Skip to content
Home » தேவதையாக வந்தவளே-6

தேவதையாக வந்தவளே-6

  • Sws14 

தேவதை 6

குழந்தையின் தாய் இறந்து விட்டாளா??. அப்படி என்றால் அன்று பார்த்தது குழந்தையின் தாயையா??. இரத்த வெள்ளத்தில் இருந்ததனால் அன்று அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. இன்றும் அந்தப் பெண்ணை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை தான் . ஆனால் அந்தப் பெண் விபத்தில் இறந்தாளா அல்லது அங்கு இருப்பவர்கள் கொன்றார்களா??. இவன்,, இவன் யார்??. இவன் தான் தந்தையா??. ஆனால் எப்படி இவனிடம் குழந்தையை கொடுக்க முடியும்???. இவனுக்கும் அந்த பெண்ணின் இறப்பிற்கும் சம்பந்தமில்லை என்பதற்கு என்ன சாட்சி இருக்கிறது??. அவள் குழப்பி தவித்தாள்.

அவள் முகத்தில் பதட்டம் குழப்பம் வேதனை ஆராய்ச்சி என்று பல உணர்வுகளை அவனால் பார்க்க முடிந்தது. தானும் சற்று அதிகப்படியான வார்த்தையை உபயோகித்து விட்டேன் என்று யோசித்தான், ஆனால் அவள் அதை கவனிக்கவே இல்லை. அவள் தனி உலகத்தில் எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறாள் என்று தோன்றியது. அவள் மட்டும் அவன் சொன்னதை கவனித்திருந்தால். கண்டிப்பாக சண்டைக்கு வந்திருப்பாள். அவன் சட்டையை பிடித்திருப்பாள்.

அவள் முகத்தின் முன்பு சுடக்கிட்டான். “சாரி, நீ ஏதோ பேச, நானும் கோபத்துல எதையோ பேசிட்டேன். இப்ப அதெல்லாம் வேண்டாம். முடிஞ்சு போனதை பற்றி பேசுவதற்காக நான் வரல. குழந்தை எனக்கு வேணும். குழந்தையை பத்தின ஆதாரம் நீ கேட்டதனால தான் இதெல்லாம் பேச வேண்டியதா போயிடுச்சு”, இம்முறை பொறுமையை மீட்டுக்கொண்டு அவன் பேசி இருக்க. அவனை நிமிர்த்து பார்த்தவள்.

“ நீங்க என்ன சொன்னாலும் நான் உங்க கிட்ட குழந்தையை கொடுக்க மாட்டேன்”, என்றால் இன்னும் திடமாய்.

இம்முறை அவன் யோசனையாக அவளைப் பார்த்தான்.

“நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு புரியல?. இந்த குழந்தை மேல எங்களுக்கு தான் உரிமை இருக்குன்னு எல்லா ஆதாரங்களும் எங்ககிட்ட இருக்கு. இருந்தாலும் நான் போலீசுக்கு போகாம உன்கிட்ட நேரடியா வந்ததுக்கு இரண்டே காரணம்தான். ஒன்னு குழந்தை, இன்னொன்னு நீயும் குழந்தையும்”.

அவள் புருவம் இடுங்க பார்த்தாள் .

“என்ன மாலினி உனக்கு புரியலையா??. குழந்தை உன்னை அம்மாவா ஏத்துக்கிட்டாள். அவள் மனசுல நீ தான் அவளோட அம்மாவா உருவகமாகிட்ட. இன்னொன்னு நீ குழந்தைய பத்திரமா பாத்துக்கிட்டு இருக்க. இத்தனை வருஷமா உன்னோட உயிரா அவளை பார்த்து வளர்த்திருக்கிற . உங்க ரெண்டு பேரையும் பிரிக்கிறது, உங்க ரெண்டு பேருக்கும் தான் தண்டனையா ஆயிடும். அதனால அதை நான் செய்ய விரும்பல. உனக்கு என்ன வாக்கு கொடுத்தேனோ நான் அதை மீற போறது இல்ல. குழந்தை உன் கூடவே இருக்கட்டும். நீயும் அவள் கூடவே அவளோட அம்மாவாவே இரு. ஆனா என்னாலையும் குழந்தையை விட்டுக் கொடுக்க முடியாது”, அவன் நிறுத்தி நிதானமாக கூறினான்.

₹என்ன பேசுறீங்கன்னு, புரிஞ்சுதான் பேசுறீங்களா??, நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு உங்களுக்கு புரியுதா இல்லையா??”, அவள் தன் நெற்றிக்கண்ணை திறந்திருந்தாள். விட்டால் அவனை பஸ்பமாக்கி இருப்பாளோ என்னவோ??.

“அது தான், நான் பொறுமையா பேசலாம்னு சொன்னேன். நீ ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்க நாம பேசலாம்”.

“ என்ன பேசலாம் எதுவும் வேண்டாம், நீங்க முதல்ல இங்க இருந்து கிளம்புங்க”, என்று அவள் கூறிய நொடி.

“ஏன் நைட்டோட நைட்டா குழந்தையோட வேற எங்கயாவது எஸ்கேப் ஆயிடலாம்னு நினைக்கிறியா??. எனக்கு நல்லா தெரியும் உனக்கு ஷாலினியை விட வேற எதுவுமே முக்கியமில்லை. பணம் இந்த கிரஷ். நீ எடுத்து இருக்க நல்ல பெயர். இந்த வீடு நீ இதுக்கு கொடுத்திருக்க அட்வான்ஸ். இப்படி எதுவுமே உனக்கு முக்கியமில்லை. உனக்கு முக்கியமானது எல்லாம். இவள், இவள் மட்டும் தான். இவ்வளவு நாள் என்ன ஸ்டெப் எடுக்கறதுன்னு தெரியாம குழம்பி இருந்தேன். உன்னை நெருங்கறதுக்கு தயங்கினேன். உன்கிட்ட பேச்சு ஆரம்பிக்கிறதுக்கு பயந்தேன். ஆனா இன்னைக்கு ஒரு முடிவோட தான் வந்து இருக்கேன். ஒன்னு குழந்தையை என்கிட்ட கொடுத்திரு . இல்ல குழந்தையோட அம்மாவா நீயும் என் கூட சேர்ந்து வந்துரு“,

அதை அரவிந்த் கூறிய நொடி. அவள் கையை ஓங்கி விட்டாள். அவனை அடிப்பதற்காக.

ஆனால் அவளைப் பற்றி அணு அணுவாக அந்த ஆறு மாதத்தில் தெரிந்து வைத்திருந்தவன். அதை யூகித்திருந்தான் போல. லாவகமாக அவளுடைய கரத்தை பிடித்திருந்தான். கடந்த இந்த ஆறு மாதங்களாக அதை மட்டுமே கடமையாக என்னை செய்து கொண்டிருந்தான் அல்லவா அதனால் அவளை நன்றாகவே அவன் தெரிந்து வைத்திருந்தான். குழந்தையை ஒரு கையில் வைத்துக்கொண்டு அவனிடம் போராடியவள். ஒரு கட்டத்தில் வலியால் முகத்தை சுருக்கியபடி “ஆ” என்ற அலற. அப்போதுதான் அவன் பற்றி இருந்த கரத்தை விடுவித்தவன். அவள் தடுமாறுவதை உணர்ந்து குழந்தையை தன் கையில் நொடிக்குள் மாற்றி இருந்தான். கையை உதறி கொண்டு அவள் பார்க்கையில் குழந்தை அவன் கையில். மிடறு விழுங்கினாள் மாலினி.

குழந்தை அழுதது. அவனாளும் அவளின் அழுகையை பொறுத்துக் கொள்ள முடியாமல் குழந்தையை கீழே விட்டிருந்தான். வில்லிலிருந்து பாய்ந்த அம்பு போல ஓடிச் சென்று தன் தாயை கட்டி அணைத்துக் கொண்டாள் ஷாலினி.

தன் காலை கட்டி கொண்டிருந்த மகளை ஒரு கையால் பிடித்தபடி. அவளை தன் முதுகுக்கு பின்னால் நிறுத்தியவள்.“நீ குழந்தைய நெருங்குரதா இருந்தா என்னை தாண்டி தான் நெருங்கனும். நான் இருக்கிற வரைக்கும் அவள் கிட்ட உன்னை நெருங்க விட மாட்டேன்”, என்றவள் வல கையை தன் நெஞ்சு பகுதியில் கிராஸ் ஆக வைத்து. மறுக்கையை அவளை நோக்கி செங்குத்தாக நீட்டி இருந்தாள்.

அவளின் செயலில் அவன் உதடுகள் தாராளமாகவே விரிந்தது.

“நீ கராத்தே படிச்சிருக்கன்னு எனக்கு தெரியும். எனக்கும் டிபன்ஸ் பண்ண வரும். ஆனா நான் முன்னமே சொன்னேன். உன்கிட்ட சண்டை போட நான் வரல. குழந்தை மேல எனக்கு உரிமை இருக்கு. உனக்கு அவள் மேல அன்பு இருக்கு. நான் உன்னையும் குழந்தையும் புரிஞ்சிக்கிற மாதிரி நீ என்னையும் புரிஞ்சுகிட்டா நல்லா இருக்கும்”, முகத்தில் இள நகையுடன் அவன் மிக மிக பொறுமையாக கூறினான்.

“என்னத்த புரிஞ்சுக்க சொல்ற??. குழந்தையை கொல்றதுக்கு ஆள் அனுப்புனவன் தான நீ??. உன்ன நம்பி குழந்தையை எப்படி கொடுக்க முடியும்??. குழந்தையை திருடிட்டு போனேன்னு சொல்றியே??. தாய் கிட்ட இருந்து குழந்தையை திருடிட்டு போற அளவுக்கு நான் ஒன்னும் மோசமானவள் இல்ல. அந்த வலி எப்படி இருக்கும்னு உணர்வு பூர்வமா உணர்ந்தவள். அப்படி இருந்தும் குழந்தையை தூக்கிட்டு வந்தேன்னா அதுக்கு காரணம் நான் அவளை காப்பாத்த நினைச்சேன். ஒரு குழந்தையை இழந்தவர்களுக்கு தான் இன்னொரு குழந்தையோட அருமை தெரியும். உன்ன மாதிரி ஆண்களுக்கு எல்லாம் அது எப்பயுமே தெரியாது. ஒன்னு இல்லன்னா இன்னொன்னுன்னு போய்கிட்டே இருப்பீங்க. அது கல்யாணமோ குழந்தையோ அதோட வலி உங்களுக்கு புரியாது. பெண்களோட வலி அழுகை இதெல்லாம் உங்களுக்கு எந்த காலத்திலும் புரிய போவதில்லை. உனக்கு குழந்தையோட ரத்த சம்பந்தம் இருக்கலாம். ஆனா உன்கிட்ட குழந்தை பாதுகாப்பா இருக்காது“, அவள் பாட்டிற்கு பேசிக் கொண்டிருக்க.

அவன் புரியாமல் விழித்தான். அவள் பேசியதில் அவள் குழந்தையை இழந்த வலி அவள் கண்களில் நன்றாக தெரிந்தது . அதை மட்டும் தான் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. மற்ற எதுவுமே அவனுக்கு புரியவில்லை. அவனுக்கு புரியவில்லையா, அல்லது அவள் புரியும்படி பேசவில்லையா என்று ஒரு நிமிடம் குழம்பியவன்.

“நீ பேசறது எனக்கு புரியல. நான் உனக்கும் சேர்த்து பேசிக்கிட்டு இருக்கேன். ஆனா நீ என்ன கொலைகாரன் மாதிரி பேசுற. என் தங்கச்சி மேல நான் உயிரையே வச்சிருக்கேன். உனக்கென்ன தெரியும் எங்கள பத்தி??. அவளுக்கும் எனக்குமான பந்தம். அது அவள் பொறந்ததிலிருந்து எங்களுக்குள்ள இருக்கிறது. இந்த இடத்துல உன்ன தவிர வேற யாரா இருந்தாலும் ஒரு வழிப் பண்ணியிருப்பேன். ஆனா பொறுமையா பேசிகிட்டு இருக்கேன். என் தங்கச்சியோட மறு பிம்பமா இருக்குற இந்த குழந்தையை நான் என்ன பண்ணிட போறேன்?? “, ஆதங்கமாக கேட்டவனின் குரலும் கமரி இருந்தது. அதில் அவள் தடுமாறினாள்.. தன் கையை கீழே இறக்கியவள்.

“ஒ, ஒரு நிமிஷம் என்ன சொன்னீங்க??

”ஏன் உனக்கு தமிழ் புரியலையா?, சங்கத்தமிழ் வளர்த்த மதுரையில் தானே பிறந்திருக்க??, அது எப்படி தமிழ் புரியாம போகும்“, அவளைப் பற்றி கூறுகிறான் என்று புரிந்தாலும் அதை ஆராயும் எண்ணம் அவளுக்கு இல்லை. இப்பொழுது அதற்கான நேரமும் இல்லை.

“இல்ல நீங்க இப்ப என்ன சொன்னீங்க நீங்க குழந்தையோட தகப்பன் இல்லையா??. அந்த போட்டோல இருக்க பொண்ணு உங்க மனைவி இல்லையா?“, தடுமாற்றத்துடன் மாலினி கேட்டாள்.

“ஸ்டாப் இட் மாலினி. அவள் என்னோட தங்க, என்னோட கூட பிறந்த தங்கை. அதுக்கும் உனக்கு எவிடன்ஸ் வேணுமா,, என் அப்பாவை பேச சொல்லவா? “, என்று கேட்டுக் கொண்டே அவசரமாக தன் அலைபேசியை எடுத்தவன். அவர்கள் இருவரும் நிற்கும் புகைப்படத்தை எடுத்து அவள் முன்பு நீட்டினான். டீன் ஏஜ் பருவத்தில் இருந்தார்கள் இருவருமே. ஆனால் இருவருக்கும் சுத்தமாக உருவ ஒற்றுமை இல்லை. உருவம் மட்டுமல்ல, நிறம் கூட ஒத்துப் போகவில்லை. அவள் பால் என்றால் இவன் டிகாஷன் கலந்த பாலில் இருந்தான்.

மிடறு விளுங்கிக் கொண்டு. அவள் மெல்ல அந்த அலைபேசியை கையில் வாங்கினாள்.

அந்தப் புகைப்படம் மட்டும் அல்லாமல், அதற்கு அடுத்தடுத்த புகைப்படங்களை அவள் ஸ்க்ரோல் செய்ய. அவர்கள் இருவரும் சேர்ந்து, குழந்தை பருவம், சிறுவயது, டீன் ஏஜ், பெரிய வயது என்று விதவிதமான புகைப்படங்கள். கைக்குழந்தையுடன் அந்தப் பெண் இருக்கும் புகைப்படம். அந்தப் பெண்ணுடன் இன்னொரு ஆண் நெருக்கமாக நிற்கும் புகைப்படம். குழந்தையை தூக்கிப்பிடித்தபடி அவர்கள் இருவரும் இருப்பது போல. அதற்கு அடுத்தது அவர்கள் மூவருடன் அவனும் இருந்தான். அவன் அந்தப் பெண்ணை அனைத்திருப்பதற்கும். மற்றொரு ஆண் அனைத்திருப்பதற்கும் வேறுபாடை இப்பொழுது அவளால் கண்டறிய முடிந்தது. தொண்டைக் குழி ஏறி இறங்க. அவள் தயக்கத்துடன் அலைபேசியை அவனிடம் நீட்டினாள் .

அவளைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த ஷாலினி புடவை பிடித்து இழுத்துக் கொண்டே இருந்தாள். அப்போதுதான் உணர்விற்கு வந்தவள். உடனே குழந்தையை கையில் தூக்கி கொண்டாள்..

“அம்மா”, என்று மாலினியின் முகத்தை கையை வைத்தபடி அவள் சிணுங்கி கொண்டே மூக்கை உறிஞ்ச ஆரம்பித்தாள்

. “ஒன்னும் இல்லடா செல்லம். ஒன்னும் இல்லை”, என்று அவள் மகளை சமாதானப்படுத்த முயன்றால் பெண்ணவள்

“குழந்தை ரொம்ப பயந்து இருக்காள். ரொம்ப நேரமா சாப்பிடல வேற. அவளுக்கு பசிக்கவும் செய்யும். நாம இப்படி சண்டை போட்டுக்கிட்டு இருக்கறதுனால பயந்து போய் அதையும் அவள் கேக்கல“, உணர்ந்து கூறினான் அரவிந்த். அந்த ஆறு மாதங்களாக பார்த்து உணர்ந்து வைத்திருந்தான். அந்த இரு பெண்களையும் அவன்.

மற்றவற்றை மறந்து, குழந்தையின் பசியாற்ற அவசரமாக அவள் சமையலறைக்கு செல்ல. அவனுக்கு அந்த நேரம் தேவைப்பட்டது தன்னை திடப்படுத்திக் கொள்ள. அங்கிருந்து சேரில் அமைதியாக அமர்ந்தவன். மாலினி சொன்னதைத்தான் தனக்குள் உரு போட்டுக் கொண்டிருந்தான். தன்னை அவள் ஷாலினியின் தந்தை என்று நினைத்து விட்டாள் சரி. தானும் அதற்கான விளக்கத்தை கொடுக்கவில்லை. அதனால் தன்னைத் தவறாக புரிந்து கொண்டாள். ஆனால் அவள் குழந்தையை தர மாட்டேன் என்று மறுத்ததற்கான காரணம்??. தான் ஷாலினியின் தந்தை என்பதாலா??. ஆரம்பத்தில் தெளிவாக பேசிக் கொண்டிருந்தவள். பிறகு தன்னை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதில் முனைப்பாக இருந்ததற்கான காரணமும் இதுதான் போல. ஆனால் எதற்காக??.

குழந்தையை கொள்ள ஆள் அனுப்பியது என்று கூறினாலே??. அவள் குழந்தையை பற்றியும் ஆண்களைப் பற்றியும் பேசியது அவள் முந்தைய வாழ்க்கையின் வடு என்று எடுத்துக் கொண்டாலும். குழந்தையின் பாதுகாப்பை பற்றி பேசியது எல்லாம் ஷாலினியை பற்றி அல்லவா அவளுடைய பாதுகாப்பிற்கு என்ன கேடு வந்தது??. அவள் குற்றம் சாற்றுவது எதனால். இதற்கு அர்த்தம் என்ன??. யோசனையுடனே அவன் அவர்கள் இருவரையும் திரும்பிப் பார்த்தான்.

சமையலறை மேடையிலேயே மகளை அமர்த்தி வைத்து. பிஸ்கட்டை பாலில் தொட்டு குழந்தைக்கு ஊட்டி கொண்டிருந்தாள் மாலினி. அதில் அவன் மனம் லேசாக துடித்தாலும். அவள் கூறிய வார்த்தைகளின் வடு அவன் முன்பு வந்து கேள்விக்குறியாக நின்றது.இவள் கூறுவதை பார்த்தால் தன் தங்கையின் இறப்பிற்கும் ஏதோ காரணம் இருக்கும்போல இருக்கிறதே. இல்லை தானாக எதுவும் யூகம் பண்ணக்கூடாது அவளிடம் தெளிவாக பேசிவிட வேண்டும். எல்லாவற்றையும். அதுவும் இன்றே இப்பொழுது பேசிவிட வேண்டும் என்ற முடிவை அவன் எடுத்திருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *