Skip to content
Home » மனம் உன்னாலே பூப்பூக்குதே 17

மனம் உன்னாலே பூப்பூக்குதே 17

பூ 17

ஆருத்ரா ஆட்டோவில் ஏறிச் சென்றதும் பைக்கை ஸ்டான்ட் போட்டு நிறுத்தியவன்,

“ஏய் என்ன என் ஒய்ஃப் முன்னாடி ஓவரா பேசுற?” என்று கையை மடக்கிக் பல்லைக் கடித்தான்.

“நான் என்ன பொய்யா சொன்னேன்? நீயும் நானும் ஊர் சுத்தினோம் தானே!” என்று அவள் விஷமமாக சிரித்தாள்.

“ச்சீ அன்னைக்கே உன்கிட்ட நான் தெளிவா சொன்னேன், அப்புறமும் என் மனைவி முன்னாடி பேசுறன்னா நீ தெரியாம இதை செய்யல. இந்த சந்திப்பும் எதார்த்தமானது இல்ல அப்படித்தானே?”என்று அவளை முறைத்தபடி வினவினான்.

“பரவால்ல உனக்கு கூட கொஞ்சம் மூளை இருக்கு” என்று அவனை நெருங்கி அவள் வர,

“தள்ளி நில்லு.” என்று அவளை விட்டு ஒதுங்கி வாகனத்தின் பின்னே சென்று நின்றான்.

“அட ஏன் பயப்படுற? நான் உன்னை கடிச்சு சாப்பிட மாட்டேன். தைரியமா பேசு” என்று கேலி செய்தவளை வெறுப்பாக நோக்கினான்.

“நீ என்ன எண்ணத்துல வந்தேன்னு எனக்கு தெரியாது. ஆனா நீ நினைக்கிற எதுவும் நடக்காது.” என்று அழுத்தமாக உரைத்தான். அவன் குரலில் அத்தனை நம்பிக்கை இருந்தது.

“அப்பா.. என்ன ஒரு கான்ஃபிடன்ஸ்? யாரு மேல அது? உன் மேலயா? இல்ல நீ சொன்னதும் பூனைக்குட்டி மாதிரி கிளம்பிப் போனாளே உன் புது பொண்டாட்டி, அவ மேலயா?” என்று நக்கலடித்தாள்.

“அதெல்லாம் உனக்கு தேவையில்லாதது. இப்ப உனக்கு என்ன வேணும்?” என்று எரிச்சலுடன் வினவினான்.

“வேற என்ன? என்னை வேண்டாம்னு சொல்லிட்டு போன நீ எப்படி நல்லா இருக்கலாம்? சந்தோஷமா கோவிலுக்கு வர்ற! அவ உன்னைப் பார்த்து வெட்கப்படுறா… இதெல்லாம் பார்த்தா கடுப்பா இருக்குல்ல!” என்று கைகளை கட்டிக் கொண்டு அவளது வண்டியில் சாய்ந்து கொண்டாள்.

“நான் உன்னை வேண்டாம்னு சொன்னேன் தான். ஆனா அதுக்கு முன்னாடியே நீ என்னை வேண்டாம்னு விட்டுட்டு போனவ தானே! என்னமோ நான் உன்னை காதலிச்சு ஏமாத்துன மாதிரி பேசுற? ச்ச.. நீ என்னவோ பேசிட்டு போ. ஆனா இனிமே என் வாழ்க்கையில் குறுக்கே வராதே! நான் சும்மா இருக்க மாட்டேன்.” என்று கோபத்துடன் கூறிவிட்டு வண்டியை எடுக்கச் செல்ல,

“அட நில்லுப்பா நல்லவனே! எங்க ஓடுற?” என்று குறுக்கே வந்தாள்.

“ஏய் பானு ஒழுங்கா வழி விடு. ஆருத்ரா மனசுல என்னெல்லாம் நெனச்சுட்டு போறாளோ! உன்னால சங்கடத்தை தான் எப்பவும் கொடுக்க முடியும்னு மறுபடி மறுபடி நிரூபிக்கிற. அப்படிப் பார்த்தா நான் கடைசியா எடுத்த முடிவு சரின்னு இப்ப உறுதியா தெரியுது.” என்றவன் அவளை சுற்றிக்கொண்டு வாகனத்தை செலுத்தினான்.

அவன் மனம் அவனிடம் இல்லை. அவன் போ என்று சொன்னதும் ஒரு வார்த்தை பேசாமல் இறங்கி ஆட்டோவில் சென்ற ஆருத்ராவின் மனம் என்ன நிலையில் இருக்கும் என்று அவனால் யோசிக்கவே முடியவில்லை.

அவன் இதைத்தானே அன்றே அவளிடம் சொல்ல நினைத்தான். இதை சொல்லாமல் வாழ்க்கையை தொடங்குவது சரியாக இருக்காது என்று தானே அவ்வளவு தூரம் தயங்கினான்.

ஆனால் அவள் தான்.. அவளே தான் பழைய விஷயங்கள் வேண்டாம் என்று தள்ளி வைத்தாள். என்று எண்ணியதும்.. இல்லையே! அவள் அப்படிச் சொல்ல வில்லையே!  நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டபின் இப்படியான விஷயங்களை பேசுவது புரிதலுக்கு உதவும் என்று தானே கூறி இருந்தாள்.

அப்படிப் பார்த்தால் எங்களுக்குள் புரிதல் வந்து விட்டதா? நான் இன்று அவளிடம் சென்று ஒருத்தியை காதலித்து ஏமாந்து போனவன் நான் என்று எப்படிச் சொல்வது? சொன்னாலும் அவள் அதை சரியா புரிந்து கொள்வாளா?

மனதில் எழுந்த உணர்வுகளை சமாளித்து வீட்டின் வாயிலில் வண்டியை நிறுத்தியவனுக்கு உள்ளே செல்ல தயக்கமாக இருந்தது.

அவன் வண்டி சத்தம் கேட்டும் உள்ளே வராததை கவனித்த ஆதிநாதன், வெளியே வந்து கதவைத் திறந்தார்.

அவன் தயக்கத்துடன் நின்று கொண்டிருப்பதைக் கண்டு,

“என்னாச்சு கண்ணா? ஏன் வெளிலயே நிக்கற?” என்று கேட்க  பதில் சொல்லாமல் தவிப்புடன் அவரை நோக்கினான்.

“என்னடா எங்கேயும் விழுந்து அடிபட்டுடுன்டியா? யார் மேலையும் மோதிட்டியா? என்ன ஆச்சு? வாயை திற டா” என்று பதற்றமாக பேசினார் ஆதி.

“இல்லப்பா ஆருத்ரா கூட கோவிலுக்கு போயிட்டு வரும்போது…” என்று இழுக்க,

“அவ தனியா வந்தாளே, நீ எங்க போயிட்டு வர்ற? கிளைன்ட் யாரும் வர சொன்னான்னு அவளை வீட்டுக்கு அனுப்பிட்டு போயிட்டு வந்தியா?” என்று கேட்டார்.

“இல்லப்பா அந்த பானுப்பிரியா…” என்று இழுத்தான்.

“இப்ப என்னத்துக்கு டா அவளை இழுக்கற நீ? வாழ்க்கை வண்டி நன்னா ஓடுறது பிடிக்கலையோ?” என்று தோளில் தட்டியதும்,

“ப்பா.. சொல்றத கேளு பா. அவ எங்க ரெண்டு பேரையும் ரோட்டுல பார்த்து கண்டபடி பேசிட்டா. நான் ஆருவை உடனே ஆட்டோல அனுப்பிட்டு அவ கிட்ட என்ன இதெல்லாம்ன்னு கேட்டா உன்னை எப்படி நிம்மதியா வாழ விடுவேன்னு சொல்றா.” என்று முகத்தை அழுத்தமாக துடைத்தபடி கூறினான்.

“என்ன டா ஏழரையை இழுத்து வச்சிருக்க நீ? எதுக்கு அவளை தனியா அனுப்பின? அவ என்ன நினைச்சுண்டு வந்தாளோ? இப்ப என்ன சொல்லி சமாதானம் பண்ணுவ? அறிவே இல்ல டா கோகுல் நோக்கு” என்று முதல் முறையாக அவனைத் திட்ட ஆரம்பித்தார்.

“அப்பா..” என்று தவிப்பாய் அழைத்தான்.

“அப்பான்னா.. இப்ப நான் என்ன பண்ண முடியும்? நல்லா பொண்ணை விரும்பி இருக்கணும். இல்ல இது சரிவராது இனி என் வழில வராதன்னு தெளிவா சொல்லி இருக்கணும். ஒன்னும் பண்ணாம இப்ப அப்பான்ன நான் என்ன பண்ணுவேன்?” என்றவர் முகமும் வாடித்தான் இருந்தது.

“இல்லப்பா. நான் ஆருத்ரா கிட்ட ஏற்கனவே இதை பேச முயற்சி பண்ணினேன். அவ தான் அப்பறம் பேசிக்கலாம். முதல்ல புரிஞ்சு வாழலாம்ன்னு சொன்னா.” என்று குழந்தை போல கூறியவனை தட்டிக் கொடுத்தவர்,

“தலையை விட்டாச்சு. இனி என்ன நடந்தாலும் அதை அனுபவிச்சு தான் ஆகணும். இப்படி வாசல்ல நின்னா என்ன அர்த்தம்?” என்று அவனுக்கு தேறுதல் சொல்லி உள்ளே அழைக்க,

கதவைத் திறந்து கொண்டு அங்கு வந்தாள் ஆருத்ரா.

“என்னாச்சு மாமா? அவர் வந்த சத்தம் கேட்டுது, ஆளைக் காணலன்னு நீங்க வெளில வந்ததை பார்த்தேன். உங்களையும் காணலையே நான் வந்தேன். நானும் இப்ப உங்களோட பேசின்டு நின்னக்க மாமி வந்துடுவா.” என்று சிரித்தவள்,

“ரெண்டு பேரும் உள்ள வாங்கோ” என்று அழைத்து விட்டு உள்ளே சென்றாள்.

“டேய் அவள் முகத்துல கோபம் இல்ல. போய் பேசி சமாதானம் பண்ணு. சரிவரலன்னா மொட்டை மாடிக்கு அழைச்சுண்டு வா. நான் பேசி புரிய வைக்கிறேன். உன் அம்மா காதுல விழுந்துடாம பேசுங்கோ… என்ன?” என்று அவனை உள்ளே வரும்படி அழைத்துவிட்டு  முன்னால் நடந்தார்.

வீட்டினுள் நுழைந்து வண்டியை நிறுத்தியவன் வேகமாக தன்னுடைய அறை நோக்கில் நடக்க, இத்தனை நேரம் மகனும் கணவனும் வெளியே நின்று இருந்ததை அறிந்த சுபாஷினி

“என்னடா எனக்கு தெரியாம அங்க மாநாடு?” என்று சட்டமாக கேள்வி எழுப்பினார்.

“மாநாடெல்லாம் ஒன்னும் இல்ல” என்று சலிப்பாய் பதில் அளித்தவன் தன அறைக்கு செல்வதிலேயே முனைப்பாக இருக்க,

“இப்ப எதுக்கு பரபரன்னு இருக்க?”என்று அவனையே உற்று நோக்கினார் சுபா.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல வெளியில போயிட்டு வந்துட்டு கசகசன்னு இருக்கு. டிரஸ் சேஞ்ச் பண்ணனும். பேஸ் வாஷ் பண்ணனும். அதான்.” என்று அவசரமாக பதில் தந்தவன் கிடுகிடுவென தன் அறைக்குள் சென்று கதவை மூடினான்.

ஒரு பெருமூச்சுடன் இனி மனைவியை எப்படி சமாளிப்பது என்ற எண்ணத்தில் அறைக்குள் கண்களால் துழாவ, அவன் மனைவி தான் அங்கே அகப்படவில்லை.

ஆருத்ரா அறையில் இல்லாததை கவனித்து கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவனை மேலும் கீழும் பார்த்த சுபாஷினி

“அவ்ளோ அவசரமா உள்ள போன, அப்படியே திரும்பி வந்திருக்க?” என்று கேள்வி எழுப்ப,அதற்கு மேல் பொறுமை இல்லாதவனாக,

“இப்போ உனக்கு என்ன தான் வேணும்? எனக்கு முக அலம்பிக்கணும் போல இருந்தது போனேன். இப்ப வேண்டாம்னு தோன்றது வந்துட்டேன். சும்மா நைநைன்னு” என்று குரலை உயர்த்திவிட்டு வேகமாக சமையலறை நோக்கிச் சென்றான்.

அங்கே சப்பாத்தி தேய்த்துக் கொண்டிருந்தாள் ஆருத்ரா. அவனை கண்டதும்,

“ஒரு பைவ் மினிட்ஸ் டிபன் ரெடியாயிடும்” என்று பதில் தர அவனும் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்து விழித்தான்.

மகனும் மருமகளும் சமையலறையில் பேசிக் கொண்டிருப்பதை கவனித்து சற்று பதற்றத்துடன் ஹால் சோபாவில் வந்து அமர்ந்தார் ஆதிநாதன் .

அவரை கண்டதும் “உங்க பையனுக்கு வர வர ரொம்ப தான் வாய் கூடி போச்சு. உள்ள வந்தவன் நேரா ரூமுக்கு போக இருந்தான். ஏண்டா அப்படின்னு கேட்டா. ரெஃப்ரஷ் பண்ணனு சொன்னான், பண்ணாமலே வெளியில வந்தா என்னடான்னு கேட்டா நை நைன்னு பண்றேனாம்.” என்று குற்றப்பத்திரிகை வாசிக்க ஆரம்பித்தார்

ஆனால் இன்று ஆதிநாதன் இருக்கும் மனநிலையில் மனைவி பற்றி எல்லாம் அவருக்கு எங்கே சிந்தனை? மகனின் வாழ்க்கையில் குழப்பம் வந்துவிடும? என்ற பதற்றத்தில் இருந்தவர்,

“சும்மா அவனை ஏதாவது கேள்வி கேட்டுகிட்டே இருந்தா அவனும் தான் என்ன செய்வான்? வெளியில் வேலைக்கு போயிட்டு வர ஆம்பளைக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கும். நின்னா நடந்தான்னு எல்லாத்துக்கும் கேள்வி கேட்டா பொறுமையா பதில் சொல்லின்டு இருப்பானா?” என்றவர் மனைவியை திரும்பியும் பார்க்கவில்லை.

அவளோ கணவரின் இந்த பதிலில் எரிச்சலானவராக “ஆத்துக்காரியை பாக்க தான் ஓடுறான்னு தெரிஞ்சிருந்தா நான் ஏன் கேள்வி கேட்கிறேன்? சொல்ல வேண்டியது தானே! என் ஆம்படையாளை பாக்க போறேன்னு. அப்பறம் ஏன் நான் கேள்வி கேட்டுண்டு வரேன்?” என்று சடைத்துக் கொண்டவர் கணவரின் பார்வை சமையலறை பக்கம் இருப்பதை கவனித்தவராக

“இப்ப என்னதுக்கு அந்த பக்கமே பாத்துன்டு இருக்கேள் நீங்க? ஆத்துக்காரி சமையல்கட்டுல இருந்தா இவனும் அங்கே போய் குடியிருக்கான்.” என்று எரிச்சலாக கூறிய போது சற்றும் யோசிக்காமல்,

“உனக்கு சமையல்கட்டுல உதவிக்கு வேணும்னா நான் நிக்கணும். ஆருத்ராவுக்கு அவன் நின்னா உனக்கு புடிக்கலையா? வர வர டிபிகல் மதர் மெட்டீரியலா மாறிட்டு வர்ற, கொஞ்ச நாள்ல உன்ன அறியாம மாமியார் மெட்டீரியலா மாற போற. அப்புறம் நீ தலைகீழா நின்னு தண்ணு குடிச்சாலும் அந்த குழந்தைகளோட அன்பு உனக்கு கிடைக்காது.” என்று எரிச்சலுடன் கூறியவர் தவிப்பாக ஹாலுக்கும் சமையல் அறைக்கும் இடையே இருக்கும் டைனிங் ஹாலில் பூனை குட்டி போல நடை போட துவங்கினார்.

சமையலறையில் தன் கணவனின் கண்ணில் தெரியும் அலைப்புறுதலை காண சகிக்காதவளாக,

“அச்சோ கிருஷ் தயவு செஞ்சு இப்படி தவிப்பா நிக்காதீங்க. நான் ஒண்ணுமே நினைக்கல. எனக்கு அந்த பொண்ண பத்தி ஏற்கனவே தெரியும். அதனால கொஞ்சம் சமாதானம் ஆகுங்க” என்று அவன் கைகளை பற்றி கொண்டு கண்ணோடு கண்ணோக்கி நிதானமாக கூறினாள்.

“என்ன சொல்ற உனக்கு பானுப்பிரியாவை பற்றி ஏற்கனவே தெரியுமா? யார் சொன்னது? ஆத்துல அம்மாவுக்கு கூட தெரியாது. அப்பாட்ட மட்டும் தான் பிரச்சனை நடந்தப்போ நான் எல்லாத்தையும் சொன்னேன். உனக்கு எப்படி தெரியும்?”என்று படபடத்தான்

“அவங்க நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே என்னை நேரில் பார்த்து உங்களை காதலிக்கிறதாகவும், நீங்க உங்க அம்மா அப்பா பேச்சை கேட்டு என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதித்து இருக்கிறதாகவும், உங்களுக்காக கல்யாணத்தை நான் நிறுத்தனும்னு வந்து பேசினாங்க.” என்று தரையை பார்த்தபடி பொறுமையாக கூறினாள்.

“என்ன சொல்ற அவ உன்ன பார்த்து பேசினாளா? கல்யாணத்தை நிறுத்த சொன்னாளா? இவ்வளவு நடந்து இருக்கு… நீ என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல?” என்று அவசரமாக கேட்டவன் பின் நாக்கை கடித்துக் கொண்டான்.

“சாரி முதல்ல நான் தான் எல்லாத்தையும் சொல்லி இருக்கணும். அன்னைக்கு சொல்ல தான் ட்ரை பண்ணுனேன்.” என்று அவன் பேச்சை துவங்கும் போது மெல்ல அவன் இதழ்களில் தன் விரலை பதித்து,

“எனக்கு எந்த விளக்கமும் தேவையில்லை. இப்போ அவங்க உங்க வாழ்க்கையில் இல்ல. நான் தான் உங்க மனைவி. உங்க மனசுல நான் தான் இருக்கேன். எனக்கு இது தெளிவா தெரியும். தேவை இல்லாம எதையும் போட்டு குழப்பிக்காதீங்க. எதை பத்தி நாம நைட் பேசுவோம். இப்ப சாப்பிடலாம்.”

சொல்லிவிட்டு அத்துடன் பேச்சு முடிந்தது என்பது போல சப்பாத்தியை அடுப்பில் வாட்டி எடுக்க ஆரம்பித்தாள்.

16 thoughts on “மனம் உன்னாலே பூப்பூக்குதே 17”

  1. Kalidevi

    Aaru purinji kita ivlo vishayam nadanthu iruku aana ethaium kamichikama yosikama kejama iruka great aaru ava thana vitu poi iruka onnu pochina atha vida nallathu kedaikum solvanga antha mari tha gokul unaku aaru kedachi iruka

  2. M. Sarathi Rio

    மனம் உன்னாலே பூப்பூக்குதே…!
    (அத்தியாயம் – 17)

    உண்மையிலே… இந்த ஆரு ஒரு பொக்கிஷம் தான். அந்த குடியை கெடுக்குறவ கல்யாணத்துக்கே முன்னாடியே ஆருவை சந்திச்சு கல்யாணத்தை நிறுத்தச் சொல்லியும்.. ரிஷிமூலம் நதிமூலம் எதையும் ஆராயாம
    எத்தனை ஸ்ட்ராங்கா பானுவை ஃபேஸ் பண்ணியிருக்கா பாருங்களேன். அநேகமா ஆரு கொடுத்த நோஸ் கட்டுல இப்ப வயிறெரிஞ்சுப்போய் ரீ என்ட்ரீ கொடுத்திருக்கான்னு நினைக்கிறேன். ஆனா, அந்த பானுவோட பாச்சா எதுவும் நம்ம ஆரூ கிட்ட பலிக்காதுன்னு அந்த குதர்க்ககாரிக்கு இன்னும் புரியலை பாருங்களேன்.

    ஆனா, இந்த சுபா மாமி வர வர ரொம்ப மோசமாயிட்டே போறாங்க. ஆரு மேல தூக்கின கத்தியை இன்னும் இறக்காம இருக்காங்களே. ம்… கத்தி ஆருவை காயப்படுத்தப் போகுதா…? இல்ல, கோகுலை காயப்படுத்திப் ஒரேயடியா குடும்பத்தை விட்டே விலகிப் போகப்போறானா தெரியலையே..?
    😉😉😉
    CRVS (or) CRVS 2797

  3. Avatar

    கிருஷ் நீ ரொம்ப லக்கி டா, அதான் அருமையான ஆம்படையா நோக்கு கிடைச்சிருக்கா

  4. Avatar

    Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr sis 👌👌👌👌👌👌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *