Skip to content
Home » மட்கும் வாழ்வில் மட்காத காதல்-30

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-30

அத்தியாயம்-30

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

After 3Years…

   சரவணன் ‘கீங் கீங் கீங்’ என்ற சப்தத்துடன் ஹாரன் அடிக்க, “பாருங்க அத்தை… கொஞ்சம் வெயிட் பண்ணுனு சொல்லியும் வெளியே போய் ஹாரன் அடிக்கறார்.” என்று சரவணனை திட்டியபடி டிபன் பாக்ஸை பேக்கிங் செய்து முடித்தாள்.‌

“அவன் கிடக்கான்… நீ எதையும்  எடுத்துக்க மறந்துடலையே” என்று நினைவுப்படுத்தினார்.‌

“எல்லாம் எடுத்துட்டேன் அத்தை.” என்றவள் கைப்பையில் இருந்து ஒரு ஸ்பிரேவை எடுத்து, “அய்யோ… இத கொடுக்க மறந்துட்டேன். இந்த ஸ்பிரே நேத்து கால் வலிக்கு வாங்கியது. வலி இருந்தா யூஸ் பண்ணுங்க” என்று அவசரமாய் நீட்டினாள்.

“எங்க ஒரு வேலையும் பார்க்காம ரெஸ்ட்ல தானே இருக்கேன்” என்றார் விமலா.

”மாடிபடி ஏறாம மத்த வீட்ல பத்து பாத்திரம் தேய்க்காம இருக்கலாம். ஆனா இந்த வீட்ல சமையல் மட்டும் முடிச்சிட்டு நான் கிளம்பிடறேன்.‌ மீதி நீங்க தானே பார்க்கறிங்க.” என்றவள் அனிதாவிடம் “பச்.. பேனாவை பல்லுல கடிக்காத.” என்று அதட்டினாள்.

“நல்லா சொல்லு… பேனாவை கடிச்சி கடிச்சியே நெளிச்சு வைக்குது. நீ தங்க கலருல தருவியே அதை மட்டும் தான் ஏதோ பொத்தி பொத்தி வைப்பா. மத்தது எல்லாம் கடிச்சி வைப்பா. இந்தா பென்சில் எல்லாம் இன்னும் சிள்ளைப்புள்ள போல கடிச்சி முழுங்குது” என்றார்.‌

   “அம்மா.” என்று அலுத்தபடி, “அண்ணி… கிட்ட வாங்க.” என்று கூப்பிட பாரதி வரவும், “என்னங்க அண்ணி… பீளிட்ஸ் எல்லாம் சரியாவே வைக்கலை. பேசாம சுடிதாரே போடுங்க.” என்று அறிவுறுத்தினாள்.

“இன்னிக்கு ஆபிஸ்ல பெஸ்டிவல் அனிதா.” என்று கூறியவள் அனிதா மடிப்பு எடுத்துவிட “தேங்க்யூ” என்றாள்.

  வாசலில் வேகமாய் வர, அதே நேரம் சரவணன் பாரதி வராததால் வேகமாக வந்து இருவரும் மோதி நின்றனர்.

  “அம்மா..” என்று நெற்றியை தடவ, “பார்த்து வர்றதில்ல. எவ்ளோ நேரம் வெயிட் பண்ணறது. வேலைக்கு போகணுமா வேணாமா?” என்று எரிந்து விழுந்து டிபன் பாக்ஸை பிடுங்கி சென்று முன்னால் வைத்தான்.‌
“பார்டா… சாரை பரீட்சை வருது படின்னு சொன்னதுக்கு என்ன கோபம்.” என்று வண்டியில் ஏறினாள்.

சரவணனுக்கு பாரதி இருசக்கர வாகனத்தை வாங்கி தந்திருந்தாள். இருபாலரும் ஓட்டும் விதமாக வாங்கியதால் சில நேரம் அனிதா, பாரதியும் கூட அதை தான் பயன்படுத்துகின்றார்கள்.

   பாரதி அலுவலகம் புறப்பட விமலா கையசைத்து வழியனுப்பி அனிதாவுக்கு பரீட்சைக்கு படிக்க லீவு விட்டதால் வீட்டிலிருந்தாள்.
 
வண்டி இரண்டு தெரு தள்ளி செல்லவும், பாரதி நெற்றியை தடவினாள். இருவரும் மோதி கொண்டதன் விளைவு என்பதால் ”எப்பவும் சுத்தி என்ன நடக்குன்னு பாரு பாரதி. இப்ப வலி உனக்கு தானே?” என்று தன்மையாக பேசினான்.‌

“ஹலோ க்ளீன்.. உங்க வேலையை பாருங்க. என்னைக்காவது லேட் பண்ணிருக்கேனா? இன்னிக்கு சேலை கட்டி வர தானே லேட்டாச்சு. என்னவோ டெய்லி லேட்டா ஆகற மாதிரி புசுபுசுனு கத்தறிங்க.” என்றாள்.

  “உனக்காவது எக்ஸ்கியூஸ் இருக்கும். எனக்கு அடிக்கடி லேட்டா போனா வேலை விட்டு தூக்கிடுவான். சம்பளத்துல கைவைப்பான் பாரதி” என்று கூறினான்.‌

  பாரதி அமைதியாகிட, “என்ன பேச்சே காணோம்.” என்றான்.

“நத்திங் க்ளீன்” என்றாள். முன்பு இதே வார்த்தை நிச்சயம் பேசி முடித்ததிலிருந்து செல்ல சுருக்கமாய் கூப்பிடுகின்றாள்.
 
  சரவணன் முதலில் அதை பெரிதாக எடுத்துக்கவில்லை. திருமணம் முடிந்து முதலிரவு அன்று பாரதி வீட்டில் அவளது அறையில் இருவரும் அமர்ந்து செய்வதறியாது விழித்த நேரம், முதலில் ஏதாவது பேச்சு தொடுத்து ஆரம்பிப்போம் என்று சரவணன் தான் கேட்டான்.

  “என்ன எதுக்கு க்ளீன்னு கூப்பிடற? குப்பையை கூட்டி சுத்தம் செய்யற வேலையென்ற காரணத்துக்காகவா?” என்று கேட்டான்.‌

பாரதி போலியாய் முறைத்தபடி பார்க்க, “இல்லை… தெரிந்துக்க கேட்டேன். தப்புன்னா சாரி.” என்றான் காதில் கைவைத்தப்படி.

  முதலிரவன்று முறைத்து கொண்டால் அவனது காரியம் எப்படி வெற்றியடைவது?!

  பாரதியோ பால் டம்ளரை தந்து, “க்ளீன்னா உங்க வேலையை வச்சி சொல்லலை. உங்க மனசு க்ளீன் என்ற அர்த்தத்தில் ஆசையா கூப்பிட வச்சேன். அதை போய் வேலையோட தொடர்புப்படுத்திக்கிட்டிங்க. இத்தனை நாள் இப்படி தான் நினைச்சிங்களா?” என்றதும் ஆமென்று கூறி, உடனே “தேங்க்ஸ்… மனசு க்ளீன் எனக்கு மட்டுமில்லை‌, உனக்கும் தான். அதனால் ஆயிரம் பேர் ஆயிரவிதமா பேசினாலும், உனக்காக வரன் க்யூல இருந்தாலும், என்னை கல்யாணம் பண்ணிட்ட. எனக்கெல்லாம் இந்த மாதிரி ஒரு பொண்ணு… சான்ஸேயில்லை.” என்றவன் ரிசப்ஷனில் பார்த்தது போல கண் காது மூக்கு வாய் என்று பாரதியை கண்டு இமைக்க மறந்தான்.

  “இந்த பிரம்மன்.. உன்னை அளவுக்கு அதிகமாகவே அழகா படைச்சிருக்கான். அதுவும் இன்னிக்கு.. அலங்காரம் எல்லாம் பண்ணவும், அப்படியே ஒரு மாதிரி பண்ணுது” என்று பாரதி செவிமடல் அருகில் வெட்பகாற்றுடன் பேசினான்.

அந்த வெட்பகாற்றினை மேனியில் ஸ்பரிசித்தவளோ இமை மூடினாள்.
  
  அதன்பின் சரவணன்-பாரதி இருவரும் மோன நிலையில் செல்ல, கைகள் அதன் சுதந்திரத்தில், மலர் இதழ்கள் மொட்டவிழ, அங்கே மன்மதனின் ஆட்சியில் இன்னிசை சிணுங்கலும் ஸ்வரங்களும் ஒலித்தது.

அதே நினைப்பில் வண்டியை ஓட்டி வந்த சரவணனின் முதுகில் தட்டி “அங்க ரெட் லைட் போட்டிருக்கு, நீ பாட்டுக்கு நிற்காம வர்ற. மாட்டின… ஃபைன் கட்டணும். அப்பறம் உன் சம்பளம் போச்சுனு அதுக்கும் புலம்புவ. உன்‌மனசுல என்னடா நினைச்சிட்டு இருக்க?” என்றதும் தான், “அச்சோ சிக்னல்ல நிற்கலையா? நான் நம்ம முதலிரவை நினைச்சிட்டு வந்தேன் பாரதி.” என்றான்.

  பாரதியோ “அடப்பாவி… வண்டியோட்டும் போது.. என்ன நினைப்பு உனக்கு? முதல்ல வண்டியை நிறுத்து.” என்று நெருக்கமான பேச்சில் ‘டா’ போட்டு பேச ஓரமாய் நிறுத்தினான்.

“நீ இறங்கு… நான் வண்டி ஓட்டறேன்.” என்றாள் ஒருமையில்.
 
  சரவணனும் சரியென்று பின்னால் அமர, “ஆபிஸுக்கு டைம் ஆச்சு. என் வேலையை விட்டு தூக்கிடுவான்னு லபோதிபோனு கத்திட்டு, இங்க பஸ்ட் நைட்ல நடந்ததை பத்தி நினைச்சிட்டு வர்றான். சிக்னல்ல இந்நேரம் டிராபிக் போலீஸ் இருந்தா, நிறுத்தி ஃபைன் போட்டிருப்பான்.
   எப்ப என்ன நினைக்கணும்னு இல்லை.” என்றாள். அவனோ பாரதி இடையில் கையை வைத்தான்.

“அங்” என்று லேசான துள்ளலுடன், “சரவணா.. கையை எடு” என்றாள் உள்ளுக்குள் போன குரலில்.

“க்ரிப்புக்காக பிடிச்சேன்.” என்றான் கிசுகிசுப்பாய்.

“ஆங்… நீ என்ன அர்த்தத்துல பிடிச்சேன்னு உன்‌ பிடியும் குரலும் சொல்லுது. உன்னோட இத்தனை வருஷம் வாழற எனக்கு உன் பிடி எதுக்குனு தெரியும். முதல்ல கையை எடு” என்றாள். அவனும் கையை எடுத்து அவனது தொடையில் வைத்துக்கொண்டு, ‘கிடைக்கிற கேப்ல ஸ்கோர் பண்ண விடறதில்லை’யென முனங்கினான். பாரதி அவன் முனங்களில் சிரித்தாள்.

  ஒரு பேருந்து நிறுத்தம் வந்ததும் இறங்கினாள்.
  இங்கிருந்து ஆபிஸ் கேப் வந்து பாரதியை அழைத்து செல்லும், இங்க விட்டுவிட்டு சரவணன் செல்வது வழக்கம்.

  “ம்ம்ம்.. கிளம்பு” என்று அனுப்ப முயல, சரவணனோ “பாரதி… நீ ஏன் தினமும் சேலை கட்ட கூடாது. ரொம்ப அழகாயிருக்க. பார்க்க நல்லாயிருக்கு” என்றான்.

பாரதியோ “நீ எதுக்கு சேலை கட்ட சொல்லறேன்னு எனக்கு தெரியும். ஆபிஸுக்கு சுடிதார் குர்தி தான் பெஸ்ட். நீ கிளம்பு.. இப்ப வேலைக்கு நேரமாகலை” என்றாள்.

  “ஒரு மனுஷன் பொண்டாட்டியை நிம்மதியா சைட் அடிச்சா பிடிக்காதே. வேலையை நினைவுப்படுத்து.” என்றவன் ஸ்டார்ட் செய்துவிட்டு புறப்பட்டான்.

அவ்விடத்தில் இருந்து‌ செல்லும் சரவணனை கண்டவளுக்கு அருகில் கேப் வந்து நிற்க அதில் ஏறினாள்.

   அப்படியொன்றும் வாழ்க்கை அவளை அச்சுறுத்தவில்லை. எத்தனையோ பேர் என்னென்னவோ சொல்லவும், கொஞ்சம் பயத்தை வெளிக்காட்டாமல் முன்னேறினாள்.

  ஆனால் சரவணன் நினைத்ததை விட அன்பை செலுத்துகின்றான்.
  இதோ திருமணமாகி மூன்று வருடம் கடக்கின்றது.
   மனதால் இணைந்தது போல உடலாலும் சங்கமித்தாயிற்று. இந்த மூன்று வருடத்தில் ஒருமுறை கருவுற்று கலைந்தது. அதை அந்த நேரம் யாரிடமும் கூறவில்லை. அப்பொழுது கூட, ”இப்ப என்ன சத்துமாத்திரை சாப்பிடு. மறுபடியும் கன்சீவா ஆனதும் வீட்டில சொல்லிக்கலாம்” என்றான்.

   அக்கம் பக்கத்தினர், உறவினர் என்று குழந்தை வரவை வைத்து கூட கேட்டுவிட்டார்கள்.
   மணிமேகலை கூட “ஹாஸ்பிடலுக்கு வர்றியா? ட்ரீட்மெண்ட் பார்க்கலாம்” என்று கேட்டார்.
  “அதெல்லாம் வர்றப்ப வரட்டும்னு சரவணன் சொல்லிட்டார்” என்பாள். உண்மையில் அவன் அதை தான் கூறியது.
  
  ‘இப்ப அவசரமா குழந்தை வந்து என்ன பண்ணப் போவுது. நானே உன்னாண்ட வாங்கின கடனை இப்ப தான் அடைச்சேன். நிம்மதியா மூச்சு விட்டு கொஞ்சக்கானம் பணம் சேர்த்து வச்சிக்கறேன். அப்பறம் பிறக்கட்டும்.’ என்று இரண்டு வருடத்துக்கு முன் உரைத்தான்.

  சரவணன் வாய் வார்த்தையில் ஆசையை சொல்லவில்லையே தவிர அவனுக்கும் பாரதி போல குழந்தை வரவை எதிர்பார்க்கின்றான்.‌ எல்லா தம்பதியினரும் ஒரு கட்டத்தில் குழந்தைக்கு ஏங்குவது தானே!

   அலுவலகம் வந்ததும் அந்த நினைவை புறம் தள்ளி விட்டு இன்று அலுவலகத்தில் விழாவை ஏற்பாடு செய்திருக்க பேசி அரட்டை அடிக்க நேரம் அமைந்தது.

  மதிய நேரம் மணிமேகலை அலைப்பேசியில் அழைத்தார்.

“சாப்பிட்டியா பாரதி? என்றதும், “இப்ப தான் ஆபிஸ்ல லஞ்ச் தந்தாங்க. சாப்பிட்டாச்சும்மா. நீங்க” என்றாள்.

“ஆச்சு… வீட்ல என்ன சமைச்ச?” என்று கேட்டதும், “வெஜ்புலாவ் ரைஸ்மா. சரவணனுக்கு அது ரொம்ப பிடிக்கும். சரி இப்ப அப்பாவுக்கு எப்படியிருக்கு?” என்று கேட்டாள்.

“நேத்து பரவாயில்லை. வர வர லோ பீபி ஆகுது. அதுக்கு தான் கவலையா இருக்கு” என்றார்.‌

பாரதி… ஏதோ கேம் வைக்கறாங்க. வரலை” என்ற குரலில், “பச் சரிம்மா அப்பாவை கவனிச்சுக்கோங்க. இங்க சத்தமா வேற இருக்கு. பீபி ஏறாம பார்த்துக்கோங்க சாயந்திரம் பேசறேன்.” என்று கூறி அணைத்தாள்.‌ மகளின் வாழ்வு தெளிந்த நீரோடையாக செல்வதை அடிக்கடி நேரில் பார்த்ததால் நிம்மதியாக இருக்கின்றார். ஆனாலும் வயதுக்குண்டான உடல் சுகவீனம் வந்து பயமுறுத்தியது.

  பாரதியோ மாலை வரை ஆட்டம் பாட்டம் என்று முடிந்து, பாரதி வீடு திரும்பினாள். ஸ்டடிங் டேபிள் அருகே அனிதா ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள்.

  “உங்கண்ணா வந்துட்டாரா பாரதி? அத்தை எங்க?” என்று வந்தாள்.

“அம்மா இரண்டு வீடு தள்ளி இருக்கற அக்காவிடம் கதை அளக்க போயிருக்கு அண்ணி, அண்ணா ரூம்ல ரீல்ஸ் பார்க்குது.” என்றாள்.

  “படிக்க சொன்னா ரீல்ஸ்… சின்ன குழந்தையை விட உங்கண்ணா மோசம். எந்நேரமும் போனை நோண்டிட்டு” என்று வரவும் கதவு சட்டென்று மூடப்பட்டது.

  எப்பவும் வந்ததும் உடை மாற்ற கதவு மூடப்படும் என்ற காரணத்தால் அனிதா ஹாலில் எழுத ஆரம்பித்தாள்.

“என்ன பண்ணற சரவணா.. வெளிய அனிதா இருக்கா” என்று சத்தமில்லாமல் கோபத்தை காட்டினாள்.

“நீ டிரஸ் மாத்த கதவை மூடியிருப்பனு நினைச்சிப்பா.” என்று காலையில் தீண்டாதே என்ற இடையை அழுத்தமாய் வளைத்து திருப்பினான்.

“சரவணா… ஆனாலும் நீ உள்ள இருக்க. முதல்ல வெளியே போ.” என்றாள்.

  “இதெல்லாம் ரொம்ப அதிகம். நான் பாவம். காலையிலும் நான் கிளம்பி வெளிய வந்தப்பிறகு தான் சேலை கட்டின. இப்பவும் இந்த சேலையில் உன்னை ரசிக்க விடாம என்னை வெளிய தள்ளுற. மாட்டேன்..‌. இங்க தான் இருப்பேன்.” என்று கூறி மெத்தையில் அமர்ந்தான். அவள் இடையை கட்டிக்கொண்டே இருந்தவனின் சிகையில் தன்னிரு கைகளை விடுவித்து, ஹெட்மஸாஜ் செய்வது போல் துழாவினாள்.

“ஹலோ க்ளீன்… ரசிச்சாச்சா? நைட்டி போட்டுக்கவா?” என்று கேட்டாள்.

“பாலை அடுப்புல வச்சதை ஆஃப் பண்ணலையாடி. பாரதிக்கு காபி போட்டியா?” என்று விமலா குரலில், ”அண்ணி டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரும் காபி போடலாம்னு இருந்தேன்மா.” என்றாள் அனிதா.

  “ஆமா… படிக்கறேன்னு ஒரு வேலை செய்யறதில்லை. உங்கண்ணியும் உன்னை நல்லா சொகுசா வளர்க்கறா” என்று விமலா கத்துவதை கேட்ட பாரதியோ, நைட்டியை எடுத்து மாற்ற ஆரம்பித்தாள்.
சரவணன் மெத்தையில் தலைக்கு தோதாக கையை தந்து கோவிலில் இருக்கும் பெருமாள் போல படுத்து வீற்றிருக்க, “இங்கயே எதுக்கு பார்க்கற? அந்தபக்கம் திரும்பு” என்று பாரதி அதட்டினாள்.

“சும்மா தானே பார்க்கறேன். நீ உன் வேலையை பாரு” என்று கிறக்கமாய் உரைத்தான்.

பாரதி மடமடவென வெட்கத்துடன் உடைமாற்றி, கதவை திறந்து நிற்க காபி ஆற்றியபடி விமலா தரவும், வாங்கினாள்.

  “ஏன்மா.. நீ டிவி பார்க்க தானே இவ்ளோ பெருசா டிவி வாங்கி தந்துச்சு. இப்பவும் கதை பேச வெளிய ஓடற.” என்று சரவணன் ஆரம்பித்தான். இந்த டிவி பெரிதாக வாங்கியதும் பாரதி தான்‌. இந்த வீட்டில் ஆண் தான் வாங்க வேண்டும் என்று இல்லை. ஆணும் பெண்ணும் சமம் என்று பேசியப்பின், சில வீட்டில் ஆணை விட பெண் அதிகம் சம்பாதிக்கும் போது அவளே வீட்டுக்கு தேவையானதை வாங்கலாம்‌. அதில் ஈகோ முளைக்காமல் பார்த்துக்கொள்வது அவரவர் சாமர்த்தியம். இங்கே நம் நாயகனுக்கு பாரதியிடம் ஈகோவை தூக்கி பிடித்து நிற்பதில்லை. அவனை பொறுத்தவரை பாரதி எது செய்தாலும் நல்லதிற்கு என்று எண்ணிவிடுவான்.

   “அம்மா ஒரு காஸப் மன்னி” என்றாள் அனிதா.

“அட… நாடகம் பார்க்க தான் டா டான்னு வந்துட்டேன். நடுவுல செய்தி போகும். அந்த கேப்ல போய் பேசினேன்டா. உங்களுக்கு இன்னா.. இவ படிக்க போறா. நீயும் பாரதியும் வேலைக்கு ஓடறிங்க. வீட்ல போரடிக்குடா.” என்றார்.

     “அண்ணனும் தங்கச்சியும் அத்தையை நல்லா ஓட்டறிங்க.” என்றவள், “அனிதா… உனக்கும் உங்கண்ணாவுக்கும் ஒரு‌மாசத்துல எக்ஸாம் வருதே. உங்கண்ணா எப்படி பாஸ் பண்ணிடுவாரா?” என்றாள்.

  “அதுக்கு தான் அண்ணி இம்பார்டண்ட் குவெஸ்டினா நான் சிலதை எடுத்து வச்சியிருக்கேன். அப்பறம் எங்க மேம் எல்லாம் சிலது கண்டிப்பா வரும் படிங்கனு சில குவெஸ்டினை சொல்லிருந்தாங்க. அதெல்லாம் படிச்சா கூட பாஸாகிடலாம். இதோ இந்த நோட் பேப்பர்ல குவெஸ்டின் தனியா எழுதிட்டேன்‌” என்று நீட்டினாள். அதனை வாங்கி சரவணனை பார்வையிட்டாள் பாரதி.

சரவணனோ “இங்க பாரு… லாஸ்ட்ல வர எக்ஸாம் தானே எல்லாம் படிப்பேன். சும்மா குச்சி வச்சி மிரட்டாத குறையா பண்ணாத. இப்படி நீ வந்து என்னை ஒரு டிகிரி முடிக்க அழுச்சாட்டியம் பண்ணுவன்னு தெரிந்தா, எங்கப்பா படிக்க சொன்னப்பவே படிச்சி முடிச்சிருப்பேன். அவராவது அரியர் கிரியர் வச்சி ஜஸ்ட் பாஸ் எடுத்தா கூட கம்முனு கிடப்பார். நீ இருக்க பாரு… ஸப்பா…” என்று விமலா பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.‌

யார் என்னவோ பேசி தொலையுங்க நான் நாடகம் பார்க்க போறேன் என்று விமலா டிவியில் மூழ்கியிருக்க அனிதா படிக்க சென்றாள்.

  அவளுக்காக மாடிபடியில் கீழே சற்று தாராளமாய் இடமிருக்க அங்க படிக்க தோதுவாக பாரதி மாற்றியிருந்த இடத்திலேயே படிக்க சென்றாள்.

  சரவணன் தான் பாரதி இருக்கும் பக்கம் பார்வையை மாற்றி, அவள் கையை தீண்ட, பாரதி தள்ளி தள்ளி சென்றாள். அவன் சீண்டல் தொடர, ‘இது வேலைக்கு ஆகாது’ என்று எழுந்து குருமா செய்ய போனாள். இட்லி ஊற்றி விட்டு குருமா செய்தப்பின் சாப்பிட அழைத்து ஹாலில் நால்வரும் கீழே அமர்ந்து சாப்பிட்டனர்.

  சரவணன் தான் ரிமோட்டை எடுத்து பாட்டை மாற்றியபடி இருக்க “அந்த பாட்டு  நல்லா தானே இருந்தது ஏன்‌ மாத்தின” என்றாள் அனிதா.

“எதையாவது ஒன்னு வைடா.” என்றார் விமலா.

பாரதியோ “சாப்பிடும் போது சாப்பாட்டுல கவனமில்லை.” என்று ரிமோட்டை பிடுங்கினாள்.

“வரவர எல்லாத்துக்கு சட்டதிட்டம் போடு” என்று கை உதற, “ஹலோ க்ளீன்… ஏதாவது சண்டை போட்டு படிக்கறதுல இருந்து எஸ் ஆகக்கூடாது. ஒழுங்கு மரியாதையா படிச்சி முடிங்க. முதல்ல சாப்பிடுங்க.” என்றாள்.

  அதென்னவோ இந்த மூன்று ஆண்டில் மற்ற நேரம் எல்லாம் கொஞ்சம் நேரம் புத்தகத்தை வேண்டா வெறுப்பாய்  புரட்டுவான்.
  பரீட்சை நேரம் வந்துவிட்டால் மட்டும் ஒரு மாதம் அனிதாவுடன் சேர்ந்து படிக்க வெளியே அனுப்பிடுவாள். அந்த கடுப்பில் சரவணன் இவ்வாறு திட்டமிட்டான்.

   சாப்பிட்டு பாரதி பாத்திரம் கழுவி விமலா பெருக்க, அனிதா சரவணன் இருவரும் புத்தகத்நை வைத்து படிக்க, அனிதா சொல்லி தரும் நேரம், பாரதியை எட்டியெட்டி பார்த்தான். பாரதி பாத்ரூம் சென்ற  நேரம் வேகமாக அறைக்குள் ஓடி கதவை அடைத்தான்.

அனிதாவோ “அண்ணி அண்ணி அண்ணா படிக்காம ஓடறார்” கதவை தட்ட செல்ல, விமலாவோ, “ஏய்.. கதவை எதுக்கு தட்டப்போற.. அவன் என்னத்த படிச்சாலும் பார்டர் பாஸ் தான் ஆவான். நீ போய் படி” என்றதும், எப்படியும் பாரதி அண்ணியிடம் திட்டு வாங்கட்டும் என்று படிக்க சென்றாள்.

  விமலாவோ “மூனு வருஷமாகுது ஒரு புழு பூச்சி வரணும்னு நான் காத்திருக்கேன். படிப்பாம் படிப்பு” என்று விமலா ஹாலில் இருந்த கட்டிலில் உறங்க ஆயத்தமானார்.

   பாரதியோ சரவணனை முறைத்த படி “எத்தனை முறை சரவணா.. சின்னபிள்ளைத்தனமா பண்ணற‌.” என்று திட்டியவள் அவனை வெளியே அனுப்பவில்லை.
 
   மின்விளக்கையும் அணைத்து விட்டு “படிக்காம லைட்டை அணைச்சிட்ட” என்று கேட்டதற்கு, “இன்னிக்கு சேலையில் அழகாயிருந்த.” என்றதும், “நான் என்ன கேட்டேன்” என்றாள்.

  “உனக்கென்ன… டிகிரி வந்துடும். ஜஸ்ட் பாஸாயிருந்தா போதும். எங்கம்மாவே அதான் சொல்லும்” என்றான்.

  “கையை எடு” என்றாள். “மாட்டேன்” என்றவனிடம் “நாளைக்கு ஒரு டெஸ்ட் பண்ணணும் சரவணா” என்று தயக்கமாய் கூறினாள்.

அவளது இரவாடையில் இருந்த ஜிப்பில், சரவணன் இறக்கத்தை எதிர்பார்க்க, அவளோ ஏற்றத்தை மாற்றி என்று இருவரும் பேசிட, “என்ன டெஸ்ட்?” என்றான்.

அவனது நெஞ்சில் சாய்ந்துக்கொண்டு, “பிரகனென்ஸி டெஸ்ட்… நாள் தள்ளிப்போயிருக்கு சரவணா.” என்றாள்.

  வேகமாய் எழுந்து மின்விளக்கை போட்டு, “ஏய்.. பாரதி? உண்மையாவா?” என்று கேட்டான்.

  மின் விளக்கு உபயத்தால் வெளிச்சம் பரவ, சட்டென ஜிப்பை ஏற்றி விட்டாள்.

அவளது கைப்பையிலிருந்து பிரகனென்சி டெஸ்டை எடுத்து நாளைக்கு மார்னிங் யூஸ் பண்ண சொல்லி மெட்பிளஸ்ல வேலை செய்யற அக்கா சொன்னாங்க. காலையில டெஸ்ட் பண்ணினா அதுலயே க்ளியரா தெரியுமாம்.” என்றாள்.

“நாளைக்கு வரை எதுக்கு? ஹாஸ்பிடல் போகலாம்” என்று எழுப்ப முயன்றான்.‌

“எது… கவர்மெண்ட் ஹாஸ்பிடலா? நேரத்தை பார்த்தியா?” என்றாள் சிரித்தபடி. எப்பவும் அங்கு தானே செல்வது என்று சொல்வான்.

”அய்ய.. உன்னையும் நமக்கு பொறக்கற குழந்தையையும் கவர்மெண்ட்ல பார்க்க விடமாட்டேன். கவர்மெண்ட் ஆஸ்பிடல்னா நல்லதில்லைன்ற அர்த்தத்துல சொல்லலை.
  உன் அப்பா அம்மா உன்னை எப்படி பார்த்திருப்பாங்க. அதுல குறை வைக்க மாட்டேன். அந்த அர்த்தத்துல சொல்லறேன். இந்த வீட்ல டிவி, டேபிள், பைக், இன்னும் வித்தியாசமா டெக்னாலஜில புதுசா வர்றதை எல்லாம் தேவைக்கு ஏற்ப வாங்கற. நான் எதுவும் அதுல பணத்தை பங்கு போடுவதில்லை. ஆனா உனக்கும் நமக்கு பிறக்கற குழந்தைக்கும் நல்லதா எப்பவும் நானா தான் செலவு பண்ணுவேன். அப்ப தான் எனக்கு திருப்தி.” என்று திருத்தமாய் கூற, “முதல்ல காலையில் செக் பண்ணுவோம். அப்பறம் ஹாஸ்பிடல் போகலாம்.” என்றுரைக்க, “அய்யோ எனக்கு இன்னிக்கு தூக்கமே வராதே.” என்று தலைகால் புரியாது நின்றான்.

பாரதியோ… ‘பேசாம என்னை தூங்கவிடாம செய்’ என்று கண் சிமிட்ட, சரவணனோ மட்கும் வாழ்வில் மட்காத காதல் தேடி பாரதி சொல்ல வந்ததை செயலில் காட்ட மின்விளக்கை மீண்டும் அணைத்தான்.

~சுபம்.
~பிரவீணா தங்கராஜ்.

Yaaahhh kkkuuuu (யா…கூ) இந்த கதையையும் எழுதி முடிச்சிட்டேன்‌. வாங்க பேசுவோம்.
  ஆக்சுவலி இந்த கதை எழுத முக்கிய காரணமே எங்க வீட்டுக்கு குப்பை எடுக்க வர்ற ஒரு அக்கா பிளஸ் சில நிகழ்வு. 
 
  எப்பவும் தீபாவளி பொங்கல் அப்ப நான் எங்க நேட்டீவ் பிளேஸுக்கு போயிடுவோம். அவங்க வந்து தீபாவளி பொங்கல் காசு எல்லாம் பண்டிகை முடிந்தப்பிறகு தான் வந்து கேட்பாங்க. முதல் முறை கேட்டப்ப ‘எவ்ளோ அக்கா’னு முழிச்சேன். உனக்கு கொடுக்க தோன்றுவதை கொடுன்னு சொல்வாங்க.
  ஐம்பதோ நூறோ தான் தருவது. மை மைண்ட் கால்குலேஸன் ஒரு வீட்ல ஐம்பது ரூவா கொடுத்தாலும் பத்து வீட்ல 500 ஆச்சு. சோ ஐம்பது இல்லைன்னா நூறுனு பர்ஸ்ல எவ்ளோ சட்டுனு கண்ல படுதோ அப்ப தருவேன். கம்மியா அதிகமா எனக்கு தெரியாது.

லாஸ்ட்னா ஒரு நாள் செம மழை இரண்டு வீடு தள்ளி போயிட்டாங்க. அன்னிக்கு குப்பை அதிகம். போடணும்னு மழையில இறங்கி போயாச்சு.
  ‘இந்த மழையில ஏன்டா நனைஞ்சுட்டு வர்ற. அங்க வீட்டுக்கு கீழவே வச்சிட்டா எடுத்துப்பேனே’னு சொன்னாங்க. இல்லைக்கா மறந்துட்டேன்னு சென்னேன்.
அடுத்து பக்கத்துல இருந்த பாட்டி ஏஜ் ஒருத்தங்க தீபாவளி காசு கேட்டாங்க.
மழையில நின்னு பதில் சொல்ல முடியலை. இதோ எடுத்துட்டு வர்றேன்னு ஓடி வந்தேன்.

‘பார்த்து போடா.. வழுக்கிட போகுதுனு’ அந்தக்கா சொன்னாங்க. அந்த வார்த்தை ஒரு‌மாதிரி நெகிழ்ச்சியா இருந்தது. காசுக்காக சொல்லலைனு தெரியும். ஏன்னா எப்பவும் எப்படியும் தந்துடுவேன். அதோட எப்பவும் டிரஸ் கூட கொடுக்கறது வழக்கம். அந்த நேசம்.

   இரண்டு பேருமே ரெயின் கோட் போட்டுட்டு மழையில குப்பையை கலெக்ட் பண்ணினாங்க.
  நான் போய் தர்றப்ப ஒரே யோசனை. இந்த ஐம்பதை வச்சி நான் வீடு கட்ட போறதில்லை. டீ குடிக்க கேட்டிருக்கலாம். டீ கடை முனையில இருக்கு. சோ தனி தனியா நூறா தந்துட்டு வந்தேன்.
  
   வர்றப்ப ஒரே யோசனை. கொஞ்ச நேரம் நனைந்ததுக்கே குளிருது. இவங்க கால்ல பூட்ஸ் மாதிரி போட்டுட்டு நடந்தாலுமா ரெயின் கோட் இருந்தாலும் ஏனோ மனசு ஒரு‌மாதிரி பிசைந்தது.

  அடுத்தடுத்து நாள்ல லைன்னா துப்புரவு தொழிலாளியா கண்ல பட்டாங்க. இந்த கூகுள்ல ஏதாவது தேடுவோம். அடுத்து நாம எந்த ஆப்ல போனாலும் முகநூலில் அடிக்கடி நாம தேடிய பொருள் கண்ல காட்டுவது போல, இந்த துப்புரவு தொழிலாளிகள் அதிகமா கவனிச்சேன். மேபீ இதுக்கு முன்ன நான் கவனிக்க தவறியிருக்கலாம்.

  அடுத்து ஒரு ஆர்வம்.. ரெகுலரா எத்தனை பேரை பார்க்கறேன்னு கவுண்ட் பண்ணினேன்.
  ஆச்சரியா இருந்தது. ஐம்பதுல இருந்து 120 வரை துப்புரவு தொழிலாளிகள் தினசரி காலையில் இருபது நிமிட டிராவல்ல பார்த்தேன்.
  இப்ப ஒரு பஸ்ல எத்தனை பெண்கள் வேலைக்கு போறாங்க காலேஜ் போறாங்கனு புள்ளி விவரம் எடுப்பது போல, அட தினமும் இந்தனை துப்புரவு தொழிலாளியை நாம கடந்து போறோம் ஆனா கவனிக்க தவறுறோம் ஏன்னு சிந்திக்கும் போது அந்த வாடை, குப்பையா சட்டுனு கிராஸ் பண்ணு என்ற எண்ணம்.

இதுல நடுவுல உண்மையில் ஒரு போராட்ட சம்பவம் வேற டிவில வந்துச்சு.

சில நேரம் இறைவன் ஏதாவது நம்மிடம் சொல்ல வர்றார்னா இறந்து போன தாத்தா பாட்டி அப்பா அம்மா மூலமாக கனவில் வந்து சொல்வதா கேள்விப்படுவோம். அதே போல இது தோன்றியது. (மூக்குத்தி அம்மன் படத்துல ஆர்ஜே பாலாஜிக்கு நடக்குமே. மூன்று நான்கு முறை குலதெய்வ சாமி கண் முன் பேப்பர்ல, ஆட்டோவுல வந்து செல்வது போல்)

சம்திங் ஏதாவது நம்மகிட்ட சொல்ல வர்ற ஒரு விஷயமா இதை எப்படி எடுத்துக்க? நான் ஒரு ரைட்டர். இவங்களை வச்சி கதையா எழுதுன்னு கோஇன்சிடெண்டா இன்சிடெண்ட் அமையுதா? அப்படின்னு தோன்றியது. எப்பவும் அப்படி தோன்றுவது தான் நான் எழுதற கதைகள்.

  மனசாட்சி அன்ட் மீ👇

மீ: துப்புரவு தொழிலாளியை வச்சி எழுதினா யார் படிப்பா? இதான்  முதல் கேள்வி.

ம.சா: ஆமா நீ யார் படிக்கா யார் படிக்கலைன்னு பார்த்து தான் கதை எழுதறியா. உன் திருப்திக்கு உனக்கு வர்றதை எழுதற. அதுல டீசண்ட் ரீடர்ஸுக்கு கதை பிடிக்குது. அதிகப்பட்ச ரொமன்ஸ் மட்டுமே எதிர்பார்க்கறவங்களுக்கு கதை பிடிக்காம போகும்.’ என்று சொல்லுச்சு.

மீ: ‘அப்ப எழுதலாம்னு சொல்லறியா?’

ம.சா: சொல்லிட்டாலும்… உனக்கு தோன்றுவதை எழுதினா தானே தூக்கம் வரும். (எப்படில்லாம் உசுப்பேத்துது)

மீ: ரைட்டு எழுதப்போறேன். எப்படி எழுதணும். எப்படி எழுதினா விரும்புவாங்க. ஐடி பொண்ணை போடலாமா? லாஜிக் உதைக்காம எழுதணுமே.

ம.சா: இனி இவ எழுதிட்டு தான் என்கிட்ட வருவா. ஜூட்…

மேட்டுக்குடி படத்துல கவுண்டமணி மாதிரி அக்கா மகளே இந்து….னு பிள்ளையார் சுழி போட்டாச்சு. முதல்ல கவர் பிக். தலைப்பு.

குப்பை என்றதும் முதல்ல நினைவுக்கு வருவது… ஆமா இந்த மட்கும் குப்பை மட்காத குப்பை சிவப்பு பச்சை ப்ளூ டப்பா.

சரி அதுல டைட்டில் வர்றாப்ள திங்கிங்.
.
.
.
.
மட்கும் வாழ்வில் மட்காத காதல்.

மட்கும் :சிதைகின்ற (தட்ஸ் மீன் உருதெரியாம போறது) நம்ம லைப் நாம பாட்டி தாத்தா ஆனப்பிறகு… செத்துட்டப்பிறகு… அடுத்த ஜெனரேஷனுக்கு நம்ம லைப் தெரியுமா? சான்ஸே இல்லை. எனக்கு எங்க ஐயம்மை தவிர அவங்களுக்கு முன்ன இருந்தவங்க லைப் தெரியாது.
சோ… நார்மல் லைப் மெம்பர்ஸ் வாழ்க்கை சிதையுது. மத்தவங்களுக்கு தெரியாது.
மட்கும் வாழ்வில் வச்சிட்டேன்.

மட்காத: சிதையாத(தட் மீன்ஸ்… இந்த பிளாஸ்டிக் மாதிரி. அது அழியாம இருக்கும்ல)
அதனால் சிதையாத காதல் என்ற அர்த்தத்தில் மட்காத காதல்

தலைப்பு ரெடி: மட்கும் வாழ்வில் மட்காத காதல்

அட்டைப்படம்?
ஏஐ எல்லாத்திடமும் குப்பைக்காரன் பக்கத்துல ஒரு‌பொண்ணு கேட்டேன். அது கேட்டது குத்தமாடா… வெளிநாட்டு குப்பைக்காரனை தான் வரிசையா காட்டுது. அந்த யூனிபார்ம். வெள்ளைக்கலரு… நான் தமிழன் பேஸ் வச்ச கதை தானே எழுதறேன்.
ஏலேய்… ஏஐ.
அட்டைப்படத்துலயே லாஜிக் உதைக்கும்டா. வேற தானு கேட்டு பார்த்தேன். ம்கூம்.. எனக்கு தந்தவை எல்லாம் முதல்ல சொதப்பிட்டான் ஏஐ.

எழிலக்கா நித்யாவிடம் ஏஐ யிடம் ஒரு பிக் கேட்டேன் இப்படி தர்றான்
என்னதான் பண்ணறது இவனை(ஏஐ)னு புலம்ப, எழிலக்கா ப்யூ மினிட்ஸ்ல இது பாருங்க வீணா.. இது எப்படியிருக்குனு ஹோட்டல்ல ஆர்டர் பண்ணியது போல அழகா தந்தாங்க. ‘எக்கா… அதெப்படி உங்களுக்கு தர்றான்
எனக்கு வெளிநாட்டு ஆளா தர்றான்னு தமிழ் பையன் போட்டா பொட்டு வச்சி பூவச்சி தர்றான்
துப்புரவு தொழிலாளி கதைக்கு பார்மல் மேனா பிக் தரமாட்டறான்
ஸ்டையிலா சிக்ஸ் பேக் வச்சிலாம் தர்றான்
‌ கேட்டதுக்கு மேல தர்றான் அக்கா. நீங்க தந்த பிக் பெர்பெக்ட்டா இருக்கு. இதை நான் எடுத்துக்கவானு கேட்டேன். உங்களுக்கு தான் இது. எதுனாலும் வச்சிக்கோங்கனு சொன்னாங்க.
  ரியலி தேங்க்ஸ் எழில்அக்கா.

அந்த அட்டைப்படம் தான் கவர்பிக்ல இருக்கு. அட்டைப்படம் டெடிகேட் டூ எழிலன்பு அக்கா

அடுத்து கதை முதல்ல எல்லாம் ஆரம்பிச்சிட்டேன். ஆனா யாரும் படிக்க வராதா மாதிரி பீல்.

‘அட விடுமா… நீ எழுது.’ என்ற ம.சா வந்துடுச்சு. நீயிருக்க நான் வேற யாரை தேடப்போறேன். மனசை மட்டும் எந்த நெகட்டிவும் இல்லாம பார்த்துக்கோனு எழுத ஆரம்பிச்சேன். நாம சரியானதை தந்தா நல்ல ரீடர் தேடி வருவாங்க என்ற நம்பிக்கை தான்‌.

ரியலி எனக்கு இது பிடிச்சிருந்தது.

ஆன்ட்டி ஹீரோ இல்லை.
பணக்காரன் இல்லை
டாக்டர் போலீஸ் இல்லை.
    சாதாரண ஆள் ஹீரோ. இவனை என் பாயிண்ட் ஆப் வியூல சரியா தந்துட்டேன்னு ஹாப்பி. மேபீ… லாஜிக் உதைக்கும் குறைகள் இருந்தா சொல்லுங்க மாத்திப்பேன்.

நம்ம டீசெண்ட் ரீடர்ஸுக்கு பிடிச்சிருக்கா? தட்ஸ் இட்.

அடுத்த கதை எதை ரீரன் பண்ணலாம்? இல்லை புதுக்கதையா? பார்ப்போம்.

என்னோடு இணைந்திருங்கள் எனது வாசகர்களே… ஆமா.. எனக்கென்று இருக்கும் வாசகர்களே.. உங்க சப்போர்ட் என் பலம். உங்க கருத்து எனக்கான உற்சாகம். உத்வேகம். மகிழ்ச்சி. அதில் என்றும் மாற்றமில்லை. தினமும் கதை போட்டதும் படிச்சி, சைட்ல கமெண்ட்ஸ் செய்யும் வாசகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்‌. லவ் யூ டியர்ஸ்.

புதிய வாசகர்களுக்கு..‌. வாட்சப் அல்லது தளத்தின் குழுவில் இணைந்திருங்க. என்ன அப்டேட் போட்டாலும் வந்துடும்.

மீண்டும் நன்றி கூறி விடைப்பெறுகின்றேன்.‌

பிரவீணா தங்கராஜ்.

17 thoughts on “மட்கும் வாழ்வில் மட்காத காதல்-30”

  1. Wow but I didnt expect that story going to end. Just now they married. How saravanan will develop himself with his studies and kids etc etc. I expect thta6. If possible pls give one epilock sis. Becz saravanan will.grow by his hardwork and discipline. Fantastic story sis. The explanation of the story title is very beautiful sis. U made it a real life example. Wonderful sis.

  2. Dharshini

    Super sis very nice story 👍👌😍 starting la neenga sonna mathiri enakum edhu enna da story nu konjam yosanaiyave erundhuchu but read panna panna oru interest vandhuchu pa really cleaning velai seyiravanga romba kashtam pattu dhan seyiranga namma avangalaiyum saga manushangala parkanum enaku edhu romba naal ah thonitey erukum sis unga story padichadhuku apparam ennumey avangaluku neraiya seyyanum nu thonudhu sis😊🙏 seekirama next story podunga pa eagerly waiting 😍😘💗

  3. Nala thirpthiyana story sis 1st intha story la saravana um bharathi um sera matangalo one side love ah makkatha kadhal nu nega name vachurupegalo nu nenaichen bt nega epaium pola rmba rmba rmba alaga story kuduthitenga super sis, nega solurathu crct dan sis unga story ya yaruku pidikumo avanga vanthu padikadum nega epaium pola unga style la eluthuga 👍

  4. M. Sarathi Rio

    மட்கும் வாழ்வில், மட்காத காதல்…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 30 Final)

    வாவ்…! சூப்பர், சூப்பர்…
    இது உண்மையிலயே ஒரு மாபெரும் சாதனை தான்.
    ஒரு ஐ.டி. கம்பெனி பெண்,
    ஒரு குப்பை அள்ளும் ஆண்.
    இது ஒரு ஹெவியான சப்ஜக்ட். அதைவிட ஹெவியானது, அந்த பொண்ணை சீரழிச்சு குப்பைத்தொட்டியில் போடுற கதை. அந்த பெண்ணை, அந்த குப்பையள்ளும் ஆணே காப்பாற்றி ஹாஸ்பிட்டலில் சேர்த்து, பின்பு அவனும் அவளும் இணைவதாக கதை. நாலே வரியில் சொல்வது சுலபம் என்றாலும், இதை ஒரு கதையாக கொண்டு வரும் பொழுது லாஜிக் இடிக்குற ஒரு கதையை வைச்சு எப்படித்தான் எழுதப் போறாங்களோன்னு நிறைய கேள்விகளும், சந்தேகங்களும் எங்களுக்கு வந்தது. ஆனா ரைட்டருக்கு அப்படி எதுவும் தோணலை போல, ரொம்ப ஈஸியா தூசி மாதிரி தட்டி விட்டு கதையையே எழுதி முடிச்சிட்டாங்க போங்க.
    உண்மையிலயே இவங்க தைரியத்தையும், டேலண்ட்டையும் பாரட்டியே ஆகணும். கதையும் எந்தவித ஏற்றத்தாழ்வும் இல்லாம, ஈகோ வித்தியாசம் இல்லாம
    ரொம்ப மாஸா வந்திடுச்சுன்னா பாருங்களேன். பாரதி கண்ணம்மா மாதிரி, இதுவொரு பாரதி சரவணன்னு தைரியமா சொல்லலாம். சூப்பர், சூப்பர் அருமை.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  5. Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  6. கதை கரு மிகவும் அருமை.நீங்கள் சொல்வது போல் கதை படிக்க ஆரம்பித்தவுடன் நானும் நிறைய துப்பரவு தொழிலாளிகளை கவனித்தேன். படித்த அனைவருக்கும் இந்த தாக்கம் நிச்சயம் இருக்கும். வித்தியாசமான கதை களத்தில் மீண்டும் அசத்திட்டீங்க.. வாழ்த்துக்கள்🎉🎊

  7. வாவ்!!.. ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது கதை!!.. சூப்பர்‌ கா!!.. அடுத்த கதைக்கு வெயிட்டிங்!!!

  8. Kalidevi

    wow super story and ending sissy. itha ethir pakala kathai mudium nu ITS OK. alaga kondu poning story ah oru ponnu life la mirugam vanthu kadicha apram athaiye ninachitu illama athula irunthu veliya vanthu vazhra antha nilamaila iruntha ponna kapathi help panni aduthu ava mela vantha kadhalaium sollama maraikiran oru kuppai allura velai seiromnu . aana athellam yosikama bharathikum avan mela kadhal vanthu appa amma sammadham vangi kalyanam panni innaiku santhosama irukanga. intha mari life tha oru oru ponnum ethir pakuranga athu 100 la orutharku tha kedaikuthu antha mari than intha kathai padikum pothu irunthuchi sissy. Aana nijama intha kathai heading konjam puriyama tha padichathu ena connection nu but ipo unga explanation la purinjithu sissy sorry . correct ah select panni superb ah vachi irukinga epovum pola alaga eluthi alaga mudichi irukinga unga nadaila . vulgur ah romance eluthuravangala ungala pathu kathukalam ippadiyum azhaga eluthalamnu appadi koduthu irukinga.

    congratulations sissy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!