💟-4
இறங்காமல் அப்படியே இருந்த தன்ஷிகாவை “இன்னும் என் கூட டிராவல் பண்றியா என்ன” என்ற கவியரசன் பேச்சில் திரும்ப அங்கே கவியரசன் கை கட்டி தன்னை ரசனையோடு பார்ப்பதை கண்டு, முணங்கி கொண்டு கீழே இறங்கினாள்.
தன் வீட்டை நோக்கி நடக்க கவியரசன் அவளை பின் தொடர்ந்தான்.
“வாங்க மாப்பிள்ளை…வாங்க” என்று கனகவேல் அழைக்க
“ஆமா புது மாப்பிள்ளை பாருங்க ஆலம் கரச்சி கூப்பிடுங்கள்” தன்ஷிகா இடக்காக சொன்னாள்.
“சொன்னாலும் சொல்லாவிட்டாலும் ஆலம் கரைத்து தான் இருக்கேன் மாப்பிள்ளை கூட நில்லு” கற்பகம் தன்ஷிகாவை வெளியே நிற்க வைத்து சுற்றினார்.
“உனக்கு மனசாட்சி இல்லையா அம்மா… 5 வருஷம் முன்ன இதே கோலத்தில் கவி மாமாவுக்கு இதே போல என் கையால் அவந்திகா அக்கா கூட சேர்த்து வைத்து ஆலம் கரைத்து எவ்ளோ சந்தோஷமா அழைத்து வந்தேன்.. இப்ப என்னால இப்படி அக்கா வாழ்க்கை அழிச்சு வைத்து இருக்கிங்க…” என்று சூடாக தாயை அதட்டினாள்.
“உள்ள வந்து பேசலாம் தன்ஷிகாமா ” என்று கையை இழுத்து வீட்டினுள் சென்றார்.
“அவ புரிந்து கொள்ள வேண்டும்… இன்னிக்கே எல்லாம் சொல்லவும் செய்யலாமே…” என்று மாமனார் கூறவும் மறுத்தான்.
“இல்லை மாமா வேண்டாம்…. நானே சொல்லறேன்” என்றதும் கனகவேல்
“சரி உங்க இஷ்டம் ஆனா இப்ப தான் மாப்பிள்ளை என்ற முறையில் மனசார கூப்பிட முடியுது” கலங்கி சென்றவரை என்ன சொல்லி தேற்ற என்று விட்டு விட்டான்.
பழச்சாறு கவியரசனுக்கு நீட்ட அதனை தட்டி விட்டாள் தன்ஷிகா.
“இவருக்கு பழச்சாறு ஒரு கேடு… கல்யாணம் பண்ணி கொடுத்திங்களே அங்க அவந்திகா என்ன நிலையில் இருக்கா என்று நினைத்து பார்த்து இருந்திங்களா..?
வாயில்லா பூச்சினு உங்க இஷ்டம் இப்படி செய்து வைத்திருக்கிங்க… உங்களை எல்லாம் கோவிலில் வச்சி இப்படி கேட்டு இருக்கனும் அப்போ தெரிந்து இருக்கும். அக்காவுக்குகாக தான் பொறுமையா வீட்டுக்கு வந்தேன் அப்ப கூட என் மூலமா அக்கா குழந்தை பெற்றுக்க ஆசைப்பட்டானு சொல்லி எனக்கு ஒரு மனசு இருப்பதையே உணராம கொன்றுட்டீங்க” தன்ஷி பேச கனகவேல் கற்பகம் தான் பயந்து கவியரசன் பார்த்தனர்.
அவனோ “மன்னிச்சுடு தன்ஷி உன்கிட்ட கேட்டு கல்யாணம் பண்ணி இருந்தா நீ சம்மதம் தெரிவித்து இருக்க மாட்ட அதான்.. ஆனா உனக்கு மனசுல என்ன அபிப்ராயம் கேட்டு இருக்கனும் தப்பு தான்”
“நீ பேசாதே பத்திட்டு வருது… உனக்கு குழந்தை தான் வேணுமின்னா எவளையாவது கட்டிக்க வேண்டியது தானே என் அக்கா எங்க வீட்ல வாழ வெட்டியா இருந்துப்பாளே… எதுக்கு டா எங்க அக்கா கண் முன்னால் என்னை கட்டிக்கொண்டு அவளையும் ஒரே வீட்டில் வச்சி என் உயிரை வாங்குற” என்று மாமா சொல்லாது டா போட்டு விளித்தாள்.
” தன்ஷிகா மாப்பிள்ளை மரியாதை இல்லாமல் பேசாதே… அவரால் தான் நாமா இன்னும் மானத்தோடு…” கற்பகம் ஏதோ சொல்ல வந்தார்.
“அத்தை… போதும் ” என்று அவர்களிடம் தலையை அசைத்து சொல்ல வேண்டாம் என்று தலையாட்டினான்.
“நான் குழந்தைகாக உன்னை கல்யாணம் பண்ணலை தன்ஷிகா உன்னை கட்டிக்கனும் என்று தான் கல்யாணம் பண்ணினேன்” தன்ஷிகா கோவம் எல்லை கடந்தது.
இவன் இதுவரை குழந்தை வரம் வேண்டி திருமணம் செய்து இருப்பான் என்று இருந்த தன்ஷிகாவுக்கு இடியாக விழுந்தன இவனின் பேச்சு… தன்னை திருமணம் செய்து கொள்ள தான் ஆசைப்பட்டானா? அப்பா அம்மா எதிரில் சொல்கின்றான் அவனை போய் நல்லவன் என்று கொண்டாட செய்கின்றார்கள் என்று கடுப்பானாள்.
கவியரசன் மீது இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போனது.
அப்பா அம்மா இனி என்ன சொல்ல இவனின் செய்கைக்கு தானே பதிலடி தரனும் என்று கருவி அறைக்கு சென்றாள்.
“அவளுக்கு இன்றே சொல்லறது நல்லது மாப்பிள்ளை. சின்னது எடுத்து சொன்ன புரிந்து உங்களோட வாழம்” என்று கனகவேல் சொல்ல அதை ஆமோதிப்பது போல கற்பகம் முகமும் இருந்தது.
“எடுத்து சொன்னா என்னோட வாழ்வா ஆனா அது கடமைக்கு வாழற வாழ்க்கையை அமைந்திடும் மாமா எனக்கு அது வேணாம். என்ன அவளா புரிந்து கொள்ள வேண்டும். நானா அவளுக்கு சொல்லற நாள் வரும். அந்தளவு என் மேல அன்பு அவளுக்கு வரும்… எனக்கு நம்பிக்கை இருக்கு… ஐந்து வருஷம் காத்திருக்க செய்தவன் இன்னும் காத்திருக்க செய்வேன் அதுவரை நீங்க எதையும் சொல்லாதிங்க…” என்று தடுத்தான்.
“அவந்திகா எதையாவது சொல்லி…” கற்பகம் இழுத்தார்.
“அவ என்ன சொன்னாலும் அப்படியே நம்பற ஆள் தன்ஷிகா இல்லை அத்தை.
ஒன்னு உண்மையா என்று யோசிப்பா இல்லை வெடுக்குனு என்கிட்டயே நேரில் கேட்டுடுவா… அப்போ நான் பார்த்துக்கறேன்” முறுவலிக்க இருவரும் என்னவோ உங்க இஷ்டம் கவியரசனுக்கு தெரியாததா என்று விட்டு விட்டார்.
நேராக தன்ஷிகா அறைக்குள் நுழைந்து நின்றான்.
“இங்க எதுக்கு வந்த எதிர்ல இருக்கற அறை தான் அவந்தி அறை வெளியே போ” கத்தினாள்.
“போய்டுவேன் அங்க அவந்திகா இல்லையே…” என்றான் குறும்பாக.
“உனக்கு என்ன திமிர் என்கிட்ட இப்படி பேசற…” என்று கண்களை சுழற்றி தேட அவள் தன்னை அடிக்க பொருட்களை தேடுகிறாள் என்று உணர்ந்து அவனும் தாயாராக தடுக்க கையில் கிட்டியதோ சீப்பு பெர்பியும் பொருளாக கிடைக்க சந்தோஷத்தோடு அது தன் மேல் பட வாங்கி கொண்டான்.
“எப்படி அடிக்கறேன் கல்லுளிமங்கன் மாதிரி சிரிக்கற டா…” தன்ஷிகா அடித்தபடி கேட்டாள்.
“என் கனவு… என் ஏக்கம் எல்லாம் இப்ப தான் நிறைவேறுது சந்தோஷமா இருக்கேன் டி… உன் கையாலா அடி வாங்க புண்ணியம் செய்து இருப்பேன்” கவியரசன் பேச பேச தன்ஷி ‘இவன் என்ன ரகம்’ என்று புரியாது விழித்தாள்.
“நான் உன் மடியில் தலை வைத்து கொள்ளவா?” கண்களில் தவிப்போடு கேட்டு பார்ப்பவனை என்னவென்று திட்ட அறியாது குழம்பி தலையை மட்டும் அசைத்திட கவியரசன் அவளின் மடியில் தலை சாய்த்து இமை மூடினான். தன்ஷிகாவுக்கு அவன் கண்ணில் இருந்த தவிப்பை கண்டும் மறுக்க மனம் வரவில்லை. அது ஏனோ?
எத்தனை நாட்கள் உறக்கம் தொலைத்தவன் போல படுத்ததும் உறங்கி போனானான். தன்ஷிகாவுக்கு அவளை அறியாது அவன் கேசம் வருடி விட… அதன் சுகத்தில் கவியரசன் தன்ஷிகா இடையை தன் கரங்களால் அணைத்து கொண்டான்.
சுடிதார் என்றாலும் அவனின் தீண்டல் உடலெங்கும் அதிர்வை தர மனதிலோ நடுக்கம் கூடியது. அக்கா கணவன் என்று இது நாள் வரை பார்த்துவிட்டு…
இதய கூடு அதிகமாக துடிக்க அவனை எழுந்து கொள்ள சொல்ல முயன்றாள். முயற்சி மட்டும் தோன்ற செயல்பட முடியவில்லை.
கொஞ்சம் கொஞ்சமாக அவன் தீண்டல் தனக்குள் அமைதி தர அதற்குள் அவள் முகமெங்கும் வேர்த்தே போனது.
அவளாகவே அவன் தலையை நிமிர்த்தி தலையனையில் வைத்ததும் அவளுக்கு மூச்சு சீரானது.
போன் சத்தம் கேட்க திரும்பி பார்த்தாள். மெசேஜ் வந்து இருந்தன. சௌமியா தான் டாப் அப் 100 போட்டு இருந்தாள்.
‘நேற்று டாப் அப் போட சொல்லி இப்ப போட்டு இருக்கா பாரு…’ என்று போன் செய்தாள்.
“சாரி சாரி க்ரீனா திட்டாதே… நேற்று வீட்டுக்கு வந்து டயர்டா ஆயிட்டேன் அதான் 100 டாப் அப் பண்ணலை… நீ வீட்டுக்கு போயிட்டியா?” பேச்சை மாற்றும் விதமாக தன்ஷிகா
“பரவாயில்லை நானே மறந்து விட்டேன்” தன்ஷிகா சொல்ல
“வரலாற்று அதிசயம் தன்ஷி நீ ஜெயித்து நாங்க டாப் அப் பண்ண லேட் பண்ணி திட்டாம இருக்க…” சிரித்தவள் தன்ஷிகா அமைதியாக இருப்பதை உணர்ந்து
” ஏய் தன்ஷி வாட் ஹப்பன்?” கேட்ட உடனே நடந்தவையை சொல்லி முடித்தாள் தன்ஷிகா.
“உன்னை பார்க்க அடிக்கடி வருவரே… அவந்திகா அக்கா ஹஸ்பண்ட் அவரா டி”
“இவ்ளோ நேரம் அவரை தான் சொல்றேன்…” கோவத்தோடு தன்ஷிகா முடித்தாள்.
“நீ எப்படி சும்மா விட்ட? போலீஸ் கம்ப்ளைன் பண்ணலை….” சௌமி கேட்டாள்.
“நீயே யோசிக்கும் பொழுது நான் யோசித்து இருக்க மாட்டேன். அவன் எல்லாம் பக்காவா பேப்பரா வைச்சி இருக்கான் அதுவும் இல்லாம அவந்திகா என் மூலமா குழந்தை எதிர் பார்க்கறாளோனு யோசித்தேன். ஆனா இவன் என்னை கட்டிக்க தான் அவன் கல்யாணம் பண்ணினேன் ரொம்ப தெளிவாக சொல்றான். என்ன செய்ய புரிலை… அப்பா அம்மா சேர்ந்து என்னவோ மறைக்கறாங்க அதையும் சொல்ல மாட்றாங்க… அவன் சொல்ல விட மாற்றான்.”
“தன்ஷி உன்கிட்ட மிஸ் பீகவ் பண்றாரா? நான் வேணுமின்னா போலீஸோட வரவா” சௌமி கேட்க எதிரில் இருந்த கவியரசனை கண்டு பேசாமல் நின்றாள். அவன் வேறு பிடுங்கி ஸபீக்கரில் போட்டு கடைசியாக பேசியதை கேட்க நேர்ந்தது.
” தன்ஷி… எருமை…சொல்லு டி” சௌமி கத்தினாள்.
“அதுக்கு அவசியம் இல்லை மா… உன் தோழிகிட்ட மிஸ் பீகேவ் எல்லாம் பண்ணலை… பண்ணவும் மாட்டேன்… பயப்பட வேணாம். ஆனா குடும்ப விஷயம் நீ தலையிட வேணாம். அடுத்த தோழியிடமும் கலந்து ஆலோசிக்காதே.
அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு என்பதை மட்டும் மத்த பிரண்ட்ஸ்கிட்ட சொல்லிடு மா…” என்று போனை அணைத்தவன்
“உனக்கும் தான் நம்ம வீட்டு பிரச்சனை அடுத்தவங்க அலசலில் பேச வைக்காதே… உனக்கு காரணம் தெரிய வரும் பொழுது சொல்லாமல் இருக்கலாம் தோனும்” போனை அவள் கையில் கொடுத்து நடந்தான்.
“அத்துமீற மாட்டேன் சொல்லி இருக்கேன் ஆனா மீறனும் போல ஆசையா இருக்கு…” என்று கோவம் வர வைத்து தான் சென்றான்.
“இடியட் இவனுக்கு என்ன தான் வேணுமாம்… எப்ப பேசினாலும் எரிச்சல் படுத்திட்டு போறான்.
தனது மாடியில் இருந்து மூச்சு பயிற்சி செய்து தன்னை சமன் செய்தே இறங்கினாள்.
அங்கே தலை வாழை இலையில் கவியரசனுக்கு விருந்து கொடுக்க தன்ஷிகா தான் என்ன மர்மமோ என்று உண்ண ஆரம்பித்தாள்.
இந்த பக்கம் அவந்திகா போன் அடிக்க கவியரசன் அதை பொருட்டாகவே எண்ணாது விட்டான்.
அவந்திகாவோ ‘என் போனை அவமதிக்கற… என் அப்பா அம்மா எதிரா நிறுத்திட்ட… தன்ஷிகா வேற கட்டிக்கிட்ட, இதுவரை உன்னை பழிவாங்க முடியாம தான் இருந்தேன். இனி ஆரம்பிக்கறேன்’ என்று கருவி கொண்டாள்.
அதுக்கு தன்ஷிகா முதல்ல என்கிட்ட சேர்த்துக்கனும்… அவளை வலுக்கட்டாயமாக அடைந்தாலும் அதிகமா மனசால நெருங்க விட மாட்டேன் என்று கவியரசன் தன்ஷிகா இங்கே வர வழைக்க யோசனையை தேடினாள்.
அவள் ஒரு நம்பருக்கு போன் செய்ய அதுவோ அணைத்து இருப்பதாக பதில் வந்தது.
தொடரும்.
😕
🧡🧡🧡🧡🧡
Interesting sis superrrrrrrrr superrrrrrrrr
Interesting