அத்தியாயம்-28
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
சௌந்திரராஜன் மகளின் தோளில் கைவைத்து, “போய்… பார்த்து பேசி கூட்டிட்டு வா” என்றார்.
பாரதி ஆச்சரியமாக தந்தையை கண்டவள் அன்னையை பார்த்து மறுத்தாள்.
மணிமேகலையோ, “ஏன்டி… கட்டினா அந்த தம்பியை கட்டுவேன்னு பிடிவாதம் பிடிக்க. நாங்க ஒரே ஒரு பொண்ணை, அதுவும் நல்ல பொண்ணை பெத்தெடுத்துட்டு வேற என்ன செய்யறது. போய் கூட்டிட்டு வா. உன் வாழ்க்கையை நீயே எதிர்த்து போராடும் போது, சொந்தம் சமூகம் என்பதையும் போராடிடுவ. மனசுல இருப்பதை சொல்லி கூட்டிட்டு வா” என்று கூற, மணிமேகலையை கட்டி பிடித்து “அம்மா… அப்பா.. நான் தப்பான முடிவு எடுக்கலைனு உங்களுக்கு புரிந்துடுச்சா? உங்களுக்கு முழு சம்மதம் தானே” என்று கேட்க, இருவரும் புன்னகைத்து சம்மதம் என்பதை தெரிவிக்க, அனிதாவுக்கும் விமலாவுக்கும் அவர்கள் பேசுவது புரிந்தும் புரியாமலும் இருந்தது.
“நீ அந்த தம்பியிடம் உன் காதலை சொல்லி அழைச்சிட்டு வா. நான் சம்பந்தி கூட பேசறேன். உங்கப்பா அனிதாவிடம் காலேஜை பத்தி டிஸ்கஸன் பண்ணுவார்” என்று கூற விமலா அனிதா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். அவர்களுக்கு சரவணன் பாரதி விரும்புவதாக புரிய மகிழ்ந்தார்கள்.
“போ…கண்ணு… அந்த கிறுக்கனை தலையில் கொட்டி கூட்டிட்டு வா” என்றார் விமலா.
அனிதாவோ “அப்போ… இனி அக்கா இல்லையா… அண்ணியா?” என்று குதூகலம் ஆனாள்.
“ஏய் வாலு.. அண்ணியை விட அக்காவே கூப்பிடு. நான் உங்கண்ணாவை பார்த்து கூட்டிட்டு வர்றேன்” என்று பட்டாம்பூச்சியாக பறந்து ஓடினாள்.
அங்கே பூங்காவில் மாலை என்பதால் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
ஒரு பந்து வந்து சரவணன் காலடியில் சேர, அதை எடுத்து நிமிர முயன்றவன் கண்ணில் அவளது பாதம். பாரதிக்கு தாமரை பாதம். அவளது பாதங்கள் கூட அழகாக காட்சியளிக்கும். பெரும்பாலும் சரவணன் பாரதி காலை பார்த்து தான் பேசுவான்.
அதனால் அந்த கால் அவன் முகம் ஏறிடாமல் பாரதி வந்திருப்பதை உணர்த்திவிட்டது.
பந்தை விளையாடும் குழந்தை நோக்கி வீசியவன், அவளை காணாமல் திரும்ப பார்க்க, பாரதியும் எப்படி பேச்சை துவங்குவதென்று கையை பிசைந்தவள் கோபமாய் ஆரம்பித்தாள்.
“நான் உங்களுக்கு ஒரு லட்சம் தந்தேன். இதென்ன தவணை முறையில், இப்ப மூவாயிரம். அதுக்கு பிறகு அடுத்த முறை 35 ஆயிரம், அதுக்கு அடுத்த டெர்ம்ல 35 ஆயிரம் தருவதா சொல்லி விட்டிருக்கிங்க. எனக்கு அதெல்லாம் தெரியாது. எனக்கு முழு பணமா தான் வேண்டும்.” என்றாள்.
அவள் கேட்டதை செவியில் ஏற்காதவன் போல “அனிதா அம்மா எங்க? வரச்சொல்லு போகணும். என்னால மொத்தமா ஒரு லட்சத்தை புரட்ட முடியாது. அதான் மூன்று தவணையா தர பிளான். சும்மா ஏதாவது சொல்லி பணத்தை என்னிடமே தர்றாதிங்க.
நல்லா பழகினவங்களே பத்து பைசா தரமாட்டாங்க. நீங்க கொஞ்ச நாள் பழகியதும் லட்ச ரூபாயை தூக்கி தர்றிங்க.” என்றான். அவனுக்கு நன்றாக தெரியும் பாரதியாக பணத்தை கேட்க மாட்டாளென்று.
“ஏன் கொஞ்ச நாள் பழகிய ஒருத்தி மனசை தந்தா என்ன?” என்றாள் மனதை திறந்தவளாக.
”ம்ம். என்ன?” என்று திடுக்கிட, “கொஞ்ச நாள் பழகின ஒருத்தி மனசார பணத்தை தந்தா என்னனு கேட்டேன்” என்று மாற்றிட, சரவணன் திடுக்கிட்டு திகைத்து ‘இல்லை இப்படி தான் முதல்லயும் சொல்லிருப்பா. நான் தான் கூறுக்கெட்டு’ என்றவன் “சரிங்க… அவசரத்துக்கு தந்திங்க. என்னால முடியறப்ப தர்றேன். இதுல தப்பில்லையே. பணம் விஷயத்தில நல்லா இருக்கறவங்களே பிரியறாங்க. அதான்… அம்மா அனிதா ஏன் வரலை. நான் கிளம்பணும்ங்க” என்று எழவும், “நாம பேசிட்டு ஒரு முடிவுக்கு வந்து போனா தான் உண்டு. அவங்களா இப்ப கீழ இறங்கி வரமாட்டாங்க” என்றாள் மெதுவாக.
பாரதி வந்ததிலிருந்து மார்க்கமாய் பார்ப்பதும் பேசுவதும் சரவணனின் மூளைக்கு எட்டுவதற்கு தாமதமாக, அவள் காதலோடு பார்ப்பதை கூட தன் மனபிரம்மையா? தன்னை எல்லாம்… ஒருத்தி ரசிப்பாளா?’ என்று தான் நினைத்து கொண்டான்.
அந்த விஷயமும் பாரதிக்கு தாமதமாக புரிய “நாம என்ன பேசணும்? என்ன முடிவெடுக்கணும்னு கேட்க மாட்டிங்களா சரவணா?” என்று விளௌயாட்டை மூட்டை கட்டி தவிப்பாய் கேட்டாள்.
பாரதிக்கு பள்ளி கல்லூரியில் கூட காதல் கடிதம் முதல் நிறைய பிரப்போஸல் வந்தது உண்டு. அவளாக மனதை திறந்து காட்டுவது இதுவே முதல் முறை என்பதால் மிகவும் தயங்கினாள்.
“என்ன பேசணும்? என்ன முடிவு?” என்றவன் அவனாக கேட்கவும் யோசித்தான். இவன் கேட்டு பேச்சு அதுவல்ல என்றால் இவன் தாங்கிக்கொள்வானா?
“நம்ம காதல் விஷயம். அதுக்கான முடிவு.” என்று தெளிவாய் எடுத்து கூற சரவணன் விளுக்கென பார்த்தான்.
“உ…உ…உங்க மனசுல நா… நான் இருக்கேன் தானே?” என்று பயத்துடன் கேட்டுவிட்டாள்.
சரவணனோ சுற்றிமுற்றி குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களின் பெற்றோர் மேற்பார்வையில்…
இதில் சூரியன் மறையும் நேரம் அதனால் செவ்வானமாக காட்சியளித்தது.
வார்த்தைகள் தடுமாற்றம் பெற்று, பேசுவதற்கு நா எழாமல் நின்றவனிடம், “சொல்லுங்க சரவணா. உங்க மனசுல நான் இருக்கேன் தானே?” என்று கலக்கமாய் கேட்டதும், சரவணன் மறுபுறம் திரும்பி, “யார் மனசுல யார் இருந்தா என்னவாகப் போகுது. ஆசைப்பட ஒரு தகுதி வேணும். அந்த தகுதி இல்லைன்னா… யார் மேலயும் ஆசைப்பட கூடாது. அதைமீறி ஆசைப்பட்டா… மனசுக்குள்ளயே தான் பூட்டி வைக்க முடியும்.” என்று பதில் தந்தான்.
பாரதி கன்னத்தில் கண்ணீர் வழிய, “பாரதி வாட்ஸ் ஹாப்பனிங். ஒய் ஆர் யூ க்ரையிங்” என்ற குரலில் சரவணன் பாரதியை காண அவளோ “ஆனந்த கண்ணீர்… ஐ மீன் ஹாப்பி டியர்ஸ்” என்றாள்.
‘ஆனந்த கண்ணீரா? என்று சரவணன் குழப்பமாய் காண, “ஓகே கேரியான்’ என்று அந்த பெண் பேசி சென்றிட, சரவணன் பாரதியை கண்டு “இப்ப ஏங்க அழுவறிங்க. தயவு செய்து என் எதிர்ல அழாதிங்க. நெஞ்செல்லாம் ரணமா போகுது.” என்று துடைப்பதற்கு கை சென்று இழுத்துக் கொண்டான்.
அவன் மனதில் இவளும் உண்டென்றதும், “நான் உன்னை விரும்பறேன் சரவணா” என்று வெளிப்படையாக உரைத்திடவும், இம்முறை அவன் கண்ணில் நீர் கோர்த்து வழிய முற்பட, அவசரமாய் மற்றவர் பார்க்கும் முன் பாரதி துடைக்க, பின்னகர்ந்தான்.
“நீ என் கண்ணீரை துடைக்கலாமானு யோசிக்கற. எனக்கு அந்த யோசனை கூட இல்லை சரவணா. என்னால உனக்கு கண்ணீரே வரக்கூடாதுன்னு நினைக்கறேன்.
சப்போஸ்… நான் காதலிப்பதுல உனக்கு பிடிக்கலைன்னா சொல்லு. நான் தொந்தரவு பண்ண மாட்டேன். மேல போய் ஆன்ட்டியையும் அனிதாவையும் அனுப்பிடறேன்.” என்று தன் காதல் ஏதேனும் தவறாக கருதிவிடுவானோ என்று அஞ்சி கூற, “பிடிக்கலைன்னு நான் என்னைக்கு சொன்னேன். நான் உனக்கு ஏத்தவன் இல்லை பாரதி. உங்க ஆபிஸ்ல, உன்னை போலவே வேலை செய்யறவர் தான் உனக்கு மேட்சா இருப்பாங்க. நான்.. நானெல்லாம்…?” என்றான் வார்த்தையை விழுங்கி.
பாரதியோ ”அதெல்லாம் ஆபிஸ்லயிருந்தும் வீடு தேடி வந்து காதலிப்பதா, அவங்க அப்பா அம்மாவோட வந்து நின்னாச்சு. அன்னிக்கு தான் அப்பா அம்மாவிடம் உங்களை காதலிப்பதா சொல்லிட்டேன்.” என்றாள்.
சரவணனுக்கு பகீரென்றது. அவள் பெற்றோர் அதற்கு என்ன பதிலுரைத்திருப்பார்? ஏற்கனவே மணிமேகலை வந்த போது அம்மா என்னையும் பாரதியும் இணைத்து பேச, தான் அப்படி எல்லாம் இல்லை என்றோமே. இன்று இவள் காதலிப்பதாக சொல்லியிருக்க ஏதாவது பிரச்சனை வெடித்திருக்குமே?
“குப்பை அள்ளற என்னை மாதிரி ஒருத்தனை லவ் பண்ணறேன்னு சொன்னிங்களா? உங்க வீட்ல மறுத்திருப்பாங்க. ஏங்க… திரும்பவும் வீட்டை விட்டு வர்றேன் மட்டும் சொல்லாதிங்க. ஒரு காதல் கல்யாணம் முழுமையா வெற்றி பெறுதுன்னா, அவங்க அம்மா அப்பா மனபூர்வமா வாழ்த்தி, கல்யாணம் பண்ணி வைக்கிறதுல மட்டும் தான் முழுமை இருக்கு” என்றான். பாரதி வீட்டை விட்டு வந்து தனியாக மீண்டும் கஷ்டப்படுவானேன். அதுவும் இவனால்….
“சரவணா… நான் சொன்ன சம்பவம் நடந்து பல நாள் ஆகுது. எங்கப்பா அம்மா இரண்டு பேருமே என் காதலுக்கு முழு மனதா சம்மதிச்சிட்டாங்க. உங்களிடம் என் விருப்பத்தை சொல்லி கூப்பிட்டுட்டு வர சொன்னாங்க. நீங்க மட்டும் தான் இப்ப பதில் சொல்லணும். என் காதலை ஏத்துப்பிங்களா? மறுப்பிங்களா? என்னை பிடிக்கலைன்னா கூட பிடிக்கலைன்ன்ன்ன்” என்று கூறியவளின் வாயை பொத்தினான். உதட்டில் விரல்படவும் வேகமாக எடுக்கவும் செய்தான்.
அவளை பார்க்க இயலாது அங்கிருந்த மண்ணை குனிந்து பார்வையிட்டான்.
சற்று அமைதி நிலவ, நேரமாகின்றதென்று குழந்தைகளை அவரவர் பெற்றவர் அழைத்தும் சென்றிருக்க, ஒருசிலரே அங்கு இருந்தனர்.
“உன்னை பிடிக்கலைன்னு சொன்னா நான் முட்டாளா இருக்கணும் பாரதி. அதோட உன்னை எனக்கு..எனக்கு… ரொம்ப ரொம்ப பிடிக்கும். மத்தவங்க உன்னை எப்படி பார்க்களாங்களோ, எனக்கு தெரியாது. குப்பையில கிடைச்ச பொக்கிஷம் நீ. உன்னை நான் ஒரு தேவதையா நினைக்கறேன்.
எதையும் தாங்கி போராடி வெளிய வந்து, அனிதாவுக்கு நீ சப்போர்ட் பண்ணி பேசறப்ப, உன்னை மாதிரி ஒருத்தி என் கூடவே இருக்கணும்னு ஆசை வந்துச்சு.
உன்னை மாதிரி… ஏன் சொன்னேன்னா.. நான் உனக்கு தகுதியானவன் இல்லை என்றதால தான்.
ஆனா நீயே என் கூட இருந்தா நல்லாயிருக்கும்னு எப்ப மனசுக்கு தோனுச்சோ, தெரியலை… ஆனா அதுலயிருந்து, அந்த நாளிலிருந்து நானும் உன்னை விரும்பறேன் பாரதி. அப்படி விரும்பற என்னிடம் இப்படி கேட்கலாமா?” என்று கேட்டவனிடம் அவன் கரத்தை பிடித்துக் கொண்டாள்.
பாரதியின் மிருதுவான கைகள் சரவணனை தீண்ட, அவனோ மனதில் பயபந்து உருள, சுற்றி முற்றி பார்வையிட்டான்.
“எந்திரி… அப்பா அம்மாவிடம் சொல்லலாம் வீட்டுக்கு போகலாம்.” என்று கூப்பிட்டாள்.
அவள் நடையை பின் தொடர்ந்தவனோ, “பாரதி… பாரதி… பயமாயிருக்கு பாரதி. உன்னிடம் ஒரு பேச்சுக்கு சொல்லியிருக்கலாம். எனக்கு அவங்களை பார்க்கவே பக்குபக்குனு இருக்கு.” என்று படிக்கட்டில் நடந்தபடி கூற, பாரதியோ “பச்.. கொஞ்சம் ரிலாக்ஸா கெத்தா வாயேன்.” என்று அதட்டினாள்.
“ஏய்.. என்ன அதட்டற?” என்று மற்றவர்கள் பார்வை தங்களை தழுவியிடுமோ என்ற அச்சத்தில் சுற்றிமுற்றி பார்த்தபடி கேட்க, “அப்படி தான்.” என்று கூறியவளின் முகமெல்லாம் மலர்ச்சியாக இருக்க அதை பார்த்தவன் தேன் குடித்த வண்டாக தொடர, வீட்டுக்குள் அழைத்து வந்தாள்.
“இந்தா… கத்திரிக்கா முத்தி கடைத்தெருவுக்கு இழுத்துட்டு வந்தாச்சு.” என்று விமலா ஆரம்பிக்க, அன்னையின் பேச்சில் ‘அம்மா சும்மா இருக்க மாட்ட. இன்னா லோக்கலா பேசற நீ.’ என்பது போல பார்த்தான்.
“வாங்க தம்பி” என்ற சௌந்தர்ராஜன் மணிமேகலை சரவணனை வரவேற்றார்.
முன்பும் இப்படி தான் யாரிவன் என்று துறுதுறுவென பார்வையிட்டார்.
ஆனால் அன்றைய நாளை விட இன்று தன்னை நுணுக்கமாய் எடைப்போடுவதாக சரவணன் கருதினான்.
“சாரிங்க.. நான் இந்த வூட்டு மாப்பிள்ளையா இருக்க தகுதியில்லாதவன் தான். ஆனா பாரதியை கட்டிக்கொடுத்தா கண் கலங்காம பார்த்துப்பேன். எங்க குலசாமி மாதிரி பத்திரமா பார்த்துப்பேன்” என்றான். அவனுக்கு வேறென்ன வார்த்தை பேச தெரியும்.
மணிமேகலையோ லேசான அதிருப்தி ஓரமாய் இருந்தது கூட இவனை பார்த்து, இவன் பேச, மகளுக்கு சரியான துணை என்ற ரீதியில் பிடித்திருந்தது.
இதை தான் மகளும் சொன்னாலோ, “முதல்ல உட்காருங்க” என்று சௌந்திரராஜன் உரைத்தார்.
சற்று தயக்கத்துடன் அமர்ந்தவனிடம் சௌந்திரராஜன் பேச்சு ஆரம்பித்தது.
“என் பொண்ணு.. உன்னை காதலிப்பதா சொன்னப்ப, என்ன சொன்னா தெரியுமா?” என்று கேட்க, பாரதியை கண்டு ‘என்ன சொன்னானு தெரியலையே’ என்று “சார்… அதுகிட்ட நான் இதுவரை காதல் கீதல்னு பேசியதே கிடையாது. என்ன சொல்லிருக்கும்னு சத்தியமா தெரிலை சார்” என்றான்.
அனிதா வேறு இங்கிருக்க காதலை பற்றி பேச தயங்கினான். வளரும் பிள்ளை… அடுத்து கல்லூரியில் அடியெடுத்து வைக்க போகின்றாள் என்ற எண்ணம்.
சௌந்திரராஜனோ மகள் சரவணனை பற்றி கூறியதை விவரித்தார். தான் நிற்க வேண்டிய தருணத்தில் அவளோடு துணையாக இல்லாத சமயத்தில் சரவணன் ரஞ்சித் வீடு தேடி சென்ற தருணமும், போலீஸிஸ் ஸ்டேஷன் சென்ற தருணமும் நின்றதை.
“சார்… பெத்த அப்பா உங்களை மாதிரி தான் இருப்பார். பின்ன… பொண்ணுக்கு எது நடந்தாலும்” என்றவன் அன்னை, அனிதா இருக்க, “சார் முடிந்ததை பத்தி பேசாதிங்க. அதெல்லாம் இங்க தேவையில்லாதது. பாரதியை எனக்கு கட்டிக் கொடுங்க… கண் கலங்காம பார்த்துப்பேன்.” நிமிர்வாய் கூறியவன் சௌந்திரராஜன் முன் நெருக்கமாய் வந்து, “எங்கம்மா தங்கச்சிக்கு எதுவும் சொல்ல வேண்டாம் சார். எதுக்கு சார் அதெல்லாம். அதை தவிர்த்து பேசுங்க ப்ளீஸ் சார்.’ என்று கிசுகிசுப்பாய் கெஞ்சலாய் கூறினான்.
மணிமேகலை சௌந்திராஜன் இருவரும் சரவணனை கண்டு மகளை காண, அவளோ அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று மண்டையை மட்டும் ஆட்டினாள்.
லேசான அதிருப்தி என்றாலும் கொஞ்சம் பயமும் கூடியது. இங்கு பலதரப்பட்ட நல்லவன் வேடம் போடுபவர்களே, திருமணமாகி சண்டையிட்டு வார்த்தையில் தீயை கக்கினாள்.
அதுவும் பாரதியை வஞ்சமில்லாமல் பேசி தொலைத்தால் என்ன செய்வது?
அதீத பயத்துடன் காதலுக்கு சம்மதம் அளித்து பேசப்பட்ட பின், விமலா அனிதா விடைப்பெற்ற போது பாரதியிடம் எஞ்சிய கேள்வியாக கேட்டார்கள் அவள் பெற்றோர்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

❤️❤️
Super super. But how Vimala will take this? Don’t know. Sema twist. Intresting
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 wow atlast bharadhi saravanan marriage fix ayiduchi super 😘
Interesting
மட்கும் வாழ்வில், மட்காத காதல்…!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 28)
பாரதியோட அம்மாவும் அப்பாவும் இப்படியா எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைங்கிற மாதிரியே பேசுவாங்க ? அதுவும் விமலாவும், அனிதாவும் இருக்கிறச்ச. நாளைப்பின்னே, ஏதாச்சும் வலிக்கிற மாதிரி வார்த்தையை விட்டுட்டாள்.?
இப்பவே பாரதியோட அம்மாவும் அப்பாவும் அதைத்தானே பாரதி கிட்ட கேட்குறாங்க. நாளைப்பின்னே , சரவணனே அதைப்பத்தி பேசமாட்டான்னு என்ன நிச்சயம்ன்னு ..? அதானே பாரதி கிட்ட கேட்டிருந்தாங்க.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Vimala ku therinja yenna pannuvangalo
Super super super super super super super super super super super super super super
Super super super super super super super super super super super super super super super super
Nice going
Super
super bharathi manasa thorathu sollita saravan num samathichitan avanga amma appa vum ethukittanga , yen bharathi appa amma vimala anitha ku theriyatha tha pathi pesurangale athu vera therinja intha amma eppadi pesuvangalo paravala saravanane solran pesathinganu , but pethavangaluku kojam bayam irukum la kalyanathuku apram ethana pesiduvanonu
ஃபைனலி, லவ்வை சொல்லி பேசியாச்சு சூப்பர் சூப்பர்!!!