Skip to content
Home » மகிழ்ந்திரு-11

மகிழ்ந்திரு-11

அத்தியாயம் 11

ஜெயசேகருக்குச் சிகிச்சை அளிக்க வந்த மருத்துவரை, வாயிலிற்கு வந்து அழைத்துச் சென்றான் பணியாள் ஒருவன்.

அதைப் பார்த்திருந்த மகிழ்ந்தன், “ஒரு நிமிசம்.”

“நீங்க போங்க டாக்டர்!” என மருத்துவரை அனுப்பியவன், “யார் நீ.? எப்படி இங்க வந்த? வாட்ச்மேன்.” என்று காவலாளியை அழைத்தான்.

“நான் லவனிகா மேடமோட டிரைவர். வாட்ச்மேன்கிட்ட சொல்லிட்டுத்தான் வந்தேன். மேடம் என்னை வரச் சொல்லி இருந்தாங்க. அவங்க கையில ஃபோன் இல்லாததால, பேச முடியல. நான்‌ வந்திருக்கேன்னு மட்டும் சொல்லிடுறீங்களா?” என வினவிட, மகிழ்ந்தனை ஏற இறங்க பார்த்துவிட்டு சென்றான் அவன்.

இருக்கையில் அமர்ந்திருந்த லவனியிடம் உரைக்க, எழுந்து வாயிலிற்கு நேராய் வந்தாள். எனினும் வெளியே செல்லவில்லை.

நேர் எதிராய் நின்றிருந்த மகிழ்ந்தன் பட, அவளைக் கண்டதும் ஆடவனின் முகத்தில் தோன்றிய புன்னகை, பாவையிடமும் ஒட்டிக் கொண்டது.

எதுவும் பேசவோ, வேலையாளிடம் சொல்லிவிடவோ முற்படவில்லை. அமைதியாய் சென்று மீண்டும் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்‌. தானாய் ஒரு நீண்ட மூச்சு அவளிடம் இருந்து வெளியேறியது.

சற்றுமுன்னர் இருந்த மன அழுத்தமும், தந்தை மற்றும் சிற்றன்னையின் பேச்சால் உண்டான வேதனையும் சென்ற மாயம் தெரியவில்லை.

‘இப்படி நடந்திருக்க வேண்டாமே.?’ எனச் சிறிது வருத்தம் மட்டும் எஞ்சி இருந்தது‌.

உண்மையில் மகிழ்ந்தன் பெயரிற்கு ஏற்றது போல், அறிமுகம் ஆகும் மனிதர்களிற்குக் காரணமின்றி தனது இருப்பால் மட்டுமே ஏதோ ஒரு வகையில் மகிழ்ச்சியை நல்குபவனாய் இருந்தான்.

அம்மகிழ்ச்சி என்பது அவரின் துயர் தூர விலகுவதால் கிடைக்கிறது. அது, அவன் அருகில் இருப்பதால் நிகழ்கிறது, என்பதே நிஜம்.

எஜமானியின் செயலைப் பார்த்தவன், தானும் சென்று வாகனத்திலேயே அமர்ந்து கொண்டான்.

“நீ வர்ற வரைக்கும் நான் வெயிட் பண்ணுறேன்!” என உரைத்தவளிற்காக, தற்போது இவன் காத்திருக்கத் துவங்கினான்.

வெளியே வந்த மருத்துவரை எதிர்கொண்ட லவனிகா, “டாக்டர்.? அப்பாக்கு இப்ப.?” என ஜெயசேகரின் உடல்நிலையைப் பற்றி அறிய முற்பட,

“ஹை பிளட்பிரஸர்! ரெஸ்ட்லெஸ்ஸா இருக்காரு. ஏற்கனவே அவருக்கு ஹார்ட் பிராப்ளம் இருக்கு. டென்ஷன் ஆகாம பார்த்துக்கிறது நல்லது. ரொம்ப நாள் வாழணும்னா, மன அமைதி அவசியம்‌. முதல்ல அதைக் கொடுங்க அவருக்கு. மேடம்கிட்ட, நான் டீட்டெயிலா சொல்லி இருக்கேன்.” என்றவர் கிளம்பிச் செல்ல, சற்றே தெளிந்தாள்.

“நிம்மதியை எல்லாம் எங்கேயும் போயி தேட முடியாது. அதை, நீங்களே தான் ஏற்படுத்திக்கணும்!” என மகிழ்ந்தன் உரைத்தது வேறு சரியாய் அந்நேரம் ஞாபகத்திற்கு வர, மெலிதாய்ச் சிரித்துக் கொண்டாள்.

சில நொடிகளில் திலீப்பும் வாசுகியும் பேசியபடி வெளியே வந்தனர்.

“ஆன்ட்டி.?”

இருவரது கவனமும் அவள்பக்கம் திரும்ப, “காம்பென்சேஷனைப் பத்தி அப்பாவுக்கு எந்த கவலையும் வேணாம். நானே, சர்வேஷ்கிட்டப் பேசுறேன். ஒருவேள அவரை சமாதானம் செய்ய முடியலேனா, பணத்தை நான் கொடுத்துக்கிறேன்! என்னால ஆரம்பிச்ச பிரச்சனை.‌ நானே, அதை சால்வ் பண்ண பார்க்கிறேன்.” என்றுரைத்து விட்டுக் கிளம்ப, தாயும் மகனும் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்‌.

“மாம், என்ன சொல்லீட்டுப் போறா இவ. ஒன் குரோர். இவ்வளவு சாதாரணமா சொல்லுறா.?”

“அவளால முடியும்றதுனால தான, அவ்வளவு கான்ஃபிடண்டா பேசுறா? பார்க்கலாம்.”

“பட், இந்த சர்வேஷ் ஃபேமிலி ரொம்ப ஓவராத்தான் போறாங்க‌.”

“உன்னை மணமேடையில உட்கார வச்சுட்டுப் பொண்ணு ஓடிப்போனா, அப்ப தெரியும் உனக்கு.!”

வாசுகியின் முகத்தைச் சற்றே கூர்ந்து பார்த்த திலீப், “ஸாரி மாம்.” என்றிட, “இதுல ஸாரி சொல்ல என்ன இருக்கு? என்னோட ஃபர்ஸ்ட் ஹஸ்பெண்ட் இப்படித்தான் எதுவும் சொல்லாம திடீர்னு ஓடிப் போனான்‌‌. அதுக்கு அப்புறம் நான் என்னென்ன இஸ்யூஸ் எல்லாம் ஃபேஷ் பண்ணேன்னு, எனக்கு மட்டும் தான் தெரியும்.

பெயின் இஸ் தி சேம், வெதர் இட் இஸ் எ மென் ஆர் எ உமன். சோ, இந்த விஷயத்துல நான் சர்வேஷுக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன். அவளே இந்த சிச்சுவேஷனை ஹேண்டில் பண்ணட்டும். ஐ பிலீவ், ஷீ ஹேஸ் தட் எபிலிட்டி!”

“பட் மாம், நான் உங்க பையன். என்னைப் பத்தி ஒருநாள் கூட இப்படி எதுவும் சொன்னது இல்லையே.?”

“நிஜம்னு ஒன்னு இருக்கே! அவளோட வயசுல, நீ அவளை விடவும் ஸ்ட்ராங்க் பர்சனா மாறலாம். பட் நவ், லவனி இஸ் ஸ்ட்ரூலி ஸ்ட்ராங்க் அண்ட் போல்ட்.”

“ம்ம்..” என்றவன் தலையசைத்தபடி வாயிலைப் பார்க்க, அவள் வந்த வாகனம் இல்லத்தின் வெளிக்கதவைக் கடந்து சென்று கொண்டிருந்தது‌.

“டாக்டர் வந்துட்டுப் போறாரு. யாருக்கு உடம்பு சரியில்ல மேடம்.?” என மகிழ் அருகே இருந்தவளிடம் வினவ, “அப்பாக்கு ஹை பிரஸர். அதான் செக் பண்ணீட்டுப் போறாரு.”

“ஓ.. பிரஸரை நீங்க கூட்டிட்டுப் போனீங்களா? இல்ல, உங்களால கூடுச்சா.?”

அவன்பக்கம் திரும்பியவள், “அது எப்படி மேன், சிரிக்காம காமெடி பண்ணுற‌?”

“காமெடியா.? நான் சீரியஸா கேட்கிறேன். என்ன மேடம் நீங்க?”

“அப்ப, அதுக்கு நான்தான் காரணம்னு முடிவே பண்ணிட்டியா?”

“பெத்தவங்களுக்கு ஒரு பிரச்சனைனா, அது பிள்ளைகளால மட்டுமா தான் இருக்க முடியும். இல்லேனா, ஏதோ ஒரு வகையில அவங்க காரணமா இருப்பாங்க. எந்த ஒரு மனுசனையும் அவனோட இரத்தமே காயப்படுத்துற அளவுக்கு‍, வேற யாராலயும் வலியைக் கொடுத்துட முடியாது‌!”

“நீ சொல்லுறது உண்மையா பொய்யானு தெரியல. பட், அப்பாவோட இந்த நிலைமைக்கு நானும் ஒன் ஆஃப் தி ரீசன்.”

மெலிதாய்ச் சிரித்தவன் வாகனத்தை கவனமாய் இயக்கிட, “அது, என்ன ரீசன்னு கேட்க மாட்டியா.?”

“நான் வேலைக்காரன் மேடம்‌‌. என்னோட இடம் எதுனு எனக்கு நல்லாவே தெரியும்.”

“ம்ம்.. பட், ஆல்ரெடி நீ அந்த லைனைக் கிராஸ் பண்ணிட்ட.”

“அச்சச்சோ! நான் பழைய முதலாளிக்கிட்ட இருந்த மாதிரியே உங்கக்கிட்டயும் பேச ஆரம்பிச்சிட்டேன். பழக்கத்தை சட்டுனு மாத்துறது கஷ்டம் இல்லையா? நீங்க முதல்ல பார்டர் எதுனு சொல்லுங்க. அடுத்த தடவை அதைத் தாண்டாம கவனமா இருந்துக்கிறேன்.”

“எனக்கு ஒவ்வொருத்தர்க்கிட்டயும் ஒவ்வொரு மாதிரியான லைன் உண்டு. நீ, என்னோட பெட்ரூம் வாசல் வரைக்கும் வரலாம். அதுக்கு மேல நாட் அலௌவ்ட்!”

“ஒரு டிரைவருக்கு இந்த அளவுக்கு எல்லாம் இடம் கொடுக்காதீங்க மேடம். வீட்டு வாசலே போதும்.”

“எனக்காக அடி எல்லாம் வாங்கி இருக்க. சோ, அதுக்கான பிரைஸ் கொடுக்கணும்ல.? கிச்சன், ஹால் எல்லாம் யூஸ் பண்ணிக்கோ!”

“இருந்தாலும் உங்களுக்குத் தாராள மனசு மேடம்.”

அவள் சின்னதாய்ச் சிரிக்க, “அப்படியே இன்னும் கூட தாராளம் செஞ்சு, எனக்கு எவ்வளவு சம்பளம்னு சொன்னா நல்லா இருக்கும்.”

“ஹோ! நாம இதைப் பத்திப் பேசவே இல்லையோ?”

அவன் தலை அசைக்க, “டிவென்டி ஃபைவ் தௌசன் சேலரி. மத்தது எல்லாம் நான் முன்னாடியே சொல்லிட்டேன்னு நினைக்கிறேன். உன்னோட ஒர்க்கை பார்த்துட்டு, டூ மந்த்ஸ் ஆஃப்டர் சேலரியை இன்கிரீஸ் பண்ணுறேன்.”

“என்ன?” என்றவன் சட்டென்று வாகனத்தை நிறுத்திட, அவனைக் கண்டு குழம்பிய லவனி, “என்ன மேன், என்னாச்சு?”

“இருபத்தஞ்சாயிரமா சம்பளம்?”

“எஸ்! அதுக்கு ஏன் இப்படி ரியாக்ட் பண்ணுற.?”

“இல்ல, முதல்ல வேலை பார்த்த இடத்துல பதினஞ்சு ஆயிரம் தான் கொடுத்தாங்க. திடீர்னு பத்தாயிரம் அதிகமா கிடைக்கப் போகுதுனு சொன்னதும் என்ன செய்யிறதுனு தெரியல.”

“ஃபிஃப்டி தௌசனா? அதுல எப்படி மேன் மேனேஜ் பண்ணுவ.?”

“சாப்பாடு ஓனரோட வீட்டுல. கடையிலயே படுத்துப்பேன். எங்கேயாவது போகணும்னா‍, அவரோட பைக்கைத் தருவாரு. பெட்ரோலுக்கும் காசைக் கொடுத்துடுவாரு.‌ அப்புறம் என்ன தேவை மேடம்‌ எனக்கு‌? சோப்பு, தலைக்கு எண்ணெய், முடி வெட்டுறதுக்குனு மாசம் ஆயிரத்தை மட்டும் வச்சுக்கிட்டு மீதியை அம்மாக்கு அனுப்பிடுவேன். இனி பத்தாயிரம் சேர்த்து அனுப்பலாமே.?” என்றவனின் முகத்தில் இருந்து மகிழ்ச்சி, ஒரு இயல்பான மனிதனின் தேவை யாதென என்று அவளிற்கு எடுத்துரைப்பதாய் இருந்தது.

“அவ்வளவு தானா? உனக்காக வேற எதுவும் வாங்கிக்க மாட்டியா.?”

“வேற என்ன.?”

“டிரஸ்?”

“அதான் அந்த ஆயிரத்துல செலவு பண்ணது போக மிச்சம் இருக்குமே? நமக்கு எல்லாம் நூறு ரூபா டீசர்ட்டே போதும் மேடம்.‌ என்ன இந்த பேண்டுக்குத்தான் கொஞ்சம் அதிகமா செலவாகும். மானத்தைக் காப்பாத்திக்கிறதுக்காக, கூட செலவு பண்ணுறதுல தப்பு இல்லனு மனசைத் தேத்திக்குவேன்.”

அடக்க முயன்று முடியாமல் வாய்விட்டுச் சிரித்தாள் லவனிகா.

“யூ ஆர் சோ கியூட் மகிழ்!”

“ஹான், என்ன சொன்னீங்க மேடம்?”

“கியூட்.”

“அப்படினா?”

“ஏன், அதுக்கான மீனிங் தெரியாதா உனக்கு?”

“நிறைய தடவை டீவியில, வீடியோல எல்லாம் கேட்டிருக்கேன்‌. பார்த்திருக்கேன் மேடம். குழந்தைக்கு, வயசு பொண்ணுக்கு, காதலிக்கிறவங்களுக்கு இடையிலனு பல விதமா சொல்லிக்கிறாங்க. அதுனால, அதுக்குச் சரியான அர்த்தம் என்னனே தெரியல.”

“கியூட்னா, ஒரு விதமான அழகுனு அர்த்தம்.”

“இப்படி பச்சையாவா பொய் சொல்லுவீங்க‌? என் மூஞ்சியை நானும் கண்ணாடியில பார்க்கிறேன் மேடம். இதுல கியூட்டாம்!”

“ஹேய்! நீ கியூட் தான் மேன். உன்னோட இன்னசன்ஸும் திங்கிங்க்கும் பியூட்டிஃபுல்லா இருக்கு.”

“ஓ..”

“என்ன ஓ? நான் சொன்னது புரிஞ்சிச்சா.?”

“புரிஞ்சிச்சே!”

“என்ன புரிஞ்சிச்சுனு சொல்லு பார்ப்போம்.”

“நான் வெகுளியா இருக்கேன்னு சொல்லுறீங்க.”

“யா, ரைட்.”

“ஆனா, நான் வெகுளி கிடையாது மேடம்.”

அவள் கேள்வியாய்ப் பார்க்க, “என்னோட இயல்புக்கு வெகுளினு பேர் வைக்காதீங்க. தேவைப்பட்டா, எவ்வளவு ஆபத்தான காரியத்தையும் செய்யக் கூடிய ஆள் நான்! டோண்ட் ஜட்ஜ் பை புக் இட்ஸ் கவர் மேடம்.” என்றவன் வண்டியை மீண்டும் இயக்க, “ம்ம்.. டிரைவர் சார் இங்கிலீஷும் பேசுவாரா.?”

“டுவல்த் வரையும் கார்ப்பரேஷன் ஸ்கூல்ல தமிழ் மீடியத்துல படிச்ச ஆளு. இங்கிலீஷுக்கும் எனக்கும்‌ நானூறு கிலோ மீட்டர் தூரம். இதெல்லாம், ஸ்கூல்ல படிச்ச ப்ராவெர்ப் உபயம்.”

“கிரேஸி!”‌ என அவள் புன்னகைக்க, மெலிதாய்ச் சிரித்தவன் லவனியின் சொல்லில் இல்லத்தை நோக்கி விரைந்தான்.

அடுத்த ஒன்றரை மணி நேரத்தில், அளவான வேலைபாடுடன் பார்வைக்கு நிறைவைத் தரும்படியான ஓர் இல்லத்தின் முன்பு நின்றது, மகிழ்ந்தன் இயக்கி ‌வந்த வாகனம்.

“நீங்க இருக்குற வீடா மேடம்.?”

“எஸ்.” என்றவள், காவலாளியை அழைத்து இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள்.

வெளி வாயிலைக் கடந்து சென்றதும் வீட்டின் முன்பு இறங்கிக் கொண்டவள், “பானு.” எனக் குரல் கொடுத்த நான்காம் நொடி ஓடிவந்து வாயிலில் நின்றாள் பானுமதி.

6 thoughts on “மகிழ்ந்திரு-11”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *