Skip to content
Home » மனம் உன்னாலே பூப்பூக்குதே 15

மனம் உன்னாலே பூப்பூக்குதே 15

பூ 15

ஒரு உணவகத்தில் காலை உணவை முடித்துக் கொண்டு ஆருத்ரா அலுவலகத்தை அடையும்போது பன்னிரெண்டு மணியைத் தாண்டி விட்டது.

தன்னுடைய இடத்திற்கு வந்து கைப்பையை வைத்து விட்டு அமர்ந்தவளை அடுத்த நொடியே வந்து பிடித்துக் கொண்டான் ராம்ஜி.

“காலைல கிளைன்ட் மீட்டிங் இருக்கு வந்துருன்னு நேத்து சொன்னப்ப தலைய தலைய ஆட்டிட்டு கிளம்பி போனல்ல நேத்து நைட்டு இன்னைக்கு மார்னிங் ஹாப் டே லீவ் வேணும்னு மெயில் அனுப்புற. நான் மெயிலுக்கு எந்த அப்ரூவலும் கொடுக்காமலே லீவ் எடுத்து இருக்க? என்ன நெனச்சிட்டு இருக்க உன் மனசுல?” என்று அனைவரும் முன்னிலையில் சத்தமாக கத்தினான்.

“ராம்ஜி காம்டவுன். இன்னைக்கு எங்க வீட்ல முக்கியமான பூஜை. அதனால காலையில என்னால வர முடியல. கிளைமேட் மீட்டிங் மினிட்ஸ் வச்சு நான் ஃபாலோ பண்ணிக்கிறேன். மாடியூல்ல எதுவும் மிஸ் பண்ண மாட்டேன். ப்ளீஸ் டோன்ட் ஷௌட்”

முதல்முறையாக ஆருத்ரா அழுத்தமாக தன் எதிர்ப்பை காட்டியதும் ராம்ஜிக்கு கோபம் வந்துவிட்டது.

“மினிட்ஸா நீ இல்லன்னு அந்த கிளைன்ட் மீட்டிங்கே போஸ்ட்போன் பண்ணிட்டான். இன்னிக்கி ஈவினிங் 4:30க்கு மீட்டிங் ஷெட்யூல் பண்ணி இருக்கான். ஒழுங்கா மீட்டிங் அட்டென்ட் பண்ணிட்டு கிளம்பு.” என்று கூறிவிட்டு வேகமாக அங்கிருந்து அகன்றான்.

மாலை விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்ற மாமியாரின் கட்டளை நினைவுக்கு வர, இங்கே காலையிலேயே மீட்டிங்கை தவற விட்டதால் மாலையும் தவறவிட முடியாது என்ற சூழ்நிலையும் புரிய என்ன செய்வதென்று தெரியாமல் தலையைப் பிடித்துக் கொண்டு  அமர்ந்து விட்டாள்.

மீரா அவள் அமர்ந்திருப்பதை கண்டு “என்ன ஆச்சு ஆரு? ஏன் அப்செட்டா இருக்க?” என்று ஆதரவாக அவள் தோளில் கரம் பதித்தாள்.

இதுவரை தன் வீட்டில் நடந்த எதையும் தோழிகளிடம் பகிராமல் இருந்த ஆருத்ரா இன்று மனதில் ஏற்பட்ட சோர்வு காரணமாகவும், வீட்டிலும் வேலையிலும் எழுந்துள்ள சூழ்நிலை காரணமாகவும் தன் தோழியிடம் வாய் திறந்தாள்.

“நேத்து ஈவினிங் வீட்டுக்கு போன பின்னாடி தான் இன்னைக்கு காரடையான் நோன்பு, காலைல பூஜை இருக்குன்னு சொன்னாங்க. சரி கல்யாணத்துக்கு அப்புறம் வரும் முதல் பூஜை அவர்கள் அப்செட் பண்ண கூடாதுன்னு ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்குன்னு தெரிஞ்சும் நான் லீவ் அப்ளை பண்ணிட்டேன். கிளம்பும்போது இன்னைக்கு சாயங்காலம் சீக்கிரமா வீட்டுக்கு வரணும் வீட்டுக்கு கெஸ்ட் வராங்கன்னு சொல்லி அனுப்பி விட்டாங்க.

இங்க வந்தா ராம்ஜி ஏன் காலையில வரல உன்னால மீட்டிங் கிளைன்ட் தள்ளி வச்சுட்டான் சாயங்காலம் 4:30 மணிக்கு மீட்டிங் இருக்கு அட்டென்ட் பண்ணிட்டு வீட்டுக்கு போனு சொல்றாரு. ஏற்கனவே ஆபீஸ் வேலைய தள்ளி வைத்துவிட்டு தான் காலையில வீட்ல இருந்தேன். இப்பயும் நான் அப்படி தள்ளி வைக்க முடியாது. ஏன்னா ரெண்டு தடவை கிளைன்ட்டை இந்த மாதிரி தவிர்க்கறது நல்லது இல்ல.

அதே நேரம் அவங்க அவ்வளவு தூரம் வீட்டுக்கு வான்னு சொல்லியும் போகலனா வீட்ல தேவையில்லாத பிரச்சினை வரும். எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல” என்று மனதில் இருந்ததை மழை திரும்ப வெள்ளமாக வெளியேற்றினாள்.

“நீ உன் ஹஸ்பண்ட் கிட்ட ஆபீஸ்ல வேலை இருக்கு ஈவினிங் வர முடியாதுன்னு சொல்லிடு. மீட்டிங் முடிச்சுட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக வீட்டுக்கு போயிடு. அதுக்கு மேலேயும் பிராப்ளம் வந்தா அது நம்ம கைல இல்ல.” என்றதும் ஆருத்ராவுக்கும் அதுவே சரி என்று தோன்றியது.

இரண்டு முறை கோகுல கிருஷ்ணனின் கைபேசிக்கு அழைத்தும் அவன் அதனை ஏற்கவில்லை எப்படியும் தனது தவறிய அழைப்பை கண்டு அவனை அழைப்பான் என்ற நம்பிக்கையில் தன் கைபேசியை தூக்கி ஓரமாக வைத்துவிட்டு வேலையில் மூழ்கிப் போனாள் ஆருத்ரா.

மாலை அரை மணி நேரம் தாமதமாகவே அந்த சந்திப்பு ஆரம்பமானது. போன முறை அவள் செய்த அவளது பணியை பாராட்டி, அது தங்களுக்கு எந்த அளவுக்கு உதவியாக இருந்தது என்று கூறிய அந்த கிளைன்ட் கிளமெண்ட், இம்முறையும் அதே போன்ற உழைப்பு வேண்டும் என்றும், அது நன்றாக அமையும் பட்சத்தில் அடுத்த பிராஜெக்ட் செய்ய அவளை வெளிநாட்டில் இருக்கும் அவரது கம்பெனிக்கு வந்து வேலை செய்யும்படி பேசி முடித்து அவளுக்கு விடை கொடுக்கும் போது நேரம் ஏழை தாண்டி விட்டது.

அவசர அவசரமாக கிளம்பிய ஆருத்ரா, வாகன நெரிசலில் சிக்கி, வியர்த்து வடிந்து, மதியம் உண்ணாதது வேறு சேர்ந்து சோர்ந்து போய் வீடு வந்த போது மணி எட்டு ஐம்பது.

போர்டிகோவில் இருந்த நாற்காலியில் மாமனார் சற்று அதிருப்தியான முகத்துடன் அமர்ந்திருப்பதைக் கண்டு மனதில் கலக்கம் எழுந்தாலும் காட்டிக் கொள்ளாது வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தாள்.

“வாடியம்மா வா. சீக்கிரம் வான்னு சொல்லி அனுப்பியதும் வேணும்னு லேட்டா வந்திருக்க. அப்படித்தானே? இவங்க என்ன சொல்றது நாம என்ன கேட்கறதுன்னு ஒரு எண்ணம்.” என்று வராண்டாவில் நின்று அழுத்தமாக கேட்ட மாமியாரை ஒரு பெருமூச்சுடன் நோக்கி விட்டு, தன் மாமனாரை ஏறிட்டாள்.

அவரும் ஏதும் பேசாமல் அமைதியாக இருக்க, “மாமா காலைல முக்கியமான கிளைன்ட் மீட்டிங் இருந்தது. நான் பூஜை இருக்குன்னு சொல்லி லீவ் போட்டுட்டேன். அதுனால மீட்டிங் சாயங்காலம் மாத்தி வச்சுட்டாங்க. அஞ்சு மணிக்கு தான் கிளைன்ட் வந்து பேசினாங்க. முடிஞ்சதும் அவசரமா கிளம்பி வந்தேன்.” என்று பொறுமையாக விளக்கினாள்.

“கேள்வி கேட்டது நான். பதில் ஏன் அங்க சொல்ற? அப்பாவும் பிள்ளையும் நோக்கு சப்போர்ட் பண்ணுவான்னு நினைச்சியா? எங்க மாமா வந்து காத்துண்டு இருந்துட்டு இப்ப தான் போறார். அவர் முன்னாடி தலை நிமுந்து பேச முடியல. எங்க உன் மாட்டுப்பொண்ணுன்னு அவர் கேட்கறச்ச முகத்தை எங்க வச்சுக்கறது? ஆபிஸ் நேரம் முடிஞ்சதும் வராம எங்கேயோ சுத்திட்டு இப்ப வந்து காரணமா சொல்ற?” என்று கடுமையாக பேசினார்.

பொறுமை பறந்தது ஆருத்ராவுக்கு,  “இங்க பாருங்கோ மாமி, காலைல நீங்க சொல்லி நான் லீவ் போடல. ஆபிஸ் இருக்குன்னு பேக்கை தூக்கிண்டு கார்த்தாலயே போயிருக்க முடியும். ஆனாலும் ஆத்துல பூஜை இருக்குன்னு இருந்தேன்ல! சாயங்காலம் ஆத்துக்கு யார் வரப்போறான்னு எனக்கு தெரியுமா? என்கிட்ட சொன்னேளா? இல்லைல்லையா? ஆபிஸ்ல முக்கியமான வேலை இருக்கவும் தான் முடிச்சிட்டு வர வேண்டிய சூழல். என்னைப் பத்தி தெரியாம எங்கோ ஊர் சுத்திட்டு வந்தாப்ல பேசறேளே! உங்க கிட்ட நான் இதை எதிர்ப்பார்க்கல மாமி. ஆபிஸ் பயோமெட்ரிக் இருக்கு. எப்ப உள்ள போனேன் எப்ப வெளில வந்தேன்னு. ஆனா அதை நிரூபிக்க வேண்டிய தேவை எனக்கு இல்ல.” என்று வார்த்தைகளை கடித்துத் துப்பினாள்.

“நான் வேணும்ன்னு பண்ணினா மாதிரி மாமி பேசறாளே? நீங்களும் கேட்டுண்டு இருக்கேளே மாமா. என்னை உன் அப்பான்னே நெனச்சுக்கோன்னு சொன்னேளே! உங்க பொண்ணா இருந்தா வந்தவா முன்ன அவமானமா போச்சுன்னு நினைச்சுருப்பேளா? ‘அவளுக்கு ஆபிஸ்ல வேலை இருந்திருக்கும் நானே அடுத்த வாரக் கடைசில உங்காத்துக்கு அவளை அழைச்சுண்டு வர்றேன்’னு சொல்லி இருப்பேள். மாமியை இப்படி பேச விட்டிருக்க மாட்டேள்.

உண்மையிலேயே உங்களை அப்பா போல நினைச்சேன் மாமா. ” என்று கண்ணீர் வரக் கூறியவள் வேகமாக தன் அறைக்கு சென்று விட்டாள்.

ஆதிநாதன் மருமகளின் பேச்சில் ஸ்தம்பித்துப் போயிருந்தார்.

உண்மை தானே! இந்த நொடி வரையிலும் கோகுல கிருஷ்ணன் வீட்டிற்கு வரவில்லையே! அவன் வராதது பற்றி இருவருமே பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையே!  சுபாஷிணியின் மாமா திருமண நேரத்தில் உடல் நலமில்லாமல் இருந்தவர், இன்று தம்பதிகளை வாழ்த்த வருவதாக கூறி இருக்க, ஆருத்ராவை எதிர்பார்ப்போடு பார்த்துக் கொண்டிருந்தனர். அவள் வராது போனதும்,

‘சரி இந்த முறை பார்க்க முடியல. அடுத்தமுறை பார்ப்போம்’ என்று எழுந்து கிளம்பிவிட்டார் அந்த பெரியவர். ஆனால் தன் மாமா வந்து காத்திருந்தும் இப்படி ஆனதே என்று சுபாஷிணி கோபத்தில் புலம்பிக்கொண்டே இருக்க, அவருக்குமே சீக்கிரம் வந்திருக்கலாமே என்ற எண்ணம் வந்துவிட்டது.

இப்பொழுது அவள் பேசிவிட்டு செல்லவும் அவரது நியாயம் அறிந்த மனம் அவரை இடித்துரைத்தது.

வேகமாக எழுந்து அவர் உள்ளே செல்லும் நேரம் வாசல் கேட் திறந்து வண்டியுடன் உள்ளே நுழைந்தான்.

அவன் வீட்டினுள் நுழையும் முன்னரே அவனைப் பிடித்துக் கொண்டார் சுபாஷிணி.

“ஏன்டா நேரமா வாங்கன்னு உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் சொல்லி தானே டா அனுப்பினேன். அவளும் இப்ப தான் வர்றா. நீயும் இப்ப தான் வர. மாமா தாத்தா வந்துட்டு உங்களை பார்க்க முடியலன்னு ஆதங்கப்பட்டுட்டு போறார். அவ பண்றது கொஞ்சமும் நன்னா இல்ல. கேள்வி கேட்டா எதிர்த்து மரியாதை இல்லாத பேசிட்டு போறா. சொல்லி வை கோகுல். நான் இன்னிக்கு வரை அவள்ட்ட மாமியாராட்டாம் நடந்துக்கல. அப்படி நடந்துக்கும் படி செய்ய வேண்டாம்னு சொல்லி வை.” என்று கூறிவிட்டு விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார்.

கோகுல் கோபத்துடன் தந்தையை நோக்க, அவரோ அவன் வந்ததையோ மனைவி பேசியதையோ கவனிக்காமல் தன்னுடைய சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.

அன்னையின் குற்றச்சாட்டுக்கு தந்தை ஏதும் சொல்லாதிருக்கவும், நேராக அறைக்கு சென்றவன் கட்டிலில் அமர்ந்திருந்த மனைவியை நோக்கி,

“ஆபிஸ்ல இருந்து நேரத்துல வரலைன்னா கூப்பிட்டு தகவல் சொல்றதுக்கு என்ன? காணோமேன்னு கேள்வி கேட்டா அம்மாவை மரியாதை குறைவா எதிர்த்து பேசினியாம். உன்கிட்ட நான் இதை எக்ஸ்பெக்ட் பண்ணல ருத்தும்மா. வந்ததும் வராததுமா அம்மா வாசல்ல வச்சு இப்படி பேசறது எனக்கு கஷ்டமா இருக்கு.” என்று கூறியவன் அவளது பதிலை எதிர்பார்க்காமல் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

ஆருவின் மனம் விண்டு போனது. ‘இவராவது எனக்கு துணையா இருப்பார்ன்னு கனா கண்டேனே  இவரும் இப்படி பேசிட்டு போறாரே!’ என்று நொந்து போனாள்.

எழுந்து வெளியே வர, “அம்மா மகாராணி, ராத்திரிக்கு டிபன் பண்ணு போ” என்று கூறிவிட்டு டிவியை ஆன் செய்து சோபாவில்  அமர்ந்துவிட்டார்.

எந்த யோசனையும் இல்லாமல் நேராக சமையலறை சென்று அங்கிருந்த தேங்காய், பொட்டுக்கடலை மிளகாய் வைத்து சட்னி அரைத்தவள், பிரிஜ்ஜில் இருந்த தோசை மாவை எடுத்து தோசை வார்க்க ஆரம்பித்தாள்.

முதலில் மாமனாருக்கு தட்டில் வைத்துக் கொடுத்தவள், மாமியாருக்கும் கொடுத்து கணவனுக்கும் செய்து கொடுத்துவிட்டு பாத்திரங்களை ஒதுக்கி கிச்சனை சுத்தம் செய்துவிட்டு அமைதியாக சென்று படுத்துக் கொண்டாள்.

சற்று நேரத்தில் கதவு தட்டப்பட்டது. எழுந்து சென்று திறந்தவள் மாமனார் நிற்பதைக் கண்டு விழித்தாள்.

அவர் கையில் ஒரு தட்டு இருந்தது.

“என்ன மாமா?” என்று கேட்க,

“நீ சாப்பிடவே இல்லையே மா. சாயங்காலம் மாமா வந்து உன்னைப் பார்க்காம போன வருத்தத்தில் தான் நான் இருந்தேன். அதுக்காக சுபா பேசியதை நான் சரின்னு சொல்லல. ஆனாலும் நீ வரலன்னு தகவல் சொல்லி இருக்கலாம் இல்லையா?” என்று கேட்டார்.

“நான் உங்க பையனுக்கு மதியம் கால் பண்ணினேன் மாமா. அவர் எடுக்கல. திருப்பி கூப்பிடவும் இல்ல. நீங்க ஏன் மாமா தோசை எல்லாம் வார்த்து சிரமப்படுறேள்?” என்று தயங்க,

“அவன் தான் நீ சாப்பிடாம போனதை பார்த்து தோசை வர்த்தான். நான் சைசா அதை எடுத்துண்டு வந்து உன்னை சமாதானம் பண்ண பார்த்தேன். அவன் உன்னை ஏதானம் பேசி இருந்தாலும் அதை பெருசா எடுக்காதம்மா. அவனை வாசல்ல வச்சு அவ பேசிட்டா.” என்றவர்,

“எங்களை சமாதானம் பண்றதுக்கு பதிலா உங்க மனைவியை கேள்வி கேட்கலாமேன்னு உனக்கு தோனலாம். அவளை முதல் தடவை நீ எதிர்த்து பேசுற. சரியாத்தான் சொன்ன. இருந்தாலும் நானும் உனக்கு சாதகமா பேசினா அவ உடைஞ்சு போயிடுவா.  அவ செஞ்சது தப்புன்னு நிதானமா நான் எடுத்து சொல்றேன். நீ வருத்தப்படாத.” என்று கூறிவிட்டு தட்டை அவள் கையில் கொடுத்துச் சென்றார்.

இத்தனை தூரம் மாமனார் அனுசரணை காட்டுகிறாரே என்று வியந்தபடி அறையில் இருந்த சேரில் அமர்ந்து தோசையை உண்ணத் தொடங்கினாள்.

சட்னி சற்று மந்தமாய் தான் இருந்தது. மாமியார் கைவண்ணம் போல பிரமாதம் என்று சொல்லி விட முடியவில்லை. மீண்டும் அவர் தன்னிடம் இயல்பாக பேசும்போது அவரிடமே கேட்டு கற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

அடுத்த இரண்டு தோசைகளை எடுத்துக் கொண்டு வந்தான் கோகுல கிருஷ்ணன்.

அவள் தட்டில் அதை வைத்துவிட்டு, “என் மேல கோபமா?” என்று அமைதியாக கேட்க,

“இல்லப்பா. வருத்தம். என் பக்கத்தை கேட்காம கோவமா பேசிட்டு போனது கஷ்டமா இருந்தது.” என்று மனதில் இருந்ததை  மறைக்காமல் கூறினாள்.

“சாரி ருத்தும்மா. ஆபிஸ்ல ஒரே பிரச்சனை. அந்த கடுப்பில் வீட்டுக்கு வந்தேன். வாசல்ல வச்சு அம்மா பேசவும் கோபத்துல உன்கிட்ட அதை காட்டிட்டேன். தப்பு தான்.” என்று அவளருகில் வந்து அமர்ந்தான்.

அவள் நகர்ந்து அமர்ந்து கொண்டாள்.
அவளது வருத்தம் அவள் விலகலில் தெரிந்தது.

“சாரி மா” என்று வருந்தி அவன் கேட்க,

“ஆபிஸ்ல என்ன பிரச்சனை?” என்று பேச்சை மாற்றினாள்.

“அந்த புது கிளைன்ட் கேட்ட எல்லாத்தையும் நான் சரியா தான் செய்தேன். ஏதோ ஒரு பேப்பர் மிஸ் ஆகி இருக்கு. அவர் போன் பண்ணி சொன்னதும் அதையும் அனுப்பியாச்சு. ஆனா சீனியர் என்ன கோவத்தில் இருந்தாரோ, என்னை கத்திட்டார். எப்பவும் ஆபிஸ்ல அடுத்தவன் தப்பு பண்ணினா நான் கோவப்படுவேன். இன்னிக்கு அவர் திட்டவும் எல்லாருக்கும் கொண்டாட்டம் தான்.” என்று மனம் வலிக்க கூறினான்.

“நீங்க அப்படி வேலையில் மிஸ் பண்ணுற ஆளா தெரியல. அப்புறம் எப்படி?”

“தெரியல. கடைசி பக்கம். மெயில்ல எல்லாமே இருக்கு. பிரிண்ட் காப்பில மிஸ் ஆகிடுச்சு.”

“நீங்க சி.ஏ முடிச்சுட்டீங்க தானே? தனியா ஆடிட்டிங் பண்ணலாமே! இன்னும் ஏன் இன்னொருத்தர் கிட்ட வேலை செய்யணும்?”

“எனக்கும் ஆசை தான். ஆனா அப்பா தான் தனியா தொழில் மாதிரி எல்லாம் நமக்கு சரி வராது. அவர் நல்ல மாதிரி சம்பளமும் கணிசமா வரும். ஜாப் செக்யூரிட்டின்னு சொல்லி ஜாயின் பண்ண வச்சார்.” என்று மெல்ல சரிந்து அவள் மடியில் தலை சாய்த்தான்.

“இதெல்லாம் ஒரு காரணமா? உங்களுக்கு தனியா ஆபிஸ் போட விருப்பம் இருந்தா போடுங்க. உங்களுக்கான கிளைன்டைல் உங்களை விரும்பி வருவாங்க.” என்று ஊக்கமாக கூறினாலும் இதற்கு முன் அவனிடம் அவள் காட்டிய நெருக்கம் இந்த நொடியில் இல்லை என்பது கோகுல கிருஷ்ணனுக்கு புரியாமல் இல்லை.

அவள் மனதில் காயம் ஏற்பட்டுள்ளது. அது ஆறட்டும் என்று எண்ணியவன் அவள் கூறியதை அசை போட ஆரம்பித்தான்.

15 thoughts on “மனம் உன்னாலே பூப்பூக்குதே 15”

  1. Avatar

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  2. Avatar

    Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr sis 👌👌👌👌👌👌

  3. Kalidevi

    Ena nalum mami apadi pesi iruka kudathu vanthu vsrathathuma rendu per kittaum Yen ippadi porumaiye illama irukinga mami . Athu etha mari gokul ketutu vanthu ippadi pesi iruka kudathu ipovum ava atha pesama un nallathukaga una thaniya business pana encourage panra paru

  4. M. Sarathi

    மனம் உன்னாலே பூப்பூக்குதே…!
    (அத்தியாயம் – 15)

    அச்சோ..! இந்த சுபா மாமி பண்ற கூத்தால, கோகுல் & ஆரு ரெண்டு பேருக்கும் இடையில பிரச்சினை வருதோட, அவங்கவங்க ஆஃபிஸ்லேயும் பிரச்சினை வருதா…? இல்லை, இவங்களுக்குத்தான் நேரம் சரியில்லையான்னு தெரியலையே. இதுல நல்லா பழகுற மாமனார் கூட முகத்தை தூக்கி வைச்சுக்குறாரோன்னு பயந்து வேற வருது. இந்த குடும்பம் உடையாம இருக்கணும்ன்னு தோணுது.
    ஆனா, சுபா மாமியை நினைச்சா, கோகுல் & ஆரு இவங்க ரெண்டு பேரோட வாழ்வும் எதுவும் ஆகக் கூடாதுன்னு தான் பொஸஸிவ்வா நினைக்கத் தோணுது… ஏன்னா, மாமா மாமி ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சுண்டு தான் இருக்காங்க.
    இவங்க ரெண்டு பேரை நினைச்சாத்தான் பயமா இருக்கு.
    😴😴😴
    CRVS (or) CRVS 2797

  5. Avatar

    இந்த மாமி மாமியார் நடக்கல சொல்லது இது வரைக்கும் நடந்துக்கிட்டது எல்லாம் எந்த கணக்குல சேரும்

  6. Avatar

    என்னது இது வரைக்கும் மாமியாரா நடக்கலியாமா😡😡😡😡

  7. Avatar

    ஒண்ணும் இல்லாத விஷயத்தை கூட சுபா மாமி ஊதி பெருசாக்குறாங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *