Skip to content
Home » தேவதையாக வந்தவளே-2

தேவதையாக வந்தவளே-2

தேவதை 2

அவன் என்னமோ பொறுமையை தேக்கி வைத்து தான் பேசினான்.

“என்னதான்டா இன்னும் அந்த ஊர்ல பண்ணிக்கிட்டு இருக்க??, அந்த சனியனை தலை முழுகிட்டு வா”.

அவன் பொறுமையாக பேசினாலும். எதிர்புறத்தில் இருந்து பதில் பொறுமையாக வந்திருக்கவில்லை. அவனுக்கு சலிப்பு ஏற்பட்டாலும் இது அவனுக்கு பழகி விட்டிருந்தது. அதையும் தாண்டி அந்த வார்த்தைகள் அவனை கோபத்தில் ஆழ்த்தி இருந்தது.

அவன் கோபத்தை ஸ்டேரிங் வ்ஹீலில் தான் காட்டினான். அதில் அழுத்தம் கொடுத்து தன் கோபத்தை போக்கிக்கொண்டான்.

“மைண்ட் யுவர் வர்ட்ஸ் மாம்”.

“யாரோ ஒருத்திக்காக என்ன எதிர்த்து பேசுவியா?? “, விசாலாட்சியின் குரலும் ஓங்கி ஒலிக்க.

அழைப்பை துண்டித்து விட்டான் அரவிந்த். ஸ்டியரிங் வ்ஹீலில் இன்னும் அழுத்தம் கொடுக்க. அது தெரியாமல் ஆரணில் கை பட்டு சத்தமாக கத்தி விட. குழந்தை மாலினி என்று இருவருமே திரும்பிப் பார்த்தனர்.

ஒரு நிமிடம் அவன் ஆடி போய் விட்டான். மூச்சை சீராக்கினான். தண்ணீரை எடுத்து பருகினான். இதுவரையில் அவர்களுக்கு தெரியாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறான். இப்பொழுது அவனே அவர்கள் கவனத்தை ஈர்ப்பது போல் ஆகிவிடும் அல்லவா???.

அவள் ஓரமாகத்தான் சென்று கொண்டிருந்தாள். மகளின் விஷயத்தில் அவள் எப்பொழுதுமே ஜாக்கிரதை உணர்வுடன் தான் இருப்பாள். ஆனால் வாகனம் சற்று தொலைவாக இருந்ததால் திரும்பி பார்த்துவிட்டு தனக்காக இல்லை என்று அவள் சாதாரணமாக நடக்க ஆரம்பித்து விட்டாள். அதை கவனித்தவனுக்கு அப்பொழுது தான் சுவாசம் சீரானது.

தன் அலைபேசியை எடுத்தவன் தன் அன்னையின் நம்பரை எடுத்து அதை பிளாக் லிஸ்டில் போட்டான். வாகனத்தை எடுத்துக்கொண்டு க்ஃரஷை நோக்கி பயணப்பட்டான்.

…………..

ஏஞ்சல்ஸ் ஆர் பார்ன் என்ற பதாகையை தாங்கி இருந்த அந்த க்ஃரஷுக்குள் நுழைந்து கொண்டிருந்தான் ஐந்தடி ஆண்மகன்.

அவனைப் பார்த்ததும் புருவம் இடுங்கினாலும் தன் இடத்தில் இருந்து எழுந்து சென்று. “எஸ் சார் வாட் யூ வாண்ட்? “, என்று கேட்டாள். அவன் உடையின் நேர்த்தி மிடுக்கு எல்லாம் ஆங்கிலத்தில் அவளைக் கேட்க வைத்திருந்தது.
எந்த குழந்தையின் தந்தையும் அவன் இல்லை என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். எல்லா குழந்தைகளுடைய முழு டீடெயிலும் அவள் மேஜையின் மீது இருக்கும். அதைவிட அத்தனை குழந்தைகளின் பாதுகாப்பு அவள் பொறுப்பில் இருப்பதால், அவை அனைத்தும் அவள் நினைவிலும் இருந்தது. முக்கியமாக தாய் தந்தை அவர்களுடைய அலைபேசி அதற்கு அடுத்து தாத்தா பாட்டி என்று யாராவது இருந்தால் அவர்களுடையது. அவ்வளவுதான் இவர்களை தவிர வேறு யார் வந்தாலும் அனுப்ப மாட்டார்கள். சில பேர் மாமா அல்லது சித்தப்பா சித்தி என்று அவர்கள் புகைப்படத்தையும் அலைபேசி எண்ணையும் கொடுத்திருப்பார்கள். க்ஃரஷுக்கு குழந்தைகளை அனுப்பவர்கள் பெரும்பாலும் வேலைக்கு செல்பவர்கள் தானே. அதனால் அவசர நிலைக்கு என்று அடுத்தவர்களின் அலைபேசி எண்ணையும் வாங்கி வைப்பது பழக்கம் தான். ஆனால் அங்கு நின்று கொண்டிருந்தவன் இதுவரையில் பார்த்ததாக அவளுக்கு ஞாபகம் இல்லை.
அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அங்கு இருந்த குழந்தைகளையும் அந்த இடத்தையும் ஆராய்ந்து கொண்டிருந்தான் அந்த ஆண்மகன்.

அதுவே அவளை யோசனையில் ஆழ்த்தியது. “சார் உங்கள தான்”, என்றால் அவள். இம்முறை சற்று கடினத்தை ஏற்றிக் கூறினாள்.

“எத்தனை வருஷமா இந்த க்ஃரஷ் நடத்துறீங்க??, எத்தனை குழந்தைங்க இருக்காங்க?, மெயின்டனன்ஸ் எல்லாம் எப்படி? “, அவன் கேள்விகளை அடுக்கி கொண்டே போனாலும், அவன் பார்வையோ க்ஃரஷையே அளவெடுத்துக் கொண்டிருந்தது.

“சார் ப்ளீஸ், இங்க வந்து உக்காருங்க”, என்று தனியாக அழைத்துச் சென்றவள்.
“சார் இது நான் ஒரு வருஷமா தான் நடத்துறேன். ஆரம்பத்துல அஞ்சு குழந்தைகள் இருந்தாங்க. இப்ப முப்பது குழந்தைகளா மாறி இருக்காங்க . மெயின்டனன்ஸ் எல்லாம் பக்காவா இருக்கும் குழந்தைகளை பாக்குறதுக்கு இரண்டு ஆயமா இருக்காங்க. என்னோட சேர்ந்து ஒரு டீச்சரும் இருக்காங்க. எப்பயும் குழந்தைகள் அருகிலேயே அவங்கள பாத்துக்குறதுக்காக இந்த நாலு பேருமே அவங்க கிட்டயே இருப்போம். இங்க படிப்பு மட்டும் இல்ல பேச்சு விளையாட்டு கிரியேட்டிவிட்டி, ஆக்டிவிட்டின்னு இங்க நிறைய சொல்லிக் கொடுக்கிறோம். குழந்தைகளுக்கு போர் அடிக்காம இருக்க கார்ட்டூன் சேனல் பாட்டு, டான்ஸ் டிராயிங் இதுபோல சிலதை டிவில போட்டு காட்டி அவங்கள செய்ய வைப்போம் “, அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் புடவையை இழுத்தாள் ஷாலினி.

மற்ற குழந்தைகளாக இருந்தால் ஒதுங்கி போகச் சொல்வாள். ஆனால் அவள் அப்படி இல்லையே, அவள் தான் மாலினி உடைய தேவதை ஆயிற்றே. தூக்கி தன் கையில் வைத்துக் கொண்டாள்..

“அம்மா பசி “, என்று அவள் வார்த்தையை முழுமை பெறாமல் நிறுத்த. அவன் பார்வை இப்பொழுது குழந்தையின் மீது சென்றது.

“இந்த குழந்தை உங்கள அம்மான்னு கூப்பிடுதே?“.

“சார் இவள் என்னோட குழந்தை. இந்த குழந்தைக்காக தான் இந்த க்ஃரஷை நான் ஆரம்பிச்சேன். இந்த குழந்தை தான் இந்த கிரஷ் ஆரம்பிக்கிறதுக்கு எனக்கு ஊந்துகோலா இருந்தவள்”, தன் மகளின் ஞாபகத்தில் அவள் முகம் மலர்ந்து பேசினாள்..

“நீங்க உங்க குழந்தையையும் இங்க வச்சுட்டு இருந்தா, மத்த குழந்தைகளை எப்படி பார்த்துப்பீங்க மேடம்?“, அவன் வார்த்தையில் என்ன இருந்தது என்று அவளால் வரையருக்க முடியவில்லை.

“சார் எல்லா குழந்தைகளும் என் குழந்தை போல தான் பாக்குறேன்”, சற்றென்று கூறினாள் மாலினி.

“பார்க்கலாம் ஆனா உங்க குழந்தைன்னு வரும் போது அதுக்குத்தான் நீங்க முக்கியத்துவம் கொடுப்பீங்க? “..

“இருக்கலாம், ஆனால் எல்லா குழந்தைகளையும் நாங்க கண்ணும் கருத்துமா தான் பாத்துக்குறோம். அவங்களுக்கு அன்பையும் தாய்மையையும், பாசத்தையும் தான் நாங்க கொடுக்கிறோம். அவங்க கிட்ட இருந்து கடவுளையும் தான் நாங்க பார்க்கிறோம்”, அவளும் தனக்குத் தெரிந்த வகையில் பொறுமையாகவே கூறினாள் .

“ஆனா நீங்க உங்க குழந்தையை இங்கேயே வச்சிருக்கறது எனக்கு ஒன்னும் சரியா படல”, என்றான் அவன் .

அவள் பற்களை நரநரத்தாள். “நீங்க சொல்ல வர்றது எனக்கு புரியல”, குரலில் கூட இப்பொழுது பேதம் இருந்தது.

“நான் என் குழந்தைக்கு பாதுகாப்பான ஒரு க்ஃரஷ் பாத்துக்கிட்டு இருந்தேன். என்னோட ஃப்ரெண்ட் இந்த க்ஃரஷ் பத்தி சொன்னதுனால வந்தேன். எனக்கு எல்லாம் ஓகே தான். ஆனா இந்த குழந்தை அதாவது உங்க குழந்தை உங்க கூடவே இருந்தா நீங்க மத்த குழந்தையை பார்த்துக்க மாட்டீங்கன்னு எனக்கு தோணுது”, அவன் அலட்டிக் கொள்ளாமல் கூறினான்.

அவள் உதட்டை மடித்து கடித்து கண்களை மூடியபடி எழுந்து நின்று விட்டாள் .

“ரொம்ப அதிகப்படியா பேசிட்டான். ஆயிரம் ரூபாய்க்கு நடிக்க சொன்னா பத்தாயிரம் ரூபாய்க்கு நடிக்கிறான். வெளிய வரட்டும் இவன வச்சுக்கிறேன்”, என்று கேமராவில் பார்த்துக் கொண்டிருந்த அரவிந்தன் பல்லை கடித்தான்.

“அப்பவே ப்ளூடூத் பொருத்திட்டு போன்னு சொன்னேன். கேட்டு தொலைச்சானா இவன். எப்படி பேசணும்னு சொல்லிக்கொடுத்து அனுப்பினேன். அப்படி இருந்தும் ரொம்ப கேவலமா நடிக்கிறான்”, என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு கேமராவை கவனிக்க ஆரம்பித்தான் அரவிந்த்.

அவள் கைமுஸ்டி இறுகுவது அவனுக்கு நன்றாக தெரிந்தது. கோபத்தை கட்டுப்படுத்துகிறாள் என்று புரிந்தது..
“ஷாலு குட்டி நீங்க போய் விளையாடுங்க அம்மா வரேன்”, என்று மகளை அனுப்பிவிட்டு.
“சார் கொஞ்சம் இந்த பக்கம் வாங்க”, என்று அவனை தனியாக அழைத்துச் சென்றாள்.

“உங்களுக்கு நம்பிக்கை வர வைக்க நான் என்ன பண்ணனும்??”, அவளும் மிகச் சாதாரணமாக கேட்டாள். ஆனால் அவள் குரலில் இருந்த நக்கல் தோனி அரவிந்தனுக்கு புரிந்தது.

“இந்த குழந்தையை வேற க்ஃரஷுல விட்ருங்க”, அவன் சொல்லி முடிக்கவில்லை.

“வெளிய போடா”, என்று ஆங்காரமாக ஒலித்தது மாலினியின் குரல்.

“மேடம் என்ன மரியாதை இல்லாம பேசுறீங்க? “, அவன் முகத்தில் வியர்வை வழிய ஆரம்பித்தது.

ஆனால் அரவிந்தனுக்கு சிரிப்பு மட்டும் அல்ல ஆர்வமும் அதிகமானது.

“உனக்கெல்லாம் என்னடா மரியாதை. நீ பொம்பளையா இருந்திருந்தா உனக்கு தாய்மையோட அருமை தெரிஞ்சிருக்கும். உன் பொண்டாட்டிய கூட பணத்துக்காக வேலைக்கு அனுப்பி வச்சிருப்ப. இல்லன்னா கை குழந்தைய பிரிஞ்சு இருக்கிற எண்ணம் ஒரு தாய்க்கும் வராது. நான் என்ன படிச்சிருக்கேன் இதுக்கு முன்னாடி என்ன வேலை செஞ்சேன்னு உனக்கு தெரியுமா??, அதை எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு வந்தது இந்த குழந்தைக்காக தான். இவளுக்காக தான், இவள பிரிய முடியாம தான் இந்த க்ஃரஷையே உருவாக்கினேன். இவளை வேற க்ஃரஷுக்கு அனுப்பனுமா??, நீ உன் குழந்தையே வேற க்ஃரஷுல சேர்த்துக்கோ. இன்னும் ஒரு நிமிஷம் இங்கே இருந்தா நான் ஈவ்டீசிங் கேஸ் போட்டு உன்னை போலீஸ்ல பிடிச்சு கொடுத்திடுவேன். போடா வெளியே”, என்று அவள் பட பட பட்டாசாக பொரிந்து தள்ளினாள்..

அவன் சீட்டின் நுனியில் வந்த அமர்ந்தான். கண்களை அகல விரித்து அவளை பார்த்தான் . இந்த விஷயங்கள் எல்லாம் அவன் கேள்விப்பட்டு அறிந்து கொண்ட விஷயங்கள் தான். ஆனால் அதற்காக அவள் ஆற்றும் எதிர்வினை தான் அவனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பெற்ற குழந்தையின் மீது தாய்க்கு ஏற்படும் பந்தம் என்பது வேறு. அது தனித்தன்மை வாய்ந்தது தான். தன் வீட்டில் அவன் அதையே தன் தாயிடம் பார்த்ததில்லை. ஆனால் அதற்காக எல்லா தாயையும் குறை கூறி விட முடியாது அல்லவா??. தாய் என்ற இலக்கணத்திலிருந்து மாறுபட்டு சில பெண்கள் விதிவிலக்காக இருக்கிறார்கள் தான். அதில் அவன் தாயும் ஒருவர் தான். ஆனால் இவளுடைய தாய்மை அன்பு அது உண்மைதானா என்று அறிந்து கொள்வதற்கே அவனுக்கு இத்தனை மாதங்கள் எடுத்துக் கொண்டது. அதை ஆராய்வதற்கு அவன் அந்த மனிதனை அனுப்பி வைத்திருந்தான்.

இதுபோல ஆட்களை அனுப்புவது இது ஒன்றும் முதல் முறையல்ல . இதுபோல பலமுறை அவளை ஆராய்வதற்காகவே அவன் ஆட்களை அனுப்பி வைத்திருக்கிறான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் ஒவ்வொரு பாவணையில் ஒவ்வொரு பிரச்சனையை கொண்டு சென்று நின்று அவளிடம் வாங்கி கட்டிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.. ஒவ்வொரு முறையும் அவனும் அதை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருக்கிறான்.

இருவரும் இன்னும் ஏதோ வாதம் புரிந்து கொண்டிருப்பது தெரிந்தது. பிள்ளைகள் பயந்து விடப் போகிறார்கள் என்று அவனை வெளியே அழைத்து வந்து தான் அவள் வாதம் புரிந்து கொண்டிருந்தது.

“இவன் ஏன் ரொம்ப அதிகமா பேசுறான் கம்முனு கிளம்பி வர வேண்டியதுதானே. இதற்கு மேல் அவனை விட முடியாது என்று நினைத்தவன், அலைபேசியின் மூலமாக அவனை அழைத்தான். அலைபேசியை பார்த்ததும் தான் அவன் நடிப்பை விட்டு விட்டு “சொல்லுங்க சார்”, என்று அலைபேசியில் கேட்டிருக்க.

“நீ நடிச்சது போதும். அந்த பொண்ணு கைல அடி வாங்காம ஒழுங்கா வந்து சேரு”, என்று கூறி அலைபேசியை துண்டித்து விட்டான் .

“உங்கள நான் போலீஸ்ல சொல்லி பார்த்துக்கிறேன். உங்க மேல மான நஷ்ட வழக்கு போடுறேன்”, என்று அப்பொழுதும் ஒரு மிரட்டு மிரட்டி, உருட்டி விட்டு தான் அவன் அங்க இருந்து சென்றான் . அவன் பேசிய பேச்சில் எழுந்த கோபம், இன்னும் அவளுக்கு அடங்க மறுத்தது..

5 thoughts on “தேவதையாக வந்தவளே-2”

  1. கதையைப் படித்து கருத்துக்கள் பரிமாறுபவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *