முடக்கி விடவில்லை உலகம் என்னை
முடங்க விடவில்லை நானும் மனதை
எழுந்து நடைப் போடுகின்றேன் ஜெயமாக
எண்ணம் என்ற உந்துதலில் நினைவாலே
சிறகை விரித்தேப் பறக்கின்றேன் வானிலே
சிரத்தை கொஞ்சம் எடுக்கின்றேன் வலியிலே
கொஞ்சமும் இல்லை என்னுள் ஊனம்
என்றே சொல்லிடும் தன்னம்பிக்கை மனம் .
— பிரவீணா தங்கராஜ் .
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
👏👏👏👏👏