அத்தியாயம் 18
பவேஷ் தனக்கும் லவனிக்கும் இடையே நடந்த உரையாடலை பகிர்ந்திருக்க, அடக்க மாட்டாமல் சிரித்தான் கீர்த்திவாசன்.
“மாம்ஸ்.? என்ன இப்படிச் சிரிக்கிறீங்க?”
“வேற என்னடா செய்ய சொல்லுற.?”
“உங்களைப் போய் பொண்ணா.? ஐயோ, ஓ காட்! அவளால எப்படி மாம்ஸ் இந்தமாதிரி பேச முடிஞ்சிச்சு.?”
“அதை ஏண்டா என்கிட்ட கேட்கிற.?”
“நீங்கதான, அவளோட கேரெக்டருக்கு இப்படித்தான் யோசிப்பான்னு நேத்து கெஸ் பண்ணீங்க.?”
“அதுக்குனு.”
“அடப்போங்க மாம்ஸ்.”
“நான் ஒன்னே ஒன்னு தான் சொல்லுவேன் பவேஷ்.”
அவன் ஆர்வமுடன், “என்ன?” என்றிட, “ஷீ க்நோஸ் எக்ஸாட்லி ஹௌ டூ ஸ்லாப் அதர்ஸ்!” எனப் பதில் அளித்தான்.
“மாம்ஸ்! அதுக்கு நான் உங்கக்கிட்ட கேட்காமலேயே இருந்திருக்கலாம். ஆனா, எப்படி அவளைப் பத்தி இப்படி அக்யூரெட்டா கெஸ் பண்ணுறீங்க? உங்களுக்கு இடையில இன்னைக்கு முன்னாடி அறிமுகம் கூட கிடையாதே?”
“காயினுக்கு டூ சைட்ஸ் மாதிரி, மனுசனுக்கும் உண்டு பவேஷ்.”
“எஸ்! ஐ க்நோ. எனக்கே பல முகம் உண்டு.”
“நேத்து உங்க வீட்டுல வச்சு உன்கிட்ட பேசுனப்ப, நான் பார்த்தேன். ஷீ இஸ் ஸ்ட்ரைட் ஃபார்வேர்ட் பர்சன். அஸ் வெல் அஸ் எ ஜெஸ்டிஃபையர் வுமன்!”
“ம்ம். மாம்ஸ் ஒன்னு சொல்லுங்க, அவ உங்களை அப்படிச் சொன்னதுக்கு கோபம் வரலயா.?*
“இல்ல.”
“ஏன்.?”
“காரணம்னு எதுவும் இல்ல.”
“சரி, பேபியோட பேச்சை இதோட ஸ்டாப் பண்ணிக்கலாம். அத்தை உங்களை மும்பைக்கு வரச் சொல்லிக்கிட்டே இருக்காங்களாம். ஏன், போகவே மாட்டிறீங்க.?”
“வீட்டுக்குப் போனாலே கல்யாணப் பாட்டு தான்டா. அதான் போறது இல்ல.”
“எப்படினாலும் மேரேஜ் பண்ணித்தான ஆகணும். நானே செஞ்சுக்கப் போறேன். நீங்க, எனக்கு சீனியர் மாம்ஸ்.”
“என்ன அவசரம்? இன்னும் கொஞ்சம் பேட்சுலர் லைஃபை என்ஜாய் பண்ணிட்டு செஞ்சுக்கலாம்.”
“அப்படித்தான் நானும் நினைச்சேன். இருந்தாலும் தனியா இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு மாம்ஸ். கமிட்மெண்ட்ல சிக்க வேணாம்னு தான், லவ் பக்கம் போகாம டேட்டிங்கை செலக்ட் பண்ணேன்.”
“ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? டேட்டிங்கிறது கமிட்மெண்ட் இல்லையா.?”
“லவ் பண்ணிட்டா, லாஸ்ட் வரைக்கும் அந்த பர்ஷனுக்கு லாயலா இருக்கணும் மாம்ஸ். டேட்டிங்ல, செட் ஆகலேனா பிரிஞ்சிடலாம். பட், நான் சைல்டை எக்ஸ்பெட் பண்ணல.”
“சோ, குழந்தைக்காக கல்யாணமா?”
“என் அப்பா எனக்குச் செஞ்சதை, நான் என்னோட குழந்தைக்குச் செய்ய விரும்பல மாம்ஸ். ஒரு ஃபாதரா, என் ரெஸ்பான்ஸ்பிலிட்டியைக் கரெக்டா செய்யணும்னு நினைக்கிறேன்.”
“அப்ப, அந்த பொண்ணோட நிலைமை?”
“மாம்ஸ், ஒன் திங்க். ஷீ இஸ் நாட் அன் இண்டியன். அதுனால, அவ நாம யோசிக்கிற மாதிரி யோசிக்க மாட்டா. ஷீ இஸ் மை சைல்ட்ஸ் மாம். சோ, டெஃபனெட்லி ஐ லைக் ஹெர். நான் என்னைப் பத்தி எல்லாமே அவக்கிட்ட சொல்லிட்டேன். ஷீ ஆல்சோ அக்செப்டட் மீ! போதும். இதுக்கு மேல நான் எங்களுக்கு நடுவுல வரப்போற உறவை காம்ப்ளிகேட் பண்ணிக்க விரும்பல.”
“நீ நல்லா இருந்தா சரிதான்!”
“நான் நல்லாதான் இருப்பேன் மாம்ஸ். நீங்களும் உங்களைப் பத்திக் கொஞ்சம் யோசிங்க.”
“யோசிப்போம்!” என்றவன் வெளிப்பக்கம் பார்வையைத் திருப்ப, காலையிலேயே வானம் கருமேகப் பொதிகளைச் சுமந்து கொண்டு மருண்டு கிடந்தது.
தலையைக் கைகளால் தாங்கிய படி எழுந்து வந்தாள் லவனிகா.
உணவு மேஜையைத் துடைத்துக் கொண்டிருந்த மகிழ், “என்ன மேடம் முழிச்சிட்டீங்களா? தலைவலி இப்பப் பரவாயில்லயா.?”
“ம்ம், பெட்டர். நீ என்ன மேன் இந்த வேலைப் பார்க்குற.?”
“பானுமாக்கு ஹெல்ப் பண்ணுறேன் மேடம்.”
“என்னமோ பண்ணு! பானு, எனக்கு டிஃபன் எடுத்து வை. டென் மினிட்ஸ்ல வந்திடுவேன்!” என்று உரைத்துவிட்டு அறைக்குள் சென்றாள்.
முந்தைய நாளின் அதீத அழுத்தம் மற்றும் உட்கொண்ட மதுவின் காரணமாக அன்றைய தினம் தாமதமாகவே விழித்திருந்தாள் லவனிகா. மணி ஏற்கனவே பதினொன்றைக் கடந்துவிட்டது. துரித கதியில் அவள் தயாராகி வரும் பொழுது, மேலும் பதினைந்து நிமிடங்கள் கரைந்து இருந்தது.
உணவு மேஜையின் முன்பு அமர்ந்தவளிற்கு உணவைப் பரிமாறினான் மகிழ்.
“என்ன மேன், பானு எங்க.?”
“அவங்களுக்கு உடம்பு சரியில்ல போல. காலையில இருந்தே ஒருமாதிரி இருக்காங்க. ஆனா வேலை எல்லாம் செய்யிறாங்க. அதான் கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டுமேனு, நான் இதைச் செய்யிறேன்.”
“தேங்க்யூ மகிழ்.”
“சாப்பிடுங்க மேடம்! ஜுஸ் கொண்டு வர்றேன்!” என உரைத்துவிட்டு நகர்ந்தான்.
அன்றைய தினம் அவளின் நிறுவனம் பொறுப்பேற்று இருக்கும் கட்டுமான பணிகள் நிகழும் இடங்களிற்கு எல்லாம் பார்வையிட்டு விட்டு வந்தாள். நிழலாய் நொடியும் விலகாது மகிழ்ந்தனும் அவளைப் பின்பற்றினான்.
மாலை வீட்டிற்கு வந்த பொழுது, இறுக்கமான முகத்துடன் அவர்களிற்கு தேநீரைக் கொடுத்தாள் பானுமதி.
அதைக் கவனித்த லவனி, “ஹெல்த் ஓகேவா.? நான் வேணும்னா, டாக்டர்கிட்ட அப்பாய்ன்மெண்ட் வாங்கவா?”
“அச்சச்சோ! அதெல்லாம் வேணாம் மேடம். நான் நல்லாதான் இருக்கேன். ரெஸ்ட் எடுத்தா ரெண்டு நாள்ல சரியாகிடும்.”
“ஓகே, டேக் கேர்.” என்றவள் அவளது பணிகளைக் கவனிக்கச் செல்ல, சமையல் அறைக்குள் நுழைந்தான் மகிழ்.
“பானுமா, இங்க எல்லாத்தையும் நான் சுத்தம் செஞ்சிடுறேன். நீங்க ஓய்வெடுங்க போங்க!” என அவளின் வழக்கமான பணிகளில் இருந்து விலக்கு அளித்து பொறுப்பை ஏற்றுக் கொள்ள, “ஏன், இதெல்லாம் செய்யிற?” என்றாள் அவள்.
“ஒரு சின்ன உதவிதான.? இதுல என்ன இருக்கு.? ஊர்ல இருக்கும் போது வீட்டுல இந்தமாதிரி எங்கம்மாக்கும் உதவி செய்வேன். நீங்களும் அப்பப்ப மனசு வச்சு, எனக்கும் சாப்பிட ஏதாவது செஞ்சுக் கொடுங்க. என்ன.?” என்று ஒப்பந்தம் பேசிட,
“தேங்க்ஸ் மகிழா. ஆரம்பத்துல எனக்கு உன்னைப் பிடிக்கல. ஏன் இப்பவும் கூட கொஞ்சம் அப்படித்தான் இருக்கு. ஆனா, நீ கொஞ்சம் நல்லவனா இருக்க. அதுனால பிடிக்காம இருக்கிறதை மாத்திக்கலாம்னு நினைக்கிறேன்.” எனச் சற்று மனம் இறங்கி வந்தாள்.
“அடடா! எனக்காக மனசை மாத்திக்கிறீங்களா.? ரொம்ப நல்ல மனசி பானுமா நீங்க.”
“ஏய்! கிண்டலா பண்ணுற? இதைல்லாம், இந்த ஒரு தடவையோட நிறுத்திக்கோ. நான், எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன். என்னையும் அறியாம சில நேரம் சட்டுனு கோபம் வந்துடும். யோசிக்காம ஏதாவது பேசிடுவேன். அப்புறம் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக்கக்கூட முடியாது!” என்று உண்மையாய் அதேநேரம் அழுத்தமின்றி எச்சரித்தவள்,
“என்கிட்ட எப்பவும் பேச்சைக் கொஞ்சம் குறைச்சே வச்சுக்கோ! உனக்குச் சிரமம் வேணாம். நானே இந்த வேலையெல்லாம் பார்த்துக்கிறேன். இப்ப நீ போ!” என அவனை அனுப்பிவிட்டு, வேலைகளைக் கவனித்தாள்.
அன்று மட்டும் அல்ல, தொடர்ந்து வந்த நான்கைந்து தினங்களுமே பானு அப்படித்தான் இருந்தாள். உடலளவில் எந்த பிரச்சனையும் இல்லை என அவளின் நடவடிக்கையிலேயே அறிந்து கொண்டான் மகிழ்ந்தன். ஆனால் மனம்.? அதற்குள் தான் ஏதோ போராட்டம் நடக்கிறது என்று உணரத் தொடங்கியது ஆடவனின் பார்வை.
அவள் விடுத்த எச்சரிக்கையை எல்லாம், முதல் நாளே காற்றில் பறக்க விட்டு விட்டான்.
‘நீ என்ன வேண்டுமானாலும் சொல். ஆனால் நான் இப்படித்தான்!’ என்பது தான் அவனின் நிலைப்பாடாக இருந்தது.
அதன் பின்னர் பானுவின் மீதான அவனின் கவனிப்பு எல்லாம் பல மடங்காகப் பெருகியது. தனிமையான நேரங்களில் எவரேனும் ஒருவர் ஆதரவாய் ஒருகரம் நீட்டினால், அப்பொழுதின் உள்ளார்ந்த தாக்குதலால் உண்டாகும் வலி சற்று குறையும் அல்லவா.? அதைத்தான் அவளிற்குத் தர முயன்றான் மகிழ்.
காலையில் வெளிக்காவலாளி வாங்கி வைக்கும் பால் பாக்கெட்டைப் பெற்று வந்து அவளிடம் தருவதில் துவங்கி, கோலம் போடும் போது உடனிருந்து, “இங்க இப்படிப் போடலாமா.? இந்த கோலம் பெருசா இருக்கே, இவ்வளவு கஷ்டப்பட்டுப் போடணுமா.? நான் உங்களுக்கு ஒரு புது பூக்கோலம் சொல்லித் தரவா.?” என்று தொடர்ந்து
“வெங்காயம் உரிக்கணுமா? வெல்லப்பூடு, தக்காளி எதுவும்.? நான் டீ போட்டுத் தரவா.? குடிச்சு பாருங்க, நல்லா இருக்கும்.”
“பானுமா, நீங்க மாடிக்கு ஏறிப் போகாதீங்க. துவைச்ச துணி எல்லாம் நான் போய் எடுத்துட்டு வர்றேன்.”
“ஃபேன் துடைக்கணும்னா, என்கிட்ட சொல்லலாம்ல.? நீங்க ஏன் இப்படிச் சேர் மேல ஏறிக் கஷ்டப்படுறீங்க?”
“இந்த டீவியில சீரியல் எல்லாம் பார்க்க மாட்டீங்களா?”
“நாளைக்கு என்ன சமையல்? நான் போய் காய் வாங்கிட்டு வரவா.? கொடுங்க பையை நான் தூக்கிட்டு வர்றேன்!” என்று எஜமானிக்கு மட்டும் அல்லாது மற்றவளிற்குமே நிழலாய் மாறினான்.
காலையில் எழுந்த உடனேயே இரு பெண்களிடமுமே அன்றைய பணிகளுக்கான நேர அட்டவணையைக் கேட்டுக் கொள்வான். அதற்குத் தக்கபடி, முன்னரே திட்டமிட்டு வைப்பான்.
லவனியுடன் வெளியில் கிளம்பும் பொழுது, “பானுமா சாயங்காலம் நாலு மணிக்கு எல்லாம் நான் வந்திடுவேன். அதுக்கு அப்புறம் மார்க்கெட்டுக்குப் போகலாம். தனியா போகாதீங்க என்ன.?”
“கோவிலுக்கா போறீங்க? இருங்க, நானும் வர்றேன்!” என ஒவ்வொன்றிற்கும் அவளுடன் தனது இருப்பை உறுதி செய்து கொண்டே இருந்தான்.
ஆனால் இதில் ஒன்று இருந்தது. கடைகளிற்கு அவளுடன் செல்பவன், பைகளைத் தூக்கிக் கொள்ளும் பணியாளனாகவும், கோவிலிற்குச் செல்கையில் அவள் வெளியில் வரும் வரையில் வாயிலில் காவலனாகவும் மட்டுமே இருந்தான்.
ஆடவனின் நடவடிக்கைகளும் தன்னைத் தொடரும் செயல்பாடுகளும் பானுவிற்கு எவ்வித பிரச்சனையும் தரவில்லை எனினும், காரணம் இன்றி ஒருவித அச்சத்தை உண்டாக்கி இருந்தது. அது அவளுள் எச்சரிக்கை எண்ணும் விதையை தூவி, அது அவசியத்தின் பொழுது முளைவிட தயார் நிலையில் உள்ளதை உறுதி செய்து கொண்டே வந்தது.
தனது கைப்பேசிக்கு வந்த குறுஞ்செய்தியைப் பார்த்தபடியே படுக்கையில் விழுந்தாள் லவனிகா.
பவேஷ் தான் அனுப்பி இருந்தான், “நாளைக்கு நைட் மும்பைக்கு ஃப்ளைட் பேபி. அங்க ஒரு நாள் தங்கிட்டு யூ.எஸ். கிளம்புறேன்.” என.
அவனது நண்பர்களுடனான சந்திப்பு நிகழ்விற்குப் பின்னர், இருவருக்கும் இடையே நல்விதமாய் தோழமை உருவாகி இருந்தது.
“நான் நல்லவன் தான் பேபி! நம்பி, என்கூட நீ ஃப்ரெண்ட்ஸிப் வச்சுக்கலாம்!” என்று ஒவ்வொரு அடியாய் அடித்து அம்மியை நகர்த்துவது போல் அவளின் மனதையும் சற்று திசைத் திருப்பினான்.
“யாரு, நீங்க நல்லவரா.? மேரேஜ் ஆகல. ஆனா, கேர்ள் ஃப்ரெண்ட் ப்ரெக்னன்ட்டா இருக்கானு பெருமையா பார்ட்டி வேற வைக்கிறீங்க? ரொம்ப நல்லவர் தான்.” என அவள் பதிலடி கொடுக்க, “நீ மார்டனா இருக்க பேபி. பட், டிப்பிக்கல் இண்டியன் வுமன் மாதிரியே யோசிக்கிற!”
“எந்த நாடா இருந்தாலும் ஆண் பெண் உறவுல, அதிகப்படியா பாதிக்கப்படுறது பெண்கள் தான். ஏன்னா, ப்ரெக்னன்ஸின்ற விசயத்தை நாங்கதான் எக்ஸ்பீரியன்ஸ் பண்ணுறோம். நீங்க இல்ல.”
“நீ சொல்லுறதும் உண்மை தான் பேபி. பட், நான் அவளை ஏமாத்தல. சைல்டை அபார்ட் பண்ண நினைக்கல. ஒரு நல்ல லைஃபை வாழ ஆசைப்படுறேன். நல்லவனா இல்லாம போனாலும் கெட்டவனும் இல்ல. இந்த கெட்டவன் இல்லாதவனை, ஃப்ரெண்டா அக்செப்ட் பண்ணிக்கலாம்ல.?” என்று தொடர்ந்த அவர்களின் விவாதங்கள் நட்பை துளிர்விட வைத்திருந்தது.
சர்வேஷுடனான திருமண நிகழ்வு தடைபட்டதற்கு, பவேஷ் ஒரு முக்கிய காரணம் என்பதால் அவனுடனான உறவை மறுக்க மனம் வரவில்லை லவனிக்கு. அதனால் ஏற்றுக் கொண்டாள்.
“ஃபோன்ல அப்பப்ப பேசிக்கலாம் பேபி. முடிஞ்சா, என் மேரேஜுக்கு வா. உனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆனா சொல்லு. நான் கண்டிப்பா வர்றேன்!” என தங்களின் நட்பிற்கு ஒரு தொலைதூர உணர்வுடன் கூடிய வடிவத்தைக் கொடுத்தான் பவேஷ்.
“ஓகே. உங்களை செண்ட் ஆஃப் பண்ண நான் ஏர்போர்ட்டுக்கு வர்றேன்!” என்று பதில் அனுப்பியவள் கைப்பேசியைத் தள்ளி வைத்துவிட்டு தூங்குவதற்காக இமைகளை மூடினாள்.
Super sis nice epi 👍👌😍
Interesting😍
Airport la twist irukka sis….🤪
💛💛💛💛💛
interesting