Skip to content
Home » நீயே என் ஜீவனடி – ஜீவன் 10

நீயே என் ஜீவனடி – ஜீவன் 10

கீழே இறங்கியவளின் கைகள் சிவந்திருக்க கை இரண்டையும் அழுத்தி தேய்த்தவள் திரும்ப அதிர்ச்சியாக நின்றாள்.

பின் பார்வையை பால்கனியை நோக்கி விட்டு விட்டு மீண்டும் திரும்பினாள்.

‘ என்ன இது மேலே இருந்து பார்க்கும்போது குட்டி சுவரா இருந்தது. இப்போ இவ்ளோ பெருசா தெரியுது.’

(( நீங்க அரவிந்தா இருக்கும்னு தானே நினைச்சேங்க. சாரி நான் இப்போ ஆனந்திக்கு ஹெல்ப் பண்ண போறேன். மேல் இடத்துல இருந்து உத்தரவு.))

‘ இதை எப்படி நான் தாண்டுவேன். சான்சே இல்ல. ஏதோ ஒரு தைரியத்தில இறங்கிட்டேன். இப்போ திரும்ப மேல ஏறவும் முடியாது.

ஆனந்தி இப்படி சொதப்பிட்டியேமா.’ என கண்களை அங்கேயும் இங்கேயும் அலை பாய விட அங்கு ஒரு பெரிய கல் இருந்தது.

அதை பார்த்தவளுக்கு அறிவு மணி ஒலிக்க, அதன் அருகே சென்றாள்.

அதை தூக்க முயற்சித்தாள். ஆனால் அதை அவளால் நகர்த்த கூட முடியவில்லை.

சோர்ந்தவள், அந்த கல்லின் மீது உட்கார்ந்து கொண்டு தன் விதியை நொந்து கொண்டாள்.

‘ நல்லா மாட்டிகிட்டேன். இப்போ வெளியவும் போக முடியாது. உள்ளயும் போக முடியாது.’

” டேய், அங்க என்னடா பண்ற. அண்ணே இப்போ வந்துருவாரு. அவர் வரதுக்குள்ள அவன முடிச்சு வெளிய அனுப்பு.” என அடியாளின் குரல் எங்கிருந்தோ வர பார்வையை சுழற்றினாள்.

ஒளிவதற்கு கூட இடம் இல்லாமல் இருக்க, மெல்ல நகர்ந்து எட்டிப் பார்த்தாள்.

மறுமுனையில் அடியாள் ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவள் பக்கத்தில் ஸ்டூல் இருக்க அவன் அறியாவண்ணம் ஸ்டூலை எடுத்தவள் ஓடிவந்து சுவரின் பக்கம் போட்டு தப்பித்தாள்.

‘ நல்ல வேளை உயரமாக போட்டதோட விட்டான். கண்ணாடி ஏதாவது போட்டிருந்தா என் நிலைமை என்ன ஆயிருக்கும்.’ என நொந்துகொண்டே கால் போன போக்கில் நடந்தாள்.

தூரத்தில் இருந்து வந்து கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தினாள்.

‘ ஐயோ நாம வேற அவசரப்பட்டு ஆட்டோவை நிறுத்திட்டோம். காசு கேட்பானே. சரி வீட்டுக்கு தானே போறோம் .அங்க போய் கொடுத்துக் கலாம்.’

” ஹலோ மேடம். என்ன யோசிக்கிறீங்க.”

” ஒன்னும் இல்லன்னா.” என ஆட்டோவில் ஏறிக்கொண்டாள்.

அவனிடமிருந்து தப்பித்து விட்ட சந்தோசத்தில் பூரித்துக்கொண்டாள்.

” ஏன்ணா… இந்த ஏரியா ரொம்ப அமைதியா இருக்கு.”

(( இவளுக்கு எதிரி யாரும் வேண்டாம். அவள் வாயே போதும்.))

” இந்த ஏரியா எப்பவும் அப்படித்தான் இருக்கும். நீங்க இந்த ஏரியாக்கு புதுசா.”

” ஆ…… இல்ல…… ஆமா….”

‘ ஐயோ …. உளறுறோமே…..’

” அது வந்து என் பிரென்ட் வீடு இந்தப் பக்கம் இருக்கு. அதான்.”

” தனியா வந்தீங்களா sister.”

” ஆமா.”

‘ ஆனந்தி வாய மூடிக்கோ. இல்லாட்டி நீ எதாவது உளறி கொட்டிருவ.’

” இந்த ஏரியாவுல பெரிய ரவுடி இருக்கான்னு கேள்விபட்டேன். உண்மையா….?”

(( நான் சொல்லல. வேற யாரும் வேண்டாம் அவளுக்கு….))

” என்னது ரவுடியா….” என யோசித்தவன்,

” அரவிந்த் அண்ணாவ சொல்றீங்களா.”

‘ உனக்கும் அவன் நொண்ணாவா. இது உனக்கு தேவையா அப்பவே வாய மூடிட்டு வான்னு தானே சொன்னேன்.’ என அவளையே அவள் திட்டிக் கொண்டாள்.

” பேர் எல்லாம் தெரியாது. சும்மா சொன்னத கேள்விப்பட்டேன்.” என்றால் சிறிது அலட்டிக் கொண்டு.

” அவரு ரவுடிலாம் இல்லை சிஸ்டர். ரொம்ப நல்லவரு. அவர தெரிஞ்ச யாரும் அவர ரவுடின்னு சொல்ல மாட்டாங்க.”

” அடிதடி பண்றவங்கள ரவுடின்னு சொல்லாம வேற என்ன சொல்ல முடியும்.”

” இல்லை சிஸ்டர். நீங்க தப்பா புரிஞ்சிருக்கிறீங்க.”

“போதும் உங்க அண்ணன் புராணம். ஒரு பொண்ண பலவந்தமா கல்யாணம் பண்ணுவாரு. கேட்டா. அவரு நல்லவரு வல்லவருனு சப்போர்ட் பண்ண ஒரு கூட்டமே கிளம்பி வந்துரும்.”

” சாரி சிஸ்டர். உங்களுக்கு என் அண்ணன் மேல என்ன கோவம்னு தெரியல. “

” கோபமா….”

‘ உணர்ச்சிவசப்படாதடி….’

” இல்ல அப்படி எல்லாம் எதுவும் இல்ல. ஒரு பொண்ண எப்படி அவ விருப்பமில்லாம தாலி கட்டலாம். ஒரு பொண்ணா யோசிக்கும் போது, அந்த பொண்ண நினைச்சு, அவளுக்கு நடந்த துரோகத்த நினைச்சு ஒரு வெறுப்பு. அவ்வளவுதான்.

கொஞ்சம் யோசிச்சு பாருங்க. ஒருவேளை உங்களுக்கு ஒரு தங்கச்சி இருந்து அவள ஒருத்தரு இப்படி பலவந்தமா கட்டிக்கிட்டா நீங்க சும்மா இருப்பீங்களா….”

அதற்கு சிரித்த ஆட்டோ டிரைவர், “தெரியல. ஒருவேளை எனக்கு ஒரு தங்கச்சி இருந்து அரவிந்த் அண்ணா மாதிரி ஒருத்தர் அவள கல்யாணம் பண்ணி இருந்தா நான் ரொம்ப சந்தோஷப்பட்டுருப்பேன்.”

‘ முடியல காசு கொடுத்து ஆளை செட் பண்ணிருப்பானோ?’

” உங்களால மட்டும் எப்படி அவர இப்படி புகழ முடியுது . “

“எனக்கு வாழ்க்கை கொடுத்ததே அவர்தானே. என் அப்பா குடிச்சு குடிச்சு சீக்கிரமே கடவுள்கிட்ட போயிட்டாரு.

அப்பா போனதுக்கு அப்புறம் அம்மாவும் படுத்த படுக்கை ஆய்டாங்க.

அரவிந்த் அண்ணா தான் என்னை இன்ஜினியரிங் காலேஜ் சேர்த்துவிட்டு, இந்த ஆட்டோவையும் வாங்கிக் கொடுத்தாங்க.”

” அதான பார்த்தேன். அவரு உங்களுக்கு வாழ்க்கை கொடுத்திருக்காரு. அதனால உங்களுக்கு அவர் பண்ற தப்பல்லாம் பெருசா படல.”

” அப்படி என்னங்க தப்பு பண்ணிட்டாரு.”

” உங்களுக்கு வாழ்க்கை கொடுத்தவரு. ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துருக்காரு. ஆனால் அது உங்களுக்கு கஷ்டமா இல்ல.”

” உண்மையிலேயே அரவிந்த் அண்ணாவ கல்யாணம் பண்ண அவங்க கொடுத்து வச்சு இருக்கணும் . “

‘இவன் அவனுக்கு சிலை வக்காம விடமாட்டான் போல. டாப்பிக்க மாத்துடி. அவனைப் பத்தி பேசி நீ டென்ஷனாகாத.’

“இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்.”

” இதோ போயிடலாம். ” என்றவன் அதற்கு மேல் பேசவில்லை.

அப்போதுதான் அவள் சுற்றுச்சூழலை கவனித்தாள்.

இந்த ஏரியாவ எங்கேயோ பார்த்திருக்கிறோமே என யோசித்தவாறே திரும்பவும் ஆட்டோ கேட்டை தாண்டி உள்ளே செல்லவும் ஸ்தம்பித்து நின்றாள்.

‘ அட பாவி உன்னை நம்பி ஆட்டோல ஏறுனேன் பாரு என்னை சொல்லணும். இவன் அரவிந்த பத்தி புகழும் போதே உசாரா இருந்துருக்கனும்.

நம்மள பத்தி தான் தெரியாதுன்னு அசால்டா இருந்தது என் தப்பு தான்.’

அவள் தயங்கியபடி ஆட்டோவிலிருந்து இறங்க, காலையில் சாப்பிட சொன்னவன் அருகில் வந்து,

” அண்ணி ஏரியாவ சுத்தி பாத்துட்டீங்களா…” என்றவனை முறைக்க,

” சாரி அண்ணி…. அண்ணே உள்ள தான் உங்களுக்காக வெயிட் பண்றாங்க. போய் பாருங்க.” என அவன் கூற,

அவன் என்ன சொல்லப் போகிறானோ என தயங்கி நின்று கொண்டிருக்க,

ஆட்டோ காரன் கலாய்க்க ஆரம்பித்தான்.

” ஆட்டோக்கு காசு கொடுக்கலன்னு யோசிக்கிறீங்களா. ஆட்டோவே உங்களோடது தான்.” என கூறி விட்டு சிரிக்க,

‘ மவனே நீ செஞ்ச வேலைக்கு காசு ஒண்ணுதான் குறைச்சல். அந்த தடிமாடு மட்டும் பக்கத்துல இல்லாம இருந்திருந்தா. இந்த இடத்திலேயே உன்னை கைமா கைமா பன்னிருப்பேன்டி.’என மனதிற்குள் எண்ணியவள்,

‘அரவிந்தை சமாளிப்போம்.’ என உள்ளே நுழைந்தாள்.

💖💖💖💖💖

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *