தேவதை 7
பசி அடங்கியதும் குழந்தை போதும் என்று காட்டிவிட்டு வரவேற்பு அறையில் அமர்ந்து அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தவனை பார்த்து முறைத்தாள்.
அதுவரை அவனை மறந்து குழந்தையின் பசியை மட்டுமே கவனமாகக் கொண்டிருந்தவளுக்கு. அவன் அங்கு அமர்ந்து கொண்டிருப்பது அப்போதுதான் நினைவில் வந்தது. இவன் குழந்தையின் தாய் மாமன் என்றால். இவனுக்குத்தான் குழந்தையிடம் உண்மையான உரிமை இருக்கிறது. தந்தை என்று வந்து நின்றால் கூட அவள் கண்டதை காரணமாக கூறலாம். ஆனால் அன்றே கூறியிருந்தால் அது செயல்பட்டு இருக்கும். இப்பொழுது கூறினால் குழந்தையை தான் வைத்துக் கொள்வதற்காக கூறுவதாக தானே நினைப்பார்கள். குழப்பங்கள் அவளுக்கும்..
தான் குழந்தையை பிரிய வேண்டுமா என்று நினைக்கும் போதே மனம் முழுவதும் வேதனை. இனிமேல் தான் வாழத்தான் வேண்டுமா???. ஆனால் தான் இல்லாமல் இவள் இருப்பாளா??. கண்கள் கரித்துக் கொண்டு வர கஷ்டப்பட்டு அடக்கினால் ஆழ்ந்த பெருமூச்சு இழுத்து விட்டாள். தீர விசாரித்து விட்டு செயல்பட வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
கடவுளே இது என்ன சோதனை நிம்மதியாக இருந்த தன் வாழ்வில் மீண்டும் எதற்காக பிரச்சனைகளை நுழைக்கிறாய்??. மானசீகமாக கடவுளிடம் வேண்டிக் கொண்டே மகளை அள்ளித் தூக்கியவள். அவனுக்கு கோப்பையில் தேநீரைக் கொண்டு வந்து கொடுத்தாள்..
அதை மறுக்காமல் பெற்றுக் கொண்டான். ஆனால் புருவம் இடுங்க அவளை ஏற இறங்க பார்த்தவன்.
“இதுல எதுவும் கலக்கலையே? “, என்று கிண்டல் தோணியில் கேட்டான். “ உங்களை கொன்னுட்டு நான் ஜெயிலுக்கு போயிட்டா??, என் குழந்தையை யார் பார்த்துக்குறது??, நீங்க யாரு என்ன ஏதுன்னு எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு வண்டி வண்டியா துரோகம் செஞ்சவங்களையே நான் ஒன்னும் பண்ணல. உங்களை என்ன பண்ண போறேன்? “, அவளிடம் இருந்து திடமான வார்த்தைகள்.
“ஐயோ மாலினி நான் அப்படி சொல்லல. நீ ஏன் என்னை கொல்ல போற??. தூக்க மாத்திரை பேதி மாத்திரை இந்த மாதிரி எதையாவது கலந்து எனக்கு கொடுத்துட்டு குழந்தையோட எஸ்கேப் ஆகிட போறேன்னு சொன்னேன்”, அவன் லகுவாக சிரித்துக்கொண்டே கூறினான்.
அவள் பதிலுக்கு சிரிக்கவில்லை. அவன் கையில் இருப்பதை பிடுங்கினாள்.. அமர்ந்து அவள் பருக ஆரம்பித்துவிட்டாள். அவள் செயலில் அவன் இதழ்கள் இன்னும் தாராளமாக விரிந்து கொண்டது..
குடித்துக்கொண்டிருந்தவளிடமிருந்து பிடுங்க எத்தனித்தான் அவன். ஆனால் அவள் கப்பை தன் புறமாக மறைத்துக் கொண்டு, அவனை மீண்டும் ருத்ர காலியாக முறைத்து பார்த்தாள்..
“ஓகே ஓகே ஆர்வக்கோளாறுல பண்ணிட்டேன். உன் மேல எனக்கு இருக்க நம்பிக்கையை காட்டறதுக்காக செய்ய நினைச்சிட்டேன். எனக்கானதை நானே போட்டுக்கிறேன்”, என்று கூறிவிட்டு உரிமையாக சமையலறைக்குள் அவனே சென்றான்.
அங்கு இன்னொரு கோப்பைக்கு தேவையானது போட்டு தான் இருந்தது. குழந்தையை தூக்கி இருப்பதால் ஒரு கோப்பையை மட்டும் கையில் எடுத்து வந்திருக்கிறாள் என்று புரிந்தது. அதை வடிகட்டி எடுத்து வந்து அவள் முன்பு மடிந்து தரையில் அமர்ந்தவன். அவனும் பருகினான். அவன் பருகி முடிக்கும் வரையில் அவனை ஆராயும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் மாலினி.
குழந்தை மடியிலேயே படுத்து உறங்க ஆரம்பித்துவிட்டது.
“என்ன அப்படி பாக்குற?? “, என்று குடித்துக்கொண்டே கேள்வியை எழுப்பினான் அரவிந்த்.
“நீங்க சொன்னதெல்லாம் உண்மையா பொய்யான்னு யோசிச்சுட்டு இருக்கேன்”, என்றால் அவள் அலட்டிக் கொள்ளாமல். தேநீர் புறை ஏறியது.துப்ப இருந்தவன் முகத்தை மறைத்துக் கொண்டு தன்னை அடக்கி கட்டுப்படுத்திக் கொண்டான்.
அந்தப் பிரயத்தனத்தில் அவன் கண்கள் எல்லாம் கலங்கி விட்டது. அவளை ஏறெடுத்து பார்த்தான் அவள் விழியசைக்காமல் அவனையே தான் இன்னும் பார்த்துக் கொண்டிருந்தாள். எந்த அசைவும் இல்லை அவளிடம் பரிதாபம் பச்சாதாபம் கூட அவள் முகத்தில் தெரியவில்லை.
இதற்கு மேல் அவள் தன் தலையை தட்ட மாட்டாள் என்று மனது அவனுக்கு எடுத்துக் கூற . அவளைப் பார்த்தபடியே தனக்குத்தானே தட்டிக் கொண்டான் அரவிந்த்.
“நீ என்ன சொல்ல வரேன்னு புரியுது. என்னை சைலண்ட்டா நோஸ்கட் பண்ணிட்ட. எங்க ரெண்டு பேருக்கும் எதுவுமே ஒத்துமை இல்லன்னு”.
“இல்ல நான் அப்படி சொல்ல வரல”, அவள் அவசரமாக கூற. அவன் அதற்கும் சிரித்து வைத்தான்.
” நான் ஒன்னும் தப்பா எடுத்துக்கல. என் லைஃப்ல இதெல்லாம் நான் கடந்து வந்துட்டேன். ஸ்கூல் டேஸ் காலேஜ் டேஸ் எல்லா இடத்திலுமே இந்த கேள்வி என்ன சுத்தி தான் வந்துட்டு இருக்கு அவன் இலகுவாக கூறினான்.
“உண்மையிலேயே நான் அப்படி சொல்லல. உங்க ரெண்டு பேருக்கும் முகச்சாயல் கூட சுத்தமா இல்ல. எப்படி நம்ப சொல்றீங்க? “, தன் சந்தேகத்தைக் கேட்டிருந்தாள்.
அவன் மீண்டும் அலைபேசியை எடுத்து தன் தந்தைக்கு அழைப்பு விடுக்க எத்தனிக்க. அவள் அவசரமாக அதை தடுத்து நிறுத்தியவள்.
“யாருக்கு போன் பண்றீங்க?”, என்று படபடப்பாக கேட்க.“ உங்க எல்லாருக்கும் சந்தேகம் வர அளவுக்கு என்ன டிகாஷனாவும் என் தங்கச்சியை மில்க் ஒயிட்டாவும் பெத்து போட்ட எங்க அப்பாவுக்கு தான்”, என்றான் அதற்கும் அவன் லகுவாக.
“வேண்டாம், நீங்க குழந்தையோட தாய் மாமான்னா உங்களுக்கு குழந்தை மேல உரிமை இருக்கு தான். ஆனா நீங்க வேற ஒன்னு சொன்னிங்களே??. குழந்தையும் என்னையும் பிரிக்காமல் இருப்பேன்னு “, அவள் வேண்டாம் என்று தடுத்து விட்டாலும் அவன் அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான்.
அவள் முன்பு தங்கள் வீட்டு குடும்ப படத்தை காட்ட எத்தனிக்க, அவள் இந்த கேள்வியை முடித்து இருந்தாள். திரும்பவும் இதே கேள்விய கேட்கிறாள். சொன்னா முறைப்பாள் , இல்ல அடிக்க வருவாள்??. இதுவரைக்கும் அம்மாகிட்ட கூட அடி வாங்காம தப்பிச்சிடடா அரவிந்த். ஆனா வருங்கால பொண்டாட்டி கிட்ட அடி வாங்கணும்னு தலை எழுத்து இருந்தா உன்னை யாராலும் காப்பாத்த முடியாது?? “, என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே தன் ஒரு கன்னத்தை தடவியவன்.
இப்பொழுது அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறினால் கண்டிப்பாக அடி நிச்சயம். அதனால் முதலில் இருந்து ஆரம்பித்து விடலாம் என்று யோசித்தவன். அலைபேசியை பார்வையால் சுட்டிக்காட்டினான்.
அவள் அவனை விடுத்து அலைபேசியில் கவனம் செலுத்தினாள். அது அவர்களுடைய குடும்ப புகைப்படம். கையில் வாங்கி பார்த்தாள். அவனுடைய நிறம் எதனால் என்று அவனுடைய தகப்பனை பார்க்கும்போது தெரிந்தது. அவனுடைய தங்கை அவனுடைய தாயை உரித்து வைத்திருக்கிறாள். குழந்தையும் அவள் சாயலில். குனிந்து தன் மகளை பார்த்து. ஷாலினியின் தலையை வருடியவள். பேச்சு கலற்று அவனிடம் அலைபேசியை நீட்டினாள்.
அவன் ஒவ்வொரு ஆதாரங்களாக காட்டிக் கொண்டிருக்க அவள் அதற்கு மேல் என்ன கேள்வி கேட்க முடியும்??. குழந்தை தன்னை விட்டு பிரியாமல் இருக்கும் என்றால், அதற்கு ஏதாவது ஒரு வழி இருக்குமென்றால் அதை தானே கண்டறிய வேண்டும். இவளுக்காக இவளுடைய கேர் டேக்கராகவாவது வரச் சொன்னாலும் அவள் செல்ல தயாராகவே இருந்தாள். அதை மனதில் வைத்து தான் அவள் அந்த கேள்வியை கேட்க.
அவன் முதலில் இருந்து ஆரம்பித்தான். “கிட்டத்தட்ட 1 ¼ வருஷமா குழந்தையை நான் தேடிக்கிட்டு இருக்கேன். குழந்தை காணாம போகும்போது. ஐ மீன் நீ குழந்தைய தூக்கிட்டு போகும்போது குழந்தைக்கு மூணு மாசம்”.
அவள் அதற்கு தடுத்து எதையோ பேச வர. அவன் கை உயர்த்தி வேண்டாம் என்று நிறுத்தினான்.
“நான் பேசி முடிச்சிடுறேன் மாலினி. அதுக்கு அப்புறம் நீ பேசு. உன்கிட்டயும் எனக்கு நிறைய தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு”, என்றான்.
“ஆக்சிடென்ட்ல குழந்தை இறக்கலன்னு தெரிஞ்சது. ஆனா எங்க தேடியும் குழந்தை கிடைக்கல. காசுக்காக குழந்தையை கடத்திருப்பாங்கன்னா, காசு கேட்டு போன் பண்ணுவாங்கன்னு நினைச்சோம். அதுக்காகவும் வெயிட் பண்ணோம். ஆனா அப்படி எதுவும் வரல. போலீஸ் உதவியோட அனாதை ஆசிரமம், அக்யூஸ்டுங்க, ஸ்லம் ஏரியா, ஈவன் மார்ச்சுவரி கூட தேடினோம் ஆனா குழந்தை கிடைக்கவே இல்லை. கண்டிப்பா குழந்தை உயிரோட தான் இருக்கணும்னு போலீசும் சொன்னாங்க. எட்வர்ட் ரொம்ப ஸ்ட்டக் ஆயிட்டான்”, அவன் பேசிக் கொண்டிருக்க அவள் புருவம் இடுங்கியது புதிதாக வந்த பெயரில்.
அதை அவனும் கவனித்தான் எதனால் என்று புரிந்து கொண்டான். “எட்வர்ட் என் தங்கச்சி ஹஸ்பண்ட் ஷாலினியோட அப்பா”, என்று அரவிந்த் கூறும் போதே அவள் முகம் செந்தனலை வாரி இறைத்தது போல் ஆனது. அதை அவனும் கவனித்தான்.
“எட்வர்ட்டை உனக்கு தெரியுமா??. ஆனா போட்டோவ பார்க்கும்போது நீ ரியாக்சன் எதுவும் காட்டல. எட்வர்ட்னு பேர் சொல்லும் போதும் உன் முகத்தில் பெருசா ஒன்னும் ரியாக்ஷன் வரல. ஆனா ஷாலினியோட அப்பானு சொல்லும் போது மட்டும் உன் முகம் கோவமா மாறுது? “, அவன் கேள்வியாக நிறுத்தினான்.
“நான் சொல்றது தப்பா ரைட்டான்னு தெரியல. இப்ப நீங்க கேட்கிற கேள்விக்கு நான் பதில் சொன்னால் நீங்க எமோஷனல் ஆயிடுவீங்க. அதுக்கப்புறம் பேச முடியாது. நீங்க பேச வந்தத முதல்ல பேசி முடிங்க “, என்றால் மாலினி. அவன் ஆழ்ந்த பெருமூச்சை எடுத்துவிட்டு.
“ஆறு மாசம் முன்னாடி தான் உன்ன நான் கண்டுபிடிச்சேன். ஐ மீன் ஷாலினி உன் கூட இருக்கிறத. உன்னோட பொண்ணா இருக்குறத. அப்பையே ஏன் வரலைன்னு கேட்காத???. வந்தேன். உங்க ரெண்டு பேரையும் பாத்துக்கிட்டு தான் இருந்தேன். ஆனா குழந்தை உன்ன அம்மானு கூப்பிட்டாள். . முதல்ல எனக்கு கோவம் தான் வந்துச்சு. ஆனா குழந்தை உன் கையில எப்படி வந்துச்சுன்னு தெரிஞ்சுக்க நினைச்சேன்.
“ஐ மீன் யாராவது குழந்தையை உன் கிட்ட வித்தாங்களா??. இல்ல வேற ஏதாவது சோர்ஸ் மூலமா குழந்தை உன் கைல கிடைச்சதா??. இல்ல நீயே திருடிட்டு வந்தியான்னு தெரிஞ்சுக்க நினைச்சேன்.
“நான் திருடல “, அதை சொல்லும் போதே அவள் குரல் கலங்கியது. ஆனாலும் அந்த குரலில் அழுத்தம் இருந்தது.
“அப்ப அப்படி தோணுச்சுன்னு சொன்னேன்மா . இப்பதான் எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டேனே. நான் நினைக்கிற மாதிரி நீ இருந்தா இவ்வளவு பொறுமையா நான் உன்கிட்ட பேசிட்டு இருந்திருப்பேனா. இல்ல இன்னுமே எங்க குழந்தை உன் மடியில தான் தூங்கிட்டு இருக்குமா?? “, அவன் ஷாலினியை சுட்டிக்காட்டி புருவம் உயர்த்தி கேட்டான்.
அவள் இரண்டு உதடுகளையும் மடித்து கடித்து தன்னை சமன்படுத்தினாள்.
“குழந்தை உன்ன அம்மானு கூப்பிடறதும் உன்கிட்ட பாசமா இருக்குறதையும் பார்த்த பிறகு ஒரு வேல அது உன் குழந்தையான்னு கூட எனக்கு சந்தேகம் வந்துச்சு??. உனக்கும் குழந்தைக்கு கூட உருவ ஒற்றுமை இல்லை. ஆனா என் தங்கச்சிக்கும் குழந்தைக்கு உருவ ஒற்றுமை நல்லாவே பொறுந்துச்சு. நீயும் அவள் மேல உயிரையே வைத்திருந்த. எனக்கு குழப்பமா இருந்தது. உன்னை நெருங்கி கேள்வி கேட்கிறதுக்கும் தயக்கமா இருந்தது. அதனால முதல்ல உன்ன பத்தி தெரிஞ்சுக்க நினைச்சேன் “, என்றவன் கூறிய நொடி.
அவள் தொண்டை குழி ஏறி இறங்கியது. வியர்வை முத்துக்கல் அவள் முகத்தை கோர்க்க ஆரம்பிக்க. பதட்டம் அப்பட்டமாக அவள் முகத்தில் தெரிந்தது. ஆனால் அவன் அலட்டி கொள்ளாமல் அவளையே தான் பார்த்திருந்தான். இவனுக்கு தன்னைப் பற்றி தெரியும் என்றால் எல்லாமே தெரியுமா??. அவள் மனம் பதற ஆரம்பித்தது. அதை புரிந்து கொண்டது போல.
“ எல்லாமே தெரியும் “, என்றான் அழுத்தமாக.