அத்தியாயம் 13
லவனிகா வெளியே வருவதைக் கண்ட மகிழ்ந்தன் வாகனத்தை இயக்கிச் சென்று அவளின் அருகே நிறுத்தினான்.
தனக்கு மறுபுறம் இருந்த கதவை எட்டி அவளிற்காக திறந்து விட, “நானே கார்க்கிட்ட வருவேன்ல? நீ எதுக்கு வந்த.?” என்றவளின் கண்கள் ஒருமுறை அவ்விடத்தை வலம் வந்தது.
‘தனக்கு உரிமையற்ற மற்றொருவரின் இடத்தில் நுழையும் போது உண்டாகும் இயல்பான எச்சரிக்கை உணர்வு அது’ என உணர்ந்து கொண்ட ஆடவன், “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒருத்தர் வந்தாரே மேடம்? அவரோட காரை இங்க நிப்பாட்டி தான் இறங்குனாரு. வண்டியும், அதை ஓட்டுறதுக்கு நானும் இருக்கும் போது நீங்க எதுக்கு வெயில்ல அவ்வளவு தூரம் நடந்து வரணும்.?”
மெலிதாய்ப் புன்னகைத்தவள், “இது அவரோட வீடு. என்னோடது இல்ல.”
“அதுனால என்ன.? அடுத்தவங்களை எந்த விதத்துலயும் பாதிக்காத நம்மளோட சௌகரியங்கள் எல்லாமே, சரியானது தான். நாம தப்பு எதுவும் செய்யல.”
“நமக்குச் சரியா இருக்குறது எதிராளிக்கும் சரியா இருக்கணும்னு அவசியம் இல்ல. அவனோட பார்வையில அது தவறா கூட இருக்கலாம். ஏற்கனவே என்னால வந்த பிரச்சனை போதும். இனி புதுசா இங்க எதுவும் கிரியேட் ஆகுறதை நான் விரும்பல.”
மெலிதாய்ச் சிரித்தவன், “முதலாளி சொன்னா தொழிலாளி கேட்டுக்க வேண்டியது தான். உட்காருங்க மேடம்!” என்றிட இருக்கையில் ஏறி அமர்ந்தாள்.
கதவை அடைக்கச் சென்ற அவளின் கரம், “பேபி!” என்ற அழைப்பில் தானாய் நின்றிட, இருவருது கண்களும் குரல் வந்த திசையில் திரும்பியது.
மலர்ந்த முகத்துடன் வாகனத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான் பவேஷ். சர்வேஷின் தம்பி.
“நீங்க எங்க இங்க.?”
“இது என்னோட அப்பா வீடு பேபி. மறந்துட்டியா என்ன?”
முதல்நாள் லவனியும் இதையே உரைத்தது நினைவலையாய் எழும்ப, சிரிப்பை வர வைத்தது மகிழ்ந்தனிற்கு.
அவனின் நகைப்பொலியைக் கேட்டுத் திரும்பியவள், “என்ன மேன்.?”
“ஒன்னும் இல்ல மேடம்.”
“ஐ க்நோ, ஹூ ஆர் யூ!”
“அப்படியா? எங்க சொல்லுங்க பார்ப்போம், நான் எப்படிப் பட்ட ஆளுனு.”
“ஒரே வார்த்தையில சொல்லணும்னா, டிரஸ்ட்.”
“அப்ப, நான் ஒன்னும் இல்லனு சொன்னா நீங்க நம்பணும் தான.?”
கண்கள் சுருக்கி அவனைப் பார்த்தவள், “யூ ஆர் சம்திங், மேன்!” என்றிட, இருவரையும் வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான் பவேஷ். கீர்த்திவாசனும் தான். ஆனால் பார்க்கவில்லை. சற்றுத்தள்ளி நின்றிருந்தவனிற்கு, இவர்கள் பேசுவது மட்டும் நன்றாய் கேட்டது.
“யார் இது பேபி.?”
“ஃப்ரெண்ட்.” என அவளும், “டிரைவர் சார்.” என்று மகிழ்ந்தனும் ஒரே நேரத்தில் உரைக்க, மூவரது முகத்திலுமே புன்னகைப் பூக்கள்.
“ப்ரெண்டா? டிரைவரா? வேற எதுவும் ரிலேஷன்ஸிப்பா உங்களுக்கு இடையில?” எனப் பவேஷ் சற்றே ஆர்வமாய்க் கேட்டிட, “நான் சேலரி தர்றேன். அவன் என்னோட காரை டிரைவ் பண்ணுறான். எனக்கு அசிஸ்டெண்ட், பாடிகார்ட், அப்பப்ப ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர், வாட்ச்மேன்…” என்று அவள் வரிசையாய் அடுக்கினாள்.
“மேடம் ரொம்ப நேரம் ஆகுமா.?”
அவன் புறம் திரும்பியவள், “ஏன் மகிழ்?”
“காருக்குள்ளயே இருக்குறது மூச்சு முட்டுற மாதிரி இருக்கு. நீங்க எப்ப வருவீங்கனு தெரியாததால, எங்கேயும் போகாம இருந்தேன். நேரம் ஆகும்னா, சும்மா ஒரு நாலு எட்டு நடந்துட்டு வருவேன்.”
“போயிட்டு வாங்க டிரைவர் சார். மேடம் கிளம்பணும்னா உங்களுக்குக் கால் பண்ணுவாங்க!” எனப் பவேஷ் உரைக்க, லவனியிடம் தலை அசைத்துவிட்டுச் சென்றான் மகிழ்ந்தன்.
“நிஜமாவே டிரைவர் தானா பேபி?”
“டிரைவருக்கு இவ்வளவு மரியாதைக் கொடுத்துப் பேசுவீங்களா நீங்க? இல்ல, அவனை டீஸ் பண்ணுறீங்களா.?”
“ஹேய் பேபி, அது சும்மா விளையாட்டா பேசுனது. அவனுக்குமே புரிஞ்சிருக்கும். அதுனால தான் எதுவும் ரியாக்ட் பண்ணாம போறான்.”
“ஓகே. பட், ஆல்வேஸ் ரெஸ்பெட் ஹிம். அண்ட் ஒன் மோர் திங், வாங்க போங்கனு பேசுறது மரியாதையில சேராது.”
அவளை விசித்திரமாய் பார்த்த பவேஷ், “சில் பேபி! வொய் ஆர் யூ ரியாக்டிங் லைக் திஸ் டு சச் எ ஸ்மால் திங்.”
“ரெஸ்பெட் இஸ் நாட் எ ஸ்மால் திங், மிஸ்டர் பவேஷ். திஸ் இஸ் தி ரைட் ஆஃப் எவ்ரி ஹியூமன் பீயிங்.”
“பேபி, ஐ அண்டர்ஸ்டேண்ட்! ப்ளீஸ் ரிலாக்ஸ்.” என அவளை அமைதி படுத்த, “ஸாரி, கொஞ்சம் ஓவராவே ரியாக்ட் பண்ணிட்டேன். சர்வேஷ் மேல இருந்த கோபத்தை உங்கமேல காட்டிட்டேன்னு நினைக்கிறேன்.”
“அவன் மேல என்ன கோபம்?”
“கோபம்னு இல்ல, டிஸ்பிளஸர்னு சொல்லலாம்.”
“முதல்ல மட்டும், அவன் உன்கிட்ட விஷ்ஃபுல்லா நடந்துக்கிட்டானா.?”
“இல்லதான். பட், என்னைப் பார்த்ததும் எங்க போய் தொலைஞ்சனு கேட்டிருந்தாக்கூட ஐம் ஃபீல் கிரேட்ஃபுல். பட், ஹீ ஆஸ்க்ஸ் ஹூ லெட் யூ இன். தட்ஸ் ஹவ் ஹீ திங்ஸ் ஆஃப் மீ, ரைட்.?” என்றவளின் குரலில் மெலிதான வலியும் ஏமாற்றமும் படர்ந்து இருந்தது.
“ஆர் யூ சேட் அபௌட் தட்.?”
“நோ! நவ், ஐ ஃபீல் லிபரெட்டட்.”
“வாட் எல்ஸ், த்ரோ இட் அவே!”
“யா..” என அவள் மெலிதான மூச்சு ஒன்றை வெளியிட்டுப் புன்னகைக்க, “நவ், மே ஐ க்நோ ஹூ ஹீ இஸ்?”
“ஹூ..?”
“மகிழ்.”
“ஐ ஆல்ரெடி செட் இட்.”
“ஆர் யூ ஸுயர், ஹீ இஸ் ஒன்லி டிரைவர்?”
“வாட் யூ மீன் பவேஷ்?”
“இல்ல, நீ சர்வேஷ்கிட்ட பேசிட்டு வந்ததுக்கும் அந்த டிரைவர்கிட்ட பேசுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. ஐ ஃபீல் தட்.”
“யா. சர்வேஷை, இப்ப என்னோட எக்ஸ் ஃபியான்ஸினு ஒரே வேர்ட்ல அட்ரஸ் பண்ண முடியும். பட், மகிழை அப்படி முடியாது. இப்படி வேணும்னா சொல்லலாம், ஹீ இஸ் தி ஒன் ஹூ ப்ராத் மீ ஜாய். லைக், ஸ்நோ வைண்ட்.”
“ஸ்நோ வைண்ட்? இண்ட்ரெஸ்ட்டிங்!” எனப் பவேஷ் புன்னகைக்க, “எஸ், மகிழ் இஸ் மோர் இண்ட்ரெஸ்ட்டிங் பர்சென். இன் தி ரைட் வே! ஹீ இஸ் லைக் தட்.” என்றாள்.
அதற்கு மேல் அவன் எதுவும் கேட்கவில்லை. ஆனால், லவனிக்கும் மகிழிற்குமான உறவு அத்தனை எளிதானது இல்லை என்று மட்டும் உள்ளுணர்வு உரைத்தது.
“மேரேஜ் தான் நின்னுடுச்சே. நீங்க இந்நேரம் யு.எஸ்ஸுக்குக் கிளம்பி இருப்பீங்கனு நினைச்சேன்.” என இவ்வளவு நேரமும் பவேஷ் தன்னை பற்றி விசாரணை நடத்தியதன் எதிர்வினையாக வினவினாள் அவள்.
“ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் பார்த்துட்டு ஒன் வீக் கழிச்சு போகலாம்னு இருக்கேன் பேபி. நைட் ஒரு கெட் டூ கெதர் இருக்கு. ஆர் யூ கம்மிங்?”
“உங்க அப்பாக்குத் தெரிஞ்சா, என்ன ஆகும்னு யோசிச்சீங்களா.?”
“என்னை எல்லாம் எங்க வீட்டுல கழட்டிவிட்டு, பலகாலம் ஆச்சு.”
அவள் புரியாமல் பார்க்க, “எனக்கு முன்னால பிறந்தவன் ஃபர்ஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட். நான் லாஸ்ட் பெஞ்ச். எங்க அப்பாவைப் பொறுத்தவரை, ஐம் எ லாஸர். சோ..” எனத் தோளைக் குலுக்கினான்.
பள்ளிப் படிப்பு முடிந்ததும் வெளிநாட்டிற்குச் சென்ற பவேஷ், தற்போது வரை அங்குதான் வசித்து வருகிறான் என்று லவனியிடம் முன்னரே உரைத்து இருந்தனர். எப்பொழுதாவது வந்து செல்வான். அவனிற்கும் குடும்பத்திற்குமான பிணைப்பு, அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படியாய் இல்லை எனவும் அறிவாள்.
அவனை ஆழ்ந்து பார்த்தவள், “பவேஷ், கேன் யூ டெல் மீ ஒன் திங்?”
“யா பேபி!”
“வாட் இஸ் யுவர் இண்டென்சன் இன் டெல்லிங் மீ அபௌட் சர்வேஷ் தட் டே?”
“நத்திங். லைக் தட் பேபி.”
“நோ! தேர் இஸ் சம்திங்.”
“ஐ ஜெஸ்ட் வாண்ட் யூ டூ நாட் பிகெம் லைக் மீ.”
“வாட் யூ மீன்.?”
“லிசன் பேபி. அப்பாக்கு வீட்டுக்குள்ள எப்படி இருந்தாலும் பரவாயில்ல. ஆனா வெளிய அவரோட பிரஸ்டிஜ் ரொம்ப ரொம்ப முக்கியம். என்னமோ சொல்லுவாங்களே.? ம்ம்.. ஆஆ.. ஹான். கௌரவம்! அதுக்காக நீ லைஃப் லாங் ஆக்ட் பண்ணிக்கிட்டே இருக்கணும்.
இப்பக்கூட, நீ மேரேஜ் ஹால்ல இருந்து போனதைப் பத்தி ஏன் பெருசா ரியாக்ட் பண்ணலனு தெரியுமா.? பெருந்தன்மையா நடந்துக்கிட்டாருன்ற பேர் கிடைக்கும். கம்பெனியோட டேரெக்டரா இருக்குற உன்னோட அப்பாவை, ஷேர் ஹோல்டரா மட்டும் மாத்தி, சிஇஓ சீட்ல சர்வேஷை உட்கார வைக்கலாம்.
நடந்த விசயத்தால, மத்த ஷேர் ஹோல்டர்ஸும் மிஸ்டர் பூபதிக்குத்தான் சப்போர்ட் பண்ணுவாங்க. அவரோட பிஸினஸ் மூளையைப் பொறுத்த வரைக்கும், நீ ஒரு காண்டிராக்ட் மாதிரி தான். அதுல, டாட்டர் இன் லாவா ஒர்க் பண்ணப் போற. அவரோட பிஸினஸ் வேல்டை அட்மினிஸ்ட்ரேட் பண்ணுறதுக்கு ஒரு பேபியைத் தரப்போற.
அதுக்கு சேலரியா, இந்த வீட்டுல நீ இருக்கலாம். தேவையானதை சர்வண்ட்ஸ்கிட்ட ஆர்டர் பண்ணி சாப்பிடலாம். வெளிய போறதுக்கு எப்பவும் நாலு கார் ரெடியா இருக்கும். அன்லிமிடெட் ஷாப்பிங். நீ வாங்கினதை கேரி பண்ணுறதுக்கு, கூட ரெண்டு சர்வண்ட்ஸ் ஆர் பாடிகார்ட். எக்ஸட்ரா, எக்ஸட்ரா…
இந்தியா வர்ற வரைக்கும் நீ யாரு, என்னனு எதுவும் தெரியாது பேபி. சர்வேஷை மேரேஜ் செஞ்சுக்கப் போறன்ற எண்ணம் மட்டும் தான். பட், ரிசப்ஷன் ஹாலுக்கு வந்த பின்னாடிதான் தெரிஞ்சது, நீயும் என்னை மாதிரி தான்னு.
எனக்கும் அப்பா, அண்ணன் இவங்கக்கூட எல்லாம் பெருசா எந்த பாண்டிங்கும் கிடையாது. சும்மா, உன்னைச் சீண்டி பார்க்கலாம்னு நினைச்சுதான் மெசேஜ் பண்ணேன். பட், டிட்நாட் எக்ஸ்பெட் சச் ஆன் ஆக்ஷன் ஃப்ரம் யூ!
உன்னோட அப்பாக்கு, பொண்ணு எங்க போனாளோ என்ன ஆச்சோனு எல்லாம் கவலை இல்ல. அந்த டைம்ல பிஸினஸ் போச்சேன்னு தான், ரொம்ப வருத்தப்பட்டாரு.” எனச் சிரிக்க, அவளுமே புன்னகைத்தாள்.
“கொஞ்சம் கவலையா தான் இருந்தது, உன்னைப் பத்தி. அப்புறம் பானுதான் சொன்னாங்க, மேடம் சமாளிச்சுப்பாங்கனு. தென், ஐம் ரிலீவ்.”
“தேங்க்ஸ் பவேஷ். ஒருவேளை இந்த மேரேஜ் நடந்திருந்தா நான் எப்படி லைஃபை லீட் பண்ணி இருப்பேன்னு தெரியல. பட், சீக்கிரமே டிவோர்ஸுக்காக கோர்ட்ல போய் நின்னிருப்பேன்.”
“ஃப்ரீயா விடு பேபி, பார்த்துக்கலாம்.”
“ம்ம்..” எனப் பெருமூச்சு ஒன்றை வெளிவிட்டுத் தலை அசைத்தவள், “ஐ டோண்ட் வாண்ட் டூ கண்டின்யூ திஸ். சோ, ஐ நீட் டூ புட் ஆன் எண்ட் டூ இட் சூன்.”
“வாட் யூ மீன், பேபி.?”
“உங்கப்பா, இதை அப்படியே விட்டுடுவாருனு நினைக்கிறீங்களா.?”
“ஐ தாட் சோ டூ. என்ன செய்யப் போற.?”
“அவரோட இகோவை சேட்டிஸ்ஃபைவ் பண்ணிட்டா, நான் இதுல இருந்து ரிலீவ் ஆகிடலாம் இல்லையா?”
அவன் புரியாமல் பார்க்க, மகிழ்ந்தனின் எண்ணிற்கு அழைத்து அவனை வரும்படி சொல்லிவிட்டு, “பாய் பவேஷ்!” என விடை பெற்றாள்.
“பேபி, கெட் டூ கெதர்?”
“ஐ காண்ட் சே ஃபார் ஸுயர். பட், டிரையிங்.”
“தென், ஐ வில் செண்ட் யூ தி அட்ரஸ்.”
“யா.” என்றவளை, “மேடம்.” என மகிழ் அழைக்க, பவேஷிடம் கை அசைத்துவிட்டு வாகனத்தில் ஏறி அமர்ந்தாள்.
அவன் புன்னகைத்து கையை ஆட்டிட, லவனியின் வாகனம் அங்கிருந்து வெளியேறிச் சென்றது.
மெல்ல எட்டுவைத்து வந்த கீர்த்திவாசன் பவேஷின் தோளில் கை வைத்திட, திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தான்.
“இவதான், சர்வேஷுக்கு நிச்சயம் பண்ண பொண்ணா.?”
“யா மாம்ஸ்.”
“கொஞ்சம் திமிரு அதிகம்தான் போல.”
“எனக்குத் தப்பா தெரியல.”
அவனை ஆழ்ந்து பார்த்த கீர்த்தி, “டூ யூ லைக் ஹெர்?”
“மாம்ஸ், டோண்ட் கிட்டிங் ஓகே? ஐ ஹேவ் எ கேர்ள் ஃப்ரெண்ட். ஸீ இஸ் நவ் கேரியிங் மை சைல்ட்.”
“அடப்பாவி! இது எப்ப நடந்துச்சு?”
“ரீசண்டா தான், த்ரீ மந்த்ஸ்.”
“எதுவும் சொல்லல நீ?”
“நேர்ல சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன். அதுனால தான், அவளை இந்தியாக்குக் கூட்டிட்டு வரல.”
“மாமாக்குத் தெரிஞ்சா என்ன ஆகும்னு யோசிச்சியா.?”
“ஆல்ரெடி எங்களுக்குள்ள எந்த பாண்டிங்கும் இல்ல. மேரேஜ் ஃபங்ஷன்ல, ரிலேஷன்ஸ் எல்லாம் என்னைப் பத்தி கேட்பாங்களேனு தான், வரச் சொன்னாரு. வந்த வேலை முடிஞ்சது. அவ்வளவு தான்.”
“சர்வேஷ்.?”
“அவனுக்கு ஏத்த மாதிரி ஏதாவது ஒரு பிஸினஸ் மைண்ட் பொண்ணு கிடைக்கும். இல்லேனா ஷாகித்கபூர் ரோபோட் கூட ரிலேஷன்ஷிப்ல இருந்த மாதிரி ஒரு மூவி வந்துச்சே? எங்கப்பா, அதுபோல ரோபோட் ரெடி பண்ணிக் கொடுப்பாரு, அவரோட ஃபேவரெட் பெட்டுக்கு.”
“ஆனாலும், இது ரொம்ப ஓவர்டா.”
“வர்ற பொண்ணு இவங்களுக்காக எல்லாம் செய்யணும். பட், ஃபீலிங்க்ஸ் எதுவும் இருக்கக் கூடாதுனா எப்படி.? அதுக்கு எல்லாம் ரோபோட் தான் கரெக்ட்.”
கீர்த்தி சிரிக்க, பவேஷின் கைப்பேசி குறுந்தகவல் வந்ததன் அடையாளமாக ஒற்றை பீப் ஒலியுடன் அதிர்ந்து அடங்கியது.
லவனிதான் செய்தி அனுப்பி இருந்தாள், அவனின் விருந்து அழைப்பை ஏற்றுக் கொள்வதாக.
“என்னடா.?”
“பேபி, நைட் பார்ட்டிக்கு வரேன்னு சொல்லி இருக்கா.”
“அதான், மேரேஜ் இல்லனு ஆகிடுச்சு இல்ல? அவளை ஏண்டா இன்வைட் பண்ண?”
“பேபியோட வீட்டுல ஒர்க் பண்ணுற பொண்ணுக்கிட்டச் பேசும் போதுதான் தெரிஞ்சது, லவனிகா தனியா இருக்கான்னு. ஃப்ரெண்ட்ஸும் யாரும் இல்ல போல. அவளைப் பத்தி கேட்டப்ப, என்னையே பார்க்குற மாதிரி இருந்துச்சு மாம்ஸ். அதான், ஒரு ஃப்ரெண்டா இன்வைட் பண்ணேன். இன்னைக்கு ஒருநாள் மட்டும் தான? அவளுக்குமே தெரியும், நான் யூ.எஸ் போயிடுவேன்னு. நீங்க வொர்ரி பண்ணிக்காதீங்க.”
“ம்ம்..” என்றவனிற்கு முதல்நாளைய நிகழ்வுகள் நினைவில் வந்து போனது.
Super sis nice epi romba interesting ah pogudhu story 👌👍😍
💛💛💛💛
Super😍😍
Nice move..