Skip to content
Home » தேவதையாக வந்தவளே 18

தேவதையாக வந்தவளே 18

தேவதை 18

ஏனோ அவளைப் பார்க்க பார்க்க திகட்டவில்லை அவனுக்கு. அவளின் ஒவ்வொரு செயலும் அவனுக்குள் ஏதேதோ செய்து கொண்டிருந்தது. அவன் ஒன்றும் டீன் ஏஜ் பருவத்தில் இல்லை அப்பொழுது வந்த காதல் காற்றோடு கரைந்து விட்டிருந்தது. அது காதலா அல்லது இது காதலா என்று அவன் தடுமாறிக் கொண்டிருந்தான். ஏற்கனவே இந்த தடுமாற்றம் இருந்தபோதும். அப்பொழுதெல்லாம் அவனை அடக்கி பழகியவன் இப்பொழுது திருமணமான பிறகு உரிமை உணர்வோடு மனைவியை ரசனையாக ரசித்துக் கொண்டிருந்தான். அவளின் முந்தைய வாழ்க்கை தெரிந்திருந்த போதும். அதில் அவளையே குற்றம் சாட்டும் படி, அவன் நியமித்த ஆள் கூறி இருந்த போதும். அவளையே அவதானித்துக் கொண்டிருந்தவனுக்கு அப்படி இருக்காது என்று மனதில் தோன்றி கொண்டே இருந்தது இன்னும் தீர ஆராய சொன்ன பிறகுதான் அவளுடைய நிலை அவனுக்கு தெளிவாக புரிந்தது. எந்த தாலியை தூக்கி எரிந்தாளோ, அதே போல ஒரு தாலியை பிடித்துக் கொண்டு அதையே பார்த்திருப்பதை அவனும் மடிக்கணினி மூலமாக பார்த்துக் கொண்டிருந்தான். அவளுக்கு இந்த வாழ்க்கை சுலபமானது அல்ல என்று அவனுக்கு நன்றாகவே தெரிந்த போதும் அதை சுலபமாக்க தான் அவன் காத்துக் கொண்டிருந்தான்.

“கவலைப்படாத மாலினி உனக்கு எப்பவும் எல்லாமுமாய் நான் இருப்பேன்”, என்று அவன் உதடுகள் அவனையும் மீறி உச்சரித்தது.

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக அங்கிருந்த தண்ணீரை பருகியவளுக்கு புறை ஏறியது. இவன் ஆர்வக்கோளாறில் லேப்டாப்பை தட்ட சென்று விட்டான். பிறகு இள நகையுடன் சுதாரித்து தன் கையை தன் புறம் இழுத்தான். தண்ணீர் அவள் உடை முழுவதும் நனைத்து அவளை ஈரமாக்கி இருக்க. அவசரமாக சுற்றிப் பார்வையை செலுத்திய படியே அதை சுத்தம் செய்தாள் பாவை அவள்.

“அம்மணி ரொம்ப ஜாக்கிரதை தான் ஆனா இன்னும் கேமராவை கண்டுபிடிக்காம இருக்கிறது எனக்கே ஆச்சரியம் தான்?”, என்று நினைத்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது. அவளைப் பார்த்துக் கொண்டே அலைபேசியை எடுத்தவன். தன் பிசினஸ் பார்ட்னரும் நீண்ட நாள் தோழனுமாகிய எத்திராஜ்கு போன் செய்தான்

.“சொல்லுடா வீணா போனவனே. காதலை சொல்லி, சட்டுபுட்டுன்னு கல்யாணத்த பண்ணிகிட்டு தங்கச்சியை இங்க கூட்டிட்டு வர வேலையை விட்டுட்டு. அங்கேயே உட்கார்ந்துகிட்டு என்னையே வேலை வாங்கிக்கிட்டு இருக்கிறாயே?“, எடுத்ததும் பொரிந்து தள்ளிய தன் நண்பனை திட்ட விட்டுவிட்டு அமைதியாக இருந்தவன் .பொறுமையாக,

“முடிச்சிட்டியா, இல்லை இன்னும் ஸ்டார்ட் மியூசிக் சொல்லனுமா?”, என்று கேட்டான்.“சரி உன் காதல் எந்த அளவுக்கு இருக்கு?, தங்கச்சி கிட்ட விஷயத்தை சொல்லிட்டியா இல்லையா? “.“ அதெல்லாம் சொல்லலடா, ஆனா சட்டுபுட்டுன்னு கல்யாணத்த முடிச்சுட்டேன்?“, என்றான் அரவிந்த்.

“என்னடா சொல்ற??”, உச்சக்கட்ட அதிர்ச்சியில் கேட்டான் எத்திராஜ்.“கல்யாணத்தை முடிச்சிட்டேன் டா”.

“யாருக்கு கல்யாணம்?, என்ன கல்யாணம்?, யார் கூட கல்யாணம்?”.

“எனக்கு தான் கல்யாணம் முடிச்சுட்டேன். உன் தங்கச்சி மாலினி கூட தான். கேட்டவுடனே சந்தோஷப்பட்டு வாழ்த்து சொல்லுவேன்னு பார்த்தா??, என் மேல நம்பிக்கை இல்லாத மாதிரியே கேள்வி கேக்குறியே??”.

“உண்மையாவா சொல்ற??, மாலினி இதுக்கு சம்மதிச்சுட்டாளா?,

“ அவள் எங்க சம்மதிச்சா, கிட்டத்தட்ட பிளாக்மெயில் பண்ணி தான் கல்யாணம் பண்ணிகிட்டேன் “.

“அதான பார்த்தேன்? “, என்றான் எத்திராஜ்.

“டேய், அடங்குடா முதல்ல. அவள சட்டுன்னு காதலிக்கெல்லாம் வைக்க முடியாது. அதுக்கு இன்னும் எத்தனை வருஷம் ஆகுமோ??, அதனால கல்யாணத்த பண்ணிக்கிட்டு, அப்புறம் என்ன ப்ரூப் பண்ணலாம்னு விட்டுட்டேன். அதாவது முதல்ல அவளுக்கு என் மேல வர வைக்க வேண்டியது காதல இல்லை, நம்பிக்கையை. அதை கொடுக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். நான் இப்ப கால் பண்ணதுக்கான ரீசன் வேற”.

“ஏண்டா உன்னோட உயிர் தோழன் நான் எனக்கு ஒரு வார்த்தை சொல்லனும்னு உனக்கு தோணலையா?. எங்க இருந்தாலும் ஓடி வந்து உன் கல்யாணத்துக்கு உதவி பண்ணி இருப்பேனேடா. அட்லீஸ்ட் சாட்சி கையெழுத்தாவது போட்டு இருப்பேனே? “.

“ நீ இங்க வந்துட்டா பிசினஸ யார் பார்க்கிறது? “.

“அடப்பாவி பிசினஸை விட உறவுகள் முக்கியம் இல்லையா?? தோழமை முக்கியம் இல்லையா? “..

“நான் எங்க அப்பாவையே கூப்பிடலடா, திடீர்னு முடிவு பண்ணி அடுத்தடுத்து நடந்துருச்சு. அவரே வீடியோல தான் என் கல்யாணத்தை பார்த்தார். உன்கிட்ட விஷயத்தை சொல்லிட்டு இந்த வீடியோவையும் உனக்கு அனுப்பி வைக்கலாம்னு தான் உனக்கு கால் பண்ணேன். இதோ இப்ப இந்த நிமிஷம் உன் வாட்ஸ் அப்புக்கு வீடியோவையும் அனுப்பிட்டேன்”.

“நல்லா வருவடா நீ??, இதுக்கு நான் பழிக்கு பழி வாங்காமல் விடமாட்டேன். நான் கல்யாணம் பண்ணிக்கும்போது உன்னை கூப்பிடவே மாட்டேன்”.

“நீ கூப்பிடலைன்னா என்ன??, சாரு கூப்பிடுவாள்”, என்று அசால்டாக கூறினான் அரவிந்த்.

சாரு வேறு யாரும் அல்ல, எத்திராஜ்கு நிச்சயம் செய்திருக்கும் பெண். எத்திராஜ்வுடைய சொந்த அத்தை மகள். அரவிந்திருக்கும் நல்ல பழக்கம், சிறுவயதிலேயே பேசி வைத்த திருமணம் தான். ஆனாலும் தள்ளிப் போனதற்கு காரணம் சாருவின் வயதும், படிப்பும் தான். இந்த வருடம் தான் இன்ஜினியரிங் கடைசி வருடத்தை முடித்து இருந்தாள். அது முடிந்ததும் நிச்சயத்தை வைத்தவர்கள் அடுத்த ஒரு வருடம் கழித்து திருமணம் என்று முடிவு செய்தே தான் வைத்திருந்தனர். உண்மையில் அவன் அழைக்கவில்லை என்றாலும் சாரு ஓட்டை வாய், அரவிந்தன் மீது தனி பாசமுடையவள். தானாகவே கூறி விடுவாள் என்று அவனுக்கும் தெரிந்தது. தங்கையே இழந்த அரவிந்திருக்கு இன்னொரு தங்கையாக மாறிப்போன சாரு அவனை அழைக்காமல் இருப்பாளா என்ன??.

சாதனாவிற்கு துணிந்து அரவிந்த் தனியாக திருமணம் செய்து வைக்கும் போது. எத்திராஜும் உதவி புரிந்தான். அப்பொழுது சாரு சிறு பெண் என்றாலும்.

“அண்ணா உங்களுக்கு ரொம்ப தைரியம் தான். சொர்ணாக்கா மாதிரி ஒரு அம்மாவை வச்சுக்கிட்டு. ஒத்த ஆளா நின்னு உங்க தங்கச்சி கல்யாணத்தை முடிச்சிட்டீங்களே??. இதே போல இந்த தங்கச்சி கல்யாணத்தையும் முடிச்சுடுங்க”, என்று விளையாட்டு போல கூறி. எத்திராஜின் கால் மிதியையும் வாங்கி கொண்டாள்.

“நீ பேசுறது அவங்க அம்மாவ பத்தி”, என்று முறைப்புடன் கூறவும் தவறவில்லை அவன்.

“அதுக்கு ஏன் டா. என் தங்கச்சி கால மிதிக்குற?, அவள் சொன்னது ஒன்னும் பொய் இல்லையே?, எங்க அம்மா சொர்ணாக்காவுகே டஃப் காம்படிஷன் கொடுப்பாங்க”, என்று கூறி சாருவின் கையில் தட்டிக் கொண்டான் அரவிந்த்.

சாருவின் நினைவில் இப்பொழுது அவன் இதழ்கள் தானாக விரிந்தது. “இவனே இப்படி கழுவி ஊத்துனான்னா, அவள் அதுக்கு மேல கழுவி ஊத்துவா. கண்டிப்பா அவள் கிட்டயும் திட்டு வாங்கிக்கணும்”, என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே இருக்க.

அவன் பெயரை நீதிமன்றத்தில் தவாளி கூப்பிடுவது போல சத்தமாக கூப்பிட்டுக் கொண்டு இருந்தான் எத்திராஜ்.

“இங்க தானடா இருக்கேன்??, எதுக்குடா இப்படி கத்தி தொலையுற? “, என்று சாவதானமாக கேட்ட அரவிந்த். “சரி அத விடு, இப்ப விஷயத்துக்கு வா’, என்று கூறினான் .

“அதுதான் கல்யாணம் பண்ணிட்டியே மாலினி ஷாலினியையும் கூட்டிகிட்டு இங்க வர வேண்டியதுதானே?? “, என்று எத்திராஜ் கேட்க “அத பத்தி பேசுறதுக்கு தாண்டா கால் பண்ணேன்”, என்று பீடிகை போட்டான் அரவிந்த். எத்திராஜின் புருவம் இடிங்கியது.

“அவள் எனக்காக இறங்கி வறாள்டா. நானும் அவளுக்கு ஏதாவது செய்யணும், அதான் விட்டுக் கொடுக்கலாம்னு நினைக்கிறேன். ரொம்ப நம்பிக்கை எல்லாம் வந்துடல குழந்தைக்காக தான் இறங்கி போகிறாள்.ஆனா என்ன கண்ட்ரோல் பண்ண நினைக்கல, அது எனக்கு பிடிச்சிருக்கு”, அவன் பாட்டிற்கு மாலனியை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்க.

“உன் பொண்டாட்டியோட பெருமை பேசினது போதும். முதல்ல விஷயத்துக்கு வா. எனக்கு அடி வயிறு எல்லாம் கலக்குது”, என்றான் எத்திராஜ்.

“அது ஒன்னும் இல்லடா மச்சி. அவளால இப்ப கிரஷை எடுத்தோம் கவிழ்த்தோம்னு மூட முடியாது. அதனால நான் சொன்னேன் இல்ல பிளான் பி, அதை எக்ஸிகியூட் பண்ணலாம்னு நினைக்கிறேன்”.

“அது என்ன பிளான் பி??, அதெல்லாம் நான் மறந்துட்டேன். நீ முதல்ல இருந்து சொல்லு”, என்று எத்திராஜ் கேட்க.

“அட வீணா போனவனே உன் ஞாபக சக்தில காஞ்ச மிளகாவ வைக்க. ஒரே இடத்தில் எத்தனை நாள் தான் பிசினஸ் பண்றது. அதனால இங்க ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனி ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன்னு உன்கிட்ட ஏற்கனவே சொல்லித்தானே வெச்சேன். மறந்துட்டியா? “, சற்று காட்டமாகவே கேட்டான் அரவிந்த் .

“நான் அதை மறக்கல. இப்ப எதுக்கு சொல்ற, அதை சொல்லு”.

“அது வந்துடா”, என்று அவன் நீட்டி முளக்கி பேசினான் . எத்திராஜுக்கு புரிந்து விட்டது.

“இப்ப என்ன அங்க ஓபன் பண்ணனும்னு நினைக்கிற அதானே??, இன்னும் கொஞ்சம் டைம் வேணும் உன் பொண்டாட்டிய கரெக்ட் பண்றதுக்கு. அவள் உனக்காக இறங்கி போன மாதிரி. அவளுக்காக நீ இறங்கி போய் அவளை கரெக்ட் பண்ணலாம்னு நினைக்கிற, சரியா?? “, என்று சரியாகவே கேட்டிருந்தான் எத்திராஜ்.

“நண்பன்டா நீ”, என்று இங்கிருந்தே தோளில் அணைப்பது போல பாவனை செய்தான் அரவிந்த்

“சரிடா, ஆனா இங்க தான பிஷ் எக்ஸ்போர்ட் மார்க்கெட் பீக்ல இருக்கு. இங்க தான் நமக்கு ஆட்கள் தெரியும். ஓரளவுக்கு இடத்தைக் கூட நாம இங்க புடிச்சிட்டோம். சென்னையில தாதா கிரி அதிகம்னு கேள்விப்பட்டிருக்கேன். ஹார்பர் எல்லாம் அவங்க ராஜ்யம் தான் அங்க போய் எக்ஸ்போர்ட் பண்றதெல்லாம் ரொம்ப கஷ்டம்னு தோணுதுடா”, தன் மிகப்பெரிய சந்தேகத்தை கேட்டான்.

“நான் ஹார்பர் பக்கமே போடலடா. எனக்கும் அது தெரியும். நான் சொல்ல வர்றது வேற. சென்னை ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு பேர் போனதுடா. இங்க நிறைய மக்கள் வாழறாங்க. நிறைய வியாபாரம் நுணுக்கங்களும் இருக்கு. அதேபோல சீ புட்குன்னு ஒரு தனி மரியாதையும் வரவேற்பும் இருக்கு”, என்றான் அரவிந்த் .

“சென்னையில கிடைக்காத சீ புட்டா டா?“.

“என்ன முழுசா பேச விடு டா. என்னதான் இங்க சீ புட் கிடைச்சாலும். அங்கு கிடைக்கிற சில ஃபிஷ் இங்க கிடைக்கிறதுல்ல. குவாலிட்டி வைஸ் பார்த்தாலும் ரெண்டுத்துக்கும் வித்தியாசம் தெரியுது. எல்லாம் இங்க வேற விதமா இருக்கு. இங்க இருக்கவங்க எல்லாம் ரொம்ப ஹை குவாலிட்டிய ஹோட்டலுக்கு அதை ஏற்றுமதி பண்றாங்க. சோ இங்க இருக்க மக்களுக்கு தரமான பிஷ் குறைந்த விலையில் கிடைக்கிறது இல்லை. நம்மள மாதிரி தான் எக்ஸ்போர்ட் பண்ணிட்டு, பெரிய ஹோட்டல்சுக்கு வித்துடுறாங்க”.

“அதுக்கு நீ என்ன பண்ண போற?, அதேயே தானே நாமளும் பண்றோம்? “.

“ஆன்லைன் ஷாப்பிங் மூலமா ஒரு ஆப் கிரியேட் பண்ணி. அதுல சீ புட்ட குறைஞ்ச விலையில வீட்டுக்கு டெலிவரி பண்ற மாதிரி ஏற்பாடு பண்ணலாம். நீ அங்க இருந்து பொருளை அனுப்பிவை. இங்க அதுக்கான வேலைகளை நான் இறங்குறேன். உடனே பெருசா லாபம் கிட்டிடும்னு சொல்ல மாட்டேன். அது கஷ்டம் தான். ஆனா கண்டிப்பா நஷ்டம் ஏற்படாது அது மட்டும் உறுதி. ஓரளவுக்கு நம்ம பேர ரீச்சாகிட்டு மார்க்கெட்ட நாம புடிச்சிட்டோம்னா அதுக்கு அப்புறம் லாபமோ லாபம் தான்”, என்றான் அரவிந்த்.

அவன் மார்க்கெட்டிங் பற்றி கூறிய விதம் எத்திராஜிற்கு பிடித்திருந்தது. “நீ சொல்றது நல்ல ஐடியா தான். ஆனா தெரியாத இடத்துல இன்வெஸ்ட்மென்ட் போட்டு நம்ம ஆரம்பிக்கிறது??, அதுவும் இல்லாம இப்ப நம்ம பிசினஸ் கொஞ்சம் டல்லா தான போகுது?”.

“ஒரு பொண்ணு தனியா வந்து போராடி தனியா கிரஷ நிறுவகிச்சு அதுல வெற்றியும் அடைஞ்சிருக்கா. அதே துணிச்சலோடும் தைரியத்தோடும் நாம ஆரம்பிக்க கூடாதா?? “.

“யார் அந்த பொண்ணு உன் பொண்டாட்டி தானே??, இப்ப மேட்டர் தைரியத்தை பத்தி இல்ல. மேட்டர் இன்வெஸ்ட்மென்ட் பத்தி”.

“நான் அதெல்லாம் யோசிச்சுட்டேன் டா. லோன் வாங்கலாம்னு இருக்கேன். என்னோட சேவிங்ஸ் கொஞ்சம் இருக்கு. உன்னோட சேவிங்சும் இருக்குன்னு எனக்கு தெரியும். அதெல்லாம் போட்டு ஸ்டார்ட் பண்ணலாம்”, என்றான் அரவிந்த்.

“டேய் எனக்கு கல்யாணம் இருக்குன்றத மறந்துட்டியா??, இல்ல உன்ன மாதிரி யார்கிட்டயும் சொல்லாமல் ரிஜிஸ்டர் ஆபீஸ்ல ரெண்டு பேரை கையெழுத்து போட்டு முடிச்சுக்கலாம்னு எனக்கும் பிளான் பண்ணிட்டியா?? “, எதிர் முனையில் சோகமாக கேட்டான் எத்திராஜ். சத்தமாக சிரித்தான் அரவிந்த்.

“உனக்கு போய் அப்படி எல்லாம் நினைப்பேனா??, உன்னோட கல்யாணத்துக்கு இன்னும் ஆறு மாசம் இருக்கு. அதுக்குள்ள மேனேஜ் பண்ணிடலாம். அது மட்டும் இல்லாம. இந்த பிசினஸ்ல நீ எல்லா காசையும் போட வேண்டாம். பாதி காசு கூட வேண்டாம் கொஞ்சம் போட்டா போதும். 75 என்னுடையது 25 உன்னுடையது. நீ ஆசைப்பட்டால் அதுக்கப்புறமா 25% ஷேர்ஸை உன்கிட்ட கொடுத்துடறேன். அப்ப 50 பிப்ட்டி ஆயிடும் உனக்கு மட்டும் தான் இந்த ஸ்பெஷல் ஆஃபர்”, என்று அரவிந்த் கண்கள் மின்ன கேட்டான்.

“உன் ஆஃபரை அகப்பையில போடு. நாம எப்பயும் 50% ஷேர் ஹோல்டரா தான் இருக்கணும். இனிமேலும் அப்படித்தான் இருப்போம். எந்த பிசினஸ் ஸ்டார்ட் பண்ணாலும் அப்படித்தான் ஸ்டார்ட் பண்ணனும். பிசினஸ்ல நேர்மை ரொம்ப முக்கியம். நட்புக்குள்ள நேர்மை அதை விட முக்கியம். உன் தலையில மட்டும் எல்லாத்தையும் திணிக்க நான் விரும்பல. இதுலயும் நான் 50% போடுறேன். இல்லனாலும் உனக்கு கொடுக்க வேண்டிய கமிஷனை இப்போதைக்கு கட் பண்ணிட்டு. என் கல்யாணம் முதல் ஹனிமூன் செலவு வரை எல்லாத்தையும் முடிச்சிட்ட பிறகு உனக்கு அப்புறமா அனுப்பி விடுறேன்”, என்று சாதாரணமாக எத்திராஜ் பேச.

“டன்”, என்று கட்டை விரலை உயர்த்தினான் அரவிந்த். லேப்டாப் என்றும் பாராமல் அதில் தன் கட்டை விரலையும் உயர்த்தி இருவரும் ஒன்று போல குத்திக் கொண்டார்கள். அவர்கள் இருவரின் மேனரிசம் அது. கல்லூரி தொட்டு தொடர்ந்து கொண்டிருக்கிறது

அவர்களுடைய நட்பு கிட்டத்தட்ட பத்து வருடங்களாக தோழமையையும் தாண்டி அவர்கள் இருவரிடத்திலும் நேர்மை இருந்தது. அதுதான் அவர்கள் வளர்ச்சிக்கும் அவர்கள் தோழமையின் செழுமைக்கும் காரணம்.

4 thoughts on “தேவதையாக வந்தவளே 18”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *