அத்தியாயம் 10
ஓர் ஆழ்ந்த மௌனம் நிலவியது இல்லத்தில். லவனி முகத்தில் எதையும் வெளிக்காட்ட வில்லை.
‘பணத்துக்காகவும் பிஸினஸ்காகவும் பெத்த பொண்ணைப் பத்திக் கவலைப்படாம செகண்ட் மேரேஜ் செஞ்சுக்கிட்ட அப்பா, எப்படியான மாப்பிள்ளைய பார்ப்பாருனு யோசிக்காம விட்டது உன்னோட தப்புதான். வாலண்டியரா ஏமாந்தது நீ. அவங்க மேல கோபப்பட்டு என்ன பிரயோஜனம்.?’ என அவளின் மனம் வினா எழுப்பிட, அதற்குப் பதில் அளிக்க இயலாமல் அமைதியாய் நின்றாள்.
அந்த நிசப்தத்தைக் கலைக்கும் விதமாய் ஜெயசேகரின் வலக்கரம் மகளின் இடது கன்னத்தைப் பதம் பார்த்திருந்தது.
ஏனோ காரணம் இன்றி மகிழ்ந்தனின் நினைவு வந்தது அவளிற்கு. எவனோ ஒருவன் அவளை அடிக்க முனைந்த பொழுது, சட்டென்று அதனை வாங்கிக் கொண்டவன். அவனைப் பொறுத்தவரை, அது வாங்கும் ஊதியத்திற்கான பணி.
இருந்த பொழுதும், “ஒரு பொண்ணை அடிக்கிறது நல்ல ஆண்மகனுக்கு அழகில்ல!” என அவன் சொன்ன சொற்களிற்குள் புதைந்திருந்த நாகரீகமும் பெண்களின் மீதான மதிப்பின் ஆழமும் என்னவென்று தற்போது அவளால் முழுமையாய் உணர்ந்து கொள்ள முடிந்தது.
தந்தையின் செயல் லவனியின் மனதை வெகுவாய்த் தாக்கிட, “பெத்த பொண்ணை இப்படிக் காரணம் இல்லாம அடிக்கிறது நல்ல அப்பாக்கு அழகில்ல!” என்று பிசிர் தட்டாமல் உரைத்தாள்.
அவளின் அந்த சொற்கள் ஜெயசேகரை வெகுவாய் சீண்டிட, “நான் நல்ல அப்பாவா நடந்துக்கணும்னா, அதுக்கு நீ நல்ல பொண்ணா இருக்கணும்!” எனப் பாவத்தை மகளின் பக்கம் திருப்பினார்.
“அப்ப, நான் உங்களுக்கு நல்ல பொண்ணா இல்லனு சொல்ல வர்றீங்களா?”
“ஏன், உனக்குத் தெரியாதா? அதை. நான் வேற சொல்லணுமா.?”
விழிகளில் ஈரம் படர்ந்திட, மெலிதாய்ப் புன்னகைத்தாள்.
“எஸ். ஐம் நாட் எ குட் சைல்ட். சொல்லுங்க, நல்ல பொண்ணுனா எப்படி இருக்கணும்? பேரெண்ட்ஸ் அஸ் ஃபர்ஸ்ட் டீச்சர், ரைட்? எனக்கு இதுவரை, நீங்க எதுவுமே சொல்லிக் கொடுத்தது இல்ல. இப்ப சொல்லுங்க. ஐ வில் டெஃபெனட்லி லிசன் டு வாட் யூ சே அண்ட் ஒபே யூ!” என்றவாறு அவள் தனக்கு வசதியான இருக்கையில் அமர்ந்து சாய்ந்து கைகளைக் கட்டிக் கொள்ள, மகளை கனல் பார்வைப் பார்த்தார் ஜெயசேகர்.
“என்னப்பா, எதுவும் சொல்லாம இருக்கீங்க?”
“உன்னை உன்னோட இஷ்டத்துக்கு விட்டது தப்பாப் போச்சு. அதான், இப்படி மரியாதை இல்லாம நடந்துக்குற.”
“ஓ.. என் இஷ்டத்துக்கு விட்டீங்களா.? எஸ், இதைக் கண்டிப்பா ஒத்துக்கத்தான் வேணும். ஹௌஸ் அரெஸ்ட் பண்ணல இல்ல? சோ, சந்தோஷப் பட்டுக்கணும்.”
அவர் பொறுமை இழந்து, “லவனிகா!” எனக் குரல் உயர்த்த, “நான் சொல்ல வேண்டிய எல்லாத்தையும் உங்க பிஸினஸ் வொய்ஃப் கிட்ட சொல்லிட்டேன். நீங்க அவங்கக்கிட்ட கேட்டுக்கோங்க.” என்றுவிட்டு வெளியே செல்ல முயல, எஜமானனின் பார்வையில் இல்லத்தின் கதவை மூடினர் வேலை ஆட்கள்.
அந்த நிகழ்வில் அதிர்ந்து சட்டென்று திரும்பி தந்தையை பார்த்தவள், “அப்பா, திஸ் இஸ் நாட் ரைட்!”
“எது ரைட்னு நீ எனக்குச் சொல்லித் தராத. உன்னைப் பெத்தவன் நான்!”
“பெத்தா மட்டும் போதாது!”
“ஆமா, அதுதான் நான் செஞ்ச தப்பு.”
“என்னை அந்த அளவுக்குத்தான் மனசுல நினைச்சிருக்கீங்களா அப்பா.?” என வினவியவளின் குரலில் லேசாய் வேதனை எட்டிப் பார்த்தது.
“உன்னால எனக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு என்ன பதில் சொல்லப் போற?”
“அதுக்கு நானா காரணம்? நீங்க எனக்குச் செஞ்சது, உங்களுக்கே திரும்பிடுச்சு.”
“நீ மேரேஜ் ஹால்ல இருந்து போகலேனா, இது மாதிரி ஆகி இருக்காதுல.?”
அவள் அமைதி காக்க, “பதில் சொல்லு லவனி!”
“என்ன சொல்லணும்.? நீங்க அரேஞ்ச் பண்ண பிஸினஸ் மேரேஜ்ல எனக்கு விருப்பம் இல்ல, அதுனால போனேன். விளக்கம் போதுமா.?”
“உன்னோட அந்த நடத்தையால எனக்கு எவ்வளவு லாஸ் தெரியுமா.?”
“அதுக்கு நான் என்ன செய்ய முடியும்.?”
“உன்னால நடந்தது தான் இதெல்லாம். சோ, நீதான் காம்பென்சேட் பண்ணியாகணும்.”
திடுக்கிடலுடன் பார்த்தவள், “அப்பா.?”
“உன்னால ஏற்பட்ட அவமானத்துக்கு மாப்பிள்ள வீட்டுல ஒன் குரோர் காம்பென்சேஷனா கேட்டிருக்காங்க. அதைக் கொடுக்கலேனா, என்னால தொடர்ந்து பிஸினெஸ் பண்ண முடியாது. கம்பெனியோட தெர்டி ஃபைவ் பர்சண்ட் ஷேர் அவங்கக்கிட்ட தான் இருக்கு. மாப்பிள்ளையோட சப்போர்ட்ல தான், நான் இப்ப டேரெக்டர் சீட்ல உட்கார்ந்து இருக்கேன்.
இப்ப உன்னால ரெண்டு ஃபேமிலிக்கும் நடுவுல கோல்ட் வார் ஸ்டார்ட் ஆனமாதிரி ஆகிடுச்சு. நான், டேரெக்டர் சீட்டை யாருக்கும் விட்டுக் கொடுக்க ரெடியா இல்ல. அதேமாதிரி இப்ப இருக்க ஃபினான்ஷியல் கண்டிஷன்ல, ஒன் குரோர் கொடுக்கிறது எல்லாம் முடியாத காரியம்.”
‘இப்படியும் ஒரு அப்பாவா.?’ என்ற ரீதியில் அவரைப் பார்த்தவள், “அதுக்கு.?”
“நான் மாப்பிள்ளைக்கிட்ட பேசிட்டுத்தான் வர்றேன். நீ போய் முதல்ல அவரைப் பாரு. ஸாரி சொல்லு. மேரேஜை திரும்ப நடத்துறதுக்கு எதுவும் வழி இருக்கானு யோசி!”
“ஹோ, இந்த மேரேஜ் நடந்தா உங்க பிராப்ளம் எல்லாம் சால்வ் ஆகிடும் அப்படித்தான.?”
“முழுசா சால்வ் ஆகும்னு சொல்ல முடியாது. புதுசா ஆரம்பிக்கிறதா இருந்த பிஸினஸை, ஸ்டார்ட்அப் பண்ண முடியாது. மத்ததோட இருக்க கோஆப்பரேஷனையாவது தக்க வச்சுக்கலாம்.”
“சோ, பெத்த பொண்ணை வச்சு நீங்க பிஸினஸ் பண்ணுறீங்க. குழந்தைகளை வச்சு பிச்சை எடுக்கிறவனுக்கும், பொண்ணுகளை வித்து சம்பாதிக்கிறவனுக்கும், உங்களுக்கும் பெருசா எந்த வித்தியாசமும் இல்ல.
உங்களை மாதிரி பிஸினஸ் ஆளுங்க எல்லாம், ஹைடெக் கிரிமினல்ஸ். ஸ்டேட்டஸ் பார்த்து, அக்ரிமெண்ட் போட்டு, பெருமையா கிரைம் பண்ணுறீங்க! வாட் எ டெரிபில் பர்சன்ஸ்.?”
லவனி உரைத்தவை யாவும் ஜெயசேகரின் அகங்காரத்தை வெகுவாய் தாக்கிட, “என்னை, அந்த கிரிமினல்ஸோட கம்பேர் பண்ணுறியா.? நாட்டுலயே நம்பர் ஒன் ஹாஸ்டல், ஃபாரின்ல ஹையர் ஸ்டடிஸ், பிஸினஸ் வேல்ட்ல ஃபர்ஸ்ட் பொஷிசன்ல இருக்குற ஃபேமிலில இருந்து லைஃப் பார்ட்னர்னு உனக்கு எல்லாமே பெஸ்டா கொடுத்து வளர்த்திருக்கேன். ஆனா நீ.?” என மகளின் கழுத்தைப் பற்றினார்.
“டேட் ப்ளீஸ், டோண்ட் டூ திஸ்!” என்று திலீப்பும்,
“சேகர், கம் டூ யுவர் சென்ஸ். ஸீ இஸ் யுவர் டாட்டர்.!” என வாசுகியும் அவரை தடுக்க முயல, சில நொடி கலவரத்திற்குப் பின்னர் தந்தையின் பிடியில் இருந்து விடுதலையானாள் லவனி.
“நேத்து நடந்த விஷயத்தால, அவர் கொஞ்சம் கொலாப்ஸ் ஆகிட்டாரு. அதான், இப்படி அரகெண்ட்டா நடந்துக்குறாரு. உனக்கே, அவரோட ஹெல்த் இஸ்யூஸ் தெரியும் தான? இனி, இதுமாதிரி எதுவும் செய்யாத!
ஒரு விஷயத்துல விருப்பம் இல்லேனா, அதை ஸ்டார்ட்டிங்லயே சொல்லீடு! லாஸ்ட் மினிட்ல இந்தமாதிரி டிஸ்அப்பியர் ஆகுறது, தட்ஸ் நாட் ரைட். ரெண்டு ஃபேமிலிக்குமே, நேத்து நடந்ததை ஹேண்டில் பண்ணுறது ரொம்ப டஃப் ஆகிடுச்சு.
எந்த விஜபியும், இன்விடேஷன் கொடுத்ததும் உடனே ஃபங்ஷனுக்கு வந்துதுட மாட்டாங்க. அவங்களோட அப்பாய்ன்மெண்ட்ஸ் எல்லாம் பார்த்துதான, ஓகே சொல்வாங்க. இதை நான் உனக்கு சொல்லணும்னு அவசியம் இல்ல. நீயும் ஒரு பிஸினஸை ரன் பண்ணுற தான?
இந்த மேரேஜுக்காக ரெண்டு வருசமா பிளான் பண்ணிட்டு இருந்தாரு உங்கப்பா. அவரோட எஃபெர்ட் எல்லாம், வேஸ்ட் ஆகிடுச்சு. அதோட வந்த எல்லார் முன்னாடியும், தலைக்குனிஞ்சு வேற நின்னுட்டாரு. மாப்பிள்ளை வீட்டுக்காரங்களும் அவரை ரொம்பவே பேசிட்டாங்க. அதான், அந்த கோபத்தை எல்லாம் உன்மேல காட்டிட்டாரு.
உன்னோட மேரேஜ், உன்னோட தனிப்பட்ட விசயம். நான் வற்புறுத்தல. நீ முதல்ல சம்மதம்னு சொன்னதால தான், புரோசீட் பண்ணோம். இல்லேனா, அப்பவே ஸ்டாப் பண்ணி இருப்போம். என்னைப் பொறுத்தவரை, நீ செஞ்சது ரொம்ப பெரிய தப்பு. அதுனால பிஸினஸ் மட்டும் இல்ல, ஃப்ரெண்ஸிப். டிரஸ்ட், ரிலேஷன்சிப்னு எல்லாமே அஃபெக்ட் ஆகியிருக்கு!
எங்களோடது பிஸினஸ் மேரேஜா இருக்கலாம். அதுக்காக உங்க அப்பாக்கும் எனக்கும் இடையில அஃபெக்ஷனே இல்லனு சொல்லிட முடியாது. அது இல்லாம, இவ்வளவு வருஷம் எப்படி ஃபேமிலிய ரன் பண்ண முடியும்.? திரும்பவும் இந்தமாதிரி நீ எதுவும் செஞ்சிடக் கூடாதுனு தான், இவ்வளவு தூரம் சொல்லுறேன்.
இப்ப நடந்ததை எல்லாம் ஜஸ்ட் லீவ் இட், ஓகே? போயி முதல்ல ரெஸ்ட் எடு. மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம். டோரை ஓபன் பண்ணி விடுங்க!” எனப் பணியாளர்களிற்குக் கட்டளையிட்டு விட்டு, “திலீப், டேடை ரூமுக்குக் கூட்டிட்டுப் போய் படுக்க வை. நான் டாக்டருக்குக் கால் பண்ணுறேன்!” என்றபடி நகர்ந்தார் வாசுகி.
மூடியிருந்த கதவினைக் கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மகிழ்ந்தன், அது திறக்கப்பட்டதும் நிம்மதி மூச்சுவிட்டு ஓர் அடி எடுத்து வைத்தான்.
‘நீ உள்ள போகலாமானு தெரியல. உன்னோட இடம் எதுனு புரிஞ்சு நடந்துக்க மகிழ். மேடமோட கேரெக்டருக்கு உன்கிட்ட நட்பா பழகுறாங்கனா, வீட்டுல இருக்க எல்லாரும் அப்படியே இருப்பாங்கனு சொல்ல முடியாது. அதுவும் இல்லாம, இது அவங்களோட அப்பா வீடு!’ என அவனின் மூளை எச்சரிக்க, சட்டென்று வெளியிலேயே நின்று கொண்டான்.
உள்ளே இருந்தாலும் லவனியின் நிலையும் அதுதான். உரிமையாய் எதைச் செய்திடவும் பேசிடவும் இயலவில்லை.
வாசுகிக்கும் அவரின் மகனிற்கும் தனது தந்தையை மொத்தமாய் எழுதிக் கொடுத்தது போல் இருந்தது, அவளின் சூழலில்.
முன்தினம் திருமண அரங்கில் இருந்து வெளியேறும் பொழுது தனது உணர்வுகளைப் பற்றி மட்டுமே சிந்தித்து, குடும்பத்தின் பக்கம் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழலைப் பற்றி யோசிக்காது விட்டு விட்டாள்.
“உங்களுக்கு ஆயிரம் ரூபாங்கிறது, ஹோட்டல்ல ஒருநேர சாப்பாடு. எனக்கு, ரெண்டு வாரத்துக்கான செலவு. அவருக்கு, அது எப்படியோ.?” என்று மகிழ்ந்தன் உரைத்ததின் பொருளை, உண்மையில் ஆயிரம் ரூபாய் பணத்தோடு ஒப்பிட்டு அவளால் அப்பொழுது புரிந்து கொள்ளவில்லை. ஏனெனில் அந்த ஆயிரம், லவனியைப் பொறுத்தவரை ஒரு பொருட்டே இல்லை.
தற்போது அந்த ஆயிரத்திற்குப் பதில் தனது நின்றுபோன திருமண நிகழ்வைப் பொருத்திப் பார்த்தவளிற்கு அதன் தாக்கம் யாதென புரிந்தது.
அவளிற்கு அது வேண்டா ஓர் உறவு, ஜெயசேகருக்கு தொழிலின் அடுத்தபடி பறிபோய் சமநிலை மனிதர்களின் முன்பு உண்டான அவமானம், மாப்பிள்ளையின் குடும்பத்தாரைப் பொறுத்தவரை யாதோ.? இனிதான் தெரியவரும், அவர்களின் எதிர்வினை எதுவென!
முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு, கூடத்தின் இருக்கையில் கனத்த மனதுடன் அமர்ந்தாள். சட்டென்று வெளியேறிட இயலவில்லை. உள்ளிருக்கும் தந்தையின் நிலை யாதென அறிந்து கொள்ள மனம் தவித்தது. தான் ஆடாவிட்டாலும், தன் தசை ஆடும் என்பது இதுதான் போலும்!
தந்தையின் மீது அடுக்கடுக்காய் குற்றம் சாட்டிய பொழுதும், அவரை அப்படியே விட்டுச் செல்ல உயிரணு வழிவாய் வந்த உறவு மறுத்தது.
ஜெயசேகரைப் பற்றி அறிந்து செல்வதற்காக அவள் காத்திருக்க, எஜமானியை அழைத்துச் செல்வதற்காக வெளியில் வாயிலைப் பார்த்தபடி இருந்தான் மகிழ்ந்தன்.
Super pa nice epi semmaiya pogudhu story 👌👍😍
Nice epi
💛💛💛💛💛
konjam crt than ava yosikurathu avala ninachi mattum veliya vanthuta but anga irunthu athuku mudivu pani irukanum ipo ithu oru gilty feel aeiduchi athuku en pana pora lavani