Skip to content
Home » தேநீர் மிடறும் இடைவெளியில்-4

தேநீர் மிடறும் இடைவெளியில்-4

அத்தியாயம்-4

  ஆட்டோக்காரன் சுற்றி முற்றி பார்த்து சுவாதி வீட்டின் கேட் முன் நிறுத்தினான்.

  “ஏம்மா… சுத்தி வீடு இல்லை. இந்த வீடு மட்டும் தனியா இருக்கு. தெரியாத இடத்துக்கு வந்துட்டியா? எதுக்கும் இந்த இடம் தானா? சேப்டியா இருக்குமா?” என்று ஒரு வயசு பெண் என்ற கரிசணத்தில் கேட்டார் டிரைவர்.

  “அட… இது என்னோட காலேஜ் பிரெண்ட் வீடு அண்ணா. தனி பங்களா வேண்டும்னு அவ கணவரிடம் ஆசையா கேட்டு வாங்கியிருக்கா. ரொம்ப தெரிந்த இடம் தான். பயப்பட அவசியமில்லை‌.” என்று தன் நலனிலும் அக்கறை செலுத்தி விசாரித்தவரிடம், புன்னகை முகமாக பதில் தந்தாள்.

  “சரிம்மா… அப்பன்னா கிளம்பறேன். ஜாக்கிரதைம்மா” என்று புறப்பட்டார்.

ஆட்டோ சென்றதும் வாட்ச்மேனை தேடினாள். ஆனால் அங்கே வாட்ச்மேன் இருப்பதற்கான சுவடேயில்லை.

  ரம்யா அதிர்ஷ்டம் அந்த பெரிய கேட் கதவு திறந்திருந்தது.
  “என்ன இது கேட் திறந்து இருக்கு, வாட்ச்மேன் இல்லை.” என்று நடந்தாள்.

  ‘பச் போன் இருந்தா சுவாதியிடம் கால் பண்ணிடலாம். இப்ப காலிங் பெல் அடிக்கணும்.’ என்று வீட்டின் அழைப்பு மணியோசையை அடித்துவிட்டு காத்திருந்தாள்.
 
   வீட்டு கதவு திறக்காமல் அதே நிலை இருக்கவும் ‘பச்’ என்று சலித்து மீண்டும் காலிங் பெல்லை அழுத்தினாள்‌.
 
  இந்த முறையும் கதவு திறக்கவில்லை‌. கைகடிகாரத்தை பார்த்து பார்த்து அலுத்துக்கொண்டு இடைவிடாமல் அழுத்தினாள். இம்முறை சுவாதி தன்னை டீசன்ஸி இல்லாதவள் என்று எண்ணினால் கூட பரவாயில்லை என்ற அர்த்தத்தில் அழுத்தினாள்.

   ‘வீட்ல இருக்காளா இல்லையா?’ என்று தோட்டத்தில் நாலாபக்கம் பார்வையிட்டாள்.

  அங்கிருந்த நீச்சல் குளம் அவளை கவர்ந்தது. அதை ரசித்து பார்வையிட்டவளின் மனமோ, ‘ஆடம்பர வசதிகளை அதிகம் ஆசையா பார்க்காத. அப்பறம் அதுவே பேராசையா மனசை உறுத்தும். தேவையில்லாம நமக்கு மனசஞ்சலம் உண்டாகும்.’ என்று கதவை தட்ட, அங்கே கதவிற்கு பதில் ஏதோ சுருள் சுருளாக கையில் அகப்பட்டது.

திடுக்கிட்டு திரும்பி பார்வையிட, அங்கே பைரவ் நின்றிருந்தான்.
  சுவாதியின் கணவன் சட்டையில்லாமல் வெறும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து பைரவ் நிற்க, அவன் நெஞ்சு ரோமத்தில் தன் கைகள் என்றதும் அதிர்ந்தாள்‌.

  இங்கே பைரவ் இருப்பார் என்று அவள் அறிந்தாலும், இந்த நிலையில் ரம்யா எதிர்பார்க்கவில்லை.

  “ஓ ரம்யாவா? வா ரம்யா” என்று பைரவ் வரவேற்றான்.

  “சு..சுவாதி இல்லையா” என்று உள்ளே வர தயங்கினாள்.

   “சுவாதி அவசரமா அவளோட அம்மாவை பார்க்க போயிருக்கா. அவங்களுக்கு லேசா மயங்கிட்டாங்க. இவ உடனே பயந்துட்டா. உன்னிடம் இங்க வரவேண்டாம்னு நிறைய தடவை கால் பண்ணினா. பட் நீங்க எடுக்கலை. சரி உன்னோட ப்யூட்டிபார்லர் வேலை செய்யற ரிசப்ஷன் பெண்ணிடம் அப்பாயின்மென்ட் கூட காலையில் கேன்சல் ஆகிடுச்சு ரம்யாவிடம் சொல்லிடுனு சொன்னாளே. வாட்சப்ல கூட சாட் பண்ணி இன்பார்ம் பண்ணினாளே” என்று வரவேற்று சோபாவில் அமர கைகாட்டி, ஐஸ்வாட்டாரை நீட்டினான்.

   இங்கு வந்ததிலும், பைரவ் பார்மாலிட்டிஸுக்கு தந்த நீரை வாங்கி பருகினாள்.

  வெற்று மார்பில் இருப்பதால் ஏறிட தயங்க, “ஓ.. சாரி. நீங்க காலிங் பெல் இடைவிடாம அடிக்கவும் அவசரமா ஓடிவந்தேன். இப்ப வந்துடறேன்.” என்று மாடிக்கு படிக்கட்டில் ஏற, “இல்ல‌… நான் கிளம்பறேன்” என்று ரம்யா கூற, “ஒரு நிமிஷம் வந்துடறேன் ரம்யா.” என்று பைரவ் காதில் வாங்காமல் மாடியறைக்கே ஓடினான்.

‘அச்சோ… சுவாதி வேற இல்லை‌. இந்த போனை மட்டும் ஸ்கூட்டில மறந்து வைக்காம இருந்திருந்தேன். அப்பவே தெரிந்திருக்கும். இங்க வந்திருக்கவே மாட்டேன். இவ்ளோ தூரம் வராம இருந்திருப்பேன். பணம் வேஸ்ட், அலைச்சல் வேற, இந்த ஸ்கூட்டியை வேற ரிப்பேருக்கு எடுக்கணும். போன் வெளியே இருந்து யாராவது எடுத்திருந்தா, அது வேற போச்சு. கடவுளே…. இந்த லட்சணத்துல கேலண்டர்ல கிழிக்கறப்ப, உன் அனைத்து வேண்டுதலுக்கும் பலனாய் இறைவனை அடைவாய்’ வேற போட்டிருந்தது. குலதெய்வ பைரவா’ என்றவளுக்கு சட்டென சுவாதி கணவரின் பெயர் பைரவ் என்றது நினைவு வர, மாடியை பார்த்து அவர் வர்றப்ப பைரவானு புலம்பி தப்பா போயிடப்போகுது. இன்னிக்கு எல்லாம் போச்சு. அவர் வந்ததும் சொல்லிட்டு கிளம்பணும். போன் வேற இல்லை. கேப் புக் பண்ண பைரவிடம் கேட்கணும். இல்லைன்னா… மெயின் ரோட் வரை நட்ராஜ் சர்வீஸ் தான்’ என்று கையை பிசைந்து வீட்டை கவனித்தாள்.

  இதுவரை கவனிக்காத அழகு வீட்டின் அமைப்பில் அவளை இழுத்தது.

  மார்பள்ஸ், விலையுயர்ந்த கண்ணாடி விளக்கே அவளுக்கு இவ்வீட்டின் பிரமாண்டத்தை கூட்டியது.
   அதிலும் அங்கிருந்த பெயிண்டிங் ஒவ்வொன்றும் அவளை ஈர்த்தது.
    பூச்சாடி கூட விலையுயர்ந்த பூக்களை அலங்கரித்திட வைத்திருந்தனர்.‌

  கண்ணாடி உணவுமேஜை பளிச்சென்றிருந்தது. அதில் மாடிவளைவிலிருந்து வரும் பைரவின் உருவத்தை காட்ட, சட்டென அப்பக்கம் பார்வையை மாற்றினாள்.
 
  மாடியின் வளைவில் உதட்டில் புன்னகை முகமாக வந்தவன், “சாரிங்க… வீட்ல உங்களை தனியா உட்கார வச்சிட்டேன். சுவாதி இல்லை‌. வேலைக்காரங்களும் மூன்று நாள் லீவு. அதான் நான் மட்டும்.
ஜூஸ் எதுவும் குடிக்கறிங்களா? டீ காபி? என்று வந்தான்.

  ரம்யா அவனின் வசீகரமான புன்னகையில் “இல்ல பைரவ் எதுவும் வேண்டாம். சுவாதி என் போனுக்கு கால் பண்ணிருப்பா. பட் ஒரு காலேஜ் பொண்ணுக்கு மேக்கப் பண்ண அவங்க வீட்டிக்கு போயிருந்தேன். கேரளா ஸ்டைலில் மேக்கப் பண்ணிட்டு என் ஸ்கூட்டியை எடுத்துட்டு இங்க வர பிளான். ஸ்கூட்டி ஓயரை அங்கிருந்த எலி கடிச்சி வண்டி ஸ்டார்ட் ஆகலை. அதனால் இங்க ஆட்டோல வந்துட்டேன். போனும் ஸ்கூட்டில  முன்பக்கம் இருக்கற பிளேஸ்ல வச்சிட்டேன்.
  அதனால் சுவாதி மெஸேஜ் அனுப்பியது கால் பண்ணியது எனக்கு தெரியாம போயிடுச்சு. இங்க வந்து உங்களை வேற டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.” என்று வருத்தம் தெரிவித்தாள்.

“இட்ஸ் ஓகே… சுவாதி இருந்தா தான் நீங்க இங்க வரணும்னு இல்லை. ஐ மீன் உங்க வேலை விஷயமா மட்டும் தான் வரணும்னு அவசியம் இல்லை ரம்யா. நீ சுவாதியோட பிரெண்டா எப்பவுமே வரலாம்.” என்றார்.

  ரம்யாவோ சிநேகமாய் ஒரு புன்னகை வீசினாள்.

  “காபி டீ?” என்று கேட்க, ரம்யாவோ தனியாக…, சுவாதி கணவரோடு, தனி பங்களாவில் ஏதேனும் மயக்கமருந்து கொடுத்து, மேற்கொண்டு யோசிக்காமல் தவிர்க்க பார்த்து எழுந்தாள்.
 
  அவசரத்தில் எழவும் அங்கு குடிக்க கொடுத்த கண்ணாடி டம்ளரில் கைபட்டு விழந்து உடைந்தது. அவசரத்தில் கால் பதித்த, ரம்யாவின் பாதத்தில் அந்த கண்ணாடி சில் குத்தி ரத்தம் வழிந்தது.

   “ஸ்ஆ… அம்மா” என்று தடுமாறினாள்.

“ஏ… ரம்யா.. பார்த்து” என்று பைரவ் அவள் கையை பற்றினான்.‌

   “ஓ மை காட். என்ன அவசரம்” என்று தாங்கி பிடித்து “முதல்ல உட்காரு” என்றவன் அவள் உட்கார்ந்ததும் கண்ணாடி சில்லை காலிலிருந்து எடுத்தான்.

  அடுத்த நொடி பொலபொலவென ரத்தம் செட்டியது.

   ரம்யாவோ நெஞ்சில் கைவைத்து நீவிக்கொண்டாள்.
  
   “ஒரு நிமிஷம் இதோ வந்துடறேன்” என்று ஓடினான்.

     வேகவேகமாக மாடிக்கு ஓடி பஸ்ட்எயிட் பாக்ஸ் கொண்டு வந்து, ரம்யாவின் காலை தொட்டு தூக்கி, தன் ஷார்ட்ஸ் அணிந்த தொடையில் வைத்து, ரத்தத்தை துடைத்து, ரத்தம் நிற்கவும், பேண்ட் எயிட் இறுக கட்டினான்.
  
   அழகான இளஞ்சிவப்பில் நகப்பூச்சு தீட்டியிருந்தாள். மெடிக்கர் பெடிக்கர் என்று எல்லாம் போட்டு பாதம் மிருதுவாக இருந்திருக்க வேண்டும். அதுவும் அழுக்கில்லாத பாதம், பிறந்த குழந்தையின் சிவப்பு நிறத்தில் ஒத்திருந்தது. 

   பைரவ் பாதங்களை கவனித்து மெதுவாக ரம்யாவை ஏறிட, மயங்கி சரியும் நிலையில் ரம்யா தள்ளாடினாள்.

  அவளை தன் தோளில் தாங்கி, கைகளால் அள்ளிக்கொண்டான்.

  “பை..ரவ் என்..ன பண்…றிங்க?” என்று தள்ளாட்டத்தில் குழறலாய் பேசினாள்.

  ரம்யா பேசுவதை எதையும் காதில் வாங்காமல் பைரவ் மாடிக்கு அவளை ஏந்தி கொண்டு சென்றான்.
அவனது அறைக்கு அழைத்து சென்று மெத்தையில் கிடத்திட, “இங்க ஏன் தூக்கிட்டு வந்திங்க” என்று முகம் சுழித்து பார்வையிட, “இப்ப என்னாச்சு? கால்ல ரத்தம் சொட்டுது. கட்டு கட்டியிருக்கேன்ல… கொஞ்சம் ரெஸ்ட் எடு ரம்யா” என்று உரிமையாக தலையணையை முதுகுக்கு வைத்தான்.

    “நான் இங்க வரை வருவது சரியில்ல பைரவ். சின்னதா சில்லு குத்தியிருக்கு. அதுவும் நீங்க உடனே எடுத்திட்டிங்க. பிறகு இங்க இருக்க வேண்டாமே. சுவாதியும் இல்லை. நான் கிளம்பறேன். எனக்கு ஆட்டோ மட்டும் புக் பண்ணி தாங்களேன் ப்ளீஸ்.” என்றாள்.

   “இங்க ஆட்டோ எல்லாம் வராது ரம்யா கார் மட்டும் தான். கொஞ்ச நேரம் கழிச்சு கார் புக் பண்ணறேன். ஆனா ரொம்ப நாளா உன்னிடம் பேசணும்னு எனக்குள் தோன்றும். ஆனா சுவாதி இருப்பா பேச முடியாது. இன்னிக்கு சுவாதி இல்லை நீயும் நானும் தனியா இருக்கோம். நான் பேச நினைச்சதை சொல்லிடவா?” என்று கேட்டான்.

  ரம்யாவுக்கு இதென்ன வம்பா போச்சு? இங்கு வந்தது சுவாதிக்காக. ஆனால் அவள் இல்லை. அப்படியே செல்ல முயன்றது குற்றமா? கண்ணாடி டம்ளர் உடைந்து காலில் குத்தி , இப்பொழுது சுவாதி-பைரவின் படுக்கயறை வரை வந்து ஓய்வெடுக்க வேண்டுமா? ஓய்வெடுப்பது அவசியமா? இதெல்லாம் சாதாரணமான காயங்கள் என்று செல்லலாமென்றாலும் பைரவ் தன்னிடம் பேச வேண்டும் என்கின்றார். என்ன பேச போகின்றார். இந்த நிலையில் சுவாதி வந்து பார்த்தால் தவறான அபிப்ராயம் வந்து சேரும். இதில் என்ன பேச்சு?
 
  முதலில் எழுந்திடலாமென்று ரம்யா முயல, “இந்த மெத்தையில் என்னோட படுக்கையை பகிர வேண்டியது நீ ரம்யா. ஆனா என் போதாத நேரம் சுவாதியை மணந்துக்கிட்டேன்.

நான் மணக்க ஆசைப்பட்டது உன்னை போல ஒருத்தியை தான். உன்னை பார்க்கும் பொழுதெல்லாம், நீயும் நானும் கல்யாணம் பண்ணிருக்காம போயிட்டோமேனு நினைக்காத நாளில்லை ரம்யா.

   உன்னோட அழகை வச்சி சொல்லறேன்னு நினைக்காத. நீ புத்திசாலி. சுவாதி எல்லாம் என்னை மாதிரி பணக்காரனா கிடைச்சா போதும் காதலிச்சு கல்யாணம் செய்து பணக்காரி ஆகியிருக்கலாம். ஆனா அவளுக்குன்னு ஒரு அடையாளத்தை, இல்லை அவளால் நாலு பேருக்கு உதவி செய்வது, எந்தவித அச்சீவ்மெண்ட் இல்லை.
   உன்னை பாரு நிற்க நேரமில்லாம ஓடுற. தம்பி தங்கை என்று அவர்கள் நலனுக்கு உன்னை மெழுகா மாத்திக்கிட்ட, உனக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கி தனியாளா உழைக்கிற‌.

   நீ வேண்டுமின்னா பாரு இரண்டு வருஷத்துல நீ ஒரு பெரிய பணக்காரியா ஒப்பனையாளரா மாறி நிற்ப.” என்று கையை தீண்டினான்.

  ரம்யாவோ, அவன் தீண்டலில் “கையை எடு பைரவ் நான் கிளம்பறேன். நீங்க நான் வந்தப்ப குடிக்கலை. ஆனா இப்ப லைட்டா குடிச்சிட்டு வந்துட்டிங்கன்னு நினைக்கறேன். சுவாதி வந்தா சொல்லுங்க.” என்று கூறி எழுந்தாள்‌.

   பைரவை பற்றி தவறாக நினைக்கவில்லை. ஏனெனில் இதே விஷயத்தை சுவாதி ஒருமுறை ரம்யாவிடம் கூறியிருந்தாள். ‘பைரவ் எல்லாம் உன்னை மாதிரி ஒருத்தியை தான் விரும்பறதுக்கு பதிலா என்னை மாதகரி ஒருத்தியை விரும்பிட்டார். உன்னை பார்க்கறப்ப அவர் கண்ணுல எக்ஸ்ட்டாடினரி இன்ட்ரஸ்ட் இருக்கு ரம்யா’ என்பாள்.

  ஏன் ரம்யாவுமே அந்த அதீத ரசாயன பார்வையை கவனித்திருக்கின்றாள்.
அதனால் தான் நேற்று பார்வையால் கூர்த்தீட்டிய தீப்சரணை விட, பைரவ் இவ்வளவு பேசியும் பொறுமையாக செவி மடுத்தியது.

  ரம்யா காலை கீழே ஊன்றி இரண்டடி நகர……

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.  

6 thoughts on “தேநீர் மிடறும் இடைவெளியில்-4”

  1. Enna Evan eppdi erukan cha oru ponnu thaniya erundha endha ulagam kandipa avaluku paadhugappu Ella pa🙄 eppdi Evan kita erundhu thappichu vara poralo🧐

  2. M. Sarathi Rio

    தேநீர் மிடறும் இடைவெளியில்..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 4)

    அய்யய்யோ..! இது என்ன கதை வித்தியாசமா இருக்குது. வழக்கமா ஹீரோயினிசம் கதை, ஹீரோனிசம் கதை கொடுப்பாங்க. இந்த தடவை எவன் ஹீரோன்னு தெரியாமலே, அதுவும் கல்யாணமான தோழிங்களோட ஹஸ்பெண்ட்ங்களே ஹீரோயினை ரூட் விடறதையும், சைட் அடிக்கிறதையும் தத்ரூபமா கண்ணாடி மாதிரி வெளிச்சம் போட்டு காட்டுறாங்களே…? இதெல்லாம் பார்த்து நமக்கே பயம் வருதுன்னா, ரம்யா எந்தளவுக்கு பயந்து நடுங்கணும்…?

    ஆனா, இந்த பைரவ் சொன்ன பேச்சை கேட்குற ஆளா தெரியலையே..? வரம்பு மீறிடுவானோ..? ரம்யா மாட்டிப்பாளோ…? இரத்த அழுத்தம் எகிறுதே.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *