தேவதை 22
அவர்களை நெருங்கும் போது தான் அவன் உணவு தட்டில் அப்படியே உணவு இருப்பதும். அவன் கையைக் கூட அளம்பாமல் பேசிக் கொண்டிருப்பதும் தெரிந்தது.
“சாரி, ரொம்ப லேட் ஆயிடுச்சு. நீங்க எல்லாம் சாப்பிட்டிருக்கலாம்”, தயக்கத்துடன் கூறினால் மாலினி.
“உங்கள விருந்துக்கு கூப்பிட்டுடுட்டு நீங்க இல்லாம சாப்பிடறதா? “, என்று பார்வதி கேட்க.
“குழந்தை பசி தாங்க மாட்டாள்”, என்று மீண்டும் மாலினி அதையே கூறினாள்.
“பரவால்ல உட்காருமா சாப்பிடலாம். குழந்தைங்க எல்லாரும் சாப்பிட்டாங்க மொத்தமா விளையாடட்டும்“, என்று பார்வதி கூறினார் .
மற்ற இரண்டு குழந்தைகளும் கைநீட்டி ஷாலினியை அழைத்தாலும் அவள் போக வேண்டுமே??. தாயை இன்னும் அழுத்தமாக பற்றி கொண்டாள்..
“ஸ்டார்டிங் பிராப்ளம். கொஞ்சம் பழக ஆரம்பிச்சா பழகிடுவாள் . புதுசா இருக்குறதுனால தான் தயங்கரா? கிரஷ்ல எல்லாம் மத்த குழந்தைகளோட நல்லாவே விளையாடுவா“, என்று மகளை விட்டுக் கொடுக்காமல் பேசினாள்.
“சரிமா அவள மடியிலேயே உட்கார வச்சுட்டு சாப்பிடுவது உனக்கு கஷ்டமா இருக்காதா? “, என்று கேட்டு அவர் முடிக்க கூட இல்லை.
“இல்ல ஆன்ட்டி அவள் எனக்கு எப்பவுமே கஷ்டம் இல்ல”, என்று கூறி இருந்தாள் மாலினி. அதில் அரவிந்தனின் இதழ்கள் தாராளமாக விரிந்தது. அவனைப் பார்த்தவள்..
“நீங்களாவது சாப்பிட்டு இருக்கலாமே? “, என்று சிறு குரலில் கேட்டாள்.
“டேபிள் மேனஸ். என் பொண்டாட்டி சாப்பிடாத போது நான் மட்டும் சாப்பிடுவேனா?? “, என்று அரவிந்த் கேட்க
“ரெண்டு பேரையும் ஒண்ணா விருந்துக்கு கூப்பிட்டு இருக்கோம் தனித்தனியா சாப்பிட்டா எப்படி??, அதான் அண்ணா உங்களுக்காக வெயிட் பண்றாரு”, என்றால் பாக்யா.
அவளைப் பார்த்தாலும் பெரிய வயது பெண் போல தெரியவில்லை. தன்னுடைய வயது தான் இருக்க வேண்டும் என்று நினைத்தாள் மாலினி.ஆனால் அவளுடைய இரண்டு குழந்தைகளும், ஷாலினியை விட சற்று பெரிய பிள்ளைகள் என்று பார்த்த உடனே தெரிந்தது. எப்படி வயதை கேட்பது சிரித்து மழுப்பியவள் தன் தட்டில் பரிமாறப்பட்ட உணவை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.
“குழந்தைக்கு ரெண்டு வயசுக்கு மேல ஆயிடுச்சு இல்லையா?, அடுத்த குழந்தைக்கு முயற்சி பண்ணலாமே?”, என்று பார்வதி கேட்க. சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவு தொண்டையில் சிக்கியது.. தன் மனைவியை பார்த்தவன்.
“இல்ல ஆண்ட்டி இப்போதைக்கு குழந்தை வேணாம்னு முடிவு பண்ணி இருக்கோம். கொஞ்ச நாள் போகட்டும்”, என்று அரவிந்த் பதில் கூறினான்.
“குழந்தை தனியா இருந்தா இப்படித்தான் இருப்பாள். அவளுக்குன்னு துணைக்கு தம்பியோ தங்கச்சியோ வந்துருச்சுன்னா சகஜமாயிடுவாள். இதோ இவன் கூட இப்படித்தான் இருந்தான்”, என்று தன் பேரனை சுட்டிக்காட்டி கூறினார்.
“இல்ல ஆன்ட்டி. இப்பதான் சண்டை எல்லாம் முடிஞ்சு சமரசம் ஆயிருக்கோம். கொஞ்ச நாள் ஆகும்”, என்றவன் கூற.‘
‘இவன் ஏன் இப்படி உளறி வைக்கிறான்?’ என்று அவள் மனதிற்குள் எண்ணியபடி அவனையே பார்த்திருந்தாள்.அதன் பிறகு சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஏனோ அந்த பெரியவர் அடுத்த குழந்தையை பற்றியே பேசிக் கொண்டிருந்தார். தங்களின் வீட்டு பிள்ளைகளைப் பற்றியும் பேசினார்.
அவர்கள் இருவரும் உணவை முடித்துக் கொண்டு வீட்டிற்கு செல்லும் போது. பார்வதி தங்கள் வீட்டில் இருக்கும் பாலை கொடுக்க எத்தனிக்க.. அரவிந்த் பொருட்கள் வீட்டுக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடும் ஆன்ட்டி என்று கூறிவிட்டு வந்துவிட்டான். சொன்னது போல ஐந்து நிமிடங்களில் பொருட்களும் வந்து சேர்ந்தது அந்த வீட்டில் மகளுக்காகவே என்றாலும் பாலை முதன்முதலாக காய்ச்சி கொண்டு இருந்தாள் மாலினி.
“ஷாலு பேபி அப்பா கிட்ட வாம்மா? “, என்று மகளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் அரவிந்த்.
“ஹுஹும்”, என்று முகத்தை சுருக்கி அந்த குழந்தை இடமும் வலமும் தலையாட்டினாள்..
பாலை ஆற வைத்து பீடிங் பாட்டலில் ஊற்றி வரவேற்பு அறையில் சோபாவில் அமர்ந்து குழந்தைக்கு குடிப்பாட்டி கொண்டு இருந்தால் மாலினி.
சமையலறை வாசலில் சாய்ந்து நின்றவன். ஒரு கையை பாக்கெட்டில் கொடுத்தபடி வலக்கையால் கிளாஸில் இருந்த பாலை உறிஞ்சி சுவைத்தபடியே எதிரில் அமர்ந்திருந்த மனைவியையும் மகளையும் ரசித்து கொண்டிருந்தான் அரவிந்த்.
உள்ளுணர்வில் தீண்டப்பட்டு அவள் அவனை திரும்பி பார்க்க. சுதாரித்தவன் எங்கோ பார்த்தபடி பாவனை செய்தான் . பிறகு தன்னை மறைத்துக் கொண்டு சமையலறைக்குள் சென்று விட்டான். நாம இங்க உட்கார்ந்து இருக்க கூடாது. பாலை எடுத்துட்டு ரூமுக்குள்ள போய் இருக்கணும். மாலினி சிந்தித்து கொண்டு இருக்க வெளி கதவு தாழ் போட்டிருக்கிறதா என்று கவனித்தவன். அவளுக்கு கஷ்டம் கொடுக்காமல் அவன் அறைக்கு சென்றான். சிறிது நேரத்தில் வெளியில் வந்தான்.
கையில் கம்பளி இருந்தது. “அந்த ரூம்ல இருக்கிறது புது ஏசி ஸ்பிளீட் ஏசி வேற. குளிர் அதிகமா இருக்கும். கொஞ்சம் பார்த்து யூஸ் பண்ணிக்கோ. எதுக்கும் இது யூஸ் ஆகும் பாத்துக்கோ. வேற ஏதாவது வேணும்னா உடனே குரல் கொடு மாலினி. தயக்கம் காட்டாத. குட் நைட்“, என்று கூறிவிட்டு அவன் அறைக்குச் சென்று விட்டான். அதுவரையிலும் ஒரு பதட்டம் இருந்தது. எங்கே அவன் வீட்டில் அவன் தன்னை வற்புறுத்துவானோ என்று இப்பொழுது நிம்மதியாக உணர்ந்தாள். புது இடம் தூக்கம் வர மறுத்தாலும் வேலை, குழப்பம், சோர்வு என்று அவளையும் தூக்கத்தில் ஆழ்த்தி இருந்தது.
…….
மறுநாள் எப்பொழுதும் போல விடிந்தது.. புது சூழலில் இருப்பதை அப்பொழுதுதான் உணர்ந்தாள் மாலினி. உறங்கும் குழந்தையின் நெற்றியில் முத்தம் பதித்து விட்டு அவசரமாக கொண்டையை கட்டிக்கொண்டு அறையிலிருந்து வெளியில் வந்தாள்.
வயதான ஒருவர் நின்று கொண்டிருக்க. முதலில் அதிர்ந்தவள். பிறகு அவர் அரவிந்தின் சாயலில் இருப்பது தெரிந்தது. ஐயோ புகைப்படத்திலும் அலைபேசியிலும் பார்த்தவர். என்று சிந்தித்தபடியே அவசரமாக அவரை நெருங்கினாள்..
“குட் மார்னிங் மாலினி “, என்று கூறிக்கொண்டே கையில் கோப்பையை ஏந்தியபடி தன் அக்மார்க் புன்னகையுடன் வந்தான் அரவிந்த்.
“இ, இவங்க உங்க அப்பா தான?, என்ன எழுப்பி இருக்கலாம் இல்ல? “, என்று பதட்டமாக அவன் கையில் இருந்த கோப்பையை வாங்க செல்ல.
“எதுக்குமா பதட்டம், நான் இவனோட அப்பா தான்”, என்றார் லோகநாதன். அவள் உடல் மொழியில் இன்னுமே பதட்டம் குறையாமல் இருக்க.
“காபி எடுத்துக்கோ”, என்று அவளிடம் நீட்டினான் அரவிந்த். மாலினி அதை வாங்காமல் அவரின் காலில் பணிந்து எழுந்தாள்.
“நல்லா இருமா”, என்று மணமாற அவள் தலையில் கையை வைத்து ஆசீர்வதித்தார் லோகநாதன். கண்கள் கலங்க நெஞ்சில் கையை வைத்தபடி நிமிர்ந்து பார்த்தால் அவரை. அவனுடைய அதே வசீகரமான சிரிப்பு அவருக்கும் சொந்தமாக இருந்தது.
“ஏன்டா மருமகள் மட்டும் தனியா ஆசீர்வாதம் வாங்குறாள்?. உனக்கு யாராவது சொல்லனுமா கால்ல விழ சொல்லி. ரெண்டு பேரும் ஜோடியா ஆசீர்வாதம் வாங்கினா தானே எனக்கும் சந்தோஷமா இருக்கும்”, என்றார் லோகநாதன்.
“அதுக்கு என்னப்பா விழுந்திட்டா போச்சு”, என்று மனைவியை ஒரு கையால் அணைத்தார் போல அவளையும் குனிய வைத்து அவனும் தன் தந்தையின் காலில் பணிந்தான். அவனுடைய அணைப்பில் அவள் அதிரவெல்லாம் இல்லை. பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் லேசான அணைப்பு. அதில் எந்த காமமும் வந்து குடிகொண்டு விடவில்லை என்று அவளுக்கு நன்றாக புரிந்தது..
அவர் இம்முறையும் மனமாற இருவரின் தலைமீது கையை வைத்து ஆசீர்வதித்தார். தன்னுடைய கடந்த காலம் இவருக்கு தெரியுமா?? தெரிந்தால் இதே போல தன்னை ஆசீர்வதிப்பாரா என்ற சந்தேகம் அந்த நொடியில் அவளுக்கு எழுந்தது.
“எங்க என்னோட பேத்தி அவள பாக்கணும்னு தவியா தவிச்சு போய் வந்து இருக்கேன் “, என்றார் லோகநாதன்.
மகன் செல்லமாய் கோபித்துக் கொண்டான். “அப்ப என்னையும் உங்க மருமகளையும் பார்க்க வரலைன்னு சொல்றீங்க?, பாரு மாலு. நியாயமா நீ இதுக்கு உன் மாமனார் கிட்ட சண்டை பிடிக்கணும். இதெல்லாம் நான் உனக்கு சொல்லித் தர வேண்டியதா இருக்கு. என்ன மருமகள் நீ?“, என்று மனைவியையும் முடுக்கி விட்டான்.
“ஏன்டா நான் நிம்மதியா என் மருமகள் கூட சந்தோஷமா பேசறது உனக்கு பிடிக்கலையா, ஏத்திவிட்டு கோத்து விடுற?, உங்க அம்மா எல்லாம் கல்யாணத்தை போது என் கால்ல விழுந்தது தான். அதுக்கப்புறம் யாரும் இதுவரைக்கும் விழல .
முதல் முறையா இத்தனை வருஷம் கழிச்சு என் மருமகள் விழுந்து இருக்காள்”, என்று கூறியவர் தன் பேகை திறந்து அவர்களுக்காக வாங்கி வந்திருந்த பரிசை எடுத்து அவளிடம் நீட்டினார்.
“இல்ல, இல்ல அங்கிள் வேண்டாம்”, தடுமாறினாள் மாலினி. அவள் கையைப் பிடித்து உரிமையாக அவள் கையில் திணித்தார். “பிரிச்சு பாருமா”, என்று கூறினார். தன் கணவனை ஒரு பார்வை பார்த்தாள். அவன் கண்களால் சம்மதம் சொல்ல கையில் இருந்த அந்த கையடக்க பெட்டியை பிரித்தாள். அதில் நெக்லஸ் கம்மல் வளையல் என்று ஒரு செட் இருக்க. அதனுடனே ஒரு வாட்ச்சும் சிறிய வகை செயினும் இருந்தது.
” அங்கிள் இது கோல்டா? “, அதிர்வுடன் லோகநாதனை பார்த்து கேட்டாள் மாலினி.
“ஏன்மா என்ன பத்தி என் மகன் ஒண்ணுமே சொல்லலையா?. சொல்லி இருக்க மாட்டான், படவா இவன பத்தி மட்டுமே பேசிக் கிட்டு இருந்திருப்பான். கோல்டுல வாங்க முடியாத அளவுக்கு உன் மாமனார் ஒன்னும் கஷ்டப்படலாம”, அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே,
“பரிசு அவளுக்கு மட்டும் தானா இல்ல உங்க பையனுக்கும் ஏதாவது இருக்கா? “, என்று அரவிந்த் கேட்க.
“உனக்கு தான் பரிசா மாலினி கிடைச்சிருக்காளே, பிறகு என்ன??, மாலினி அந்த பாக்ஸ்ல இருக்க வாட்சை எடுத்து உன் புருஷன் கையில கட்டிவிடுமா”, என்றார். அடுத்தடுத்த அதிர்வுகளில் இருந்து தாங்க முடியாமல் அவள் தடுமாறினாள். அவள் கண்கள் கலங்க தன் கணவனை ஏறெடுத்து பார்த்தாள்.
“அப்பா விடுங்க. அவள் சங்கடப்படுறாள். ஆமா மருமகளுக்கு இத்தனை வாங்கி வந்திருக்கீங்களா பேத்திக்கு வாங்காம வந்து இருக்க மாட்டீங்களே? “, என்று அரவிந்த் சூழ்நிலையை சகஜமாக்க முயன்றான்.
“அதை நான் என் பேத்தி கையில தான்டா கொடுப்பேன்“, என்றார் லோகநாதன். சரியாக அந்நேரத்தில்
“அம்மா” என்ற மழலையின் குரல். அனைத்தையும் மறந்து விட்டாள் மாலினி. கையில் இருந்ததை கணவனின் கையில் திணித்துவிட்டு. வேகமாக அவள் அறைக்குள் செல்ல. அதற்குள் ஷாலினி வாசலுக்கே வந்து விட்டிருந்தாள். தூக்கி அணைத்துக் கொண்டாள். ஷாலினியை பார்த்ததும் அவர் கண்களில் ஆனந்த கண்ணீர். தன் மகளையே சிறு குழந்தையாய் பார்ப்பது போல் இருந்தது
“அம்மா காணோம் பாப்பா பய “, பயந்துவிட்டேன் என்ற வார்த்தையை தான் முடிக்க தெரியாமல் முடித்திருந்தால் மகள்.
“அம்மா இங்க தாண்டா இருந்தேன். உன்னை விட்டு எங்க போக போறேன்? “, உச்சி முகர்ந்தால் மாலினி. அதற்குள் அவர்கள் இருவரின் அந்த பாசப்பிணிப்பை பார்த்துக் கொண்டே அவர்களை நெருங்கி இருந்தார் லோகநாதன்.“ஷாலு குட்டி”, என்று ஆசையாக அழைத்தார். கண்களை கசக்கி கொண்டே புதியவரை புருவ முடிச்சுடன் பார்த்தாள் குழந்தை.
“தாத்தா மா தாத்தா. தாத்தா கிட்ட வா பார்க்கலாம் “, என்று அழைத்தார்.
“இத்தனை நாளா கூப்பிடுறேன். என்கிட்டயே வரல, நீங்க கூப்பிட்ட உடனே வந்துருவாளா?, சான்சே இல்ல அப்பா”, என்று கூறிக்கொண்டே அரவிந்தும் அவர்கள் அருகில் வந்து நின்றான். குழந்தை இருவரையும் மாறி மாறி பார்த்தது. பிறகு தாயை திரும்பி பார்த்தாள்.“ஷாலினியோட தாத்தா போங்க”, என்று மாலினி கூற. மீண்டும் அந்த வயதான மனிதரை அவள் ஆழ்ந்து பார்த்தாள்.“தா தா “, என்றவள் கேள்வியாக நிறுத்த.
“ஷாலினியோட தாத்தா”, என்று அவளையும் அவரையும் சுட்டிக்காட்டி கூறினார் லோகநாதன். அவர் நீட்டிக் கொண்டிருந்த இரண்டு கரங்களையும் பார்த்தவள். என்ன நினைத்தாளோ அவரிடம் தாவினாள். மாலினிக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்தான். அரவிந்தனிடம் போகாதவள் அவனுடைய சாயலில் இருக்கும் இவரிடம் போய்விட்டாளே??. அவருடைய கண்களில் இருந்த தவிப்பை பார்த்தாளா, அல்லது அரவிந்தின் சாயலில் இருப்பதால் அவரிடம் சென்றாளா?, அல்லது தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும் என்பது இதுதானா?? “, பல கேள்விகளுடன் மாலினி இமைக்காமல் பார்த்திருக்க.
“அம்மா, தா தா”, என்று மாலிமையை பார்த்து கூறினால் ஷாலினி.“அப்பா வரும்போது ஏதாவது மந்திரவாதி கிட்ட இருந்து வசிய பொடி வாங்கிட்டு வந்தீங்களா?, இத்தனை நாள் நான் கூப்பிடுறேன் என்கிட்ட வரவே இல்லப்பா உங்ககிட்ட மட்டும் எப்படி முதல்ல வந்துட்டா? “, அதிர்ச்சியுடன் கேட்டப்படியே தன் தந்தையை சுத்தி வந்தான் அரவிந்த்.“வசிய பொடி இல்லடா இது. அன்பு. என் கண்ணுல இருக்க பாசம் என் பேத்திக்கு தெரிஞ்சிருக்கு “, என்று அவளை உச்சி முகர்ந்தார். லோகநாதன்.
“இதெல்லாம் ரொம்ப அநியாயம் பா. நான் இங்க தவிச்சு போயிருக்கேன். நீங்க வந்த உடனே குழந்தையை உங்க பக்கம் வசியம் பண்ணிட்டீங்க”, என்று சலுகையாக கோபித்துக் கொண்டான் அரவிந்த். மீண்டும் அவள் மாலினியை பார்த்துவிட்டு தாயின் கைக்குத் தாவி செல்ல.
“நீ கண்ணு வச்சு என் பேத்தியை அனுப்பிட்டடா”, என்றார் லோகநாதன். அரவிந்த் சிரித்தான்.
“அதான பார்த்தேன்”, என்றான். “அங்கிள் ஒரு நிமிஷம் பாப்பாவ சுத்தப்படுத்தி கூட்டிட்டு வறேன். பசி தாங்க மாட்டாள்“, என்று கூறிவிட்டு குழந்தையை அழைத்துச் சென்ற மாலினி சிறிது நேரத்தில் வெளியே அழைத்து வந்தாள்.
அரவிந்த் பாலுடன் காத்திருக்க. நன்றி உணர்வோடு அவனைப் பார்த்தவள். முதலில் குழந்தைக்கு பசியாற்ற விளைந்தாள். லோகநாதனின் பார்வை அவளையும் குழந்தையை மட்டுமே அவதானித்துக் கொண்டிருந்தது. அரவிந்த் முதல் முதலில் மாலினியை பற்றி கூறும்போது அவர்கள் இருவரின் சம்பாஷனைகளை வீடியோ மூலமாக காட்டும்போது பார்த்த அதே பிம்பங்கள் இப்பொழுது கண் முன்னால். தன் பேத்திக்கு கிடைத்த நல்ல தாயை எண்ணி அவர் மனமார சந்தோஷத்துடன் அமர்ந்திருக்க. அவரையும் அறியாமல் அவர் கண்களில் ஆனந்த கண்ணீர் வடிந்தது.
Very super😍
nice ena irunthalum avar blood aache atha papa udane konjam poita ipo aravind appa kum santhosam than aana amma ena pesuvaru therilaye . petha appa va vida mamanar intha alavuku irukurathu avaluku vithiyasama iruku
Thatha pethi.oda bonding vera level aachae athu than