Skip to content
Home » பூவிதழில் பூத்த புன்னகையே 22

பூவிதழில் பூத்த புன்னகையே 22

வரு அரசி இருக்கும் அறைக்குச் சென்றாள் அரசி வருவை அங்கு எதிர்பார்க்கவில்லை அவளைப் பார்த்தவுடன் முறைத்தார் அதன் பிறகு உனக்கு இங்கு என்ன வேலை என்று கேட்டார்…உங்களுடைய மகன் தான் என்னை இங்கு வர சொன்னார் உங்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று என்றாள் சிரித்துக் கொண்டே என்ன விளையாடுகிறாயா? அவன் உன்னை வரவைத்தான் என்றால் என்ன நம்ப சொல்கிறாயா? என்றார் ..உண்மையாகவே அதுதான் உண்மை இல்லை என்றாலும் உங்கள் மகனிடம் கூட கேட்டுக் கொள்ளுங்கள் என்றாள் பிறகு அவளை முறைத்து விட்டு அவன் வர சொன்னால் நீ வந்து விடுவாயா ?உனக்கு இங்கு என்னடி வேலை என்று கேட்டார்..என்ன மாமியாரே இப்படி கேட்டுட்டீங்க நேத்து நீங்க வந்து என்னை பார்த்து பேசுறீங்க என்றாள். அவள் மாமியாரே என்றவுடன் யாருக்கு யாரு டி மாமியார் என்று கத்தினார் “என்ன இருந்தாலும் என்னுடைய வருங்கால கணவருக்கு நீங்க அம்மாவோ சித்தியாவோ இருங்க அது உங்க விருப்பம் அப்ப எனக்கு நீங்க மாமியார் தானே ” என்றாள்..அவர் முறைத்துக் கொண்டே அவளை பார்த்தார் சரி சரி இப்போ நான் அதை பத்தி பேச வரல நம்ம அப்புறமா இத பத்தி பேசிக்கலாம் ஏன் நீங்கள் ஆப்ரேஷன் செய்து கொள்ள மாட்டேன் என்று சொல்கிறீர்கள் உங்களுக்கு ஏற்கனவே உங்களுக்கு இருக்கும் பிரச்சனை தெரியுமா ? என்று கேட்டாள்…அவர் அவளை முறைத்து விட்டு எனக்கு தெரிந்தால் எனக்கு என்ன தலை எழுத்தா அதை சீராக இருக்கும் போது சரி செய்து கொள்ள மாட்டேனா? என்று கேட்டார் ஏன் உங்களுக்கு சீராக இருக்கும் போதே அடி வயிற்றில் வலியோ இல்லை வேறு எந்த தொந்தரவு தரவில்லையா ?என்றாள் ..அவளை லேசாக முறைத்து பார்த்துவிட்டு எனக்கு உண்மையாகவே எந்த தொந்தரவும் இதுவரை இருந்ததில்லை அதனால் தான் நான் அமைதியாக விட்டுவிட்டேன். இன்று தான் எனக்கு அடி வயிற்றில் வலியே எடுக்க ஆரம்பித்தது அதன் பிறகு தான் மருத்துவமனை வந்தேன் …இங்கு வந்த பிறகுதான் எனக்கு யூட்ரஸ் எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள் சரி உங்களுக்கு பிரச்சனை பெரியதாகி விட்டதால் யூட்ரஸ் எடுக்க சொன்னார்கள் அல்லவா ?எடுக்க வேண்டியதுதானே என்றாள் நீ என்ன லூசா நீ நான் யூட்ரஸ் எடுத்துவிட்டால் என்னை யார் பார்த்துக் கொள்வார்கள் என்றார்..ஏன் உங்களுடைய கணவன் இல்லையா இரண்டு மகன்கள் இல்லையா? என்றாள் எல்லாம் இருக்கிறார்கள் தான் நான் இல்லை என்று சொல்லவில்லை அதற்காக என்னுடைய ஒவ்வொரு தேவைக்கும் நான் அவர்களை அழைத்துக் கொண்டு இருப்பேனா என்றார் பிறகு உங்களுடைய கணவன் உங்களுடைய பிள்ளைகள் வேற யாரை அழைப்பீர்கள் என்றாள் …அவர் அமைதியாக இருந்த உடன் நான் உங்களை பார்த்துக்கொள்கிறேன் ஒழுங்காக ஆபரேஷனுக்கு ஒத்துக் கொள்ளுங்கள் என்றாள் நீ யாரு டி என்னை பார்த்துக் கொள்ள என்றார் இப்பொழுது தான் சொன்னேன் நான் உங்கள் மருமகள் என்று நீங்கள் என்னை மருமகளாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை …ஒரு பெண்ணாக ஏற்றுக் கொள்ளுங்கள் உங்களுக்கு “உங்களது கணவன் உடல் நிலையை வைத்து அவர் பார்த்துக் கொள்ள வேண்டாம் என்று எண்ணுகிறீர்கள் மகன்கள் பார்ப்பதற்கு சிறிது யோசனை அவ்வளவுதானே நானும் ஒரு பெண்தான் உங்களுக்கு என்ன இருக்கிறதோ அதுதான் எனக்கும் இருக்கிறது” …சரியா நான் உங்களை பார்த்துக் கொள்ளலாம் தானே என்று கேட்டாள் அரசி அவளை அமைதியாக ஏறிட்டுப் பார்த்தார் உங்கள் உடல்நிலை சரியில்லை அமைதியாக ஆபரேஷன் செய்ய ஒத்துக் கொள்ளுங்கள் நான் உங்களை உங்கள் உடனிருந்து பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னாள் ..சரி மருத்துவமனையில் பார்த்துக் கொள்வாய் வீட்டில் என்று லேசாக சிரித்துக் கொண்டே கேட்டார் நீங்கள் ஆபரேஷன் செய்ய ஒத்துக் கொள்கிறேன் என்று சொல்லுங்கள் வீட்டிலும் நானே பார்த்துக்கொள்கிறேன் என்றாள்…அவர் அமைதியாக இருந்த உடன் சரி நான் உங்கள் கணவனிடமும் உங்கள் மகனிடமும் வெளியே சென்று சொல்லப் போகிறேன் அதேபோல் இன்று உங்களுக்கு ஆபரேஷன் செய்யப் போகிறார்கள் மாலை 6 மணிக்கு மேல் அவ்வளவுதான் சொல்வேன் என்று விட்டு அவர் கத்த கத்த கேட்காமல் வெளியே சென்று விட்டாள் …வெளியே சென்றவுடன்  தீரனும்  தேவாவும் வரு எப்பொழுது  வெளியே வருவாள் என்று காத்துக் கொண்டு இருந்தார்கள்  அவள் வந்தவுடன் தேவா தான் அவள் அருகில் சென்று மருத்துவர் என்ன சொன்னார்கள் என்று கேட்டான் வருவும் ஒன்றையும் மறைக்காமல் அனைத்தையும் சொன்னவுடன் தேவா தீரன் இருவருக்கும் கஷ்டமாகி போனது…ஒரு பெண் என்பவள் இல்லாவிடில் தங்களுக்கு எந்த அளவிற்கு வருத்தம் உண்டாகும் என்பதையும் உணர்ந்து விட்டு தேவாவே வாய்விட்டு வருவிடம் என் அம்மாவை மருத்துவமனையில் இருக்கும்  நாட்கள் மட்டும் நீ பார்த்துக் கொள்கிறாயா? வீட்டிற்கு சென்ற பிறகு நாங்கள் எப்படியாவது மேனேஜ் பண்ணிக்கிறோம் என்றான்..வரு தேவாவை முறைத்துவிட்டு தீரன் அருகில் வந்து  நான் ஆண்டியை பார்த்துக் கொள்கிறேன் நான் ஆண்டியிடம் பேசிவிட்டு அம்மாவிடம் பேசி விட்டேன் அம்மாவும் வருவார்கள் ஏனென்றால் எனக்கு இதைப் பற்றி முழுவதாக தெரியாது அம்மா வந்து  வீட்டிகும் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள் என்று விட்டு ஆப்ரேஷனுக்கு இவ்வளவு பணம் தேவை…நான் உங்களிடம் கேட்காமல் இன்று மாலை 6:00 மணிக்கு மேல் ஆபரேஷன் செய்ய சொல்லி விட்டேன் ஆபரேஷன் தொகையில் கால்வாசி இன்று மாலை கட்டினால் போதும் மீதியை டிஸ்சார்ஜ் செய்யும் போது கட்டிக் கொள்ளலாம் சீக்கிரம் ஆப்ரேஷன் செய்தால் அவர்களது உடல்நிலைக்கு நல்லது என்று சொல்லுவதால் நான் உங்களிடம் கேட்காமல் கூட இன்று ஆபரேஷன் செய்ய சொல்லி விட்டேன் என்றாள்…தேவா ஒரு நிமிடம் வருவை உற்றுப் பார்த்து விட்டு பணம் ஒன்றும் பிரச்சனை இல்லை இருக்கிறது இல்லை என்றாலும் ரெடி பண்ணி விடுவேன் அம்மாவிற்கு இன்று மாலையை ஆபரேஷன் செய்து விடலாம் என்று பேசிக் கொண்டும் சொல்லிக் கொண்டிருந்தான் …அப்பொழுது தேவாவின் போன் அடித்தது எடுத்துப் பார்த்தான் தன் தம்பி ஆதுவிடமிருந்து வந்து இருக்கிறது என்றவுடன் வேகமாக தனது கண்ணை துடைத்துவிட்டு சொல்லு ஆது என்றான் அண்ணா எங்கு இருக்கிறீர்கள் அப்பா அம்மா கூட வீட்டில் இல்லை அருகில் இருப்பவர்களை கேட்டால் வெளியே சென்று இருக்கிறார்கள் என்று மட்டும் சொல்கிறார்களே என்றான் …சரிடா நீ வீட்டில் தானே இருக்கிறாயா அங்கே இரு நான் வருகிறேன் என்று சொன்னான் அண்ணா என்ன அண்ணா என்று ஆது கேட்க டேய் நான் வருகிறேன் என்று விட்டு தேவா வேறு எதுவும் சொல்லாமல் போனை வைத்து விட்டான் பிறகு வருவிடமும் தீரனிடமும் உடனிருந்து பார்த்துக் கொள்ளுங்கள் …நான் ஆதுவை அழைத்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வேகமாக சென்றான் ஆது அங்கு தனது பையை வைத்துவிட்டு யோசனையில் ஆழ்ந்து இருந்தான் தேவா வேகமாக ஆதுவிடம் வந்து ஆது வா கொஞ்சம் வெளியே சென்று வரலாம் என்றான் …அண்ணா எங்கே அம்மாவும் அப்பாவும் காணம் நான் வரும் நேரத்தில் இருவரும் இருப்பார்களே என்று கேட்டான் தேவா ஆதுவிடம் எதையும் மறைக்காமல் அவனிடம் அனைத்தையும் சொல்லிவிட்டான் பயப்படும் படியாக எதுவும் இல்லை என்பதையும் சொல்லிவிட்டான் …ஆதுவும் சரி அண்ணா வாருங்கள் அம்மாவை சென்று பார்க்கலாம் என்று விட்டு மருத்துவமனைக்கு தேவா உடன் சென்றான் அங்கு தேவாவும் ஆதுவும் போகும்பொழுதே வருவின் தாய் கலைமணி நின்று கொண்டிருந்தார் வரு தன்னுடைய தாய் என்றும் அறிமுகப்படுத்தினாள் அரசிடமும் அழைத்துக் கொண்டு சென்று இது என்னுடைய அம்மா ஆன்ட்டி என்றாள்…முன்பு மாமியார் என்று அழைத்தவள் இப்பொழுது ஆன்டி என்று அழைப்பதை அமைதியாக மனதில் குறித்துக் கொண்டார் அரசி. எனக்கு முழுவதாக ஒரு சில விஷயங்கள் தெரியாது என்பதால் அம்மாவே வர வைத்து இருக்கிறேன் அது மட்டும் இல்லாமல் மருத்துவமனையில் நான் பார்த்துக் கொள்ளலாம்…வீட்டில் உங்களால் பெண் துணை இல்லாமல் கொஞ்ச நாட்களுக்கு இருப்பது கஷ்டம் தானே ஒரு வாரமாவது பெண் துணை உன்னகளுக்கு தேவை என்பதால் அம்மாவை வர சொல்லி இருந்தேன் நான் வரக்கூட சொல்லவில்லை விஷயத்தை தான் சொன்னேன் அம்மாவாக வந்திருக்கிறார்கள் ..உங்களுடன் வீட்டில் ஒரு வாரமாவது இல்லை பத்து நாட்களாவது அம்மா தங்குவார்கள் உங்களுடன் இருந்து உங்கள் உடல்நிலை சரியாகும் வரை உங்களை பார்த்துக் கொள்வார்கள் என்று  சொன்னாள். கலை அரசியின் கையை பிடித்துக் கொண்டு ஒன்றும் இல்லை கவலைப்படாதீர்கள் பெண் பிள்ளை இல்லை என்றும் இல்லை வீட்டிற்கு மருமகள் வரவில்லை என்றும்  எண்ணாதீர்கள் …நான் உங்களை பார்த்துக்கொள்கிறேன் என்றார் அரசி இல்லை வேண்டாம் என்று சொன்னதற்கு கலை தான்  எதுவும் பேச வேண்டாம் நானும் வருவும் இருக்கிறோம் உங்களுக்கு ஆப்பரேஷன் நன்றாக முடிந்து உங்கள் உடல்நிலை தேரும் வரை உங்களுடன் இருந்து பார்த்துக் கொள்வோம்  என்று அரசியின் கையில் அழுத்தம் கொடுத்தார் கலை மணி …அரசிக்கு அழுகையாக இருந்தது வருவைப் பார்த்தார் வரு கண்மூடி திறந்தாள் அதன் பிறகு ஆப்ரேஷன் செய்வதற்கு தேவையான அனைத்தும் வேகமாக நடந்தது ஆது தனது தாயை பார்த்துவிட்டு கட்டிக்கொண்டு அழுதான் ..அவர் எனக்கு ஒன்றும் இல்லைடா என்று தேற்றினார் அதன் பிறகு  அரசிக்கு ஆப்ரேஷன் செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக நடைபெற்றது மலை ஏழு மணி போல் வருவின் தந்தை மாணிக்கமும் அங்கு வந்திருந்தார் அவரும் அரசியை பார்த்துவிட்டு பிறகு தீரனின் அருகில் உட்க்கார்ந்து கொண்டு தீரனுக்கு ஆறுதலாக ஒரு சில வார்த்தைகள் சொன்னார்..பிறகு எட்டு மணிக்கு அரசியை ஆப்பரேஷன் தியேட்டருக்கு அழைத்துக் கொண்டு சென்றார்கள் அரசி போகும் போது ஒன்றுக்கு இரண்டு முறை தீரனையும் வருவையும் பார்த்துவிட்டு சென்று வருவிற்கு லேசாக கண்கள் கலங்கியது அவரது நிலையை எண்ணி அடுத்த ஒரு மணி நேரத்தில் அரசியின் கர்ப்பப்பை அவரது உடலில் இருந்து அகற்றப்பட்டது…” ஒரு பெண்ணுக்கு தான் பெண் என்று அடையாளம் காட்டப்படும் கர்ப்பப்பை அவரது உடலில் இருந்து அகற்றப்பட்டது “அவருக்கு ஒரு மாதிரியாக இருந்தது பிறகு அடுத்து ஒரு மணி நேரம் அவர் ஐசி யூவில் இருந்தார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு லேசான மயக்கத்துடன் நார்மல் வார்ட்டுக்கு  மாற்றப்பட்டார் …ஐ சி யூ வார்டில்  இருந்து அரசி  வெளியில் வரும்போது தீரன் கண்கள் கலங்கி சிவந்து இருந்தது அதை பார்த்துவிட்டு ஒரு சில நொடி அமைதியாக இருந்தார் பிறகு நார்மல் வார்டுக்கு கொண்டு வந்து விட்டவுடன் இப்பொழுது மயக்கமாக இருக்கிறார்கள் இன்னும் ஒரு மூன்று மணி நேரம் மயக்கம் இருக்கும்…அதன்பிறகு தான் மயக்கம் முழுவதாக தெளியும்  அவர்களிடம் அதிகமாக பேசாதீர்கள் வலி இருக்கத்தான் செய்யும் நாளை ஒரு நாள் முழுவதும் எப்படியும் வலி ஓரளவுக்கு அதிகமாக இருக்கும் என்று சொல்லிவிட்டு நர்ஸ் சென்றார்கள் …தேவா வேகமாக தனது அரசி அம்மாவின் அருகில் சென்று அவரது கையில் அழுத்தம் கொடுத்தான் அவர் அமைதியாக அவனைப் பார்க்க செய்தார்  தீரன் வந்து அருகில் நின்றவுடன் அரசு தீரனையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தார் அதன் பிறகு வரு இருவரின் முகத்தை பார்த்துவிட்டு அனைவரையும் வெளியே அழைத்துக்கொண்டு வந்தாள்…தீரனைத் தவிர அனைவரும் அரசியின் அறையில் இருந்து வெளியில் வந்து விட்டார்கள் அப்பொழுது தேவா தான் வருவை முறைத்துக் கொண்டு நின்றான் இவள் எதற்கு இப்போது என்னுடைய அம்மாவிடம் கூட என்னை பேச விடாமல் அழைத்துக் கொண்டு வருகிறாள் என்று எண்ணி அவள் மேல் கோபம் கொண்டான்…தீரன் உள்ளே அரசியின் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்று கொடுத்துவிட்டு சாரி அரசி நான் உன்னை ஒழுங்காக கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன் என்றார் அரசி இல்லை என்பது போல் தலையாட்டினார் நான் தேவா சொல்வது போல் என்று விட்டு சாரி அரசி உனக்கு தேவாவை பற்றியும் பாருவை பற்றியும் பேசினால் கோபம் வருகிறது என்று தெரிந்தும் இருவரையும் பற்றியும் நான் பேசிக் கொண்டிருக்கிறேன் ..என்னை மன்னித்துவிடு அந்தப் பெண் சொன்னது உண்மைதான் என்றவுடன் எந்தப் பெண் என்றார் லேசாக அரசி இப்போது சென்றதே அந்த பெண்தான் உனக்கு ஆபரேஷன் செய்ய உதவிய பெண் தேவாவின் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் வருணிகா என்றார் என்ன கேட்டாள் அந்த பெண் என்ன சொன்னாள்  என்றார் அரசி…எங்கள் மூவரையும் இவ்வளவு நேரம் நன்றாக திட்டியது அந்தப் பெண் சொன்னதில் ஒன்றும் தவறில்லை என்றார் அப்படி என்ன சொன்னாள் ?என்று கேட்டார் அரசி வரு அப்படி தீரன் ஆது தேவா மூவரையும் என்ன சொல்லி திட்டினாள் அரசியின் மனம் மாறுமா? தேவாவை ஏற்றுக் கொள்வாரா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..அன்புடன்❣️ தனிமையின் காதலி❣️✍️

4 thoughts on “பூவிதழில் பூத்த புன்னகையே 22”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *