அத்தியாயம்-6
”ரம்யா ரம்யா பயமுறுத்தாதே ரம்யா.” என்று பைரவ் உலுக்க ரம்யா அங்கே விளையாடவில்லை. நிஜமாகவே அவள் இம்மண்ணுலகை விட்டு விண்ணுலகம் அடையும் முக்திக்கு சென்றுவிட்டாள்.
சொல்லப்போனால் ரம்யாவின் அனைத்து வேண்டுதலுக்கும் இறைவன் மோட்சம் தந்து வீடுபேறு அடைய வைத்துவிட்டார்.
பைரவிற்கு கைகள் நடுங்கியது. ரம்யாவை வாசலில் நிற்க வைத்து பேசி அனுப்பியிருக்கலாம் அல்லது தண்ணீரை கொடுத்து அனுப்பி விட்டிருக்கலாம்.
கண்ணாடி சில் குத்தி ஹாலிலேயே முதலுதவி செய்து அனுப்பி வைத்திருக்கலாம். அதெல்லாம் செய்யாமல் படுக்கயறைக்கு அழைத்து வந்ததன் விளைவு, அவளிடம் காதலை பகிர்ந்து கலவி கொள்ள ஆசைப்பட்டு விட்டது.
இந்பொழுது போலீஸுக்கு தகவலும் கூற முடியாது. ஏதோ ரம்யாவை தனியாக வந்ததால் அவளை கற்பழித்து கொன்றுவிட்டதாக தன் மீது பழி ஏற்பட்டு விடும். ஏனெனில் ரம்யாவோடு உடலுறவு நிகழ்ந்ததற்கு சாட்சி உண்டு. போஸ்ட்மார்ட்டம் செய்தால் கண்டறிந்து தன்னை ஜெயிலில் தள்ளி கம்பி எண்ண வைத்துவிடுவார்கள்.
சுவாதியோடு திருமணம் முடிவடைந்து விட்டதே. ஏன் தான் இந்த பழைய காதல் நினைப்பில் வந்து வாட்டியது என்று தன்னை தானே திட்டி தீர்த்து அழுதான்.
ரம்யாவின் இறப்பு, மூச்சு திணறலால் ஏற்பட்டதென்று காட்டு கத்தல் கத்தினாலும் தன்னை நம்புவதற்கு ஆள் வேண்டுமே.
இப்பொழுது போலீஸுக்கு சொல்லவா வேண்டாமா? என்று பலவிதத்தில் சிந்தித்தான் பைரவ்.
இந்த நிலையை எவ்வாறு சரிசெய்வது. ரம்யாவின் இறப்பை எப்படி அவள் வீட்டில் பகிர்வது? சுவாதி சுவாதியிடம் சொல்லலாமா?” என்று அங்கே ரம்யா இறந்த இடத்திலேயே அவளை கண்டு தலைகோதி பைத்தியம் போல சிந்தித்தான்.
காலிங் பெல் டிங்டாங்’ என்று கேட்க, நெஞ்சில் ‘லப்டப்’ ஓசை மரத்தானில் முதலில் வருபவனை போல ஓடியது.
அறையை சாற்றி கீழே வந்த பைரவ் கதவை திறக்க, அங்கே ஸ்விகியில் ஆர்டர் செய்த உணவை எடுத்து வந்து இளைஞன் இருந்தான்.
அதே சமயம் சுவாதி போனில், “என்ன டார்லிங் ஸ்விகியில் சிக்கன் பிரியாணி, மட்டன் சுக்கா, இறா தொக்கு ஆர்டர் போட்டு அனுப்பிட்டேன். நான் இல்லைன்னு சாப்பிடாம வெறும் வயிற்றில் தண்ணி அடிக்காதிங்க. உடலை கவனிச்சிக்கோங்க. பைரவ்… நான் வர இரண்டு நாள் ஆகும்னு பீல் பண்ணாதிங்க. நம்ம பேக்டரி திறக்கறதுக்கு முன்ன வந்துடுவேன்.” என்று பேசியவளிடம், “சுவாதி… சுவாதி” என்று பிதற்றினான்.
“ஆங்… ஆன்லைன் பேமெண்ட் பண்ணிட்டேன் டியர். நீங்க டிப்ஸா ஏதாவது அந்த பையனுக்கு கொடுங்க போதும். ரொம்ப தூரம் இருக்குற வீட்டுக்கு புட் வந்து தந்துட்டு போறான். டிப்ஸ் தந்தா சந்தோஷப்படுவான்.” என்று கூறினாள்.
“சுவாதி.. நான்” என்று ஆரம்பித்தவனை, “அம்மா கூப்பிடறாங்க பைரவ். அப்பறம் கால் பண்ணறேன். பை உம்மா” என்று வைத்தாள்.
போனை பார்த்தவன் வந்தவனுக்கு நூறு ரூபாயை தந்துவிட்டு ”நீ கிளம்புப்பா தேங்க்ஸ்” என்று அனுப்பிவிட்டான்.
மாடியில் ரம்யா இறந்து கிடக்கின்றாள். இங்கே எங்கிருந்தாலும் உணவு வரவழைத்து சுவாதி பசியை போக்க நிற்கின்றாள்.
பிணத்தை வைத்துக்கொண்டு சாப்பிட முடியுமா? அல்லது ஒரு கொலை செய்துவிட்டு பிடி உணவு தான் இறங்குமா? அய்யோ… நானே கொலை என்று நினைத்தால் யாருக்காவது தெரிய வரும் போதும் இப்படி தானே நினைப்பார்கள்.
தலையில் தலையில் அடித்து அழுதான் பைரவ்.
காதலிச்சதை மட்டும் சொல்லிட்டு அமைதியா இருந்தா சுவாதியிடம் இந்த மரணத்தை சொல்லியிருக்கலாம். இவளோட செ-க்ஸ் வச்சிட்டு இப்ப அதையும் அழிக்க முடியாது. நிச்சயம் போலீஸ் கேஸ் என்றால் இது திட்டமிட்ட கற்பழிப்பு கொலை என்று தான் முடிவுக்கட்டுவாங்க. ரம்யாவுக்கும் முழு சம்பந்தமான பின்ன தான் இந்த உடலுறவு நடந்ததுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க.
சரியோ தவறோ ரம்யா இறப்பை வெளிப்படுத்த முடியாது. என்ன செய்யறது? என்றவன் குறுக்கும் நெடுக்கும் நடந்தான்.
பசி வேறு வாட்டியது. காலையில் குளித்து முடித்து ரம்யா காலிங் பெல் அழுத்தவும் கதவை திறந்தது. அதன் பின் ரம்யாவோடா பேசி நெருங்கிய களைப்பு வேறு. அதன் பின் ஒரு தேநீர் அருந்தியது. அந்த தேநீர் இடைவெளியிலும் மொத்த நிம்மதியும் அழியும் வகையில் ரம்யா இறப்பு. உணவெல்லாம் மனைவி சுவாதி சாப்பிட அனுப்பி வைத்துவிட்டாள்.
மனைவி… இதை மறந்து தானே ரம்யாவோடு இணங்கி சுகித்தாய்.
*காதலித்தவளே கண் முன் வந்தாலும், திருமணம் முடிந்தப்பின் எந்த பெண்ணையும் தீண்டுவது தவறு* என்று பைரவ் பலமான பாடம் கற்றான்.
இதில் அந்த மயக்கத்தில் சுவாதியை விவாகரத்து செய்யும் அளவிற்கு மனமானது சென்றதே. ஒருவேளை ரம்யா இறக்காமல் இருந்தால் நிகழ்ந்திருக்கலாம். யார் கண்டது?!
இப்பொழுது… இப்பொழுது என்ன செய்ய? இரண்டு நாள் சுவாதி வரமாட்டாள். அதனால் வேலைக்காரியும் வரமாட்டாள். ஆனால் மாலை வாட்ச்மேன் வந்துவிடுவான். அதற்குள் ரம்யாவை என்ன செய்ய?
அதீத டென்ஷனில் புகையை எடுத்தான்.
புகைப்பதை விட வயிறு காந்தவும் சுவாதி ஆர்டர் செய்த உணவை வேகமாய் சாப்பிட்டான்.
உணவு மேஜை… உணவு மேஜையில் சாப்பிட்டு இருந்தவனுக்குள் அந்த யோசனை தோன்றவும், நிம்மதியுற்று மடமடவென சாப்பிட்டு கை அலம்பினான்.
ரம்யா இங்கு வந்ததும் அவள் இருந்த இடத்தில் அவளது உடைமைகளை தேடினான். ரம்யாவின் செருப்பு கைப்பை எடுத்தான்.
இன்ஹலரை தேடும் போது கைப்பை சிதறியிருந்தது. அதில் அவளது மருந்து மாத்திரை அலங்கார பொருட்கள், போட்டோ குட்டி பர்ஸ் என்று எடுத்து அதில் திணித்தான்.
கூடுதலாக இங்கு சுவாதிக்கு அலங்காரம் செய்வதற்காக எடுத்து வந்த அலங்கார பெட்டியும் எடுத்தான். இது கூட சுவாதி ரம்யாவுக்கு பரிசாக வாங்கி தந்தது.
அதை இரண்டும் எடுத்து சென்று அடிக்கடி உபயோகிக்கும் பயர் பிளேஸில் போட்டு எரித்தான்.
அலங்கார பொருட்கள் எல்லாம் பிளாஸ்டிக் வகைகள் என்பதால், திகுதிகுவென எரிந்தது. சிலது உருகி உருகி வழிந்தது. அதெல்லாம் தடையமேயில்லாமல் எரிக்கும் விதமாக பார்த்துக் கொண்டான்.
இடையில் ரம்யாவை தங்கள் ஆட்டுதோல் பதனிடும் தொழிற்சாலையில் கறியை பதப்படுத்த உபயோகப்படுத்தும் கவரில் அவளை பேக் செய்திருந்தான். அழகான பொம்மை போல அதில் பொருந்திப் போனவளை கண்டு முகத்தில் அடித்து அழ ஆரம்பித்தான்.
கல்யாணமே வேண்டாம்னு இருந்தது இப்படி அதீத மூச்சு திணறலுக்கு தானா ரம்யா. நான் காதலிச்சதை உன்னிடம் சொல்லாம அப்படியே கண்ணெதிரில் உன்னை ரசித்து காலம் முழுக்க நடமாடிட்டு இருந்ததையே பார்த்திருப்பேனே. இப்படி என்னோட பேராசைக்கும், உன்னோட ஆசைக்கும் நடுவில் உயிர் போயிடுச்சே.
பலதும் நினைத்து கண்ணீரை துடைத்து அவளை தாங்கி கீழே டுத்து வந்தான்.
இந்த வீடு கட்டி முடித்தப்பின், இன்று மட்டும் மாடிபடியை எத்தனை முறை ஏறியிறங்கினான் என்று கணக்கில்லை. ஆனால் இன்று தான் அதிகமாக மாடியறை ஹால் என்று அதிகமாக ஏறியிறங்கியது.
ரம்யாவை தூக்கி வந்தவன் அவளை தரையில் கிடத்தினான்.
எதற்கும் மீண்டும் நெஞ்சில் காது வைத்து பார்த்தான். உயிர் பிரிந்து சில்லிட துவங்கியிருந்தது. வாட்ச்மேன் வருவதற்குள் காரில் ஏற்றி வெளியேறி வேண்டுமென, தனது காரில் டிக்கியில் ரம்யாவை போட்டு பூட்டினான்.
இங்கும் அங்கும் பார்வையிட்டவன், வீட்டிற்கு வந்தான்.
வீட்டில் அவன் ரம்யாவின் பொருளை எரித்த இடத்தில் ஏதேனும் அலங்கார பொருட்கள் உள்ளதா என்று ஒரு தடவைக்கு இரண்டு தடவை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டான். உடைந்த கண்ணாடி டம்ளர் குப்பையில் போட்டிருந்தான். அதில் கூட ரம்யாவின் ரத்த துளிகள் இருக்கின்றதா என்று ஆராய்ந்துவிட்டான். ரம்யாவிற்கு அடிப்பட்ட போது துடைத்த பஞ்சு துணிகள் எல்லாம் கூட எரிக்கும் போது அதையும் போட்டிருந்தான்.
மாடியில் தேநீர் கொட்டிய பெட்ஷீட் கூட எடுத்து அப்பறப்படுத்தி துவைக்க போட்டிருந்தான். இன்ஹேலர் அது தான் எங்கே கிடக்கின்றதென்று தெரியவில்லை. ரம்யா மூச்சு திணறவும் அவள் முன் நீட்டினான். இறந்துவிட்டால் என்ற அதிர்ச்சியில் கைப்பிடியை தளர்த்திட அது எங்கேயோ விழுந்தது. இப்பொழுது தேடியதும் அவன் கண்ணில் சிக்காமல் சதி செய்தது.
முக்கியமான தடயமாயிற்றே. ரம்யாவிற்கு இந்த வியாதி உண்டென்று சுவாதி அறிந்திருந்தால் எளிதில் ரம்யா இங்கு வந்ததை அறிய நேரலாம். தலையில் அடித்து தாங்கி பிடித்து அவ்வறையை அலசி ஆராய்ந்தான்.
சில நேரம் நாம் கையில் சாவியை கண்ணெதிரில் கைக்கு தோதாக வைத்திருப்போம். ஆனால் குறிப்பிட்ட வேலை செய்துவிட்டு வந்தால் கைக்கு தோதாக வைத்த இடத்தில் அவை இருக்காது. கண்ணெதிரில் இருந்தாலும் அந்த பொருள் மாயமாகியிருக்கும்.
வேறு ஏதேனும் தேடீம் போது நான் இங்கு தான் இருக்கின்றேன் என்று கண்முன் வந்து பளிச்சிடும்.
இன்று ரம்யாவுக்கு தான் இறப்பென்ற மோட்சம். பைரவிற்கு ஏழரை சனி பிடித்தது போல, அவன் கண்ணிற்கு இன்ஹேலர் தென்படவில்லை. நேரம் வேறு கடந்துக்கொண்டேயிருக்க, முதலில் ரம்யாவை அப்புறப்படுத்திவிட்டு வந்து இன்ஹேலரை தேடுவோம். சுவாதி வருவதற்குள் கண்டறிந்து விடலாம். இன்ஹேலரை இங்க கூட எரித்திடலாம். ரம்யாவை இங்கே வைத்திருக்க முடியாதே.
அவசரமாய் கதவை பூட்டி திரும்ப, “சார்.” என்ற வாட்ச்மேன் குரல், பைரவிற்கு தூக்கி வாறி போட்டது.
என்றுமில்லாமல் வாட்ச்மேன் சீருடை கூட காக்கி உடை போல காட்சி தந்து திகிலை தந்தது.
“வெளியே கிளம்பிட்டிங்களா சார். சாரி சார் இன்னிக்கு ரொம்ப லேட்டாகிடுச்சு.” என்று மன்னிப்பு வேண்டி நின்றான்.
பைரவிற்கோ “அதெல்லாம் லேட் இல்லை. நீங்க உங்க வேலையை பாருங்க” என்று கைக்குட்டையால் முகத்தை துடைத்து பைரவ் புறப்பட, வாட்ச்மேன் கார் கதவை திறந்துவிட்டான்.
தேங்க்ஸ்” என்று பைரவ் ஏறி அமர்ந்து ஏசியை ஆன் செய்தான். வாட்ச்மேனிடம் நன்றி நவில்வது புதிதாக பார்த்தான்.
ஈ.சி.ஆர் ரோட்டில் கார் சீறிப்பாய்ந்தது.
கொஞ்ச தூரம் சென்றதுமே பைரவின் அடிவயிற்றில் புளி கரைப்பது போல இருந்தது. ஏனனில் ஆங்காங்கே போலீஸ் வண்டி நின்றிருந்தது.
போலீஸ் வண்டியை நிறுத்த கூறினால் வசமாக மாட்டுவாய் என்று மனசாட்சி அச்சுருத்தியது.
ஆனால் பைரவ் காரை அடிக்கடி சுவாதி எடுத்து செல்வதை அங்கு பணி செய்யும் நிறைய அதிகாரி கவனித்ததால் நிறுத்தவில்லை. அதோடு பைரவ் பக்கம் கடவுள் உதவ வந்திருப்பார் போல.
பைரவ் காரை போலீஸ் எங்கும் நிறுத்தவில்லை. குறுட்டு தைரியத்தோடு ரம்யாவை அவன் புதிதாக திறக்கும் நொழிற்சாலைக்கு கொண்டு வந்திருந்தான்.
இனி தான் தொழிற்சாலையையே திறக்க வேண்டும். நான்கு நாளில் தொழிற்சாலை திறப்பு விழா வேறு. இந்த நேரத்தில் ரம்யாவை இந்த புது தொழிற்சாலையில் கொண்டுவந்திருந்தான்.
முதலில் கறி வெட்டி ஏற்றுமதி இறக்குமதி செய்யுமிடம் என்பதால் ரம்யாவை அதில் வெட்டி துண்டாக்கி கழிவாக உருத்தெரியாமல் மாற்றிட நினைத்தான். அப்படி தான் ஒரு படத்தில் கண்டது.
ஆனால் ரம்யாவின் அழகான முகம், உடல், தேவதையின் அம்சமாக இருப்பாள். அவளை புணர்ந்ததாலும், அவளை வெட்டி துண்டாக்க மனமில்லை. அவளை காதலித்தவன். சொல்லப் போனால் இப்பவும் ரம்யாவை பிடிக்கும். அவளை அவ்வாறு வெட்டி கழிவாக மாற்ற மனம் முரண்டியது. முதலில் வாட்டர் பால்ஸ் வைக்குமிடத்தில் தோண்டி புதைக்க நினைத்தான். ஆனால் செயற்கை நீறூற்றில் தண்ணீர் அடைப்பு ஏதேனும் பழுதானால் இங்கு மண்ணை தொண்ட நேரிடலாம். மாமிசம் வெட்டும் இடமென்றால் ஒவ்வொறு முறையும் அந்த இடத்தில் மாமிசம் வெட்டும் போதும் ரம்யா நினைவு வந்து இம்சிக்கும். அதனால் அவன் அதிகம் பழகாத இடம் அதோடு யாரும் தேவையற்று அவ்விடத்தை தோண்டி துருவாமல் அழகாக சுத்தமாக காட்சிக்கொள்ளுப் இடத்தில் ரம்யாவுக்கான ஆறடியை தேர்ந்தெடுத்தான்.
நல்ல வேளை ரம்யா போன் அவள் கடைசியாக அலங்கரிக்க சென்ற இடத்திலேயே விட்டுவிட்டாள் இல்லையேல் லொகேஷன் காட்டும் விதமாக நேராக தன் வீட்டிற்கு மட்டும் போலீஸ் வந்து நிற்பார்கள். அந்த நொடியெல்லாம் கடவுளுக்கு நன்றி நவில்ந்தான் பைரவ்.
அங்கே பணி முடித்தாலும் ஒரு இடம் சிமெண்ட் பூச்சு பாதியில் இருக்க அங்கே அவளை வைத்து புதைத்தான். இந்த பகுதியில் ஆள் நடமாட்டாம் தினமும் இருக்கும். ஆனாலும் யாரும் இவ்விடத்தை உடைத்து பார்க்கவோ தோண்டி பார்க்கவோ முடியாதென்ற முடிவில் சமதளமாக மாற்றினான்.
இடையில் இரண்டு முறை சுவாதி நலம் விசாரித்து விட்டாள்.
“நீங்க வீட்ல இல்லையா? எங்க போயிட்டிங்க?” என்று கேட்டதற்கு, பப்பிற்கு சென்றதாக கூறவும், “அதிகம் குடிக்காதிங்க பைரவ். நீங்க மதுவை தேடி போவிங்கன்னு தெரிந்தா அங்கிருந்து இங்க வந்திருக்கவே மாட்டேன்.” என்று கோரிக்கை வைத்தவள் அவன் மீது உள்ள பாசத்தையும் உரைத்தாள்.
பைரவிற்கு கண்கள் குளமானது. ‘சாரி சுவாதி.” என்றான். ஏன் எதற்கு என்று வினா தொடுக்காமல், “ஐ லவ் யூ பைரவ். எனக்கு உன் ஹெல்த் முக்கியம்.” என்று கூற பைரவ் சரியென்று அணைத்தான்.
தனக்கு தெரிந்த முறையில் தற்காலிகமாக ரம்யாவை புதைத்துவிட்டாயிற்று. இனி கடவுள் விட்ட வழி.
பைரவிற்கு இதற்கு மேல் எல்லாம் முடிந்தது என்று தான் தோன்றியது. ஆனாலும் ரம்யாவை காணாமல் தேடி போலீஸ் எல்லாம் வருவதற்கான வாய்ப்பு உண்டு அதற்கு பதிலும், தன் பக்கம் ஏதேனும் தடயம் இல்லாமல் பார்த்துக்க வேண்டுமென்ற முனைப்பும் அதிகமாகியது. அதனால் இது முடியவில்லை.
அதில் முக்கியமாக இன்ஹேலரை தேடி எடுத்து அதை எரிக்கவோ மறைக்கவோ வேண்டுமென்று வீட்டை நோக்கி காரை இயக்கினான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Sathiyama mudiyala sis, bakku bakku nu irukku
Paavam Ramya
Bairav maattiippana
Waiting for next ud sis, aarvam thaangala
Paavam ramya edhu thevaiya kadavuley 🙄 oru phone a miss pannitu vandhadhala vazkhaiye poiduche😞 endha bairav vera eppdi panni vechirukaney parpom enna nadaka pogudho 🧐
Wow Sema twist. Ramya pavam. Intresting
Super super