Skip to content
Home » தேவதையாக வந்தவளே

தேவதையாக வந்தவளே

தேவதை 5

கட்டியவனையே நம்ப முடியாமல் இருந்தவளுக்கு. இவன் இவனை நம்ப சொல்கிறானே??. யார் இவன் இவனை எப்படி நம்புவது??. என்ற எண்ணம் தோன்றினாலும் அவளுக்கு வேறு வழி இருந்திருக்கவில்லை. அவனுடைய உயிராய் மாறிவிட்ட குழந்தையை அவளால் எக்காரணம் கொண்டும் பிரிய முடியாது. அது அவள் உயிரையே விடுவதற்கு சமம். அவள் வாழ்க்கையின் ஆதாரமே ஆணிவேரே குழந்தை ஷாலினி மட்டுமே.

இவன் உன்னை பொது இடத்திற்கு தானே அழைக்கிறான். தன் தைரியத்தை திரட்டி அவனுடன் செல்ல எத்தனித்தாள்.

குழந்தையை இறுக்கமாக பற்றி கொண்டு அவன் பின்னோடு நடந்தவளுக்கு சிந்தனை அவள் முன் வாழ்க்கைக்கு சென்று விட்டு மீண்டது. கட்டியவனே அவளை எவ்வளவு கொடுமைப்படுத்த முடியுமோ அவ்வளவு கொடுமைப்படுத்தி விட்டான். அவனிடமிருந்து தப்பித்தால் போதும் என்று வந்தவளுக்கு வரமாக கிடைத்தவள் தான் இந்த தேவதை. இவளை தன்னிடம் இருந்து பிரித்து விட்டால் தன் உயிர் இந்த பூமியில் நிலைக்குமா??. அவள் மனம் அரற்ற ஆரம்பித்தது. ஏற்கனவே அவளிடம் இருந்து பிரிந்த மூன்று மாத குழந்தையின் நினைவில் அவள் கரங்கள் அவள் அடிவயிற்றை தொட்டது.

காரை நெருங்கியவன். அதில் அவளை ஏற சொல்வதற்காக திரும்ப. அவளுடைய செயல் அவன் கண்களில் தவறாமல் பட்டது. அவனும் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள தன் கீழ் உதட்டை மடித்து கடித்தான். அவளுடைய நிலை அவனுக்கும் தெரியும். தொண்டை அடைக்க தயாராக இருக்க மிடறு விளங்கியவன். “கார்ல முதல்ல எருங்க”, என்று கார் கதவை அவர்களுக்காக திறந்து விட்டபடியே கூறினான்..

தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள சிரமப்பட்டவள். சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டினாள். பார்வை அலைபுறுதலில் திரும்ப.

குழந்தையை தன்னுடன் சேர்த்து அணைத்து கொண்டவள். இரண்டு அடி பின்னால் தன் பாதங்களை எடுத்து வைத்து “வ்வை ஷுட் ஐ ட்ரஸ்ட் யூ? “., என்று கேட்ட அவளின் குரல் மட்டுமல்ல முகத்திலும் தெளிவு வந்து விட்டதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அதில் அவன் உதடுகள் தானாக விரிந்தது. “பிரேவ்”, என்று தானாக உச்சரித்தது. “என் பேரை சொன்னிங்க. என்ன பத்தி தெரிஞ்சு வச்சிருக்கிங்க அதுக்காக மிரட்டணும்னு நினைக்கிறீங்க . நான் ஒன்னும் பழைய மாலினி கிடையாது எல்லாத்துக்கும் பயப்படுவதற்கு. நான் உங்கள நம்ப மாட்டேன். யாரையுமே நான் நம்ப தயாராக இல்லை”, என்று ஆங்காரமாக பேசிவிட்டு, வேகமாக நடக்க ஆரம்பித்தவள் அங்கு வந்த ஆட்டோவை கைகாட்டி நிறுத்தி அவசரமாக ஏறினாள்.. ஆட்டோ அவனை கடந்து செல்லும் போதும் அவன் புறம் அவள் திரும்பக் கூட இல்லை. குழந்தையின் முகத்தைக் கூட மறைத்தார் போல வைத்திருந்தாள்.

அவன் ஒன்றும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை இதழ்களை விரித்து சிரித்தான். “ ஸ்ட்ராங் “, என்று உச்சரித்தான். ஆறு மாதமாக அவளை கவனித்துக் கொண்டிருப்பவனுக்கு தெரியாதா என்ன???. அவள் எப்போது எதை செய்வாள். என்ன செய்வாள் என்று.

வாகனத்தை எடுத்துக்கொண்டு ஆட்டோவின் பின்னோடே சென்றான். வீட்டுக்குள் நுழைந்தவள். கதவை அழுத்தி சாத்திவிட்டு அதிலேயே நின்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினாள்..யார் இவன்??. எதுக்கு வந்து இருக்கான்??. என்ன பண்ணப் போறான்??. என் பேரு குழந்தை பேரு எல்லாம் இப்ப எனக்கு எப்படி தெரிஞ்சது??. அவனுக்கு ஏதோ ரகசியம் தெரிஞ்சுக்கு??. உன்ன அவன் மிரட்டணும்னு நினைக்கிற மாலினி. தைரியமா இரு. ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவா தைரியம் உனக்கு ரொம்ப முக்கியம். நீ தைரியமா இருந்தா தான் உன்னையும் உன் குழந்தையும் இந்த சமுதாயத்து கிட்ட இருந்து மீட்டுக்க முடியும். உன் பெண் குழந்தைக்கு தைரியத்தை சொல்லிக் கொடுக்க முடியும்.

அவளுக்குள்ளே அவள் உரு போட்டுக் கொண்டிருக்க. குழந்தை அவள் முகத்தை வருடினாள். அம்மா என்று தன் முகத்தை பார்க்க வைத்தாள். குழந்தையின் முகம் வெளிறி இருப்பதை உணர்ந்தவள்.

” ஒன்னும் இல்லடா செல்லம், ஒன்றும் இல்லை. அம்மா நல்லா தான் இருக்கேன் பாருங்க “, என்று கஷ்டப்பட்டு தன் உதட்டில் சிரிப்பை தேக்கி வைத்து மகளுக்கு தன்னை சகஜமாக காட்ட எத்தணிதாள். அவள் பயந்தது போல கதவு தட்டும் ஓசை திறக்காமல் இருந்தாள்.

“மாலினி டோன்ட் பிலே லைக் எ சைல்டு. என்கிட்ட எல்லா எவிடென்சும் இருக்கு. உன் வீட்டிலிருந்து உன் குழந்தையை என்னால தூக்கிட்டு போக முடியும். உன்னையும் எதுவும் பண்ண முடியும். இங்க அக்கா பக்கத்துல ஆள் இருக்காங்க நீ கதவை திறந்தா நாம சமரசமா பேசலாம் இல்லனா போலீஸோட வந்து”, அவன் முடிப்பதற்கு முன்பாகவே கதவு திறந்திருந்தாள்.

மூச்சு வாங்க குழந்தையை ஒரு கையால் அணைத்தபடி, மறுக்கையால் கதவை திறந்தவளையே தீர்க்கமாக பார்த்தான் அரவிந்த். அவள் தன்னை சுதாரித்துக் கொண்டு கதவை நன்றாக திறந்தபடி அவனுக்கு வழியை விட்டாள். . அதற்குள் அக்கம் பக்கத்தில் இருந்து சிலர் எட்டிப் பார்த்தனர். அவர்களைப் பார்த்து சிரித்துவிட்டு. அவள் உள்ளே நுழைந்தாள். கதவைத் தாழ் போடவில்லை. அது வெளியில் இருப்பவர்களுக்கு தன்னை தவறாக காட்டிவிடும். அவனும் அதை செய்யவில்லை அமைதியாக உள்ளே நுழைந்தான்.

வீட்டை சுற்றி தன் பார்வையை சுழல விட்டவன்.. மிகவும் கேஷுவலாக தன் இரண்டு கைகளையும் ஜீன்ஸ் முன் பாக்கெட்டிலும் வைத்துக் கொண்டிருந்தவனின் பார்வை வந்து நின்றது தன்னை மிரண்டு பார்த்துக் கொண்டிருந்த குழந்தையிடம் குழந்தையை பார்த்து புன்னகை பூத்தான்.

ஆனால் பதில் புன்னகை ஷாலினியிடமிருந்து கிடைத்திருக்கவில்லை. பார்வை இரண்டையும் சுருக்கி அவனை கோபமாக பார்த்தது.

“குழந்தையையும் இவள மாதிரியே மாத்தி வச்சிருக்காள். இவளை மட்டும் இல்ல இவள் குழந்தையையும் கரெக்ட் பண்றது நமக்கு கஷ்டம் தான் போல “, என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

கையில் இருந்த சாக்லேட்டை மாலினியின் மகளிடம் கொடுக்க. அவளோ வேண்டாம் என்று தலையாட்டினாள்.

“உங்க அம்மாவோட பிரண்டு தான் வாங்கிக்கோ”, என்று அவன் கூறினாலும் அவள் இல்லை என்று தலை ஆட்டி தாயிடம் ஒன்றினாள். “ஸ்ட்ரேஞ்சர்ஸ் கிட்ட அவள் பேச மாட்டாள் “, அழுத்தமான வார்த்தைகள் மாலினியிடம் .

“ஸ்ட்ரேஞ்சர் நானா??, இல்ல நீயா?? “, தீர்க்கமான வார்த்தை. உடைந்து விட்டால் அந்த வார்த்தையில் அவள். “என்ன உளறீங்க?“, இதைக் கூறும் போதே தடுமாறினால் பாவை அவள். “நான் உளறலைன்னு உனக்கு நல்லா தெரியும். இருந்தாலும் நீ கேட்கிற. நல்லா ஊனி கவனிச்சாலே உனக்கு தெரியும்”, என்று கூறினான் அரவிந்த்..

“ எவிடன்ஸ் இருக்குன்னு சொன்னீங்க இல்ல ,, உங்ககிட்ட என்ன எவிடன்ஸ் இருக்கு. அத முதல்ல காட்டுங்க “, என்று கேட்டால் மாலினி.

தன் வலது கையை நீட்டினான். அதில் அவனுடைய மொபைல் இருந்தது. “இதுல போட்டோஸ் வீடியோஸ் இருக்கு “, என்றான்.

“வீடியோஸா, என்ன வீடியோஸ்??, காட்டுங்க”, என்று கேட்டிருக்க.தன் மொபைலை எடுத்து அவளிடம் நீட்டினான் . அவள் யோசனையாக அதை கையில் வாங்கினாள். அது அன்லாக்கில் இருந்தது.

“ஒன் ஒன் போர் த்ரீ”, என்று சொல்ல. அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அந்த நம்பரை போட அது அன்லாக் ஆனது அதன் டிஸ்ப்ளேயில் ஒரு பெண் ஒளிர்ந்து கொண்டிருந்தாள் மிக மிக அழகாக இருந்தாள். பார்ப்பதற்கே திரைப்படத்தில் வரும் கதாநாயகியை போல இருந்தாள்.. தேவதையா அல்லது ஆர்டிபிசியலா?? என்று கூட ஒரு நிமிடம் சந்தேகம் வந்தது அவளுக்கு. அந்தப் பெண் அவ்வளவு அழகாக இருந்தால். அதிலிருந்து பார்வையை அவளாலேயே அகற்ற முடியவில்லை. “என்ன அப்படியே ஸ்ட்டக் ஆயிட்ட??, அந்த பேஸை எங்கயோ பார்த்த மாதிரி இல்லையா? “, என்று அவன் கேட்டான் . அப்பொழுதுதான் கவனித்தால் மாலினி. “குழந்தை,,, குழந்தையைப் போல”, அவள் சிந்திக்கும்போதே பதட்டத்தில் கைபேசியை விட போனான் . அவன் அதை எதிர்பார்த்தான் போல. சடார் என்று அதை அவன் கையில் பிடித்தவன்.

“ஐ போன் மா, ரொம்ப கஷ்டப்பட்டு என்னோட சம்பளத்துல வாங்குனது”, என்று தன் சட்டையில் அதன் டிஸ்ப்ளேயை வைத்து தேய்த்துக் கொண்டவன். “எவிடன்ஸ் கேட்டுட்டு வெறும் போட்டோவ பாத்துட்டு கொடுத்துட்ட? “, என்றபடியே அதில் உள்ளே இன்னும் சிலவற்றை எடுத்தவன். அவளிடம் நீட்டினான்.

ரியா என்ற பெண் குழந்தையின் பர்த் சர்டிபிகேட் அதிலிருந்தது . “உன்னோட ஷாலினி தான் இந்த ரியா “, என்றான் அரவிந்த் . “இல்ல நான் நம்ப மாட்டேன்”, மகளை இன்னும் இறுக்கி பிடித்துக் கொண்டவள் அவனுக்கு மறைத்தார் போல மறு பக்கமாக திரும்பியபடி கூறினால் அவள்.

அவள் பாவணையில் அவனுக்கு அவனுடைய தாயின் மனம் தான் தெரிந்தது. “ரிலாக்ஸ் ரிலாக்ஸ், ஒன்னு தான பார்த்த. அடுத்தடுத்து பாரு”, என்றான் அவன் அலட்டிக் கொள்ளாமல் .

அவள் போனை ட்ராக் செய்ய. அடுத்தது தாயும் கைக்குழந்தையமாக இருந்த புகைப்படம். அதே பெண் கையில் இருந்த குழந்தையின் முகம் சரியாக அடையாளம் காண முடியவில்லை என்றாலும், அவளுக்கு தெரியாதா அது அவளுடைய குழந்தை தான் என்று??. குழந்தை மிக மிக சிறியதாக இருந்தால் கைக்குழந்தையில் எடுத்த புகைப்படம் என்று தெரிந்தது. ஆனால் முகத்தை கவனிக்கும்போது அவள் கையில் குழந்தை கிடைக்கும்போது இருந்த முகசாயல். அவளுடைய அடி வயிறு கலங்கியது.

அவள் கழுத்தை கட்டிக்கொண்டு ஷாலினியும் அந்த அலைபேசியை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். “பாப்பா பாப்பா”, என்று மழலையாக ஒரு விரல் நீட்டி கூறினாள். அவளுக்கு அது அவள் தான் என்று தெரியவில்லை போலும். ஏதோ ஒரு குழந்தை என்று தனக்கு தெரிந்ததை மொழிந்தால் அவள்.

“பாப்பா தாண்டா செல்லம் ரியா பாப்பா. இப்ப ஷாலினி பாப்பாவா இருக்காள் “, என்று இரு கைகளையும் நீட்டி குழந்தையை தன் புறம் அழைத்தபடி அவன் கூறிக் கொண்டிருக்க.

குழந்தையோ அவனை முறைத்து தான் பார்த்தாள்.

“அப்படியே அம்மா மாதிரி”, என்று கூறியவன். தன் கை முஷ்டியை மடக்கி மெதுவாக மிக மிக மெதுவாக குழந்தைக்கு வலிக்காத வண்ணம் அவள் கன்னத்தில் லேசாக குத்தினான். அதையெல்லாம் உணரும் நிலையில் மாலினி இல்லை. புகைப்படம் அதில் தெரிந்த உண்மை நிலவரம் என்று அவளை ஆட்டி வைத்துக் கொண்டிருந்தது.

“ வாங்க அப்பா கிட்ட வாங்க “, என்று மீண்டும் அவன் குழந்தையை இரு கைகளை நீட்டி அழைக்க. அந்த வார்த்தையில் துணுக்குற்றாள் மாலினி.

மீண்டும் குழந்தையை தன் புறம் திருப்பிக் கொண்டவள். “என்ன சொன்னீங்க,, அப்பாவா??. ஹொவ் டேர் யு?“, நீங்க யாரு, இந்த பொண்ணு யாரு??. எனக்கு எதுவும் தெரியாது. இவள் என் குழந்தை. முதல்ல இங்க இருந்து வெளியே போங்க. போலீஸ்க்கு போகணும்னு நினைக்கிறீங்களா? தாராளமா போங்க. எனக்கு அதைப் பத்தி கவலை இல்லை ஆனா உங்க கிட்ட நான் குழந்தையை கொடுக்க மாட்டேன்”, என்று திடமாக கூறிக்கொண்டு வாசலை நோக்கி சென்று விட்டவள் வெளியில் அவனைப் போக சொல்லி கையை காட்டினாள்.

அவன் மகளை நோக்கி நீட்டி கொண்டிருந்த கையை மடக்கி கைகளைக் கட்டிக் கொண்டான். உதட்டை சுழித்து அவளைப் பார்த்து ஏளனமாக சிரித்தான்.

“எஜுகேட்டட், புத்திசாலித்தனமாக நடந்து பேணு பாத்தா முட்டாள்தனமா பேசுற. போலீஸ் ஸ்டேஷனுக்கு போனா நிரந்தரமா உன்னையும் குழந்தையும் பிரிச்சிடுவாங்க. நீ பண்ண கிரைமுக்கு உன்னை அரெஸ்ட் பண்ணிடுவாங்க பரவாயில்லையா? “, என்று அவன் பாதுரமாக கேட்க.

“பரவாயில்லை எனக்கு அதைப் பத்தி கவலை இல்லை ஆனா குழந்தையை உன் கிட்ட நான் கொடுக்க மாட்டேன்”, என்று கூறியபடி குழந்தையை இறுக்கமாக கட்டி அணைத்து இருந்தாள்.“ ஏன் ஏன் கொடுக்க மாட்ட? “, அரவிந்த் அழுத்தமாக கேள்வி எழுப்ப..

“அந்தப் பொண்ணை வர சொல்லுங்க அவங்க கிட்ட தரேன். உங்ககிட்ட நான் தரமாட்டேன்“, என்றால் அவள் திடமாக.“அவளை கூட்டிட்டு வர முடியாதுன்ற தைரியத்துல சொல்றியா? “, அரவிந்துக்கு இப்பொழுது கோபம் எட்டிப் பார்த்தது. அதில் அவள் புருவம் இடிங்கியது.

“என்ன ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கிற. குழந்தையை திருடிட்டு வரும்போது அவங்க அம்மா இறந்துட்டாங்கன்னு உனக்கு தெரியும் தானே? “, என்று அவன் கூறிய நொடி.

அவளுடைய மறு கை அதிர்ச்சியில் அவள் வாயை பொத்தி கொண்டது.

2 thoughts on “தேவதையாக வந்தவளே”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *