திருக்குறள்
அதிகாரம்-2
நீத்தார் பெறுமை
குறள் 21: ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு
குறள் விளக்கம்ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.
குறள் 22: துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக் கொண்டற்று
குறள் விளக்கம்பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப் போன்றது.
குறள் 23: இருமைவகை தெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு
குறள் விளக்கம்பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்ககொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.
குறள் 24: உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
குறள் விளக்கம்: அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிகாக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்
குறள் 25:
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்
இந்திரனே சாலுங் கரி
குறள் விளக்கம்
ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு,
வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்
குறள் 26:
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
குறள் விளக்கம்:
செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர்.
செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.
குறள் 27:
சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
குறள் விளக்கம்
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடை ய அறிவில் உள்ளது உலகம்.
குறள் 28:
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
குறள் விளக்கம்
பயன் நிறை ந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை , உலகத்தில்
அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறை மொழிகளே காட்டிவிடும்.
குறள் 29:
குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது
குறள் விளக்கம்
நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.
குறள் 30:
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
குறள் விளக்கம்
எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.