Skip to content
Home » தேவதையாக வந்தவளே 19

தேவதையாக வந்தவளே 19

  • Sws14 

தேவதை 19

“ஆனா இது சரி வருமா டா?, இங்க இருந்து சென்னைக்கு எடுத்துட்டு போய். அங்க பேக்கிங் போட்டு. ஹோம் டெலிவரி பிசினசுன்றது. இப்ப பாப்புலர் ஆகிட்டு தான் வருது. ஆனா நமக்கு இருக்கிற வேலையில் அதை கரெக்டா பண்ணுவோமா? “, என்று கேட்டான் எத்திராஜ்.

“அங்கிருந்து நீ எக்ஸ்போர்ட் பண்றது போல தான். தினமும் அனுப்பி வைக்கணும் அது கம்பல்சரி. தினமும் அனுப்பி வைக்கிறத தினமுமே சேல்ஸ் பண்ணிடனும். அது ரொம்ப முக்கியம். மிஞ்சிப்போனா ஒரு நாள் வெச்சி இருக்கலாம். அதுக்கு மேல தாங்காது. அப்புறம் நாம அதுக்கு அதிகமா மருந்து போட்டு பதப்படுத்தணும். நம்மளால முடிஞ்ச வரைக்கும் நல்ல ஃபுட்டை நாம மக்களுக்கு கொடுக்கணும். மருந்து கலப்படம் மிகுந்த புட்ட கிடையாது. என்னதான் சிக்கன் மட்டன் இருந்தாலும் சீ புட்க்குனு ஒரு தனி பவுசு இருக்கத்தான் செய்யுது. குவாலிட்டி ரொம்ப முக்கியம். அதுல எந்த காம்ப்ரமைஸும் கிடையாது. அப்படி இருந்தா தான் நம்மளால ஒரு லெவெல்ல ரீச் பண்ண முடியும். இப்ப எல்லாம் மக்கள் ரொம்ப சோம்பேறி தனமா தான் தெரியுறாங்க. அது மட்டும் இல்லாம சென்னை மாறி மாநகரங்கள்ல. வேலைக்கு போற பெண்கள் அதிகம். அதனால வீட்டுக்கே எல்லா பொருளும் வரணும்னு நினைக்கிறாங்க. இல்லனா அப்படியே சமைச்ச உணவை கடையில வாங்கி சாப்பிட்டுக்கிறாங்க. மேக்ஸிமம் சண்டேஸ்ல நல்ல சேல்ஸ் இருக்கும். மத்த நாள்ல கொஞ்சம் கம்மியா தான் இருக்கும். பட் நாம மார்க்கெட் புடிக்கணும் அது ரொம்ப முக்கியம்? “, என்றான் அரவிந்த்.

“ஹோம் டெலிவரினா வெறும் சீ ஃபுட் மட்டும் கொடுக்க முடியாது டா. சிக்கன் மட்டன் ரெண்டும் கூட சேர்ந்து கொடுக்கணும். சோ அதுக்கான ஆள பாக்கணும். ஆர்டர் பண்ணனும். பிசினஸ்க்கு செய்யறதுக்கு வசதியான இடத்தை பாக்கணும்”, என்று அவனுடைய நண்பன் எத்திராஜ் பேசிக் கொண்டிருக்க.

“ அதெல்லாம் யோசிக்காமல் இல்லடா மச்சி, இப்ப இங்க இருக்கனால எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். மாலினியை ஃபாலோ பண்ணும் போது சில இடங்களையும் பார்த்துதான் வச்சிருக்கேன். பட் அப்ப அது செகண்ட் பிளானா தான் இருந்துச்சு. இப்ப எக்ஸிக்யூட் பண்ணலாம்னு நினைக்கிறேன். நான் இங்க பார்த்து வச்ச பிறகு உனக்கு கால் பண்றேன். நீ இங்க வா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணலாம். இடம் பார்த்துவிட்டு பிறகுதான் எவ்வளவு ஆகும்னு டிசைட் பண்ண முடியும். அதுக்கு அப்புறமா எஸ்டிமேட் போட்டு உனக்கு அனுப்புறேன்”.

“சரிடா பண்ணலாம் ஆனா கொஞ்சமாச்சும் உன்னோட மேரேஜ் லைப் என்ஜாய் பண்ணு. பொறுமையா ஒரு த்ரீ மன்த்ஸ் கழிச்சு ஓபன் பண்ணிக்கலாம்”.

“எங்க என்ஜாய் பண்றது. அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்ல ராஜா. நான் அவளை கட்டாயப்படுத்தி தான் கல்யாணம் பண்ணி இருக்கேன். அவளுக்கு முதல்ல என் மேல நம்பிக்கை வரவைக்கணும். அந்த நம்பிக்கையை தான் நான் முதல்ல சம்பாதிக்கணும். அது சம்பாதிச்சுக்கிட்டே இங்க பிசினஸ் ஸ்டார்ட் பண்ணிட்டேனா அதுக்கப்புறம் ரன் பண்றதுக்கு ஈசியா இருக்கும்”, என்றான் அரவிந்த்.

“சரி நீ பார்த்து வச்சுட்டு சொல்லு நான் வரேன். அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு முடிவு பண்ணலாம்”, என்று கூறி முடித்துக் கொண்டான் எத்திராஜ்.

அன்று மாலை அவனே சென்று மாலினியை அழைத்து வந்திருந்தான். ஓரளவிற்கு பேங்கிங் எல்லாம் அவனே செய்து வைத்திருந்தான்.

பாத்திரங்களை கூட அழகான அட்டைப்பெட்டியில் அவனே அடுக்கி வைத்திருந்தான். அவள் அதிகமான பொருள்களை உபயோகிக்கவில்லை. கட்டில் மெத்தை பீரோ பிரிட்ஜ் ஹாலில் ஒரு சோபா, சமையல் பாத்திரங்கள் தான் உண்மையில் கொஞ்சம் அதிகமாக இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் அவன் அடுக்கி வைத்திருந்தான்.

“நீங்களே எல்லாத்தையும் பண்ணிட்டீங்களா?, நான் வந்த பிறகு பண்ணி இருக்கலாமே?”, அங்கிருந்த பொருட்களை பார்த்துக்கொண்டே தயக்கத்துடன் கேட்டாள் மாலினி.

“நீ வேற நான் வேற இல்ல. யார் பண்ணாலும் ஒன்னு தானே?. வேலையை எப்பயும் ஷேர் பண்ணிக்கலாம். என்கிட்ட ஷாலுமாவை கொடு. நீ போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வா. டீ போட்டு வச்சிருக்கேன். சேர்ந்து குடிக்கலாம்”, என்று கண் சிமிட்டினான் அரவிந்த்.

அவள் சற்றென்று தன் பார்வையை தாழ்த்தி கொண்டு குழந்தையை அவனிடம் நீட்ட. அவள் தான் சரியான அம்மா ஒட்டுண்ணி ஆயிற்றே அவனிடம் செல்ல மறுத்தாள்.

“இவளை எப்படி என் பக்கம் வளைக்குறதுன்னு ஒரு ஐடியா குடேன் மாலு? “, என்று அவளிடமே அவன் கேட்க.

“உங்க பொண்ணு தானே நீங்களே கண்டுபிடிங்க”, என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள். அவள் குரலில் என்ன இருந்தது என்று அவனுக்கு புரியவில்லை. ஆனால் உங்கள் பெண் என்று கூறியது அவனுக்கு சந்தோஷத்தை கொடுத்திருந்தது. வாழ்க்கை நிதர்சனத்தை அவள் புரிந்து கொண்டாள். ஏற்றுக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். அதன் வெளிப்பாடு தான் இந்த வார்த்தைகள் என்று அவனுக்கு யாரும் சொல்லாமலேயே புரிந்தது. இதழில் புன்னகை எட்டிப் பார்த்தது.

“செல்ல குட்டி அப்பா கிட்ட இருங்க. நான் போயிட்டு ரெப்ரெஷ் ஆகிட்டு வரேன்”, என்று மாலினி கூறிய பிறகு அவனை புருவம் சுருக்கி பார்த்தாள் அந்த சிறு தேவதை.

“வாடா செல்லம் உன்னை கொஞ்சறதுக்கும் தூக்கி வச்சிக்கிறதுக்கும் இந்த அப்பா ரொம்ப ஏங்கி இருக்கேன்”, என்று அவன் கூறிய நொடி. அந்த வார்த்தை ஷாலினி அசைத்துப் பார்த்ததோ என்னவோ??, ஆனால் மாலினியை அசைத்து பார்த்தது. அவன் ஆழ்மனதில் இருந்து வரும் வார்த்தைகள்,அதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. சற்றென்று அதில் கண்கள் கலங்கிவிட்டது. குழந்தை தாயைப் பார்க்க அவள் தந்தையிடம் போக சொல்லி கண்களால் ஜாடை செய்தபடியே செய்கை செய்தாள்.

“அம்மா பாப்பாக்கு பசிக்குது”, என்றால் மகள். அதைக் கேட்ட மறுபடியும் அரவிந்த் பாலை காச்சி எடுத்து வந்து குழந்தைக்கு ஆத்த ஆரம்பித்து விட்டான். குழந்தை பாலையும் அவனையும் மாறி மாறி பார்த்தது. பசித்தாலும் அவனிடம் போகவில்லை தாய் தான் குடிப்பாட்ட வேண்டும் என்று அடம் பிடித்தாள். குழந்தைக்கு பாலை புகட்டி விட்டே அவள் தன்னை சுத்தம் செய்து கொள்ள சென்றாள்.

“பேக்கர்ஸ்ச வரவச்சிடவா மாலினி? “, என்று அவன் சத்தமாக கேட்க. அவளும் சரி என்று கூறியிருந்தாள். அவளுக்கான வேலைகள் எல்லாவற்றையும் அவனே செய்திருக்க. பீரோவில் இருந்த துணிகளை மட்டும் அவன் தொடவில்லை என்பது தெரிந்தது. முகத்தை துடைத்துக் கொண்டு அவள் நிற்கும் போதே, கதவு தட்டும் ஓசை திரும்பி பார்த்தாள். அவன் தான் கையில் தேநீருடன் நின்று கொண்டிருந்தான்.

“உள்ள வரலாமா? “, என்று அவளிடம் கேட்டான். அவள் சம்மதித்த உடன் இரண்டு தேனீர் கோப்பைகளுடன் உள்ளே வர. அவன் பின்னோடு கையில் டாய்ஸுடன் உள்ளே நுழைந்தாள் ஷாலினி. அவள் கீழே அமர்ந்து விளையாட ஆரம்பித்து விட. இருவரும் பொறுமையாக தேநீரை பருகினார்கள்.இப்படி ஒரு நாள் வரும் என்றெல்லாம் அவன் கனவு கூட கண்டிருக்கவில்லை நிஜத்தில் நடக்கும் போது நன்றாகவே இருந்தது.

“ஹாப்பன்னார்ல வரேன்னு சொல்லிட்டாங்க. உன்னோட திங்ஸ் மட்டும்தான் பேக் பண்ணனும். அதுல நான் கை வைக்கல உனக்கு பிடிக்காதுன்னு. டீ குடிச்சிட்டு பேக் பண்ணிடு. நைட் டின்னரை வெளியே பாத்துக்கலாம். இல்ல வீட்டுக்கு வர வச்சுக்கலாம்”, அவனையே பார்த்துக் கொண்டிருந்தாளே தவிர பதில் கூறவில்லை.

“அம்மணிக்கு கோவமா?“, என்று அவன் சிரித்த முகமாக கேட்டான்.‘இல்லை’ என்று தலை ஆட்டினாள்.“அப்புறம் நீ பாக்குற பார்வைக்கு என்ன அர்த்தமாம் , எனக்கு புரியலையே?“, அவன் புருவங்களை ஏற்றி இறக்கி கேட்டான்.

ஒன்றுமில்லை என்று கூறியவள். பெட்டியை எடுத்து தன் துணிகளையும் குழந்தை துணிகளையும் அடுக்க ஆரம்பித்து விட்டாள். உண்மையில் அவன் மீது அவளுக்கு கோபம் இல்லை. மாறாக குழப்பம் மட்டுமே. இன்னுமே அவனை நம்பலாமா நம்ப கூடாதா என்ற குழப்பம். அவன் அமைதியாக வெளியில் சென்று விட்டான். அந்த வீட்டில் டிவி கூட இல்லை. அலைபேசியை மட்டுமே வைத்திருந்தால் அவள். ஆனால் டேப் ரெக்கார்டர் இருந்தது. அதில் பாடலை ஒலிக்க விட்டு விட்டு அமைதியாக சோபாவில் காலை நீட்டி அமர்ந்து விட்டான் அரவிந்த்.

“ஒத்தையில நீயும் போனா அது நியாயமாஉன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமாநீ வாயேன்னு சொன்னாலேவாழ்வேனே ஆதாரமாநீ வேணான்னு சொன்னாலேபோவேண்டி சேதாரமா”….

அவன் மனதை படிப்பது போல இருந்தது அந்த பாடல்கள் அதில் அவன் இதழ்கள் தாராளமாக விரிந்து கொள்ள. அவள் புருவம் கேள்வியாக மேல் எழுந்தது. பாடல் தானாக ஒலிக்கிறதா அல்லது இவன் ஒலிக்க விட்டானா ஆனால் பாதியில் இருந்து தானே வருகிறது. அவனே பாடலை பாடுவது போல் அல்லவா இருக்கிறது?? என்று சிந்தித்தவள் தலையை உலுக்கிக் கொண்டாள். ஒற்றை ஆளாக அனைத்து வேலைகளையும் அவளே செய்து கொண்டு. தனித்து தன் மகளுடன் வாழ்ந்து வந்தவளுக்கு துணையாக ஒருவன் கணவன் என்ற பெயரில். அவள் வேலைகளை அவனும் பகிர்ந்து கொள்கிறான். அவளுக்கும் குழந்தைக்கும் பார்த்து பார்த்து அனைத்தையும் செய்கிறான். அந்த அன்பில் நனைவது சுகமாக தான் இருந்தது. ஆனால் இது நிலையானதா??, உண்மையானதா?? “, என்ற சந்தேகம் அவளை விட்டு இன்னும் அகலவில்லை என்பதுதான் உண்மை.

“ இப்பொழுது இதற்கெல்லாம் தன்னை பழக்கப்படுத்திவிட்டு. தன் மனதும் இதற்கு அடிமையாகி விட்ட பிறகு இது எல்லாம் மாயை என்று தெரிந்தால் என்ன செய்வது?”, தன்னையே கேள்வி கேட்டபடி நொந்து கொண்டு இருந்தாள் மாலினி.எப்பொழுதும் எதற்கும் ஆசைப்படாதவள்தான் அவள். ஆனால் வாழ்க்கை அவளுக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்திருக்க. எதையும் யாரையும் நம்ப அவள் மனம் மறுத்துக் கொண்டே இருந்தது. திருமணமாகி மூன்று நாள் கடந்து விட்டது. அதற்கு முன்பும் சரி பின்னும் சரி. அவனிடமிருந்து தவறான பார்வை அவளுக்கு கிட்டவில்லை. குழந்தைக்காக அவன் மனம் ஏங்குவது அவளுக்கு புரிந்தது. தனக்கே குழந்தையை பிரிய மனம் இல்லாத போது. ரத்த பந்தம் உடையவன் தாய்மாமன் என்பவன் தாய்க்கு சமமானவன். அவனுடைய ஏக்கமும் அன்பும் அவளுக்கு புரிந்தே இருந்தது. அது இறந்து விட்டதாக நினைத்த குழந்தை உயிருடன் இருப்பதும் இறந்துவிட்ட தங்கையின் பிம்பமாக இருப்பதும் அவனுக்கு எவ்வளவு ஏக்கங்களை கொடுத்திருக்கும் என்று அவளால் திருமணத்திற்கு பிறகு உணர முடிந்திருந்தது. அவனைப் பற்றியே சிந்தனை சுழன்று கொண்டிருக்க. அவள் அவளாகவே இல்லை. தன் போக்கில் உடைகளை அடுக்கி வைத்தாள். அவன் குரல் கொடுத்தான்.

“பேக்கஸ்ல இருந்து ஆள் வந்துட்டாங்க மாலினி. நான் வெளியில இருக்க திங்ஸ் எல்லாம் கொடுக்கிறேன்.

ஓகேவா? “, என்று கேட்டான். .

“சரி”, என்று மட்டுமே அவள் குரல் கொடுத்திருந்தாள். முதலில் எதையும் கேட்காதவன். இப்பொழுது எல்லாவற்றையும் கேட்டு கேட்டு செய்கிறான்.

இந்த திருமண பந்தத்தை கிட்டத்தட்ட வலுக்கட்டாயமாக அவள் மீது திணித்து விட்ட போதும். அவர்களுக்கான வாழ்க்கையை அவன் திணிக்கவில்லை. வற்புறுத்தவுமில்லை. அவள் வருவதற்குள் அடுப்பு தேனீர் பாத்திரங்கள் என்று எல்லாமே கழுவி பாக்ஸில் போட்டு எடுத்தும் கொடுத்திருந்தான். இவனோடு தன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற சந்தேகத்தை சிறிது சிறிதாக அவன் போக்கிக் கொண்டிருந்தான். ஆனால் தோன்றிய எண்ணங்களை அவள் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள். ஒரு வழியாக அனைத்தும் எடுத்து சென்று விட ஒரு பெட்டி மட்டும் அவள் கையில் இருந்தது. “இதையும் அதிலேயே போட்டு இருக்கலாமே மாலினி? “, என்று அவன் கேட்க..

“இல்ல இது என்னோட பொக்கிஷம். எது மறைஞ்சாலும், இது மிஸ் ஆக கூடாது. அதனால தான் நானே என் கையோட எடுத்துட்டு வரேன்”, என்றால் அவள். அவன் உதட்டை சுளித்தான். அப்படி என்ன அதில் பொக்கிஷம் இருக்கிறது என்று நினைவு எழுந்தாலும். அவள் கேட்டால் கூற மாட்டாள் என்பது அவனுக்கு தெரிந்தே இருந்தது.

‘ஒருவேளை கழட்டி போட்ட தாலிய அதுல பத்திரமா வச்சிருக்காளோ??, இல்ல முன்னாள் கணவனோட ஞாபகமா ஏதாவது?? “, என்று நினைத்தவன் இல்லை என்று தலையிலேயே அடித்து கொண்டான். தாலியை கழட்டி எறிந்தது அவளே எனும் போது அதை ஏன் அவள் எடுத்து வைத்துக் கொள்ளப் போகிறாள்..

அவளை நீ திருமணம் செய்து இருக்கிறாய், இன்னொரு முறை அவளுடைய கடந்த காலம் உன்னுடைய சிந்தனையில் வரவே கூடாது அது கடந்தது கடந்ததாகவே இருக்க வேண்டும்”, என்று அவன் மனதிற்கு அவனே கூறி கொண்டான்.

“ திருமணம் ஆகாத பொண்ணா காதலிச்சு திருமணம் செஞ்சிக்கிறது வேறு. திருமணமாகி டைவர்ஸான பெண்ணை காதலிச்சு திருமணம் செஞ்சுக்கிறது வேறு. அந்தப் பெண்ணுடைய கடந்த காலம் உன் வாழ்க்கையில் உன் சிந்தனையில் எப்பவுமே வரக்கூடாது. அதுல அவள் கஷ்டம் அனுபவிச்சாளோ இல்ல சந்தோஷம் அனுபவிச்சாளோ. நீ அதை நினைவூட்டக்கூடாது. உன் சிந்தனையிலும் அது வரக்கூடாது. ரொம்ப ஜாக்கிரதையா அந்த பொண்ணை கையாளனும் அப்பதான் உன்னோட கல்யாண வாழ்க்கை ஒழுங்கா இருக்கும்”, தந்தைக்கூறிய அறிவுரைகள் ஞாபகத்தில் வந்து சென்றது.

அவர்கள் வீட்டைக் பூட்டி விட்டு வெளியில் வரும் போதே எதிரில் எதிர்வீட்டு பெண்மணி நின்று கொண்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *