Skip to content
Home » தேவதையாக வந்தவளே-29

தேவதையாக வந்தவளே-29

தேவதை 29

விடிந்து விடியாமல் இருக்க. வெளிச்சம் அவள் முகத்தை தீண்டும்போது. கண்களை மூடி ஆழ்ந்த சிந்தனையில் இருந்த மாலினி கண்களை பிரித்தாள். நேரத்தை பார்த்தாள், மணி ஐந்து என்று காட்டியது. குழந்தையை பார்த்தாள். அவள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.

குழந்தைக்கு மட்டும் தான் உணவை எடுத்து வந்து ஊட்டி இருந்தாள். தண்ணீர் பாட்டில் எடுக்க அது காலியாக இருந்தது. வயிறு பசியால் இறைஞ்சியது. முதல் நாள் உண்ண தோன்றவில்லை. யோசிக்க யோசிக்க மனது தெளிவாகும்போது பசியும் தானாக ஏற்பட்டது. உறங்கி இருந்தால் கூட பசி தெரிந்திருக்காது, ஆனால் விழித்தே இருந்தது அவளை சோர்வாக்கி இருந்தது. தண்ணீரையாவது குடிக்கலாம் என்று எடுந்தாள்.

கதவை மெல்ல திறந்தாள். திறந்தவள் உறைந்து நின்றாள். அங்கு அவளுடைய கணவன் சுவரில் சாய்ந்த படி அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். அந்த அறையில் கதவருகில். பார்க்கும்போதே மனம் இளகியது .

எத்தனை நேரம் கெஞ்சலுடன் மன்றாடினான். தான் அவனுக்காக இறங்கவில்லையே??, அவனுக்கு அப்படி கெஞ்ச வேண்டிய அவசியம் கூட இருந்திருக்கவில்லை, தண்ணிலை விளக்கம் கொடுத்துக் கொண்டே இருந்தான். அப்பொழுது அதை அவள் மனம் ஏற்கவில்லை. அவன் செய்தது தரியா தவறா என்று இன்னும் சிந்தித்துக் கொண்டுதான் இருந்தாள். அவன் நினைத்திருந்தால் இப்பொழுதும் மறைத்திருக்கலாம். ஆனால் எத்தனை நாட்களுக்கு உண்மையை மறைக்க முடியும்??. நல்ல வேலையாக அந்த அறையிலுள்ளே எந்த கருவியும் இருந்திருக்கவில்லை. இருந்திருந்தால் அவளுடைய பெண்மை விழித்திருக்கும். பழைய மாலினியாக மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். குழந்தையோடு எங்காவது தப்பித்து ஓட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கும். இது எல்லாம் தேவையில்லாததாக ஆக்கிவிட்டான். அதற்காக அவன் செய்தது சரி என்று மனம் ஒப்புக் கொள்ளவில்லை. தவறு இல்லை என்றும் ஒரு மனம் வாதிட்டு கொண்டிருந்தது தான் வேடிக்கையாக இருந்தது அவளுக்கு.

அவள் வந்த அரவம் கூட உணராமல் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவனை பாதுரமாக பார்த்தாள் பாவை அவள்.

மடிந்து குனிந்து அமர்ந்தாள். நிர்மலமான முகம். சிரிக்கும்போது மட்டும் அல்ல உறங்கும் போது கூட அழகாகத் தான் தெரிந்தான். இதுவரை அவள் அவனை ஊன்றி பார்த்ததில்லை அவனை என்று இல்லை, யாரையும் அப்படி ஊற்றி பார்க்கும் எண்ணமே இருந்ததில்லை. கலையான அந்த முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது. தலையை உலுக்கி கொண்டாள். எழுந்து தன் வேலையை பார்க்க செல்லலாம் என்று நினைத்தாள். பிறகு திரும்பி அவனை பார்த்தாள். பாவமாக தோன்றியது. கழுத்து வலிக்கும் என்று அவனுக்காக மனம் வருத்தம் கொண்டது.

தூக்க கலக்கத்தில் கண்களை மூடிக்கொண்டே அவன் கழுத்தை இப்படியும் அப்படியும் அசைத்தான். பிறகு மீண்டும் அதே நிலைதான்.

மீண்டும் குனிந்து அவன் அருகில் மண்டியிட்டவள். அவனை எப்படி அழைப்பது என்று தெரியாமல் தடுமாறியவள். “என்னங்க”, என்ற அந்த குரல் அவளுக்கே கேட்டதோ என்னவோ??.

இரண்டு முறை அதைப்போலவே அழைத்தாள். அவனிடம் அசைவு இல்லாமல் இருக்க. வேறு வழி இல்லாமல் அவன் புஜத்தைப் பிடித்து உலுக்கினாள்.. “சாரி சாரி இனிமே பண்ண மாட்டேன் “, என்று கூறியபடியே அதிர்ந்து விழித்தவன். அவளைப் பார்த்ததும் மீண்டும் கண்களை கசக்கி கொண்டான். .

“சாரிமா ஒரே ஒரு சான்ஸ் குடு.. நான் இனிமேல் இந்த மாதிரி தப்பு பண்ணவே மாட்டேன். எதுனாலும் உன் கிட்ட சொல்லிட்டு செய்யுறேன். காட் பிராமிஸா உங்க ப்ரொடெக்ஷன்காக தான் பண்ணேன்”, என்று தொண்டையில் இரு விரலை வைத்து அழுத்தியபடி கூறினான்.

மீண்டும் அதைப் பற்றி பேச அவளுக்கு விருப்பமில்லை, எழுந்த முயற்சித்தாள்.. அவன் கரத்தைப் பிடித்து இழுத்தான். அவள் எதிர்பார்க்காததால் நிதானம் இன்றி அவன் மீது விழப்போக. சுதாரித்து கதவை பிடித்து நின்றவள். அவனைப் பார்த்து முறைத்தாள்.. மீண்டும் அவன் காதை பிடித்த படி மன்னிப்பு கேட்டான்.

“ இந்த பேச்சு வேண்டாம் எனக்கு இதை பத்தி பேசறதுல விருப்பம் இல்ல.
நீங்க இங்க இருந்து எதையும் சாதிக்க வேண்டிய அவசியம் இல்ல. உள்ள போய் படுத்து நிம்மதியா தூங்குங்க “, என்றாள்.

“ நீ என்ன மன்னிச்சிட்டேன்னு சொல்லாத வரைக்கும் எனக்கு நிம்மதி இருக்காது “, என்றான் அரவிந்த்.

“ அப்போ உங்களுக்கு அது தப்புன்னு தெரியுது தெரிஞ்சு இருந்து பண்ணி இருக்கீங்க. இனிமே எப்படி என்னால உங்கள நம்ப முடியும்??. இத்தனைக்கும் என்னோட கடந்த கால வாழ்க்கை உங்களுக்கு தெரியும்னு சொன்னீங்க “, பேசும்போதே அவள் குரல் கமரியது.

“ நான் கேமரா வைக்கும் போது உன் கடந்த காலம் எனக்கு தெரியாது. நீ நல்லவளா கெட்டவளா என்று தெரிந்து கொள்வதற்காக தான் வெச்சேன். முக்கியமா குழந்தையும் உன்னையும் பிரிக்க கூடாதுன்னு எண்ணி தான்.. திருமணமான பிறகு உன்கிட்ட சொல்லி இருக்கலாம் அதுதான் நான் பண்ண தப்பு “, என்றான்.

“அங்கு மட்டும்தான் வச்சிருக்கீங்களா இல்ல வேற எங்கேயாவது வச்சிருக்கீங்களா??, ரூம்ல, ரூம்ல எல்லாம்”, என்று அவள் கேட்ட நொடி.
“மாலினி”, என்று ஓங்கி குரல் கொடுத்திருந்தான்.

அவன் முகத்தில் கோபம் கொப்பளித்தது. “தெரியுதுல?? தப்புன்னு தெரியுதுல, நான் வாய் வார்த்தையா கேட்டதுக்கே உங்களுக்கு கோவம் வருது. ஆனா என் அனுமதி இல்லாம எனக்கு தெரியாம ஆறு மாசமா என்ன நீங்க கண்காணிச்சிட்டு இருக்கீங்க அது சட்டப்படி தப்பு. நான் உங்க மனைவியா இருந்தாலும் இல்லன்னாலும் நீங்க செஞ்சது தப்புதான்”, அழுத்தமாக கூறினாள்.

“ தப்புதான் ஒத்துக்கிறேன். உன் ரூம்ல, ஏன் இந்த வீட்டிலேயே கேமரா இல்ல போதுமா??. இவ்வளவு கேவலமானவனா என்ன நினைச்சி இருக்கல்ல. ரொம்ப சந்தோஷம்“, குரல் கமரினாலும் வார்த்தைகள் தடித்து இருந்தது முகத்தில் ரௌத்திரம் இருந்தது அதை அவளால் உணர முடிந்தது. தான் சற்று அதிகப்படியாக பேசி விட்டேன் என்று அவளுக்கு தோன்றியது. ஆனால் அவளுக்கும் கோபம் இருந்தது.

இதற்கு மேல் பேசினால் ஏதாவது வார்த்தையை விட்டு விடுவேன் என்ற கோபத்தில் அவன் கஷ்டப்பட்டு தன் கைகளை அடக்கிக் கொண்டு நின்றிருக்க சரியாக அந்நேரத்தில் அழைப்பு மணி ஒலித்தது.
இவ்வளவு காலையில் யார் என்று இருவருமே திரும்பி பார்த்தனர். ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்ட அரவிந்த் வேகமாக சென்று கதவை திறந்தான் .

“மச்சான்”, என்று கூறியபடி அவனை கட்டி அணைத்துக் கொண்டான் எத்திராஜ்.

“ நான் உன்ன வர வேணாம்னு தான் சொன்னேன் எதுக்குடா வந்த?“, என்று தான் முதலில் கேட்டான் அரவிந்த்.

“ புதுமண தம்பதிகளை வாழ்த்தலாம்னு வந்த நண்பனை இப்படியாடா வாசல்ல நிக்க வச்ச கேள்வி கேட்ப? “, என்று சிரித்துக் கொண்டே கேட்டவன் அவனிடம் இருந்து விலகி. அவனை அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மாலினியை பார்த்து.

“ஹாய் தங்கச்சி நான் எத்திராஜ் இவனோட உயிர்த்தோழன் உயிர் கொடுப்பான் தோழன். அதான் வாசல்ல நின்னு ஏன் வந்தாய் என்று கேட்கும் போது கூட ஈன மானம் இல்லாம அதெல்லாம் தொடச்சு போட்டுட்டு உள்ள வந்துட்டேன் பாரு”, என்று கூறிக்கொண்டே மாலினியை நோக்கி நடந்து வந்தான்.
அரவிந்த் நெற்றியிலேயே அடித்துக் கொண்டு தன் நண்பனின் பின்னோடு வந்தான்.

அதிர்ந்து இருந்தவள் தன்னை சுதாரித்துக் கொண்டு. “வணக்கம், வணக்கம் அண்ணா”, என்றாள் கரங்களை குவித்தபடியே.

“ என்னம்மா காலங்காத்தால வந்துட்டேன்னு பாக்குறியா உன் சமையலை ஆகா ஓகோன்னு பாராட்டினான் உன் புருஷன். அதான் நைட்டே கிளம்பிட்டேன் ஒரு லாங் டிரைவ். ரொம்ப பசிக்குதுமா உன் கையால ஏதாவது சமைச்சு கொடு “, என்று வயிற்றை தடவியபடி உரிமையாக கேட்டான் எத்திராஜ்.

“ அஞ்சு நிமிஷம் அண்ணா, முதல்ல பிரஷப் ஆயிட்டு வந்துடுங்க. நான் முதல்ல காபி போடுறேன். ஒரு ஆப்பனவர் டைம் கொடுத்தீங்கன்னா நான் கட கடன்னு செஞ்சிடுவேன் “, என்று கூறிவிட்டு அவனுடைய பதிலுக்கு கூட காத்திருக்காமல் சமையலறையை நோக்கிச் சென்றுவிட்டாள். அவள் பசி எங்கோ காணாமல் போயிருந்தது. வீட்டிற்கு வந்தவர்களின் பசியை போக்க எண்ணினாள் பாவை அவள்.

அவள் பேசியதால் எழுந்த கோபம் கூட இப்பொழுது அவள் பேச்சினாள் மட்டு பட்டு இருந்தது அரவிந்திற்கு. ஆனாலும் மனம் ஆற மறுத்தது. தன்னை போய் எப்படி இப்படி கேட்கலாம் என்று. ஆனால் அவனை சிந்திக்க விடாமல் அவனுடைய தோழன் எத்திராஜ் அவனை ஆக்கிரமித்துக் கொண்டான்.

“டேய் என்னடா பேய் அரஞ்சா மாதிரி நிக்குற?. ரூம காட்டுடா, பிரஷப் ஆயிட்டு வரேன்”, என்ற தேவராஜ் கேட்க. அவன் தோள் மீது கையை போட்டு அணைத்தபடி அவன் அறைக்கு அழைத்துச் சென்றான்.

“உன்ன வர வேணாம்னு சொன்னா, எதுக்குடா வந்து நிக்கிற??, இருக்குற பிரச்சினைல நீ வேற?“, என்றான் அரவிந்த்.

“உனக்கெல்லாம் பிரச்சனை எப்பயும் ஓயாது டா. ஐயோ வாசலிலேயே பெட்டியை வச்சிட்டு வந்துட்டேன்”, என்று அவசரமாக ஓடியவன். பெட்டியை தூக்கி கொண்டு வந்து நின்றான்.

மீண்டும் அரவிந்த் கேள்வி கேட்க வர அதற்குள் கதவை தட்டிக் கொண்டு மாலினி இருவருக்கும் சேர்ந்து தேநீர் கோப்பையை கொண்டு வந்து கொடுத்தாள்.

“ஆஹா வாசனையே சூப்பரா இருக்கே”, என்று அதை மூக்கின் அருகில் வைத்து மோர்ந்து பார்த்தபடி கூறியவன். சப்பு கொட்டி குடித்தான்.

“டேய் பல்ல தீத்துணியா? என்று அரவிந்த் கேட்க.

“ நாய் நரி எல்லாம் பல்ல தீர்த்திட்டா குடிக்குது “, என்று கூறிவிட்டு உறிஞ்சி குடிக்க. அதில் மாலினிக்கு சிரிப்பு வந்துவிட்டது. கையை வைத்து வாயை மறைத்துக் கொண்டவள் திரும்பி நடக்க ஆரம்பித்து விட்டாள்.

“ஏண்டா மானத்தை வாங்குற?? உன்ன போல என்னையும் நினைச்சிட போறா “, என்றான் அரவிந்த்.

“ தங்கச்சி தானடா சொல்லி புரிய வச்சுக்கலாம். சீக்கிரம் சாப்பிட்டு ஏர்போர்ட்டுக்கு போகணும். காலையில பஸ்ட் பிளைட்லயே சாரு வந்துருவா அவள ஏர்போர்ட்டில் இருந்து பிக்கப் பண்ணனும்”, என்று கூறியபடி குளியலறையை நோக்கி சென்று விட்டான்.

அவன் வரும் வரை காத்திருந்தவன் என்ன என்று கேட்க. அவளுடைய தந்தை இரவு நேர பிரயாணத்திற்கு அனுப்ப மாட்டேன் என்று கூறிவிட்டதால். அவள் பிளைட்டிலும் அவன் காரிலும் வந்ததாக கூறினான்.

“அவளை ஏன்டா தனியா அனுப்புன அதுக்கு நீயும் அவ கூடவே சேர்ந்து காலைல பிளைட்ல வர வேண்டியதுதானே? “, கண்டிக்கும் விதமாக கேட்டான் அரவிந்த்.

“ இல்லடா வர வழியில கடலூரில் ஒரு வேலை இருந்துச்சு போகும் போதும் பாண்டிச்சேரியில் ஒரு வேலை இருக்கு. எனக்கு கார் ஓட்டுவது பிடிக்கும்னு உனக்கு தெரியும் அதான் காரே எடுத்துட்டு வந்துட்டேன். போகும்போது ஒரே வேலையா முடிச்சுட்டு போயிடுவேன்”, என்றான் எத்திராஜ்.

அவள் குறிப்பிட்ட அந்த அரை மணி நேரத்தில் அங்கே அவளே வந்து “சாப்பிட வாங்க அண்ணா”, என்று அழைத்தாள்.

அரை மணி நேரத்தில் பெரிதாக எதுவும் செய்து வைத்திருக்கவில்லை. வடகறி இட்லி தோசை. சட்னி பொங்கல் செய்திருந்தாள். சொற்ப நேரத்தில் இத்தனை செய்து விட்டாயா என்று ஆச்சரியமாக பார்த்தவன் அதை வாய் மொழியாகவும் கேட்டிருந்தான் எத்திராஜ்.
அவள் பதில் பேசாமல் சிரித்துக் கொண்டே பரிமாற ஆரம்பித்தாள். அரவிந்த் அமைதியாக இருந்தான். அவ்வப்போது அவன் பார்வை மனைவியை தீண்டி சென்றது.

சரியாக அந்நேரத்தில் “அம்மா”, என்று சினங்கி கொண்டே அவர்கள் அறையில் இருந்து வெளியில் வந்தாள் குழந்தை.

“ ஓ மை ஏஞ்சல் ஷாலினி”, என்று கூறியவன். எழுந்து சென்று ஒத்தை கையில் அவளை தூக்கினான். அவளோ புதியவனை பார்த்து பயந்தாள். தாயைப் பார்த்துவிட்டு அழுதாள்.

“சாரி அண்ணா. அவள் கொஞ்சம் இன்டர்வெட், பழகுறதுக்கு நேரம் பிடிக்கும்”, என்று மன்னிப்பு கேட்கும் தோரணையில் கேட்டாள் மாலினி.

“ பரவால்லம்மா இவன் இந்த ஏழு மாசமா இவளை பத்தி தானே பேசிக்கிட்டே இருக்கான் இவளோட அனு அனுவும் எனக்கு தெரியும்.
அவளுக்கு தான் நாங்க புதுசு. ஆனா எங்களுக்கு அவள் புதுசு இல்ல”, என்றான்..

அவள் குழந்தையை தட்டிக் கொடுத்து சமாதானப்படுத்திக் கொண்டே அவன் பேச்சை கவனித்துக் கொண்டிருக்க.

“ கடந்த இந்த ஏழு மாசத்துல ஷாலினி ஷாலினின்னு முதலில் பிதற்றுனான். அப்புறம் மீதி மாசங்கள் உன் பேரையும் சேர்த்து பிதற்ற ஆரம்பித்துவிட்டான்”, என்று எத்திராஜ் கூறிய நொடி .

அவன் காலை ஓங்கி மிதித்து இருந்தான் அரவிந்த் .

ஆ ஆ, என்று கத்தியபடியே காலை பிடித்துக் கொண்டான் எத்திராஜ்.

“ எதுக்குடா மிதிச்ச? “, என்று எத்திராஜ் ஆவேசமாக கேட்க.

“ இதுக்குதாண்டா உன்ன வர வேணாம்னு சொன்னேன்”, என்று அரவிந்த் கோவமாக பேசினான்.

“நீ சொல்றத நான் ஏண்டா கேட்கணும் அப்படித்தான் வருவேன்“, என்றான் எத்திராஜ்.

“வந்தியா , சாப்டியா, போனியான்னு இரு. என்ன பத்தி பேசிகிட்டு இருக்காத“, என்றான் அழுத்தமாக.

“ அப்படி தான்டா பேசுவேன்? “.

இருவரும் சிறுபிள்ளை போல சண்டையிட ஆரம்பித்து விட்டனர். அழுது கொண்டிருந்த ஷாலினி கூட அழுகையை நிறுத்திவிட்டு இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.

6 thoughts on “தேவதையாக வந்தவளே-29”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *