அத்தியாயம் 16
“ஹாய் கைஸ்!” எனக் கீர்த்தி அனைவரையும் பார்த்துப் பொதுவாய்க் கையசைக்க, “எங்க போனீங்க மாம்ஸ்? கால் பண்ணாலும் எடுக்கல?” என்று விசாரித்தான் பவேஷ்.
“டிரைவிங்ல இருந்தேன்டா!” எனப் பதில் தந்தவனின் கண்கள், இயல்பாய் லவனிகாவின் மேல் பதிந்தது.
‘மாம்ஸா.? ரெண்டு பேருக்கும் இடையில என்ன ரிலேஷன்ஸிப்? பவேஷ், இது அவனோட மாம்ஸோட பிளேஸ்னு சொன்னானே? வரிசையா, ஏதாவது ஒரு பிரச்சனை வந்துட்டே இருக்கு. இதெல்லாம் எப்ப முடியும்?’ என அவள் தனக்குத்தானே கேட்டுக் கொள்ள, “பேபி, மை மாம்ஸ். கீர்த்திவாசன்!” என்று அறிமுகம் செய்து வைத்தான் பவேஷ்.
‘ஓ காட்! கே.வி டாட்டூஸ் இருக்கிற கே.வி இவனா.?’ எனச் சற்றே திகைப்புடன் பார்க்க, “ஹலோ மிஸ். க்ளாட் டூ மீட் யூ!” என்று இயல்பான புன்னகையுடன் கையை நீட்டினான் கீர்த்தி.
‘நேத்து அப்படிக் கத்துனவனா இவன்.? இல்ல, ரெண்டும் வேற வேற ஆளா.? என்மேல அவ்வளவு கோபமா இருந்தவனால, எப்படி இப்ப சிரிக்க முடியிது? ஆனாலும், கொஞ்சம் தள்ளி இருக்கிறதே பெட்டர்!’ என மகிழ்ந்தன் உள்ளே வரும்முன் உரைத்ததன் விளைவாய், தானாய் ஓர் எச்சரிக்கை உணர்வு எழுந்தது லவனிக்கு.
எனினும், அவனைத் தவிர்ப்பதற்கு வழி இருக்கவில்லை.
“ஹாய்!” எனக் அக்கரத்தைப் பற்றிக் குலுக்கினாள்.
மெலிதாய்ப் புன்னகைத்தவன், “எல்லாரும் உட்காருங்க!” என்று உரைத்து, அங்கிருந்த பணியாளர்களிற்கு குரல் தாழ்த்தி வரிசையாய் கட்டளைகளைப் பிறப்பித்து விட்டு வந்தான். பவேஷும் அவனுடனே தான், நடமாடிக் கொண்டிருந்தான்.
லவனியின் அருகே இரு இருக்கைகள் காலியாய் இருக்க, அவள் பக்கம் இருந்ததில் இயல்பாய் வந்து அமர்ந்தான் கீர்த்திவாசன். மற்றதை தனதாக்கிக் கொண்டான் பவேஷ்.
நண்பர்களுக்கு இடையேயான உரையாடல்கள் தொடர, நேரமும் நகர்ந்தது. அவள் பெரிதாய் எதையும் கண்டு கொள்ளவில்லை. ஒரு கோப்பை மதுவோடு நிறுத்திக் கொண்டாள். சில உணவு வகைகளை மட்டும் ருசி பார்த்தாள்.
“நெக்ஸ்ட் மந்த் எனக்கு மேரேஜ் கைஸ்!” என்று திடீரென பவேஷ் தனது திருமண விசயத்தைப் பகிர, அவன் பக்கம் திரும்பினாள்.
“யாரு பொண்ணு? லவ் மேரேஜா? ஒரு பொண்ணை டேட் பண்ணிக்கிட்டு இருந்தியே, என்னாச்சு?” எனச் சுற்றி இருந்தவர்களிடம் இருந்து ஒவ்வொரு வினாவாய் வர,
“லவ் மேரேஜ்னு சொல்ல முடியாது. பட், ஐ லைக் ஹெர் வெரிமச். நான் டேட் பண்ண பொண்ணையே தான், கல்யாணம் செஞ்சுக்கப் போறேன். ஷீ இஸ் ப்ரெக்னெண்ட் நவ். ஐ வாணாட் டூ கண்டின்யூ திஸ் ரிலேஷன்ஸிப் அன்டில் மை லாஸ்ட் மொமண்ட். சோ, இதை நீங்க நான் தர்ற பேச்சுலர் பார்ட்டி ஆர் மேரேஜ் பார்ட்டியாவும் எடுத்துக்கலாம்.”
“என்னடா, மேரேஜ் பார்ட்டினு சொல்லுற? அப்ப, கல்யாணம் இங்க இல்லையா.?” என்று ஒருவன் வினவ,
“இங்க செய்யலாம் தான். பட், என்னோட டேட் அதை அக்செபட் பண்ண மாட்டாரு. ஐ டோண்ட் வாண்ட் எனி அன்நெசஸ்சரி ரெசண்ட்மென்ஸ். சோ, யூஸ்லயே பண்ணலாம்னு முடிவு எடுத்துட்டேன். ஸாரி கைஸ். டாக்டர் லாங் டிராவலை அவாய்ட் பண்ண சொன்னதால, என் கேர்ள் ஃப்ரெண்டை கூட்டிட்டு வர முடியல. ஐ பிரிங் மை வொய்ஃப் ஹியர் ஆஃப்டர் தி பர்த். லெட்ஸ் மீட்.” என்றான்.
அனைவரும் தங்களது வாழ்த்தைத் தெரிவிக்க, சூழலில் மகிழ்ச்சித் தொற்றிக் கொண்டது.
கீர்த்தி மெல்ல அங்கிருந்த நகர, பவேஷும் பின் தொடர்ந்தான். லவனிக்கு இருப்பதா கிளம்புவதா என்ற குழப்பம். வந்த காரணமும் நிறைவேறாது, வீணாய் பொழுதை கடத்த அவள் விரும்பவில்லை.
‘சொல்லிவிட்டுச் செல்லலாம்!’ என பவேஷை நோக்கிச் செல்ல, இருவரது பேச்சும் அனுமதியின்றி அவள் செவியை அடைந்தது.
“மாம்ஸ், நான் என் பக்கம் இருந்து யாரையும் இன்வைட் பண்ணல. சோ, நீங்களும் அத்தை மாமாவும் கண்டிப்பா வர்றீங்க!” என்று அன்பு கட்டளை இட, “அம்மாக்கிட்ட சொல்லிட்டியா நீ.?” என சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்தான் கீர்த்தி.
“இல்ல. கிளம்புறதுக்கு முன்னாடி, மும்பை போய் அவங்களைப் பார்த்துச் சொல்லிட்டுப் போகலாம்னு இருக்கேன்.”
“ம்ம்.. அப்பா எப்படினு தெரியல. அம்மாக்கு ஓகேனா, அவங்களைக் கூட்டிட்டு வர்றேன். இல்லேனா, நான் மட்டும் வர்றேன். ஓகேவா.?”
“தேங்க்ஸ் மாம்ஸ். நாளைக்கு எதுவும் அப்பாய்ன்மெண்ட் இருக்கா உங்களுக்கு.?”
“ஏண்டா?”
“டாட்டூ போடணும்!”
“யாருக்கு.?”
“எனக்குத்தான்.”
‘சரி’ என்பது போல் தலை அசைத்து புன்னகைத்தவனின் இதழ்களில் இருந்து வெளியேறிய வெண்புகை, காற்றின் விசையால் லவனியின் முகத்தில் மோதிச் சென்றது.
அதன் வாசம் ஒவ்வாமையைக் கொடுக்க, லேசாய் இருமி தன்னைச் சரிசெய்து கொண்டாள். அவளின் சத்தத்தில் இரு ஆடவர்களும் திரும்பிட, இடக்கையால் மூக்கோடு சேர்த்து வாயையும் மூடி இருந்தாள்.
“ஸாரி!” என்ற கீர்த்தி அடுத்தநொடி சிகரெட்டை அணைத்துவிட்டு, பவேஷிடம் பார்வையால் உரைத்தான்.
“என்ன பேபி?” என்றபடி அவனருகே வர, “நான் கிளம்புறேன்.”
“வொய்?”
“இனி, எனக்கு இங்க என்ன வேலை.?”
“உனக்குத் தேவையானதைத் தெரிஞ்சிக்காம போறியே.?”
அவள் கேள்வியாய்ப் பார்க்க, “டூ மினிட்ஸ். இப்ப வந்திடுறேன்.” என்றுவிட்டுக் கைப்பேசியோடு நகர்ந்தான்.
லவனியின் கண்கள் அனிச்சையாய் கீர்த்தியின் பக்கம் திரும்பிட, ஓர் ஆழ்ந்த மௌனம் ஆட்கொண்டது அவ்விடத்தில்.
“ஸார் டிரிங்ஸ்.?” என்று பணியாளன் நான்கைந்து மது கோப்பைகள் அடுக்கிய தட்டை நீட்டிட, “மிஸ், உங்களுக்கு.?” என வினவினான் ஆடவன்.
அச்சூழலை கையாளும் முறை அறியாது அவள் ஒரு கோப்பையை எடுத்துக் கொள்ள, “எனக்குக் கூல்டிரிங் ஒரு கிளாஸ் கொண்டு வா!” என்று கட்டளையிட்டு அனுப்பினான்.
நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் வெளிப்பக்கம் நின்றபடி பார்த்திருந்தான் மகிழ்ந்தன்.
“அச்சோ! அவர் எதுவும் செஞ்சிடக் கூடாதே? மேடம் வேற தனியா இருக்கீங்க? இந்த மாப்பிள்ளையோட தம்பி எங்க போனாரு.?” என எஜமானியின் மீதான அக்கறையில் தவிப்புடன் நின்றிருந்தான்.
அடுத்த இரண்டாம் நொடி, கீர்த்தியிடம் குளிர்பானம் நிறைந்த கண்ணாடிக் கோப்பையை கொடுத்து விட்டு சென்றான் பணியாளன்.
இருவரும் எதுவும் பேசிக் கொள்ளாமல் தங்களது பானத்தை ஒவ்வொரு மிடறாய் மெல்ல மெல்ல அருந்திட, “நவ், யூ ஆர் ஃபிரீ பேபி!” என்று குரலில் குதூகலத்துடன் வந்தான் பவேஷ்.
“வாட் யூ மீன்.?”
“நீ, என் டேட்டோட ஈகோவை சேட்டிஸ்ஃபை பண்ணிட்ட. பட், மீடியாவால உன்னோட ரெப்புட்டேஷனும் பிஸினஸும் பாதிக்க வாய்ப்பிருக்கு.”
“ஐம் ஆல்ரெடி ரெடி ஃபார் தேட்!”
“எனி ஹெல்ப் பேபி.?”
“நோ நீட், ஐ வில் மேனேஜ்.”
“ம்ம்.. இட்ஸ் ஓகே, ஹௌ யூ சீ மீ. பட், ஐ ஆல்வேஸ் திங்க் ஆஃப் யூ அஸ் எ குட் ஃப்ரெண்ட். கீப் இன் டச், ஓகே.?”
அவள் ‘சரி’ என்பது போல் சம்மதமாய் தலையசைத்துப் புன்னகைக்க, கீர்த்தியின் கைபேசி ஒலி இருவரது கவனத்தையும் அவன் பக்கம் திருப்பியது.
“என்ன மாம்ஸ்.?”
“ஒரு கஸ்டமர் வந்திருக்காங்களாம். சரி, நான் போயிட்டு வர்றேன்!” என்றவன் அவளை ஒரு பார்வைப் பார்த்துவிட்டுச் செல்ல, “பேபி, மாம்ஸ் வர்ற வரைக்கும் எனக்குக் கம்பெனி கொடேன்!”
பவேஷின் நண்பர்களை ஒருமுறைத் திரும்பிப் பார்த்தவள், “இத்தனை பேர் இருக்காங்களே? நான் அவசியமா?”
“அவங்களைப் பத்தித் தெரிஞ்சிக்க புதுசா எதுவும் இல்ல. பட், நீ அப்படி இல்லையே? ஐ திங்க் இட் வுட் பி சம்வாட் இண்ட்ரெஸ்டிங் டூ டாக் டூ யூ!”
“இண்ட்ரெஸ்டிங்காவா.?” எனச் சிரித்தவள், “மிஸ்டர் கீர்த்திவாசன் யாரு? மாம்ஸ்னு கூப்பிடுறீங்க.?”
“என் ஃப்ரெண்டோட மாமா.”
புரியாமல் பார்த்தவள், “அப்ப, உங்க ரிலேஷன் இல்லையா.?”
அவன் மறுத்துத் தலையசைக்க, பவேஷின் நண்பர்களைப் பார்த்தாள்.
“அவன் வரல இன்னைக்கு.”
“ஏன்.?”
“இந்தியா பார்டர்ல இருக்கான். ஹீ இஸ் எ சோல்ஜர்.”
“ஐ டிட்நாட் எக்ஸ்பெட் திஸ்.” என்றவளின் முகத்தில் உண்மையிலேயே வியப்பு தென்பட்டது.
“நீங்க ரெண்டு பேரும் எப்படி இவ்வளவு குளோஸ் ஆனீங்க.?”
“மாம்ஸோட பேரண்ட்ஸ் இருக்கிறது மும்பைல. இவரு, இங்க சென்னையில என் ஃப்ரெண்டோட வீட்டுல தங்கி இருந்துதான் படிச்சாரு. ஸ்கூல்ல எங்களுக்கு சீனியர். அப்பப் பழக்கம் ஆனதுதான்.
டென்த் படிக்கும் போது கார் ஓட்ட டிரைப்பண்ணி ஆக்ஸிடெண்ட் ஆகி, கிரிட்டிக்கல்லான ஸ்டேஜ்ல என்னை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணாங்க. அப்பா, பில் பே பண்ணிட்டு, என்னை பார்த்துக்கிறதுக்காக சர்வெண்ட்ஸை அரேஞ்ச் பண்ணி இருந்தாரு.
அந்த டைம்ல என் ஃப்ரெண்டும் கீர்த்தி மாம்ஸும் தான் பார்த்துக்கிட்டாங்க. எனக்காக, பிளட் கொடுத்தாரு. ஒரு ஆறுமாசத்துக்கு ஸ்கூலுக்கே போகல. பப்ளிக் எக்ஸாம்ல ஃபெயில் ஆகாம பாஸ் பண்ணதே, இவரால தான். அப்பவே நாங்க குளோஸ் ஆகிட்டோம்.
உண்மையைச் சொல்லப் போனா, என் ஃப்ரெண்டை விட இவரோட தான் எனக்கு நெருக்கம் அதிகம். அவனோட பேரண்ட்ஸ்கிட்ட கூட நான் அவ்வளவு தூரம் பழகினது இல்ல. ஆனா, மாம்ஸோட பேரண்ட்ஸ் ரொம்ப அட்டாச்டா இருப்பாங்க. எனக்கு இன்னொரு ஃபேமிலி மாதிரி!
சம்டைம்ஸ் வீ நீட் சம்திங் டூ கீப் அஸ் ஃப்ரம் கெட்டிங் போர்ட், அண்ட் டூ கீப் அஸ் கோயிங், பேபி. ஐ காட் தட் ஃப்ரம் கிம்.”
இயல்பான குரலில் தான் அவன் உரைத்தான். ஆனால் அதனுள் இருக்கும் வலியை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அதை எல்லாம் தாங்கி கடந்து வந்துதானே, இந்நிலையில் நிற்கிறாள்.
வாழ்விற்கான அந்த பிடிமானத்தைத்தான், திருமண பந்தத்தில் தேடினாள். ஆனால் சர்வேஷ் அதைத் தர இயலாதவனாய் இருந்தது.
எவனோ ஒருவனாய் இருந்த மகிழ்ந்தன் ஓர் இரவில் திடீரென்று அறிமுகமாகி, தான் அவளுக்கு என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே லவனிக்கு அதைத் தந்து கொண்டிருந்தான்.
அவளின் கண்கள் வெளிப்பக்கம் வாகனங்களை நிறுத்தி இருக்கும் இடத்திற்குச் செல்ல, பாவையைப் பார்த்தபடியே நின்றிருந்தான் மகிழ்ந்தன்.
எஜமானியின் முகத்தில் இருந்த வலி அவனின் மனதை அலைக்கழிக்க, நொடியும் தாமதிக்காது உள்ளே ஓடி வந்துவிட்டான்.
திடீரென தங்களின் எதிரே வந்து நின்றவனை பவேஷ் திகைப்புடன் பார்க்க, “மேடம், என்னாச்சு.? எதுவும் பிரச்சனையா.? ஏன், முகம் ஒருமாதிரி இருக்கு.?” என வரிசையாய் வினாக்களை அடுக்கியவனிடம் இருந்து வேக மூச்சுகள் வெளிவந்தன.
மெலிதாய்ப் புன்னகைத்தவள், “எதுக்கு மேன் இப்படி ஓடி வர்ற?”
“இல்ல. என்னைப் பார்த்தீங்களே? அதான்.”
“ஐம் ஆல்ரைட். டோண்ட் ஒர்ரி!”
“நிஜமா?”
“யா!”
“எவ்வளவு குடிச்சீங்க.?”
“லிட்டில் பிட்!” என்று கைவிரல்களால் அளவைக் காட்டிப் புன்னகைத்தாள்.
“ரொம்ப வேணாம் என்ன.?”
“ஸுயர்.”
தலை அசைத்தவன் பவேஷிடம் திரும்பி, “சார், நான் இங்க உள்ளேயே ஓரமா நின்னுக்கட்டுமா.?”
“ஏன் டிரைவர் சார்.?”
“சும்மா தான்.” என்றவனின் கண்கள் லவனியை கரிசனத்துடன் நோக்கின.
“சரி போ!” என அரை மனதாய் சம்மதித்தவன், “ஜூஸ்.?”
“இல்ல சார், வேணாம்!” என்ற மகிழ், அங்கிருந்தவர்களுக்கு இடையூறு தராத வண்ணம் ஒரு பக்கமாய் சென்று நின்று கொண்டான்.
“பேபி, உண்மையைச் சொல்லு யாரு இவன்.?”
“உங்களுக்கு மிஸ்டர் கேவி மாதிரி, எனக்கு இவன்.”
“கேவி.?”
“கீர்த்திவாசன்!”
பவேஷ் நம்பாமல் பார்க்க, “கீர்த்தி வாசனை ஒன் செகண்ட் கீர்த்தியா நினைச்சுப் பாருங்களேன்.?”
“ஹேய் பேபி!”
“ஆக்வர்டா இருக்குல்ல.? எனக்கும் மகிழுக்குமான உறவுமேல விழுகிற உங்க பார்வையும் அப்படித்தான் இருக்கு.”
“சில்! ஒரு கியூரியாசிட்டில கேட்டேன். அதுக்காக இப்படியா.?”
வலிந்து புன்னகைத்தவள் அங்கிருந்து நகர்ந்து இன்னொரு கோப்பை மதுவைக் கையில் எடுக்க, “உஃப்!” என்று நீண்ட மூச்சை வெளியிட்டு ஆசுவாசம் அடைந்த பவேஷ், “மாம்ஸை ஒரு பொண்ணாவா.? ஓ காட்! பேபி, யூ ஆர் க்ரூல்!” என உரைத்துச் சிரித்துக் கொண்டான்.
Very nice epi intresting 👌👍😍
💛💛💛💛🙂🙂
Super super
Nice
Interesting sis….moving very nice
magizh ena relationship la vachi iruka therila but ava solra onu onum ava yosikura mariye nadakuthu ena tha driver ah irunthalum lavani oda kangal la vachi therinjikiran alaga