Skip to content
Home » மகாலட்சுமி 77

மகாலட்சுமி 77

மொட்டை மாடியில் இருந்து இறங்கி வரும் மகாவையே வீட்டில் உள்ள அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள் மகா வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்துவிட்டு எழிலை பார்த்துக்கொண்டே கீழே இறங்கி வந்தால் அவள் கட்டியிருந்த புடவை மகிழ் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தது …

எழில் சொல்லாவிட்டாலும் மகா அந்த புடவையை தான் கட்டி இருப்பாள் எழில் எடுத்துக் கொடுத்த துணியை தான் இப்போது கட்டிக் கொள்ளாவிட்டாலும் எழில் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டான் என்று அவள் எண்ணுவாள் மகிழ் அவனது அறைக்குச் சென்று திரும்பவும் குளித்துவிட்டு செல்லும்பொழுது மகாவிற்கு என்று  நகை பூ அனைத்தும் எடுத்து வைத்து விட்டு சென்றிருந்தான் …

அவன் நகை பூ எல்லாமே வாங்கிக் கொண்டுதான் வந்திருந்தான் அதை அவர்கள் அறை கட்டில் மீது அவள் கண்ணில் படுமாறு எடுத்து வைத்து விட்டு சென்றிருந்தான் இப்பொழுது அதை எல்லாம் போட்டுகொண்டு பூ வைத்து கொண்டு கீழே இறங்கி வந்தால் மகிழ் எடுத்துக் கொடுத்த புடவை நகையிலும் அவள் தேவதை போல் ஜொலித்தால் என்று தான் சொல்ல வேண்டும் அந்த புடவை அவளுக்கு அவ்வளவு எடுப்பாக இருந்தது…

நிலா தான் தனது அக்காவை பார்த்து அக்கா நீ போட்டு இருக்கிற நகை  எல்லாம் டூப்ளிகேட் கல்யாணி கவரிங் கா என்று கேட்டால் மகா எழில் சிரித்தான்  மகா தனது தங்கை நிலாவையே முறைத்தால் வீட்டில் உள்ளவர்கள் கூட நிலா சொன்னவுடன் அவ்வாறு தான் எண்ணினார்கள் ஏனென்றால் அவளுக்கென்று இருக்கும் நகைகள் அனைத்தும் கீழே தான் இருக்கிறது …


அவள் இப்பொழுது மேலே வைத்திருப்பது அவளது கழுத்தில் இருக்கும் ஒரு செயின் தாலி சரடு நதான் மற்றபடி காதில் ஒரு சிறிய தோடு தான் கையில் அவள் எப்போதுமே அணிந்திருக்கும் கை செயின் இவைகள் மட்டுமே இப்போது அவள் வைத்திருக்கும் நகை அப்படி இருக்கும் பொழுது இப்பொழுது எப்படி நகை அணிந்து கொண்டு வருகிறாள் என்று எண்ணினார்கள் ….

அப்பொழுது மகா சிரித்துக்கொண்டே இதில் எதுவும் கல்யாணி கவரிங் இல்லை இவை அனைத்தும் மாமா எனக்காக வாங்கி கொடுத்தது என்று சொல்லிவிட்டு கீழே இறங்கினால் எழில் நேரம் ஆகிறது போகலாமா என்று கேட்டான்  இதை எப்பொழுது மகிழ் வாங்கி வந்து கொடுத்தான் என்று வீட்டில் உள்ள அனைவரும் எண்ணினார்கள் ஒருவேளை ஏற்கனவே வாங்கி வைத்திருப்பவனோ என்று கூட எண்ணினார்கள் …

அப்பொழுது காவேரி தான் அதான் எப்போது இருந்து காதலித்துக் கொண்டிருக்கிறார்களே எப்பொழுது வேண்டுமானாலும் அவளுக்காக என்று வாங்கி வைத்திருப்பான் என்று சொன்னார் மகாவிற்கு தனது பெரியம்மா அவ்வாறு சொன்னவுடன் வருத்தமாக இருந்தது அப்போது மகா தனது  மாமாவை வீட்டில் உள்ளவர்கள் கூட தவறாக எண்ணக்கூடாது என்று எண்ணினால்….

மாமா எனக்கு திருமணத்திற்கு முன்பு ஒரு போட்டு நகைக்கூட தனியாக எனக்கு என்று எதுவும் வாங்கிக் கொடுத்ததில்லை அனைவரின் முன்பும் வாங்கி கொடுத்தது மட்டும்தான் என்று விட்டு எழில் கையை பிடித்துக் கொண்டு வேகமாக முன்னே நடந்தால் அவளுக்கு தனது பெரியம்மா சொன்ன வார்த்தை வலித்தது எங்கே அவர் தனது மகிழ் மாமாவை தவறாக எண்ணி விடுவாரோ என்று பயந்தால் ….


அவள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் மகிழ் தனது காதலி என்ற முறையில் மகாவிற்கு என்று எதுவும் தனிப்பட்ட முறையில் இதுவரை எதுவுமே செய்ததில்லை அப்படி இருக்கும் பொழுது இவ்வளவு நகைகளை தனக்காக திருமணத்திற்கு முன்பே வாங்கிய கொடுத்தார் என்று தனது பெரியம்மா எண்ணுவது மகாவின் மனதை காயப்படுத்தியது அதனால் தான் அதற்கான விளக்கத்தையும் தனது பெரியம்மாவிடம் சொல்லிவிட்டு கீழே இறங்கினால் …..


மகா கழுத்தில் போட்டிருக்கும் நகையிலிருந்து அவள் உடுத்திருக்கும் புடவை முதற்கொண்டு நேற்றுதான் மகிழ் கடைக்கு சென்று அவசரமாக அவளுக்கு என்று தேடிப்பார்த்து வாங்கிக்கொண்டு வந்தது அத்தனை வேலைக்கு நடுவில் அப்பொழுது தான் சென்று வாங்கிக்கொண்டு வந்தான் அவன் அவனது ஆபிஸை விரிவாக்கம் செய்வதற்காக வைத்திருந்த சேமிப்பில் தான் இதையெல்லாம் வாங்கி வந்தான்….


அதிலிருந்து தான் திருவிழா செலவிற்கு என்றும் அவனால் முடிந்த பணத்தை கொடுத்தான் மீதி பணத்தை வைத்துதான் மகாவிற்கு என்று இவை அனைத்தையும் வாங்கிக் கொண்டு வந்தான் அவனுக்குமே மகா உடைய நகைகள் அனைத்தும் கீழே இருக்கிறது என்று தெரியும் அதை எடுத்துக் கொண்டு வந்து அவளை போட சொல்ல வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை அதனால் தான் புதிதாக வாங்கி கொண்டு வந்து கொடுத்தான்…..


காவேரி அவள் அவ்வாறு சொன்னவுடன் தனது வாயை கோணித்துக் காண்பித்து விட்டு அனைவரையும் அழைத்துக் கொண்டு சென்றார் எழில் ஒரு பக்கம் மகாவையும் ஒரு பக்கம் நிலாவையும் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு வந்தான் பின்னாடி தனது குடும்பத்தில் உள்ள அனைவரும் வருவதை மகிழ் தூரத்திலிருந்து பார்த்தான் பிறகு அவனது பார்வை முழுவதாக மகாவிடம் மட்டுமே இருந்தது அதை அருகில் உள்ள முத்துவும்  பார்த்து கை காண்பித்தான்…..

என்னடா என்றான் இல்லனா ரொம்ப நேரமா அண்ணியே சைட் அடிச்சிட்டு இருந்தியா அதான் என்றான் நான் சைட் அடிச்சேன் நீ வந்து பார்த்த என்று கேட்டான் பின்ன இல்லையா என்று முத்து சிரித்துக் கொண்டே சொன்னான் இருந்தாலும் பரவால்ல அண்ணா  லேட்டா வாங்கிய புடவையாக இருந்தாலும் அண்ணிக்கு சூப்பரா இருக்கு இல்ல என்றான்…

இப்ப நீங்க என்ன சார் பண்றீங்க என்று கேட்டான் மகிழ் முத்துவிடம் சாதாரணமா நல்லா இருக்காங்களா இல்லையான்னு சொல்றது அண்ணா நான் சொல்றது  அதுக்கு இதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு சரியா என்று கேட்டான் நான் எங்க டா அவளுக்கு  வாங்கி கொடுத்தேன் என்றான் நீங்க வாங்கி தரல அப்படி தானே  நேத்து நீங்க கடை கடையா அலைந்து புடவை வாங்களா அப்படி தானே அண்ணா என்று சிரித்து கொண்டே கேட்டான்…

டேய் நான் வாங்கல டா நம்புடா என்றான் நேற்று நீங்க அத்தனை வேலைக்கு நடுவுலயும் அண்ணிக்குன்னு உங்களால வாங்க முடிஞ்சுது இல்ல என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே எழில் மகா நிலா மூவரும் மகிழ் இருக்கும் இடத்திற்கு வந்தார்கள் அண்ணா  வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு என்று கேட்டான் நிலா மாமா என்னுடைய டிரஸ் எப்படி இருக்கு என்று கேட்டால் அது மகிழ் வாங்கிக் கொடுத்த துணி தான் …

நல்லா இருக்கு நிலா குட்டி என்று விட்டு சரி நிலா நீங்க பாருங்க எனக்கு வேலை இருக்கு என்று விட்டு நகர்ந்தான் அப்பொழுது எழில் நானும் வருகிறேன் என்றான் அதெல்லாம் நன்றாகத்தான் சென்று கொண்டிருக்கிறது நீ இவர்களுடனே இரு முகில் உதிரனை மட்டும் அனுப்பிவிடு என்று விட்டு மகிழ் ஒரு நிமிடம் மகாவை திரும்பிப் பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் சென்று விட்டான் நிலா தான் தனது அக்காவை வெறுப்பேற்றுவதற்காக பாத்தியா மாமா எனக்கு எடுத்துக் கொடுத்த புடவை…

நான் இந்த புடவையில் நல்லா இருக்கணும்னு சொல்லிட்டு போறாரு இது மாமா வாங்கி கொடுத்த செயின் தான் என்று கழுத்தில் இருக்கும் சிறிய டாலர் செயினை காண்பித்தாள் மகாவிற்கு சிரிப்பாக இருந்தது பிறகு தனது தங்கையை மேலிருந்து கீழாக பார்த்துவிட்டு நல்லா தான் இருக்கு என்ன மாமா நல்லா இருக்குன்னு சொல்லிட்டு போனாரு உன்ன ஒரு வார்த்தை சொன்னாரா இதுதான் உன் பிரண்டு வாங்கி கொடுத்த புடவையா…


உனக்கு மாமா எதுவும் வாங்கித் தரலையா என்று கேட்டால் எழில் அமைதியாக இருந்தான் மகா தனது தங்கையை பார்த்து முறைத்துவிட்டு நான் போட்டு இருப்பது எல்லாமே உன் மாமா வாங்கி கொடுத்தது தாண்டி இப்ப என்னடி அதுக்கு பிரச்சனை அச்சச்சோ என்றால் எதுக்குடி இப்ப கத்துற என்றால் இல்ல மாமா வாங்கி கொடுத்த துணி போட்டு இருக்கு உன் பிரண்டு கோச்சிக்க மாட்டாங்களா என்று எழிலை பார்த்துக் கொண்டே சொன்னால் …..

எழில் சிரித்தான் எதுக்கு மாமா சிரிக்கிற கோவப்படல என்று கேட்டாள்  லூசா நீ அவள் புருஷன் வாங்கி கொடுத்ததை அவள் போட்டு இருக்க அதுக்கு நான் ஏன் டி கோவிச்சுக்கணும் என்று அவளது தலையில் கொட்டி விட்டு வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு ஒரு இடத்திற்கு வந்து நின்றான் பிறகு உதிரன் முகில் இருவரையும் மகிழ் வர சொன்னதாகவும் சொன்னான்  சரிடா நாங்கள் கொஞ்ச நேரம் உங்களுடன் இருந்து விட்டு செல்கிறோம் என்றார்கள் ….

இருவரும் சரி என்று விட்டு அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள் அப்பொழுது மகா ஒரு நிமிடம் என்று சொல்லிவிட்டு எங்கோ சென்று ஒரு அரை மணி நேரம் கழித்து வந்தாள் அவள் வரும்பொழுதே மஞ்ச கலரில் வேறொரு புடவை அணிந்து கொண்டு வந்தால் வீட்டில் உள்ள அனைவரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் சுந்தரி தான் தனது இளைய மகனை இடித்தார் அவர் இடித்தவுடன் மகா இது என்ன புடவை என்று கேட்டான்…..

மஞ்சள் கலர் புடவை அது கூட உனக்கு தெரியவில்லை என்றால் சுந்தரி தான் அது எங்களுக்கும் தெரியும் சாமிக்கு ஏதாவது வேண்டுதல் வைத்திருந்தால் தானே இந்த கலர் புடவை கட்ட வேண்டும் நீ எதற்கு கட்டியிருக்கிறாய் என்று கேட்டார் மகா தனது அத்தையை பார்த்துவிட்டு பிறகு வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்துவிட்டு நானும் ஒரு வேண்டுதல் வைத்திருக்கிறேன் அதை நிறைவேற்றுவதற்கு தான் என்று சொன்னால்….


சுந்தரிக்கு அடி வயிறு கலங்கியது பிறகு என்ன வேண்டுதல் வைத்திருக்கிறாய் எதற்கு என்று கேட்டார் என்ன வேண்டுதல் என்றெல்லாம் சொல்லலாம் எதற்கு என்று எப்படி சொல்ல முடியும் சொன்னால் பலிக்காதே என்றால் சுந்தரி தனது இளைய மகன் எழிலை  பார்த்து முறைத்தார் அவன் தான் கேட்டான் சரி டி என்ன வேண்டுதல் என்றான் தீமிதிப்பதாக வேண்டி இருக்கிறேன் என்றவுடன் வீட்டில் உள்ள அனைவரும் மகாவை பார்த்து முறைத்தார்கள் ….

அதற்கு விரதம் இருக்க வேண்டுமே என்று சுந்தரி சொன்னார் அப்போதாவது அவள் தீ மிதிக்க மாட்டாள் என்ற எண்ணத்தில் அதெல்லாம் நான் விரதம்  இருந்து கொண்டு தான் இருக்கிறேன் என்றாள் மகிழுக்கு தெரியுமா என்று கேட்டார் நான் விரதம் இருக்கிறேன் என்று தெரிந்தால் மாமா விடமாட்டார் என்று எனக்கு தெரியும் மாமா வீட்டில் இல்லை என்பதால் நான் விரதம் இருந்தது மாமாவிற்கு தெரியாது …

இரவு உணவு மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதால் மாமாவுடன் சாப்பிடுவதால் மாமாவிற்கு நான் காலை மதியம் இரண்டு வேலையும் உணவு உட்கொள்ளவில்லை என்று தெரியாது என்றவுடன் இப்பொழுது சுந்தரி தனது இளைய மகனை பார்த்தார் இதுதான் நீ அவளை பார்த்துக் கொள்ளும் லட்சணமா என்பது போல் அவன் தலையை கீழே குனிந்து கொண்டான் உண்மையாகவே மகா இப்படி ஒரு விரதம் இருந்திருக்கிறாள் என்று எழிலுக்கு தெரியாது என்று தான் சொல்ல வேண்டும்….


கல்லூரி இந்த ஆண்டு முடிய போவதால் அதிலே கவனமாக இருந்ததால் மகாவை அவன் பார்க்க தவறி விட்டான் என்பது தான் உண்மை இப்பொழுது என்ன செய்வது என்று அவனுக்கு புரியவில்லை மகா இது தேவையா என்று கேட்டான் தேவை தாண்டா அப்படி என்னடி வேண்டுதல் என்று கத்தினான் எழிலை தனியாக அழைத்து இந்த குடும்பம் சீக்கிரம் ஒன்று சேர வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் அதற்குத்தான் என்றவுடன் எழில் அமைதியாகி விட்டான்…

நிலாவும் வேகமாக வந்து ஒட்டி கேட்டால் அவள் அதை கேட்டவுடன் அவளது கண்ணில் இருந்து நீர் வடிந்தது எழில் மகா இருவரும் நிலாவைப் பார்த்துவிட்டு ப்ளீஸ் நிலா என்றார்கள் நிலா தனது கண்ணீரை துடைத்து விட்டு வீட்டில் உள்ளவர்களிடம் போய் நின்று கொண்டாள் பிறகு தீ மிதிப்பவர்கள் அனைவரும் வாருங்கள் என்று கூப்பிட்டவுடன் மகா தீ மிதிக்கும் இடத்திற்கு சென்றாள் எழில் அவளுடனே இருந்தான்…


கோயில் கிணற்றில் சென்று மூன்று குடம் தண்ணீர் தன் மேல் ஊற்றிக் கொண்டு சாமி கும்பிட்டு விட்டு திருநீர் இட்டுக் கொண்டு தீமிதிக்கும் இடத்திற்கு வந்து நின்றாள் மகா தன் குடும்பம் ஒன்றாக இணை வேண்டும் என்பதற்காக தீ மிதிப்பதாக வேண்டி இருக்கிறாள் என்று மகிழுக்கு தெரிய வந்தால் மகிழ் என்ன சொல்வான் மகாவின் நிலைமை என்ன என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்…

அன்புடன்

❣️ தனிமையின் காதலி❣️

1 thought on “மகாலட்சுமி 77”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *