Skip to content
Home » மயங்கினேன் நின் மையலில்…. அத்தியாயம் 18

மயங்கினேன் நின் மையலில்…. அத்தியாயம் 18

இதைக் கேட்டு கண்ணன் கொஞ்சம் கூட அதிர்ச்சி அடையவில்லை.  இப்படித்தான் நடக்கும்  என்பதை ஏற்கனவே அவன் யூகித்திருந்தான்.

இன்ஸ்பெக்டர் அப்படி சொன்னதும்  கான்ஸ்டபிள் இரண்டு பேர் கண்ணனை உள்ளே அழைத்து போனார்கள்.

“சார்… சார்…. நான் சொல்றதை கேளுங்க சார்… என்னை பொறுமையா கூட அடிக்கலாம்.  ஆனா இப்போ பூர்ணாவை கண்டுபிடிச்சே ஆகணும்.”  என்று அவன் புலம்பிக்கொண்டே அவர்கள் இழுத்த இழுப்பிற்கு நடந்து கொண்டிருந்தான்.

“டேய்… இங்க பாரு  இது பொண்ணு விஷயம். அவ்வளவு ஈசி கிடையாது. இதுக்கு நாங்க பிரஸ் அப்புறம் மேலிடம்ன்னு  எல்லாத்துக்கும் பதில் சொல்லணும். உண்மைய சொல்லு…  அந்த பொண்ணை என்ன பண்ண?”  என்று கேட்டவர்களோ அவனை அடிக்க ஆரம்பித்தார்கள்.

“ஐயோ சார்…. சொல்றத கேளுங்க… நான் எதுவுமே பண்ணல… நானே தப்பு பண்ணி இருந்தா எதுக்காக இப்போ  ஸ்டேஷனுக்கு வந்து கம்பளைன்ட் கொடுக்க போறேன்? புரிஞ்சுக்கோங்க சார்…”  என்று அவனும் கெஞ்சினான்.

ஆனால் அவன் சொல்வதை காது கொடுத்துக் கூட கேட்க  கூட தயாராக இல்லாதவர்களோ, அவனை நிறைய அடித்து விட்டார்கள்.

அவனும் வலி தாங்காமல் கதறிக் கொண்டிருந்தான்.

அப்பொழுது இன்ஸ்பெக்டரின் மேஜையில் வைக்கப்பட்டிருந்த கண்ணனின் போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது.

அதை என்னவென்று எடுத்து அவர் பார்க்கவே, பூர்ணாவின் எண்ணில் இருந்து தான் அவனுக்கு மெசேஜ் வந்திருந்தது.

ஆம் கண்ணன் நிறைய முறை பூர்ணாவுக்கு ஃபோன் முயற்சி செய்திருக்கிறான். ஆனால் அவளின் எண் ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்து வந்தது.

இப்பொழுது பூர்ணாவின் மொபைல் ஆன் செய்யப்பட்டதும் அதற்கான மெசேஜ் கண்ணனின் எண்ணிற்கு வந்திருக்கிறது.

பூர்ணாவின் எண் ஆனது அவனின் ஃபோனில் ஏற்கனவே சேமித்த வைக்கப்பட்டிருந்ததால், அது பூர்ணாவின் எண் தான் என்பதை ஆய்வாளரும் எளிமையாக கண்டுபிடித்தார்.

அந்த மெசேஜை பார்த்ததும் அவருக்கு ஏதோ தோன்றவே “கான்ஸ்டபிள்…. ஒரு நிமிஷம் அவனை வெளியே கூட்டிட்டு வாங்க” என்று சத்தமாக சொன்னார்.

கண்ணன் வெளியே வந்ததும், அவனிடம் போனை காட்டி “இந்த நம்பர் தான் அந்த பொண்ணோடதா?”  என்று கேட்டார்.

போனை வாங்கி பார்த்தவனும் “ஆமா சார்… இது பூர்ணா நம்பர் தான்… நான் காலையில இருந்து பூர்ணாவுக்கு நிறைய டைம் போன் ட்ரை பண்ணிட்டு இருந்தேன். அவங்க போன் சுவிட்ச் ஆப்னு வந்தது.  இப்போ போன் ஆன் பண்ணிட்டாங்க போல.. அதனால எனக்கு மெசேஜ் வந்திருக்கு…” என்று அந்த வலியிலும்  அத்தனை பதற்றமாக  பேசினான் கண்ணன்.

“சரி …. அந்த பொண்ணோட நம்பருக்கு  போன் பண்ணி ஸ்பீக்கர்ல போடு” என்று இன்ஸ்பெக்டர் சொன்னதும், கண்ணனும் கொஞ்சம் கூட தாமதிக்காமல் பூர்ணாவின் எண்ணிற்கு போன் செய்தான்.

பூர்ணாவின் போன் ரிங் ஆன அடுத்த இரண்டே நொடிகளில் எதிர்ப்புறம் இருந்தவர் போனை அட்டென்ட் செய்து பேசினார்.

“ஹலோ பூர்ணா…. நீங்க எங்க இருக்கீங்க? எதுக்காக இப்படி எல்லாம் நடந்துக்கிறீங்க?” என்று கண்ணன் பதற்றமாக பேசவே

“சார் சார்…. ஒரு நிமிஷம்… நான் ஜி.ஹெச் ல இருந்து பேசுறேன். இந்த போன் யாரோடதுன்னு தெரியல. ஒரு பொண்ணு ஆக்சிடென்ட் ஆகி இங்க வந்திருக்காங்க. அவங்களோட பேக்ல இந்த போன் இருந்தது. இப்போ தான்  சார்ஜ் போட்டு ஆன் பண்ணேன். எனக்கு இதோட பாஸ்வேர்ட் தெரியல. சோ, யாராவது போன் பண்ணா சொல்லிக்கலாம்ன்னு நினைச்சேன்.  இந்த பொண்ணுக்கு நீங்க யாரு?” என்று எதிர்ப்புறம் பூர்ணாவின் போனில் இருந்து பேசிய செவிலியர் கேட்டார்.

அதற்கு கண்ணனோ பதில் பேச வாயை திறக்க, இன்ஸ்பெக்டர் வேகமாக அந்த போனை அவனிடம் இருந்து  வாங்கி “எந்த ஜி.எச் மா?”  என்று கேட்டு அந்த மருத்துவமனையின் விலாசத்தை வாங்கிக் கொண்டார்.

“கான்ஸ்டபிள் இங்க வாங்க…”  என்று அருகில் என்ற ஒருவரை அழைத்த இன்ஸ்பெக்டர் “இந்த பையன் மேல தப்பு இல்லன்னு நினைக்கிறேன். எதுக்கும் ஃபார்மாலிட்டிக்காக இந்த ஹாஸ்பிட்டல் போய் செக் பண்ணிக்கோங்க. அந்த பொண்ணு கிட்டயும் ஸ்டேட்மெண்ட் வாங்கிக்கோங்க”  என்ற சொன்னவர் கண்ணனுடன்  கான்ஸ்டபிள் ஒருவரையும் அனுப்பி வைத்தார்.

நடு இரவு நேரம் என்பதால், எந்தவித சாலை நெறிசலும் இல்லாமல் விரைவாகவே அந்த மருத்துவமனையை இருவரும் அடைந்து விட்டார்கள்.

மருத்துவமனைக்குள் சென்ற இருவரும் அங்கு இருக்கும் செவிலியர் ஒருவரிடம் நடந்ததை பற்றி எல்லாம் விசாரித்தார்கள்.

“சார் அந்த பொண்ணு பேரு பூர்ணாவான்னு எல்லாம் எங்களுக்கு தெரியல. ஆனா சாயங்காலம் ஒரு 7:00 மணிக்கு ஆக்சிடன்ட் கேஸ்ல வந்து அட்மிட் ஆனாங்க. இப்போ ஐ.சி.யூல இருக்காங்க. இப்ப யாரும் அவங்கள பார்க்க முடியாது” என்று அந்த செவிலியர் பதிலளிக்கவே

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தான் கண்ணன்.

“ஐயோ கடவுளே…., நான் எது நடக்க கூடாதுன்னு நினைச்சேனோ அதுவே நடந்திருச்சு. இப்ப பூர்ணாக்கு ஏதாவது ஆனா என்னால என்ன பண்ண முடியும்?”  என்று தன் மனதிற்குள் நினைத்து வருந்தியவன் “அந்த பொண்ணுக்கு பெரிய பிரச்சனை எல்லாம் எதுவும் இல்லைல்ல சிஸ்டர்?”  என்று அவன் அருகில் இருந்த செவிலியரிடம் கேட்டான்.

“என்ன சார் பேசுறிங்க?  நீங்க படிச்சவங்க தானே? ஐசியூ ல இருக்காங்கன்னு சொல்றேன். பெரிய பிரச்சனை இல்லையான்னு கேக்குறீங்க? கொஞ்சம்  யோசிச்சு பேசுங்க” என்று அவனிடம் சிடுசிடுவென்று பேசியவர் அங்கிருந்து நகர முயற்சி செய்ய,

“ஏம்மா ஒரு நிமிஷம் நில்லுங்க… நீங்க பாட்டுக்கு  சொல்லிட்டு போறீங்க. விசாரிச்சுட்டு இருக்கேன்ல்ல” என்று கான்ஸ்டபிள் கொஞ்சம் கடுப்பாக

“சார் எவ்வளவு டைம் சார் விசாரிப்பீங்க? ஏற்கனவே நாங்க இந்த ஆக்சிடென்டை லோக்கல் ஸ்டேஷன்ல இன்ஃபார்ம் பண்ணிட்டோம். அவங்க வந்து ஏற்கனவே விசாரிச்சுட்டு போய்ட்டாங்க. இப்போ மறுபடியும் நீங்க வந்து விசாரிக்கிறீங்க” என்று அந்த செவிலியரும் அலுத்துக்கொள்ள

“இந்த ஆக்சிடென்ட் கேஸ் வேணும்ன்னா லோக்கல்  ஸ்டேஷன்ல பதிவாகி இருக்கலாம்.  ஆனா அந்த பெண்ணை காணோம்னு எங்க ஸ்டேஷன்ல வந்து தான் இவரு கம்ப்ளைன்ட்  கொடுத்து இருக்காரு. அதனால விசாரிக்க வேண்டியது எங்களோட கடமை. நான் கேக்குறதுக்கு மட்டும் கொஞ்சம் சரியா பதில் சொல்லுங்க” என்று அதிகாரம் கலந்த குரலில் பேசிய கான்ஸ்டபிள், மேற்கொண்டு அந்த செவிலியரிடம் விசாரிக்க ஆரம்பித்தார்.

“என்ன சார்…. நான் என்ன பதில் சொல்லணும்? கேளுங்க” என்று அந்த செவிலியரும் வேண்டா வெறுப்பாக பதில் அளித்தார்.

“ஆக்சிடென்ட் எந்த ஏரியால எப்படி நடந்தது?” என்று கான்ஸ்டபிள் கேட்கவே

“சார் அதெல்லாம் எனக்கு தெரியாது.  அதோ அந்த லேபுக்கு வெளிய நிக்குற பையன் தான் கார்ல வரும் போது அந்த பொண்ணை ஆக்சிடென்ட் பண்ணியிருக்கான்”  என்று அந்த செவிலியர்  அரவிந்த்  என்ற  இளைஞனை கை காட்டியதும், “சரி…. நீங்க கிளம்புங்க” என்று  சொல்லியவர் அரவிந்தை நோக்கி நடந்தார்.  கான்ஸ்டபிள் பின்னாலேயே கண்ணனும் வேகமாக நடந்து சென்றான்.

மறுபடியும் போலீஸ் வருவதை பார்த்து கொஞ்சம் பதறிப்போன அரவிந்த், திருதிருவென விழித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான்.

அரவிந்தின் அருகில் போன கான்ஸ்டபிள் “என்னப்பா நீ தான் ஆக்சிடன்ட் பண்ணியா?”  என்று கொஞ்சம் சத்தமான குரலில் கேட்டார்.

அதைக் கேட்டு கொஞ்சம் பயந்து போனவனும் “சார்…. நான் வேணும்னே பண்ணல. அந்த பொண்ணு தான் வேணும்னே வந்து கார் மேலே விழுந்தாங்க. நான் சரியா தான் சார் வண்டி ஓட்டுனேன். ஏற்கனவே வேற போலீஸ் வந்து விசாரிச்சுட்டு போய்ட்டாங்க” என்று பயந்தபடியே  சொன்னான்.

அதற்கு மேல் அரவிந்திடம் எதுவும் கேட்க விரும்பாதவர், கண்ணனை பார்த்து “அந்த பொண்ணு ஐசியூ ல இருக்கு. அதனால இப்போ அந்த பொண்ணால பேச முடியாது. சோ ஸ்டேட்மென்ட் வாங்குறதும் கொஞ்சம் கஷ்டம். அதனால நான்  வீட்டுக்கு கிளம்புறேன். நாளைக்கு மார்னிங் வந்து பார்க்கிறேன். சரியா?” என்று சொன்னவர் அங்கிருந்து கிளம்பினார்.

நான்கு அடி எடுத்து வைத்தவரோ, பின்  ஏதோ ஞாபகம் வந்தவராய், கண்ணனை பார்த்து “இங்க பாருப்பா… அந்த பொண்ணை உன்னை நம்பி தான் விட்டுட்டு போறேன். நாளைக்கு காலையில வருவேன். அந்த பொண்ணுக்கு வேற எதுவும் பிரச்சினை வந்தா நீ தான் பொறுப்பு.  புரியுதா?”  என்று அவனுக்கு வார்னிங் கொடுத்தபடியே அங்கிருந்து கிளம்பினார்.

அப்பொழுது பூர்ணாவை தேடியவன் ஐசியூ இருக்கும் அறையை தேடி பிடித்து நடக்க ஆரம்பித்தான்.

ஒரு வழியாக ஐசியூ அறையை கண்டறிந்தவன், அதற்குள் நுழைய தயாரான போது அங்கே வந்த செவிலியர் “அதுக்குள்ள யாரும் போகக்கூடாது” என்று கரராக பேசினார்.

“இல்ல சிஸ்டர்…. ஒரே ஒரு டைம் மட்டும் பார்த்துக்கிறேன்” என்று அவனும் அந்த செவிலியரிடம் கெஞ்ச,

அவன் முகத்தை பார்த்த செவிலியர் “உங்களுக்கும் ஆக்சிடென்ட் ஆயிடுச்சா? அவங்க கூட தான் வந்தீங்களா?” என்று புரியாமல் கேட்டார்.

அப்பொழுது தான் தன் முகத்தில் கை வைத்து பார்த்தான் அவன்.  போலீஸ் அடித்ததில் முகம் சற்று வீங்கி இருந்தது. உடைகள் எல்லாம் சற்றே கசங்கி  கிழிந்து, கை காலில் சிறிது துளி ரத்தம் வந்து கொண்டிருந்தது.

“சார்….  உங்கள தான் கேட்கிறேன் ஃபர்ஸ்ட் எய்ட்  போய் பண்ணிக்கோங்க” என்று அந்த செவிலியர் மறுபடியும் சொல்லவே

“இல்லங்க எனக்கு எதுவும் இல்ல. இப்போ நான் அவங்களை பார்க்கலாமா?”என்று மறுபடியும் பூர்ணாவை பார்த்தே ஆக வேண்டும் என்ற தவிப்போடு கேட்டான்.

“சாரி சார்….. நீங்க ஐசியூ குள்ள போனது தெரிஞ்சா என்னை தான் திட்டுவாங்க.  நீங்க இங்க நின்னே பாருங்க”  என்று சொன்ன செவிலியரோ ஐசியூ வார்டின்  கதவை திறந்து கொண்டு அவர் மட்டும் இல்லை போனார்.

கண்ணனும் வேறு வழி இல்லாமல் வெளியே நின்றபடியே உள்ளே இருக்கும் பூர்ணாவை  பார்த்தான்.

உடல் முழுவதும்  அடிகளோடு,  முகமே தெரியாதது போல் சுற்றிலும் வெள்ளை துணையால் சுற்றி வைத்து, முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்கோடு, உடலில் எவ்வித ஆசைவுகளும் இன்றி படுத்திருந்தாள் அவள்.

தானும் கஷ்டப்பட்டு தனக்காய் யோசித்தவனையும் கஷ்டப்படுத்தி விட்டாளே….

ஹாய் பிரண்ட்ஸ்

கதை எப்படி போகுது? உங்களுக்கெல்லாம் பிடிச்சிருக்கா? இதுல வர்ற சில மாற்றங்கள் நீங்க எதிர்பார்த்தீங்களா? இல்ல  ட்விஸ்டா இருக்கா? அப்புறம் பூஜாவுக்கு யாரு பெஸ்ட்டான ஜோடின்னு நினைக்கிறீங்க? தருணா இல்ல கண்ணனா? இவங்கள்ல உங்களுக்கு யாரை ரொம்ப புடிச்சிருக்கு?  உங்களுக்கு யார் மேல ரொம்ப கோவம் வருது? தயவு செஞ்சு மறக்காம கமெண்ட் பண்ணுங்க.

3 thoughts on “மயங்கினேன் நின் மையலில்…. அத்தியாயம் 18”

  1. Kalidevi

    Story la I tha twist ethir pakala tha nalla move aeitu iruku poorna panna thappala ethana per pathika patanga tha. Aduthu tharun pavam namba vachi emathitanga ellam patha ithula avan thambium sernthu ippadi pannitan avan mela tha kovame

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *