அத்தியாயம்-16
ரீனாவுக்குள் ரம்யா வருவாளா மாட்டாளா என்ற பயம் இருப்பது போல, பைரவிற்கு இந்த பெண்ணிற்கு பழைய நினைவு வருமா வராதா? என்ற திகில் நித்தமும் சுமந்தான்.
அப்படி பழைய நினைவு வந்தால் இந்த பெண் அவள் வாழ்வை பார்த்து அவளது கூட்டை தேடி செல்வாள். மீண்டும் ரம்யா எங்கே என்ற தேடுதலில் மற்றவர்கள் களம் இறங்குவார்கள்.
முன்பாவது ரம்யாவுக்கு சரியான பின்புலம் இல்லை. இப்பொழுது காதலன் சுதர்ஷனன் ரம்யாவிற்கு ஒன்றென்றால் உலகத்தை அழிக்கும் விதமாக அல்லவா சுற்றுகின்றான்.
இதில் போலீஸ் தீப்சரண் வேறு. இவர்களுக்குள் நட்பு முளைத்திருக்க வேண்டாம். இப்படி தன் மனதை அலைக்கழிக்க, பயத்தை கூட்ட ரம்யாவும் இறந்திருக்க வேண்டாம். இதில் ரம்யாவின் இன்ஹெலர் வேறு தோட்டக்காரன் வேறு கொண்டு வந்து நீட்டினான்.
நல்லவேளை ஜாக்கிங் செய்ய செல்லும் நேரம் முகத்திற்கு நேராக வந்து காட்டினான்.
அந்த நேரம் சுவாதி ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.
பைரவ் அந்த இன்ஹேலரை வாங்கி தன் கால்சட்டையில் வைத்து கடற்கரையை நோக்கி நடையிட்டவன், அங்கிருந்த கடல்நீரில் இன்ஹேலரை தூக்கி தூரயெறிந்தான். இங்கே இறந்துப்போன ரம்யாவையே புதைத்து விட்டான்.
தன் வீட்டை விட்டு இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் நடந்து வந்து கடலில் தான் தூரயெறிந்தது.
ஒருவிதத்தில் கடலோடு ஜலசமாதி ஆக நினைத்து விட்டு வந்தான்.
வீட்டிற்கு வந்தப்பொழுது அங்கே சுவாதி, நாளை மறுநாள் தொழிற்சாலை திறப்புவிழாவிற்கு அணியும் ஆடையை எடுத்து வைத்து அதற்குண்டான அணிகலன்களை ஆராய்ந்தாள்.
எல்லாம் பைரவ் சுவாதிக்காக வாங்கியது.
ஏனோ நிம்மதியற்ற வாழ்வில் பைரவ் நடமாட, அன்று தொழிற்சாலை திறந்தனர்.
சுவாதி அம்மா மங்களம் வந்தார்.
பைரவ் தன் பிஸினஸ் ஆட்களை வரவேற்று தொழிற்சாலையில் கோலாகலமாக கொண்டாடினான்.
சஞ்சனா அவள் காதலன் தீப்சரண் இருவரும் வந்திருந்தனர்.
“உன் பிரெண்ட் சுவாதி பணக்கார பார்ட்டியை தான் கைக்குள்ள போட்டிருக்கா. ஏற்கனவே சின்னதா செயல்பட்டிருக்கும் மாமிசம் வெட்டி பேக்கிங் செய்யற வியாபாரத்தை பெரிய அளவில் நடத்தறார்.
ஆடு மட்டும் தானா? மாட்டிறைச்சி உண்டா?” என்று சாதாரணமாய் கேட்டான்.
“ஏன்டா.. ஆட்டிறைச்சி தான் பதப்படுத்தறதா சுவாதி சென்னா” என்று கைகளை பிணைந்துக்கொண்டாள்.
எல்லாமே மேல்தட்டு ஆட்கள். வந்தவர்களுக்கு குளிர்பானத்தோடு விரும்புவோருக்கு மதுபானமும் வழங்கப்பட்டுயிருந்தது.
“ரம்யா இன்னமும் வரலை” என்று கேட்டான்.
“உன் பிரெண்ட் சுதர்ஷனனுக்கு போன் போடு. ரம்யா வீட்ல யாரும் வரலை அவங்க இரண்டு பேரும் தான் பைக்ல வர்றாங்க” என்று கூறவும், தீப்சரண் சுஊர்ஷனனுக்கு அழைத்தான்.
“இருபது நிமிஷத்துல வந்துடுவேன்டா.” என்று கூறினான் சுதர்ஷனன்.
சுதர்ஷனனோடு ரம்யா தனித்து வந்தாள். வரும் வழியில் எல்லாம் திருமணப்பேச்சை பேசினான்.
ரீனாவிற்கோ ‘நான் ஏற்கனவே கல்யாணமானவள், சுதர்ஷனனை எப்படி மணந்துக்கறது.
சுதர்ஷனனிடம் உண்மையை சொல்லிடலாமா? நான் ரம்யா இல்லை என்பதை.’ என்று அடிக்கடி கண்ணாடியை கவனித்தாள்.
ஒரு நிமிடத்தில் சுயநலமாக சிந்திக்கவும் மனதில் ‘அவசரப்படாதே’ என்று நிதானித்தாள்.
தொழிற்சாலை திறப்பு விழா நடைப்பெறும் இடம் வந்ததும் பைக் பார்க் செய்யும் பொழுது “ரம்யா எனக்கு சஞ்சனா அளவுக்கு சுவாதி கிடையாது. அதோட பைரவிடம் அதிகம் பேசியதும் இல்லை. கொஞ்ச நேரத்தில் கிளம்பிடலாம்.” என்றதும் மௌனத்தை களைந்து சம்மதமாக தலையாட்டினாள்.
“ஹேய் ரம்யா… கொஞ்சம் சிரி. நார்மலா இரு. பழைய நினைவை மறந்து போறது எல்லாம் வரம். உனக்கு மறந்து போச்சா புது லைப்பை வாழு ரம்யா. ஏன் பழைய நினைவு தெரியணும்னு ரொம்ப யோசிக்கற. ‘சிரிடி” என்றான்.
ஒரு ஆணின் ‘டி’ கூட தனக்கு உவகை தருகின்றது என்று ரீனா முதல் முறை உணர்ந்தாள்.
கெவினின் ‘டி’ எல்லாம் ‘தனக்கு யாருமில்லை’, ‘ஒன்றுக்கும் உதவாதவள்’, ‘அடிமைப்பெண்’ என்று சொல்லாமல் கொல்லும் அந்த ‘டி’. இந்த சுதர்ஷனன் வெகுயியல்பாய் இருந்தாலும் தன்னை, தன் மனதை மாற்ற முயல்கின்றான் என்று அவன் கரங்களுக்கு புதைந்த கைகளை ஆச்சரியம் தாளாமல் பார்த்து நெருங்கி வந்தாள்.
சுவாதி பைரவ் வரவேற்றதும் திடுக்கிட்டு திரும்பினாள்.
பைரவின் கூர்பார்வை தான் ரம்யா இல்லை என்ற ரீதியில் காண்பதாக அவளுக்குள் தோன்ற திருட்டுத்தனம் கூடுதலானது. சுதர்ஷனனின் கைகளை இறுக பற்றினாள்.
அந்த இறுக்கமே பைரவிற்குள் சினத்தை வாறி இரைத்தது.
இந்த ரம்யா சுதர்ஷனனின் காதலுக்கு செவிமடுத்திருந்தால் முன்னரே தான் ஒதுங்கியிருப்போம். தனியாக துணையின்றி நின்றவளை காதலித்து அவை கரம் கோர்க்காமல், சந்தர்ப்பம் கிடைத்ததில் அவளை புணர்ந்து, இதோ இன்று என் கனவுகள் கை சேரும் நாள். நான் ஒரு தொழிற்சாலைக்கு அதிபராக போகின்றேன். ஆனாலும் உள்ளுக்குள் இதே ஆலைக்குள் ஒரு பொண்ணை புதைத்துவிட்டேனே என்ற குற்றவுணர்ச்சியில் சாகின்றேன் என்று அவன் மனம் வெந்தது. ஆனால் அங்கிருப்பவள் ரம்யாவாக இருந்தால் இந்த கோபம் சரியே. இது யாரோ? யார் இவளோ? என்று ஆராயும் பார்வை தான்.
ரம்யா சுதர்ஷனனை சுவாதியின் அன்னையிடம் நலம் விசாரித்து சஞ்சனாவோடு தீப்சரணோடும் இணைத்துவிட்டு வந்தவரை கவனிப்பதாக பைரவை தனியாக அழைத்து வந்தாள்.
“பைரவ் ரம்யாவை ஏன் அடிக்கடி முறைக்கிற? முன்னயாவது அவளுக்கு நீ விரும்புவது லேசா தெரியும். இப்ப அவளுக்கு நீ புது மனுஷன். அப்படியிருக்க நீ அவளை விரும்பியது கூட தெரியாது. சுதர்ஷனன் கையை பிடிச்சிட்டு போனா உனக்கென்ன?” என்று புன்னகை வீசி நடித்து அவனிடம் எரிமலை கேள்வியை கேட்டாள். உள்ளுக்குள் பைரவ் ரம்யாவை பார்ப்பது பிடிக்காமல் கேட்டாள்.
“பச்… முன்ன அவளை பார்த்தா பிடிக்கும். இப்ப அப்படியில்லை. உனக்கு சொன்னா புரியாது சுவாதி. பட் ஒன்னு சொல்லிடறேன் கேட்டுக்கோ. தீப்சரண் நிச்சயத்துக்கு ரம்யா பாதில கிளம்பன மாதிரி கிளம்பினா போர்ஸ் பண்ணி இருக்க வைக்காத. அவ போனா போகட்டும். ஓகேவா” என்று சொல்லிவிட்டு யாரையோ வரவேற்க ஓடினான்.
‘என்னாச்சு இந்த பைரவுக்கு?’ என்று சுவாதி தோழிகளோடு நடமாட நினைத்தாள். ஆனால் பைரவே தவிர்க்கும் போது தானும் அவ்வாறு நடந்துக்கொள்வது சரியே என்று நட்பை தாண்டி கணவனை தக்க வைத்துக்கொள்ளும் முடிவில் அவளிருந்தாள்.
பீச்சை ஒட்டிய தொழிற்சாலை, அதோடு கூட்டம் என்பதால் ரீனாவுக்கு அவளது திருமண நினைவு வந்து நெஞ்சை அழுத்தியது.
உடை கூட இன்று வெள்ளை நிற சுடிதார் அணிந்திருக்க, சர்ச்சில் அணிந்த திருமண கவுன் நினைவில் வந்து மோதியது.
சுதர்ஷனன் கைகள் கூட கெவின் கைகளாக தோன்ற, மூச்சுவிட சிரமபட்டாள்.
ஆளாளுக்கு என்ன ஏதென விசாரிக்க மூச்சுவிட முடியவில்லை என்பது போல வேர்த்து வழிந்தது.
அங்கிருந்த தோழிகள் சட்டென அங்கு தனியாக இருந்த இடத்திற்கு ஒதுங்கினார்கள்.
“என்னாச்சு..?” என்று ஆளாளுக்கு பதற, சுதர்ஷனனோ “ரம்யா.. ரம்யா..” என்று கன்னத்தை தட்டினான்.
சஞ்சனா பேனை கூட்டி, சுவாதி தண்ணீர் பாட்டிலை திறந்து குடிக்க கொடுத்தாள்.
தீப்சரணோ விபத்து நடந்தப்பிறகு மறுபடியும் ஒரு செக்கப் கூட்டிட்டு போனியா சுதர்ஷனன்?” என்று கேட்டான்.
“இல்லைடா… அவளுக்கு ஆஸ்துமா இருக்கு. இன்ஹேலரை கொண்டு வரலை போல. ரம்யா.. ரம்யா.. மூச்சு விட முடியுதா?” என்று கேட்க தலையாட்டினாள்.
அங்கிருந்த இடத்தில் தலைசாய்த்து படுத்தாள்.
தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தங்கி உணவருந்த சிமெண்டில் செய்த உணவு மேஜை, அதற்கு மேல் அழகான வேலைபாடு கொண்ட டைல்ஸ் பதிக்கப்பட்டுயிருந்தது.
அதில் தான் தலைசாய்த்து ஓய்வு எடுத்தாள்.
பதபதப்போடு பைரவ் அங்கே ஓடிவந்தான். ரம்யாவாக இருப்பவள் கிளம்பும் வரை அவளை சந்திக்காமல் ஓடி ஒளிய நினைத்தவன். ரம்யாவை புதைத்த இடத்தில் வந்து தலைசாயவும் பகீரென்று ஓடிவர தோன்றுமல்லவா?!
அதுவும் தீப்சரண் போலீஸ் ஒய்யாரமாக நிற்க, சுதர்ஷனன் இன்ஹேலரை பற்றி பேச, ‘ரம்யா.. இங்க.. இங்க.., இந்த இடத்துல இந்த இடத்துல தலை சாய்த்து ரெஸ்ட் எடு’ என்று சஞ்சனா கூற, பைரவ் வந்த நொடி சுவாதி சந்தேகமாய் பார்வையிட, அங்கே கொலையே செய்யாமல் பைரவ் குற்றவாளி போல நிற்பதாக எண்ணி பதட்டமானான். ஏனெனில் அந்த இடத்தில் செவ்வக வடிவத்தில் உணவருந்த கொத்தனாரிடம் சொல்லி முடித்திருந்தான். சுற்றி செவ்வக வடிவத்திலும் நடுவில் காலியாக ஒரு செடியை வைக்க கூறியிருந்தான் பைரவ். ஆனால் ரம்யா ஆஸ்துமாவால் மூச்சுதிணறி இறந்ததும், எங்கே புதைப்பது என்று அவசரத்தில் திண்டாடியவனுக்கு என்ட்ரன்ஸில் செயற்கை ஊற்று, சுவர் எல்லாம் என்றாவது உடைப்பட நேரலாம். இந்த இடம் தொழிலாளர்கள் உணவருந்த போகும் இடம். இங்கே நடுவில் சிமெண்டை கொட்டி, அங்கே ரம்யாவை வைத்து அதற்கு மேல் சிமெண்ட் மண் கலவை கொட்டி முடித்து சமதளமாக்கி, மேலே டைல்ஸ் ஒட்டியது பைரவ் தானே. கிட்டதட்ட அந்த செவ்வக இடம் ரம்யாவை புதைத்து நினைவிடம் கட்டியது போல அவன் எண்ணங்கள் சென்றது.
ரம்யா புதைத்த இடத்தில் தோழிகளும் ரம்யா உருவத்தில் இருப்பவளும் வந்து சேர்ந்தாள் பதட்டம் இல்லாமலா?
“கூட்டம் அதிகமில்லையா பைரவ். மூச்சு திணறல். ரம்யாவுக்கு ஆஸ்துமா இருக்கு.
எப்பவாது மூச்சு திணறல் வரும். ஆனா இன்னிக்கு வந்தது மூச்சு திணறல் இல்லை. ஏதோ பயப்படற மாதிரி இருக்கு” என்று சுதர்ஷனன் தான் அவளது சிகையை ஒதுக்கிவிட்டான்.
பைரவோ “வேற ஒன்னுமில்லையே” என்று இதய நோய் வராத குறையாக கேட்டான்.
“நத்திங்” என்று சுதர்ஷனன் கூற, பைரவோ அவனாகவே, “அவங்களுக்கு இன்னமும் ஓய்வு தேவைப்படலாம்.” என்று கூற, சுதர்ஷனனோ ‘மேபீ” என்றவன் “நாம வீட்டுக்கு போகலாமா?” என்று ரம்யாவான ரீனாவை பார்த்து கேட்டான்.
ரீனாவோ மனசோர்வுடன் சம்மதமாய் தலையாட்டினாள்.
பைரவிடம் சொல்லிவிட்டு கிளம்ப, பைரவிற்கு வித்தியாசமான எண்ணங்கள் மட்டுமே தோன்றியது.
இந்த பெண் ரம்யா இல்லை. ஆனால் இந்த பெண் இங்கு வந்ததும் ஏன் வித்தியாசமாக பாவித்தாள்.
ரம்யா இறப்பு யாரேனும் அறிவார்களா? உண்மைக்கு கை கால் முளைக்கின்றதா? ஆனால் நான் தவறு செய்யவில்லையே. ஆசைப்பட்டேன்.. ரம்யாவோடு படுக்கை பகிர, அது கூட அவளும் இஷ்டப்பட்டே நிகழ்ந்தது. இப்பொழுது இறந்தும் ஏன் என்னை கொல்கின்றாள். இதற்கு ஏதேனும் முடிவு எடுக்க வேண்டும். இல்லையேல் நான் என்னை தொலைத்து வாழ்வை வெறுப்பேன் என்று புரிந்தது.
ரம்யா செல்வதை தோழிகள் கையசைத்து வழியனுப்பினார்கள்.
பாதி வழி சென்றதும், சுதர்ஷனன் கடல் பக்கம் நிறுத்தினான்.
“இங்க ஏன் நிறுத்தறிங்க. வீட்டுக்கு போகலாம்” என்று படபடப்பாய் உரைத்தாள்.
“என்னாச்சு ரம்யா? ஏன் ஒரு மாதிரி இருக்க? லைப்ல நீ பணம் இல்லாதப்ப கூட சந்தோஷமா வாய் விட்டு சிரிப்ப. ஆனா விபத்து நடந்து வந்ததிலருந்து, உன் நினைவை மறந்தப்பிறகு நீ சிரிக்கவே மறந்துட்ட.
என்ன தான் யோசனை? உன் பழைய லைப் மறந்துப்போனா தான் என்ன?” என்று சினத்தோடு கேட்டான்.
அப்பா மதுகிருஷ்ணன் திருந்திவிட்டார், அம்மா ஆனந்தி தங்கள் திருமணத்திற்கு சம்மதித்து விட்டார். விஷால் கவிதா இருவருமே ரம்யாவின் கல்யாணத்திற்கு தவமிருக்க, சுதர்ஷனன் பேராசையுடன் எதிர்பார்க்க இன்னமும் யாரோ ஒருவர் என்ற உணர்வு.
இங்கு ரம்யா என்ற ரீனாவுக்கோ சொல்லயியலாத வலியில் அழுகையை வெளிப்படுத்தினாள்.
“டாக்டர் நினைவு மறந்ததால் இப்படி தான் பிஹேவ் பண்ணுவேன்னு சொன்னாங்க. ஆனா அதுக்காக நாங்க மட்டும் உன்னை சுத்தி சந்தோஷமா மாற்ற முயற்சிக்கறதுல ஒரு புரயோஜனமும் இல்லை ரம்யா. நீயும் உன் பக்கம் ஒரடி எடுத்துவை. வாழ்க்கை ஒரு முறை தான். அந்த ஒரு முறையும் சந்தோஷமா வாழ முயற்சிப்பண்ணு.” என்று இறைஞ்சாத குறையாக பேசினான்.
ரீனாவோ கண்ணை துடைத்து, “சப்போஸ்.. நான் ரம்யாவா இல்லாம, வேற யாரோ ஒரு பொண்ணா இருந்தா, என்ன செய்வ? உருவ ஒற்றுமையில் எவளோ ஒருத்தியா நான் இங்க வந்து சேர்ந்திருந்தா? என்னைக்காவது அது தெரிய வந்தா? நீ அப்பவும் என்னை விரும்புவியா?” என்று நெற்றி சுருங்கி கேட்டாள்.
சுதர்ஷனனோ அதிர்ந்து நோக்கினான்.
-தொடரும்
Super👍👍
Paavam bairav
Sudarshan enna solla porano theriyalaye 🙄🙄🙄🙄🙄
Wow Sema Bhairav you need this tension. Intresting sis.
பைரவ் என்ன பண்ணப் போறான் சுதர்சன் பதிலுக்காக அடுத்த பகுதிக்கு மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் செம சிஸ் கதை வித்தியாசமாக நகர்கிறது 😃👍
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Kutram ulla nenju kurukurukum nu solvanga andha nelamai dhan eppo bairav kum reena kum enna nadakumo parpom 🧐🤔 reena unmaiya solluvalaa 🤨 next epi ku eagerly waiting sis 👍
THRILLING MOVEMENT. intha bhairav avan vaiyalaye matuvan ninaikiren apo tha veliya varum unmai apram reena unmaiya solli sun kuda vazha poralo ! ? papom
Bhairav ku ipo thirudanukku tel kottuna mari nilamai….
Reena ku ramiya iranthuttanu thayrinja yantha thayakkamum illama ramya va life continue panipa ….
Athuku koranjapacham sutharsun tiyatgu unmaiya sollanum aye 🤔
தேநீர் மிடறும் இடைவெளியில்..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 16)
அய்யய்யோ..! இந்த ரீனா என்னடான்னா எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைங்கிற மாதிரியே நடந்துக்கிறா. அங்கொருத்தன் என்னடான்னா
திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரியே நடந்துக்கிறான்.
கடைசியில, பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்ங்கிற மாதிரித்தான் போய் முடியப்போகுதோ என்னவோ ?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Bairav avan ramya ah kolla seiyala na kooda ava erapu ku avanum oru karanam na ra ennam avan ah ipadi alakazhikuthu .inga reena ku avaluku oru azhagana family kedaichum aval ah la nimathi ah iruku ah mudiyala