Skip to content
Home » நிழல் தேடும் நிலவே…-1

நிழல் தேடும் நிலவே…-1

அத்தியாயம்-1

அந்த வீடு முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. வீட்டை பார்க்கும் பொழுதே தெரிந்து விடும் நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் வீடு என்று. வீடு சிறியதாக இருந்த பொழுதிலும் சந்தோசம் எங்கும் நிறைந்து இருந்தது.

தம்பி அரசு எல்லாம் எடுத்து வச்சுட்டியா என்ற சங்கரனிடம் எல்லாம் எடுத்து வச்சுட்டேன் அப்பா என்று வந்தவன் தன் அண்ணனின் அறைக்கு சென்றான்.

அமிர்தா என்ற உமையாளிடம் அம்மா பொண்ணுக்கு பட்டுப் புடவை, வளையல், பூ எல்லாம் எடுத்து வைத்து விட்டேன். தம்பி மத்த பழம், வெற்றிலை ,பாக்கு, பொண்ணு , மாப்பிள்ளைக்கு மாலை எல்லாமே எடுத்து வண்டியில் வைத்து விட்டான். அண்ணன் வந்த உடனே கோவிலுக்கு கிளம்ப வேண்டியது தான் என்றாள்.

அண்ணா என்று அழைத்த படி தன் அண்ணன் கார்த்திகேயனின் அறைக்கு வந்தான் தமிழரசன். என்னடா என்ற கார்த்தியிடம் ரெடியானது போதும் அண்ணா இருக்கிற அழகு தான் இருக்கும். அப்பறம் வெயிட் பண்ணிட்டு இருந்த அண்ணி வேற மாப்பிள்ளையை பார்த்து விடப் போறாங்க என்று கிண்டல் செய்தான் தமிழ்.

நாயே உன் நாறை வாயை மூடு என்று வந்தாள் கீர்த்தனா. அண்ணா செம்ம ஹாண்ட்சோமா இருக்க என்ற கீர்த்த்தியிடம் தாங்க்ஸ்டா குட்டி என்ற கார்த்தி வெளியே வர என்னப்பா கிலம்பளாமா என்றார் சங்கரன்.

உமா என்று மனைவியை அழைக்க அவரும் வந்து விட்டார். அமிர்தா மாப்பிள்ளை எங்கே என்ற உமாவிடம் நேராக அவங்க அம்மா, அப்பா கூட கோவிலுக்கு வந்துருவாரு அம்மா என்றாள் அமிர்தா.

சங்கரன் , உமையாள் தம்பதிக்கு நான்கு பிள்ளைகள். மூத்தவன் கார்த்திகேயன், அவனுக்கு அடுத்தவள் அமிர்தா,  மூன்றாவது தமிழரசன். கடைக்குட்டி கீர்த்தனா.

அந்த வீட்டின் மூத்த மகன் கார்த்திகேயனுக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் அதற்காக தான் குடும்பமாக கிளம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

ரஞ்சனி என்று வந்த சங்கீதாவிடம் என்னங்கம்மா என்ற ரஞ்சனி காதணியை சரி செய்து கொண்டு இருந்தாள். அழகா இருக்க ரஞ்சனி என்ற சங்கீதா எப்படியோ நீ ஆசைப் பட்ட வாழ்க்கை உனக்கு கிடைக்கப் போகிறது என்று சொன்னார். அம்மாவும் , மகளும் பேசிகிட்டே இருப்பிங்களா சங்கீதா வா மாப்பிள்ளை வீட்டுக் காரங்க வந்துட்டாங்க என்று கூறி மனைவியை அழைத்துச் சென்றார் மோகன்.

மோகன், சங்கீதா இருவரும் சங்கரன் குடும்பத்தினரை வரவேற்று , சொந்த பந்தங்களையும் வரவேற்றனர்.

அமிர்தா, கீர்த்தனா இருவரும் ரஞ்சனியை பார்க்க சென்றனர். அண்ணி ரொம்ப அழகா இருக்கீங்க என்று கூறிய கீர்த்தனாவிடம் தேங்க்ஸ் என்றாள் ரஞ்சனி. சரி வா ரஞ்சனி உன்னை சபைக்கு கூட்டிட்டு வர சொன்னாங்க என்றாள் அமிர்தா. இதோ பாரு அமிர்தா நீ கார்த்திக்கு தங்கச்சி தானே அக்கா இல்லையே என்றாள் ரஞ்சனி. ஆமாம் தங்கச்சி தான் என்ற அமிர்தாவிடம் நான் உன் அண்ணனுக்கு மனைவி ஆக போகிறவள் அப்போ உனக்கு அண்ணி என்று அழுத்தமாக கூறினாள் ரஞ்சனி. அண்ணி தான் ஆனால் நான் உன்னை விட இரண்டு வயசு மூத்தவள் தானே அதான் உன்னை பெயர் சொல்லி கூப்பிட்டேன் என்றாள் அமிர்தா.

அண்ணனுக்கு மரியாதை கொடுக்கிற தங்கச்சி கிட்ட தான் அண்ணிக்கும் மரியாதை இருக்கும் போல என்றவள் நீ என்னை அண்ணினு கூப்பிட்டு பழகு அப்பறம் வா, போ என்று கூப்பிடாமல் வாங்க அண்ணி, போங்க அண்ணி என்று மரியாதையா பேசு என்றாள் ரஞ்சனி.

சரிங்க அண்ணி என்ற அமிர்தாவின் முகம் செத்துப் போனது ரஞ்சனியின் நடத்தையால்.

சரிங்க அண்ணி வாங்க போகலாம் என்று அவளை சபைக்கு அழைத்து வந்தனர் அமிர்தா, கீர்த்தனா இருவரும்.

சபையில் அனைவரையும் வணங்கி எழுந்த ரஞ்சனி கார்த்திகேயன் அருகில் சென்று நின்று கொண்டாள். ரொம்ப அழகா இருக்க ரஞ்சு என்ற கார்த்திக்கிடம் தாங்க்ஸ் கார்த்திக் என்றாள் ரஞ்சனி.

வெட்கம் எல்லாம் வருமா என்று நக்கலடித்தவனை பார்த்து எல்லோரும் இருக்கிறதால் தப்பிச்ச இல்லைனா மவனே உன்னை என்று சொன்னவளிடம் சரி சரி என்று மௌனமாகினான். பெரியவர்கள் முன்னிலையில் தாம்பூலம் மாற்றி கார்த்திகேயன், ரஞ்சனி இருவரின் திருமணமும் நிச்சயிக்க பட்டது.

கார்த்திகேயன், ரஞ்சனி இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு நிச்சயதார்த்தத்தை உறுதி செய்து கொண்டனர்.

சொந்த பந்தங்கள் எல்லோரும் உணவு உண்ட பிறகு சென்று விட்டனர். சங்கரன் குடும்பத்தினரும் , மோகன் குடும்பத்தினரும் கூட தங்களின் இல்லத்திற்கு சென்று விட்டனர்.

என்ன அம்மு காலையில் சந்தோசமா கோவிலுக்கு கிளம்பின ஆனால் நிச்சயம் பண்ணி வரும் பொழுது உன் முகத்தில் அந்த சந்தோசம் துளியும் இல்லை என்று கேட்ட உமாவிடம் ஒன்றும் இல்லை அம்மா என்றாள் அமிர்தா.

மாப்பிள்ளை கூட எதுவும் சண்டையா, எதுவும் சொன்னாரா என்ற உமையாளிடம் அம்மா அதெல்லாம் ஒன்றும் இல்லை என்ற அமிர்தா சரிம்மா நான் என் வீட்டிற்கு கிளம்புகிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பினாள் அமிர்தா.

என்னடி ஒரே நாளில் வந்திருக்க நிஜமா நீ தானா இது என்று மனைவியை நக்கலடித்தான் சுரேஷ். நான் தான் நிஜமா நான் தான் போதுமா என்று கோபமாக கூறி விட்டு சென்று படுத்துக் கொண்டாள் அமிர்தா.

என்னாச்சுடீ நீ இப்படி ஒரே நாளில் எல்லாம் வரும் ஆள் இல்லயே. அம்மா வீட்டுக்கு போனால் ஆறு மாதம் டேரா போட்டு அங்கேயே சுகமாக தூங்கி எந்திருச்சு வரும் ஆள் ஆச்சே என்றான் சுரேஷ்.

இப்போ என்ன உங்க பிரச்சனை என்று அவள் சத்தம் போடவும் என்னடி ஏன் கத்துற என்ற சுரேஷ் சரி தூங்கு காலையில் பேசிக்கலாம் என்றான். இல்லை பேசலாம் என்ற அமிர்தா ரஞ்சனி தன்னிடம் நடந்து கொண்ட முறையை கூறினாள்.

அதைக் கேட்டு சிரித்தவன் இனிமேலாவது திருந்து கல்யாணம் முடிஞ்ச அப்பறம் பொண்ணுங்களுக்கு புருசன் வீடு தான் உரிமைப் பட்டது. இன்னும் அம்மா வீட்டுக்கு போய் அதிகாரம் பண்ண நினைத்தால் இன்னைக்கு போல மூக்கு உடை பட்டு தான் வர வேண்டும் என்று சொல்லி விட்டு சரி தூங்குவோம் என்று மனைவியை அணைத்துக் கொண்டு படுக்கையில் சாய்ந்தான் சுரேஷ்.

என்ன யோசனை கார்த்தி என்ற சங்கரனிடம் அதெல்லாம் பிரச்சனை இல்லை அப்பா செலவுகளை சுருக்க வேண்டிய அவசியம் இல்லை. என்ன நீங்க ரிட்டையர்ட் ஆகி விட்டால் உங்களோட வருமானம் குறையும் அவ்வளவு தானே அதனால் என்ன ரஞ்சனி நம்ம வீட்டிற்கு வந்த பிறகு அவளோட சம்பளம் வருமே. செலவை ஈக்வல் பண்ணிக்குவோம் என்றான் கார்த்திகேயன்.

அது எப்படி கார்த்தி சரியா வரும். மருமகள் காசை வைத்து என்று இழுத்தார்  சங்கரன். அப்பா இன்னும் ஒரு வருடத்தில் தம்பிக்கு படிப்பு முடிஞ்சுரும் அப்பறம் அவனும் வேலைக்கு போய் விடுவான். அது வரை ரஞ்சனி சம்பளமும் வைத்து குடும்பத்தை நடத்தலாம்.

என் சம்பளம், ரஞ்சனி சம்பளம், உங்க பென்சன் எல்லாம் வைத்து சமாளிக்கலாம் என்றான் கார்த்திகேயன். சரிப்பா என்றவர் இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் அதற்கான வேலைகளையும் பார்க்கணும் அதுக்கு பட்ஜெட் போடணும் என்று குடும்பமாக அமர்ந்து அந்த வேலையை பார்த்தனர்.


என்ன ரஞ்சனி சொல்லுற என்ற அனிதாவிடம் ஆமாம் அனி கல்யாணம் முடிஞ்சதும் என்னோட வேலையை விட்டு விடலாம் என்று நினைக்கிறேன் என்றாள் ரஞ்சனி. வேலையை விட்டுட்டு உன்னால் எப்படி ஆடம்பரமாக இருக்க முடியும் அதுவும் கார்த்தி வீட்டில் தம்பி, தங்கச்சி ,அப்பா, அம்மா எல்லோருக்கும் வேற செலவு இருக்குமே என்றாள் அனிதா.

அவங்க செலவை குறைக்க நான் ஏன் சம்பாதிக்கனும் கல்யாணம் முடிந்த ஒரு வாரத்திலேயே தனியா போய் விடுவேன். கார்த்தி அப்பா ரிட்டயர்ட் ஆகி வரும் பணம், பென்சன் அதில் அவங்க குடும்பத்தை நடத்தட்டும். நான் கார்த்தி சம்பளத்தில் ஒரு அக்மார்க் ஹவுஸ் ஒய்ஃப்பா வீட்டை பார்த்துக் கொண்டு சந்தோசமா இருப்பேன் என்றாள் ரஞ்சனி.

கார்த்தி என்ன பத்து லட்சம் சம்மதிக்கிறானா  அவனோட சம்பளம் வெறும் இருபதாயிரம் தான் அதை வைத்துக் கொண்டு வீட்டு வாடகை மட்டும் தான் கொடுக்க முடியும். நீ வேலையை விட்டு விடலாம் என்று யோசிக்கிறது தப்பு. சப்போஸ் நீ தனிக் குடித்தனம் போகிற எண்ணத்தில் இருந்தால் நீயும் வேலைக்கு போ. வேலையை விட்டு விடாதே என்றாள் அனிதா.

நீ சொல்வதும் சரி தான் அனி என்ற ரஞ்சனி சரி கிளம்பலாம் என்று தோழியுடன் சென்றாள்.

என்ன சொல்லுற சித்ரா என்ற தமிழரசனிடம் ஆமாம் தமிழ் எங்க வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கிறாங்க என்ன பண்ணலாம் என்று கேட்டாள் அவனது காதலி சித்ரா. இன்னும் நமக்கு படிப்பு முடியவில்லை சித்ரா இப்போ நாம என்ன பண்ண முடியும்.  நீ பேசு படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் வைத்துக் கொள்ள சொல்லி பேசு என்றான் தமிழரசன்.

எங்க வீட்டில் என் அண்ணன் கல்யாண விசயம் போய்ட்டு இருக்கு இப்போ என்னால் ஒன்றும் பண்ண முடியாது அதனால் கொஞ்சம் யோசிப்போம் என்றான் தமிழரசன்.

யோசிக்க என்ன இருக்கு தமிழ் உன்னை தவிர வேற யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். பண்ணிக்கவும் முடியாது என்று சித்ரா கூறிட கொஞ்சம் பொறு சித்ரா முதலில் அண்ணன் கல்யாணம் முடியட்டும் என்றான் தமிழரசன்.

என்ன ரஞ்சனி வேலையை விடுறது பத்தி யோசிச்சியா என்ற சங்கீதாவிடம் இல்லம்மா எதற்கு வேலையை விட என்றாள் ரஞ்சனி. ஏன்டி நான் சொன்னது உனக்கு புரியலையா நீ அந்த வீட்டிற்கு போனதும் வீட்டில் வேலை பார்க்கவே நேரம் சரியா வரும்.  உன் மாமியார் வேற கொஞ்சம் உடம்பு சரி இல்லாத மனுஷி. அவங்களால் இப்போ மாதிரி வேலை எல்லாம் செய்ய முடியாது. செய்யவும் மாட்டாங்க காரணம் மருமகள் பார்ப்பாள் என்ற எண்ணம்.

அது தப்பு இல்லை ஒரு விதமான எதிர்பார்ப்பு தானே என்ற சங்கீதா வீட்டு வேலை  செய்து விட்டு வேலைக்கு போனால் நீ ரொம்ப டயர்டா ஆகிருவ அதனால் தான் சொல்கிறேன் வேலையை விட்டுட்டு வீட்டை கவனி என்றார் சங்கீதா.

அம்மா எனக்கும், என் புருஷனுக்கும் மட்டும் பெருசா என்ன வீட்டு  வேலை இருக்கப் போகிறது நான் ஏன் வேலையை விடனும் என்றவள் கல்யாணம் முடிஞ்சதும் நான் என் புருசனோட தனிக் குடித்தனம் போய் விடுவேன் என்றாள் ரஞ்சனி.

….தொடரும்….

6 thoughts on “நிழல் தேடும் நிலவே…-1”

  1. Avatar

    அய்யோ இவளை கார்த்திக் கூட சேர்த்து வைக்க வேண்டாம் இவ குடும்பத்தை பிரிக்க பாக்கறா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *