Skip to content
Home » மயிலாய் வருடும் மகாலட்சுமியே 20

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 20

  • மகா மகிழையை சாப்பிட அழைப்பதற்காக மகிழனுடைய அறைக்கு வரும்போது மகிழன் போனில் என்ன எப்போ என்று கேட்டுக் கொண்டிருந்தான் தனது மகிழ் மாமா யாரிடமோ கொஞ்சம் வேகமாக பேசுவதை உணர்ந்து அமைதியாக நின்று கொண்டிருந்தால் பிறகு மகி அந்தப் பக்கம் பேசி விட்டு ஃபோனை வைத்துவிட்டு மகாவை பார்த்தான்
  • மகா சாப்பிட வாங்க என்று கூப்பிட வந்துவிட்டு அமைதியாக நின்று கொண்டு இருப்பதை பார்த்தவுடன் மகாவையே பார்த்துக் கொண்டு நின்றான் மகா தான் யார் போனில் என்று கேட்டால் அவள் அவ்வாறு கேட்டவுடன் கயல் என்று விட்டு அவளை முறைத்துக் கொண்டே நின்றான்
  • கயல் என்றவுடன் ஒரு நிமிடம் கண்ணை மூடி கண் திறந்து விட்டு இவ்வளவு காலையிலே அழைத்து இருக்கிறாள் என்று உணர்ந்து விட்டு பிறகு மகிழனை பார்த்து கயல் தலைக்கு குளித்து விட்டால அவளுக்கு வயிறு வலிக்கிறதா என்றால் அவனுக்கு ஒரு நிமிடம் உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தது
  • வீட்டில் உள்ள அனைவரின் தேவையும் புரிந்து வைத்திருக்கிறாள் என்று ஆனால் வீட்டில் உள்ளவர்கள் மேல் வைத்திருக்கும் இந்த பாசம் தானே தன்னுடைய காதலையும் தன்னையும்  தூக்கி எறிய வைத்தது என்று எண்ணி அவளை முறைத்துக் கொண்டே ஆமாம் என்று சொன்னா பிறகும் மகா எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தால்
  • மகிழ் அப்பொழுது தனது தம்பிக்கு போன் செய்து வர வைத்தான்  எழிலும் மகா மகிழ் இருக்கும் அறைக்கு வந்தான் என்னை அண்ணா என்று கேட்டான் நீ இவளை அழைத்துக் கொண்டு நான் சொல்லும் இடத்திற்கு சென்று வா என்றான் எழில் மகாவை திரும்பி பார்த்துவிட்டு அமைதியாக நின்றான் பிறகு எங்கு என்று கேட்டான்
  • மகா தான் மகிழை பார்த்துவிட்டு எழில் நான் ஒன்று சொன்னால் நீ கோபித்துக் கொள்ள கூடாது என்றால் நான் கோபம் கொள்ளாத படி ஏதோ ஒரு விஷயத்தை சொல் என்றான் மகிழுக்கு சிரிப்பு வந்துவிட்டது மகா மகிழை பார்த்து முறைத்துவிட்டு நாம் இருவரும்  கயலை பார்த்துவிட்டு வரலாம் என்றால் என்னது கயலையா என்றான்
  • அவன் கோபப்படுவதற்கு முன்பாகவே கயல் இப்பொழுது தலை குளித்திருக்கிறாள் அவளுக்கு எப்படி வயிறு வலி வரும் என்று உனக்கே தெரியும் கொஞ்ச நேரம் நான் சொல்வதை கேளு என்றவுடன் அவள் தலை குளித்திருக்கிறாள் என்று சொன்னவுடன் எழில் வேறு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்
  • எழிலுக்கு கயல் மேல் கோபம் என்றால் தன்னுடைய அண்ணனை திருமணம் வரை கொண்டு வந்து விட்டு நிறுத்த வேண்டுமா என்று தான் பிறகு நேற்று இரவு அவன் ஒன்றை உணர்ந்தான் ஒருவேளை தனக்கு மகா மகிழ் காதல் தெரிந்தது போல் கயலுக்கும் தெரிந்திருக்குமோ என்று சரியாக யோசித்தான் அதனால் கயல் மேல் இப்பொழுதும் கோபம் இருக்க தான் செய்கிறது
  • இருந்தாலும் அவள் இப்படிப்பட்ட நிலையில் இருக்கும்பொழுது அவள் மேல் கோபப்படக்கூடாது என்பதற்காக சரி நாம் போகலாம் என்றான் சரி நான் சொல்வதைப் போல் நீ போய்  சுந்தரி அத்தையிடம் சொல் என்றால் என்ன அம்மாவிடமா என்று  மகிழும் மகாவை பார்த்து முறைத்தான்
  • எழில் நான் சொல்வது போல் போய் அத்தையிடம் கேள் என்றால் என்ன என்றான் கயலுக்கு இதுபோல் இதற்கு முன்பு தலை குளிக்கும் போது வலி எடுக்கும் பொழுது அத்தை ஒரு கஷாயம் வைத்து தருவார்கள் அதை பொய் அவர்களிடம் சொல்லி கேள் என்றாள் மகா அம்மா திட்டுவார்களே என்றான் டேய் நீ போய் கேள் அத்தை எதுவும் சொல்ல மாட்டாங்க என்றாள்
  • எழிலும் கயலுக்கு என்று கூட சொல்லவில்லை கசாயம் வேண்டும்  என்று அவனது தாயிடம் சென்று சொன்னான் கசாயத்தின் பெயரை  மட்டும் தான் சொன்னான் அப்போது சுந்தரி சமையலறையில் இருந்தார் அவன் கேட்ட உடனே சுற்றி முற்றி பார்த்துவிட்டு டேய் கயலுக்கா அவள்  மகிழ்க்கு போன் செய்தாலா  என்றான்
  • மகிழ் கயலை பார்க்க செல்கிறானா என்று கேட்டார் அவன் தனது தாயை பார்த்துவிட்டு அவளுக்கு தான் ஆனால் அண்ணன் போகவில்லை என்றான் பிறகு யாருடா போற என்று கேட்டார் நானும் மகாவும் என்றான் என்ன என்று ஒரு நிமிடம் தனது இளைய மகனை பார்த்துவிட்டு வேகமாக கசாயம் செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு கஷாயம் தயாரிக்க ஆரம்பித்தார்
  • அப்போது எழில் தான் அம்மா உனக்கு கயல் மேல் கோபம் இல்லையா என்றான் அவர் சிரித்துக் கொண்டே எனக்கு அவள் மேல் கோபம் இல்லை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது இருந்தாலும் அவளை நான் தூக்கி வளர்த்தவள் டா எனக்கு அவள் மேல் கோபம் எல்லாம் இருக்கு இருந்தாலும் என்றார் அதைவிட பாசம் அதிகமாக இருக்கிறது என்றார்
  • அம்மா அண்ணனை  பந்த கால் நடும் வரை அழைத்துக்கொண்டு வந்துவிட்டு வேண்டாம் என்று விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டாலே என்றான் எழிலின்  வாயிலே ஒன்று போட்டுவிட்டு கத்ததடா அமைதியாகப் பேசு உன் அத்தைங்க காதில் விழுந்துவிடப் போகிறது என்று விட்டு அவள் காதலித்ததை நான் தவறு என்றெல்லாம் சொல்ல மாட்டேன்
  • அவள் வீட்டில் சொல்லி இருந்தால் அனைவரும் சேர்ந்தே திருமணம் செய்து வைத்திருப்போம் எனக்கு இப்பொழுது கூட  அவள் மேல் நம்பிக்கை இருக்கிறது அவள் ஏதோ ஒரு காரணத்தினால் தான் இதுவரை கொண்டு வந்து விட்டு சென்றிருக்கிறாள் என்று இல்லை என்றால் அவள் காதலிப்பதை வீட்டில் சொல்லாமல் இருந்திருக்க மாட்டாள் ஏதோ ஒரு சூழ்நிலையின் காரணமாகத்தான் இவ்வாறு செய்திருப்பாள்
  • எழிலிடம் பேசிக்கொண்டே பிளாஷ்கில் கஷாயத்தை வைத்தார் பிளாஸ்க்கில் ஊத்துகிறீர்கள் என்றான் டேய் இதை சூடு செய்தெல்லாம் குடிக்க கூடாது அப்பொழுதே சூடாக குடிக்கு வேண்டும் நீங்கள் போய் சேர எவ்வளவு நேரமாகுமோ சென்றார்  அதனால தான் என்றார் அவனும்  சரி என்று விட்டு வெளியில் கிளம்ப சென்றான்
  • அப்போது டேய் இரு என்று விட்டு அஞ்சரை பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து அவன்  கையில் கொடுத்தார் எதுக்கு என்றான்  போகும் போது அவளுக்கு சத்தான பொருட்களாக வாங்கிக்கொண்டு செல் பழம் வாங்கிக் கொண்டு செல்லுங்கள் என்றார் அவன் தனது தாயை பார்த்து சிரித்துக் கொண்டே அவரது கையில் பணத்தை வைத்து உன் மகனும் சம்பாதிக்கிறான்  என்னிடமும் இருக்கிறது என்றான்
  • இருந்தாலும் என்றார் சுந்தரி பணம் வச்சிருக்கேன் ஓவரா பண்ணாத என்று விட்டு தனது தாயின் தாடையில் லேசாக தட்டி விட்டு வெளியில் வந்தான் அப்பொழுது வீட்டில் உள்ள அனைவரும் டைனிங் டேபிளில் சாப்பிட உட்கார வந்தவுடன் அந்த பையை எடுத்துக் கொண்டு சென்று தனது அண்ணன் மகா இருக்கும் அறையில் அந்த பையை வைத்துவிட்டு அவனும் உணவு மேசைக்குச் சென்றான்
  • பிறகு அனைவரும் டைனிங் டேபிள் உக்காந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள் இவனும் சென்று சாப்பிட்டான் பிறகு மகி சாப்பிட்டுவிட்டு கை கழுவிக்கொண்டு எப்பொழுதும் போல் மகாவின் சேலையிலே கை துடைத்தான் வீட்டில் உள்ள அனைவரும் அமைதியாக தான் இருதார்கள் இவன் கை துடித்த பிறகு தான் மகாவின் சேலையில் கை துடைத்து இருப்பதையே உணர்ந்தான்
  • பிறகு எதுவும் பேசாமல் அமைதியாக மீட்டிங்குத் தேவையான அனைத்து எடுப்பதற்கு அவனது அறைக்கு சென்றான்  பிறகு அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு மகா என்று வேகமாக கூப்பிட்டான் வீட்டில் உள்ள அனைவரும் இவன் ரொம்ப நாட்களுக்கு பிறகு மகா என்று கூப்பிடுகிறான் என்று எண்ணினார்கள் தனது மகிழ் மாமா எதற்காக அழைக்கிறார் என்று தான் அவளுக்கு தெரியுமே அதானால் எதுவும் பேசாமல் வரேன் என்று மட்டும் சொல்லிவிட்டு அவனது அறைக்குள் சென்றாள்
  • அவள் அறைக்குள் சென்றவுடன் அவளிடம் பணம் கொடுத்தான் இல்லை வேண்டாம் என்னிடம் இருக்கு என்றால் அவன் பணத்தை நீட்டிக் கொண்டே இருந்தான் இல்ல மாமா என்கிட்ட காசு இருக்கு என்றால் அமைதியா பிடி என்று அவளது கையை இழுத்து அவளது கையில் வைத்துவிட்டு வேறு எதுவும் பேசாமல் வெளியில் சென்று விட்டான் பிறகு அவன் வெளியில் வரும் போது அனைவரும் சாப்பிட்டுவிட்டு அவர்களது வேலையை பார்க்கச் சென்று இருந்தார்கள்
  • அதனால் வரவேற்பு அறையில் யாரும் இல்லை அவனும் தனது அத்தை அம்மாவிடம் சொல்லிவிட்டு வெளியில் சென்று விட்டான் பிறகு எழில் மகா இருக்கும் அறைக்கு வந்தான் போலமா மகா என்றான் அவளும் போலாம்  என்று விட்டு அந்த பையை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தால் அப்போது யாரும் வீட்டில் இல்லை எல்லாம் அவர்களது அறையில் இருந்தார்கள் ஆண்களெல்லாம் வயல்வெளிக்கும் வெளியேவும் சென்று விட்டார்கள்
  • பெண்களும் வயல்வெளிக்கு சென்று விட்டார்கள் இனி மட்டும்தான் வீட்டில் இருந்தால் அவளுடன் நிலா இருந்தால் உதிரனும் வெளியே வேலையாக சென்றிருந்தான் அவனும் சரி என்று விட்டு தனது அத்தை கொடுத்த கஷாயம்  இருக்கும் பையை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள் வெளியில் வந்து எழில் அவனது  பைக்கில் ஏறி உட்கார்ந்தான் அப்போது மகா எழில் பைக் வேண்டாம் என்றால்
  • ஏன் என்றான் இல்லை பைக்கில் போக வேண்டாம் என்றால் நீ என்ன லூசா பைக்கில் போக வேண்டாம் என்றால் எப்படி போவது கார் புக் பண்ணுமா கார்ல போகணுமா என்றான் இல்லை வேண்டாம் வா என்று அவனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே வந்தால் அப்பொழுது ஆட்டோ பிடிக்கலாம் என்றால்  எதுக்கு ஆட்டோ என்றான் எழில் சொல்வதை செய் ஆட்டோ பிடி என்றால்
  • அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே ஒரு ஆட்டோ வந்தது எழிலும் அந்த ஆட்டோவிற்கு கை காண்பித்தான்.பிறகு  இருவரும் ஆட்டோவில் சென்று அவர்கள் தெருவிற்கு பக்கத்து தெருவில் இருக்கும் ஒரு பழக்கடையில் நிறுத்தினார்கள் அங்கு இறங்கியவுடன் பழ  கடைக்குச் சென்று மகா என்னென்ன பழம் வேண்டும் என்று வாங்கிக் கொண்டு இருந்தாள்
  • வாங்கிய பழங்கள் அனைத்திற்கும் எழில் தான்  பணம் கொடுத்தான் அப்போது பழக்கடையில் இருக்கும் பெண்மணி இருவரையும் பார்த்து சிரித்து விட்டு மகிழ் தம்பி பணம் கொடுத்துடுச்சு என்றார் மகா சிரித்து கொண்டே வேறு எதுவும் பேசாமல் அமைதியாக கொஞ்சம் நகர்ந்து வந்தால் என்னடி சிரிச்சிட்டே வர அண்ணா பணம் கொடுத்திருக்கும் என்று உனக்கு தெரியுமா என்றான்
  • டேய் அவர் என்னிடம் வேறு பணம் கொடுத்து விட்டார் நான் என்னிடம் இருக்கு என்றேன் அதற்கே என்னை முறைத்து விட்டு பணம் கொடுத்து விட்டு தான் சென்றார் என்றாள் அப்போது ஒரு ஆட்டோ வந்தது எழில் அந்த ஆட்டோவிற்க்கு கை காண்பித்தான் டேய் வேண்டாம் பேசாமல் அமைதியாக கொஞ்ச நேரம் இரு என்றவுடன் அவர்கள் அருகில் ஒரு கார் வந்து நின்றது
  • அந்த டிரைவர் கார் கண்ணாடியை சிறிது இறக்கி விட்டு மகா பாப்பா மகிழ் தம்பி உங்க ரெண்டு பேத்தையும் கூட்டிட்டு போக சொல்லுச்சு என்றார் எழில் மகாவை முறைத்துவிட்டு காரில்  ஏறினான் மகாவும் சிரித்துக் கொண்டே காரில் ஏறினால் உனக்கு கார் வரும் என்று தெரியுமா என்றான் அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்
  • அவர் எப்போது என்ன செய்வார் என்று உனக்கு தெரிந்தால்  மட்டும் போதாது இந்த வீட்டுக்காக விட்டும் கொடுத்து இருக்க கூடாது என்று மெதுவாக சொன்னான் அவளது கண்ணில் இருந்து நீர் வடிந்தது அவள் அழுகிறாள் என்றவுடன் அதற்கு பிறகு அதைப் பற்றி அவன் பேசவில்லை டிரைவர் கயல் வீட்டில் இறக்கி விட்டார் வீட் அட்ரஸ் கூட மகிழே சொல்லியிருந்தான்
  • சரி அண்ணா  போங்க என்று எழில் சொன்னான் எப்படியும் இதற்கும் தன்  அண்ணன் பணம் கொடுத்து இருப்பான் என்று அவர் இல்லை தம்பி  இருந்து உங்களை அழச்ச்சிட்டு வர சொன்னாரு என்றார் சரி என்று இருவரும் உள்ளே சென்றார்கள் ஏதோ ஒரு கார் வந்து நின்றவுடன் கயல் எட்டிப் பார்த்தால் அங்கு எழிலையும் மகாவையும் கயல் எதிர்பார்க்கவில்லை
  • கயல் எழிலை பார்த்தவுடன் வேகமாக ஓடி வந்து எழிலை கட்டி அணைத்துக் கொண்டு அழுத்தல் எப்போது என்னை எல்லோரும் ஏற்றுக் கொள்வீர்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைத்தேன் நீ வந்தது எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு என்ன மன்னிச்சிடுடா என்றால் எழில் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்
  • அப்பொழுது யார் என்று கேட்டுக் கொண்டே கயலின் மாமியார் வெளியே வந்தார் …
  • யார் என்று வேகமாக கேட்டார் கயலின் மாமியார் அம்பிகா…
  • எழில் கயலை மன்னித்து விடுவானா கயலின் மாமனார் மாமியார் எழில் மகாவை வீட்டிற்குள் சேர்த்துக் கொள்வார்களா …
  • என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்
  • அன்புடன்
  • ❣️ தனிமையின் காதலி❣️
  • சைலன்ட் லீடர்ஸ் படித்துவிட்டு உங்களின் மேலான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

4 thoughts on “மயிலாய் வருடும் மகாலட்சுமியே 20”

  1. Kalidevi

    Kayal ah pirinjikirangalo illayo mayila magizh purinjikanum rendu perum pesikanum first apram athellam thana sari aeidum

  2. CRVS 2797

    ஏன் எழிலையும், மகாவையும் கயல் வீட்டாளுங்க வீட்டிக்குள்ளே சேர்த்துக்க மாட்டாங்களா என்ன ?
    அவங்களா லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க… இல்லையே..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *