Skip to content
Home » மகாலட்சுமி 112

மகாலட்சுமி 112

காவேரி கந்தனை அழைத்துக் கொண்டு சென்று ஊரிலுள்ள அனைவரிடமும் நாளைக்கு மகாவிற்கு வளைகாப்பு 12 to ஒன்றை என்று சொல்லிவிட்டு வந்தார்கள் கந்தன் அமைதியாக காவேரி ஒரு வீட்டில் மகாவிற்கு  வளைகாப்பு வைப்பதாக  சொன்ன பிறகு அவரும் சேர்ந்து சொல்லிவிட்டு வந்தார் மனதிற்குள் கந்தனுக்கு அவ்வளவு ஆனந்தமாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்….


வீட்டிற்கு வந்தவுடன் சுந்தரி காவேரிக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார் கந்தன் மூக்கை முகர்ந்து விட்டு என்ன சுந்தரி இன்னைக்கு வீட்ல விசேஷம் என்றார் நீங்க வெளியே போயிட்டு வந்தது தான் அண்ணா  விசேஷம்  என்று சொல்லிவிட்டு ஒவ்வொரு உணவு பதார்த்தங்களாக எடுத்துக் கொண்டு வந்து  உணவு மேசையின் மீது வைத்தார்….

காவேரி கந்தனை வெளியே அழைத்துக் கொண்டு சென்றவுடன் சுந்தரி வேகமாக சமையல் அறைக்குச் சென்று இரவு உணவு சமைக்க ஆரம்பித்தார் வேணி கூட இப்போது என்ன மா அவசரம் இன்னும் நேரம் கழித்து சமைக்கலாமே என்றால் நிறைய செய்ய வேண்டி இருக்கிறது அதனால் தான் என்று சொல்லிவிட்டு வட பாயாசம் கேசரி என்று தடபுடலாக சமைக்க ஆரம்பித்தார்……

அனைவரும் சுந்தரியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் வேலு சிரித்தார் இவ்வளவு நேரம் எவ்வளவு கத்து கத்தினால் ஆனால் இப்போது எப்படி தடைபுடலாக சமைக்கிறாள் என்றார் எழில் தனது தந்தையிடம் என்ன ப்பா  ரொம்ப சந்தோஷமா இருக்கிங்க போல  சொன்னான் பின்ன இல்லையா நான் என் சுந்தரியை கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு பிறகு அவளாக அல்லவா அவளை பார்க்கிறேன் என்றார் எழிலும் தன் தந்தையைப் பார்த்து சிரித்துவிட்டு அமைதியாக உட்கார்ந்து விட்டான்….

பிறகு கந்தன் காவேரி வந்தவுடன் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வைத்தார் காவேரி சுந்தரியை பார்த்து விட்டு முறைத்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தார் பிறகு தனது தங்கை கோதையை பார்த்து கோதை நான் என்னுடைய கடமையை முடித்து விட்டேன் நீ யார் யாருக்கு சொல்ல வேண்டும் என்று விரும்புகிறாயோ அனைவருக்கும் சொல்லிவிடு என்று சொல்லிவிட்டு சாப்பிட்டுவிட்டு எழுந்தார்…..

காவேரி எழுந்து செல்லும் நிலையில் வேணி என்று அழைத்தார் வேணியும் சிரித்த முகமாக வந்து நின்றால் நீ எதிர்பார்த்ததை நான் நடத்தி வைத்து விட்டேன் ஆனால் ஒன்று இப்பொழுதே சொல்லி விடுகிறேன் நாளை அங்கு வந்து நிற்க வேண்டும் என்று நினைக்காதீர்கள் நான் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்றும் எண்ணாதே என்று சொல்லிவிட்டு அமைதியாக அவரது அறைக்கு  சென்றுவிட்டார்.


கந்தன் நான் வருவேன் என்று வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்து சொல்லிவிட்டு அவரது அறைக்குள் சென்று விட்டார்   கந்தன் காவேரி இடம் போகும் வழியிலே இதற்கு தான் போகிறோம் சொல்லி இருக்கலாமே காவேரி என்றார் இங்கு என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா உங்களது தங்கச்சி என்ன ஆட்டம் ஆடினால் என்று உங்களுக்கு தெரியுமா என்றார் ….

என் தங்கச்சி ஆடிய ஆட்டத்தில் தானே இப்பொழுது நீ என்னை அழைத்துக் கொண்டு சென்று ஊரில் உள்ள அனைவருக்கும் சொல்லிவிட்டு வருகிறாய் என்றார் காவேரி தனது கணவனை முறைத்தார் காவேரி உன் மனசாட்சி தொட்டு சொல்லு உனக்கும் வருத்தம் இல்லை வலி இல்லை என்று என்றார் காவேரி கண்கள் கலங்கியது உன்னை அழ வைக்க வேண்டும் என்பதற்காக நான் சொல்லவில்லை காவேரி …


எனக்கு உன்னை பற்றி தெரியாதா கோதையை விட மகாவின் மீது நீயும் சுந்தரியும் தான் அதிக பாசம் வைத்திருக்கிறீர்கள் என்று தெரியும் உனக்கு மகிழை எந்த அளவிற்கு பிடிக்குமோ அதைவிட பல மடங்கு சுந்தரிக்கு மகாவை பிடிக்கும் நான் எதிலும் குறை சொல்ல மாட்டேன் என்று விட்டு தனது மனைவியின் நெற்றியில் முத்தம் வைத்தார் காவேரி தனது கணவனின் தோளில்  சாய்ந்து கொண்டார் …

பிறகு நேரமாகுதல் சரி காவேரி சீக்கிரமாக தூங்கலாம் அப்போதுதான் காலை நேரமாக எழுந்து கொள்ள முடியும் என்றார்  நான் இப்போது சொல்லிவிட்டு வந்ததை நீங்கள் காதில் வாங்க வில்லையா என்றார் காவேரி தனது கணவனை பார்த்து மூரைத்தார் நீ தானே சொல்லிவிட்டு வந்தாய் நான் இல்லையே எனது மகளின் வளைகாப்புக்கு நான் எதுவும் செய்ய மாட்டேன் என்று சொல்லவில்லையே அதை நீ செய்யக்கூடாது என்று கூட சொல்ல முடியாது என்றவுடன் காவேரி தனது கணவனை முறைத்துவிட்டு பிறகு சிரித்து விட்டு அவரது மடியில் படுத்துக் கொண்டார் ….

கந்தன் தனது மனைவியை தூங்க வைத்துவிட்டு அவரும் தூங்கிவிட்டார் பிறகு எழிலும் நிலாவும் சாப்பிட்டுவிட்டு சுந்தரியை பார்த்து சிரித்து விட்டு அவர்களது அறைக்கு சென்றார்கள் மகிழ் மகாவை மொட்டை மாடிக்கு அழைத்து சென்றவுடன் மகா மகிழ் நெஞ்சிலே அடித்தால் என்ன பண்ற அகா நீ என்றால் நான் என்னடி பண்றேன் கிட்டத்தட்ட நான் என்னுடைய எட்டு வயசுல பார்த்தது …

என்னத்த மாமா என்றால் உன்னோட அத்தை அதாவது என்னோட அம்மா சுந்தரி தனது கணவன் வேலுவிடம் இவ்வளவு உரிமையாக பேசி தான் அவர்கள் அறையில் அவர்களுடன் ஒன்றாக தூங்கிய அப்பொழுதுதான் கடைசி அப்போது எனது அம்மா எனது அப்பாவிடம் உரிமையாக சண்டை போட்டது காதலித்தது கொஞ்சியது அனைத்தையும் பார்த்திருக்கிறேன் …

ஆனால் இத்தனை வருடங்களுக்கு பிறகு இன்று தான் என்னுடைய அம்மா எனது அப்பாவின் பெயரை சொல்லி அழைத்ததையோ அல்லது அவரது சட்டையை உரிமையாக பிடித்ததையோ அவரிடம் உரிமையாக சண்டையிட்டதையோ இப்போது தான் பார்க்கிறேன் அந்த ஆனந்தத்தில் கொஞ்சம் கத்தி விசில் அடித்து விட்டேன் என்று விட்டு தனது கண்ணீரையும் துடைத்தான் ….

மகா மகிழை பார்த்து சிரித்துவிட்டு அவனது தோளில் சாய்ந்தால் பிறகு நேரம் ஆகுவதால் இருவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கி விட்டார்கள் மறுநாள் காலையும் விடிந்தது காலை 5 மணியிலிருந்து அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு வீட்டில் உள்ளவர்கள் செய்தார்கள் கோதை மணி கந்தன் மூவரும் வெளியில் வரவேற்பில் வருபவர்களை வரவேற்க நின்று கொண்டார்கள் ….

தாத்தாவும் பாட்டியும் உள்ளே வந்தவர்களை வரவேற்று உபசரித்து கொண்டிருந்தார்கள் சிறியவர்கள் அனைவரும் ஒவ்வொரு வேலையாக செய்து கொண்டு இருந்தார்கள் கோதையும் மணியும் கயலை நேரில் சென்று அழைத்தார்கள் தனது அக்கா சொன்ன பிறகு அந்த நேரத்திற்கு கிளம்பி சென்றார்கள் ஆனால் அம்பிகா கூட நீயும் அன்பு மட்டும் சென்று வாருங்கள்  என்று சொன்னார் கயல் ஒரே வார்த்தையாக மறுத்து விட்டால் …


சித்தி என்னை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் எனக்கும் மகாவுடைய வளகாப்பை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது தான் ஆனால் அம்மாவாக என்னை அழைக்காமல் நான் அந்த வீட்டிற்கு வருவதாக இல்லை என்னை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்றவுடன் கோதையும் சரி என்று சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் பேசிவிட்டு சென்றுவிட்டார்கள் பிறகு நெருங்கிய உறவினர்களும் வர ஆரம்பித்தார்கள் ….

அனைவரும் உபசரித்து அனைத்தும் ஏற்பாடுகளையும் செய்து கொண்டு இருந்தார்கள் 12 மணி ஆகியவுடன் 12:15 மணிக்கு மகாவை அழைத்துக் கொண்டு வரவேற்பரையில் உள்ள மேடையில் உட்கார வைத்தார்கள் நலங்கு வைக்க ஆரம்பித்தவுடன் ஒரு பாட்டி நேரம் ஆகிறது நலங்கு வைக்க ஆரம்பித்து விடலாமா என்று கேட்டார் வேலு வேகமாக ஓடி வந்தார் கையில் ஒரு கட்டப்பை எடுத்துக் கொண்டு வந்தார் பிறகு பின்னாடி ஒரு பத்து பதினைந்து பெண்களை தாம்பூல தட்டை தூக்கிக்கொண்டு வரச் சொல்லியும் இருந்தார் ….


அவரது வீட்டில் இருந்து அனைத்தையும் எடுத்துக் கொண்டு வந்தார்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் மகாவின் வளைகாப்பில் கலந்து கொண்டார்கள் காவேரி அமைதியாக அவர்கள் வீட்டில் உள்ள வரவேற்பு அறையில் உட்கார்ந்திருந்தார் சுந்தரியும் காவேரியுடன் தான் இருந்தார் கிளம்பும் வேளையில் வேலு வந்து சுந்தரி அருகில் நின்றார் சுந்தரி நீ வரவில்லையா என்றார் ….

நான் வரவில்லை என்றார் நேற்று அவ்வளவு சத்தம் போட்டாய் என்று கேட்டார் நான் சத்தம் போட்டிருந்தால் அதற்காக நான் வருவேன் என்று சொல்லவில்லையே என்று சொல்லிவிட்டு அமைதியாகி விட்டார் வேலு தனது அக்கா மனைவி இருவரையும் பார்த்து முறைத்துவிட்டு அவர் வாங்கி வைத்திருந்த அனைத்தையும் எடுத்துக் கொண்டு தன்னுடன் சில பெண்களையும் அழைத்துக்கொண்டு மேடை ஏறினார்….


அனைவரும் வேலுவையே பார்த்தார்கள் வேலு அமைதியாக கட்டப் பையில் இருப்பதை ஒரு தாம்பூல தட்டில் எடுத்து வைத்துவிட்டு ஒவ்வொன்றாக பிரித்து மகாவிற்கு போட்டு விட ஆரம்பித்தார் மகாவிற்கு என்று தங்கத்திலே நெத்தியில் வைக்கும் நெத்தி சுட்டி முதற்கொண்டு தோடு நெக்லஸ் ஆரம் ஒட்டியானம் கொலுசு அனைத்தும் தங்கத்திலே வாங்கி இருந்தார் அனைத்தையும் அவரால் முடிந்த அளவுக்கு போட்டு விட்டு 15 தாம்பூல தட்டி எடுத்துக்கொண்டு வந்திருந்தார் …..

அனைத்தையும் பரப்பி வைத்தார் என்னையா இது என்று கேட்டார் ஒரு பாட்டி என்னுடைய மருமகளுக்கு தாய் மாமனாக என்னால் திருமணத்தின் போது ஒன்றும் பெரிதாக செய்ய முடியவில்லை அதை இப்பொழுது நிறைவேற்றி கொள்ள விரும்புகிறேன் என்று சொல்லி அனைத்தையும் எடுத்து வைத்தார் மகா தனது மாமாவின் கையை பிடித்தால் அவரும் அவளைப் பார்த்தார் ஆனால் எதுவும் பேசவில்லை அவரும் நின்று என்ன தாயி என்று கேட்டார் ….

மகா மகிழை பார்த்தால் மகிழும் எழுந்து நின்றவுடன் இருவரும் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள் 3 உசுரம் நல்லபடியா வந்தால் போதும் தாயி  நீ என் வீட்டுக்கு குலசாமி என்று சொல்லி மகாவின் நெற்றியில் முத்தம் வைத்து விட்டு அவளது கண்ணீரையும் t துடைத்துவிட்டு இந்த மாதிரி நேரத்தில் அழுகக் கூடாது தாயி என்று சொல்லிவிட்டு தனது கண்ணை துடைத்துக் கொண்டே கீழே இறங்கினார் …

அதன் பிறகு தான் கோதை மணி இருவரும் அவர்களது சீர்வரிசையை செய்தார்கள் பிறகு முகிலன் உதிரன் என்று ஒவ்வொருவரும் அவர்களால் முடிந்ததை செய்தார்கள் மகா எழில் இடம் எதுவும் எதிர்பார்க்கவில்லை எழிலும் எதுவும் செய்யவில்லை நிலா எழில் கையை சுரண்டினால் மாமா நீ எதுவும் செய்யலையா என்று நான் எதை எப்படி செய்யணும் என்று எனக்கு தெரியும் என்று சொல்லிவிட்டு அமைதியாக இருக்கும் வேலைகளை பார்த்தான்….


வளைகாப்பும் நல்ல முறையில் நடந்து முடிந்தது அனைவரையும் சாப்பிட வைத்து அனுப்பினார்கள் பிறகு வளைகாப்பு முடிந்தது அனைத்து சொந்தங்களும் சென்றவுடன் வீட்டிலுள்ள  இளையவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு வேலையாக இருந்ததால் அதை செய்து கொண்டு இருந்தார்கள் பிறகு மகிழ் மகா இருவரும் வீட்டிற்குள் வந்தார்கள் மகா தனது பெரியம்மாவும் அத்தையும் வரவேற்பறையில் உட்கார்ந்து இருப்பதை மகா பார்த்தாள்
..

மகிழ் மகாவை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றான் முதல் படியில் காலை வைத்த மகா தனது கணவனை அழைத்துக் கொண்டு தனது பெரியம்மா அத்தை இருவரும் இருக்கும் இடத்திற்கு வந்து நின்றால் அவர்கள் இருவரும் வந்து நின்றவுடன் சுந்தரியும் காவேரியும் எழுந்து நின்றார்கள் அமைதியாக மகா இருவரது காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள் இருவரும் அமைதியாக இருந்தார்கள் …

மகா சிரித்துக்கொண்டே எழுந்து நின்றாள் காவேரியை ஒரு நிமிடம் முழுவதாக பார்த்தால் அவரது கண்கள் கலங்கி கண்ணீர் இப்போது வெளியே வருவேனா என்று இருந்தது தனது பெரியம்மாவின் கையை தனது அடி வயிற்றில் எடுத்து வைத்தால் அவள் வைத்த நொடி அவளது இரண்டு குழந்தைகளும் வேகமாக எட்டி உதைத்தது அதை உணர்ந்த காவேரி உடல் சிலிர்த்து  அடங்கியது பிறகு தனது சுந்தரி அத்தையை மகா ஒரு நிமிடம் அமைதியாக பார்த்துவிட்டு தனது கணவனை அழைத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு படி ஏறினால்…


சுந்தரி மகாவின் காதில் விழும் படியாகவே திமிரு என்று கத்தினார்  மகா திரும்பி பார்த்து சிரித்துக் கொண்டே வேண்டும் என்பவர்கள் அவர்களாக தான் எதையும் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டே மாடிப்படி ஏறிவிட்டால் இருவரும் மேலே சென்ற பிறகு சுந்தரி கையை பிடித்துக் கொண்டு காவேரி அழுதார் உனக்கு அவளது வளைகாப்பை பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லையா ….

அவளை பெறாத அம்மா டி நீ உனக்கு அப்படி ஒரு ஆசை இல்லையா என்றார் நான் எப்பொழுதும் சொன்னேன் எனக்கு ஆசையில்லை என்று ஆனால் அவளுக்காக அங்கு அத்தனை பேர் இருக்கிறார்கள் ஆனால் என்னால் உங்களை விட்டு செல்ல முடியாது என்றவுடன் காவேரி சுந்தரியை கட்டிக்கொண்டு அழுதார் பிறகு அண்ணி ஒன்றும் இல்லை என்றவுடன் காவேரி அமைதியாக ஆகிவிட்டார்….

பிறகு  காவிரி லேசாக சிரித்தார் என்னை அண்ணி சிரிப்பு என்றார் சுந்தரி  ஒன்றுமில்லை என்று விட்டு அமைதியாக அவரது அறைக்கு சென்று விட்டார் வேணி உள்ளே வந்தவள் அம்மா உங்க இரண்டு பேருக்கும் சாப்பாடு என்று எடுத்துக் கொண்டு வந்தால் சுந்தரி வேகமாக எங்களுக்கு ஒன்றும் வேண்டாம் நான் எங்கள் இருவருக்கும் சமைத்து விட்டேன் என்றார் வேணி சிரித்துக்கொண்டே எதையோ செய்யுங்க என்று சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டால் …


இருக்கும் வேலைகளை பார்க்க சென்று விட்டாள் சுந்தரியும் காவேரியும் வேணியை பார்த்து சிரித்தார்கள் காவேரி மகா மகிழை சீக்கிரம் ஏற்றுக் கொள்வாரா மகா காவேரியின் கையை தனது வயிற்றில் வைத்தது போல் ஏன் மகா சுந்தரியின் கையை தனது வயிற்றில் வைக்கவில்லை என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ….

அன்புடன்

❣️தனிமையின் காதலி❣️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *