மழை -5
அன்பு அதிகாலையிலேயே ப்ரீத்தியைக் கூட்டிக் கொண்டு மீனாட்சி அம்மன் கோவிலுக்குக் கிளம்பி விட்டான். அவளும் மதுரை என்றவுடன் மீனாட்சி, மீனாட்சி என்றே கேட்டுக் கொண்டிருக்க, அதிகாலை பூஜை பார்க்கக் கிளம்பி வந்து விட்டான். இரவெல்லாம் எழிலும், கந்தவேலுவும் வந்து நினைவில் அவன் நிம்மதியைக் கலைத்திருக்கத் தெளிவு வேண்டியே ஆலயத்துக்கு வந்திருந்தான் .
முன்னதாக நேற்று மாலையில் மாப்பிள்ளை கந்தவேலை சந்தித்து வந்தவனுக்கு, அவன் எழிலரசிக்குப் பொருத்தம் இல்லாதவன் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. ‘இந்த மாமா அவனை போயி, மாப்பிள்ளைனு எப்படி முடிவு பண்ணாரு. கேட்டா ஜாதக தோஷமாம். இவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாளே தோஷம் தான். அவரு சொன்னா, இவளுக்கு எங்க புத்தி போச்சு. இதில என்னை வேற குறை சொல்றா. உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ண முடியுமா. மாமா என்னைப் பிள்ளை மாதிரி வளர்த்தார். அவரு கண்ணைக் கட்டி இவளைப் பார்க்கத் தான் தோணுமா.’ என தன்னை போல் மொட்டை மாடியில் உலவிக் கொண்டு புலம்ப, ப்ரீத்தி மில்க் ஷேக்கோடு வந்தவள், அவனிடம் ஒன்றைக் கொடுத்து விட்டு,
“ ப்ராப்ளம் க்யா ஹை. உன் சேட் ஃபேஸ் அச்சா நஹி ஹை” என்றாள்.அவள் கேட்டது தான் தாமதம், தன் மனதிலிருந்த அத்தனையும் அவளிடம் கொட்டி விட்டான்.
“ உனக்கு எழில் மேல லவ்வா. இப்போ கூட நேரமாகலை. சொல்லு. ஐ வில் மேக் இட் பாஸிபிள்” என்றாள்.
“ அப்படியே அடிச்சேன்னா தெரியுமா. நீயும் பொம்பளை புத்தியை காட்டிட்டேல்ல. அவ மேல இருக்கிறது அக்கறை. கேர். என் கூடவே வளர்ந்த பொண்ணு, அவன் கிட்ட போய் கஷ்டபடுவாளோன்னு எனக்கு பதறுது. யூ நோ ஹவ் ஹீ இஸ்” என கந்தவேல் சொன்னதைச் சொல்லவும், ப்ரீத்தி நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.
“ எதுக்கு இப்போ இளிக்கிற” அவன் கோபப் பட,
“ எல்லாரும் உன்னை மாதிரி போலேபாபாவா (அப்பாவி) இருப்பாங்களா. உன் ஊரு பாஷைல சொன்னா, சும்மா குஷ்பு மாதிரி மைதா உருண்டை கணக்கா இருக்க உன் லவ்வர்கிட்டையே நீ தள்ளி நிக்கிற” என ஹஸ்கி குரலில் அவள் சொல்ல,
“ அடியேய், குல்பி ஐஸ், இந்த வார்த்தை எல்லாம் எங்க கத்துக்கிட்ட. உன்னை நீயே பாடி ஷேமிங் பண்ணுவியா” எனக் கடிய,
“ ஹலோ மாம்ஸ், இதெல்லாம் காம்ப்ளிமெண்ட்யா” எனக் கையை மாலையாய் கோர்த்து அவன் கழுத்தில் போட்டு அவனை நெருங்க,
“ கொன்றுவேன். மரியாதையா தள்ளி நில்லு” என வலுக்கட்டாயமாக அவளைப் பிரித்து நிறுத்தினான்.
“ இது தான் மேன். இதனால தான் உன்னை போலேபாபான்னு சொன்னேன். சாமியார். எல்லாரும் உன்னை மாதிரியேவா இருப்பாங்க. எழிலை பார்த்த நாளில் இருந்து ஆள் கற்பனையிலேயே குடும்பம் நடத்த ஆரம்பிச்சு இருப்பான். இப்போ நீ தான் தூஸ்ரா ஆத்மி” என அவள் சொல்ல,
“ ஐயோ, வேண்டாம் சொல்லாத. என்னால கற்பனை கூட பண்ண முடியலை” எனக் கண்ணை மூடிக் கொள்ள,
“ உனக்கு எழில் மேல லவ் இருந்திருக்கு ஏஏ, உங்க மாமா, அவரா வந்து உன்னை அவளைக் கல்யாணம் பண்ணிக்க சொல்லனும்னு எதிர்பார்த்து இருக்க” என ப்ரீத்தி சொல்ல,
“ நோ, அது எங்க அம்மாவோட ஆசை. அம்மா மாமாவுக்குப் பட்ட கடன்னு சொல்லிச் சொல்லி, அவகிட்டிருந்து தூரமா தான் ஓடினேன்” என்றான்.
“ அதைத் தான் நான் லவ்னு சொன்னேன். வாட் எவர், நீயும் ஒத்துக்க மாட்ட. அவளும் ஒத்துக்க மாட்டா.” எனவும்.
“ ட்ரை டு அன்டர்ஸ்டேண்ட் ப்ரீத்தி. அவன் டௌரி கேட்குறான். வரதட்சணை பணத்திலேயே குறியா இருக்கான். அரசி இங்கிலீஸ் லிட்ரேச்சர் படிச்சவ. பொதுவாவே இந்த லிட்ரேச்சர் படிச்ச மக்கள் ஒரு ட்ரீம் லேண்ட்லையே தான் இருப்பாங்க. தரையிலேயே நடக்க மாட்டாங்க. இவளும் அப்படித் தான். அந்தாளு பக்கா கந்துவட்டி பார்ட்டி. ரோமான்ஸ் என்ன விலைனு கேட்பான். இவங்களுக்குள்ள எப்படி மேட்ச் ஆகும்” என்றான்
“ ஆப்போஸிட் போல்ஸ் அட்ராக்ட். அவர் வெளியே சொல்லலைனாலும் இவ மேல ஒரு அட்ரேக்ஷன் இருக்கும். இட் இஸ் எனஃப் ஃபார் அரேஞ்சுடு மேரேஜ். மனசு ஏத்துக்கலைனாலும், பிசிகல் ரிலேஷன் அவங்களை ஒன்னு சேர்த்திடும். நீ சொல்ற மாதிரி எழில் இரட்டை வாழ்க்கை வாழ்ந்துக்குவா.” என்றாள்.
“ ம்ப்ச், நீ சொல்ற பிசிக்கல் ரிலேசன்சிப்லையே அவன், அரசியை ஹேர்ட் பண்ணிடுவான். சும்மா புடவையை சுத்திக்கிட்டு இருக்கிறதால பெரிய மனுசி மாதிரி இருக்கா. இந்த அவுட் ஃபிட்ல எவ்வளவு சின்ன பொண்ணா தெரியிறா பார்த்தியா. நீ மாப்பிள்ளை யை பார்க்கலை. ஆள் ஓங்கு தாங்கா இருக்கான்” எனப் புலம்பினான்.
“ அவ மேல இவ்வளவு கேர் வச்சிருக்க நீ, அதை பேஸ் பண்ணி உன் மாமாகிட்ட பொண்ணை கேட்டு இருக்கலாம்ல. உனக்கு படிச்சவன்கிற திமிர். நான் கேட்டு மாட்டேன்னு சொல்லிட்டாருன்னாங்கிற பயம். உன்னை மாதிரியே அவளும் ஒரு பயந்த கோழி. லவ்வை சொல்லி ஏத்துக்கலைனா.. அந்த பயத்திலேயே சொல்லாமலே இரண்டுபேரும் கடந்து வந்துட்டிங்க” என பெருமூச்சு விட்ட ப்ரீத்தம் கௌர்,
“ஔர் ஏக் தின். அவள் மிஸஸ் கந்தவேல் ஆகிடுவா. அப்புறம் உனக்கு இந்த கன்ப்யூஷனே இருக்காது” என்றாள்.
அவள் சொன்ன கடைசி வாக்கியம் அவனுள் சமாதானத்தைத் தர, “ மே பீ, யூ ஆர் ரைட். அவள் மேரேஜ் காலையில் முடியும். நான் மத்தியான ப்ளைட்ல புக் பண்ணிடுறேன். நாம கிளம்பலாம். நாளைக்குப் புல்லா மதுரையைச் சுத்தி பார்க்கலாம். நைட்டுக்கு ரூம் புக் பண்ணிடுறேன். மேரேஜ் டைமுக்கு வந்துட்டு போகலாம்” என்றான்.
“ நைட் ஸ்டே இங்கே தான். மம்மிஜீ, முஜ் பர் குஸ்ஸா கரேகி. இங்கேயே தங்குவோமே ப்ளீஸ்” என்றாள் சோகமாக,
“ ம்ம்மிஜீக்கு மகனைப் பத்தி தெரியும். யூ டோண்ட் வொரி ” என்றவன், மில்க் ஷேக்கை குடித்து முடித்து க்ளேஸை தள்ளி வைத்து விட்டு அவளை நோக்க,
அதரத்தில் வெள்ளை மீசை பிறந்திருந்தது. அவளே சொல்லிக் கொண்டது போல், மாவு உருண்டை கொஞ்சம் கிறங்க தான் வைத்தாள்.
கண்ணில் ரசனையோடு, “ என்ன சொன்ன போலேபாபாவா” என அவளை நெருங்கியவன், “இது என்னடி வெள்ளை மீசை முளைச்சிருக்கு?” தமிழில் கேட்டபடி அவளை இழுத்து இறுக்கி, முகத்துக்கு முகம் நேர் எதிர் நோக்க அவனிடமிருந்து அதை எதிர்பாராத ப்ரீத்தி,
“ ஏஏ, நோ, நஹி. நீ ஜெம்னு சொல்லி இருக்கேன். நோ டச்சிங்க்.” என பின்வாங்கினாள். அவனுள் வீம்பு தலை தூக்க,
“அதெப்படி, நான் போலேபாபா இல்லைனு ப்ரூஃப் பண்ணனும்” என முன்னேறினான்.
“ நோ” எனத் தலையை பின் கொண்டு சென்றவள், நொடியில் அவனைத் தள்ளி விட்டு அவள் ஆட்டம் காட்ட, ஆதாம், ஏவாள் காலத்திலிருந்து தொன்று தொட்டு வந்த ஈர்ப்பு அன்புவை, ப்ரீத்தி பின்னே ஓடவைத்தது.
மாடியில் ஓடிப் பிடித்து விளையாடி கடைசியில் அவனையும் சேர்த்து இழுத்துப் போட்டு அவள் விழ, இருவரும் இசகுபிசகாக கிடந்தனர்.
இருவர் பார்வையும் கலக்க, மோன நிலை, “ ஐ லவ் யூ ஏஏ” அவள் அவன் கன்னத்தில் இதழ் பதிக்க, அவளின் வெள்ளை மீசை அவன் கன்னத்தில் பசக்கென ஒட்டியது.
அதையும் தாண்டி ப்ரீத்தியின் அருகாமை, அவளின் குற்றச்சாட்டை நினைவுபடுத்தியது. “ நீங்க எல்லாம் என்னைத் திரும்பி கூட பார்க்கமாட்டிங்க அத்தான்” என்ற வார்த்தையும் கொலுசு சத்தமும் ஒரு சேர கேட்க, சட்டெனத் திரும்பிப் பார்த்தான். ப்ரீத்தியைத் தேடி வந்த எழில் அவர்கள் இருவரும் இருந்த நிலை கண்டு மின்னல் வேகத்தில் இறங்கி ஓடியிருந்தாள்.
ப்ரீத்தியும் கொலுசோசை கேட்டு விட்டு, “ஹாய்ரப்பா. எழில் மெஹந்திக்கு லெமென் தொட்டு வைக்கனும். உன்னால எல்லாம் மறந்து போச்சு. போடா” என அவன் கன்னத்தில் நறுக்கெனக் கடித்து வைத்து, ஹேய் என அவன் சுதாரிக்கும் முன், சிட்டாய் பறந்து ஓடியிருந்தாள்.
எழில் தங்களை அப்படிப் பார்த்ததைப் பார்த்திருந்த அன்பு . ‘ஒரு வகைக்கு இதுவே நல்லது’ என்ற முடிவுக்கு வந்தான்
இதோ அதிகாலையில் மீனாட்சியையும், சொக்கனையும் வணங்கிய ஜோடி, எட்டு மணிக்கெல்லாம் இருவர் தரிசனமும் முடித்து பொற்றாமரை குளத்தில் அமர்ந்திருந்தனர்.
ப்ரீத்தி பஞ்சாபி குர்தி அணிந்து தலையில் முக்காடு போட்ட படி இங்கும், அங்கும் சிறு குழந்தை போல் ஓடித் திரிந்தாள். ஒவ்வொரு தூணும் ஒரு கதை பேச, அத்தனையும் மொழி பெயர்த்து அவளுக்குச் சொன்னான்.
பிரசாதம் வாங்கி சாப்பிட்டவர்கள், டிஸ்யுவில் கையை துடைத்தனர். விபூதியும், குங்குமமும் இருவர் நெற்றியையும் நிறைத்திருக்க ப்ரீத்தியின் முடி விழுந்து பூசியிருந்த விபூதியும்,குங்குமமும் அவள் கண்ணில் தூசியாய் விழுந்தது. அவள் கண்ணைத் தேய்க்கும் முன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை எடுத்து அவள் கண்ணை ஒற்றி எடுத்தான்.
பேண்ட் பாக்கெட்டிலிருந்து கர்சீப் எடுக்கும் போது, பொன் மாங்கல்யத்தில் கோர்க்கப்பட்ட மஞ்சள் கயிறு விழுந்தது.
“ ஏஏ, கீழே போட்டுட்ட பாரு” என ப்ரீத்தி அடுத்து அவனிடமே கொடுத்தாள். “ஸாரி டியர். கார்ல வந்து வாங்கி ஹேண்ட் பேக்ல வச்சுக்கோ” என மீண்டும் சட்டை பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டான்.
முன்னதாக சுவாமி சன்னிதியில் வெளிப் பிரகாரத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யாண திருக் கோலத்தின் முன் வைத்து, ஒரு அம்மா மஞ்சள் குங்குமம் வழங்கிக் கொண்டு இருந்தவர்கள், ப்ரீத்திக்கும் கொடுக்க, “ சுக்ரியாஜீ” என அவர் காலில் விழுந்து வணங்கினாள். பின் யோசித்தவர், “இங்க வந்து உட்காரும்மா” என உட்கார வைத்து நலங்கு வைத்து, அவளது ஷாலில் பொன் தாலியோடு சேர்ந்த மற்றொரு மஞ்சள் கயிற்றைப் பரிசளித்தார்.
அன்பு, பொன் தாலி, யாராவது தேவைபட்டவங்களுக்கு கொடுங்களேன். “ என்று சொல்ல,
“ இது நானா கொடுத்தது இல்லை. மீனாட்சி அம்மா கட்டளை. வச்சுக்குங்க. தேவைபட்டவங்க, உங்ககிட்ட வாங்கிக்க வருவாங்க” என அதன் டப்பாவையும் கொடுத்துச் சென்றார்.
ப்ரீத்தி, “ மங்கள் சூத்திரம் ஹை க்யா” என அதற்கும் விளக்கம் கேட்க, ஆமாம் என அந்த பெண்மணி சொன்னதை மொழி பெயர்த்தான்.
“ ஓகே. ஏஏ நீ இந்த மங்கல் சூத்திரம் கட்டி விடு.” என நாணத்தோடு சொல்ல,
“ உங்க ரிலேடிவையும் வரவழைச்சு கல்யாணம் கட்டிக்குவோம்” என அரை நாளை கோவிலில் கடத்தி ஊரைச் சுற்றி விட்டு மாலையில் தான் வந்து சேர்ந்தனர்.
அடுத்த நாள் காலையில் திருமணம், அழகர் யாருக்கும் சொல்லாமல் பணத்துக்காக எங்கெங்கோ அலைந்து கொண்டு இருந்தார். கந்தவேலுவின் தகப்பனிடம், “ நாளைக்குப் பணம் கிடைச்சுடும் சம்பந்தி, அப்படியே இல்லைனாலும் ஒருவாரத்தில் ஏற்பாடு பண்ணிடுறேன். இந்த கல்யாணத்தை மட்டும் நிறுத்திடாதீங்க” எனக் கேட்டுக் கொள்ள,
“ உங்க நாணயத்தைப் பத்தி எனக்குத் தெரியாதா. என் மகன் ஒரு கிறுக்கு பய கேட்டுப்புட்டான். எனக்கு வரதட்சணை வாங்கிறதில விருப்பமே இல்லைங்க” எனச் சமாதானமாகப் பேசி இரு தகப்பன்களும் திருமணத்தை நடத்தி விடும் உத்தேசத்திலிருந்தனர்.
கந்தவேல் தகப்பன் தந்த நம்பிக்கையில், அழகர் பணத்துக்காக அலைவதை விடுத்து கல்யாண வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார்.
அரிசி, காய்கறி அவர்கள் தோட்டத்தில் விளைந்தது. சமையலுக்கு ஆளைப் போட்டு, இந்திராணி மேற்பார்வையில் முதல் நாளே காய்களை நறுக்கிக் கொண்டிருந்தனர்.
ப்ரீத்தி, “மம்மிஜி, மே குச் கரூங்(ஏதாவது செய்யவா)”என கேட்க, இரண்டு நாளில் அவள் பேச்சு பிடிபட்டு இருக்க, “அதெல்லாம் ஆளுங்க பார்த்துக்குவாங்க. நீ இங்க வந்து உட்காரு” என அழைத்தார், ஏற்கனவே எழில் அத்தையம்மா அருகில் தான் அமர்ந்திருந்தாள். ப்ரீத்தியின் கவனிப்பில் அவள் கையில் மெஹந்தி நன்றாக நிறம் தந்திருந்தது.
அவள் கையை பார்த்த ப்ரீத்தி, “ மெஹந்தி ரங் , நல்லா அச்சா ஹை. இஸ்கா மத்லப் , தேரி சாஸ் துஜ் பர் பஹுத் பியார் பர்சேகி, (உன் மாமியார் உன் மேலே ரொம்ப பாசமா இருப்பாங்க) “ என ஆங்கிலத்திலும் சொல்லஎழில் மென்னகை பூத்தாள்.
“நிஜமா தான் சொல்றேன்” என ப்ரீத்தி சொல்ல,
“உன் வாக்கு பொன்னாகட்டும். குணமான என் தங்கத்துக்கு, பொன்னா தாங்குற மாமியார் கிடைச்சா சந்தோசம் தான்” என இந்திராணி கண்கலங்க, எழில் அவர் தோள் மீது சாய்ந்து கொண்டு, “எனக்கு பயமா இருக்கு அத்தை” எனக் கண்ணீர் வடிக்க,
“எதுக்கு பயம், இங்கன தானே இருக்க போற, யாரவது வர, போக இருப்போம். நீயும் நினைச்ச தண்டிக்கு வந்துட்டு போகலாம். இது எப்பவுமே உன் வீடு தான். அப்பாவும், அத்தையும் உனக்காக இருப்போம்” எனச் சொல்லும் போதே அவரும் அழுக, எழிலின் கண்ணீர் ஊற்றெடுத்தது.
“ஆத்தா, எதுக்கு இம்புட்டு அழுகை. பொட்டப்புள்ளையா பொறந்தா ஒரு வீட்டுக்கு போயி தானே ஆகணும். இந்தா உன் சோட்டு பொண்ணு, பாஷையும் தெரியாது, ஆளையும் தெரியாது , வடக்க இருந்து உன் அத்தானை நேசிச்சதுக்காக , அவன் குடும்பத்தைப் பார்க்க, உன் கல்யாணத்துக்கு வந்து, ஓடியாடி வேலை செய்யுது பாரு. எல்லாம் நம்ம மனசில தான் ஆத்தா இருக்குது” என அழகர் சொல்ல,
“அவுங்க நேசிக்கிறாங்கப்பா. ஒருத்தருக்கு ஒருத்தர் துணை. எனக்கு அரேஞ்சுடு மேரேஜ் , பழகாத ஆளு. “ என அடுக்க , ப்ரீத்தியும் எழிலுக்கு சப்போர்ட் செய்தாள்.
“ஆத்தா, நாங்களும் ரொம்ப பேரை பார்த்தவங்க தான். கழுத்துல தாலி ஏறும் முன்ன பேசுற பேச்சு எல்லாம், தண்ணில எழுதி வைக்கிறதுக்குச் சமம். ஒரு வாரத்தில் பாரு, என் புருஷன் அப்படி, இப்படிண்டு பேச ஆரம்பிச்சுடுவ” அழகர் சொல்ல,
“மாமா சொல்றது நிஜம் தான் எழிலு” என மூத்த அண்ணி, அவள் அக்காள் கலையரசி, மற்றும் உறவுக்கார பெண்கள் திருமணமானவர்கள் எல்லோரும் ஒத்து ஊத , கோகிலாவும் கூட ரகசியமாய், “என் தம்பியை எப்படி மடக்கனுமுண்டு சொல்லித்தாறேன்” என ரகசியம் பேச, எழில் சற்றே தெளிந்தாள்.
விடிந்தால் கல்யாணம், எழிலை அலங்கரிக்கும் பொறுப்பை ப்ரீத்தியே ஏற்று இருக்க, அவளோடு அவள் அறையிலேயே தங்கினாள்.
பெண்கள், பெரியவர்கள் பேச்சி கேட்டுக்கொண்டிருந்த அன்புக்கரசன், தேவையில்லாமல் போட்டு குழப்பிக்க கூடாது, அரசி நல்லா தான் இருப்பா. என் செட்யூல் படி, ப்ரீதியோட நாளைக்கு மதியம் பிலைட் பிடிச்சிடனும்’ என மனதில் உறுதி கொண்டான்.
நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.
Sens twist. Marriage will happen but with whom? Big suspense. Intresting