவுக்கு போன் செய்து “தர்மா பிரகதி சொல்லற பேச்சு கேட்கலை. பத்மாவதியை வலியில்லாம ஊசி போட்டு நர்ஸை வச்சி கதைய முடிச்சிடு” என்றதும் பிரகதி அவனை தள்ளிவிட்டு அன்னையை தேடி ஓடிவந்தாள்.
அப்பொழுது தான் ஊசி செலுத்தி நிமிர்ந்த நர்ஸிடம் “ஏன் இப்படி செய்திங்க.” என்றதும் நர்ஸ் விழிக்க, “நீ கிளம்பலைனா தான் நடக்கும்.” என்று விதுரன் படியிறங்க, பிரகதி நிம்மதியடைந்து மாடிக்கு விரைந்தாள். அவன் கொடுத்ததை அணியாமல், அதனை எடுக்கவும் செய்யாமல் மற்றொரு சேலையை அணிந்து நகைகளை மாட்டி நடந்து வந்தாள்.
பத்மாவதி ஹாலில் அமர்ந்திருக்க கண்ணுக்கு குளிர மகளின் இந்த சேலைக்கட்டிய வதனம் இரசிக்க வைத்தது.
ஆதித்யாவும் புறப்பட்டு தயாராக இருந்தார்.
கதிர் காரோட்ட அக்காரின் முன்னும் பின்னும் வண்டிகள் மூன்று மூன்றென ஆறு வந்திருந்தது.
“என்னடா கிப்ட் வாங்கின?” என்றான்.
“உங்க பேத்தியிடம் கேளுங்க? பிரெண்டோட குழந்தை… அதுவும் சசியோட குழந்தை இரண்டு பக்கமும் அவ தானே சொந்தமா இருக்கா. அவ தான் ஏதாவது வாங்கியிருப்பா.
என்ன பிரகதி… கோமதி சித்தி உன்னிடம் தானே இன்விடேஷன் நீட்டினாங்க.” என்று கண் சிமிட்டினான்.
நானாவது சசிக்கு தம்பி மட்டும் தான் தாத்ரு. அதனால கிப்ட் எல்லாம் பிரகதி விருப்பம்னு விட்டுட்டேன்.” என்றான்.
பிரகதிக்கு ஒருமாதிரியான நிலை. உண்மை தானே. கோமதி அத்தை தன்னிடம் வைத்து இன்விடேஷன் கொடுத்து பட்டெடுத்து கொடுத்து வெள்ளி குங்குசிமிழ் என்று என்னவென்னவோ தட்டில் நிரப்பி அழைத்தனர். வாங்கி விதுரன் பார்க்க ஹாலிலேயை வைத்தாலே தவிர அதனை பிரித்து கூட பார்க்கவில்லை. தோழி தீபிகாவின் பையன் என்றளவிற்காவது யோசித்து ஏதேனும் வாங்கிருக்கலாம். சேலை கட்டி வர சொன்னானே கிளம்பினோமே தவிர பரிசை நினைக்கவேயில்லை அதுவும் இவன் இதை தன்னிடம் திருப்பி விட்டானே என்ற வருத்தம் வந்தது.
“பேத்தி நீயிருந்தா பேசவே மாட்டா.” என்றவர் அமைதியானார்.
விதுரன் இறங்கி வந்து கதவை திறக்க, பிளாஷ் லைட் கண்ணை பறித்தது. பயத்தில் இறங்க கூட முடியவில்லை.
விதுரன் தலை மட்டும் குனிந்து”கையை பிடி தானா நடந்திடுவ. நேரா பாரு சைட்ல பார்த்தா தான் கண்ணு கூசும்” என்று ஆலோசனையும் கூறினான்.
அதிர்ச்சியில் கையை பிடித்தால் அவன் கூறியது போல சமாளிக்க முடிந்தது.
“தேங்க்ஸ்.. பட் ஒரு விஷயம். நான் கிப்ட் வாங்கலை” என்றாள் கிடைத்த நேரத்தில் கூறினால் விலங்காதவன் தர்மாவை விட்டு வாங்கிடுவான் அல்லவா என்று.
“ஐ நோ நீ பிரெசண்ட் வாங்கிருக்க மாட்டனு கெஸ் பண்ணினேன். டோண்ட் வோர்ரி விதுரன் எதையும் மிஸ் பண்ண மாட்டான். அவனோட தலைமையில எதுவும் சொதப்பாது. சொதப்பவும் விடமாட்டேன்” என்றான்.
கையை உருவ அதே நேரம் அவன் விடவும் அந்த பெரிய டிவியிலும் தெரிந்தது. அதில் அவர்கள் வந்ததை திரும்ப போட்டு ஒளிப்பரப்பி இருந்தார்கள்.
ஆத்மார்த்தா தம்பதிகள் நடந்து வந்தால் எப்படியிருக்கும் அப்படியிருந்தது.
விதுரன் கரம் கொடுக்கவும் பிரகதி அவன் கரத்தில் மென்கரத்தை நுழைத்து நடந்துவந்தது.
ஒரு நொடியில் ‘வாவ்’ என்ற உணர்வு.
“வாம்மா…” என்று கோமதி வரவேற்று அமர வைத்தார்.
மீண்டும் அந்த பெரிய திரையில் அதை ஒளிப்பரப்பு எதிர்பார்த்திருக்க பத்மாவதி தெரியவும் அதுவும் தனக்கு பின்னால் வருவதாக காட்ட திரும்பினாள்.
காஞ்சிப்புரம் பட்டுடுத்தி அலங்கரித்து கைக்கு கிளவுஸ் அணிந்து பட்டுவின் மேற்பார்வையில் வந்திருந்தார்.
“அம்மா…” என்று எழுந்திருக்க சென்றவளை, “உட்காரு… எங்கயும் போக மாட்டாங்க. சம்மந்தி வரவேண்டாமா. அப்பறம் நீ போட்ட இரண்டாவது பிளான் முழுமையா ஊத்திடுச்சு.
அதெப்படி…. நர்ஸை ஏமாற்றி பட்டுவும் உங்கம்மாவும் அபிமன்யு கூட கார்ல ஏறி பெங்களுரில் ஹோட்டலில் விட்டுட்டு அவன் திரும்பிடணுமா. நீயிங்கிருந்து என்னோட கட்டுப்பாட்டுல இருந்து ஓடிடுவ… ப்பா.. குட் பிளான். பட் டோட்டலா ஸ்பாயில் ஆகிடுச்சே.
அதுக்கு தண்டனை அப்பறமா பார்த்துக்கறேன். இப்ப மேடைக்கு என்னோட வந்து தொலை.” என்று கூற பிரகதி அதேயிடத்தில் அமர்ந்திருக்க, “உன் பிரெண்ட் உன்னையே விழுங்கற மாதிரி பார்க்கறா… ஐ திங்க் என்னை கொல்ல பிளான் சொல்லலாம். எழுந்து வா” என்றான்.
பிரகதி தீபிகாவுக்காக எழுந்து வந்தால், ஆதித்யாவும் முன் வந்து இருந்தார்.
“நேம் வை டா.”
“தாத்ரு நீங்களே நேம் வைங்க” என்றான்.
ஆதித்யா “யுகேந்திரன்” என்று வைத்து பெயர் பலகையை கத்தரித்து பெயரை பறைச் சாற்றினார்.
தங்க அரைஞான் கொடியை அணிவித்து விட்டார். இதென்ன டயப்பர் மாதிரி இவ்ளோ சையிஸில் இருக்கு. என்று தான் பிரகதிக்கு தோன்றியது.
“நீ பிளஸ் பண்ணு பிரகதி” என்றான்.
பிளஸ் பண்ணினா கிப்ட் என்று விழித்தாள்.
“பேக்ல வச்சியிருப்பதே எடுத்து கொடு” என்றான்.
பிரகதி திணற கைப்பையை ஓபன் செய்ய, அதில் நகைப்பெட்டி இருந்தது. அதை எடுத்து விதுரனை பார்த்தபடி திறந்தாள். யுகேந்திரன் என்ற வார்த்தை கோர்த்து பெரிய செயின் இருந்தது. அதனை அணிவித்தாள்.
அதே போல பிரேஸ்லேட்டை எடுத்து விதுரன் அணிவித்தான்.
“வினிஷ்ட்… சசி நேம் பிடிச்சிருக்கா?” என்றான்.
“எஸ்டா… பி.. பிடிச்சிருக்கு” என்றான்.
தீபிகாவோ எரிச்சலில் முகத்தை வைத்திருந்தாள்.
இத்தனை நேரம் கையில் குழந்தையை ஏந்தியதிலேயே துவண்டதாக இருந்தாள்.
வந்தவர்கள் அனைவரும் கிப்ட் கொடுத்து புகைப்படம் எடுத்தனர்.
விதுரன் அருகே பிரகதி நிம்மதியாய் உணர்ந்த நேரம் விக்னேஷ் வந்து காதில் உரைக்கவும் எழுந்து கொண்டான்.
விதுரன் உடனே கிளம்புவதாக கூறி முடித்தான்.
பத்மாவதியை கோமதி பேசி அனுப்பி வைத்தார்.
விதுரனோடு காரில் ஏறியப்பின் “அம்மா… அம்மா எந்த கார்ல ஏறினாங்க?” என்றாள்.
“வருவாங்க… என்ன விட்டு ஓடப்பார்த்தல அதனால இரண்டு நாள் அவங்க உன் கண்ணுல படமாட்டாங்க.” என்றான்.
கார் வீட்டுக்கு செல்லாமல் மண்டப ஹாலின் பின் கேட்டிற்கு கீழே சுரங்க பாதையில் சென்றது.
அங்கு சென்றப்பின் காரிலிருந்து இறங்கி நடந்தான். பிரகதி குழப்பமாக பின் தொடர அவர்கள் விழா நடந்த இடத்தின் கிரவுண் ப்ளோரில் இரண்டாவதான அறைக்குள் சென்றான்.
முகமெங்கும் இரத்தம் வழிய ஒருவன் கீழே சுருண்டிருந்தான்.
தர்மா அருகே காவல் போல நிற்க, விதுரன் வந்தவன் கோபமாக கழுத்தை நெறிக்க, “என்ன பண்ணற.. விடு அவனை…” என்று தடுத்தாள்.
விதுரன் காதில் விழுந்தால் தானே செவிடன் போல வலது கையை அவன் கழுத்தில் நெறுக்குவதிலேயே மும்முரமாக மாறி ரௌத்திரமாக நின்றான்.
பிரகதி கையை அடித்து விட சொல்ல கத்த, இடது கையால் அவளின் கழுத்தை பிடித்தவன், “உன் வேலையை மட்டும் பாருடி” என்று உருமியவன் அவள் கழுத்தை விடுவிக்க, “என்ன இழவோ பண்ணி தொலை. என் கண் எதிர பண்ணாதே.” என்று விடுவிடுவென காரை நோக்கி சென்றாள்.
“விக்னேஷ்…” என்று உருமி கண் காட்ட, பிரகதி பின்னாலே வந்தவன் கதிரின் காரை காட்டி, “சார் இதுல போக சொன்னார். கதிர் விட்டுடுங்க” என்றான்.
பிரகதி விக்னேஷை மனுஷங்களாடா நீங்க என்பதாக கடந்து சென்று ஏறினாள்.
கதிர் சிவனேனென்று வண்டியை செலுத்தினான்.
பிரகதியோ தலையை தாங்கி அமர்ந்தாள்.
வீட்டில் வந்த பிறகு ஐஸ் வாட்டார் குடித்து நிதானமாக முயன்றாள்.
ஆதித்யா வந்து விதுரன் எங்கமா?” என்றார். அவ்வளவு தான். “ஏன் தாத்தா இப்படி மனிதநேயமே இல்லாம இருக்கான்.
முஞ்சி முழுக்க இரத்தம் பாவம் நிற்க கூட தெம்பு இல்லை… தண்ணி தண்ணினு கேட்கறான். அவனை கழுத்தை நெறித்து அவன் உசரத்துக்கு தூக்கறான். மற்றவங்க வேடிக்கை பார்க்கறாங்க.
அன்னிக்கு என்னடானா ஹாஸ்பிடலில் சசிக்கு இங்க மச்சம் இருக்கும். சசி குழந்தை தான்னு தீபிகாவோட நடத்தையை கேவலமா காட்டறான்.
அவ்ளோ நடத்தையை சந்தேகிக்கறவன் இன்பா கூடவே வாழ சொல்லிட்டு சசிதரனுக்கு யாரையும் லவ் பண்ணாத பொண்ணா பார்த்திருக்கலாம்ல.
உங்களுக்கு கௌரவம், ‘தான்’ என்ற ஈகோவும் இருக்கிறதுக்கு என்னை மாதிரி இருக்கிற பெண்ணை ஏன் டார்க்கட் பண்ணறிங்க” என்றாள்.
ஆதித்யாவிற்கு குழப்பமாக இருந்தாலும் விதுரன் செய்கை என்று புரிந்தது. ஆனால் ஏன் இப்படி? என்று பதில் தர முடியவில்லை.
“உங்களிடம் கேட்டா பெரிய மௌனம். இதான் பதில். போங்க…” என்று மாடிக்கு ஏறினாள்.
நேரமாக பத்மாவதி வரவில்லையென்றதும் அவன் கூறியது போல அன்னையை மீண்டும் சந்திக்க விடாமல் காயப்படுத்துகின்றானே என்று வலித்தது.
-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
மாமியார் உடைச்சா மண் சட்டி மருமக உடைச்சா பொன் சட்டி அதென்னவோ சிலருக்கு நம்ம ஆன்டிஹீரோ எழுதினா மட்டும் குறை சொல்ல தோணும்.
இது முகநூல் அரசியலுக்கு. நம்ம எழுதினா மட்டும் குறை சொல்ல வந்துடுவாங்க.😏
Sis… Ignore the negative comments… Infact that comment makes u boostups.. So chill…. Story was very superb and nice going… So keep rocking 🥳🥳
Interesting👍👍
Intresting. Sema story. Vithuran née nallavanh? Ketavanah?