Skip to content
Home » தேவதையாக வந்தவளே 11

தேவதையாக வந்தவளே 11

தேவதை 11

“இங்க பாரு மாலினி எனக்கு உன்ன பத்தி எல்லாம் தெரியும்னா,, எல்லாமே தான் தெரியும். உன்னோட எக்ஸ் ஹஸ்பண்ட் பெயர் உட்பட. அவன் என்ன வேலை செய்கிறான்?, எங்க வேலை செய்றான்?. இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?, யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கான்?. எதனால டைவர்ஸ் ஆச்சு?. எல்லாமே தெரியும் “, அவன் அழுத்தமாக கூறிக் கொண்டிருக்க..

அவள் உதட்டை மடித்து கடித்து தன் உணர்வுகளை அடக்கினாள். விட்டால் அழுது விடுவேன் என்ற நிலையில் தான் இருந்தாள். ஆனால் யாரோ ஒருவனின் முன்பு அழக்கூடாது என்ற வைராக்கியமும் எழுந்து நின்றது. அவள் யோசிக்கட்டும் என்று அவன் அமைதி காத்தான்.

“சார் இருட்டிடுச்சு. நீங்க கிளம்புங்க ”, அவள் பேச்சை மாற்றுகிறாள் என்று அவனுக்கு புரிந்தது.

“சோ வாட்”.

“யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க”, என்றாள்.

“உன் புருஷன்னு சொல்லு”, அசால்டாக கூறினான் அரவிந்த்.

“நான் விடோன்னு சொல்லி இருக்கேன்”, பற்களை கடித்தபடி பேசினாள்.

“வாட்? “, அப்பட்டமான அதிர்ச்சி அவனிடம்.

“என் புருஷன் இறந்துட்டார்ன்னு சொல்லி இருக்கேன்”, அவனையே முறைத்துக் கொண்டு பேசினால் மாலினி.

“ஸோ வாட்??. செத்துட்டாருனு நெனச்சேன். ஆனா உயிரோட வந்துட்டாருனு சொல்லு? “, அவன் அலட்டிக் கொள்ளாமல் பதில் கூறினான் .

” என்ன விளையாடுறீங்களா? “.“ என்ன பாத்தா விளையாடுற மாதிரி தெரியுதா?. சரி செத்தவன் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு”..

அவள் கண்களில் கண்ணீர் குலம் கட்டி நின்றது. இவன் என்ன விளையாடுகிறானா??. என் வாழ்க்கை என்ன அவ்வளவு இளக்காரமா??. மீண்டும் அவளால் இன்னொரு ஆணை நம்ப முடியுமா??. குழந்தைக்காகவே என்றாலும் எப்படி இவனால் மிக சாதாரணமாக இந்த கேள்வியை கேட்க முடிகிறது. தன்னைப் பற்றி தெரிந்திருந்தும் இவன் இப்படி கேட்கிறான் என்றால் அவன் தன்னை எவ்வளவு கீழ்த்தரமாக நினைத்து இருக்கிறான். இவள் ஏதேதோ சிந்தித்துக் கொண்டிருக்க.அவன் அவளின் சிந்தனையை கலைத்தான்.

“ இங்க பாரு மாலினி நான் உன்னை வருத்தப்பட வைக்கணும்னு பேசல. உண்மையிலேயே உன்கிட்ட எப்படி பேசுவது என்று எனக்கு தெரியல. அந்தத் தயக்கத்திலேயே மூணு மாசம் ஓட்டிட்டேன். இந்த குழந்தை இறந்துட்டதா நானும் நினைச்சேன். ஆனாலும் மனசுக்குள்ள அவ உயிரோட இருக்கணும்னு ஒரு குரல் கேட்டுக்கிட்டே இருந்துச்சு. விடாம முயற்சி பண்ணேன், இதோ இப்ப என் கண் முன்னாடி உன் மகளா இருக்காள். இவளால உன்னையும் விட முடியாது. உன்னால் அவளையும் விட முடியாது. நான் கல்யாணம் ஆகாதவன் கேர் டேக்கர் கூட்டிட்டு போய் வெச்சிருந்தா யாரும் நம்ப மாட்டாங்க. உன்னையும் என்னையும் தப்பா பேசுவாங்க. முக்கியமா எங்க அம்மாவுக்கு என் தங்கச்சி மேல பயங்கர கோபம். இந்த குழந்தையை கண்டுபிடிக்கறதுல அவங்களுக்கு விருப்பம் இல்ல. வேற மதத்தை சேர்ந்தவனோட குழந்தை அவங்க வீட்டுல வளர கூடாதுன்னு நினைக்கிறாங்க. அவங்க வீட்டுக்கு நான் உங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போக போறது இல்ல. என்னோட வீட்டுக்கு உரிமையா என்னோட மனைவியா என்னோட குழந்தையா தான் கூட்டிட்டு போக போறேன். உரிமை இல்லனா உறவு இருக்காது. உறவே இல்லனா இங்கு எதுவும் நீடிக்காது பார்க்கிறவங்க நம்மள தப்பா பேசுவாங்க. குழந்தைக்காக உன் தகப்பன் தாய் வீடு சொந்தம் பந்தம் எல்லாரையும் தலை முழுகிட்டு வந்திருக்க. இப்ப அதே குழந்தைக்காக ப்ராப்பரா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம் அவ்வளவுதான் “, என்றான் அரவிந்த்.

அவ்வளவுதானா திருமணம் என்ன விளையாட்டா அவ்வளவுதான் என்கிறான்??. குழந்தைக்காகவே என்றாலும் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்வது அபத்தமாக தோன்றியது அவளுக்கு.

“சார் நீங்க யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோங்க. அப்ப நான் குழந்தையோட கேர் டேக்கரா வர்றேன்”.

“ நீ படிச்சிருக்க பெரிய கம்பெனில வேலை செஞ்சிருக்க அறிவாளியா இருப்பேன்னு நினைச்சேன் ஆனா முட்டாளா இருக்க. உரிமையா குழந்தைய பாத்துக்கோன்னு சொல்ற. நீ உரிமையே இல்லாம ஆயாமாவா இருக்கேன்னு கேக்குற?. நான் யாரை வேணாலும் கல்யாணம் பண்ணிக்கலாம் ஆனா அவள் இந்த குழந்தையை நல்லபடியா பார்த்துப்பாள்னு நினைக்கிறாயா??. அவளுக்கென்று ஒரு குழந்தை வந்துருச்சுன்னா இந்த குழந்தையை ஒதுக்கி வைக்க மாட்டாளா??. இல்ல உன்ன தான் கேர் டேக்கரா வீட்ல இருக்க அனுமதிப்பாளா? “. அவன் கேட்க வருவது அவளுக்கு புரிந்தது. அதற்காக திருமணம் செய்து கொள்ள முடியுமா என்ன??.

“ சார் இந்த குழந்தை என்கிட்ட இருக்கட்டும் நானே நல்லபடியா வளர்த்துப்பேன். அப்பப்ப குழந்தை எப்படி இருக்காள். அவளோட வளர்ச்சி என்னவென்று உங்களுக்கு இன்பார்ம் பண்ணிக்கிட்டே இருக்கேன். என்னோட போன் நம்பர் நோட் பண்ணிக்கோங்க “.“

“உனக்கு நான் சொல்றதோட சீரியஸ்னஸ் புரியலைன்னு நினைக்கிறேன். உன்னை தேடி கண்டுபிடிக்கறதுக்கு எனக்கு வருஷங்கள் ஆச்சு . திரும்பவும் அதே தப்பை நான் பண்ணுவேனா??. குழந்தையோட அப்பா சைடுல மட்டும் இல்ல அம்மா சைடுல இருந்தும் அவளுக்கு ஆபத்து தான் . நான் தான் என் தங்கச்சிக்கு அவள் விரும்பினவனோட கல்யாணம் பண்ணி வச்சேன். அதுல எங்க அம்மாவுக்கு சுத்தமா உடன்பாடில்லை. ஆனா எங்க அப்பாவுக்கு தெரியும். கண்ணுக்கு தெரியாத இந்த மதத்தை பிடிச்சுகிட்டு என்ன பண்ண போறாங்க. கண்ணுக்கு தெரியிற என் தங்கச்சி சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சேன். அவளும் சந்தோஷமா தான் இருந்தா இந்த ஆக்சிடென்ட் ஒன்னு நடக்கலனா, எல்லாமே அவள் வாழ்க்கைல நல்லாவே இருந்திருக்கும்”, அதை கூறும்போதே அவன் குரல் கமரியது.

தங்கையை இழந்திருக்கிறான் அந்த வலியை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. தன்னை மீட்டுக் கொண்டு பேச ஆரம்பித்தான். ஆனால் அவன் பேசுவதற்கு முன்பாக அவள் கேட்டிருந்தாள்.

“ இப்படி ரெண்டு பக்கத்துலயும் ஆபத்து இருக்குற இடத்துக்கு இந்த குழந்தைய ஏன் கூட்டிட்டு போகணும்னு நினைக்கிறீங்க? “.

“ எந்த உறவும் இல்லாம இந்த குழந்தை மேல நீ அன்பு வெச்சு இருக்கும் போது. என் தங்கச்சி குழந்தை மேல நான் அன்பு வச்சிருக்க மாட்டேன்னு நினைக்கிறியா??. ஷாலினியை போட்டோலயாவது பாக்குறதுக்கு என் அப்பா துடிச்சுக்கிட்டு இருக்காரு. எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு இந்த குழந்தையை நீ நல்லபடியா வளப்பேன்னு எனக்கும் நிறையவே நம்பிக்கை இருக்கு அதனால தான் என் கூட நீயும் வான்னு கூப்பிடுறேன். இல்லன்னா குழந்தையை மட்டும் உன் கிட்ட வந்து பிரிச்சு கூட்டிட்டு போயிருப்பேன். ஆனா நான் வைக்கிற அதே நம்பிக்கையே மத்தவங்களும் வைக்கனும்னு நினைக்காத. அது ரொம்ப கஷ்டம். அவள் கீழ் உதட்டை மடித்து கடித்து தன்னை அடக்கம் முற்படுவது அவனுக்கு புரிந்தது.

“இன்னொரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு. இந்த குழந்தையை அவ குழந்தை மாதிரி வளர்க்கணும்னு சொல்றதெல்லாம் முடியாத காரியம்”, என்றான் .

“சார் என்னால இன்னொரு கல்யாணம் பண்ணிக்க முடியாது”, என்று மாலினி கூற.

“குழந்தைக்காக தானே பண்ணிக்க சொல்றேன். அதுவும் ரெஜிஸ்டர் மேரேஜ்”.

“சார் உங்களுக்கு என் வலி புரியாது. என் வாழ்க்கையில ஆண் என்ற பெயருக்கு இடம் இல்லை. நீங்க என்ன நம்பலாம். ஆனால் என்னால இன்னும் ஒரு ஆணை நம்ப முடியாது”.

“ என்ன பண்ணிட்டுவேன் உன்னன்னு நினைக்கிற??, அதற்கு அவள் பதில் கூறவில்லை கண்களை துடைத்துக் கொண்டாள்.

“நேக்கேடா போட்டோ எடுப்பேன்னு நினைச்சியா இல்ல ரேப் பண்ணுவேன்னு நினைச்சியா?? “, கேட்டுவிட்டு அதிகப்படியாக பேசியதை எண்ணி அவன் கண்களை மூடினான். அவள் அதிர்ந்து அவனை பார்த்தாள்.

“சாரி, உன்னுடைய எக்ஸ் பண்ண எதையும் பண்ற அளவுக்கு நான் கேவலமானவன் இல்ல. நான் ஒரு தங்கச்சியோட பிறந்தவன். ஒரு பொண்ணுக்கு அப்பாவா இருக்கிறதுக்கு கேட்கிறேன். பொண்ணை எப்படி மதிக்கனும்னு எனக்கு தெரியும். உன் விருப்பம் இல்லாம என்னோட சுண்டு விரல் கூட உன் மேல படாது. ஆதங்கமாக ஒலித்த அவன் குரலை கவனிக்கும் நிலையில் அவள் இல்லை. தன்னைப் பற்றி எல்லாமே அவனுக்கு தெரிந்திருக்கிறது என்று அதிலேயே அவள் மனம் சுழன்று கொண்டிருந்தது.

“உங்கள நம்பணும்னு எப்படி எதிர்பார்க்கிறிங்க?? நீங்க யாருன்னு எனக்கு தெரியாத. குழந்தையோட தாய் மாமா அவ்வளவு தான். நான் குழந்தைய என் உயிராக நினைக்கிறேன் தான். அதுக்காக உங்களை நம்பி உங்க கூட வர தயாரா இருக்கேன் தான் . ஆனா உங்க மனைவியா வருவேனு எப்படி எதிர்பார்க்கிறிங்க? “.

“போதும் மாலினி. இத பத்தி போதும் போதும் என்ற அளவுக்கு பேசியாச்சு. புரிய வைக்கிறதுக்காக பேசுறேன்னு நான் உன்ன ஹர்ட் பண்றா மாதிரி பேசிடுறேன். என்னால குழந்தையை விட்டுட்டு போக முடியாது. நீ என்கூட வர தயாரா இருந்தா கேர் டேக்கரா இல்ல மனைவியா மட்டும் தான் வந்தாகணும். இல்லனா உன்னையும் ஊர்ல இருக்கவங்க தப்பா தான் பேசுவாங்க. இந்த சமுதாயம் யார் எப்படி இருந்தாலும் கவலை இல்லை. ஆனா நமக்கு எப்ப குறை கண்டுபிடிக்கலாம்னு பார்த்துகிட்டே இருக்கும். மத்தவங்க உன்ன பத்தி என்ன சொல்றாங்கன்னு நீ கவலைப்படாம இருக்கலாம். ஆனா என்னால அப்படி இருக்க முடியாது இது உன் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் இல்ல, என்னோட கேரக்டர் சம்பந்தப்பட்டதும் கூட. ஒரு வயசு பொண்ணோட என்னால வீட்ல தனியா இருக்க முடியாது. நான் முடியாதுன்னு சொல்றது என்னால கட்டுப்பாடா இருக்க முடியாதுன்னு சொல்லல. என் பேர கெடுத்துகிட்டு இருக்க முடியாதுன்னு சொல்றேன்”.

“ஆனா ஆனா என்னால முடியாது அவள் அழுது கொண்டே கூறினாள். “அவளை சமாதானப்படுத்த துடித்த கரங்களை கஷ்டப்பட்டு அடக்கினான். இன்னும் அவள் சம்மதிக்கவே இல்ல லவ் பண்றேன்னு சொன்னா ஓடியே போயிடுவாள்.. சரி மறச்சுக்கிட்டு குழந்தைக்காக கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்டாள். இப்படி அழுதுகிட்டு இருக்கிறாள் . இதுல அவளை தொட்டு கிட்டு பேசினா அவ்வளவுதான் பத்ரகாளி ஆயிடுவாள். அவள அவள் வழியுல தான் நம்ம வழிக்கு கொண்டு வரணும். அவளை சமாதானப்படுத்துற மாதிரி தான் ஏதாவது பேசணும் அவள் தைரியத்தை தூண்டனும் அப்பதான் அவள் கொஞ்சமாச்சும் இறங்கி வருவாள் . செல்ப் ரெஸ்பெக்ட் என்பதை தூண்டிவிடலாம்”, அவன் மனதிற்குள்ளாக கணக்கு போட்டுக் கொண்டிருந்தான்.

“இங்க பாரு நீ தான் தைரியமான பொண்ணாச்சே. உன் புருஷனை எப்படி அடிச்சேன்னு எனக்கு நல்லா தெரியும்”, என்று கூறிக் கொண்டே அவன் கன்னத்தை வருடி கொடுத்தான்.

“அந்த அளவு அடி வாங்குற அளவுக்கு எனக்கு தெம்பு இல்ல தைரியமும் இல்ல. எனக்கு என்னோட கேரக்டர் ரொம்ப ரொம்ப முக்கியம். அதனாலதான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தைக்கு அம்மாவா கூட்டிட்டு போகணும்னு நினைக்கிறேன். தப்பு தண்டா ஏதாவது பண்ணனும்னு நினைக்கிற ஆள் நான் இல்ல. அப்படி நினைச்சாலும் நீ வாலை சுருட்டி கிட்டு இருக்கிற ஆள் இல்லன்னு எனக்கு தெரியும். தூக்கி போட்டு மிதிச்சு துவம்சம் பண்ணிடுவ. ஒரு பொண்ணுன்னா உன்ன மாதிரி தான் இருக்கணும். ஒரு பொண்ண வளக்குற தாயும் உன்னை மாதிரி தான் இருக்கணும். அப்பதான் உன் குழந்தைய, உன் பெண் குழந்தையும் உன்னால நல்லபடியா வளர்க்க முடியும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு”.

“நீங்க பாட்டுக்கு ஏதேதோ பேசிட்டு இருக்கீங்க??, நான் ஒரு செகனண்ட்னு தெரிஞ்சா உங்க வீட்ல எக்ஸ்சப்ட் பண்ணிப்பார்களா?. உங்க அம்மா உங்க தங்கச்சி கல்யாணத்தையே ஏத்துக்கல, குழந்தையே ஏத்துக்கல. அப்படிப்பட்டவங்களுக்கு என்ன போல ஒரு பொண்ண மருமகளா கொண்டு போய் நிறுத்தனும்னு நினைக்கிறீங்க?? அது எவ்வளவு பெரிய பிரச்சனையில் நிறுத்தும்னு உங்களுக்கு தோணலையா? “.

“பரவால்ல இவ்வளவு பேசுனதுக்கு கொஞ்சமா இறங்கி வந்து இருக்காள் “, என்று மனதிற்குள் அவளை சிலாகித்துக் கொண்டான்.

2 thoughts on “தேவதையாக வந்தவளே 11”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *